Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்று கூடும் அனைவரும் கைது செய்யப்படுவர் – இராணுவ தளபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்று கூடும் அனைவரும் கைது செய்யப்படுவர் – இராணுவ தளபதி

  • May 10, 2021

நாட்டில் கோவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.

கோவிட் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் நிகழ்வுகள் மற்றும் நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கோவிட் கட்டுப்பாட்டுக்காக விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

நினைவுகூரலுக்கு மக்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினால் அரசில்வாதிகள் மக்கள் என்ற வேறுபாடு இல்லாது கைது செய்யப்படுவார்கள்.

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை நாம் மறுக்கவில்லை. வீடுகளில் தனித்து அதனைச் செய்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

 

https://www.meenagam.com/முள்ளிவாய்க்கால்-நினைவ-4/

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை ஊதிப்பெருப்பீக்கும் போதே தெரியும் தானே இதுக்கு தான் திட்டம் போடுறியள் எண்டு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை நாம் மறுக்கவில்லை. வீடுகளில் தனித்து அதனைச் செய்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை

உங்களின்  உண்மையான முகத்தை மறைக்க கொரோன உதவும் பொழுது நீங்கள் நல்லவர்கள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.