Jump to content

வியட்நாம் நச்சுக் குண்டு வீச்சு: அமெரிக்க யுத்தம் குறித்த வழக்கு பிரான்ஸ் நீதி மன்றம் நிராகரிப்பு


Recommended Posts

வியட்நாம் நச்சுக் குண்டு வீச்சு:
அமெரிக்க யுத்தம் குறித்த வழக்கு
பிரான்ஸ் நீதி மன்றம் நிராகரிப்பு

 

184308249_10226843800064243_274878001507

 

வியட்நாம் போரின் போது அமெரிக் காவுக்கு இரசாயனப் பொருள்களை
விநியோகித்த நிறுவனங்களுக்கு
எதிராகத் தொடரப்பட்ட ஒரு வழக்கை பிரான்ஸின் நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது.
'அமெரிக்காவின் யுத்தகாலச் செயற்பாடு
களுடன் தொடர்புபட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்கு நியாயாதிக்கம் கிடை யாது' என்று நீதிமன்றம் அதன் தீர்ப்பில்
தெரிவித்திருக்கிறது.
பிரான்ஸில் வசிக்கின்ற வியட்நாமியப் பத்திரிகையாளரான 79 வயது ட்ரான் தோ என்கா(Tran To Nga)என்ற பெண்ணே நீண்ட காலச் சட்டப் போராட்டங்களுக்கு
பிறகு இந்த வழக்கை பிரான்ஸின் நீதி மன்றம் ஒன்றில் தாக்கல் செய்திருந்தார்.
அழிவுகளுக்குப் பொறுப்புக் கூறல், நஷ்டஈடு வழங்குதல் ஆகியவற்றை முன்
வைத்துக் கம்பனிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கில் அவற்றுக் குச் சார்பாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது
குறித்து ட்ரான் தோ என்கா அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டிருக்கிறார்.
தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்
யப்போவதாகவும் கூறியிருக்கிறார்
அன்றைய அமெரிக்காவின் சட்டங்க ளுக்கு அமைய அதற்குக் கட்டுப்பட்டே செயற்பட்டதாக கம்பனிகளின் சார்பில் வாதாடிய சட்டவாளர் குறிப்பிட்டிருந்தார். Bayer-Monsanto நிறுவனத்தின் சட்டவாளர், "இறைமையுள்ள ஒரு நாட்டின் போர்க் காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்துத் தீர்ப்பளிப்பதற்கு பிரெஞ்சு நீதிமன்றம்
ஒன்றுக்கு நியாயாதிக்கம் கிடையாது"
என்று வாதிட்டார்.
பாரிஸ் நகருக்கு வெளியே எவ்றி என்னும் நகரில் உள்ளூர் நீதிமன்றம்
ஒன்றில்( Le tribunal d'Évry) இந்த வழக்கு கடந்த 2014 இல் தாக்கல் செய்யப் பட்டிருந்தது. அது கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
யுத்தத்தின் போது வியட்நாம் காடுகள் மீது அமெரிக்கா பெருவாரியான நச்சுக் குண்டுகளை வீசியது. அடர்ந்த காடு களில் இருந்த கம்யூனிஸ்ட் கெரில்லாக் களின் மறைவிடங்களை அழிப்பதற்காக
வீசப்பட்ட இரசாயனக் குண்டுகள் ஏற்படு
த்திய சூழல் தாக்கம் பல தசாப்தங்கள்
கடந்து இன்னமும் நீடிக்கிறது.
வியட்நாமில் இன்றைக்கும் உடல்குறை பாடுகளுடன் ஏராளமான குழந்தைகள்
பிறப்பதற்கு நச்சுக்குண்டுகளின் தாக்
கமே காரணம் என்று சொல்லப்படுகிறது.
1962 - 1971 காலப்பகுதியில் நிகழ்ந்த அமெரிக்காவின் அந்த இராணுவ நடவடிக்கை "ஏஜென்ட் ஒரேஞ்" (Agent Orange) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கப் படைகள் அதி உயர் நச்சுத்
தன்மை கொண்ட விவசாயக் களை கொல்லி இரசாயன மருந்துகளை (ultra-toxic herbicide) செறிவு கூடிய அளவில் வீசிக் காடுகளைக் கருக்கி அழிந்தன. போராளிகளின் முன்னேற்
றத்தைத் தடுக்கவும் அவர்களது உணவு
மூலங்களை அழிக்கவும் பல மில்லியன்
கலன்கள் இரசாயன நச்சுக் களை
நாசனி வான்வழியே விசிறப்பட்டது.
வியட்நாம் யுத்தத்தில் நிகழ்ந்த போர்க் குற்றமாகவும் இயற்கை அழிப்புக்
குற்றமாகவும்("ecocide") கருதப்படுகின்ற
இரசாயனக் குண்டு வீச்சில் பாவிக்கப்
பட்ட நச்சுக் களை கொல்லிகளை உற்பத்தி செய்த, விநியோகித்த முக்கிய
14 கம்பனிகளுக்கு எதிராகவே பிரான்
ஸில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஜேர்மன் - அமெரிக்க களை கொல்லித்
தயாரிப்பு நிறுவனமாகிய Bayer-Monsanto
மற்றும் அமெரிக்கப் பல் தேசியக் கம்பனி யான Dow Chemical ஆகியனவும் அவற்
றில் அடங்கும்.
ட்ரான் தோ என்கா தனது இருபதாவது வயதில் வியட்நாம் கம்யூனிஸ்ட் போராளி யாக இருந்தவர். பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர். தற்போது பிரான்ஸில் வசிக்கும் அவர் வியட்நாம் போரினதும் அமெரிக்க நச்சுக் குண்டு வீச்சுக்களின தும் வாழும் சாட்சியாகத் தன்னை
முன்னிறுத்தி நீண்ட காலமாக நீதி கோரி
போராடி வருகிறார்.
தனது முதுமையில் புற்றுநோய், காசநோய் என்பவற்றால் பீடிக்கப்பட்ட நிலையில் வாழும் அவர், அமெரிக்க
நச்சுக் குண்டுகளின் காரணமாகப் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்து வருகிறார். அவரது மகள் ஒருவர் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார். பேரக் குழந்தைகள் பலரும் கூட நோய்களுக்கு
இலக்காகி உள்ளனர்.
(படத்தில் ட்ரான் தோ என்காவின் இளவயதுத் தோற்றம்)
-----------------------------------------------------------------
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழ் சமூகம், பொருளாதாரத்தில் மாத்திரமல்ல... அதைவிட பல இன்னல்களை எதிர் கொண்டுள்ளது – சாணக்கியன் கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால் குறைவடைந்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைப்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘நாட்டில் 74 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பல உரைகளை பாராளுமன்றில் ஆற்றியிருந்தாலும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை தீர்மானிப்பது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி ஒருவர் என்பது சகலரும் அறிந்ததே  இலங்கையராக அனைவரும் ஒன்றினைந்து வாழ வேண்டும் என குறிப்பிட்டாலும் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தமிழ் பேசும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை. விரும்பினாலும், விரும்பாவிடினும் பெரும்பான்மையாளரில் ஒருவரை தலைவராக தெரிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேரதலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலைப்பாடு இருந்தது. 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். அதே போலதான் தொடர்ச்சியாக தேர்தலில் இரு வேட்பாளர்களின் எவர் சிறந்தவர் என ஆராய்ந்து அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளோம். இதுவரையில் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை இல்லாதொழித்துள்ளார்கள். தமிழ் சமூகம் பொருளாதாரம் மாத்திரமல்ல அதற்கு அப்பாற்பட்ட பல இன்னல்களை எதிர்க்கொண்டுள்ளது. அவசரகால சட்டத்தை கொண்டு தற்போது தெற்கில் கைது இடம்பெறுகிறது. நாங்கள் 1979ஆம் ஆண்டு முதல் அவசரகால சட்டத்தை எதிர்த்து வருகிறோம். அவசர கால சட்டத்திற்கு எதிராக இன்று எதிர்தரப்பினர் குரல் கொடுக்கிறார்கள்.தமிழ் மக்கள் அவசரகால சட்டத்தினால் பல இன்னல்களை அனுபவித்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கு எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை. தொடர்ச்சியாக தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவில்லை. பாலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவில்லை, மாறாக எமது வளங்கள குறிப்பாக மண் வளம் சூறையாடப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் அமைச்சர் ஹெலிகொப்டரில் மன்னாருக்கு சென்றுள்ளார். மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை சூறையாடுவதற்கான நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றன. குச்சவெளி பகுதியின் பெயரை மாற்றுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை, மறுபுறம் விவசாயிகளும் உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த வருடம் வழங்கப்பட்ட அரச தொழில் நியமனத்தில் தமிழ் பேசுபவர்களில் 2000 பேருக்கு கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. ஆகவே தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காத தலைவர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் இனி வரும் காலங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தின் வீதம் குறைவடையும் நிலை ஏற்படும். மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நடுத்தரவர்க்கத்தினர் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள். மாதம் 4 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட மின்கட்டணம் இனிவரும் காலங்களில் 6 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கூடும். மின்கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மோசமான பாதிப்புக்களை எதிர்க்கொள்வார்கள். நீர்க்கட்டணம் அதிகரிக்கவுள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் அனைத்து சேவைகளின் கட்டணமும் உயர்வடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும். தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்று மீண்டும் ஒன்றினைந்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டிருந்தால் அது மகிழ்வுக்குரியதாக அமைந்திருக்கும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1294309
  • ஒருவரைப் போல... ஆறு பேர், உலகில் இருப்பார்கள் என்று பகிடியாக சொல்வார்கள். 😜 அதில் ஒருவர்.... எண்ணை  வாங்க நிற்கிறார். 😂 சிலவேளை... அவர் தானோ, இவரோ தெரியாது.  எதுக்கும் உசாராக இருங்கள். 🤣
  • எங்களுக்கு, கலியாணம்.  வாழ்த்துங்கள்...  fபிரண்ட்ஸ்.  🥰
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.