Jump to content

குருந்தூர்மலை விகாரையின் மீள்நிர்மாணம் இன்று ஆரம்பம் – இராணுவத்தினர் ஏற்பாடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலை விகாரையின் மீள்நிர்மாணம் இன்று ஆரம்பம் – இராணுவத்தினர் ஏற்பாடு

 
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%
 33 Views

முல்லைத்தீவு – குருந்தூர்மலை தொல்லியல் பகுதியில் பௌத்த விகாரைக்கான புனர்நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்த தொடக்க நிகழ்வை தொடக்கி வைப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜெகத் சுமதிபால குருநதூர்மலைப் பகுதிக்கு வருகை தரவுள்ளார் என்று அறிய வருகின்றது.

புனர்நிர்மாணப் பணிகளை இன்றைய தினம் ஆரம்பிப்பதற்காக நேற்றிரவு முழுவதும் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில், 29 பௌத்த பிக்குகள் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், அப்பகுதியில் நிலைகொண்டுள்ள முப்படையினர், முப்படைகளின் கட்டளையிடும் அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், அவர்கள் குருந்தூர் மலைப் பகுதியில் பந்தல்கள் அமைத்தல்இ தோரணங்கள் கட்டுதல் எனப் பல அலங்கார வேலைகளில் நேற்று முழுவதும் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த நிகழ்வு குறித்து பொலிஸாருக்கோ அல்லது மாவட்ட நிர்வாகம், சுகாதாரப் பிரிவினருக்கோ எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்று அந்த துறைகள் சார்பில் பேசவல்லவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இந்நிகழ்வு முழுமையாக இராணுவத்தினராலேயே ஒழுங்குபடுத்தப்பட்டதாக உள்ளது என்று தெரியவருகின்றது. சைவ மக்களின் வழிபாட்டிடமாக காணப்பட்ட குருந்தூர்மலை பகுதியில் பௌத்த தொல்லியல்கள் உள்ளன என்று கூறி தொல்லியல் திணைக்களம், பௌத்த பிக்குகள் சிலர் அப்பகுதியை தம்வசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆராய்ச்சிகளை பகிரங்கப்படுத்தாமலேயே, அது பௌத்த தொல்லியல் பிரதேசம் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு தமிழர் தரப்பின் வரலாற்றறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்பகுதி நாகர்கால சிவன்கோயில் என்று யாழ். பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்றுப்பேராசிரியருமான எஸ். பத்மநாதன் கூறியிருந்தார். இந்நிலையில் நாட்டில் கொரேனா பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அவசர அவசரமாக குருந்தூர் மலையில் பௌத்த விகாரை புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

இதனிடையேஇ இந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்கவோ அல்லது அங்கு செல்லவோ தமிழ் ஊடகவியலாளர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

https://www.ilakku.org/?p=49248

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா கலவரத்தில் குருந்தூர் மலையில் பிக்குகள் இரகசியத் திட்டம்!!

தமிழ் மக்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு, தண்ணீர்முறிப்பு, குந்தூர் மலையில் இன்றிரவு இராணுவத்தினரின் பிரசன்னத்துடன், பிக்குகள் பிரித் ஓதி வழிபாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வழிபாடுகளைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நாளை புதிய விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

அந்தப் பகுதியில் புராதன பௌத்த விகாரை சிதைவுகள் உள்ளன என்று தெரிவித்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த வழிபாட்டு நடவடிக்கைகள் திடுதிடுப்பென ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

IMG_20210130_174842-1-1536x1149-1-1024x7

இதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால வந்திருந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பகுதிக்கு ஊடகவியலாளர்கள், மக்கள் அனுமதிக்கப்படாமையால் சரியான விவரங்களைப் பெறமுடியவில்லை.

தற்போது கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து ஒன்றுகூடி வழிபாடுகள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலைமையில் மாவட்ட நிர்வாகத்துக்கோ, சுகாதாரத் தரப்பினருக்கோ தெரியப்படுத்தாது பெரும் எண்ணிக்கையானோருடன் இந்த வழிபாடுகள் இன்றிரவு ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்ன.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமைப் படை அதிகாரி மற்றும் சுமார் 30 பௌத்த பிக்குகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் இணைந்து தோரணங்கள் கட்டி, பந்தல்கள் அமைத்து இந்த வழிபாடுகள் நடத்தப்பட்டன என்று தெரியவருகின்றது.

மாவட்ட நிர்வாகத்தினரோ, சுகாதாரத் தரப்பினரோ இது தொடர்பில் எந்த நடவடிக்கைளும் எடுக்கவில்லை என்பது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

https://newuthayan.com/கொரோனா-கலவரத்தில்-குருந்/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மறுவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் சத்தத்தையே காணவில்லையே....? ஒருவேளை மதம் மாறிவிட்டாரோ...?? 🤔

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் குருந்தூர்மலையில் நடைபெறும் பிரித் ஓதல்

 
kurun-696x313.jpg
 25 Views

அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கோவிட் 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில்   நூற்றுக்கணக்கான  இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பௌத்த பிக்குகள் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினரால் பிரித் ஓதும் பௌத்த வழிபாட்டு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

குருந்தாவ அசோக புராதன பௌத்த விகாரை சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று இரவிரவாக பூசைகள் இடம்பெற்று பௌத்த விகாரையை புனர்நிர்மாணம் செய்யும் வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நாளை காலை இடம்பெறவுள்ளதாகவும், இந்த நிகழ்வுக்கு அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால தெற்கிலிருந்து வருகைதந்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

காவல்துறையினருக்கோ, மாவட்ட நிர்வாக தரப்பினருக்கோ, சுகாதார தரப்பினருக்கோ தெரியப்படுத்தப்படாமல் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பெருமளவான பௌத்த பிக்குகளை ஒன்றிணைத்து குறித்த சமய நிகழ்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

IMG_20210130_155555.jpg

நாட்டில் கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஒன்றுகூடுவதற்கோ வழிபாடுகளை ஒன்றுகூடி மேற்கொள்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரச நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும்  இரவோடு இரவாக சுகாதார தரப்பினரின் எந்தவித அனுமதிகள் எவையும் பெறப்படாது குறித்த பௌத்த அனுட்டான நிகழ்வு பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தலைமை  படை அதிகாரி மற்றும் பௌத்த பிக்குகள் 29 பேர், தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்து பெரும் எடுப்பில் தோரணங்கள் கட்டி, அலங்காரங்கள் பந்தல்கள் என வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றது.

குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சிகள் தொடர்பில் வெளிப்படை தன்மை பேணப்படாது உள்ளூர் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கடந்த நான்கு மாதங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சிப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் திடுதிப்பென பெரும் எடுப்பில் பௌத்த வழிபாடுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பலத்த சந்தேகத்தினை பிரதேச மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொவிட் நிலமை காரணமாக மக்கள் கூட்டங்களை தவிர்குமாறு அறிவித்துள்ள நிலையிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையிலும்

குருந்தூர் மலைக்கு சென்று முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதி உள்ளிட்ட படை அதிகாரிகளுடன் 25ற்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் காவல்துறையினருக்கோ  மாவட்ட அரசாங்க அதிபருக்கோ, பொதுசுகாதார பரிசோதகர்களுக்கோ அறிவிக்காத நிலையில் குருந்தூர் மலைக்கு சென்றுள்ளார்கள்.

அங்கு படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பௌத்த துறவிகளினால் பிரித் ஓதப்பட்டு வருவதுடன் நாளை தொடக்கம் புனர் நிர்மான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

 

https://www.ilakku.org/?p=49265

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புத்த வழிபாடுகள் ஆரம்பம்

 
1-41-696x522.jpg
 30 Views

ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்தியிருந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் குருந்தாவஷோக ரஜமஹா விகாரை, இன்றுமுதல் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

May be an image of one or more people, people standing and outdoors

May be an image of one or more people, people standing, tree and outdoors

May be an image of standing, tree and outdoors

May be an image of 1 person, standing, tree and outdoors

May be an image of one or more people, people standing and outdoors

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு ஒருநீதியும்,சிங்களவர்களுக்கு ஒரு நீதியுமா? இராணுவத் தளபதியிடம் வினவும் க.விஜிந்தன்

 
vlcsnap-2021-05-11-20h31m35s303.png
 86 Views

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித் ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என இராணுவத் தளபதியிடம் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் ஊடகங்கள் ஊடாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் அவர்கள் இன்று (11.05.21) அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.

இராணுவத் தளபதியால் ஒரு அறிக்கை விடப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்குபற்றினால் சுகாதார நடைமுறையினை கருத்தில் கொண்டு அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இது நல்ல விடயம் நேற்று(10) இரவு எங்கள் முல்லைத்தீவு பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட குருந்தூர் மலைப்பகுதியில் 30 இற்கும் மேற்பட்ட புத்த பிக்குகளும், இராணுவத் தளபதிகள், பல நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பிரித் ஓதுதல் என்ற சமைய நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.

நாங்கள் இராணுவத் தளபதியிடம் கேட்கின்ற விடயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித் ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=49288

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Paanch said:

மறுவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் சத்தத்தையே காணவில்லையே....? ஒருவேளை மதம் மாறிவிட்டாரோ...?? 🤔

அப்டியெல்லாம் இருக்காது. அந்த இடத்தில் ஒரு சிலுவையை நாட்டிபோட்டு பாருங்கள் அவரின் 
 அதிரடி சிலம்பாட்டத்தை.. அவரை சொல்லிக் குற்றமில்லை, அவரை பிடிச்சு ஆட்டுவது அப்படி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் குடியேற்றத்திற்கான அடுத்த கட்டம்.

☹️

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதுதான்  அபிவிருத்தி அரசியலுங்கோ! அபிவிருத்தி தமிழ் அரசியற் தலைவர்களெல்லோரும் வரிசையில் வாங்கோ.....   அபிவிருத்தி என்று சொன்னவையள் யாருக்கு என்று சொல்லேலை, நாங்களும் கேக்கேல்லை. காட்டின இடத்தில குத்தினோம். அவை சொன்னதை செய்யினம், தேர்தல் வாக்குறுதி மீற மாட்டினம் கண்டியளோ. முகவர்களின் சத்தத்தை எங்காவது கேட்டியளோ? நாடகத்தில் அவர்களின் பாத்திரம் முடிஞ்சுது. வேறு நாடகத்துக்கு ஒத்திகை பாக்கப் போயிருப்பினம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாத்தானின் வேதம் எப்படி? இதோ இப்படித்தான்!! (நுனாவிலான் அவர்களின் பதிவொன்றில்  பெறப்பட்டது)

பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படையினர் மற்றும் பொலிஸாரினால் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலுக்கு பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்­ளது.

பலஸ்தீனியர்களை சட்டத்திற்கு முரணாக வெளியேற்றுவதற்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுவுவதற்குமான முயற்சிகளையும் கண்டிக்கின்றோம்.

சட்டத்திற்கு முரணான வகையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகள், ற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமானக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவையாகும்.

எனவே இஸ்ரேலியப் படைகளின் இந்த மனிதத்தன்மையற்ற செயற்பாட்டைக் கண்டித்துவரும் உலக நாடுகளுடன் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

மேலும் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பாளர்கள் சர்­வ­தேச சட்­டங்­களை மதித்து நடக்க வேண்­டும் என்றும் ஐக்­கிய நாடுகள் சபை பலஸ்­தீன மக்­கள் எதிர்­நோக்­கி­வரும் பிரச்­சி­­னை­களை முடி­­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான தனது பொறுப்­புக்­களை நிறை­வேற்ற முன்­வர வேண்­டும். 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.