Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

 

தமிழீழ விடுதலைப்போரின் போது தமிழீழ விடுதைப்புலிகள் மற்றும் ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்) ஆகிய இயக்கங்களில் போராளிகளாகயிருந்து வீரச்சாவினைத் தழுவி மாவீரராகிய

முஸ்லிம்கள்

 

 

1) லெப். ஜோன்சன்

(ஜெயா ஜுனைதீன்)

ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

22.08.1963 — 30.11.1985

--> படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து  தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.

--> தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார்.

 

2) வீரவேங்கை லத்தீப்

(முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்)

காத்தான்குடி, மட்டக்களப்பு.

16.11.1962 — 24.12.1986

--> மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு.

 

3) வீரவேங்கை நசீர்

(முகமது நசீர்)

காங்கேயனோடை, மட்டக்களப்பு.

15.03.1963 — 30.12.1987

--> மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.

 

4) வீரவேங்கை சாபீர்

(சரிபுதீன் முகமது சாபீர்)

தியாவெட்டுவான், மட்டக்களப்பு.

13.05.1988

--> நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு.

 

5) வீரவேங்கை ஜெமில்

(ஜெயாத் முகமது உசைதீன்)

ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

28.03.1968 — 05.08.1989

--> மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு.

 

6) வீரவேங்கை ஆதம்

(எஸ்.எம். ஆதம்பாவா) 

சாய்ந்தமருது, அம்பாறை.

21.12.1967 — 03.01.1990

--> மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முஸ்லிம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு.

 

7) வீரவேங்கை அலெக்ஸ்

(அகமது றியாஸ்)

மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு.

23.01.1970 — 04.05.1990

--> அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.

 

8 ) வீரவேங்கை கபூர்

(முகமது அலியார் முகமது சலீம்)

காங்கேயனோடை, மட்டக்களப்பு.

11.06.1990

--> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு.


9) வீரவேங்கை தாகீர்

(முகைதீன்பாவா அன்சார்)

திருகோணமடு, பொலன்னறுவை.

29.04.1972 — 11.06.1990

--> மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.


10) வீரவேங்கை அன்வர்

15.06.1990

--> அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.

 

11) வீரவேங்கை தௌவீக்

(இஸ்மாயில்)

ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

12.06.1990

--> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

 

12. வீரவேங்கை ஜிவ்றி

(முகம்மது இலியாஸ்)

4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு.

05.03.1974 — 13.06.1990

--> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

 

13) வீரவேங்கை அர்ச்சுன்

ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

14.06.1990

--> திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

 

14) வீரவேங்கை ஜலீம்

(முகமது இஸ்மாயில் மன்சூர்)

ஏறாவூர், மட்டக்களப்பு.

01.09.1990

--> முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு.

 

15) வீரவேங்கை மஜீத்

(முகமது இஸ்காக் கூப்சேக்அலி)

மீராவோடை, மட்டக்களப்பு.

18.06.1990

--> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

 

16) வீரவேங்கை ஜின்னா

(லெப்பைதம்பி செய்னூர்)

ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

20.10.1970 — 19.06.1990

--> அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு.


17) வீரவேங்கை தர்சன் 

(அப்துல்காதர் சம்சி)

13.06.1990

 

18) வீரவேங்கை நகுலன்

(ஜுனைதீன்)

அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை.

26.06.1988

--> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.

 

19) வீரவேங்கை அகஸ்ரின்

(சம்சுதீன் அபுல்கசன்)

அக்கரைப்பற்று, அம்பாறை.

15.08.1971 — 27.10.1988

--> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு.

 

20) வீரவேங்கை நசீர்

(சம்சுதீன் நசீர்)

ஒலுவில், அம்பாறை.

19.02.1960 — 17.02.1989

--> மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு.

 

21) வீரவேங்கை பாறூக்

(நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை)

அக்கரைப்பற்று, அம்பாறை.

08.01.1973 — 22.06.1989

--> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு.

 

22) வீரவேங்கை அஸ்வர்

(ஜபார் ஜாபீர்)

அட்டாளைச்சேனை, அம்பாறை.

06.12.1989

--> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் முகாம்மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

 

23) வீரவேங்கை சியாத்

(மீராசாகிபு காலிதீன்)

சாய்ந்தமருது, அம்பாறை.

18.08.1972 — 06.12.1989.

--> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் தேசவிரோத கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு.

 

24) வீரவேங்கை சந்தர் சுந்தர்

(அகமது லெப்பை செப்லாதீன்)

வேப்பானைச்சேனை, அம்பாறை.

25.02.1973 — 25.05.1990

--> அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.

 

25) வீரவேங்கை ராவ்

(முகமது ரவீக்)

பொத்துவில், அம்பாறை.

15.06.1990

--> அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு.


26) வீரவேங்கை இராமன்

(மாப்பிள்ளை லெப்பை அல்வின்)

இறக்காமம், அம்பாறை.

16.06.1990

--> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

 

27) வீரவேங்கை கனியா

(அபுசாலி புகாரி)

அக்கரைப்பற்று, அம்பாறை.

15.07.1990


28) வீரவேங்கை கமால்

மட்டக்களப்பு

07.06.1990

 

29) வீரவேங்கை கசன்

(ஆதம்பாவா கசன்)

மூதூர், திருகோணமலை.

05.11.1989

--> முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு.


30) வீரவேங்கை சலீம்

03.07.1987

--> அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

 

31) வீரவேங்கை ஜெகன்

(ஆப்தீன் முகமது யூசுப்)

குச்சவெளி, திருகோணமலை.

08.04.1972 — 15.06.1990

--> திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

 

32) வீரவேங்கை நியாஸ்

மூதூர், திருகோணமலை.

17.06.1990

--> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு.

 

33) வீரவேங்கை கலையன்

(கச்சுமுகமது அபுல்கசன்)

முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை.

14.06.1990

--> (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

 

34) வீரவேங்கை டானியல்

(கனீபா முகமது ராசீக்)

திருகோணமலை.

23.06.1970 — 22.06.1990

--> திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

 

35) வீரவேங்கை நிர்மல்

(அப்துல் நசார்)

புடவைக்கட்டு, திருகோணமலை.

19.01.1972 — 27.07.1990

--> திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு.

 

36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு

(அப்துல்காதர் சாதிக்)

யாழ்ப்பாணம்.

10.05.1966 — 25.08.1986

--> யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு.

 

37) வீரவேங்கை ரவீஸ்

ராமநாதபுரம், கிளிநொச்சி.

08.08.2006

 

38)வீரவேங்கை குபீர்

அக்கரைப்பற்று, அம்பாறை.

15.06.1990

--> அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.

 

39) வீரவேங்கை பர்ஸாத்

செட்டிக்குளம், வவுனியா

10.06.1990


40)வீரவேங்கை ரகுமான்

08.05.1986

--> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு.

 

41) வீரவேங்கை ரகீம் 

08.05.1986

 

42) வீரவேங்கை கணேசன்

(அப்துல்ஜபார் கணேசன்)

யாழ்ப்பாணம்

19.03.2007

--> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு.

 

43) வீரவேங்கை தமிழ்மாறன்

(அப்துல் ரகுமான் நிமால்)

ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

01.01.1983 - 19.10.2000

--> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு.

 

44) வீரவேங்கை வசந்தி

(அப்துல்கரீம் கற்பகரூபவதி)

முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம்

06.05.1978 - 26.06.1999

--> மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு.

 

45) வீரவேங்கை பர்சாண்

(அப்துல்காதர் சம்சுதீன்)

காக்கையன்குளம், வவுனியா

04.05.1969 - 15.06.1990

--> வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

 

46) வீரவேங்கை நசீம் (கஜன்)

(அப்துல்மானாப் முகமது நசீம்)

மூதூர், திருகோணமலை

05.07.1964 - 25.07.1986

--> மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு.

 

47) வீரவேங்கை அருள்

(மேலதிக விரிப்பு கிடைக்கப்பெறவில்லை)

மன்னார்
 

48) வீரவேங்கை மருதீன் எ முகமது

(சந்திரயோகு மருத்தீன்)

உயிர்த்தராசன்குளம், மன்னார்

25.10.1965 - 15.10.1987

--> யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

 

49) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான்

(காலித்தம்பி காதம்பவா)

அக்கரைப்பற்று, அம்பாறை.

16.10.1963 - 07.06.1987

 

50) வீரவேங்கை கசாலி

(சேகு முகமது சகாப்தீன்)

ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை

23.05.1989

--> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு.

 

51) வீரவேங்கை குமார்

(சேதுதாவீது காசிம்)

இரத்தினபுரம், கிளிநொச்சி.

26.11.1988

--> யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு.

 

52) வீரவேங்கை கலீல்

(கலீல் ரகுமான்)

தோப்பூர், திருகோணமலை.

27.04.1988

--> யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.

 

53) வீரவேங்கை அசீம் அஷாத்

 

54) 2ம் லெப். சாந்தன்

(நைனா முகைதீன் நியாஸ்)

நிலாவெளி, திருகோணமலை.

17.05.1972 — 06.02.1990

--> திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு.

 

55) லெப். ஜெமில்

(கரீம் முஸ்தபா)

ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

12.06.1990

--> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

 

56) லெப். ராஜிவ் ரகீம்  நஜீம்

(காசிம் துலானி)

பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா

15.09.1990

--> வவுனியாவில் நெஞ்சுவலி காரணமாக சாவு.

 

57) லெப் அருள்

(யூசப் ஜாசிர்)

உப்புக்குளம், வவுனியா

14.05.1975 - 05.11.1995

--> யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு.

 

58) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் 

(காதர்முகைதீன் சருதீன்)

ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு

01.10.1978 - 07.04.1998

-->  கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு

--> ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு.


59) கப்டன் பாறூக்

(அகமதுலெப்பை முகமது கனீபா)

அக்கரைப்பற்று, அம்பாறை.

12.06.1959 — 07.01.1987

--> யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு.

 
60) கப்டன் குட்டி எ தினேஸ்

(முகமது அலிபா முகமது கசன்)

பேராறு, கந்தளாய், திருகோணமலை.

28.04.1987

--> திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு.


61) கப்டன் நசீர்

சாளம்பைக்குளம், வவுனியா

00.11.1990

 

62) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள்

(முகைதீன் ஜெரீனா)

50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு.

19.06.2007

--> யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு.

 

63) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன்

(காதர்முகைதீன் நஜீம்கான்)

முல்லைத்தீவு

29.09.2008

--> அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு.

--> இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர் லெப். ஈழமாறன் என்பதாகும்.

 

64) லெப். கேணல் அப்துல்லா

(முகைதீன்)

காத்தான்குடி, மட்டக்களப்பு

02.04.2009

--> ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு

--> இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின் அண்ணன் என்றும் அறிந்தேன். சரியாகத் தெரியவில்லை.

 

65) ஈரோஸ் மாவீரர் நியாஸ்

மன்னார்

11.07.1986

--> தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு

 

66) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம்

(அப்துல் மானாஃப் முகம்மது நசீம்)

மூதூர், திருகோணமலை

05.07.1964 - 25.07.1986

--> மூதூர் ஆலிம்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு

 

67) ஈரோஸ் மாவீரர் கசாலி

(சேகு முகமது சகாப்தீன்)

ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை

23.05.1989

--> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நடாத்தப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு

 

68) ஈரோஸ் மாவீரர் ரசிட்

இயற்பெயர் அறியில்லை

திருகோணமலை

26.08.1989

--> திருகோணமலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலுடனான மோதலில் வீரச்சாவு

 

69) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின்

இயற்பெயர் அறியில்லை

அக்கரைப்பற்று, அம்பாறை

09.11.1989

 

 

 

 

 

-------------------------------------------------

 

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் இசுலாமியர்கள் மாவீரராகினர் என்றும் அவர்களின் பெயர்க்குறிப்புகள் புலிகளால் மறைக்கப்பட்டது என்ற சோனக அரசியல்வாதிகளின் பொய்ப் பரப்புரையினை முறியடிப்பதற்காகவே இதை நான் தொகுத்துள்ளேன். ஒரு 5-10 விடுபட்டிருக்கும். அவையள் எல்லோரும் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த போராளிகள் ஆவர். இவர்களோடு ஓரிரு ஆதரவாளர்களும் பிடிபட்டு கொல்லப்பட்டதாக என்னால் அறியக்கூடியதாக உள்ளது. அதே நேரம் 1990ம் ஆண்டு பல ஆதரவாளர்கள் தென் தமிழீழத்தில் பிடித்துச் சாக்கொல்லப்பட்டனர். ஆனால் அன்னவர்களின் பெயர்களை என்னால் அறிய இயலாமல் உள்ளது. இதை தேடியெடுத்து என்பின் ஆவணப்படுத்துவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

 

------------------------------------------------

 

உசாத்துணை:

மேற்கண்ட தகவல்கள் யாவும் இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு என்னால் தொகுக்கப்பட்டவையாகும்.

 

தொகுப்பு & வெளியீடு 

நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

49)கடற்புலி லெப் கேணல் முல்லைமகள்

(முகைதீன் ஜெரீனா)

50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு.

19.06.2007

--> யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு

முஸ்லீம் மாவீரர்களில்... ஒரு பெண் போராளியும் இருந்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலைய்க்கு தம்மை ஆகு தீயாக்கிய அனைத்து போராளிகளுக்கும் வீர வணக்கங்கள்.
உம்மை மறவாதிருப்போம்... 🙏 🌹🙏 🌹🙏 🌹🙏🌹 🙏 

இந்த அறிய தகவல்களை திரட்டி இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் நன்னிச்சோழன்  🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 11/5/2021 at 14:56, Sasi_varnam said:

தாயக விடுதலைய்க்கு தம்மை ஆகு தீயாக்கிய அனைத்து போராளிகளுக்கும் வீர வணக்கங்கள்.
உம்மை மறவாதிருப்போம்... 🙏 🌹🙏 🌹🙏 🌹🙏🌹 🙏 

இந்த அறிய தகவல்களை திரட்டி இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் நன்னிச்சோழன்  🙏

மிக்க மகிழ்ச்சி ஐயா... இவை ஏற்கனவே தொகுக்கப்பட்டவற்றின் புதுப்பிப்பாகும்!

 

 

On 11/5/2021 at 14:04, தமிழ் சிறி said:

முஸ்லீம் மாவீரர்களில்... ஒரு பெண் போராளியும் இருந்துள்ளார்.

இவர் தொடர்பான எந்தவொரு தகவல்களும் தெரியவில்லை என்பது வருத்தமான விடயம்!😥

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முஸ்லீம் பெற்றோர்

 

 

இதில் தெரியும் மாவீரரின் ஊர் மற்றும் நிலையுடனான பெயர்: மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த  "வீரவேங்கை அருள்" என்பதாகும். நான் மேலே இப்பெயரினை பதிந்துள்ளேன்.

 

tamil-muslim-ltte.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

இவர்கள் தவிர்த்து இறுதிவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து, ஆயுதம் மௌனித்து, சிங்களப் படையினரால் கைதாகி (13.12.2011 கைது செய்யப்பட்டதோடு, 06.12.2017 அன்று ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது), தடுப்பில் வாடி ஜூன் 2021 அன்று மீண்ட மன்னாரைச் சேர்ந்த 'எம்.எம். அப்துல் சலீம்'  அவர்களை இவ்விடத்தில் நினைவிருத்திக்கொள்கிறேன்.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

சில மாவீரர்களின் படிமங்கள்

 

 

லெப். ஜோன்சன்

20171130_202014.png

படிமப்புரவு: 'இஸ்லாமியத் தமிழரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்' புத்தகம்

 

Lt-Junaideen.jpg

படிமப்புரவு: 'விடுதலைப்புலிகள்', பெப், 1987, குரல் 11

 

 

 

 

கப்டன் பாறூக்

Lt Farooq.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலி மாவீரர்கள்

 

 

லெப். கேணல் மாறன் எ குன்றத்தேவன்

Lt. Col. Maaran.jpg

 

 

 

 

லெப் கேணல் முல்லைமகள்

கடற்புலி லெப் கேணல் முல்லைமகள்.jpg

படிமப்புரவு: https://veeravengaikal.com/

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கப்டன் குட்டி/தினேஸ்

அன்னாரின் நினைவுக்கல்

 

23844797_1568232876595537_6865527596089839007_n.jpg

 

 

 

========================================

 

 

வீரவேங்கை அசீம் அவர்களுக்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஓர் பளிங்குக் கற்களாலான நினைவுத்தூண் ஒன்று வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவரது உருவப்படமும் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது (ஈழநாதம்: 17/06/1990).

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இது கீற்று வலைத்தளத்தால், 31 ஜூலை 2010 அன்று "சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது" என்னுந் தலைப்பில் வெளியிட்ட நேர்காணல் ஒன்றிலிருந்து பிரிதெடுக்கப்பட்ட கூற்றுரை ஆகும்.

 

இந்நேர்காணலை 2002 ஆம் ஆண்டு வன்னி சென்றிருந்த இஸ்லாமியத் தமிழர் குழுவில் இடம்பெற்றிருந்த தென் தமிழீழத்தைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனரான முஸ்தீன் அவர்கள் சென்னை வந்திருந்த போது வழங்கியிருந்தார்.  ஆனால் வழக்கமான பாணியில், எல்லா முஸ்லிம்களைப் போல, முஸ்லிம்களால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து விரிப்பாக வாய் திறக்கவுமில்லை, கீற்று வலைத்தளமும் அதைக் கேட்டதாகத் தெரியவுமில்லை.

 

 

"முஸ்தீன் - இலங்கை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர். கீற்று ஆறாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடந்த ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்’ தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். அவரிடம் இலங்கை முஸ்லிம் மக்களின் நிலை, தமிழர் - முஸ்லிம்கள், பிளவு, பேரினவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து எடுத்த விரிவான நேர்காணல் இது. அவரவர் தரப்பு நியாயங்களை மட்டுமே அவரவர் பேசும் நிலையில், துணிச்சலுடன் தான் சார்ந்த சமூகத்தின் தவறுகளையும், போராளிக்குழுக்கள் மற்றும் அரசின் தவறுகளையும் கதைத்துள்ளார். தமிழர் - முஸ்லிம் ஒற்றுமை குறித்தான பல புதிய திறப்புகளுக்கு இந்நேர்காணல் வழிவகுக்கும் என்று நம்புகிறோம். பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளுக்காக அவரது புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ளது.

"..............

கீற்று: போராளிக் குழுக்களுக்கும், முஸ்லிம்களுக்குமான இந்த முரண்பாடு எல்லா இடங்களிலும் இருந்ததா? இணக்கப்பாடான செயல்கள் எங்காவது இருந்ததா?

சங்கர் என்னும் ஆயுதப் பயிற்சியாசிரியரை போர்நிறுத்தக்காலத்தில் புலிகளின் பிரதேசத்தில் நான் சந்தித்தேன். அவருடன் பேசத் தொடங்கிய பிறகுதான் அவர் நான் வாழும் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் ஒரு முஸ்லிம் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. இதுபோல் நிறைய முஸ்லிம்கள் புலிகள் அமைப்பில் கடைசிவரை இருந்தார்கள். புல்மோட்டை ஊர் முழுக்கவே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஊர் என்னும் நிலைப்பாடு இருந்தது. அந்த அளவுக்கு புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் அன்பர்கள் பலர் கடைசி வரை புலிகள் அமைப்பில் இருந்தார்கள். இப்படிப்பட்ட செய்திகளை எல்லாம் நடுநிலையில் இருந்து கதைக்கும் தமிழ் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அங்கு இல்லை. இந்த வெற்றிடத்தால் முரண்பாடுகள் கூர்மையடைந்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களாக நிலைத்து விட்டன.

..................."

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to இசுலாமியத் தமிழர் மாவீரர் பட்டியல் | ஆவணம்
  • நன்னிச் சோழன் changed the title to இசுலாமிய தமிழர் மாவீரர் பட்டியல் | ஆவணம்
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

நடக்குமா?

 

D56XfauWAAY7wsD.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கப்டன் பாறூக் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவருக்கு அருகில் நிற்கும் புகைப்படத்தை மேலே இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.