Jump to content

ஒண்டாரியா உயர் நீதிமன்றில் சிங்களவர்கள் மனு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள், ஒண்டாரியா உயர் நீதிமன்றில், பிராம்டன் நகர தமிழர் இனவழிப்பு தீர்மானத்துக்கு, எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர்.

Bill 104, Tamil Genocide Education Week Act, 2021 கனடிய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அதனை தடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்.

சொல்லப்பட்ட இனவழிப்பானது, உலகின், சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற  எந்த ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்கப்படவில்லை என்றும், ஐநா கூட தனது விசாரணைகளை ஆரம்பிக்காத நிலையில் அது புலிகளின் அல்லது அதன் சார்பான ஆட்களின், பொய்யான செய்தியின் அடிப்படையில் உருவாக்கிய கட்டுக்கதை என்றும் அடித்து விட்டுள்ளார்கள்.

https://www.srilankancanadian.ca/index.php/2021/05/10/notice-of-constitutional-question-against-bill-104-tamil-genocide-education-week-act-filed-in-superior-court-today/

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சிங்களவர்கள், ஒண்டாரியா உயர் நீதிமன்றில், பிராம்டன் நகர தமிழர் இனவழிப்பு தீர்மானத்துக்கு, எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர்.

Bill 104, Tamil Genocide Education Week Act, 2021 கனடிய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அதனை தடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்.

சொல்லப்பட்ட இனவழிப்பானது, உலகின், சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற  எந்த ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்கப்படவில்லை என்றும், ஐநா கூட தனது விசாரணைகளை ஆரம்பிக்காத நிலையில் அது புலிகளின் அல்லது அதன் சார்பான ஆட்களின், பொய்யான செய்தியின் அடிப்படையில் உருவாக்கிய கட்டுக்கதை என்றும் அடித்து விட்டுள்ளார்கள்.

https://www.srilankancanadian.ca/index.php/2021/05/10/notice-of-constitutional-question-against-bill-104-tamil-genocide-education-week-act-filed-in-superior-court-today/

சரியான திசையிலேயே போகிறது. ஒன்ராரியோ உயர்நீதிமன்றம் இனப்படுகொலை நடந்தது என்று நிறுவ சரியான சந்தர்ப்பம். உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்றத்தில் முதல்முறையாக நிறுவ தேவையான சந்தர்ப்பம். மறுவளமாக,  ஒன்ராரியோ உயர்நீதிமன்றம் இது இனப்படுகொலையல்ல என்று தீர்ப்பளித்தால் ... 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

சரியான திசையிலேயே போகிறது. ஒன்ராரியோ உயர்நீதிமன்றம் இனப்படுகொலை நடந்தது என்று நிறுவ சரியான சந்தர்ப்பம். உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்றத்தில் முதல்முறையாக நிறுவ தேவையான சந்தர்ப்பம். மறுவளமாக,  ஒன்ராரியோ உயர்நீதிமன்றம் இது இனப்படுகொலையல்ல என்று தீர்ப்பளித்தால் ... 

பெடரல் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகும். 🤗

Link to post
Share on other sites

Enactment of Ontario’s Genocide Bill subject to Lt. Governor General’s approval

http://island.lk/wp-content/uploads/2021/05/ontario.jpg

 

‘Actions of a few shouldn’t be allowed to jeopardize bilateral relations’

By Shamindra Ferdinando

The government has requested Canada not to enact Bill 104 recently adopted by the Ontario Provincial Parliament that resolved that Sri Lanka had committed genocide during the war.

Authoritative sources said that in terms of the Canadian Law in spite of the passage of the controversial Bill 104 moved by Member of Parliament Vijay Thanigasalam (Scarborough—Rouge Park) of Sri Lankan origin, it wouldn’t be enacted until Ontario Lieutenant Governor General Elizabeth Dowdeswell gave her consent on behalf of the Canadian Government. Thanigasalam represents the Progressive Conservative Party of Ontario.  The Lt. Governor General is appointed on the recommendation of the Prime Minister.

Sources said that Foreign Minister Dinesh Gunawardena would meet Canadian High Commissioner David McKinnon to discuss this matter. If Ontario Legislative Assembly succeeded in its high profile project, it would lead to similar propaganda operations in other parts of the world, sources said.

Sources said that Sri Lanka’s Counsel General in Toronto and the High Commission in Ottawa on numerous occasions raised the issue with relevant authorities as part of overall efforts to thwart Thanigasalam’s move. Sources said that contrary to reports, Bill 104 had been carried through without a vote in the Toronto Legislative Assembly on May 6 taking advantage of the rampaging Covid-19 pandemic that restricted the participation of the majority of members.

Responding to a query, sources said that Thanigasalam’s project had been facilitated by the Committee on Regulations and Private Bills coming under the purview of Logan Kanapathi also of the Progressive Conservative Party of Ontario (Markham—Thornhill). Sources said that actions of a few Canadians of Sri Lankan origin shouldn’t be allowed to undermine relations between the two countries.

In the wake of the passage of Bill 104, the government roundly condemned the Ontario Provincial Parliament’s move, pointing out so called ‘Tamil Genocide Education Week’ is based on what the Foreign Ministry asserted ‘a flawed premise, unfounded assumptions and blatant lies.’

The government emphasized that the UN or other foreign governments never blamed Sri Lanka for genocide.  

Meanwhile, informed sources said that Sri Lanka’s former High Commissioner in Ottawa Asoka Girihagama yet to return in spite of being recalled after the change of government in Nov 2019 took over the mission in the year before soon after his retirement from Foreign Service. Sri Lanka is yet to name a High Commissioner in the wake of Canada’s refusal to accept retired Air Force Commander Air Marshal Sumangala Dias and outgoing Attorney General Dappula de Livera, PC, turning down the plum diplomatic post.

https://island.lk/enactment-of-ontarios-genocide-bill-subject-to-lt-governor-generals-approval/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்கடையள்தான் இதுக்கு எண்ணெய் ஊத்தியிருப்பினம்...எங்கடை ஒரு மாகாணசபை உறுப்பினரின் சத்தமேயில்லை...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு நினைவுகூர, அனுதாபம் தெரிவிக்கும் பில்104 இற்கே இலங்கை அரசு இப்படி கதி களங்கினால்.. இனவாத ரீதியாக சிறு பான்மையினரை இலங்கையில் ஒடுக்கும் எத்தனை வகையான சட்டங்கள் அரை நூற்றாண்டு தொடர்வதற்கு இலங்கை சிறுபான்மை  மக்கள் எங்கே சென்று முறைப்பாடு செய்வது?

இந்த வீடியோ இன்று வட்சப்பில் வந்தது. கடந்தது வந்த பாதையை ஒரு தடவை திரும்பி பார்க்கலாம்.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

சரியான திசையிலேயே போகிறது. ஒன்ராரியோ உயர்நீதிமன்றம் இனப்படுகொலை நடந்தது என்று நிறுவ சரியான சந்தர்ப்பம். உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்றத்தில் முதல்முறையாக நிறுவ தேவையான சந்தர்ப்பம். மறுவளமாக,  ஒன்ராரியோ உயர்நீதிமன்றம் இது இனப்படுகொலையல்ல என்று தீர்ப்பளித்தால் ... 

சில சிவில் வழக்குகளில் litigant in person க்கு (வாதி தானே சாட்ட மன்றத்தில் வாதாடுவது)  உதவி பிரதிநிதியாக  ஈடுபட்டதால் வந்த அனுபவத்தில், இனப்படுகொலை அல்லது இல்லை  என்று நிறுவுவதற்கு இடம்  இல்லை என்றே எனது அபிப்பிராயம்.

இதில் இனப்படுகொலையா அல்லது அப்படி இல்லையா என்பது வழக்கு (terms of reference) அல்ல .  

அப்படி தீர்மானிப்பதத்திற்கு ( இனப்படுகொலையா அல்லது அப்படி இல்லையா) சட்ட வரம்பு (jurisdiction) ஒண்டாரியோ உள்ளூர் நிர்வாகாத்திடம் இல்லை என்பதே வாதியின் வாதம்.

ஆனால் ஒண்டாரியோ உள்ளூர் நிர்வாகம், தமிழ் இன படுகொலை கற்றல் வாரம் என்றே மசோதாவை கொண்டுவந்துள்ளது. இனப்படுகொலையா என்று தீர்மானிக்கவில்லை என்ற வாதம் ஒண்டாரியோவிடம் உள்ளது.

அனால் எந்த உள்ளோர் ஆட்சிக்கும், கருத்தை (இனப்படுகொலை) எற்கும் அல்லது மறுக்கும்   சட்ட வரம்பு (jurisdiction) common law உள்ளது . அதை நிராகரிக்கும்  உரிமை Canada  மத்திய அரசிடம் உள்ளது என்பதும் உண்மை. ஆனால், இதில்   Canada  மத்திய அரசு தலையிட விரும்பாது.

எனது சந்தேக கண் முழுவதும் கிந்தியா இடம். ஏனெனில், கிந்திய மறைமுகமாக கேட்டால், Canada மத்திய அரசு பரிசீலிக்க கூடும், சர்வதேச ராஜதந்திர உறவுகளை பாதிக்கும் என்ற அடிப்படையில்  . எனவே இதை முழையில் கிள்ளி எறிய வேண்டும். 

ஆனால் வழக்கு வருவது நல்லது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Lt. Governor General சட்ட மூலத்தில் கையெழுத்து இட்டார். ஆகவே இது உடனடியாக சட்ட பூர்வமான நடைமுறைக்கு வருகிறது.

https://www.facebook.com/502459806/posts/10158917601864807/?sfnsn=mo

May be an image of one or more people, people standing, people sitting and indoor

இன்று, இதனை தடுக்க, தினேஷ் குணவர்தனே, கனேடிய தூதரை அழைத்து, பேச போவதாக அறிவித்து இருந்தார்.

அதுக்குள்ள போட்டாச்சு, கையெழுத்தை போட்டாச்சு.

நான் தான் சொன்னேனே, 2009ல், புலிகள் பயங்கரவாதிகளாக உலகத்துக்கு எப்படி தெரிந்தார்களோ, அதேபோல, இன்று யுத்த குத்த சிங்கள ஆட்சியாளர்கள், உள்ளார்கள். 

Edited by Nathamuni
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

Lt. Governor General சட்ட மூலத்தில் கையெழுத்து இட்டார். ஆகவே இது உடனடியாக சட்ட பூர்வமான நடைமுறைக்கு வருகிறது.

கனடா மத்திய அரசு இதில் கட்டமாக உள்ளது என்பது தெளிவு. 

மற்றது, சட்டச் சிக்கல்கள் இல்லை என்பதையும் கனடா மத்திய அரசு கோடி காட்டி இருக்கிறது. 

சட்ட மன்ற வழக்கை இது தடுக்காதாயினும், வழக்கு தொடுத்த சிங்கள இனவாதிகளும், சிங்கள அரசும் ( ஏன் மறைமுகமாக கிந்தியாவும்) சட்ட மன்றத்தில் அநேகமாக மூக்குடைந்து, தம் கண்ணை தாமே குத்திய நிலை வரவே வாய்ப்புகள் மிகவும் அதிகம்.    

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சீர்காழி அவர்களின் அதிமதுரக் குரலில் சீர்காழி அவர்களின் அதிமதுரக் குரலில்
  • தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான * அகத்தியம், * செயிற்றியம், * சயந்தம், * குணநூல் போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம். இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே "கூத்து" எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு கூத்தினை, வேந்தியல் (மன்னர்களுக்காக ஆடுவது), பொதுவியல் (பொது மக்களுக்காக ஆடுவது) என இருவகைப்படுத்தலாம். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை "அபிநயம்" பற்றி விளக்குகிறது. பெண்கள் ஐந்து வயதிலிருந்து பன்னிரெண்டு வயதுவரை (7ஆண்டுகள்) பரதநாட்டியம் கற்றனர். பாடலின் பொருளை முகபாவம், அங்க அசைவுகள் போன்றவற்றின் வாயிலாக விளக்குவதே நடனம் (அ) கூத்து என வரலாற்று ஆய்வாளரான என்.சுப்பிரமணியன் விளக்கம் தருகிறார். கூத்துக் கலைஞர்களும், கூத்தநூல்களும்: நடனமாடும் ஆண்மகன் * கூத்தன், * ஆடுமகன், * ஆடுகளமகன் எனப்பட்டான். நடமாடும் பெண்மகள் * நடனமகள், * விறலி, * கூத்தி, * ஆடுமகள், * ஆடுகளமகள் * எனப்பட்டாள். இவர்கள் நடனமாடிய அரங்கம் "ஆடுகளம்" எனப்பட்டது. * வீரம், * அச்சம், * இழிவு, * வியப்பு, * இன்பம், * துன்பம், * நகை, * நடுவுநிலை, * வெகுளி என்னும் ஒன்பது சுவைகள் நடனத்துக்குரியவையாகக் கருதப்பட்டன. "சந்திக்கூத்து" எனப்படும் கூத்தை ஆடியவர்கள் "கண்ணுளர்" எனப்பட்டனர். * பரதம், * பரதசேனாபதியம், * குணநூல், * முறுவல், * சயந்தம், * கூத்தநூல், * இந்திரகாளியம், * செயிற்றியம், * இசை நுணுக்கம், * அகத்தியம், * மதிவாணனார் நாடகத்தமிழ், * பஞ்சமரபு போன்றவற்றை சங்க காலத்தில் இருந்த கூத்த நூல்களாக வகைப்படுத்தலாம்.   கூத்துக்கலை பற்றிய ஆதாரங்கள்: கல்வெட்டு ஆய்வாளரான என்.ராமசந்திரன் 1962ல் அங்கல்லூர் (நல்லமலை) என்ற இடத்தில் கண்டறிந்த கல்வெட்டானது தொல்தமிழரின் நடனம் பற்றி விளக்குகிறது. இதன் காலம் கி.பி.3ம் நூற்றாண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் நடனக் குறியீடுகள் "சமணத்துறவி" ஒருவரால் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டில் வரையப்பெற்ற "சித்தன்ன வாசல் ஓவியங்கள்" வாயிலாக பல்லவர் நடனக்கலையின் சிறப்பம்சத்தினை உணரலாம். இங்குள்ள பரதநாட்டிய அபிநயங்களில் "ஹஸ்த அபிநயச் சிற்பம்" குறிப்பிடத் தக்கதாகும். இராஜராஜசோழன் 108 பரதநாட்டிய கரணங்களை, பிரகதீஸ்வரர் ஆலயத்தின் உச்சியில் வரையுமாறு செய்ததில் இருந்து அம் மன்னனுக்கு நாட்டியத்தின் மீது கொண்ட ஈடுபாடு விளங்கும். கூத்துக்கலையும் தேவதாசிகளும்: இந்தியாவில் கோயில்களில் தெய்வப்பணி புரிவதற்காக ஆண்டவர்க்கு அணங்குகளை அர்ப்பணிக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது என்பதை வரையறுத்துக்கூற இயலாது. ஆனால், தமிழகத்தில் தேவதாசி முறையைப் புகுத்தியவர்கள் "சோழர்கள்" என்பர். "பொட்டுக்கட்டுதல்" என்னும் வழக்கத்தின் வாயிலாக கோயிலுக்கு பெண்கள் (தேவரடியார்கள்) காணிக்கை ஆக்கப்பட்டனர். பெரும்பாலும் 14 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பொட்டுக்கட்டுதல் என்னும் சடங்கு ஏறக்குறைய திருமண நிகழ்ச்சி போலவே ஏற்பாடு செய்யப்பட்டு, கோயிலில் சேர்க்கப்பட்டனர். "பொட்டுத்தாலி" என்னும் ஒருவகை மங்கலநாண் அணிவித்து பெண்கள் கோயிலில் பணிசெய்ய அமர்த்தப்பட்டனர். பொட்டுத்தாலியை கோயிலின் இறைவனுக்குப் பதிலாக கோயில் அந்தணர்(அ) பூசாரியே நேர்ந்து விடப்பட்ட பெண்ணுக்குக் கட்டினார். இச் சடங்குக்குப்பின் குறிப்பிட்ட பெண் கோயிலுக்கு சொந்தமானவளாக கருதப்பட்டாள். இல்வாழ்க்கையில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி இல்லை. கோயிலுக்கு பொட்டுக்கட்டிவிடும் இவ்வழக்கம் சிரியா நாட்டு "ஹேலியோ போலிஷ்" மற்றும் அர்மீனியா, மேற்கு சிற்றாசியாவில் உள்ள லிடியா மற்றும் கிரேக்க நாட்டின் கோசின்னித் (Cuzinith) என்ற நகரிலும் நிலை கொண்டிருந்தது. மெசபடோமியாவிலும் இதே முறை பின்பற்றப்பட்டு வந்தது. "மர்துக்" மற்றும் "ஷமஷ்" போன்ற கடவுளர்களுக்கு அங்குள்ள மகளிர் மணம் செய்து வைக்கப்பட்டனர். (மேலும் பார்க்க - http://www.kamat.com/kalranga/women/devadasi.htm)   கோயிலில் நடமாடுதல் மட்டுமல்லாது, கோயிலில் திருவலகிடுதல், திருமெழுகிடுதல், படையல் அரிசியைத் தூய்மைப்படுத்துதல், திருப்பதிகம் பாடல் போன்ற பணிகளையும் தேவரடியார் செய்துவந்தனர். பல்லவர்கள் காலத்தில் தேவதாசிகள் விற்கிருதை, பிரத்தியை, பக்தை, கிருதை, அலங்கரி, ருத்திரகணிகை, கோபிகை என ஏழு வகைப் பிரிவினராக இருந்தனர்.   தேவரடியர்(அ) தேவதாசிகள் திருநீறுத்தட்டும், புஷ்பத்தளிகை போன்றவற்றை விழாக்காலங்களில் எடுத்துச்செல்வர். அம்மன் மற்றும் சுவாமிக்கு இவர்கள் "கவரி" வீசவும் செய்ததால் "கவரிப்பிணா" என்றும் அழைக்கப்பட்டனர். சிவன் கோயிலில் பணி செய்து வந்தவர்கள் ரிஷபத்தளியலார் என்றும், வைணவக் கோயில்களில் இருந்தவர்கள் ஸ்ரீவைஷ்ணவ மாணிக்கம் எனவும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. முதலாம் இராசராசன், தஞ்சைப் பெரிய கோயிலின் இறை பணிக்காகவும், இசை நடனத்தை வளர்க்கவும் ஆடல், பாடல்களில் வல்ல 400 பெண்கள் வரவழைத்தான். அவர்கள் தளிச்சேரிப் பெண்டுகள்(தளி - கோயில்) எனப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த இடம் "தளிச்சேரி" எனப்பட்டது. முதலாம் இராசராசனால் குடியமர்த்தப்பட்ட பெண்டுகள் அனைவரும் சோழர் பழந் தலைநகரமான "பழையாறையின்" வடதளி, தென்தளி எனப்படும் சிவாலயங்களைச் சேர்ந்தவர்களாவர். முதலாம் இராசேந்திரன் கங்கை கொண்ட சோழபுரக்கோயிலைச் சேர்ந்த 24 தேவதாசிகளுக்கு நிலமும், பொன்னும் கொடையாக அளிக்கப்பட்ட செய்தியை "குளம்பந்தல் கல்வெட்டு" வாயிலாக அறியலாம்.   தலைக்கோலி, காவிதிகானை பேராள், காவிதிதாங்கி போன்ற பட்டங்கள் தேவரடியார்களுக்கு வழங்கப்பட்டன. "தலைக்கோல்" என்பது ஏழுசாண் நீளத்தில் மூங்கிலால் ஆனதாகும். கணுக்கள் தோறும் மணிகள் பதிக்கப்பட்டு இடையிடையே "பொன்கட்டு" இடப்பட்டிருந்தது. இந்திர விழாவின்போது தலைக்கோலுக்குப் பூசை நடத்தப்பட்டு ஆடல் மகளிருக்கு இக்கோல் வழங்கப்பட்டது. இக்கோலைப் பெற்றவள், "தலைக்கோலி" எனவும், நட்டுவன் "தலைக்கோலாசான்" எனவும் பாடல் பாடியோர் "தோரியமடந்தை" என்றும் அறியப்பட்டனர். தேவரடியார்களில் சிலர் அறப்பணியும் மேற்கொண்டனர் என்பதற்கு ஆதாரமாக, சடையவர்மன் வீரபாண்டியன் (13ம் நூற்றாண்டு) ஆட்சி காலத்தில் தேவரடியார்களில் ஒருத்தியான துக்கையாண்டி மகள் நாச்சி குடுமியான்மலை குடைவரையின் தெற்குப் பக்கத்தில் உள்ள "சவுந்திரநாயகி அம்மன்" கோயிலைக் கட்டியிருக்கிறாள் என அறியப்படுகிறது. கோயில் கலைப்பணிக்காக நியமிக்கப்பட்ட தேவரடியார்கள் அமைப்புகாலப்போக்கில் மாறுதல் அடைந்தது. அம்முறை பின் ஒழிக்கப்பட்டது. தமிழ்க் கூத்துக்கலையிலிருந்து பிரிந்து உருவான பரதம் இன்றளவிலும் ஓரளவு சிறப்புப் பெற்றிருப்பினும் பிற கூத்து நடனங்கள் ஆதரவின்றி அழியக்கூடிய தருவாயில் உள்ளன என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.   நலிந்து வரும் கூத்துக் கலைஞர்களுக்கு ஆதரவளித்து, கூத்துக்கலையை காப்பதன் வாயிலாகவே தமிழர் பண்பாட்டை உலக அரங்கில் மிளிரச்செய்ய இயலும்.   இல. கணபதிமுருகன்   நன்றி: தமிழ்மணி (தினமணி)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.