Jump to content

உயர்தர பரீட்சை முடிவுகளும் உபதேச உலகமும் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர பரீட்சை முடிவுகளும் உபதேச உலகமும் !
=
=====================================

உலகில் இலகுவான ஒன்றுதான் இன்னொருவருக்கு அறிவுரை சொல்வது. அதிலும் இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் தமிழினம் இந்த அறிவுரை சொல்லும் கலையில் எப்போதும் சிறந்த ஒரு உயிரினமாகவே திகழ்கிறது. 

மாதம் மும்மாரி பெய்வதுபோல ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பெறுபேறுகள் வெளிவரும்  மூன்றுமுறையும் ஆலோசனை மழையில் மாணவர்கள் நனைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. தோற்றவருக்கு அறிவுரை, ஆலோசனை, யாராவது பிள்ளைகள் பரீட்சைத் தோல்வியால் தற்கொலை செய்துவிட்டால் அதற்கு ஒரு கண்ணீர் அஞ்சலி, சரியாக, பிள்ளையை தோல்விக்கு முகம் கொடுக்கப் பழக்கவில்லை என்று பெற்றோருக்குக் கண்டனம், அப்படியே ஆசிரியர்களுக்கு ஒரு குட்டு என்று உயிரைக் கொடுத்து வேலை செய்வார்கள். 

அந்த மரபின்படி  இந்த வாரம் முழுவதும் வலைத்தளம் எங்கும் சோர்ந்து விடாதே; சேர்ந்து படி; மீண்டும் முயற்சி செய்; அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்; நீ படி படியென்று படித்தால் F எல்லாம் A ஆகும்; கல்வியே செல்வம் என்று ஒரு குழு சொல்லிக் கொண்டிருக்கிறது. 

மறு பக்கத்தில், திரும்பத் திரும்பப் படித்து காலத்தை வீணாக்காதே; உயர்தரம் இன்றியே உயர்ந்த மனிதர்கள் பலர், ஒருமுறை முயற்சி செய், முடியாவிட்டால் வேறு துறையைத் தெரிவு செய்து அதில் முன்னேறு கதைகளும் வலைத்தளமெங்கும் வலம் வருகின்றன. 

பாவம் மாணவர்கள்! எல்லா வகையான அறிவுரைகளையும் கேட்டுவிட்டு, வடிவேலு பாணியில் “என்னை ஏண்டா இப்பிடிப் படுத்துறீங்கள்?” என்பதுதான் பல மாணவர்களின் மனக்குரலாக (அதுதாங்க Mind Voice) இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இங்கு அறிவுரை சொல்லுவோர் எல்லோருமே பெரும்பாலும் தாம் மாணவர்களாக இருந்த கால அனுபவங்களை, எமது சமூகத்தில் நாம் காணும் ஒரு சில அரிதான உதாரணங்களை மற்றும் ஒரு சில புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு அறிவுரை சொல்கிறார்கள் என்பது அவர்கள் சொல்லும் அறிவுரைகளைப் பார்த்தாலே புரியும். ஆனால் இருதரப்பாரும் முக்கியமான விடயங்களாப் பேசாது கடந்து விடுகிறார்கள் என்பதுதான் வருத்தம் தருவதாக இருக்கிறது. 

எல்லோருமே, பிள்ளைகளைப் கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறுங்கள் என்று நெருக்கடி கொடுத்தாலும் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், வர்த்தகம், கலை, Engineering technology, Bio systems technology  ஆகிய மட்டுப்படுத்த கற்கை நெறிகளே தெரிவாக உள்ளன. 

இதைத்தவிர இலங்கையில் குறிப்பாக வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்ற உத்தியோகங்கள் மட்டுமே பல உயர்தர மாணவர்களின் இலக்குகளாக இன்றும் இருக்கிறது. ஆனால் ஒரு சமூகத்தில் வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி ஆகியோரை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். 

இவை ஒருபுறம் இருக்க, குறித்த ஒரு வருடத்தில் உயர்தரப் பரீட்சை எழுதும் நூறு மாணவர்களில் 60 – 64  மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெறுகிறார்கள். அந்தத் தகுதி பெற்ற மாணவர்களில் 9 – 10 பேர் மட்டுமே அரச பல்கலைக் கழகம் (இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் ) செல்கிறார்கள்.  அதாவது, தகுதி பெற்ற 64 பேரில் 54 பேர் தகுதி பெற்றாலும் பல்கலைக் கழகத்தில் இடமில்லாமல் வேறு வழி தேடவேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.

ஏனெனில் பல்கலைக் கழகத்திற்கு எத்தனை மாணவர்கள் உள் நுழைய முடியும் என்பதை அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் உயர்கல்விக்கு ஒதுக்கும் நிதியின் அளவே தீர்மானிக்கிறது. இதனால் நூற்றுக்கு 90 வீதமான மாணவர்கள் தமது உயர்கல்வித் தேவைகளுக்கு திறந்த பல்கலைக் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள், German Tech போன்ற வேறு நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். ஆனால் அவையும் தகுதி பெற்ற மாணவர்கள் அனைவரையும் உள்வாங்கப் போதுமானதில்லை. இதுதான் இலங்கையின் இன்றைய உயர்கல்வி நிலவரம்.

இன்னொரு வகையில் சொல்வதானால் (நாம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) உயர்தரப் பரீட்சையில் வெற்றி பெற்று (100 பேரில் 10 பேர் மட்டுமே) பல்கலைக் கழகம் செல்வதும் ஒரு சூதாட்டம் போன்றதுதான். 

உண்மையில் ஒரு மாணவன் பல்கலைக் கழகம் சென்றுதான் தனது வேலைத் தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றில்லை. அதேபோல உயர்தரம் கற்றுத்தான் ஒருவர் கல்வியிலும் தமது தொழில் துறையிலும் முன்னேற வேண்டும் என்பதில்லை. இன்று அதற்கு மாற்றாக பல வழிகள் உள்ளன.

இவ்வாறான மாற்று வழிகள் சாதாரண தரத்தின் பின்னரும் உயர்தரத்தின் பின்னரும்  இருந்தாலும் அவற்றின் பயனை மாணவர்கள் பெறுவதற்கு பல விடயங்களிலும் மாற்றங்கள் அவசியமானவை. 

இலங்கையில் உயர்தரத்தில் குறித்த மூன்று பாடங்களைப் படித்து நல்ல புள்ளிகள் பெற்று Z ஸ்கோரும் உயர்வாக இருந்தால் மாத்திரமே குறித்த சில கற்கைநெறிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் இந்தியாவிலும் பல மேற்குலக நாடுகளிலும் நிலைமை அப்படியில்லை. அவர்கள் மேற்படிப்பிற்கு தெரிவு செய்ய விரும்பும் துறைக்குத் தொடர்பான பாடங்களில் தேவையான பெறுபேறுகளைத் தமது உயர்தரம் கற்கும் காலத்தில் பெற்றிருந்தால் போதுமானது. இலங்கையிலும் இத்தகைய மாற்றம் வருமாக இருந்தால் உண்மையில் மாணவர்கள் மேற்படிப்புக்குரிய பாடங்களைத் தெரிவு செய்வது இலகுவாக அமையக்கூடும். 

தற்போதுள்ள நிலையில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் காணப்படும் பரந்துபட்ட கல்வி வாய்ப்புகள் பின் தங்கிய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இன்று போலிப் பல்கலைக்கழகம் பற்றி பெரும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுவரும் நிலையில் அரசு தனியார் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தவும் குறைந்தபட்ச தரநிலையைக் (minimum standard) கொண்டிராத நிறுவனங்கள் இயங்குவதைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலவசக் கல்விமுறையின் நன்மையை அதிக புள்ளிகள் பெற்ற மாணவர்கள் அனுபவிக்கும் அதேநேரம், பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றும் அரசின் வளப்பற்றாக்குறை காரணமாக உள்வாங்கப்படாத மாணவர்கள் கட்டணம் செலுத்தி (கல்விக் கடன் திட்டத்தின் கீழ்) கல்வி கற்கமுடியும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும். 

சமூக மட்டத்தில் பெற்றோர் தமது பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்று கனவு காண்பதை நிறுத்த வேண்டும். பிள்ளைகளின் ஆர்வத்தை அறிந்து அந்த ஆர்வத்தோடு இணைந்த துறையில் அவர்கள் மேற்கல்வி கற்பதை ஊக்குவிக்க முன்வரவேண்டும். பாடசாலைகளில் மாணவர்கள் சரியான தெரிவுகளை செய்வதற்குத் தேவையான வழிகாட்டல்கள்,  ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். 

மறுபுறத்தில் கல்விக் கூடங்கள் மாணவர்களைத் தொழிற் சந்தைக்கு ஏற்ப தயார் செய்பவையாக இருக்க வேண்டும்.  அதேபோல பாடசாலைகளின் தொழிற்சந்தை தொடர்பாக மாணவர்களுக்கு பொருத்தமான வழிகாட்டல்கள் வழங்கப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். இதைத்தவிர மாணவர்களை வகுப்பறைக்கல்விக்கு அப்பாலான கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களை சமூகப் பொறுப்புடன் இயங்குபவர்களாக உருவாக்க வேண்டும். 

பரந்துபட்ட பட்டப்படிப்பின் மூலம் சமூகத்தையும் நாட்டையும் முன்னேறும் முன்னேடிகளாக அடுத்த தலைமுறையினர் வரவேண்டும். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறுவது பணம் சம்பாதிக்கும் வழி என்று நினைக்கும் மனநிலை மாறவேண்டும். தொழில்முறைக் கல்விகள், சுயதொழில் முயற்சிக்கான அடிப்படைகளும் மாணவர்களின் 15 - 16 வயதிலேயே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். 

புலம்பெயர் சமூகமும் இலங்கையில் இளையவர்களுக்கு வேலை வாய்ப்பையும் கல்வி கற்கும் காலத்திலேயே வேலைத்தள அனுபவத்தையும் வழங்கும் வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் மாணவர்களை தகுதியும் திறமையும் கொண்டவர்களாக உருவாக்க முடியும். 

இதையெல்லாம் விடுத்து நாடாளாவிய ரீதியில் முதலிடம், மாவட்டத்தில் முதலிடம் எனப் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை கொண்டாடியும், பின்னடைந்தோரை அறிவுரை என்ற பெயரில் நெட்டித் தள்ளிக்கொண்டும் இருப்பதனால் எதையும் சாதித்து விடப்போவதில்லை. மாணவர்கள் சுதந்திரமாகக் கற்கக் கூடிய சூழலை பெற்றோர், பாடசாலைச் சமூகம் உருவாக்க வேண்டும்.

 

https://www.facebook.com/101881847986243/posts/325380488969710/?d=n

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அனேகமான பாடசாலைகள் பல்கலைகழக தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிக்கலாம் என்றுதான் சிந்திக்கிறார்களே தவிர(அப்பொழுதானே அவற்றை விளம்பரபடுத்தமுடியும்.🤦🏽‍♀️) 100 பேரில் 10 பேர் தெரிவானால் மிகுதி 90 பேரை எப்படி முன்னேற்றுவது என்பதை மறந்துவிடுகிறார்கள்.. பிரபல்யமான பாடசாலைகளின் நிலை இதுதான்.. அப்படியாயின் பின்தங்கிய இடங்களில் உள்ள மாணவர்களின் நிலை பற்றி நினைவு வருமா? 

புலம்பெயர் சமூகம் கல்வி சம்பந்தமாக(தனியே பணம் மட்டும் அனுப்பாமல்) வேறு வழிகாட்டல்களையும் வழங்கமுடியும்.. பெரியளவில் நிறுவனங்கள் அமைத்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காமல் சில வழிகாட்டல்களை (Mentor /Buddy training etc) குறைந்த செலவில் ஊர் மட்டத்தில் அல்லது பாடசாலை மட்டத்தில் செய்யலாம். 

சில வாரங்களுக்கு முன்பு இது சம்பந்தமான கூட்டம் ஒன்றில் பங்குபற்றிய வாயப்பு கிடைத்து.. என்னைப்பொறுத்தவரை அது ஒரு பயன் உள்ள ஒன்றாக தெரிந்து.. 

ஆனால் என்ன நாங்கள் வட்டத்தை விட்டு வெளியே சிந்திப்பதில்லை.. எங்களுக்கென சில துறைகளை வைத்துக்கொண்டு அதை மட்டுமே நிரப்பமுனைகிறோம். அதில் முழுஈடுபாட்டுடன் இல்லாத பிள்ளைகள் ஏதோ தானோ செயற்படுவதுடன், முன்னேறமுடியாமல் இருப்பார்கள்.. பணம் உழைப்பதற்கு மட்டுமல்ல கல்வி என்பது எனது எண்ணம்.. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி ...நல்லதொரு கட்டுரை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையாளர்.. ஊரில் தற்போதைய நடைமுறை மாற்றங்களை உள்வாங்கத் தவறி இருக்கிறார்.

இலங்கை மரபு வழிப் பல்கலைக்கழகங்களுக்கு நிகரான பட்டங்களை.. மகாப் பொல உட்பட நிதி உதவிகளுடனும்.. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மிகவும் பரந்து பட்ட அளவில் நாடெங்கும் வியாபித்து கல்விச் செயற்பாட்டை முன்னெடுக்கிறது. 

யாழ்ப்பாணம்.. முல்லைத்தீவு.. மன்னார்.. மட்டக்களப்பு.. திருமலை.. வவுனியா என்று எல்லா இடங்களிலும் கற்கை நிலைகளை திறந்து கற்பிக்கிறது.

மேலும்..  இது தவிர.. தொழில்நுட்பக் கல்லூரிகள்.. இன்னும் பல புதிய அரசு சார் மற்றும் யு யி சி அங்கீகாரம் பெற்ற பாடநெறிகளை பல உப பல்கலைக்கழகங்கள்.. மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வழங்கின்றன.

உண்மையில் மேற்படிப்புக்கான வாய்ப்புக்கள் முன்னரை விட இப்போ தாயகத்தில் அதிகம். ஆனால்.. இன்னும் சிலர் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதிலேயே குறியாக உள்ளனர். அதிலும் வெட்டிப் பெருமை பேசும் நம்மவர்கள். 

-----

 
The Open University of Sri Lanka- www.ou.ac.lk
 
College of Technology- www.dtet.gov.lk
 
University Colleges – www. uca.ac.lk
 
National Vocational Training Institute- www.vtasl.gov.lk
 
National Institute of Business Management (NIBM)www.nibm.lk
 
National Institute of Fisheries & Nautical Engineering (Ocean University) -www.gic.gov.lk
 
Technology Center- www.nitc.gov.np
 
Institute of Policy Studies- www.ips.lk
 
Institute of Bankers of Sri Lanka- www.ibsl.lk
 
Institute Of Engineers Sri Lanka (IESL) - www.iesl.lk
 
Institute of Management of Sri Lanka- www.imsl.lk
 
International Training Institute of Irrigation and Water Management- www.kitiiwm.gov.lk
 
Sri Lanka Institute of Tourism & Hotel Management- www.slithm.edu.lk
 
Sri Lanka Institute of Advanced Technological Education- www.sliate.ac.lk
 
Sri Lanka Institute of Information Technology (SLIIT) - www.sliit.lk
 
Sri Lanka Institute of Marketing (SLIM) - www.slim.lk
 
Sri Lanka Institute of Textile and Apparel- www.textile-clothing.lk
 
Sri Lanka Press Institute- www.slpi.lk
 
Sri Lanka Media Training Institute- www.slmti.lk
 
Sri Lanka Institute of Bankers- www.ibsl.lk
 
Sri Lanka Institute of Training and Development- www.slitad.org.lk
 
Sri Lanka Foundation- www.slf.lk
 
Sri Lanka Institute of Architects- www.slia.lk
 
Sri Lanka School of Agriculture- schoolofagriculturelabuduwagalle.blogspot.com
 
Sri Lanka Irrigation Training Institute- www.irrigation.gov.lk
 
மாணவர்களே சிறந்த ஆலோசனை வழிகாட்டலுடன் வாழ்க்கையில் சாதிக்க இறைவன் துணையுடன் சுய முயற்சியுடன் தயாராகுங்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கூறியது போல் கட்டுரையாளர் 90களில் நிற்கின்றார். 

விஞ்ஞானபிரிவில் கற்பவர் தனது இலக்கை மருத்துவராக வைப்பதில் தவறில்லை. அது போலவே பொறியியலாளர் & கணக்காளர்.

ஆனால் உயர்தர பரீட்சையில் தமது இலக்கிற்கான அனுமதி கிடைக்காதவர்கள் இன்று வேறுபல துறைகளை நோக்கி நகருகின்றார்கள். வெளிநாட்டுகளுக்கு சென்று கற்கிறார்கள். 

ஆனால் அரச ஓய்வூதியம் வரும் என்று அரச வேலையை மட்டும் குறிவைத்தும் ஓர் பகுதி செயற்படுகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:

நெடுக்ஸ் கூறியது போல் கட்டுரையாளர் 90களில் நிற்கின்றார். 

 

 

ஆத்மீகம் .அரசியல்  போன்றவற்றிலும் சில கட்டுரையாளர்கள் 90 களில் நிற்கின்றனர்....
அவர்கள் அந்த (90) வருடத்தில் எந்த கருத்தை வைத்திருந்தார்களோ அதையே இப்பவும் எழுதிகொண்டிருக்கின்றார்கள்.....மாற்றம் வேணும் என்பார்கள் தாங்கள் மாறமாட்டார்கள்....

எனக்கு ஞாபகம் இருக்கு84/ 85 களில் புளோட் அமைப்பினர் ஒர் சஞ்சிகை வெளியிட்டிருந்தனர் அதன் அட்டைப்படத்தில் பாடப்புத்தகத்தை தூக்கியெறிவது போன்ற ஓர் படம்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.