Jump to content

புனித நிலம்-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புனித நிலம்

அவனது தொழுகைக்கான 
உரிமை மறுக்கப்படுகிறது 
அவனது வாழ்வுக்கான 
உரிமை பறிக்கப்படுகிறது

அவனது நிலங்கள் 
இன்னொருவனால் 
ஆக்கிரமிக்கப்படுகிறது 

அவனும் அவனது 
குழந்தைகளும் 
கொல்லப்படுகிறார்கள் 

கொல்லப்படும் குழந்தைகள் 
அமெரிக்கக் குழந்தைகளோ 
அல்லது ஐரோப்பிய 
குழந்தைகளோ இல்லை 

அவர்கள் எல்லாம் 
பாலஸ்தீன குழந்தைகள்
அதனால் யாரும் 
கண்டுகொள்வதுமில்லை 
எந்தப் பிராத்தனைகளும் 
செய்வதும் இல்லை 

அன்று ஒரு நாள் 
மியன்மார் ரோகிங்காவிலும் 
ஈழத்திலும் கொல்லப்பட்ட 
குழந்தைகள் போலவே 

ஒலிவ் மரக் கிளையில் இருந்து 
ஒவ்வொரு இலைகளாக 
உதிர்ந்து கொண்டிருக்கின்றது 

சிலுவையில் அறையப்படும் 
ஜெருசலேத்தின் குருதி கண்டும் 
மனிதம் ஒரு சொட்டு 
கண்ணீரும் விடவில்லை 
எங்கும் ஒரு பூ வைத்ததாகவோ
எங்கும் ஒரு விளக்கு எரிந்ததாகவோ
தெரியவும் இல்லை 

வழமை போலவே 
உலகம் இன்றும் 
இறந்து தான் கிடக்கிறது. 

பா.உதயன் ✍️

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, uthayakumar said:

புனித நிலம்

அவனது தொழுகைக்கான 
உரிமை மறுக்கப்படுகிறது 
அவனது வாழ்வுக்கான 
உரிமை பறிக்கப்படுகிறது

அவனது நிலங்கள் 
இன்னொருவனால் 
ஆக்கிரமிக்கப்படுகிறது 

அவனும் அவனது 
குழந்தைகளும் 
கொல்லப்படுகிறார்கள் 

கொல்லப்படும் குழந்தைகள் 
அமெரிக்கக் குழந்தைகளோ 
அல்லது ஐரோப்பிய 
குழந்தைகளோ இல்லை 

அவர்கள் எல்லாம் 
பாலஸ்தீன குழந்தைகள்
அதனால் யாரும் 
கண்டுகொள்வதுமில்லை 
எந்தப் பிராத்தனைகளும் 
செய்வதும் இல்லை 

அன்று ஒரு நாள் 
மியன்மார் ரோகிங்காவிலும் 
ஈழத்திலும் கொல்லப்பட்ட 
குழந்தைகள் போலவே 

ஒலிவ் மரக் கிளையில் இருந்து 
ஒவ்வொரு இலைகளாக 
உதிர்ந்து கொண்டிருக்கின்றது 

சிலுவையில் அறையப்படும் 
ஜெருசலேத்தின் குருதி கண்டும் 
மனிதம் ஒரு சொட்டு 
கண்ணீரும் விடவில்லை 
எங்கும் ஒரு பூ வைத்ததாகவோ
எங்கும் ஒரு விளக்கு எரிந்ததாகவோ
தெரியவும் இல்லை 

வழமை போலவே 
உலகம் இன்றும் 
இறந்து தான் கிடக்கிறது. 

பா.உதயன் ✍️

கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.