Jump to content

இரவோடு இரவாக உடைத்தெறியப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ! பெரும் பதற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரவோடு இரவாக உடைத்தெறியப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ! பெரும் பதற்றம்

 முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிருந்தது.

இந்த நிலையில் பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்து நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது என தடை ஏற்படுத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்ததோடு முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் உள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இரவோடு இரவாக நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததோடு பொது நினைவுத்தூபியும் அடித்து உடைத்தெறியபட்டுள்ளது . 

நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன், பொது நினைவுத்தூபியும் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையை கொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களை கொண்டு அகற்றி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மதத்தலைவர்கள் ஒன்றுகூடியிருந்தனர். முள்ளிவாய்க்கால் வாரத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் தலையீட்டில் இரவோடு இரவாக  நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை பெரும் சர்ச்சையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
 

https://ibctamil.com/article/mullaitivu-situation-1620873161

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் தடை- கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம்!

May 13, 2021
 
11.jpg


முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி உட்பட ஏனைய பாதைகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் கிராமத்துக்கு பயணிப்போரை வேறு பாதையொன்றினை பயன்படுத்துமாறு இராணுவத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடுகை செய்வதற்காக நேற்று (புதன்கிழமை) பொது நினைவுக்கல் ஒன்று கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த செயற்பாட்டினை தொடர்ந்தே, முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழைய இராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

http://www.battinews.com/2021/05/blog-post_682.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத்துாபி உடைக்கப்பட்டது ஈழத்தமிழர்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை -காணொளி

breaking

தமிழீழம் 

வட தமிழீழம் 

 

முள்ளிவாய்க்கால் நினைவுத்துாபி உடைக்கப்பட்டது ஈழத்தமிழர்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்று திரு .கனகரத்தினம் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொருக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

 

 

https://www.thaarakam.com/news/dad94c99-4ee7-41da-85ff-a87c68d51ef2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே... நம், தமிழ் அரசியல் வாதிகள்?
இப்போது... நீங்கள், இதனை சர்வதேசத்துக்கு கொண்டு போக முடியாவிட்டால்.
விரைவில்... காணாமல், போவீர்கள்.  

எது.. வசதி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் என்னதான் குத்தி முறிந்தாலும் இலங்கைத்தீவில் தான் நினைத்ததுதான் நடக்கும் என்று கோத்தா ஞாபகப்படுத்துகின்றார்.

தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் சமூகவலை ஊடகங்களில் பொங்கிவிட்டு அமைதியாகிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

Gallery 

கரைகள் தூங்க - விரும்பினாலும் 
அலைகள் விடுவதில்லை 
மரங்கள் ஓய்வை - விரும்பினாலும் 
காற்று விடுவதில்லை
கோழிகள் தூங்க -விரும்பினாலும் 
பருந்துகள் விடுவதில்லை  
மான்கள்  ஓய்வை - விரும்பினாலும்
சிங்கங்கள் விடுவதில்லை
இது உலக நியதி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுமிராண்டிகளிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும் இதில மனிதாபிமானம் நிறைந்தவையாம் தங்களை  தாங்களே சொல்லி புகழுகினம். எப்போதும் நாட்டில் இரத்தக்களரி ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பும் இரத்தக்காட்டேரிகள்.  

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

காட்டுமிராண்டிகளிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும் இதில மனிதாபிமானம் நிறைந்தவையாம் தங்களை  தாங்களே சொல்லி புகழுகினம். எப்போதும் நாட்டில் இரத்தக்களரி ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பும் இரத்தக்காட்டேரிகள்.  

நாங்கள் கவலை படுகிறோம். ஆனால் அதற்கு தத்துவம் எழுதி அதை ஞாயப்படுத்தி சில மனிதர்கள்  எல்லாம் தாம் தமிழாராக காட்டி கொள்கிறார்கள்

4 hours ago, கிருபன் said:

தமிழர்கள் என்னதான் குத்தி முறிந்தாலும் இலங்கைத்தீவில் தான் நினைத்ததுதான் நடக்கும் என்று கோத்தா ஞாபகப்படுத்துகின்றார்.

தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் சமூகவலை ஊடகங்களில் பொங்கிவிட்டு அமைதியாகிவிடுவார்கள்.

அதற்கு தானே எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு- களத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பயணம்

 
image0-2-696x522.jpeg
 48 Views

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக கொண்டுவரபட்டிருந்த பொது நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் பொது நினைவுத்தூபியும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2021-05-13-at-9.22.59-AM.

இதனையடுத்து முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஷ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட  அமைப்பாளர் தீபன் திலீசன் , கட்சியின் உறுப்பினர்கள் சென்று நிலவரத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

WhatsApp-Image-2021-05-13-at-9.23.02-AM.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,

நேற்றிரவு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலிக்காக கொண்டுவரப்பட்ட நினைவுக்கல் இன்று காலை காணாமல் போயுள்ளது. நினைவு முற்றமும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த பிரதேசம் காவல்துறையினரும் இராணுவத்தினரதும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்ததுடன் வேறு யாரும் செல்லதற்கும் அனுமதிக்கப்பட்வில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக இப் பகுதி மக்களிடம் வினவியபோது இரவு அதிகாலை ஒருமணிக்கும் மூன்று மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இராணுவ சீருடை அணிந்தவர்களினால் அந்த கல் ஏற்றிச்செல்லப்பட்டதாக அறிய முடிகின்றது. நேற்றையதினம் கல்லை ஏற்றிவந்த மதகுருக்கள், முள்ளளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் காவல்துறையினரால் நெருக்கடி கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினரும் இராணுவத்தினருமே நினைவுக்கல் களவாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

WhatsApp-Image-2021-05-13-at-9.23.02-AM-

இன்று ஆட்சியிலுள்ள கோட்டபாய அரசாங்கம் தான் 2009 திட்டமிட்ட இனப்படுகொலை இடம்பெற்றபோது ஆட்சியில் இருந்தவர்கள். கோட்டபாயவே அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்தவர்.

இந்த திட்டமிட்ட இனவழிப்பிற்கு தமிழர்கள் சர்வதேச நீதியினைக்கோரி வருகின்றவேளை இன்று இந்த நினைவேந்தலைக்கூட செய்யமுடியாமல் இராணுவத்தினராலும் காவல்துறையினாலும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழ் மக்கள் மீது இனவழிப்புச் செய்த இராணுவத்தினருக்கு தமிழர் தேசமெங்கும் நினைவுச்சின்னங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களான தமிழருக்கு, போரிலே படுகொலை செய்யப்பட்ட அவர்கள் உறவுகளுக்கு அவர்கள் மண்ணில் ஒரு நினைவாலயத்தை வைத்து வணக்கம் செலுத்த முடியாத ஒரு நிலை உள்ளதென்றால் அதற்கான  பிரதானமான காரணம் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்று நடைபெறாமல் உள்ளக விசாரணைக்கு பத்தாண்டு காலமாக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு தண்டனை வழங்குதலிலிருந்து தப்பித்து வந்ததன் விளைவாக தாங்கள் எதைச்செய்தாலும்  அதற்காக பொறுப்புக்கூறத்தேவையில்லை என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்ற நிலைமையில்தான் இந்த காடைத்தனத்தை செய்கின்றார்கள்.

WhatsApp-Image-2021-05-13-at-9.23.02-AM-

குறிப்பாக இந்த கோட்டபாய அரசாங்கம் பதவியில் இருக்கின்ற பொழுதுகூட கடந்த மார்ச் 23ம் திகதி ஜெனீவாவிலே 46/1 தீர்மானம் என்ற அந்த உள்ளக விசாரணைத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதன் எதிரொலியாகத்தான் நாங்கள் இந்த சம்பவத்தைப் பார்க்கவேண்டி இருக்கின்றது.

image0-2.jpeg

ஆகவே இந்த சம்பவத்திற்கு இவ்வாறான  ஒடுக்குமுறையை மேற்கொண்டு வருகின்ற இராணுவத்தினரும் காவல்துறையினரும் பதவியில் இருக்கின்ற கோட்டா அரசாங்கம் மாத்திரமல்ல. இந்த அரசாங்கம் செய்த படுகொலைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல விடாமல் தடுத்து உள்ளக விசாரணைக்கு வாய்ப்புக்கொடுத்து சர்வதேச சக்திகளினுடைய தேவைக்காக தமிழர்களுடைய விவகாரம் பயன்படுவதற்குத் துணை நின்றவர்களும் இதற்குப்பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=49419

 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக தமிழர்களுடைய உணர்வுகளை அழிக்க முடியாது – சாணக்கியன்

 
1-49-696x377.jpg
 21 Views

தமிழர்களுடைய உணர்வுகளை, நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பொதுத்தூபி இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து  வெளியிட்டுள்ள கண்டனத்திலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நேற்றைய தினம் இலங்கை இராணுவத்தினால் என்று நாங்கள் சந்தேகப்படுகின்றோம். முள்ளிவாய்காலிலே கொல்லப்பட்ட உறவுகளின் நினைவுச் சின்னங்களை அழித்திருப்பதாக, அது அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசாங்கமானது தொடர்ந்து தமிழர்களுடைய வரலாறுகளை, தமிழர்களுக்கு நினைவு கூறும் வாய்ப்பினை கூட இல்லாமலாக்கும் ஒரு அரசாங்கம்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஒன்று வந்ததன் பின்னர், சாதாரணமாக ஒரு உயிரிழந்த உறவுகளை கூட, அதாவது சில சில கொலைகளாக கூட இருக்கலாம், படுகொலைகளாக இருக்கலாம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சில படுகொலைகள் விசேடமாக என்னுடைய பெரியப்பாவும் படுகொலை செய்யப்பட்டார் அவரினுடைய நினைவேந்தலைக் கூட அனுஷ்டிக்க என்னை தடை செய்து, நீதிமன்ற உத்தரவின் ஊடாக எனக்கு தடை விதிக்கப்பட்டது.

அந்த வகையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலே கூட இவ்வாறாக ஒரு சம்பவம் நடைபெற்றது. ஆனால் அதை அந்த பல்கலைக்கழக உபவேந்தரே மீண்டும் கட்டி முடித்திருக்கின்றார்.

உண்மையிலேயே தமிழர்களுடைய உணர்வுகளை நீங்கள் இவ்வாறான நினைவு சின்னங்களை இடித்து அழிக்க முடியாது. நீங்கள் இடிக்கும் ஒவ்வொரு நினைவுச் சின்னமும் தமிழர்களுடைய மனங்களில் ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தும் ஒரு சம்பவமாகத்தான் நான் பார்க்கின்றேன்.

நீங்கள் எவ்வாறு தான் எங்களுடைய உணர்வுகளை தடுக்க முயற்சித்தாலும் நாங்கள் நடந்த எந்த விடயத்தினையும் மறக்க மாட்டோம். இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற எந்த அநீதியையும் நாங்கள் மறக்க மாட்டோம்.

விசேடமாக இந்த வாரம் 2009 ஆம் ஆண்டு எத்தனையோ ஆயிரக்கணக்கான உறவுகளை நாங்கள் இழந்திருந்தோம். அந்த உறவுகள் உயிரிழந்த திகதியோ, உயிரிழந்த இடமோ எங்களுக்கு தெரியாத நிலையிலே கூட அனைவரையும் நினைவு கூர்கின்ற ஒரு இடமாக அந்த நினைவுச் சின்னத்தினை நாங்கள் கடந்த வருடங்களில் பயன்படுத்தியிருந்தோம்.

நீங்கள் தமிழர்களுடைய உணர்வுகளை அழிப்பதற்கு வேறு புதிய வழிகளை தேட வேண்டும். ஏன் என்றால் எங்களுடைய உணர்வுகளை உங்களால் அழிக்க முடியாது.

மிக வன்மையாக நான் இதை கண்டிக்கின்றேன்.  அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற எங்களுடைய தமிழ் பிரதிநிதிகளும் கூட இதுதொடர்பாக உங்களுடைய கண்டனத்தினை நீங்கள் தெரிவிக்க வேண்டும். இன்று நீங்கள் அரசாங்கத்துடன் இருந்தாலும் உங்களை தெரிவு செய்தது தமிழ் மக்கள் தான். உங்களை தெரிவு செய்த மக்களினுடைய உறவுகளும் கூட அந்த வாரத்திலே, அந்த மாதங்களிலே அந்த இறுதி யுத்தத்திலேயே நிச்சயமாக உயிரிழந்திருப்பார்கள்.

உங்களும் பொறுப்பொன்று உள்ளது. இவர்களை நினைவு கூர்வதற்கு நினைவு தூபிகளை இடிக்காமல் பாதுகாக்கின்ற முழுப்பொன்று உள்ளது. இந்த அரசாங்கம் தன்னுடைய இறுதி ஊர்வலத்திலே பயணிக்க ஆரம்பித்து விட்டது என்பதை நான் இந்த இடத்திலே சொல்ல விரும்புகின்றேன். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்திலே பயணிக்க ஆரம்பித்து விட்டது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=49453

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டமைக்கு மத தலைவர்கள் கண்டனம்

 
1-51-696x509.jpg
 25 Views

அமைதியான முறையில் நடைபெறும் நிகழ்வுகளை  படையினர் தடைசெய்து அதை வன்முறையாக மாற்றியுள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ள மததலைவர்கள்,  இச்செயற்பாடு அதிர்ச்சியளித்துள்ளதுடன் மிகவும் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஊடக சந்திப்பு இன்று யாழ் ஊடக அமையத்தில்  நடைபெற்றது.அதன்போதே மேற்படி கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் இதில் கலந்து கொண்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான இயக்கத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான வேலன் ஸ்வாமிகள் மற்றும் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம்  அடிகளார் இணைந்து,  எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து உறவுகளை நினைவு கூற  அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அத்தோடு முள்ளிவாய்க்கால் மண்ணிலே இறுதி உணவாக இருந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் தயாரித்து உறவுகளுக்கு பரிமாறி அந்தத் துயரத்தை நினைவு கூறுமாறும் அறைகூவல் விடுத்துள்ளனர்

 

 

https://www.ilakku.org/?p=49452

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

கரைகள் தூங்க - விரும்பினாலும் 
அலைகள் விடுவதில்லை 
மரங்கள் ஓய்வை - விரும்பினாலும் 
காற்று விடுவதில்லை
கோழிகள் தூங்க -விரும்பினாலும் 
பருந்துகள் விடுவதில்லை  
மான்கள்  ஓய்வை - விரும்பினாலும்
சிங்கங்கள் விடுவதில்லை
இது உலக நியதி......

இவை உலக நியதி என்றாலும்
எதிர்த்து போராடுவதே வாழ்க்கை

இவற்றின் தோல்வியிலும் பலருக்கு நன்மையுண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு சின்னத்தை உடைத்தமை தமிழர்களின் ஆத்மாவை அழிக்கும் செயல் - மாவை

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் உடைக்கப்பட்டது,  எம் இனத்தின் ஆத்மாவை அழிக்கும் செயல் இதனை நாகரிகமுள்ள உலகமும் கண்டித்தே ஆகவேண்டும். இதற்கான பொறுப்பை அரசு ஏற்றுப் பதிலளிக்க வேண்டும்.  என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை. சோ,சேனாதிராசா தெரிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் காணப்பட்ட நினைவு சின்னம் நேற்றிரவு உடைக்கப்பட்டமை தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

Mavai_Senathirajah.jpg

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்று காலையில் மேலும் ஒரு நெஞ்சை உலுக்கும் செய்தி கிடைத்தது. மே-18 முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நிலை நாட்டப்பட்ட  சின்னங்கள் சிதைக்கப்பட்டுள்ளமையும், நிலை நாட்டவெனவிருந்த நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுவிட்டமையும் எம் நெஞ்சை உலுக்கும் கொந்தளிக்க வைக்கும் நடவடிக்கைகளும் ஆகும்.

நேற்று இரவோடிரவாய் முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சுற்றி இராணுவம் குவிக்கப்பட்ட நிலையில் இக்கொடிய நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்நாகரிகமற்ற எம் இனத்தின் ஆன்மத்தையே அழிக்கும் செயலை அனைவரும் நாகரிகமுள்ள உலகமும் கண்டித்தே ஆகவேண்டும். இதற்கான பொறுப்பை அரசு ஏற்றுப் பதிலளிக்க வேண்டும்.

இந்நாட்டில் தமிழினப் பிரச்சனை தீர்க்கப்படாமையினால் இடம்பெற்ற நீதிக்கான 70 ஆண்டுகள் போராட்டத்தின் உச்சநிலையில் இலட்சக்கணக்கான உயிர்கள், மனித குலம் அழிக்கப்பட்டமையை நினைவுகூரும் பண்பாடு, நாகரிகம், அந்த உறவுகளுக்கும் நீதிக்காய்ப் போராடும் திடசங்கற்பங் கொண்ட மக்களுக்கும் உள்ள உரிமையையும் அழிக்க எடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் அனைவரும் எதிர்த்தேயாக வேண்டும்.

முள்ளிவாய்க்கால் மே-18 நினைவுகூரும் அதேவேளை கொரோனா வைரஸ்-19 தீவிரமடைந்து வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை ஏற்று பழியஞ்சி அமைதி வழியில் மக்கள், உறவுகள் வாழும் இடங்களில் நினைவுகூருவதற்கே அறிவித்தல் கொடுக்க எண்ணியிருந்தோம். கிருத்துவ மத ஆயர்களும் அவ்வாறானதொரு ஆனால் காத்திரமான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இனவிடுதலைப் போரில் அழிக்கப்பட்ட எம்மினத்தின் உறவுகள் தம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் கண்ணீர் விட்டழுது ஆறுதல் பெறவும் உயிர்நீத்த உறவுகள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதற்கும் உள்ள மனிதகுல நாகரிகத்தை உரிமையை நாமுள்ளவரை நிலைநாட்டவும் திடசங்கற்பம் கொள்வோம்.

அரசு அதன் இராணுவம், பௌத்தர்களும் நேற்று முன்தினம் முல்லைத்தீவில் குருந்தூர் மலைப்பிரதேசத்தில் சைவ மக்கள் வழிபாட்டுத்தலத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளையும் மீறி ஒன்று கூடி பௌத்த சிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளிலும், வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இனவிடுதலைப் போரில் உயிர்களைப் பலிகொடுத்த உறவுகள் அந்த இனமக்கள் அவ்வுறவுகளை நினைவுகூரும் உரிமை பௌத்த சிங்கள அரசுகளினால் மறுக்கப்படுவது மட்டுமல்ல அந்த நினைவுகூரும் மையங்கள் நினைவிடங்களும் அழிக்கப்படுகின்றன.

நாம் இந்நாளில் தொடர்ந்தும் மனித குலத்தின் தமிழ் மக்களின் பண்பாடு, நாகரிகத்தை நிலைநாட்டுவோம் எனவும், அழிக்கப்பட்ட நினைவிடத்தை நினைவுச் சின்னங்களை மீளஅமைப்போம் எனவும், இனவிடுதலையை நிலைநாட்டுவோம் எனவும் திடசங்கற்பம் கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.   

நினைவு சின்னத்தை உடைத்தமை தமிழர்களின் ஆத்மாவை அழிக்கும் செயல் - மாவை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

எங்கே... நம், தமிழ் அரசியல் வாதிகள்?
இப்போது... நீங்கள், இதனை சர்வதேசத்துக்கு கொண்டு போக முடியாவிட்டால்.
விரைவில்... காணாமல், போவீர்கள்.  

எது.. வசதி?

நமது தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்கானவர்களாக இருந்திருந்தால்  ஈழத்தமிழினத்திற்கு 70 ஆண்டுகாலமாக அவலங்களும் அழிவுகளும் வந்திருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா என்ற நவீன இடியமீனும் அவரின் சுற்றம் சூழலும் திருந்த வாய்ப்பே இல்லை. திருந்தும் என்று எதிர்வுகூறிய நம்மட ஆக்கள் தான் தங்களை திருத்திக்கனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

தமிழர்கள் என்னதான் குத்தி முறிந்தாலும் இலங்கைத்தீவில் தான் நினைத்ததுதான் நடக்கும் என்று கோத்தா ஞாபகப்படுத்துகின்றார்.

தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் சமூகவலை ஊடகங்களில் பொங்கிவிட்டு அமைதியாகிவிடுவார்கள்.

தமிழ் தேசியம் அல்லாத அரசியல்வாதிகளும் 
உங்களை போன்றவர்களும் முன்னிலை காவலரணைகளை 
தகர்த்துக்கொண்டு இருக்கும்போது ... அவர்கள் அமைதியாக இருப்பதே நன்று 

பின்பு பிரபாகரன் வளைந்து  கொடுத்து இருந்தால் .... நெளிந்து  கொடுத்து இருந்தால் ....
என்று கட்டு கட்டாக கட்டுரை எழுதிக்கொண்டு இருப்பார்கள் 

அப்ப அப்ப வந்து ....
தமிழர்கள் என்ன குத்தி முடிந்தாலும் ... 
என்று தானாடாமல் நின்றாலும் சதையாடுது 

 

15 hours ago, தமிழ் சிறி said:

எங்கே... நம், தமிழ் அரசியல் வாதிகள்?
இப்போது... நீங்கள், இதனை சர்வதேசத்துக்கு கொண்டு போக முடியாவிட்டால்.
விரைவில்... காணாமல், போவீர்கள்.  

எது.. வசதி?

சர்வதேசம் என்பது என்ன கடவுள் பூமியா?
அவர்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. 

அடி ஒன்றே ஒரே வழி 
பெண்கள் கூட கரும்புலி படகேறிய நேரம் 
சுத்த சுயநலத்தால் விமானம் ஏறியவர்கள் நாங்கள் 

ஒரு கூட்டம் தங்காளால் முடியாததையும் முடிக்க துடித்தார்கள் 
இப்போ எஞ்சிய நாங்கள்  எல்லோரும் முடிந்ததையும் மூடிக்கொண்டோம் 

இனி அறுவடை காலம் 
எதை விதைத்தோமோ அதுவே விளைந்திருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கடந்த போராட்டங்களில் தவறுகள் நடந்திருப்பதாக குத்தி முறிபவர்கள் இத்தகைய கொடூரங்களை கண்டிக்க மட்டும் வருவதில்லை.

சிலவேளைகளில் அவர்கள் இது சம்பந்தமாக நடக்கும் குதூகல கொண்டாட்டங்களில் மதி மயங்கி விழுந்து கிடக்கிறார்களோ??

Link to comment
Share on other sites

15 minutes ago, விசுகு said:

இங்கே கடந்த போராட்டங்களில் தவறுகள் நடந்திருப்பதாக குத்தி முறிபவர்கள் இத்தகைய கொடூரங்களை கண்டிக்க மட்டும் வருவதில்லை.

 

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழும் இந்த காட்டுமிராண்டித்தனங்களை தமிழர்கள் மாத்திரமே வாசிக்கும் ஒரு தளத்தில் கண்டிப்பதால் என்ன பலன் கிடைக்கும்?

மாறாக, மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களை அர்ப்பணித்தும் இன்று கல்லறை கட்ட கூட உரிமையற்ற நிலைக்கு ஏன் வந்தோம் என்றே ஆராய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

இங்கே கடந்த போராட்டங்களில் தவறுகள் நடந்திருப்பதாக குத்தி முறிபவர்கள் இத்தகைய கொடூரங்களை கண்டிக்க மட்டும் வருவதில்லை.

சிலவேளைகளில் அவர்கள் இது சம்பந்தமாக நடக்கும் குதூகல கொண்டாட்டங்களில் மதி மயங்கி விழுந்து கிடக்கிறார்களோ??

"இறப்பு இல்லாத வீட்டில் கடுகு வேண்டி வா" என்ற கெளதமனின் வார்த்தைகள்தான் நினைவிற்கு வருகின்றது. 

உலக வரலாற்றில் தவறு இடம்பெறாத ஏதாவது ஒன்றைக் காட்ட முடியுமா ?

தவறுகளை சுட்டிக் காட்டுவோரின் நிலைகள் பின்வருமாறு;

1) பெற்றோர்

2) ஆசான்

3) அரச தரப்பு சட்டவாளர்

4) உள்ளூர் பொலிஸார் 😂

நாம் எந்த வகைக்குள் நிற்கிறோம் என்பது எங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும்.

🙏

1 minute ago, நிழலி said:

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழும் இந்த காட்டுமிராண்டித்தனங்களை தமிழர்கள் மாத்திரமே வாசிக்கும் ஒரு தளத்தில் கண்டிப்பதால் என்ன பலன் கிடைக்கும்?

மாறாக, மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களை அர்ப்பணித்தும் இன்று கல்லறை கட்ட கூட உரிமையற்ற நிலைக்கு ஏன் வந்தோம் என்றே ஆராய வேண்டும்.

மேலே கூறப்பட்ட எனது கருத்து இதற்கும் பொருந்தும் என நம்புகிறேன். 

🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழும் இந்த காட்டுமிராண்டித்தனங்களை தமிழர்கள் மாத்திரமே வாசிக்கும் ஒரு தளத்தில் கண்டிப்பதால் என்ன பலன் கிடைக்கும்?

மாறாக, மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களை அர்ப்பணித்தும் இன்று கல்லறை கட்ட கூட உரிமையற்ற நிலைக்கு ஏன் வந்தோம் என்றே ஆராய வேண்டும்.

இதைத் தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்,நிழலி...!

இதற்கான விடை...எமது இனத்தில் பெரும்பான்மையோருக்கு...விடுதலை தேவையில்லை!

அதற்கான பக்குவம், இன்னும் பலருக்கு ஏற்படவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

இதைத் தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்,நிழலி...!

இதற்கான விடை...எமது இனத்தில் பெரும்பான்மையோருக்கு...விடுதலை தேவையில்லை!

அதற்கான பக்குவம், இன்னும் பலருக்கு ஏற்படவில்லை!

மனிதன் விரும்பும்/அடைய நினைக்கும் ஒரு விடயத்திற்கு எப்போது தகுதியடைகின்றானோ அப்போது அது அவனை வந்தடையும் என்பது உளவியற் சூத்திரம்.

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

அதற்கான பக்குவம், இன்னும் பலருக்கு ஏற்படவில்லை!

அதுமட்டுமல்ல கபிதன் சொன்னது போல அதற்கான தகுதியடையவில்லை.

முதலில் இனம் அதன் விடுதலைக்கான பக்குவத்தையும் தகுதியையும் அடைந்தால், யாராலும் அந்த இனம் விடுதலை அடைவதை தடுக்கமுடியாது. 

அர்ப்பணிப்பும் தியாகமும் விலைபோகாத தலைமையும் விடுதலைக்கான பாதையை வழிவகுத்து வேகத்தையும் கூட்டுமே தவிர அந்த இனம் விடுதலை அடைய மேற்கூறிய பண்புகளை அடைந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

வானையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இனம், ஒரு கல் நட வழியில்லாமல் இருப்பது வேதனைக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் யார் மீது பழி போடலாம் என்று மட்டுமே சிந்திக்கிறோம். மருதண்ணர் சொன்னது போல அதற்கு நாமே காரணமாகி நிற்கிறோம் என்ற உணர்வு வரும்வரை விடுதலையும் சாத்தியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு சின்னத்தை உடைத்தமை தமிழர்களின் ஆத்மாவை அழிக்கும் செயல் - மாவை

அவங்கள் தமிழர்களை அழித்தபோது 
கூடி நின்று வடம் பிடித்த போது தெரியாதது 

ஆத்மாவை அழிக்கும் போதுதான் இவர்களுக்கு தெரிகிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நினைவு சின்னத்தை உடைத்தமை தமிழர்களின் ஆத்மாவை அழிக்கும் செயல் - மாவை

அவங்கள் தமிழர்களை அழித்தபோது 
கூடி நின்று வடம் பிடித்த போது தெரியாதது 

ஆத்மாவை அழிக்கும் போதுதான் இவர்களுக்கு தெரிகிறதா? 

எங்கள் அரசியல்வாதிகளின் அறிக்கைக்ச்ளுக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுகத்தான் வேண்டுமா ?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.