Jump to content

கமல் கட்சியில் இருந்து பத்ம பிரியா, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் விலகல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நடிகர் கமல் ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து சமூக ஊடகப் பிரபலம் பத்ம பிரியா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ஆகியோர் விலகியுள்ளனர்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் எனது பதவியிலிருந்தும் விலகுவதாக கனத்த மனதுடன் அறிவிக்கிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கமலும் அவருடைய அணியினரும் என் மீது காட்டிய அன்புக்கும் நட்புக்கும் நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார்.

சந்தோஷ் பாபு

பட மூலாதாரம்,FB/SANTHOSH BABU

 
படக்குறிப்பு,

சந்தோஷ் பாபு

கடந்த வாரம் டாக்டர் மகேந்திரன் கட்சியை விட்டு விலகியபோது, தான் கமல்ஹாசனுடன் தொடரப்போவதாக கூறியிருந்தார் சந்தோஷ் பாபு. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், "நேர்மையான உலகத்தரம் வாய்ந்த நிர்வாகத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டுமெனும் ஒரே நோக்கத்தில் ஐஏஎஸ் பதவியை தூக்கி ஏறிந்துவிட்டு அரசியலுக்கு வந்தவன் நான். தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தைத் தரும் அருகதை தலைவர் கமல்ஹாசனுக்கு மட்டுமே இருக்கிறது. நான் அவரோடு நிற்கிறேன்" என்று கூறியிருந்தார்.

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அக்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்தத் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக கடந்த வாரம் வியாழக்கிழமை அக்கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் கூடியது. இதில் அக்கட்சியின் நிர்வாகிகளிடமிருந்து ராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டன. அப்போது அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் கமல்ஹாசனுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதிவிட்டு, கட்சியை விட்டே வெளியேறினார்.

இதற்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட சந்தோஷ் பாபு, "தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களைத் தலைவரிடம் கொடுத்தனர். தேர்தல் கால செயல்பாடுகளை ஆய்வுசெய்து, கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட கடிதங்கள் தலைவரின் பரிசீலனையில் இருக்கின்றன. கட்சி கட்டமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய பொறுப்பாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை சந்தோஷ் பாபு தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை வெளியிடப்பட்டபோது, சந்தோஷ் பாபு எழுதாத பல விஷயங்கள் அதில் சேர்க்கப்பட்டிருந்ததில் அவர் அதிருப்தி அடைந்ததாகச் சொல்லப்பட்டது. குறிப்பாக, ஓர் இடத்தில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்தும் மற்றொரு இடத்தில் இரு மொழிக் கொள்கையை எதிர்த்தும் கருத்துகள் இடம்பெற்றிருந்தன.

தவிர, கூட்டங்களின்போது மேடையில் கமல் மட்டும் அமர்வது குறித்தும் கடந்த வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர்கள் கேள்வியெழுப்பினர். இந்த நிலையில்தான், கட்சியை விட்டு விலகுவதாக சந்தோஷ் பாபு தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு, தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராகவும் தமிழ்நாடு பைபர் நெட் கழகத் தலைவராகவும் இருந்துவந்தார். மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கு ஒத்துழைக்க மறுத்த சந்தோஷ் பாபு டெண்டரில் திருத்தம் செய்தார். இது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஐஏஎஸ் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.

அதற்குப் பிறகு, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.

பத்ம பிரியாவும் விலகல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் திருத்தம் செய்வதை விமர்சித்து வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு மூலமாக பிரபலமடைந்த பத்ம பிரியா மக்கள் நீதி மையத்தின் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் வெளியிட்ட தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிவுகள் மூலம் அவர் இதை தெளிவுபடுத்தியுள்ளார். ஆங்கிலப் பதிவில் தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாகவும், தமிழ்ப் பதிவில் சில காரணங்களால் விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கமல் ஹாசனுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

தாம் போட்டியிட்ட மதுரவாயல் தொகுதி வாக்காளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

கமல் கட்சியில் இருந்து பத்ம பிரியா, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் விலகல் - BBC News தமிழ்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-05-13-20-22-59-290-org-m

லைக்கா ஓனருடன் சமாதானம் பேசி நடிப்பு தொழிலை தொடரலாம் அல்லோ.?

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சிவப்பு தொப்பி மெளவி உடான்ஸ் சாமியாரின் குரு. அவரை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது 🤣
  • இது அப்பட்டமான தனி மனித தாக்குதல், எனவே களவிதி மீறல் (நீங்களும் தனிமனிதர் தானே?)
  • தமிழீழத்திற்கான போராட்டமும் இந்தியாவும் இந்திய றோவின் உப தலைவரின் இலங்கை வருகையினையடுத்து திகைப்படைந்துள்ள அரசியல் மற்றும் ராணுவத் தலமைப்பீடங்கள் - இனவாத பத்திரிக்கையில் வெளியான கட்டுரை காலம் : 21, ஐப்பசி 2008 இனவாதிகளின் கட்டுரையினைப் படிக்குமுன், ஒரு சிறிய  முன்னோட்டத்துடன் இதனை ஆரம்பிக்கலாம். "ஒரு விடயம் பற்றி என்னதான் சொல்லப்பட்டாலும், அதை எவர்தான் சொல்லியிருந்தாலும், அதனை சீர்தூக்கிப் பார்த்து உண்மைதனை அறிதலே சரியான அறிவுடமையாகும்" என்கிறது திருக்குறள். ஒரு முழுப் பொய்யைவிட, அரை உண்மைகளை உறுதிப்படுத்துவது கடிணமானது. இலங்கைக்கு வருகை தந்திருக்கும் றோவின் உபதலைவர் தொடர்பாக இனவாதிகளின் ஊதுகுழல் பயப்படுவது அவருக்கும் புலிகளுக்கும் முன்னர் இருந்த தொடர்புகளுக்காக அல்லாமல், இன்று சீனா மற்றும் பாக்கிஸ்த்தான் அச்சு நோக்கி நகர்ந்துவரும் மகிந்த ராஜபக்ஷவுக்கு அவர் கொடுக்கவிருப்பதாகக் கருதப்படும் அழுத்தம் பற்றியே என்றால் அது மிகையில்லை.  ஆகவேதான், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையினை விமர்சிப்பதனை விடுத்து, அதனைக் காவிவந்து தமக்கு நினைவூட்டக்கூடும் என்று சிங்களம் கருதும் சந்திரசேகரன் எனும் அந்த றோ அதிகாரிமீது ஐலண்ட் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. ஆனால், இதில் உள்ள உண்மையென்னவென்றால் சந்திரசேகரனும் இன்னும் ஒரு றோ அதிகாரியும் பூட்டான் , திம்புவில் 1985 இல் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட்டு வந்தவர்கள் என்பதும், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையினை பிசகின்றி முன்னெடுத்துச் செல்வதில் தீவிர உறுதிப்பாடு கொண்டவர்கள் என்பதும் சிங்கள இனவாதிகள் அறியாததல்ல.   சரி, இதன் பின்னணியில் தி ஐலண்ட் எழுதியிருக்கும் கட்டுரையினைப் படிக்கலாம். "புலிகளின் அனுதாபியென்று கருதப்பட்டும் முன்னாள் றோ உயர் அதிகாரி, சந்திரன் எனப்படும் சந்திரசேகரனின் கொழும்பு விஜயம்  கொழும்பில் அரசியல் வட்டாரங்களிலும், ராணுவ வட்டாரங்களிலும் புருவங்களை உயர்த்தியிருக்கிறது.  பாராளுமன்ற மேலதிகச் செயலாளரான சந்திரன் 1980 களில் இலங்கைத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கான பயிற்சிமுகாம்களை நிறுவுவதில் முன்னின்று செயற்பட்டவர். பின்னர், புலிகளுடன் நெருங்கிச் செயற்பட்ட அவர் யாழ்தேவி புகையிரதம் மீதான தாக்குதல், 1985 ஆம் ஆண்டு அநுராதபுரம் மீதான தாக்குதல்களுக்கு புலிகளுக்கு உதவியவர். இவ்வாறான தாக்குதல்களின்பொழுது புலிகள் இவருடன் தொடர்ச்சியான தொடர்பிலிருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது. அதேவேளை ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் பத்மநாபாவுடனும் நெருங்கிச் செயற்பட்ட சந்திரன், பத்மநாபாவின் சென்னை விஜயம் குறித்து புலிகளுக்குத் தகவல் வழங்கி 1990 இல் அவர் கொல்லப்பட உதவிபுரிந்தவர் என்றும் கூறப்படுகிறது. பத்மநாபாவின் நெருங்கிய தோழர்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் அவரது சென்னை விஜயம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. பத்மநாபாவின் தோழர்களின் கூற்றுப்படி சந்திரனைத் தவிர பத்மநாபாவின் வருகையினை வேறு எவரும் அறிந்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சந்திரனுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்ததாகக் கருதப்படும் தொடர்பினையடுத்து, 1991 ஆம் ஆண்டின் ராஜீவ் கொலைக்கும் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று றோவே அஞ்சும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் இருந்திருக்கின்றன. இதனால், சந்திரன் றோவிலிருந்து விலகி மேற்படிப்பிற்காக அமெரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டார். ஐலண்டிற்குக் கிடைத்த தகவல்களின்படி, சந்திரன் புலிகளுக்கு பயிற்சிகள், திட்டமிடல், பிரச்சார உத்திகள் தொடர்பாக பல உதவிகளைப் புரிந்திருக்கிறார் என்று தெரியவருகிறது. சென்னையில் அரசு சாரா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் சந்திரன் அதன்மூலம் புலிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாட்டில் நடத்திவருகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  சந்திரன் இலங்கைக்கு முன்னரும் பலதடைவைகள் விஜயம் செய்திருந்தபோதும், தற்போதைய விஜயமானது சுற்றிவளைக்கப்பட்டு அழியவிருக்கும் புலிகளை மீட்பதற்காகவே என்று தெரியவருகிறது. இதுவரை அவர் பல தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா மற்றும் ஈ பி டி பி யின் தலைவர் டக்கிளஸ் ஆகியோரைச் சந்தித்திருக்கும் சந்திரன் இவ்விடயம் தொடர்பாகப் பேசியதாகத் தெரிகிறது. குறிப்பாக கருணாவுடனான அவரது கலந்துரையாடல்களின்போது, புலிகளின் செயற்பாடுகளுக்கு கருணா குழு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாதென்று கேட்டுக்கொண்டதாக ஐலண்ட் பத்திரிக்கைக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன. கருணா இந்தியாவில் பயிற்சியெடுத்த காலத்தில் சந்திரனே அவருக்குப் பொறுப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சந்திரனின் கோரிக்கையினை முற்றாக மறுத்துவிட்ட கருணா, புலிகளுடன் சமரசம் என்கிற பேச்சிற்கே இடமில்லையென்றும், புலிகள் முற்றாக அழிக்கப்படவேண்டும் என்றும், அதன் பின்னரே தீர்வு தொடர்பான பேச்சுக்கள பற்றி சிந்திக்க முடியும் என்று கூறியதாகவும் தெரியவந்திருக்கிறது. 1989 இல் வடக்குக் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் ராணுவமான தமிழ்த் தேசிய ராணுவத்திற்கான ஆயுதங்களை வழங்குவதில் சந்திரனே முன்னின்று செயற்பட்டிருந்தார். புலிகளுக்குக் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்திய ராணுவம் வெளியேறிக்கொண்டிருந்த நேரத்தில்க் கூட தமிழ்த் தேசிய ராணுவத்திற்கென்று கார்ல் குஸ்டவ் பின்னுதைப்பற்ற உந்துகணை செலுத்திகளை   வரவழைத்துக் கொடுத்திருந்தார். எதிர்பார்க்கப்பட்டதுபோலவே தமிழ்த்தேசிய ராணுவத்தை எளிதில் வீழ்த்திய புலிகள் தமக்கான புத்தம் புதிய பின்னுதைப்பற்ற உந்துகணை செலுத்திகளையும் சந்திரன் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொண்டனர். பின்னர் அதே உந்துகணைகள் இலங்கை ராணுவத்தின்மேல் புலிகளால் பாவிக்கப்பட்டன.  புலிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், புலிகள் தென்னிலங்கையில் நாசகாரத் தாக்குதல்களை நடத்தலாம் என்கிற சூழல் நிலவும் இந்தத் தருணத்தில், புலிகளின் அனுதாபியான றோ அதிகாரியொருவரை இலங்கைக்கு வர அனுமதிப்பதும், சுதந்திரமாக உலாவுவதை அனுமதிப்பதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.
  • ஆ.... ஆயிரம் பொற்காசுகளா.... மண்டபத்தில் யாரும் எழுதித்தரவில்லை. நானே தான் எழுதினேன். 😳
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.