Jump to content

நடைப்பயிற்சி: ஆர்வலர்களின் குழப்பமும் வல்லுநர்கள் விளக்கமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடைப்பயிற்சி: ஆர்வலர்களின் குழப்பமும் வல்லுநர்கள் விளக்கமும்

spacer.png

அ.குமரேசன் 

கொரோனா முதல் அலை ஏற்படுத்திய காயங்களிலிருந்து வடிந்த குருதியின் ஈரம் உலர்வதற்குள்ளாக இரண்டாம் அலை குதறிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது அலை கூரிய பற்களோடு வர இருப்பதையும், சில நாடுகளில் நான்காம் அலை தன் நகங்களைக் கூர் தீட்டிக்கொண்டிருப்பதையும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளின் தேவை உணரப்படுகிறது. விளையாட்டாகவோ வீம்பாகவோ பொதுமுடக்க விதிகளை மீறக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. வழிபாடு, கொண்டாட்டம் என எந்த வகையிலும் மீறுகிறவர்கள் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாத மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆகவேதான் அணுகுமுறைகளில் மாற்றுக் கருத்துகள் உள்ளவர்களும் முகக்கவசம், சமூக இடைவெளி, கூட்டம் கூடாதிருத்தல் உள்ளிட்ட அந்த விதிகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.

பொதுமுடக்கத்திற்கான விளக்கங்கள் போதுமான அளவுக்குத் தரப்பட்டிருக்கின்றன என்றாலும், பலருக்கு வேறொரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. காலையிலோ, மாலையிலோ உடற்பயிற்சியாகக் கால்வீசி நடக்கிற பழக்கம் உள்ளவர்கள் அவர்கள். பொதுமுடக்கம் என்றில்லாவிட்டாலும், கொரோனாவின் கோரத் தாண்டவத்தைப் பார்க்கிறபோது அப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் தங்களுக்கோ, தங்களால் மற்றவர்களுக்கோ பாதிப்பு ஏற்படுமோ என்ற ஐயம் அவர்களை முடிவெடுக்க முடியாமல் முடக்கிப்போடுகிறது. கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என்று அறிவியலாளர்கள் சொல்வதைக் கேட்டு, அப்படியானால் வெளியே செல்கிறபோது காற்றில் பரவியிருக்கக்கூடிய வைரஸ் தங்களைத் தொற்றிவிடக்கூடும், தங்களை நேரடியாகப் பாதிக்கிறதோ இல்லையோ, பின்னர் தங்களிடமிருந்து குடும்பத்தினரையோ அண்டை வீட்டுக்காரர்களையோ அலுவலகத்தில் உடன் பணியாற்றுகிறவர்களையோ தொற்றக்கூடும் என்று தன்னலமும் பிறநலமும் கலந்து தயங்குகிறார்கள். வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று காற்று வாங்குவதைக் கூடத் தவிர்க்கிறார்கள்.

 

வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என்றால், அது ஏதோ தூசுப் படலம் போலக் காற்றில் பரவித் திரிந்துகொண்டிருக்கும், வெளியே வருகிறவர்கள் மீது விழுந்து சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்குள் நுழைந்துவிடும் என்று புரிந்துகொள்ளக்கூடாது என்று அறிவியலாளர்கள் விளக்கியிருக்கிறார்கள். வைரஸ் தானாகப் பறந்து பரவக்கூடியதல்ல. அதற்கான இறக்கைகளோ கால்களோ அதற்குக் கிடையாது. சளித்துளிக்குள் பதுங்கி, அதனை ஒரு வாகனம் போல் பயன்படுத்தித்தான் பயணிக்கிறது. தொற்று ஏற்பட்டுள்ள ஒருவர் தும்முகிறபோது, இருமுகிறபோது, பேசுகிறபோது, பலமாகப் பெருமூச்சு விடுகிறபோது வெளியேறுகிற சளித்துளிகளைப் பற்றிக்கொண்டு வைரஸ் தானும் வெளியே வருகிறது. தொடக்கத்தில், பெரிய சளித்துளிகளில் மட்டுமே வைரஸ் இருக்கும் என்று கருதப்பட்டதால், அந்தப் பெரிய துளிகள் வெளியே பாய்ந்து கீழே விழக்கூடிய தொலைவு கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் வரைதான் என்பதால், அந்த அளவுக்கு இடைவெளி தேவை என்று பரிந்துரைக்கப்பட்டது.

அடுத்தடுத்த ஆராய்ச்சிகளில், சிறு சிறு துளிகள் மூலமாகவும் வைரஸ் வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட்டது. அந்தச் சிறு துளிகள் மேலும் ஓரிரு மீட்டர்கள் வரையில் கூடுதலாகப் பாய்ந்து கீழே விழுந்துவிடும். ஆகவே, அதற்கேற்ப சமூக இடைவெளியை அதிகப்படுத்திக்கொள்வது, கூட்டத்தைத் தவிர்ப்பது, கைகளைக் கழுவிக்கொள்வது, முகக்கவசங்களையும் அடிக்கடி தூய்மைப்படுத்திக்கொள்வது, ஒரே முகக்கவசத்தையே வைத்துக்கொண்டிராமல் அவ்வப்போது புதிய முகக்கவசங்களை வாங்கிப் பயன்படுத்துவது போன்ற ஆலோசனைகள் அறிவுறுத்தப்படுகின்றன. அவரவர் சூழலுக்கேற்ப மருத்துவம் சார்ந்த முகக்கவசம், இரட்டை முகக்கவசம் போன்றவற்றைப் பயன்படுத்தவும் ஆலோசனை கூறப்படுகிறது. “தலைவரே, எப்படி உங்க மாஸ்க் மட்டும் அழுக்குப்படாம புதுசாவே இருக்கு,” என்று கேட்கிறார் ஒரு விசுவாசி. “அதுவா, நான் தும்முறபோதும் இருமுறபோதும் மாஸ்கைக் கழட்டி வெச்சிடுவேன்,” என்கிறார் தலைவர். இந்த நகைச்சுவைத் துணுக்கு நினைவுக்கு வருகிறது.

 

சிரித்துவிட்டு இப்போது நாம் நடைப்பயிற்சி பற்றிய குழப்பத்திற்கு வருவோம். அன்றாட நடைப்பயிற்சியைத் தொடர்வதா, அதையும் நிறுத்திவைப்பதா? இந்த வினா பலரிடமிருந்தும் வந்ததைத் தொடர்ந்து சில மருத்துவ வல்லுநர்கள், நடையைத் தவிர்ப்பதே நல்லது என்று கருத்துக் கூறியிருக்கிறார்கள். ஆயினும், நீரிழிவு, கொழுப்பு போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் மருத்துவக் காரணங்களுக்காக நடைப்பயிற்சி மேற்கொண்டாக வேண்டியிருக்கிறது. அது பிரச்சினையை வரவேற்பதாகிவிடுகிறது. நடந்தேயாக வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள், உரிய முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி சிறிது நேரம் நடைப்பயிற்சிக்குச் சென்று வரலாம் என்று அந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள். அப்படி நடப்பதைக் கூட, மக்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலைப் பொழுதில் மேற்கொள்வது நல்லது என்றும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள் (‘இந்தியா டுடே’, இணையப் பதிப்பு, மே 5).

பல சூழல்களோடு

இது குறித்துக் கேட்டபோது தில்லி விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த அறிவியலாளரும், தமிழில் கொரோனா தொடர்பானவை உள்ளிட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதி வருபவருமான டி.வி. வெங்கடேஸ்வரன், “நடைப்பயிற்சி போகலாமா என்ற கேள்வியைப் வேறு பல சூழல்களோடு இணைத்துதான் பார்க்க வேண்டும். உதாரணமாக, ஒரு பெரிய மைதானத்தில், அருகில் வரக்கூடியவர்கள் யாரும் இல்லாத அல்லது யாருமே இல்லாத இடத்தில், தனியாக நடந்து செல்கிற வாய்ப்புள்ள சாலையில் அல்லது தெருவில், முகக்கவசம் அணிந்துகொண்டு நடப்பதில் பிரச்சினை இல்லை,” என்றார்.

“சில குடியிருப்புப் பகுதிகளில் நடைப்பயிற்சிக்கென்றே இடம் அமைத்திருப்பார்கள். அங்கேயெல்லாம் பார்த்தால் பலரும் நெருக்கமாக நடப்பார்கள். சேர்ந்து நடப்பார்கள். ஒருவர்க்கொருவர் மிகக்குறைவான இடைவெளிதான் இருக்கும். அப்படிப்பட்ட நெரிசலான இடங்களை இப்போதைக்குத் தவிர்ப்பதுதான் நல்லது. மொட்டை மாடியில் நாம் மட்டும் நடப்பதில் சிக்கலில்லை. திறந்த காற்றிலிருந்து வைரஸ் வந்துவிடாது. வெளியே நடக்கிறபோது எதிரே வருகிறவருடன் நின்று பேசுவோம், எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரிப்போம், வழியில் ஒரு டீக் கடையைப் பார்த்தால், ஏற்கெனவே அங்கே நிற்பவர்களோடு சேர்ந்து டீ குடித்துக்கொண்டே உரையாடுவோம்… இதெல்லாம்தான் சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. ஆகவேதான், பிரச்சினையே வேண்டாமென்று பொதுவாக நடையைத் தவிர்த்துவிட்டு, வீட்டிலேயே இருக்கப் பரிந்துரைக்கிறார்கள்,” என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

spacer.png

நடைப்பயிற்சி நண்பர்கள்

முன்னணி ஹோமியோபதி மருத்துவரும், டாக்டர் கோபிகர் ஹோமியோபதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான பி.வி. வெங்கட்ராமன், இன்னொரு பழக்கத்தையும் சுட்டிக்காட்டினார். “ஒரு கலாச்சாரம் போல நடைப்பயிற்சி நண்பர்கள் என்றே சிறு சிறு குழுக்கள் இருக்கின்றன. அவர்களோடு சேர்ந்துதான் பேசிக்கொண்டே நடக்கிறோம், நடைப்பயிற்சி முடிகிறபோது உட்கார்ந்து அரட்டையடிக்கிறோம். பூங்காக்களில், குறுகலான தெருக்களில், நடைமேடைகளில் நடக்கிறபோது எதிரே வருகிற எல்லோரும் முகக்கவசம் அணிந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. வழிபாடுகள் சார்ந்த கூட்டங்கள் கூடக்கூடிய இடங்களிலும் இதே நிலைமைதான். இப்படிப்பட்ட நெருக்கமான தொடர்பு வாய்ப்புகள் தொற்றுக்கு வழிசெய்துவிடக்கூடும் என்பதால்தான் நடைப்பயிற்சி வேண்டாம் என்று சொல்லப்படுகிறது. தனியாக நடக்கக்கூடிய, விசாலமாக இருக்கக்கூடிய இடங்களில் தைரியமாக நடக்கலாம். அப்போதும் முகக்கவசம் கண்டிப்பாகத் தேவை,” என்றார் அவர்.

“கோவிட் தாக்கம் உள்ளவர்களுக்கு இதயம், தசை போன்ற அங்கங்கள் பலவீனமாக இருக்கும். அவர்கள், தங்களுக்குத் தொற்று இருக்கிறதா இல்லையா என்றே உறுதிப்படாதபோது நடைப்பயிற்சி சென்றால் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும். ஆகவேதான், சிறு பாதிப்பு கூட தீவிரமாகலாம் என்ற அச்சமிருப்பதால், வழக்கமான உடற்பயிற்சி, பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சி கூட இப்போது வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது,” என்றும் கூடுதலாகப் பகிர்ந்துகொண்டார்.

உடற்பயிற்சி மட்டுமல்ல

அக்கு சிகிச்சையாளரும், கம்பம் அக்குபங்சர் அகாடமி முதல்வருமான உமர் பாரூக் இதுபற்றிக் கூறுகையில், “வீட்டிலேயே முடங்குகிறபோது மூட்டுகள் அசைவுக்கான வாய்ப்பு சுருங்கிவிடுகிறது. ஆகவே பாதுகாப்பான நடைப்பயிற்சி அவசியமாகிறது. நடை என்பதை வெறும் உடற்பயிற்சியாக மட்டும் பார்ப்பதற்கில்லை. மனநலத்தோடும், சிந்தனை வளர்ச்சியோடும் சம்பந்தப்பட்டது நடை. உடலியலும் உளவியலும் இணைந்து செயல்பட்டால்தான் எந்தப் பணியும் முழுமையடையும். பிடித்தமான ஒன்றை யோசித்தபடி மன அழுத்தமில்லாமல், ரசனை ஈடுபாட்டோடு காலாறச் செல்வதுதான் நடை,” என்றார்.

“உலக சுகாதார நிறுவனம் சொல்கிற முகக்கவசம், கொரோனா கிருமியை விட நுட்பமான துளைகளைக் கொண்டது. நாம் பொதுவாகப் பயன்படுத்துவது எதிரே இருப்பவரிடமிருந்து வெளியேறக்கூடிய கிருமிகளைத் தடுக்கக்கூடியதுதான். கொரோனா கிருமி பற்றிய தகவல்கள் போதுமான அளவுக்கு இல்லாத நிலையில் பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளி, இப்போது கொரோனா பற்றிய அறிவு அதிகரித்துள்ள நிலையில் அப்படியே பொருந்தாது. அமெரிக்காவில், தனியான திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என்றே சொல்கிறார்கள். எதிரே இருப்பவரோடு பேசும்போதும், மூடப்பட்ட இடங்களில் இருக்கிறபோதும்தான் முகக்கவசம் தேவை என்றெல்லாம் அங்கே பரிந்துரைக்கப்படுகிறது. நம் நாட்டில் உள்ள குழப்பமான சூழலில் சரியான ஆலோசனைகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கிறபோது முகக்கவசம் அணிந்துகொள்ளலாம். ஆனால் தொடர்ந்து அணிவது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே தனியாக அல்லது போதுமான இடைவெளியோடு நடக்கிற இடமா, நெருக்கமாக நடமாடுகிற இடமா, எப்படிப்பட்ட திறந்தவெளி என்பதைப் பொறுத்து முடிவெடுக்கலாம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

 

கிருமிகளை எதிர்கொள்ள நேரிடுகிறபோதுதான் உடலின் இயற்கையான நோயெதிர்ப்புத் திறன் நன்கு வலுப்பெறும்; வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு, வகைவகையான உணவுகளையும் மருந்துகளையும் எடுத்துக்கொள்வதால் மட்டும் அந்தப் பலன் கிடைத்துவிடாது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் பல கிருமியியல் ஆய்வாளர்கள். உரிய ஆலோசனைகளை முறையாகக் கடைப்பிடிக்கிற உறுதிப்பாடு இருக்குமானால் நடையைத் தவிர்க்க வேண்டியதில்லை என்றே அவர்களும் அறிவுறுத்துகிறார்கள். ஆம், நடப்பது என்பது நடப்பு நிலைமைகளுக்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்வதற்காகவும்தான்.

 

 

https://minnambalam.com/public/2021/05/15/23/is-walking-in-corona-pandemic-acceptable

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

அன்றாட நடைப்பயிற்சியைத் தொடர்வதா, அதையும் நிறுத்திவைப்பதா? இந்த வினா பலரிடமிருந்தும் வந்ததைத் தொடர்ந்து சில மருத்துவ வல்லுநர்கள், நடையைத் தவிர்ப்பதே நல்லது என்று கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

நடைபயிற்சியை தவிர்க்கும்படி இந்திய மருத்துவ வல்லுநர்கள் கூட சொல்கிறார்களா :rolleyes: கொரோனாவுக்காக ஊரடங்கு உத்தரவு கொண்ட வெளிநாடுகளில் கூட அந்த நேரத்தில் நடைபயிற்சி செய்வதற்கு அனுமதிக்கபட்டதாக சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்னம்பலத்தில் இருந்து, இதனை இங்கே இணைக்க வேண்டிய தேவை என்ன, கிருபன் அய்யா.

தயவு செய்து எங்களை குழப்பவேண்டாம். எமது அரசுகள் சொல்வதை மட்டும் பதியுங்கள்.

மோடியில்  இருந்து, சும்மா, டாக்டர்களின் பெயரை சொல்லி, எழுதும் பத்திரிகை கேடிகள் வரை பொறுப்பு இல்லாமல், இந்திய மக்களை குழப்பி அடிக்கும், இது போன்ற தேவையில்லா குழப்பங்கள் இங்கே போட்டு எங்களை குழப்ப வேணாமே.

கொரோனா எல்லா நாடுகளுக்கும் பொதுவான பிரச்சனை ஆகையால், நான் இதென்னடா நம்ம, நடைக்கு வந்த பிரச்சனை எண்டு உள்ள வந்து பார்த்தால் தான் தெரியுது, இது நம்மூர் பிரச்சனை இல்லை என்று. 😡

பொறுப்புடன் பதிவோமே 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

நடைபயிற்சியை தவிர்க்கும்படி இந்திய மருத்துவ வல்லுநர்கள் கூட சொல்கிறார்களா :rolleyes: கொரோனாவுக்காக ஊரடங்கு உத்தரவு கொண்ட வெளிநாடுகளில் கூட அந்த நேரத்தில் நடைபயிற்சி செய்வதற்கு அனுமதிக்கபட்டதாக சொன்னார்கள்.

நடை பயிற்சி செய்வது நல்லது. ஆனால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கும்பமேளாவில் கும்பலாகப் போவது போன்று நடைப்பயிற்சிக்குப் போனால் கொரோனா வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கும்தானே.

9 hours ago, Nathamuni said:

மின்னம்பலத்தில் இருந்து, இதனை இங்கே இணைக்க வேண்டிய தேவை என்ன, கிருபன் அய்யா.

தயவு செய்து எங்களை குழப்பவேண்டாம். எமது அரசுகள் சொல்வதை மட்டும் பதியுங்கள்.

மோடியில்  இருந்து, சும்மா, டாக்டர்களின் பெயரை சொல்லி, எழுதும் பத்திரிகை கேடிகள் வரை பொறுப்பு இல்லாமல், இந்திய மக்களை குழப்பி அடிக்கும், இது போன்ற தேவையில்லா குழப்பங்கள் இங்கே போட்டு எங்களை குழப்ப வேணாமே.

கொரோனா எல்லா நாடுகளுக்கும் பொதுவான பிரச்சனை ஆகையால், நான் இதென்னடா நம்ம, நடைக்கு வந்த பிரச்சனை எண்டு உள்ள வந்து பார்த்தால் தான் தெரியுது, இது நம்மூர் பிரச்சனை இல்லை என்று. 😡

பொறுப்புடன் பதிவோமே 🙏

யாழ் இணையத்தை பிரித்தானியா, மேற்குநாடுகளில் இருப்பவர்கள் மட்டும் படிப்பபதில்லை. இந்தியாவில் இருந்துதான் அதிக வாசகர்கள் வருகின்றார்கள் என்று முன்னர் பார்த்த ஞாபகம்.

மேற்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், ஏன் தமிழர்களும் கூட சமுக இடைவெளியை அதிகம் கடைப்பிடிப்பதில்லை. ஏசியன் கடைகளுக்குப் போனாலே தெரியும்.  நாங்கள் விலகி நின்றாலும், பின்னால் ஒட்டிக்கொண்டு நிற்பார்கள்.

நடைப்பயிற்சிக்குப் போகும்போது நெருக்கமாகப் போகாமல் இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதுதான் சாராம்சமாக மேலே உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நடை பயிற்சி செய்வது நல்லது. ஆனால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கும்பமேளாவில் கும்பலாகப் போவது போன்று நடைப்பயிற்சிக்குப் போனால் கொரோனா வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கும்தானே.

யாழ் இணையத்தை பிரித்தானியா, மேற்குநாடுகளில் இருப்பவர்கள் மட்டும் படிப்பபதில்லை. இந்தியாவில் இருந்துதான் அதிக வாசகர்கள் வருகின்றார்கள் என்று முன்னர் பார்த்த ஞாபகம்.

மேற்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், ஏன் தமிழர்களும் கூட சமுக இடைவெளியை அதிகம் கடைப்பிடிப்பதில்லை. ஏசியன் கடைகளுக்குப் போனாலே தெரியும்.  நாங்கள் விலகி நின்றாலும், பின்னால் ஒட்டிக்கொண்டு நிற்பார்கள்.

நடைப்பயிற்சிக்குப் போகும்போது நெருக்கமாகப் போகாமல் இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதுதான் சாராம்சமாக மேலே உள்ளது. 

இன்சேருங்கோ, கிருபன் அய்யா...

சும்மா சப்பைக்கட்டு கட்டக்கூடாது....

பிரித்தானிய, கனேடிய அரசு மிக கடுமையான கொரோனா லாக் டௌன் காலத்திலும் நடை பயிலலுக்கு தடை போடவில்லை.

ஆகவே.... குழப்ப வேண்டாம்.

ஒரு சினிமா டைரக்டர் இடம் சான்ஸ் கேட்டு ஒருவர் வந்தார். சரி... என்ன தெரியும் என்றார் டைரக்டர். ரஜனி மாதிரி நடிப்பேன் என்றார் வந்தவர்.

அதுக்குத்தான் ரஜனி இருக்கிறார் அப்பா.... உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்க, அவர் பதில் அளிக்க முடியவில்லை.

தமிழ்நாட்டின் மின்அம்பல தளத்தினை  எடுத்து,அவர்களுக்கே கொடுக்காமல், உங்களால் முடிந்ததை எழுதி போடுங்கோ.

நெடுக்கர், எவ்வளவு மினக்கெட்டு விபரங்களை சேகரித்து தருவார் என்று பாருங்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

இன்சேருங்கோ, கிருபன் அய்யா...

சும்மா சப்பைக்கட்டு கட்டக்கூடாது....

பிரித்தானிய, கனேடிய அரசு மிக கடுமையான கொரோனா லாக் டௌன் காலத்திலும் நடை பயிலலுக்கு தடை போடவில்லை.

ஆகவே.... குழப்ப வேண்டாம்.

ஒரு சினிமா டைரக்டர் இடம் சான்ஸ் கேட்டு ஒருவர் வந்தார். சரி... என்ன தெரியும் என்றார் டைரக்டர். ரஜனி மாதிரி நடிப்பேன் என்றார் வந்தவர்.

அதுக்குத்தான் ரஜனி இருக்கிறார் அப்பா.... உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்க, அவர் பதில் அளிக்க முடியவில்லை.

தமிழ்நாட்டின் மின்அம்பல தளத்தினை  எடுத்து,அவர்களுக்கே கொடுக்காமல், உங்களால் முடிந்ததை எழுதி போடுங்கோ.

நெடுக்கர், எவ்வளவு மினக்கெட்டு விபரங்களை சேகரித்து தருவார் என்று பாருங்கள்.
 

நாதம்ஸ், உங்களுக்கு யாழ் களத்தின் பல பகுதிகள் ஏன் இருக்கின்றன என்ற விளக்கம் இருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்.  யாழில் இருக்கும் செய்திப் பிரிவுகளில் செய்திகளை மட்டும்தான் ஒட்டலாம். பின்னர் அதைப் பற்றிக் கருத்துக்களை வைக்கலாம்.

சொந்தமாக செய்திகளை யாரும் இங்கு எழுதுவதில்லை. நீங்கள்தான் இடையிடையே வேறு எங்காவது (ஆங்கிலப் பேப்பர்களில்) படித்தவற்றை திரட்டி, சுவாரசியத்திற்கு சில விசயங்களையும் போட்டு எழுதுவீர்கள். ஆனால் ஒவ்வொருநாளும் சொந்தமாக செய்திகளையும், அலசல்களையும் எழுத நேரமும் உங்களுக்கும் இருக்காது.  சொந்தமாக மட்டும் எழுதவேண்டும் என்றால் யாழில் ஈதான் இருக்கும்😀

வேறு இடத்தில் இருப்பதை திருப்பி எழுதவேண்டிய அளவுக்கும் எனக்கும் வேலைவெட்டி இல்லாமல் இல்லை. அதுதான் படித்தவற்றில் யாழில் போடலாம் என்று நினைப்பவற்றை நான் ஒட்டுகின்றேன். 

மற்றது... நடைப் பயிற்சிக்கு போகும்போது கவனமாக எப்படி இருக்கவேண்டும் என்றுதான் மின்னம்பல கட்டுரை சொல்கின்றது. அது உங்களுக்கு பொருந்தாவிட்டால் நீங்கள் தனியாகவே நடக்கலாம்.😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

நாதம்ஸ், உங்களுக்கு யாழ் களத்தின் பல பகுதிகள் ஏன் இருக்கின்றன என்ற விளக்கம் இருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்.  யாழில் இருக்கும் செய்திப் பிரிவுகளில் செய்திகளை மட்டும்தான் ஒட்டலாம். பின்னர் அதைப் பற்றிக் கருத்துக்களை வைக்கலாம்.

சொந்தமாக செய்திகளை யாரும் இங்கு எழுதுவதில்லை. நீங்கள்தான் இடையிடையே வேறு எங்காவது (ஆங்கிலப் பேப்பர்களில்) படித்தவற்றை திரட்டி, சுவாரசியத்திற்கு சில விசயங்களையும் போட்டு எழுதுவீர்கள். ஆனால் ஒவ்வொருநாளும் சொந்தமாக செய்திகளையும், அலசல்களையும் எழுத நேரமும் உங்களுக்கும் இருக்காது.  சொந்தமாக மட்டும் எழுதவேண்டும் என்றால் யாழில் ஈதான் இருக்கும்😀

வேறு இடத்தில் இருப்பதை திருப்பி எழுதவேண்டிய அளவுக்கும் எனக்கும் வேலைவெட்டி இல்லாமல் இல்லை. அதுதான் படித்தவற்றில் யாழில் போடலாம் என்று நினைப்பவற்றை நான் ஒட்டுகின்றேன். 

மற்றது... நடைப் பயிற்சிக்கு போகும்போது கவனமாக எப்படி இருக்கவேண்டும் என்றுதான் மின்னம்பல கட்டுரை சொல்கின்றது. அது உங்களுக்கு பொருந்தாவிட்டால் நீங்கள் தனியாகவே நடக்கலாம்.😎

 

தனியா நடக்க சொல்லித்தான் உங்கை சொல்லி இருக்கினம்.... 👌

ஒரே வீடு என்றால் மட்டும் சேர்ந்து நடக்கலாம். தெளிவான வழிகாட்டல்கள் இங்கே உள்ளன.

இந்தியாவில், கும்பமேளாவில் இருந்து, மோடி நடாத்திய தேர்தல் கூட்டம் வரை எந்த வித முறையோ, ஒழுங்கோ இல்லை.

அவர்களுக்கு சொல்லும் அறிவுரை எமக்கு குழப்பத்தினை தரும் என்பதால் தான் சொன்னேன்.

மத்தப்படி, உங்கள் சேவையினை குறை சொல்லவில்லை.

ஆனால், அங்குள்ளவர்கள், பலர் பார்க்கிறார்கள், அதுதான் இணைத்தேன் என்பது சரியானது அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.