Jump to content

இலங்கை முள்ளிவாய்க்காலில் அரசு கட்டுப்பாடு: உள்நாட்டுப்போர் முடிந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முள்ளிவாய்க்காலில் அரசு கட்டுப்பாடு: உள்நாட்டுப்போர் முடிந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு

18 மே 2021, 06:38 GMT
முள்ளிவாய்க்காலில் போர் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டது சமீபத்தில் சர்ச்சையை உண்டாக்கியது
 
படக்குறிப்பு, முள்ளிவாய்க்காலில் போர் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டது சமீபத்தில் சர்ச்சையை உண்டாக்கியது

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் முந்தைய ஆண்டுகளில் யுத்தத்தினால் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து வந்த தமிழர்களுக்கு இம்முறை அந்த பகுதியில் உயிர் நீத்த மக்களை நினைவுகூர்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, முள்ளியாவளை, புதுகுடியிருப்பு ஆகிய பகுதிகள் நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், கொரோனாவை காரணமாகக் கூறி, முல்லைத்தீவு பகுதியை முடக்கி, எந்த விதத்திலும் முள்ளிவாய்க்காலை மக்கள் அணுக முடியாதவாறு அரசு தடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அரசாங்கம் திட்டமிட்டு அழித்ததாகவும், மாணவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அதனை மீள அமைக்க அனுமதி வழங்கியதாகவும் மாணவர் ஒன்றியம் அதில் குறிப்பிட்டுள்ளது. 

அதேபோன்று, ஆண்டுதோறும் மக்களை பொங்கும் உணர்வுகளோடு நினைவு கூரும், முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் தூபி மிலேச்சத்தனமாக அழிக்கப்பட்டதாகவும் யாழ். மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. 

மேலும், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்தாபிக்கப்படவிருந்த நினைவுக்கல்லை வஞ்சகமாக கவர்ந்து சென்று, அரசாங்கம் அராஜகம் புரிந்துள்ளதாகவும் ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையிலேயே, முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் செல்ல தற்போது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமது வீட்டு முற்றங்களில் நினைவு சுடரை ஏற்றுமாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

நினைவிடத்தை அழிக்கலாம், நினைவுகளை அழிக்க முடியாது என்பதை இந்த செயற்பாட்டின் ஊடாக உரத்துச் சொல்லுவோம் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

தமிழ அரசியல் தலைவர்கள் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் 12ஆம் ஆண்டுநினைவேந்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இலங்கை உள்நாட்டுப்போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக அஞ்சலி செலுத்தினர். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமது அண்ணா நகர் இல்லத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்தினார்.

வைகோ

பட மூலாதாரம், MDMK

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன், "முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ஆவது ஆண்டாக நினவுகூரப்படும் இந்நாளில், ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நல்லாதரவைத் திரட்டி, ஈழவிடுதலையை வென்றெடுக்கவும், உலகத் தமிழர்களுக்கிடையிலான முரண்களைக் கூர்மைப்படுத்தாமல் ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்தவும் உறதியேற்போம்," என்று கூறியுள்ளார்.

Twitter பதிவின் முடிவு, 1

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வீழ்வதெல்லாம் அழுவதற்கல்ல, எழுவதற்கே என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 8 மணியளவில் காணொளி வாயிலாக முள்ளிவாய்க்கால் நிநைவேந்தல் பற்றி பேசும் நிகழ்ச்சிக்கும் அவரது கட்சி ஏற்பாடு செய்துள்ளது. 

Twitter பதிவின் முடிவு, 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, "சமீபத்தில் கூட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த நினைவிடம், முள்ளிவாய்க்கால் நினைவிடம் சேதப்படுத்தப்பட்டன. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சமத்துவமோ, அடிப்படை உரிமைகளோ அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இலங்கைத் தமிழர்கள் குறித்த பிரச்சனையை அனைவரிடமும் கொண்டுசேர்த்த கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சியும் மிக முக்கியமானது. அது இனியும் தொடரும். உண்மை நிச்சயம் வெல்லும்," என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-57153081

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க.. காங்கிரஸ்.. எப்போதும் போல் கள்ள மெளனம்.

அதிமுக பாஜக.. எப்போதும் போல் கண்டே கொள்வதில்லை.

இவர்கள் தமிழகத்தில் தமிழரை ஆள்கின்றனராம். உய்விக்கப் போகினமாம். தமிழக மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு இவர்களுக்கு வாக்குப் போடுவது தான் இனக்கேவலமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

தி மு க.. காங்கிரஸ்.. எப்போதும் போல் கள்ள மெளனம்.

அதிமுக பாஜக.. எப்போதும் போல் கண்டே கொள்வதில்லை.

இவர்கள் தமிழகத்தில் தமிழரை ஆள்கின்றனராம். உய்விக்கப் போகினமாம். தமிழக மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு இவர்களுக்கு வாக்குப் போடுவது தான் இனக்கேவலமாக உள்ளது. 

இந்த நிலையை முதலில் மாற்றணும்

அதுவே இன்றைய தேவை

Link to comment
Share on other sites

42 minutes ago, nedukkalapoovan said:

தி மு க.. காங்கிரஸ்.. எப்போதும் போல் கள்ள மெளனம்.

அதிமுக பாஜக.. எப்போதும் போல் கண்டே கொள்வதில்லை.

இவர்கள் தமிழகத்தில் தமிழரை ஆள்கின்றனராம். உய்விக்கப் போகினமாம். தமிழக மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு இவர்களுக்கு வாக்குப் போடுவது தான் இனக்கேவலமாக உள்ளது. 

இப்ப எல்லோரும்  கத்தியை தீட்டி கொண்டு வர போயினம். உங்களுக்கு இன்று ஒரே அர்ச்சனை தான் போங்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய இந்தியத்தின் துணையோடு தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்தது சிங்கள இனவெறி அரசு! துணை நின்றது திராவிடம்! மறக்க மாட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

தி மு க.. காங்கிரஸ்.. எப்போதும் போல் கள்ள மெளனம்.

அதிமுக பாஜக.. எப்போதும் போல் கண்டே கொள்வதில்லை.

இவர்கள் தமிழகத்தில் தமிழரை ஆள்கின்றனராம். உய்விக்கப் போகினமாம். தமிழக மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு இவர்களுக்கு வாக்குப் போடுவது தான் இனக்கேவலமாக உள்ளது. 

ஆரியர் திராவிடர் எல்லோரும் சேர்ந்து நின்றுதான் எல்லாமே நடைபெற்றது
இருந்தாலும் ஒரு கேள்வி..... அன்று இலங்கையில் இருந்த வட கிழக்கைச்  சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் என்ன செய்து   கொண்டிருந்தார்கள்?
பதில் இதே திராவிடர்களிடமும் ஆரியர்களிடமும் சரணடைந்திருந்தார்கள்
அடுத்தவனைப் பற்றிப் பேச முதல் நாங்கள் எங்களைப்பற்றி ஒரு சுய விமர்சனம் வைத்தால் நன்றாக இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வாத்தியார் said:

அடுத்தவனைப் பற்றிப் பேச முதல் நாங்கள் எங்களைப்பற்றி ஒரு சுய விமர்சனம் வைத்தால் நன்றாக இருக்கும்

சரியாய்ச் சொன்னியள்! எங்களில தான் பிழை எல்லாம். தமிழரசுக்கட்சி என்று பெயர் வைத்தது எங்கள் பிழை, நாடுவிட்டு புலம்பெயர்ந்தது எங்கள் பிழை, நாடுகடந்த அரசு அமைத்தது எங்கள் பிழை, நாட்டுக்கு உழைக்காதது எங்கள் பிழை, ஆயுதம் ஏந்தி போராடியது எங்கள் பிழை, தனிநாடு கேட்டது எங்கள் பிழை, சமஷ்டி கேட்டது எங்கள் பிழை, இப்படி எத்தனையோ எங்கள் பிழைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதெல்லாம் ஏன் வந்தது? என்று கேட்டால் பதிலில்லை. தமிழர்  புலம் பெயர்ந்ததால்த்தான் இன்று அரசாங்கம் இழைத்த கோடூரங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வந்தது. இவர்கள் எல்லாம் இங்கே போராடி இறந்திருந்தால், அரசாங்கம் இலகுவாக சிங்கள பவுத்த அரசு அமைத்திருக்கும். அதற்கு தடையாகி விட்டதே என்பதுதான் இப்போ நம்பக்கம் உள்ள பெரிய கவலை. அதுவும் இன்னும் சில வருடங்களில் புலம்பெயர்ந்த இளையோரை மூளைச் சலவை செய்து சாதித்து விடுவோமில்ல. அதுக்குதான் தொழில்நுட்ப வசதியிருக்கிறது. எங்களை கண்டால் நாங்கள் இருந்த இடத்தை விட்டு எழும்பாமலே சிங்களம் எங்களுக்கு எல்லாம் செய்து தரும். ஆனால் ......  நாங்கள் எங்களுக்கு உரியதை மட்டுமே செய்வோம். அதாவது அப்போதைக்கு நாங்கள் கதா நாயகர்களாக நடிக்க (எங்களை கதாநாயகர்களாக காட்ட) வேண்டியதை மட்டும் கேட்டுப் பெறுவோம். ஆனால் சிங்களம் றால் போட்டு சுறா பிடிக்குது என்பது மக்களுக்கு மட்டுந்தான் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுய விமர்சனம் வைக்க வேண்டிய இடத்தில வச்சி குடுக்க வேண்டிய இடத்தில குடுத்தாச்சி ... இப்ப அதுவா பிரச்சினை 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

இருந்தாலும் ஒரு கேள்வி..... அன்று இலங்கையில் இருந்த வட கிழக்கைச்  சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் என்ன செய்து   கொண்டிருந்தார்கள்?

புலிகள் எப்ப துடைத்தெறியப்படுவார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில், கொழும்பில் ஒரு எதிர்ப்பைக் கூட தெரிவிக்க சாத்வீகமான முறையில் போராடமுடியாமல் இருந்தார்கள்.

Link to comment
Share on other sites

 

On 18/5/2021 at 15:29, satan said:

சரியாய்ச் சொன்னியள்! எங்களில தான் பிழை எல்லாம். தமிழரசுக்கட்சி என்று பெயர் வைத்தது எங்கள் பிழை, நாடுவிட்டு புலம்பெயர்ந்தது எங்கள் பிழை, நாடுகடந்த அரசு அமைத்தது எங்கள் பிழை, நாட்டுக்கு உழைக்காதது எங்கள் பிழை, ஆயுதம் ஏந்தி போராடியது எங்கள் பிழை, தனிநாடு கேட்டது எங்கள் பிழை, சமஷ்டி கேட்டது எங்கள் பிழை, இப்படி எத்தனையோ எங்கள் பிழைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

உண்மைதானே? இவை நடந்திருக்காவிட்டால் இப்படி எல்லாம் அழிந்திருக்காது.

On 18/5/2021 at 15:29, satan said:

இதெல்லாம் ஏன் வந்தது? என்று கேட்டால் பதிலில்லை.

எத்தனைமுறை பதில் சொல்லியாயிற்று? மீண்டும் தாராளமாக சொல்லலாம், சர்வதேச புவிசார் அரசியல் தெரியாதவர்கள் தலைமை வகித்ததால் வந்தத வினை இது. இந்தியாவை கட்டிப்பிடித்து கொண்டு அரசியல் செய்த முட்டாள்தனத்தின் விளைவு இது.

On 18/5/2021 at 15:29, satan said:

தமிழர்  புலம் பெயர்ந்ததால்த்தான் இன்று அரசாங்கம் இழைத்த கோடூரங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வந்தது. இவர்கள் எல்லாம் இங்கே போராடி இறந்திருந்தால், அரசாங்கம் இலகுவாக சிங்கள பவுத்த அரசு அமைத்திருக்கும்.

புலம்பெயராமல் எல்லோரும் ஒன்றாக போராடியிருந்தால் முழு இலங்கையும் இன்று தமிழீழ ஆட்சியில் இன்னுமொரு சிங்கப்பூர் ஆகியிருக்கும். உங்கள் சுயநலத்துக்கு போராளிகளின் தியாகத்தை விலைபேசி அகதி அந்தஸ்து எடுத்ததை நியாயப்படுத்த எப்படியெல்லாம் எழுதுவீர்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

On 18/5/2021 at 15:29, satan said:

  நாங்கள் எங்களுக்கு உரியதை மட்டுமே செய்வோம். அதாவது

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.