Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

உலக விஞ்ஞானிகள் சமூகத்துக்காக எந்த புல்லையும் புடுங்குவதில்லை 
விட்டால் தாம் எழும்பி கூவுதால்தான் சூரியன் உதிக்கிறது என்ற லெவலுக்கு 
கதை அளக்கமட்டும் தெரியும்.

இந்த எதிர்ப்பானது நல்ல பலனை கொடுத்து இருக்கிறது 
இப்போ  ஓ டி டி OTT இப்படியான கான்ட்ராவர்சிகளை உருவாக்கி 
படைப்பு சுதந்திரத்துக்கு தாம் கொடுத்த வலுவை இவர்கள் வீணாக்கி 
தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குகிரார்கள் என்று அறிக்கை விட்டிருக்கிறது.

இவ்வாறான கான்ட்ராவர்சி தொடர்களை தாம் தடை செய்ய போவதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள் 
முற்று முழுதாக அவர்கள் விளம்பரத்தை நம்பியே இதில் முதலீடு செய்கிறார்கள் 

இவாறான குளறுபடிகள் படைப்பு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி 
அதற்கு உள்ள வலுவுக்கு பங்கம் விளைவிக்கிறார்கள். 

''....They issued a statement, “…would like to avoid controversies prior to the release of their venture. The gag order to refrain from speaking about the show is exactly that, so the audience feeling and sentiments that have been hurt can be assuaged.”

👆இதைச் சொல்கிறீர்களா அறிக்கை என்று? இது சமந்தா கருத்து தெரிவிக்கக் கூடாது என்றே இருக்கிறது. இதை விட அறிக்கையேதும் வந்ததா?

 

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

The Family Man 2 பாகம் ஒன்றினை பார்க்க கிடைத்தது கொச்சை படுத்துவதற்காக வென்றே எடுக்கப்பட்டிருக்கிறது

 

போராட்டத்தைப் பற்றியோ போராளிகளைப் பற்றிய வரலாறு பற்றியோ எந்த ஒரு அறிவு இல்லாதவர்களால்  நுனிப்புல் மேய்ந்த தகவல்களை வைத்துக்கொண்டு கொச்சைப்படுத்துவது என்ற நோக்குடன்கவன்ற எடுக்கப்பட்டதாக உணர்கிறேன்.

Amazon Prime Link

 

https://www.primevideo.com/detail/0OJWVYZPOMPNV2FYSII88X3KN6/ref=atv_sr_fle_c_Tn74RA__1_1_1?sr=1-1&pageTypeIdSource=ASIN&pageTypeId=B08T759RHK&qid=1623104430

 

 

தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது.. Family Man 2 தொடருக்கு தடை கோரிய தமிழக அரசு

 

Link to comment
Share on other sites

  • வரணியான். changed the title to The Family Man 2- பாகம் ஒன்றினை பார்க்க கிடைத்தது, கொச்சை படுத்துவதற்காக வென்றே எடுக்கப்பட்டிருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2021 at 23:57, ஈழப்பிரியன் said:

சென்னை: தமிழர்களின் உணர்வுகளை தொட்டால் என்ன நடக்கும் என்பதை காட்ட வேண்டும் என்கிற முடிவில் ஏகப்பட்ட தமிழர்களும் தமிழ் உணர்வாளர்களும் அமேசான் பிரைம் அக்கவுண்ட்டையே அன்சப்ஸ்கிரைப் செய்து வருகின்றனர். மேலும், ஈழ தமிழர்களின் சுதந்திர போரையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் தி ஃபேமிலி மேன் 2 தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கண்டனக் குரல்களை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஹாஷ்டேக்கில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ட்வீட்கள் குவிந்து அமேசான் பிரைமுக்கு கடும் நெருக்கடி நிலையை உருவாக்கி உள்ளது.

அமேசானே இருக்காது தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை வெளியிட்ட அமேசான் பிரைமின் அனைத்து விதமான தொடர்புகளையும் ஒட்டுமொத்த தமிழர்களும் துண்டிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி தனது வலுவான கண்டனத்தை பதிவு செய்தார்.

அமேசானுக்கு தடை சீமான், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த வெப் தொடருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது #BoycottAmazon என்ற ஹாஷ்டேக்கை 70 ஆயிரத்திற்கும் அதிகமான ட்வீட்களை போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கேன்சல் பண்ணிட்டேன் அமேசான் பிரைமில் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை வெளியிடக் கூடாது என கண்டனங்கள் எழுந்ததை மீறியும் அந்த வெப் தொடரை கடந்த ஜூன் 4ம் தேதி அமேசான் பிரைம் வெளியிட்டது. சந்தேகித்ததை போலவே அந்த வெப் தொடரில் சர்ச்சைகுரிய பல காட்சிகள் இடம்பெற்ற நிலையில் பலரும் தற்போது அமேசான் தொடர்பையே துண்டித்து வருகின்றனர்.

வாங்க மாட்டேன் அடுத்த வாரம் 30 ஆயிரம் மதிப்பிலான டிவி ஒன்றை அமேசானில் வாங்க இருந்தேன். ஆனால், தி ஃபேமிலி மேன் 2 தொடர் எங்கள் இன உணர்வுகளை காயப்படுத்தியதை தொடர்ந்து அமேசானை அன் இன்ஸ்டால் செய்து விட்டேன். இனிமேல் அமேசான் நிறுவனத்தில் எதையும் வாங்க போவதில்லை என இவரை போல ஏகப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் பதிவிட்டுள்ளனர்.

Read more at: https://tamil.filmibeat.com/news/tamil-people-trending-boycottamazon-for-streaming-the-family-man-2/articlecontent-pf207174-083648.html?utm_medium=Mobile&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

 

ஒரு சின்னத் திருத்தம்! தொடரை ஜூன் 3 ஆம் திகதி - முன்னர் குறிப்பிட்ட திகதிக்கு முன்பாகவே- வெளியிட்டார்கள். காரணம் எதிர்ப்பினால் வந்த பிரபல்யம் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2021 at 23:10, Justin said:

ஒரு சின்னத் திருத்தம்! தொடரை ஜூன் 3 ஆம் திகதி - முன்னர் குறிப்பிட்ட திகதிக்கு முன்பாகவே- வெளியிட்டார்கள். காரணம் எதிர்ப்பினால் வந்த பிரபல்யம் தான்!

ஒரு சின்னத்திருத்தம் இது எமது எதிர்ப்பிற்கு முன்னரே மிகப்பிரபல்யம், BJP வாலாக்கள் மூலம்  இதன் சீசன் 1 அடித்த ஹிட்டில் தான் சீசன் 2  ஹிந்தி  வெர்சன் முதலில்  விழுந்தடித்துக்கொண்டு வெளியானது, BJP இன் நேரடி Funding மூலம் எடுக்கப்படும் தொடர் போன்று தெரிகிறது, 
எந்த மாநிலங்களிலெல்லாம்  BJP ஆட்சி அமையவில்லையோ அந்த மாநிலங்கள் எல்லாம் வெளிநாட்டு தீவிரவாதிகளோடு சேர்ந்து இந்திய ஒருமைப்பாட்டிற்கு குழி வெட்டுவது போல எடுக்கப்படுகிறது ,
சீசன் 1- கேரளா,கொச்சின் முஸ்லிம்கள், தேசபக்தி மசாலாவிற்கு ISI  
சீசன் 2- தமிழ்நாடு தமிழர்கள், தேசபக்தி மசாலாவிற்கு இலங்கை போராளிகள்       
சீசன் 3- மேற்கு வங்கம்,தேசபக்தி மசாலாவிற்கு அநேகமாக  சீன உளவத்துறையுடன் சேர்ந்து கொண்டு பயோ வாரில் ஈடுபடும் மேற்கு வங்க ஸ்லீப்பர் செல்களை எப்படி பான்  பீடா வாயன் பாஜ்பாய் துடைத்தழிக்கிறார் என்று வர இருக்கிறது   

Link to comment
Share on other sites

யமுனா ராஜேந்தரின் முகநூல் பதிவொன்றின் ஒரு பகுதி :

த பேமிலி மேன் இரு தளங்களில் பயனப்படுகிறது. 
இந்தியப் பாதூப்பை அச்சுறுத்தும் பயங்கரவாதிகள். அவர்கள் தென்னிந்திர்கள், முஸ்லீம்கள், வடகிழக்கு மாநிலத்தவர். 
இதனை ரெப்ரசென்ட் பண்ணுபவர்கள் காஷ்மீர், நாகாலாந்து, ஈழம் என தமது இறையாண்மைக்குப் போராடுவோர்.
த பேமிலி மேன் மெட்ராஸ் கபே மாதிரி இதற்கு பிரீ முள்ளிவாய்க்கால் காலத்தை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் போகவில்லை. பின் முள்ளிவாய்க்கால் காலத்தை எடுத்துக்கொண்டு அவன்கள் சமகாலத் தமிழகத்தில் வந்து இறங்குகிறார்கள். 
இந்தியப் பாதுகாப்பு வெர்சஸ் தமிழக பிளஸ் ஈழத்தமிழர்கள் எனும் கற்பனை எதிர்மையை உருவகிக்கிறார்கள்.
இங்கு ஒரு பிரச்சினை. ஒரு புனைவு என்பது யதார்த்தத்துக்கு நேர்மையாக இருக்க வேண்டுமா? 
கற்பனைச் சுதந்திரம் இல்லையா?  
இருக்கலாம். 
நாம் சொல்வதெல்லாம், கற்பனை என்பது யதார்த்தத்துக்கு வெளியிலான ஆனால் யதார்த்ததை அடிப்படை கொண்ட ஒரு செயல்போக்கு. இதனை அறிவுஜீவிகள் என்போர்(இங்கு கதாசிரியன்) அதிகாரம் குறித்த தமது சார்பு அல்லது சார்பற்ற முறைகளில்தான் வைக்கின்றனர்.
இவ்வாறு அதிகாரத்துக்குச் சார்பான போக்கிரித்தனமான கற்பனைகளும் செய்ய முடியும்.
1.தமிழக எல்லைக்குள் கிளைடர் விமானத் தாக்குதல்.
2. ஈழத்தமிழர்- பாகிஸ்தான் நெக்சஸ்.
3.முழுத் தமிழகக் கிராமமும் வட இந்திய அதிகாரிகளைத் தாக்குவது. 
இந்தக் கற்பனைகளுக்கு, அதுவும் 2009 மே மாதத்தின் பின் ஒரு துளி- minimum- யதார்த்தத்தைக் காட்டமுடியுமா?
எனில், எதற்காக இந்தக் கற்பனை? 
இந்திய தேசிய பாதுகாப்புக்கு தமிழகம் ஆபத்து என்று 'வட இந்தியர்கள்' சொல்வதுதான் கற்பனைச் சுதந்திரமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஒரு சின்னத்திருத்தம் இது எமது எதிர்ப்பிற்கு முன்னரே மிகப்பிரபல்யம், BJP வாலாக்கள் மூலம்  இதன் சீசன் 1 அடித்த ஹிட்டில் தான் சீசன் 2  ஹிந்தி  வெர்சன் முதலில்  விழுந்தடித்துக்கொண்டு வெளியானது, BJP இன் நேரடி Funding மூலம் எடுக்கப்படும் தொடர் போன்று தெரிகிறது, 
எந்த மாநிலங்களிலெல்லாம்  BJP ஆட்சி அமையவில்லையோ அந்த மாநிலங்கள் எல்லாம் வெளிநாட்டு தீவிரவாதிகளோடு சேர்ந்து இந்திய ஒருமைப்பாட்டிற்கு குழி வெட்டுவது போல எடுக்கப்படுகிறது ,
சீசன் 1- கேரளா,கொச்சின் முஸ்லிம்கள், தேசபக்தி மசாலாவிற்கு ISI  
சீசன் 2- தமிழ்நாடு தமிழர்கள், தேசபக்தி மசாலாவிற்கு இலங்கை போராளிகள்       
சீசன் 3- மேற்கு வங்கம்,தேசபக்தி மசாலாவிற்கு அநேகமாக  சீன உளவத்துறையுடன் சேர்ந்து கொண்டு பயோ வாரில் ஈடுபடும் மேற்கு வங்க ஸ்லீப்பர் செல்களை எப்படி பான்  பீடா வாயன் பாஜ்பாய் துடைத்தழிக்கிறார் என்று வர இருக்கிறது   

இதிலென்ன அதிர்ச்சி இருக்க முடியும்? வலதுசாரிகள் தேசியக் கொடியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பது தங்களைத் தக்க வைக்கத் தான் - அது என்ன நாடாக, இனமாக இருந்தாலும்.

நான் குறிப்பிடுவது, இந்தப் பகிஷ்கரிப்பினால் (இதை நக்கல் செய்யவில்லை!) அமேசனுக்கு பெரிய இழப்பில்லை. அதனால் அவர்கள் அதிர்ந்தார்கள் என்ற தொனியில் , அறிக்கை விட்டார்கள் என்று பொய்களைப் பரப்பி நியாயமாகப் பகிஷ்கரிப்போரையும் கோமாளிகளாகக் காட்டுகிறார்கள் சிலர் என்பதையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்

கம்யூனிஸ்டுகள், காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்றவர்களுடன் தமிழ்த்தேசியவாதிகளுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இந்த சர்ச்சைக்கு பிறகாவது திருந்தி நடப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.

June 11, 2021

James Bond to Family Man 2

  • ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் சோவியத் ரஷ்யாவையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் வில்லன்களாக காட்டி எடுத்திருந்தார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் ரஷ்யர்களும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
  • வியட்கொங் விடுதலைப் போராளிகளால் தென் வியட்நாம் விடுதலை செய்யப்பட்டு சில வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட ராம்போ போன்ற திரைப்படங்களில் வியட்நாமிய போராளிகளை வில்லன்களாகவும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரை ஹீரோக்களாகவும் காட்டினார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் வியட்நாமியரும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
  • ராம்போ-2 வில் சோவியத் செம்படையினரை கொடூரமான வில்லன்களாக காட்டினார்கள். ஆப்கான் இஸ்லாமியவாத ஜிகாதிகளை ஹீரோக்களாக காட்டினார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

The-Family-Man-Season-2-image-2-400x225.

  • ரோஜா என்ற தமிழ்த் திரைப்படத்தில் காஷ்மீர் விடுதலைப் போராளிகளை இஸ்லாமிய மதவெறி பிடித்த கொடூரமான வில்லன்களாக காட்டி இருந்தார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் காஷ்மீரிகளும் அல்ல, இஸ்லாமியரும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
  • உயிரே எனும் தமிழ்த் திரைப்படத்தில் அசாமிய விடுதலைப் போராளிகளை வில்லன்களாக காட்டி இருந்தார்கள்.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் அசாமியர் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!
  • கடந்த இருபது வருட காலமாக பல நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாதிகளை வில்லன்களாக காட்டும் திரைப்படங்கள் ஏராளம் வந்து விட்டன. ஹாலிவூட் ஆங்கிலத் திரைப்படங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஹிந்தி, தமிழ்ப் படங்கள் அது போன்ற கதைக்கருவை கொண்டிருந்தன.நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் இஸ்லாமியர்கள் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பிராந்திய வல்லரசும் தமது நலன்களுக்கு எதிரான இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்து தடைசெய்திருந்தன. அப்போதெல்லாம் எந்தவிதமான அரசியல் புரிதலும் இல்லாமல் நடந்து கொண்டோம். உலகத்தை அல்லது பூகோள அரசியலை புரிந்து கொள்வதற்கு, எமது குறுகிய சிந்தனை கொண்ட தமிழ்த்தேசியம் அனுமதிக்கவில்லை. அதைக் கூட ஒரு குறைபாடாக நினைக்காமல், பெருமையாக நினைத்துக் கொண்டோம்.

நாங்கள் தொடர்ந்தும் அமெரிக்க – இந்திய நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொண்டோம். இப்போதும் காட்டிக் கொள்கிறோம். எஜமானின் காலடியில் விழுந்து கிடந்தோம். ஒவ்வொரு வருடமும் ஜெனீவா மகாநாட்டில் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தமிழர்கள் பக்கம் நிற்பதாக எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டோம். தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் சீனா, கியூபாவை மட்டும் தேர்ந்தெடுத்து திட்டித் தீர்த்தோம். அப்போதுதான் அமெரிக்காவின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று உண்மையிலேயே நம்பினோம்.

அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப் படுத்துவதற்காக நாங்களும் சீனாவை திட்டினோம். இலங்கையில் சீன மொழித் திணிப்பு நடக்கிறது, சீனாவின் காலனி உருவாகிறது என்று பிரச்சாரம் செய்தால் இந்தியா தமிழர்களை ஆதரிக்கும் என்று நம்பினோம். சர்வதேச மட்டத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை கண்டித்தோம். “இஸ்லாமியர்களை நம்ப முடியாது… குண்டு வைப்பார்கள்…” என்று ஏகாதிபத்தியம் சொல்லித் தந்த பாடத்தை மனனம் செய்து ஒப்புவித்தோம். அத்துடன் இஸ்ரேலை இருக்க விடாமல் அரபு – இஸ்லாமியர்கள் தாக்குகிறார்கள் என்று சொல்லி, பாலஸ்தீனர்களின் போராட்டத்தை எதிர்த்து வந்தோம். இஸ்ரேலை நிபந்தனை இன்றி ஆதரித்தோம். இதன் மூலம் அமெரிக்க எஜமான் மனத்தைக் குளிர வைத்தோம்.

இவ்வாறு எந்த விதமான அரசியல் புரிதலுமற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ் குறுந் தேசியவாதிகளின் பலவீனத்தை பயன்படுத்தி Family Man – 2 சீரிஸ் தயாரித்திருக்கிறார்கள்.

The-Family-Man-Season-2-image-3-400x225.

உதாரணத்திற்கு சில எடுத்துக்காட்டுகள்:

  1. இறுதிப்போரில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பி விட்டதாகவும் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தமிழ்த் தேசியவாதிகள்தான் கதைகளை கட்டி விட்டார்கள். அனைத்து தமிழர்களும் தாம் சொல்வதை உண்மை என்று நம்ப வேண்டும் என அடம்பிடித்தார்கள். இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man – 2 சீரிஸ் தொடங்குகிறது. பாஸ்கரன் என்ற பாத்திரப் பெயருடன் வரும் பிரபாகரன் போர்க்களத்தில் இருந்து உயிருடன் தப்பி விட்டதாக சொல்கிறது.
  2. வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற தமிழக அரசியல்வாதிகளை “உண்மையான தமிழினப் பற்றாளர்கள்” என்று தமிழர்கள் பலர் (இன்றும்) நம்புகிறார்கள். அன்று புலிகளும் அவர்களை நம்பினார்கள்.இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man – 2 சீரிஸ் தொடங்குகிறது. ஆரம்பத்திலேயே வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இந்தியப் புலனாய்வுத் துறையின் தொடர்பில் இருப்பவர்களாக காட்டப்படுகின்றனர். அவர்கள் புலிகளின் தலைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களது விசுவாசம் இந்திய இறையாண்மை மீதே இருக்கிறது. (இந்த உண்மையை சீமானும் மறுக்கவில்லை.)
  1. இறுதிப்போரில் புலிகளின் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இல்லாத தமிழ்த் தேசியவாதிகள், “இருபது சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து அழித்து விட்டன” என்று சொல்லித் திரிந்தார்கள். இப்போது கேட்டாலும் அதைத்தான் சொல்வார்கள்.இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man – 2 சீரிஸ் தொடங்குகிறது. புலிகளை அழித்த இந்த சர்வதேச நாடுகள் எல்லாம், இஸ்லாமியவாதிகளுக்கும் எதிரி நாடுகள் தான். ஆகவே லண்டனுக்கு தப்பிச் சென்ற புலிகளின் தலைவர் அங்கிருந்த படியே ISI உடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதாக கதை அமைத்திருக்கிறார்கள்.
  1. அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபதிபத்திய, அல்லது இந்திய பிராந்திய வல்லரசின் நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறது. இதை அவர்கள் எந்த ஒளிவுமறைவும் இன்றி நேரடியாகவே சொல்லிக் கொள்கிறார்கள். இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man – 2 சீரிஸ் தொடங்குகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எந்தக் கட்டத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளாது. மாறாக, இந்திய அரசுடன் ஒத்துழைப்பார்கள் என்று கதை அமைத்திருக்கிறார்கள்.

000

சரி, இனிமேல் Family Man – 2 சர்ச்சைக்கு பிறகாவது இந்த குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ்த்தேசியவாதிகள் திருந்தி நடப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இப்போதும் கம்யூனிஸ்டுகள், காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்றவர்களுடன் அவர்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இதன் மூலம் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தொடர்ந்தும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான நிலைமையில், Family Man – 2 க்கு எதிரான எதிர்ப்புகள் அதற்கான விளம்பரமாக அமையுமே தவிர வேறெந்த பலனையும் தரப்போவதில்லை. இனி வருங்காலத்தில் இது போன்ற படங்கள் தயாரிப்பதற்கான ஊக்குவிப்பாகவே, அவர்கள் இந்த எதிர்ப்புகளை கருதிக் கொள்வார்கள்.

கலையரசன்
முகநூலில் : Kalaimarx

 

 

https://www.vinavu.com/2021/06/11/james-bond-to-family-man2-kalaiyarasan/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Family man Season 2 |Exclusive Interview | தமிழீழ பெண் போராளிகளின் உண்மை நிலையை சொல்கிறார் போரியல் ஆய்வாளர்…

News7-696x374.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் சமகால வரலாறு குறித்த பொதுக்கருத்துக் கோளத்தைச் சிதைக்கும் ‘தி ஃபமிலி மேன் 2’ – சூ.யோ.பற்றிமாகரன்

 
Capture-10-696x457.jpg
 54 Views

உலக வரலாற்றில், மக்கள் விடுதலைப் போராட்டங்களின் வரலாறு குறித்த எண்ணங்களும் பதிவுகளுமே, அந்த விடுதலைப் போராட்ட நோக்கத்திற்கு உலக ஏற்புடைமை கிடைக்கச் செய்வன என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. இதனால் மக்கள் விடுதலைப் போராட்டங்கள் குறித்த உண்மைத் தகவல்களை அந்த விடுதலைப் போராட்டங்களுக்கு எதிராகத் தம்மைக் கட்டமைத்துக் கொண்ட நாடுகள் காணாமல் போகச் செய்தல் என்னும் அரசியல் அரச தந்திரோபாயத்தைக் கடைப்பிடிப்பதும் வழமை. இதனை உலகின் இன்றைய கல்வியியல் தத்துவ ஆசிரியர் நொம்சொக்சி அவர்கள் “தேவையற்ற உண்மைகளை மறைக்கும் கலை” என்று பெயரிட்டார். இந்த மறைத்தல் கலைக்கு ஊடகங்களே பெரிதும் பயன்படுத்தப்படுவதும் வழமை. இந்த வகையில்தான் ஊடகத்தில் திரள்நிலை சக்தியான திரைப்படம் என்பது அரசியலில் அரச தந்திர முயற்சிகளிலும் முதன்மை பெறுகின்றது. திரைப்படத்திற்கு அடுத்த திரள்நிலை ஊடகமாக காணொளித் தொடர்கள் இன்று அரசியலில் பொதுக்கருத்துக் கோளங்களை உருவாக்க உதவுகின்றன.

‘The Family Man 2’ என்னும் காணொளித் தொடரும் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் என்னும் 21ஆம் நூற்றாண்டின் முக்கிய உலக மக்கள் போராட்டம் என்ற உண்மையை மறைத்தலுக்கான முறையில் உருவாக்கப்பட்டுள்ளமை இன்றைய சமகாலத்தில் ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டிய அனைத்துலகப் பிரச்சினையாக மாறியுள்ளது.

நேரடியாகவே தமிழீழம் எனக்கதை நடைபெறும் இடத்தையும்,  பிரபாகரன் என்ற சொல்லின் உச்சரிப்புக்கு அண்மித்த உச்சரிப்பைக் கொண்ட பாஸ்கரன் என்னும் சொல்லாட்சியால் கதையின் கதாநாயகனையும் குறிப்பதன் வழி இந்தத் காணொளித் தொடர் ஈழமக்களையும் அவர்களின் தேசியத் தலைவனையும் மையப்படுத்திய கதையாக மாற்றப்படுகிறது.

கூடவே முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழினப் படுகொலைகளுக்கு பல வருடங்களுக்கு முன்பே தேசியத் தலைவர் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே அவர் இறந்து விட்டார் எனச் செய்தியை இந்திய ஊடகம், சிங்கள ஊடகங்களின் இணைப்புடன் வெளியிட்டதும் அல்லாமல், அவருடைய இறுதி ஊர்வலம் செல்லும் பாதையென ஒன்றையும் இணைத்து உலகினை குழப்பியது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

Capture.JPG1_-300x147.jpg

அதே பாணியில் இன்று பாஸ்கரன் என்னும் தலைமைக் கதாபாத்திரம் நாளிதழில் தான் இறந்த செய்தியைப் படித்து “எத்தனை முறைதான் என்னைச் சாகடிப்பார்கள்”  என்று வசனம் பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள காட்சி சிங்கள – இந்திய ஊடக இணைப்பு அன்று செய்த ஊடகத் திரிபுவாதத்தின் இன்றைய முயற்சியாக இந்தத் காணொளித் தொடரை மாற்றியுள்ளது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைப் பண்புகளில் ஒன்றாக மது அருந்தாமை உட்பட்ட ஆளுமைப் பண்புகள் இருந்தன என்பது உலகறிந்த விடயம். ஆனால் இத்திரைப்படத்தில் இலண்டனில் அதுவும் மதுக் கோப்பையுடன் அவர் மற்றொரு போராளிக்கு மது அருந்தக் கூடாது என அறிவுரை வழங்குவதாக  வடிவமைக்கப்பட்டுள்ள இக்காணொளித் தொடர், தேசியத் தலைவர் அவர்களின் தன்மானத்தையும் இனமானத்தையும் ஒரே காட்சியில் திரித்துக் காட்டும் மறைத்தல் முயற்சியாக அமைகிறது.

கூடவே தன் தம்பியைக் கொன்றதற்கான பழிவாங்கல் நடவடிக்கையாக அவருடைய ஈழமக்களுக்கான போராட்டத்தை உருமாற்றி தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடித்தளத்தையே தன்னல நோக்கு என இக்காணொளித் தொடர் காட்சிப்படுத்தி உண்மையைக் கருத்துச் சிதைவு செய்கிறது.

அத்துடன் பாஸ்கரன் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புடன் இணைந்து சென்னையில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிடுவதாக கதை வளர்க்கப்பட்டமை, இந்தியாவுக்கு எதிரான இயக்கமாக ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பை இந்திய மக்கள் மனதில் கருதவைக்கும் நோக்கினைக் கொண்டுள்ளது. இது இந்திய ஈழ மக்களின் நல்லுறவை கட்டியெழுப்புவதைத் திட்டமிட்ட வகையில் தடுக்கின்ற சதி முயற்சியாக அமைகிறது.

Capture.JPG-2-2-300x163.jpg

பெண் போராளிகள் உடைய தன்னலமற்ற தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர்கள் தேவைக்காக எதனையும் செய்யத் தயாரானவர்கள் என்கிற கருத்தியலில் படைக்கப்பட்டுள்ள சமந்தா என்னும் கதாப்பாத்திரம், எவ்வளவு தூரத்திற்கு இந்தக் காணொளித் தொடர், தங்கள் வாழ்வுக்காகப் போராடிய ஈழமக்களுக்கு எதிரான கருத்தியலை உலகில் ஆழப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்நிலையில் உலக நாடுகள், உலக அமைப்புக்கள், உலக மக்கள் ஆகியோரின் “பொதுக் கருத்துக் கோளம்” ஒன்று உலகில் இன்று ஈழத் தமிழர்களின் மேலான சிறீலங்காவின்  மனித உரிமை வன்முறைகள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றச் செயல்கள் என்பவற்று நீதி கிடைக்க வேண்டுமென  வேகமாக உருவாகி வருவதைத் திசை மாற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அரசியல் சதிச் செயலாகவே இக்காணொளித் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈழத் தமிழர்களுக்கு எதிராக யுத்த காலத்தில் இணைந்து நின்று செயற்பட்ட புலனாய்வுத் துறைகள், அனைத்துலக விசாரணையொன்று தங்களின் அனைத்துலக குற்றச் செயல்களை உலகு இனங்கண்டு தங்களைக் கூட்டாகத் தண்டிக்கும் நிலைமாற்று நீதியைத் கண்டு அஞ்சி அதனைத் தாமதப்படுத்தும் தந்திரோபாயமாகவும் இந்தக் காணொளித் தொடரை உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்திலும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதனை வெறுமனே ஒரு பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட காணொளித் தொடராகவோ அல்லது தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்ட கால வரலாற்றை கவனயீனமாக கட்டமைத்த காணொளித் தொடராகவோ கருத முடியாதுள்ளது.

திட்மிட்ட முறையில் அனைத்துலகிலும் ஈழத்தமிழ் மக்களின் தன்மானத்தையும், இனமானத்தையும் மட்டுமல்ல உலகத் தமிழர்களினது மதிப்பையும், மரியாதையையும் சீரழிக்கும் சதிச்செயல் என்ற வகையில் இக்காணொளித் தொடரை அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளது என்பதே உலகத் தமிழினத்தின் ஒருமித்த முடிவு. இது தமிழர்களின் அடிப்படை மனித உரிமையான கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டு ஈழத் தமிழர்கள் தங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உண்மை நிலைகளை உலகுக்குத் தெளிவுபடுத்தும் முயற்சியினைச் சீர்குலைக்கும் தமிழினப் பகைமைகளின் கூட்டு முயற்சி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Capture.JPG-4-300x178.jpg

இதற்கான பலத்த எதிர்ப்பு தமிழகத்திலும், தாயகத்திலும், உலகிலும் தமிழர்களிடை வளர்ந்து வருகிறது. இதனைத் திரைப்படத்துறையின் இயக்குநரும் கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்தில் தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்றவருமான நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், திரைப்பட இயக்குநர் களஞ்சியம் போன்றவர்களுடன், தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் வை.கோபாலசாமி ஆகிய பல தமிழக அரசியல்வாதிகளும், இந்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஸ் ஜவடேகருக்கு அமேசான் பிரைமில் வெளியாகத் தொடங்கியுள்ள தொடரைத் தடை செய்யுமாறு எழுதியுள்ள கடிதங்களில் காணக்கூடியதாக உள்ளது. உலகளாவிய இந்த எதிர்ப்பலையாளர்கள் அமேசான் நிறுவனம் தமிழ் மக்களின் குரலுக்குச் செவிமடுக்க மறுத்தால், அவர்களின் அனைத்துப் பொருட்களையும், சேவைகளையும் புறக்கணிக்கும் உலகத் தமிழர் செயற்பாடாக மாறும் என்ற எச்சரிப்பையும் அமேசான் நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளனர்.

உலகத் தமிழர்கள் தன்மாத்திற்கும், இனமானத்திற்கும் இத்தகைய சவால்கள் விடுக்கப்படுகையில் ஈழத் தமிழர்களுக்கான தேசிய ஊடகம் ஒன்று அனைத்துலக மட்டத்தில் இல்லாதிருப்பதன் தாக்கத்தையும் ஈழத் தமிழர்கள் உணர்கின்றனர்.

எனவே இத்தகைய முயற்சிகளில் இருந்து கற்றுக்கொள்ளும் பாடமாக ஈழத் தமிழர்களின் அனைத்துலகத் தேசிய ஊடகம் ஒன்றை ஈழத் தமிழர்கள் தங்கள் மதி வளத்தையும் நிதி வளத்தையும் பயன்படுத்திக் காலதாமதமின்றி நிறுவ வேண்டும். இத்தகைய தேசிய ஊடகமே, ஈழத் தமிழர்கள் துப்பாக்கிகள் மௌனித்த நிலையில் இழக்கப்பட்ட, தங்களின் அனைத்து அரசியல் உரிமைகளையும் சனநாயக வழிகளில் வென்றெடுப்பதற்கான ஊடகப்போரில் முக்கிய பணிகளைச் செய்யும்.

இந்தத் தேசிய ஊடகத்தை நிறுவும் முயற்சியில், ‘இலக்கு’ இணைந்து செயற்படும் என்பதையும் இந்நேரத்தில் இலக்கின் ஊடகப்பிரிவினர் ஈழத் தமிழ் மக்களுக்கு உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.

 

https://www.ilakku.org/?p=52345

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சந்தேகப்பட்டவாறே ஃபேமிலி மேன் – 2 காட்சிகள் அமைந்திருந்தன – இயக்குநர் அமீர்

 
unnamed-1-3-696x391.png
 27 Views

அமேசானில் வெளியாகியிருக்கும் தி ஃபேமிலி மேன் – தொடர் 2இல் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

இதையடுத்து “ஈழத் தமிழர்களை தவறாகவும், மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய Family man 2 என்ற கண்டனத்துக்குரிய இந்தித் தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், இழிவு படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனவே அதை தடை செய்ய வேண்டும்” என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியருந்தார்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் சிலர், சினிமாத் துறையைச் சேர்ந்த சிலர் இத் தொடர் குறித்து தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். திரைப்பட இயக்குநர் அமீர் அவர்கள் இலக்கு ஊடகத்தினரின் கேள்விக்குப் பதிலளிக்கையில்,

கேள்வி – Family man 2 இணையத் தொடர் முன்னோட்டத்தை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பலைகள், தொடர் வெளிவந்த பின்பு எப்படி இருக்கின்றது?

ஈழப் போராட்டத்தையும், புலிகள் இயக்கத்தையும் தவறாகச் சித்தரிப்பது குறித்து, படத்தின் முன்னோட்டம் வந்த போதே பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் அவ்வாறான காட்சிகள் எல்லாம் இல்லை என்று கூறி அதில் நடித்த நடிகை சமந்தா போன்றவர்கள் கூறினார்கள்.

அதை நம்பி, நமது தமிழ் சமூகம், தொடர் வெளியான பின் பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டார்கள். ஆனால் தொடர் வந்த பின்பு, நாம் எவ்வாறு சந்தேகப்பட்டோமோ, அதைப் போலவே தான் அத்தொடரின் காட்சி அமைப்புக்கள் இருந்தன. முற்று முழுதாக விடுதலைப் புலிகளை, போராட்டத்தின் நோக்கத்தை தவறாக சித்தரிப்பதாகத்தான் இருக்கின்றது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், விடுதலைப்புலிகள் போராளியையும் தவறாகவே சித்தரித்திருந்தார்கள்.  இந்நிலையில், மிகக் குறைவாக தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களும் புலிகளின் அரசியலை உற்றுநோக்கியவர்கள் மட்டுதான் Family man 2 எதிரான குரலை எழுப்பி இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் அல்லது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் இதற்கு எதிராக  பொங்கி எழவில்லை என்று கூற முடியாது, அவ்வாறு நாம் எதிர் பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவ்வாறானதொரு அரசியல் கட்டமைப்பு தான் நம்மைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்த்தேசிய சிந்தனை உள்ளவர்கள் ஈழப் போராட்டத்தை ஆதரிக்கின்றவர்கள் மட்டும்தான் இத் தொடருக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் ஒரு காப்பிரேட் கப்பனியான அமேசானின் தொடரை நிறுத்திவிட முடியாது  என்பது தான் உண்மை.

 

 

https://www.ilakku.org/?p=52483

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஃபேமிலி மேன் கதையாடல் கட்டமைக்கும் இந்திய தேசியவாதத்தின் மற்றமைகள்

Vigetharan A.S மே 18, 2021

அ. சி. விஜிதரன்

ஃபேமிலி மேன் தொடரின் முதல் சீசன் கடந்த 2019 -ம் ஆண்டு வெளிவந்த போது  பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் எனக்கு பார்ப்பதற்கு ஏனோ விருப்பமில்லாமல் இருந்தது. கடந்த மாதம் அதன் இரண்டாவது சீசனுக்கான டிரைலர் வெளியானபோது ஈழப் பிரச்சனையை மையமாகக் கொண்டு இருந்து. அதில் ஈழ விடுதலைக்குழு (மறைமுகமாக விடுதலைப் புலிகள்) ஐ.எஸ்.ஐ. தீவிரவாத குழுக்களோடு இணைந்து இந்தியாவைத் தாக்குவது போல் காட்சிகள் இருக்க, தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு அதற்குத் தடை கோரியது. அப்போது அதன் இயக்குனர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துதான் எடுத்திருக்கிறோம் என்று கூறினார்கள். சரி என்ன என்று பார்த்துவிடுவோம் என்று, முதல் சீசனுக்கு ஒருநாள், இரண்டாவது சீசன் வந்த போது ஒருநாள் என இரு நாட்கள் செலவு செய்து அந்தத் தொடரைப் பார்த்து முடித்தேன்.

முதல் சீசனைப் பொருத்த வரையில் அதரப் பழசான கதையாக இருந்தாலும், வழக்கம்போல நவீன ஆயுதங்கள், ஹை-டெக் வாழ்க்கை உளவு அதிகாரிகள் என்ற வகையில் இல்லாமல், கதாநாயகன் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சராசரி மனிதனாக இருந்து களத்தில் சந்திக்கும் சவால்களோடு, சராசரி குடும்பப் பிரச்சனைகளையும் சேர்த்து சமாளிப்பது என்ற கதைகளம் அதன் வித்தியாசத்திற்கு முக்கிய காரணம்.

ஆனால் இந்தத் தொடரை கொஞ்சம் கூட ரசிக்க முடியவில்லை. முழுக்க  முழுக்க அபத்தங்கள் கொட்டிக் கிடக்கின்றது. முதல் சீசனைப் பொருத்தவரையில் இஸ்லாமிய வெறுப்பு பரவிக்கிடக்கின்றது. இன்னும் முக்கியமாக கேரளாவில் இருந்து சிரியா சென்று ஐ.எஸ்.ஐ அமைப்பில் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களை மையமாகக் கொண்டே கதை ஆரம்பிக்கின்றது. அதில் ஒருவர்தான் மிக முக்கியமான தீவிரவாதியாக காட்டப்படுகிறார். அதில் இருந்து மும்பை, காஷ்மீர் என முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதிகளாகவே அனுகுகிறார்கள்.

முதல் சீசனில் உத்திரபிரதேசத்தில் மாட்டுகறி வைத்திருந்ததற்காக இஸ்லாமியர்களை கொலை செய்த ஒரு எம்.பி-யை பழிவாங்க அவர் வீட்டு நிகழ்வில் மாட்டுக்கறியை கொண்டு போய் வைக்க திட்டமிட்ட இஸ்லாமிய இளைஞரை தீவிரவாதியாக நினைத்து உளவு அதிகாரிகள் சுட்டுக் கொல்கிறார்கள். ஆனால் அந்த தவறை அரசின் பாதுகாப்புக்காக மறைக்கிறார்கள். அந்த இளைஞனை தீவிரவாதியாக கட்டமைத்து விடுகிறார்கள். கேட்டால் நாட்டின் பாதுகாப்புக்காக, எதுவும் செய்யலாம் என்ற கருத்து இங்கு வைக்கப்படுகிறது. போலி என்கவுண்டர்களுக்கு பெயர் போனவர்களின் இன்றைய ஆட்சிக் காலத்தின் இது ஆகப் பெரும் அபத்தமாக போய் முடிகிறது. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

முதல் சீசனைப் பார்த்த போதே இந்தியாவால் மத ரீதியாக, அல்லது இந்திய நலனுக்காக ஒடுக்கப்பட்ட, சாதாரண எளிய மக்களை எதிரிகளாக காட்டுவதன் மூலம் கதையை நகர்த்தி இருந்தது தெரிந்தது. எனவே இரண்டாவது சீசன் ஈழத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட போது அதுவும் இந்தியாவால் ஒடுக்கப்பட்ட, இந்திய நலனுக்கு பலிகொடுக்கப்பட்ட, ஈழ மக்களை இன்னும் மோசமாக சித்தரிக்கப்பட்டே இருக்கும் என்று நினைத்தேன். அது அப்படியே இருக்கவும் செய்தது.

 இரண்டாவது சீசனைப் பொருத்த மட்டில் இலங்கையின் வடக்குப் பகுதியில் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலை குழுவுக்கும் போராட்டம் நடக்கிறது. அது தோல்வியில் முடிய அதன் தலைவரும், அவரது தம்பியும், அரசியல் பிரிவுத் தலைவரும் தப்பித்துச் செல்கின்றனர். தலைவரும், அரசியல் தலைவரும் இலண்டனில் இருக்க, அவரது தம்பி இந்தியாவில் இருந்து அவர்களது நாடு கடந்த அரசுக்கு இந்தியாவிடம் ஆதரவு கோர முயற்சிக்கிறார்கள். அந்த நிலையில் இலங்கையின் துறைமுகம் இந்தியாவின் வசம் வேண்டும் என்று இந்திய பிரதமர் இலங்கை பிரதமரிடம் கேட்கிறார். அது சீனாவின் கைக்கு போக இருக்கிறதாம். அதனால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆதிக்கம் வந்துவிடும் அது இந்தியாவிற்கு ஆபத்து எனவே துறைமுகத்தை தங்களுக்கு தர சொல்லி இந்திய பிரதமர் கேட்க, இலங்கை ஜனாதிபதி ஒத்துக் கொள்கிறார். அதற்கு பதிலாக கடனுதவி இந்தியா கொடுக்கும் என்று சொல்லப்பட, இந்தியாவில் இருக்கும் விடுதலை இயக்க தலைவரின் தம்பியையும் தங்களுக்குத் தரவேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி கேட்டதினால் மட்டுமே, இந்தியாவால் தேடப்படாத வெளிநாட்டு பிரஜையான  விடுதலை இயக்கத் தலைவரின் தம்பியை சட்ட விரோத முறையில் கைதுசெய்ய உளவுத்துறை செல்கிறது, அங்கு ஏற்பட்ட பிரச்சனையில் தம்பி சில அதிகாரிகளை கொன்றுவிட,  அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியில் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்க விடுதலை இயக்க தலைவர் நினைக்கும் போது முதல் சீசனில் ஐ.எஸ்.ஐ தொடர்பில் இருந்த பாக்கிஸ்தான் மேஜரும், இந்திய இஸ்லாமியர் ஒருவரும் தலைவருக்கு உதவ வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து இந்திய பிரதமரை கொல்ல திட்டமிடுகிறார்கள். அதை கதாநாயகன் தடுப்பதே கதை. இதில் டுவிஸ்டு என்னவென்றால் தலைவரின் தம்பியை கொன்று, தலைவருக்கும், இந்திய அரசுக்கு பகை மூட்டி விட்டதே ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள்தான்.

கடந்த சீசனில் எதோ கொஞ்சம் விறுவிறுப்பாவது இருந்தது. இந்த சீசனில் அதுவும் இல்லை. ஜவ்வாக இழுத்து,எங்கேங்கோ கதை போய் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது.

முக்கிய கதாப்பாத்திரமான சமந்தாவை ஈழப் போராளியாக காட்டுகிறேன் என்ற பெயரில் என்னவோ செய்துவைத்திருக்கிறார்கள். கதையில் எந்த விதமான உணர்வு நிலையையும் உணர முடியவில்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ அகதிகள் 30 வருடங்களுக்கு மேலாக முகாம்களில் இருந்து வருகிறார்கள். விடுதலைப் புலிகள் முத்திரை குத்தப்பட்டு அவர்கள் சித்திரவதைப்படுவது தற்போது குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் இப்படியான கதைகளங்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கும் மக்களை இன்னும் வஞ்சிப்பதாகும்.

இந்த தொடரின் முதல் சீசனில் கேரள, இஸ்லாமியர்கள் மற்றும் பாக்கிஸ்தான், ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள், இரண்டாவது சீசனில் தமிழகத்தில் ஈழத் தீவிரவாதிகள் எதிரிகளாக காட்டி முடித்து அடுத்து மூன்றாவதாக வர இருப்பது வட-கிழக்கு- சீன தீவிரவாதிகள் என்று அதற்கான குறிப்பும் கொடுத்துள்ளார்கள். அதாவது இந்துத்துவ இந்தியாவை விட்டு யாரெல்லாம் தனியாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக காட்டும் போக்கே இயக்குனர்களிடம் தெரிகிறது.

இந்த இடத்தில் சில கேள்விகளைக் கேட்டு அதற்கு பதில்கள் தேடலாம் என்று நினைக்கின்றேன்.

இந்தத் தொடரில் மைய்யமாக இருக்கும் திரைப்பட இந்திய/இந்து/இந்தி தேசியவாதத்தின் தன்மை என்ன? அது எவ்வாறு செயல்படுகின்றது?

ஏன் முஸ்லீம்களை, காஷ்மீரிகளை, மலையாளிகளை, தமிழர்களை, வட-கிழக்கு மக்களை தீவிரவாதிகளாக கட்டமைக்க  வேண்டும்?

பொதுவாக இந்த அபத்தங்களை ஏற்றுக் கொள்ளும் பார்வையாளர்கள் யார்?

இந்த வெப் சிரியஸ் குழுவின் அரசியல் உணர்ச்சிகள் எத்தகையது?

இந்திய தேசியவாத சினிமாவில் ஈழத் தமிழர்கள் எப்போதிலிருந்து பயங்கரவாதிகள் ஆனார்கள்?

the-family-man-season-2-manoj-bajpayee-s

 முதல் கேள்வியான திரைப்பட இந்திய தேசியவாதத்தின் தன்மையைப் பார்ப்போம்.

இந்திய தேசியவாதம் என்பதே சிக்கலான ஒன்று. அப்படி என்ற ஒன்று எதார்த்தத்தில் இல்லை. அப்படி இருப்பதாக கருதப்படும் போக்கே உள்ளது. அதற்கு இந்திய வரலாறே எடுத்துக்காட்டு.  இந்திய துணைக்கண்ட சுதந்திரப் போராட்டத்தில் அப்படியான ஒன்று பார்பனர்களாலும், உயர்குடிகளாலும் பேசப்பட்டது. அது முழுக்க முழுக்க அவர்கள் நலன் சார்ந்த ஒன்றாக இருந்தது. அதனைத்தான் பெரியார் எதிர்த்தார். இந்தியா என்ற அமைப்பே பார்ப்பனியமானது. அது சாதிக்கும், பார்ப்பனியத்திற்கும் சார்பானது என்றார். இன்றளவிலும் இந்திய தேசியம் இந்து, இந்தி தேசியமாக பார்ப்பனியத் தன்மையோடே உள்ளது. அது அனைத்து இந்திய ஒன்றிய மக்களுக்கானதாக இல்லை. இதை உணர்ந்த, தமிழர்கள் (பார்ப்பனர் அல்லாதோர்) முஸ்லீம்கள், சீக்கியர்கள், காஷ்மீரிகள், வட- கிழக்கிந்திய மக்கள் போன்றோர் அப்போதே தங்களது உரிமைக்காக தனிநாடு, வகுப்புவாரி உரிமைகள் போன்றவற்றைக் கோரினர். ஆனால் இவர்கள் எல்லோரையும் தேசவிரோத சக்திகளாக இல்லாத தேசியத்தின் வாதிகள் வகைப்படுத்தினர். அதன் தொடர்ச்சியே இன்றளவும் பார்பனமயமான இந்து, இந்திய தேசியவாதத்தில் இருந்து விலகி தங்களது உரிமைகளைக் கோருவோர் தேச விரோதிகளாக கட்டமைக்கப்படுகின்றனர்.

இந்தி திரைப்பட உலகத்தின் போக்கு மேற்கூறிய பார்ப்பன – உயர்குடி சிந்தனையில் இருந்தே உருவானது.

இரண்டாவது கேள்வியான ஃபேமிலி மேன் தொடரில் முஸ்லீம்கள், மலையாளிகள், காஷ்மீரிகள், தமிழர்கள், ஈழத்தமிழர்கள், வட-கிழக்கு மக்கள் எதிரிகளாக கட்டமைக்கப்பட வேண்டியதன் தேவையைப் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஒருபடித்தான இந்து தேசியத்தின் உருவாக்கத்திற்கு எதிராக இருப்பவர்கள் முஸ்லீம்கள், மலையாளிகள், காஷ்மீரிகள், தமிழர்கள், ஈழத்தமிழர்கள், வட-கிழக்கு மக்கள். இந்தியாவின் இந்து தேசிய வரையரையை கேள்விக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக தங்களது உரிமைகளை கோரிக்கொண்டே இருக்கிறார்கள். எனவே இந்த தொடர் நவீன ஒன்றுபட்ட இந்தியாவை பாதுகாப்பதாக உருவாக்கபடும் போது இயல்பாகவே அது இந்த மக்களுக்கு எதிராக நின்று விடுகின்றது. எனவே இந்த மக்கள் அவர்களுக்கு எதிரிகளாக தெரிகிறார்கள்.

மூன்றாவது கேள்வியான இப்படிப்பட்ட அபத்தங்களை ஏற்றும் கொள்ளும் பார்வையாளர்கள் யார் என்பதே. இது ஒரு முக்கியமான கேள்வி. ஏன் என்றால் இந்த பார்வையாளர்களை மையமாகக் கொண்டே இந்தத் தொடர்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பார்வையாளர்கள் பெரும்பாலும் நடுத்தர, உயர்நடுத்தர, மேட்டுக்குடிகளாக இருக்கின்றனர்.

இந்தத் தொடர் குழுவின் அரசியல் உணர்வு எத்தகையது.

குழுவின் அரசியல் உணர்வு என்று பார்க்கும் போது இயக்குனர்கள் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இந்து/ இந்தி/ இந்திய மையவாதமே மேலோங்கி உள்ளது. தொடரின் காட்சி அமைப்புகளில் இதனை தெளிவாக நாம் பார்க்க முடியும். 

நான்காவது கேள்வியான இந்தி திரைப்படங்களில் ஈழத்தமிழர்கள் பயங்கரவாதிகளாக காட்டப்படுவதைப் பற்றிப் பார்போம். பொதுவாக இந்தி திரைப்படம், தமிழர்களைப் பற்றி மேற்கூறிய காரணகளுக்காக ஆரம்பத்தில் இருந்தே சிக்கலாகவே பார்த்துக் கொண்டிருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு, எதிர் வடநாடு என்னும் போக்கு இன்னும் தீவிரமானது என்று சொல்லலாம். இது அப்படியே இந்தி திரையுலகில் எதிரொலித்தது. இந்த அமேசான் தொடரில் கூட “தமிழ்நாட்டை” முக்கியமாக சென்னையை வளர்ச்சியடையாத இடம் போல ஒரு எள்ளல் தொனியோடு அணுகி இருப்பார்கள். 

 தமிழர்கள் பற்றியே இந்த நிலமை என்றால் ஈழத் தமிழகள் நிலையைச் சொல்லவேண்டியது இல்லை. என்னுடைய புரிதலின் படி ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்னரே ஈழத் தமிழர்கள் இந்தியாவிலும், இந்தி சினிமாவிலும் கவனம் பெற ஆரம்பித்தார்கள் என்று நினைக்கின்றேன்.

இந்தத் தொடரில் கூட பிரதமர் கொலை முயற்சி என்ற மையப்புள்ளி எடுக்கப்பட்டு இருக்கும். இது அங்கிருந்து எடுக்கப்பட்டதாகவே இருக்கும்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அது இந்திய வகைமையில் இருந்து தனித்து இருப்பது உருத்தலாகவே உள்ளது. அதுவும் இந்திய நலனுக்கு எதிராக ஈழப் போராட்டத்தை ஆதரித்ததும், அதற்காக சொந்த நாட்டு பிரதமர் உட்பட யாரையும் தூக்கி எறியக்கூடிய உணர்வெழுச்சி இந்தி/ இந்து மையவாத்ததிற்கு உருத்தலாகவே இருந்து வருகின்றது. எனவே தொடரில் ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் இந்தியாவின் பாதுகாப்பின் எதிரிகளாக கட்டமைக்கப்பட்டதில் அவர்களுக்கே உண்டான காரணம் இல்லாமல் இல்லை.

இறுதியாக இந்தி திரைப்படங்களைப் பொருத்தவரையில் சிங்கள பகுதிகளில் அதற்கான வரவேற்பு உள்ளது. தமிழ் பகுதிகளில் தமிழ்நாட்டுத் திரைப்படங்கள். சிங்கள பகுதிகளில் இந்தி திரைப்படங்கள். என்ற எதிர்போக்கு நிலவுகிறது. ஈழத் தமிழர் பற்றிய இந்தி திரையுலகின் போக்குக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.

 

https://utattam.wordpress.com/2021/06/10/202103/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் போராட்டத்தை மலினப்படுத்தும் The Family man Season 2 : இலண்டனில் போராட்டம்

 
safe_image-1.jpg
 36 Views

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை திரிவு படுத்தியும், தமிழர்களின் கலாசார, பண்பாட்டினை இழிவுபடுத்தியும் தயாரிக்கப்பட்ட The Family man Season  2  திரைத் தொடரினை Amazon நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையான Amazon prime இல் ஒளிபரப்பு செய்தமைக்கு கண்டனம் தெரிவித்து பிரிட்டன் வாழ் தமிழ் உறவுகள் Amazon நிறுவனத்தின் இலண்டன் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று திங்கட்கிழமை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன அதனை இழிவு படுத்தும் உரிமை எவருக்குமில்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

முன்னதாக தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்தியலாளர்கள் தமது கண்டனத்தை தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=53042

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 

ஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது? || கலையரசன்

வடஇந்தியர்கள் தம்மை உயர்வாகவும், தென்னிந்தியர்களை தாழ்வாகவும் கருதும் போக்கு உள்ளது. ஆனால், பிற தென்னிந்திய மாநிலங்களை விட்டு விட்டு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து எதிர்ப்பதற்கு சில விசேட காரணங்கள் உள்ளன.

June 17, 2021

அமேசன் தொலைக்காட்சித் தொடர் ஃபேமிலி மேன் 2 பற்றிய விமர்சனம்.

சுருக்கமாக சொன்னால் ஒரு மொக்கைத் தொடரை சர்ச்சைக்குள்ளாக்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இறுதியில் அமேசன் தளத்திற்கு அதிகளவு சந்தாதாரர்களை சேர்த்துக் கொடுத்ததுதான் மிச்சம். சில நேரம் எதிர்ப்புக் கூட, ஒரு படத்திற்கு விளம்பரமாகி விடும் என்பதற்கு ஃபேமிலி மேன் ஒரு சிறந்த உதாரணம்.

இதுவும் வணிக நோக்கில் தயாரிக்கப்படும் பிற திரைப்படங்கள் போன்று, ஹிந்தி பேரினவாத கோணத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்திய தேசபக்தி படம்தான். இந்தத் தடவை குறிப்பாக தமிழர்கள் மீது இனவாத வன்மம் காட்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதிலும், காஷ்மீரிகளுக்கு எதிரான வன்மம், பாகிஸ்தான் எதிர்ப்பு, இஸ்லாமிய வெறுப்பு (லவ் ஜிகாத்) என்று வழமையான இனவாத மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு குப்பைப் படம். இதற்கு இந்தளவு ஆரவாரம் செய்யத் தேவையில்லை. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலே தோல்வி அடைந்திருக்கும்.

இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நாளில் இருந்து இன்று வரையில், so called “புலி ஆதரவாளர்கள்”, அல்லது வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள், கொஞ்சம் ஓவராகவே பொங்கிப் படைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். புலிகள் தொடர்பாக அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் புனிதப் பிம்பம் உடைக்கப்படும் போது ஏற்பட்ட வலி காரணமாக கதறி இருக்கிறார்கள். “புலிகளைப் பற்றி உனக்கென்ன தெரியும்?” என்ற கணக்காக பொரிந்து தள்ளிவிட்டார்கள். ஒருவர், ஹிந்திக்காரர்களுக்கு தமிழ் புரியாதே என்ற ஆதங்கத்தில், யூடியூப்பில் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டு இருந்தார்.

பேமிலி மேன் தொடர் புலிகளை கொச்சைப்படுத்தி உள்ளது என்பது உண்மை தான். ஏற்கனவே, காஷ்மீர் போராளிகளை கொச்சைப் படுத்தியவர்கள் புலிகளை மகிமைப் படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது எமது மடமைத்தனம். ஆனால், பார்வையாளர்கள், (தமிழர் அல்லாத வேற்றின) மக்கள், இந்தப் படத்தை பார்த்துதான் புலிகளை மதிப்பிடப் போகிறார்கள் என நினைப்பது வேடிக்கையானது.

Family-man2-5-400x225.jpg
 

உண்மையில் ஃபேமிலி மேன் தொடர் புலிகளை சித்தரித்துள்ள விதம் சிறுபிள்ளைத்தனமானது. நகைப்புக்குரியது. தொடக்கத்தில் இருந்து “குறிப்பிட்ட ஐந்து நபர்களைத் தான்” படம் முடியும் வரை காட்டுகிறார்கள். ஒரு சிறு குழுவின் சாகசக் காட்சிகளை பார்த்தால், அதை ஒரு போராட்டம் என்று எவனும் நம்ப மாட்டான். சுருக்கமாக சொன்னால், ஒரு மாபியாக் குழு மாதிரி சித்தரித்து இருக்கிறார்கள். இதை எத்தனை படங்களில் பார்த்து விட்டோம்? புலிகளை மறந்துவிட்டு பார்த்தால், இதுவும் அரைத்த மாவை அரைத்த அரைவேக்காட்டு படம்தான்.

ஏற்கனவே, செய்திகளில் கேள்விப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு படக்கதை எழுதப் பட்டிருந்தாலும், யதார்த்த அரசியலில் இருந்து வெகுதூரம் சென்று விடுகின்றது. அதனால், ஒரு செயற்கைத்தன்மை உண்டாகின்றது. இதைவிட சில வருடங்களுக்கு முன்பு வெளியான மெட்ராஸ் கபே திரைப்படம், ஓரளவு வரலாற்று உண்மைகளுடன் ஒத்துப் போகின்றது. அதனுடன் ஒப்பிட்டால் ஃபேமிலி மேன் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்ட சராசரி மொக்கைப்படம்.

உண்மையில், வடஇந்திய ஹிந்திக்காரர்கள் என்றாலும், அன்றாடம் செய்தி வாசிப்பவர்களுக்கு புலிகளைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்களுக்கு, சிறு குழந்தைக்கு கதை சொல்வது மாதிரி, புலிகள் இந்தப் ஃபேமிலி மேன் படத்தில் வருவது மாதிரி இருப்பார்கள் என்று சொல்லி ஏமாற்ற முடியாது. அரசியலில் நாட்டமில்லாத மக்கள் மட்டும், இதையும் இன்னொரு “காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றிய படம்” என்பது மாதிரி பார்த்து விட்டு கடந்து செல்வார்கள். (அவர்களில் பலருக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்றும் தெரியாது.) அதற்கு ஏற்றவாறு கதாசிரியர் காஷ்மீர், ISI பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஈழத்திலும் பொதுவாக புலிகளை ஆதரிக்கும் தமிழர்களின் விகிதாசாரம் மிகக் குறைவாகத்தான் இருக்கும். நாற்பது சதவீதம் ஆதரிக்கிறார்கள் என்பதே ஒரு மிகைப்படுத்தல்தான். முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களிடமும் புலிகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இருப்பினும், அதே மக்கள் வெளியுலகில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு வழங்குவது போன்று காட்டிக் கொள்வார்கள். இது அவர்களது இருப்பு சார்ந்த விடயம்.

குறிப்பாக, சிங்கள அல்லது ஹிந்தி பெரும்பான்மையினத்தின் அடக்குமுறையை, பேரினவாத மேலாண்மையை எதிர்கொள்ளும் போதெல்லாம், தமிழர்கள் தமது முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஓரினமாக ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள். ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் காணப்படும் இந்த ஒற்றுமை உணர்வு தான் ஃபேமிலி மேன் படத்தில் மிகுந்த வெறுப்புடன் அணுகப் படுகின்றது. அதை நெறியாளர் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துகிறார்.

கவனிக்கவும்: “தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை” என்று தமிழினவாதிகள் (வலதுசாரிகள்) மட்டும்தான் சொல்லிக் கொள்கிறார்கள். அது அவர்களது வழமையான அரசியல் பிரச்சாரம். ஆனால், வெளியுலகம் தமிழர்களை அப்படிப் பார்ப்பதில்லை. சிங்களவர்களை அல்லது ஹிந்திக்காரர்களை கேட்டால், தமிழர்களிடம் உள்ள ஒற்றுமை தமது மக்களிடம் இல்லை என்பார்கள் !

Family-man2-2-400x225.jpg
 

இதை “ஆரிய – திராவிட முரண்பாடு” என்று சொல்லலாம். அதை ஏற்க மறுப்பவர்கள் “சிங்கள – தமிழ் முரண்பாடு” அல்லது “ஹிந்தி – தமிழ் முரண்பாடு” என்று சொல்லலாம். அது அவரவர் அடையாள அரசியல் குறித்த பிரச்சினை. எது எப்படி இருப்பினும் ஹிந்தி மொழி பேசும் வடஇந்தியர்களுக்கும், தமிழ் மொழி பேசும் தென்னிந்தியர்களுக்கும் இடையில் ஏதோ ஒரு பரம்பரைப் பகை இருந்து வருவது மட்டும் உண்மை. இந்த இன முரண்பாட்டை ஃபேமிலி மேன் படம் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே காட்டி விடுகின்றது.

இந்தப் படத்தில் வடஇந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளாக வரும் கதாபாத்திரங்கள் (திவாரி, ஜேகே, மிலிந்த்) வாழும் இடங்களைப் பார்த்தால் ஐரோப்பா மாதிரி இருக்கிறது. அவர்களது வீடுகளும், வேலை செய்யும் இடங்களும் மிக நவீனமாக உள்ளன. அவர்களது நடை, உடை, பாவனை, கலாச்சாரமும் மேற்கத்திய நாட்டவர் போன்றிருக்கிறது. நிச்சயமாக, குடும்பக் காட்சிகளை பார்க்கும் ஐரோப்பியர்கள் அதில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும். அந்தளவு மேற்கத்திய வாடை அடிக்கிறது.

ஆனால், கதை சென்னைக்கு நகர்ந்ததும் காட்சியமைப்புகள் தலைகீழாக மாறி விடுகின்றன. அப்போதுதான் மக்கள் நெருக்கடியும், இரைச்சலும் மிக்க, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஒரு மாநிலத்தை பார்க்கிறோம். “இதுவும் இந்தியாவிலா இருக்கிறது?” என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். ஃபேமிலி மேன் படம் தமிழ்நாட்டை சித்தரிக்கும் காட்சிகளை பார்ப்பவர்கள், அது எங்கோ ஆப்பிரிக்காவில் இருப்பதாக நினைப்பார்கள். அந்தளவு மோசமாகக் காட்டி இருக்கிறார்கள்.

ஃபேமிலி மேன் காட்டும் தமிழ்நாடு எந்த வித மாற்றமும் இல்லாமல் எழுபது வருடங்களுக்கு முந்திய பழைய வீடுகளுடன் உள்ளது. தமிழர்களின் உடுத்துவதிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே “பழைய பஞ்சாங்கம்” தானாம் ! காலனிய காலத்தில் வெள்ளையர்கள் தமக்கு கருப்பர்களை நாகரிகமயப்படுத்தும் கடமை இருப்பதாக கருதிய மாதிரித்தான், வடஇந்தியர்கள் தமிழர்களை பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தெருவில் மக்கள் குடங்களுடன் குழாயடியில் தண்ணீருக்காக காத்திருக்கிறார்கள். வெயில் கொடுமை தாங்க முடியவில்லை என்று வட இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடிக்கடி புலம்புகிறார்கள். அவர்கள் எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது !

இதெல்லாம் படத்தில் எந்தளவு தூரம் தமிழர்களுக்கு எதிரான இனவாதம் கட்டமைக்கப் படுகின்றது என்பதற்கான உதாரணங்கள். இந்தக் காட்சியமைப்புகளுக்கு பின்னால் ஒரு மேட்டுக்குடி மனப்பான்மை மட்டுமல்லாது, தமிழர்களுக்கு எதிரான இனவாத வெறுப்புணர்வும் காணப்படுகின்றது. இது தான் நாங்கள் எதிர்க்க வேண்டிய விடயம்.

பொதுவாகவே, வடஇந்தியர்கள் தம்மை உயர்வாகவும், தென்னிந்தியர்களை தாழ்வாகவும் கருதும் போக்கு உள்ளது. இருப்பினும், பிற தென்னிந்திய மாநிலங்களை விட்டு விட்டு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து எதிர்ப்பதற்கு சில விசேட காரணங்கள் உள்ளன.

Family-man2-4-400x225.jpg
 

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஹிந்தி மொழி மேலாதிக்கம் தீவிரமாக எதிர்க்கப்பட்டு வருகின்றது. அரசியல் களத்தில் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பவர்கள் மத்தியில் கூட தமிழ் மொழி பேசுவதில் ஒரு பெருமிதம் இருக்கும். இந்த விடயத்தில் வலதுசாரிகளும், இடதுசாரிகளும் கட்சி வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு வேற்றுமை கூட அங்கே மறைந்து விடும். தமிழர்களின் இந்த ஒற்றுமை உணர்வு வடஇந்தியர்களுக்கு மிகுந்த எரிச்சல் ஊட்டி வருகின்றது.

இதனை என்னுடன் பேசிய சில வடஇந்திய நண்பர்கள் நேரடியாகவே தெரிவித்துள்ளனர். அதிலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கடல் கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் மீது காட்டும் “தொப்புள்கொடி உறவு பாசம்” கண்டு அவர்கள் இன்னும் பல மடங்கு எரிச்சல் அடைகிறார்கள். இந்த வெறுப்புணர்வை பேமிலி மேன் படத்தில் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஈழத்தவர் என்றாலும், தமிழ்நாட்டவர் என்றாலும் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்று இந்திய நடுவண் அரசுக்கு “போட்டுக்” கொடுக்கிறது. தமிழ்நாட்டில் பேரினவாத மொழியான ஹிந்தியும் பேசத் தெரிந்த அதிகார வர்க்கத்தினரை நம்பலாம். ஆனால், தமிழ் மட்டுமே பேசும் மக்களை நம்ப முடியாது. ஆகவே, தமிழ்நாட்டை விரைந்து ஹிந்தி மயப்படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு. இது தான் இந்திய அரசுக்கும், பார்வையாளர்களுக்கும் ஃபேமிலி மேன் தெரிவிக்கும் செய்தி.

உதாரணத்திற்கு, புலனாய்வுத் துறை அதிகாரியாக வரும் முத்து அரசுக்கு விசுவாசமாக இருக்கிறார். அதே மாதிரி இயக்கத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டே காட்டிக் கொடுக்கும் இன்போர்மர் செல்வமும் ஹிந்தி பேசுகிறார். துரோகிகள் ஆட்சியாளர்களின் நண்பர்கள் என்பது உண்மை தானே? இதன் இன்னொரு வடிவம்தான், லண்டனில் இயங்கும் நாடு கடந்த ஈழ அரசின் தலைவராக காட்டப்படும் தீபன் என்ற பாத்திரம். அவரும் தனக்குத் தெரிந்த இரகசியங்களை எல்லாம் இந்திய அரசுக்கு தெரிவித்து விடுகிறார். படத்தின் முடிவில் இவர்களுக்கு மெடல் கொடுத்து கௌரவிக்காதது மட்டுமே குறை.

எப்போதும் இந்திய மத்திய அரசுடன், அதாவது ஹிந்தி பேரினவாதத்துடன் ஒத்தோடிக் கொண்டிருக்கும் வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளை இந்த ஃபேமிலி மேன் படம் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது. அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதைத் தான் அவர்களது கதறல்களும் வெளிப்படுத்துகின்றன. தங்களுக்கு “தமிழீழம் பிரிவது மட்டுமே முக்கியம் என்றும், தமிழ்நாடு எப்போதும் போல இந்திய இறையாண்மையை ஏற்று நடக்கும் என்றும்…” வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் சொல்லி வருகின்றனர்.

அதற்கு ஃபேமிலி மேன் சொல்லும் பதில் என்ன?

Family-man2-3-400x225.jpg
 

“நீங்கள் இலங்கையின் இறையாண்மையை எதிர்க்கிறீர்கள் என்றால், இந்தியாவின் இறையாண்மையையும் எதிர்க்கிறீர்கள் என்று அர்த்தம் ! அதனால் நாங்கள் உங்களை பாகிஸ்தான் ISI உடனும், காஷ்மீர் தீவிரவாதிகளுடனும் சேர்த்துத் தான் பார்ப்போம் !”

இங்கே சில உதாரணங்களை பார்ப்போம் :

  • இந்தப் படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் ராஜி என்ற பெண் போராளியை, ஒரு கட்டத்தில் வேதாரணியத்தில் (பெயர் மாற்றி இருக்கிறார்கள்) பிடித்து உள்ளூர் போலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் எல்லோரும் இயக்கத்திற்கு ஆதரவானவர்கள். அதனால், உளவுத்துறையினரின் விசாரணையில் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். மாறாக, மக்கள் ஒன்று சேர்ந்து புலனாய்வுத் துறை அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். போலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி பெண் போராளி ராஜியை விடுவித்து விடுகிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது ஒரு காஷ்மீர் போராளி !
  • லண்டனில் மறைந்து வாழும் “புலிகள்”(?) இயக்கத் தலைவருக்கு உற்ற நண்பனாக வருபவர் ஒரு ISI அதிகாரி. யாருக்கும் தெரியாமல் இயக்கத் தலைவர் பாஸ்கரனை பாதுகாப்பாக பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த இயக்கத்தின் “உப தலைவர்” தீபனை கூட நம்ப முடியாது. ஏனென்றால் அவர் இந்திய அரசுடன் ஒத்துழைப்பவர். இறுதியில், தீபனின் காட்டிக்கொடுப்பால் தலைவர் பாஸ்கரன் சயனைட் கடித்து தற்கொலை செய்து கொள்கிறார்.

அதாவது, பாகிஸ்தானிகளும், காஷ்மீரிகளும் ஈழத்தமிழர்களுடன் மிகுந்த மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால், இந்தியர்களை (ஹிந்தி பெரும்பான்மையினரின் அரசு) வெறுக்கிறார்கள்.

இப்படிப் போகிறது கதை !

கலையரசன்
முகநூலில் : Kalai marx

 

 

https://www.vinavu.com/2021/06/17/the-family-man2-movie-review-kalaiyarasan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 

தி பேமிலி மேன் - 2 : புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் கடிதம்!

spacer.png

ஜூன் 3 அன்று உலகம் முழுவதும் அமேசான் இணைய வழியாக வெளியிடப்பட்ட தி பேமிலி மேன் - 2 வலைத்தொடரில் தனி ஈழத்துக்காகப் போராடிய ஆண், பெண் என இரு தரப்பையும் மோசமாக, தீவிரவாதிகளாகச் சித்திரித்திருப்பதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

இத்தொடரைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அந்தளவுக்கு உலக தமிழர்களின் கவனிப்புக்கு உள்ளான தி பேமிலி மேன் - 2 வலைத்தொடர் சம்பந்தமாகவும், எதிர்வரும் காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்கவும் தமிழ்த் திரைப்படத் துறையில் பிரதான அமைப்புகளாக உள்ள நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் அமைப்பு சார்பாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், "உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளின் சார்பாக இந்தக் கடிதம் உங்களுக்கு எழுதப்படுகிறது.

தி பேமிலி மேன் - 2 வலைத்தொடரில் ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய தவறான பார்வையை முன்வைத்திருப்பதைக் கண்டிக்கவும் இனிமேல் இது போல் தொடராமல் இருக்கவும் நாங்கள் எடுக்கும் முயற்சியை உங்கள் முன்வைத்து, அதன் மூலமாக மக்களுக்கு எங்களின் நிலைப்பாட்டை பதிவு செய்ய விரும்புகிறோம்.

முதல் கட்டமாக தி பேமிலிமேன் -2 இணையத் தொடரை உருவாக்கிய அமேசானின் தலைமை அலுவலகங்களுக்கு எங்களின் ஆட்சேபனையைத் தெரிவித்து வருகின்றோம். அத்துடன் புலம்பெயர் வாழ்நாடுகளில் தன்னெழுச்சியாக தமிழ் மக்கள் அடையாள ஆர்ப்பாட்டங்களை கோவிட் விதிமுறைகளுக்கமைய ஒழுங்கு செய்து வருகின்றனர். இதன் முதல் கட்டமாக நேற்று லண்டனில் அமேசான் காரியாலயத்தின் முன் ஓர் அமைதிவழி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதுபோன்ற தொடர்கள் நம் தமிழக மண்ணில் நம்மோடு தாய் உறவுகளாக வாழும் எங்கள் சொந்தங்களையே பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கிறது. அதாவது இந்த தொடரில் நடித்தவர்கள், எழுதியவர்கள் எனத் தமிழக மண்ணில் இருந்து சிலரால் இப்படி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் அறியாமையாக விளக்கிட நினைத்தாலும் இவை எம் மனதை மிகவும் காயப்படுத்தி வலியை அதிகரிக்கிறது.

எனவே வருங்காலத்தில் இதுபோல் ஒரு படைப்பில் நம் கலைஞர்களோ, எழுத்தாளர்களோ, இயக்குநர்களோ இணைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உலகம் முழுவதும் வாழும் தமிழர் அமைப்புகள் மூலமாக இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறோம்.

Australian Tamil Congress (ATC), British Tamils Forum (BTF), Irish Tamils Forum (ITF), La Maison du Tamil Eelam (MTE), Norwegian Council of Eelam Tamils (NCET), National Council of Canadian Tamils (NCCT), Solidarity Group for Peace and Justice (SGPJ - South Africa) மற்றும் United States Tamil Action Group (USTAG) ஆகிய அமைப்புகள் இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறோம்.

தி பேமிலி மேன் 2 வலைத்தொடர் "ஒரு கற்பனையான படைப்பு" என்று தயாரிப்பாளர்கள் கூறியிருந்தாலும், 'ஈழத் தமிழர்கள்', 'பருத்தித்துறை', 'ஈழம்' மற்றும் 'வட இலங்கை' ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை, காட்சிகள் ஈழப் போருக்கு மிகவும் ஒத்திருக்கின்றமை ஆனது ஈழத் தமிழர்களை மோசமான முறையில் காட்ட முனையும் நன்கு திட்டமிடப்பட்ட செயலாகவே இது தெரிகிறது.

ஈழத் தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று இந்தத் தொடர், பிரச்சாரம் செய்கிறது. மாறாக, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இன அழிப்பு போன்ற அநீதிக்கு எதிராக நாங்கள் உலக நாட்டுச் சட்டங்களின்படி போராடி வருகிறோம். ஆனால் இன்றும் விடுதலை பற்றிய எங்கள் எண்ணங்களை அடக்குவதற்கான நோக்கத்துடன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

விடுதலைக்காகப் போராடும் பெண்களின் வாழ்க்கை முறை தவறாகவும், கீழ்த்தரமாகவும், விசமத்தனமாகவும் புனையப்பட்டிருக்கிறது. காரியம் நடக்க வேண்டி தமிழ் பெண்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற அச்சுறுத்தலை வேறு அது உலக மக்களுக்கு விதைக்கிறது.

தமிழக மக்கள் எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள். "திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் மிகவும் ஆதரவளித்துள்ளனர். ஈழத் தமிழர்களை மோசமாகக் காண்பிக்கும் இது போன்ற திரைப்படங்களைத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும், இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்றும், தயாரிக்க வேண்டாம் என்றும் ஒரு சுற்றறிக்கையை நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கம் வெளியிட வேண்டும்" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சங்கங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, "தி பேமிலி மேன் வலைத்தொடர் அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டிருப்பது, நீங்கள் அனைவரும் அறிந்த விடயம். ஈழத்தமிழரின் வரலாற்றையும் எமது வரலாற்றுச் சிறப்பு நிறைந்த தேச விடுதலைப் போராட்டத்தினையும் திரிவுபடுத்தி கொச்சைப்படுத்தும் திரைக்கதையும் உரையாடல்களும் எமக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை மூடி மறைத்து பயங்கரவாத இனமே அங்கு அழிக்கப்பட்டதாக நியாயப்படுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பாக காட்சிப்படுத்தல்களுடன் இத்தொடர் வெளிவந்துள்ளது ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் அதிர்ச்சிக்கும் மனவேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் போரின் பின் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிதறி வாழும் ஈழத்தமிழர்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஊடாக வாழ்வை நகர்த்தி செல்கின்றார்கள். ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்திரித்து ஸ்ரீலங்கா இனவாத அரசு தன் வன்கொடுமைகளை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதையும் ஈழத்தில் நிகழ்ந்த இன அழிப்பை நிரூபிப்பதற்கும் நீதிகேட்டும் நாங்கள் பல்வேறு வழிகளில் சர்வதேச தளங்களில் உலகின் சட்டத்திட்ட நியமங்கள் அடிப்படையில் தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருக்கிறோம்.

உலகம் எங்களைப் பாதிக்கப்பட்ட இனமாக அடையாளப்படுத்த தொடங்கியுள்ள இன்றைய காலகட்டத்தில் நாங்கள் உலக பயங்கரவாத அமைப்புகளுடன் கைகோர்த்து செயல்படுவது போன்றும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் சட்டத்திட்டங்களுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது போன்றும் தமிழர்களை மிக மோசமாக உருவகப்படுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாகக் காட்டி மற்றவர்களில் இருந்து அந்நியப்படுத்தவும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையை மறைத்து நியாயப்படுத்துவதும் அதற்கு துணைபோவதுமான ஒரு மோசமான பிரச்சார தந்திரமாக அத்தொடர் இருப்பதாக நாங்கள் உணர்கின்றோம்.

ஒரு தேசிய இனமக்களின் விடுதலையை சிதறடிப்பதற்கான நியாயங்களை உருவாக்குவதற்கு இந்த பயங்கரவாதம் என்கின்ற அரசியல் கருத்தியல் பயன்படுத்தப்படுகிறது. நாம் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்ச் சமூகத்தையும் போராளிகளையும் தொடர்ச்சியான வன்முறை காட்சிகள் மூலமாக மனித உயிர்களைப் பொருட்படுத்தாத ஒழுக்கமற்ற பயங்கரவாதிகள் என்று சித்திரிக்க முயல்கின்றது. மதுவருந்தல், பெண்களை பாலியல் தற்காப்பு ஆயுதங்களாக, தகாத வார்த்தைப் பிரயோகங்கள், பழி வாங்கும் உணர்வுகளுடன் அலைவது என எண்ணிலடங்கா வழிகளில் நீதியான விடுதலைப் போராட்ட வரலாற்றினை திரிவுபடுத்த பிரயத்தனப்பட்டிருக்கின்றார்கள்.

இது ஒரு கற்பனை கதை என்று பொறுப்புக்கூறலில் இருந்து படத் தயாரிப்பாளர்கள் விடுபட முடியாது. ஈழத்தமிழர்கள், பருத்தித்துறை, ஈழம், வட இலங்கை என்று தங்களை குறிப்பிட்டிருக்கின்றார்கள். காட்சி அமைப்புகள்கூட ஈழத்தில் நிகழ்ந்த இறுதிப்போரை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இது தீர்க்கமாக யோசித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொடர் என்பது தெளிவாக தெரிகின்றது. எங்கு போனாலும் எவ்வளவு காலம் கடந்தாலும் ஈழத் தமிழன் என்பவன் பயங்கரவாதிதான் என்று உலக நாடுகளுக்கு பிரச்சாரம் செய்யும் ஒரு கருவியாகவே இத்தொடர் அமைகிறது.

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகளை எதிர்த்து உலக அரங்கத்தில் நீதிவேண்டி நிற்கின்றோம். கடந்த 12 வருடங்களாக அமைதியாக ஜனநாயக வழியில் நீதிக்காகப் போராடும் எங்களை மீண்டும் மீண்டும் எதற்காக குறிவைக்கின்றீர்கள் என வினாவுகின்றோம்? இன அழிப்பின் உச்சமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிந்துவிட்ட பிறகும்கூட தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு கருத்தியல் கோட்பாட்டியல். அரசியல் யதார்த்தமாகவும் அது சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலும் தொடர்ந்தும் தமிழர்களை மற்றும் தமிழ் அடையாளங்களைப் பயங்கரவாதத்தின் நீட்சியாகவும் தொடர்ச்சியாகவும் உட்படுத்தி வரும் அந்தப் பொதுப்புத்தி உருவாக்கல் என்பது மேலாதிக்க பேரினவாத தமிழர்களுக்கு எதிரான பகை சக்தியினுடைய தேவையாக இருக்கிறது என்பது தொடரினை முழுமையாகப் பார்த்த பின்னர் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

நாங்கள் துன்பப்படும் காலங்களில் எல்லாம் தமிழக மக்கள் எங்களுடன் நின்றிருக்கின்றீர்கள். ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். அனுதாபிகளாக, போராட்டம் செய்பவர்களாக, குரல் கொடுப்பவர்களாக எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டியிருக்கின்றீர்கள். இன்றும் அதே உணர்வுடன் எம்முடன் இணைபிரியாது இருக்கின்றார்கள். இதில் திரைப்படத் துறையினரின் பங்கும் கணிசமானது. வெளிநாடுகளில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படுவதிலும் கணிசமான வருவாய் ஈட்டியதிலும் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் பங்கு எண்ணிலடங்காது. ஈழத் தமிழருக்கும் உங்களுக்குமான உறவு என்பது எப்போதும் நல்லுறவுடன் தொடர வேண்டும்.

எனவே, தமிழ் நடிகர்களே.... தமிழனை இழிவுபடுத்தும் கொச்சைப்படுத்தும் அல்லது போராட்ட வரலாற்றினை திரிவுபடுத்தும் காட்சிகள் திரைப்படங்களில் வராமல் திரைக்கதை எழுதாமல் அல்லது அவ்வாறான காட்சிகளில் நடிக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு ஒரு அறிவிப்பு தயாரிப்பாளர், இயக்குநர் அல்லது நடிகர் சங்கத்திலிருந்து வெளிவருமானால் அது எங்கள் இனம் பட்ட வலிக்கான ஆறுதல் மருந்தாக இருக்கும் என்பதுடன் தமிழ் மக்களுக்கெதிரான தொடரும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்துவதில் தொடர்ந்தும் தமிழர்களுக்கான நீதியையும் உரிமையையும் பெற்றுக்கொள்ள எங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://minnambalam.com/entertainment/2021/06/24/4/elathamilarkal-letter-to-tamil-cine-industry

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.