Jump to content

பூஞ்சணங்கள் தரும் கிலி: என்ன நடக்கிறது இந்தியாவில்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூஞ்சணங்கள் தரும் கிலி: என்ன நடக்கிறது இந்தியாவில்?

கோவிட் தொற்றுக்களின் சமகால அல்லது பின்விளைவாக கறுப்புப் பூஞ்சணமும் (தற்போது வெள்ளைப் பூஞ்சணமும்) பரவி வருவதாகச் செய்திகள் வருகின்றன. இவற்றுள் கறுப்புப் பூஞ்சணத்தின் தொற்றுக் காரணமாக இளம் வயதினர் பலர் கண்களை இழக்க வேண்டிய சத்திர சிகிச்சைக்குட்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கறுப்புப் பூஞ்சணம் என்பது என்ன?

எங்கள் சூழலில் அழுகல் வளரிகளாக ஏராளமான பூஞ்சண (fungi) இனங்கள் வளர்கின்றன. மண்ணிலும், நீரிலும் வளரும் இந்தப் பூஞ்சண இனங்களில் மிகப் பெரும்பாலானவை மனிதர்களிலோ விலங்குகளிலோ நோய்களை உருவாக்குவதில்லை. தினசரி நாம் சுவாசிக்கும் காற்றின் வழியே இந்தப் பூஞ்சணங்களின் விதைகளுக்கொப்பான மகரந்தங்கள் எங்கள் உடலினுள் சேர்கின்றன - ஆனால் பெரும்பாலானவை நோயை உருவாக்குவதில்லை. ஆனால், கறுப்புப் பூஞ்சணம் எனப்படும் மியூகோர் (Mucorales) வகைப் பூஞ்சணம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி குறைந்தோரில் மட்டும் தொற்றையும் நோயையும் உருவாக்கும். இப்படி உருவாகும் நோயைத் தான் மியுகோர்மைகோசிஸ் (mucormycosis) என்று அழைக்கின்றனர். சாதாரணமாக, இந்த நோயின் தாக்கம் மேற்கு நாடுகளில் மிக அரிது: அமெரிக்காவில் இந்தத் தொற்று ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் பேர்களில் ஒருவரைத் தாக்கும் அளவுக்கு அரிதாக இருக்கிறது. இந்தியாவில், இந்த அளவீடு இன்னமும் சரியாகக் கணிப்பிடப் படவில்லையாயினும், கறுப்புப் பூஞ்சணத் தொற்றுக்கள் பற்றி அதிகமாக இப்போது செய்திகளில் வருவதைப் பார்க்கும் போது, தொற்றுக்கள் அதிகம் என்றே கருதப் படுகிறது.  

வெள்ளைப் பூஞ்சணம் என்பது என்ன?

கடந்த ஒரிரு நாட்களில், வெள்ளைப் பூஞ்சணத் தொற்றும் அதிகரித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. வெள்ளைப் பூஞ்சணம் என்பது வேறான ஒரு இனமான கன்டிடா அல்பிகன்ஸ் (Candia albicans) என்ற பூஞ்சணம். கறுப்பு பூஞ்சணம் போல உடலுக்கு வெளியே சூழலில் இருந்து வருவதல்ல. கன்டிடா வகைப் பூஞ்சணங்கள்  எங்கள் உடலின் வாய், இனப்பெருக்க உறுப்புகள் போன்ற பகுதிகளில் ஒத்துவாழும் உயிரியாகக் (commensal) காணப்படுகின்றன - சாதாரண மனிதர்களில் தீங்கெதுவும் பெரிதாகச் செய்வதில்லை. ஆனால், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நன்கு குறைக்கப் பட்ட எயிட்ஸ் போன்ற நிலைமைகளில் கன்டிடா அல்பிகன்ஸ் வெள்ளைப் பூஞ்சணமாக வாய், இனப்பெருக்க உறுப்புகளில் வளர ஆரம்பிக்கும். இதைக் கன்டிடியாசிஸ் (candidiasis) என்பர்.  சில சமயங்களில், இந்த வெள்ளைப் பூஞ்சணத் தொற்று, சுவாசக் குழாயினூடாக கீழிறங்கி சுவாசப் பைகளையும் தாக்கக் கூடும் -இது இப்போது இந்தியாவில் நடந்து வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில், மருந்துகளை உடனே செலுத்த வேண்டிய தேவைக்காக  உடலினுள் நீண்ட நாட்களாக ஊசிகளை இரத்தக் கலன்களினுள் செலுத்தி வைத்திருக்கும் indwelling catheters எனப்படும் மருத்துவ உபகரணங்கள் மூலமும் கன்டிடா தொற்று நிகழலாம். இப்படி உருவாகும் வெள்ளைப் பூஞ்சணத் தொற்று, இரத்தம் மூலம் உடல் முழுவதும் பரவ வாய்ப்புகள் அதிகம்.

திடீர் அதிகரிப்பின் காரணங்கள் எவை?

அடிப்படையான காரணம்: கோவிட் தொற்றிற்காக வழங்கப் படும் மருந்துகளில் ஒன்று டெக்சாமெதசோன் (dexamethasone) எனப்படும் அழற்சி எதிர்ப்பு மருந்து. இந்த மருந்தின் வேலை உடலின் அழற்சி எதிர்ப்பை மந்தப் படுத்தி கோவிட் தொற்றின் தீவிரத்தை இல்லாதொழிப்பதாகும். இதன் பக்க விளைவு: மந்தமான அழற்சி பூஞ்சணம் போன்ற ஏனைய நுண்கிருமிகளுக்கெதிரான உடலின் நோயெதிர்ப்பைக் குறைத்து விடுவதாகும். அப்படியானால், இந்த மருந்து பயன்படுத்தப் படும் வேறு பல நாடுகளில் கறுப்பு வெள்ளைப் பூஞ்சணங்கள் கடந்த ஒரு வருட காலத்தில் பிரச்சினையாக உருவாகவில்லையென்பது கவனிக்க வேண்டியது.

இந்தியாவிற்குரிய பிரத்தியேக காரணம்: நோயாளிகளைப் பராமரிக்கும் சூழலின் சுத்தமின்மை. இந்தியாவின் கோவிட் அவலம் பற்றி வெளிவரும் காணொளிகளில் நீங்கள் இந்த சுத்தமின்மையை தெளிவாகக் காணலாம்: மயங்கிக் கிடக்கும் கோவிட் நோயாளிகளுக்கு அருகிலேயே நோயாளியின் உறவினர்களும் (பலர் முகக் கவசத்தை வாய்க்கு மட்டும் அணிந்த படி!) கூட்டமாக இருப்பது, கைகளில் கையுறை இன்றியே தாதிகளும், சில சமயம் மருத்துவர்களும் நோயாளியைத் தொடுவது என்று பல அடிப்படைச் சுகாதார நடைமுறைகளை மீறிய செயல்களை சாதாரணமாகக் காணலாம். மேலும், தற்போதைய பல கோவிட் தீவிர சிகிச்சை நிலையங்கள் இந்தியாவில் சாதாரண கட்டிடங்களில், வெளிக்காற்றைச் சுத்திகரிக்கும், சுழற்சி செய்யும் எந்த ஏற்பாடுகளுமின்றி இயங்க வேண்டிய நிலை. இது சூழலில் இருந்து தொற்றும் கறுப்புப் பூஞ்சணத்தை நன்கு பரவ அனுமதிக்கும் ஒரு செயல் பாடு.

எப்படித் தடுப்பது?

இந்த இரு வகைப் பூஞ்சணத் தொற்றுக்களையும் குணமாக்கும் மருந்துகள் பல ஆண்டுகளாகப் பாவனையில் இருக்கின்றன - மிக இலகுவாகக் கிடைக்கின்றன. ஆனால், கறுப்புப் பூஞ்சணம் உடலினுள் நன்கு ஊடுருவிக் கட்டிகளாக வளரும் இயலுமை கொண்டதால், சிகிச்சை அளித்த பின்னர், சத்திர சிகிச்சை மூலம் பாதிக்கப் பட்ட இழையங்களை அகற்ற வேண்டியது அவசியமாகிறது - இல்லையேல் அந்தப் பூஞ்சணக் கட்டியில் இருந்தே எதிர்காலத் தொற்றுக்கள் புதிதாக உருவாகும்.

ஆனால், இந்தத் தொற்றுக்கள் பரவாமல் தடுக்கும் முறையே வினைத்திறன் மிக்கது. நோயாளிகளைப் பராமரிக்கும் விடுதிகள் அதிகம் மனிதப் போக்குவரத்தற்ற இடங்களாக இருக்க வேண்டும். சுவாச உதவிக்காக இயந்திரங்கள் பயன்படுத்தப் படும் போது, அவற்றின் குழாய்கள் முறையாகத் தொற்று நீக்கப் பட வேண்டும் - பாரிய எண்ணிக்கையான கோவிட் நோயாளிகள் காரணமாக இந்த சாதாரண தொற்று நீக்கல் நடவடிக்கைகளிலும் சறுக்கல்கள் ஏற்படும் நிலை ஏற்படக் கூடும்.

எனவே தான், கோவிட் தொற்றின் மரணங்களையும், பின்விளைவுகளாக உருவாகும் இது போன்ற பூஞ்சணத் தொற்றுக்களையும் குறைக்க மிக அடிப்படையானதும் வினைத்திறனானதுமான நடவடிக்கை: மருத்துவ மனைகள் நிரம்பி வழியாமல் தடுத்தல். இதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை பலர் பல்லாயிரம் வழிகளில் அலசி விட்டதால், இங்கே குறிப்பிட அவசியமில்லை என நினைக்கிறேன்.  

- ஜஸ்ரின்.

 

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு மரணம் என்பது இயற்கையானது. 
இந்தியா உயிர்வாழ முடியாத அளவுக்கு பழையது.
இந்தியா ஊழல் நிறைந்தது, இந்தியா மரணம் நிறைந்தது, 
இந்தியா பொய்கள் நிறைந்தது.
இந்தியா போலியானது.
இந்தியா பொய் குருவால் நிறைந்துள்ளது.
போலி அரசியல்வாதிகள் நிறைந்த இந்தியா.
இந்த கோவிட் -19 இல் அனைத்து இந்திய சத்தங்களும் அழிந்து போகின்றன.
இது உலகின் பிற பகுதிகளுக்கு நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் எல்லாமே பணம் பார்க்கும் தொழிலாகிவிட்டது சுகாதார சேவைகளுக்காக ஒதுக்கும் நிதிகள் அமைச்சர்களினதும் அவர்களின் பினாமிகளினதும் கைகளில் சேர்ந்து விடுகின்றது .
வல்லரசாக வளர்வது முக்கியமல்ல .மக்களின் அடிப்படை வசதிகளை முன்னிறுத்திய கட்டமைப்புக்கள் சரியாக இயங்காவிட்டால்
இந்த இந்திய வல்லரசு என்பது ஒரு கனவாகவே இருக்கும்.

மிகவும் தெளிவாக  எல்லோராலும் எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் எழுதிய ஐஸ்டின் அவர்களுக்கு நன்றிகள்    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.