Jump to content

ஈழத்து சித்தர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து சித்த மரபியலில் முக்கிய இடம் வகிக்கும் ஈழத்து பதினெண் சித்தர்கள்…

 

கடையிற்சுவாமிகள்.


பரம குரு சுவாமிகள்
குழந்தை வேற் சுவாமிகள்.
அருளம்பல சுவாமிகள்.
யோகர் சுவாமிகள்
நவநாத சுவாமிகள்
பெரியானைக் குட்டி சுவாமிகள்
சித்தானைக் குட்டி சுவாமிகள்
சடைவரத சுவாமிகள்
ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள்
செல்லாச்சி அம்மையார்
தாளையான் சுவாமிகள்
மகாதேவ சுவாமிகள்
சடையம்மா
நாகநாத சித்தர்
நயினாதீவு சுவாமிகள்
பேப்பர் சுவாமிகள்
செல்லப்பா சுவாமிகள்.

 

சட்டைமுனி என்ற ஒரு சித்தரைப் பற்றிய ஒரு பாடல் வரிகள் இதோ:

பாலனாம் சிங்கள தேவதாசி
பாசமுடன் பயின்று எடுத்த புத்திரன்தான்
சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி
சிறப்புடனே குவலயத்தில் பெயர் உண்டாச்சு.

– போகர் ஏழாயிரம் ( பாடல்: ஐந்து எட்டு ஏழு ஐந்து ).
ஒரு சிங்கள தேச பெண்ணுக்கும் ஒரு தமிழருக்கும் மகனாக பிறந்தவர் சட்டைமுனி என்றும், பிழைப்புக்காக குடும்பத்தோடு தமிழகம் வந்தனர் என்றும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது. இவர் போகர் மற்றும் கருவூராரிடம் சீடராக இருந்ததாக தெரிகிறது. சட்டைமுனி ஸ்ரீரங்கத்தில் ஜீவசமாதி ஆனதாக வைணவர்களும், சீர்காழியில் சமாதி ஆனதாக சைவர்களும் கூறுகிறார்கள். ( போகர் ஜனன சாகரம்).

நன்றி- சித்தர்கள் இணையம்

https://ourjaffna.com/cultural-heroes/ஈழத்து-சித்தர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அன்புத்தம்பி said:

ஈழத்து சித்த மரபியலில் முக்கிய இடம் வகிக்கும் ஈழத்து பதினெண் சித்தர்கள்…

 

கடையிற்சுவாமிகள்.


பரம குரு சுவாமிகள்
குழந்தை வேற் சுவாமிகள்.
அருளம்பல சுவாமிகள்.
யோகர் சுவாமிகள்
நவநாத சுவாமிகள்
பெரியானைக் குட்டி சுவாமிகள்
சித்தானைக் குட்டி சுவாமிகள்
சடைவரத சுவாமிகள்
ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள்
செல்லாச்சி அம்மையார்
தாளையான் சுவாமிகள்
மகாதேவ சுவாமிகள்
சடையம்மா
நாகநாத சித்தர்
நயினாதீவு சுவாமிகள்
பேப்பர் சுவாமிகள்
செல்லப்பா சுவாமிகள்.

 

சட்டைமுனி என்ற ஒரு சித்தரைப் பற்றிய ஒரு பாடல் வரிகள் இதோ:

பாலனாம் சிங்கள தேவதாசி
பாசமுடன் பயின்று எடுத்த புத்திரன்தான்
சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி
சிறப்புடனே குவலயத்தில் பெயர் உண்டாச்சு.

– போகர் ஏழாயிரம் ( பாடல்: ஐந்து எட்டு ஏழு ஐந்து ).
ஒரு சிங்கள தேச பெண்ணுக்கும் ஒரு தமிழருக்கும் மகனாக பிறந்தவர் சட்டைமுனி என்றும், பிழைப்புக்காக குடும்பத்தோடு தமிழகம் வந்தனர் என்றும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது. இவர் போகர் மற்றும் கருவூராரிடம் சீடராக இருந்ததாக தெரிகிறது. சட்டைமுனி ஸ்ரீரங்கத்தில் ஜீவசமாதி ஆனதாக வைணவர்களும், சீர்காழியில் சமாதி ஆனதாக சைவர்களும் கூறுகிறார்கள். ( போகர் ஜனன சாகரம்).

நன்றி- சித்தர்கள் இணையம்

நல்ல தகவல் தம்பி நன்றி.

இந்த சித்தர்கள் இணைய தள முகவரி என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடையிற் சுவாமிகள் :
 

கடையிற் சுவாமிகள் இலங்கையின் ஒரு சித்தராக கருதப்படுவதுடன், இலங்கையின் சித்தர் பரம்பரையின் ஆரம்பமாகவும் அறியப்படுகிறார். இவர் ஆதிகடைநாதன் என்ற பெயராலும் அறியப்படுகிறார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த சித்தர்களில் இவர் முதலாமவராக குறிப்பிடப்படுகிறார்.

வாழ்க்கை வரலாறு
இவர் தென்னிந்தியாவின் பெங்களூரில் ஒரு நீதிபதியாக கடமை புரிந்து வந்தார். கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளி கொலையாளிதான் என்று தீர்ப்பாகியது. யூரிகளும் குற்றவாளியைக் கொலையாளியே என்று தீர்ப்பளித்துவிட்டனர். நீதிபதியாக இருந்த இவருள்ளே தூக்குத் தண்டனை கொடுப்பதற்கு நான் யார் என்ற தத்துவ விசாரணை எழுந்தது. இந்த மனக் குழப்பங்கள் காரணமாக நீதிபதித் தொழிலைக் கைவிட்டு குரு ஒருவரிடம் சென்று ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பித்தார்.

இவருடைய தீட்சைப் பெயர் முத்தியானந்தா என்பதாகும்.

இலங்கைக்கு வருதல்
வைரமுத்துச் செட்டியார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவரே முத்தியானந்தாவாக இருந்த கடையிற்சுவாமிகளை இலங்கைக்கு வருமாறு 1860ம் ஆண்டளவில் அழைத்ததுடன் அவர் இலங்கை வரவும் காரணமாக இருந்தார். கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்த இவர் முதன்முதல் வந்திறங்கிய இடம் ஊர்காவற்றுறையாகும். அங்கிருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து மண்டை தீவில் குடியிருந்தார்.

யாழ்ப்பாணம் வந்த இச்சித்தர் தங்கியிருந்த இடம் பெரிய கடை ஆகும். இதன் காரணமாகவே கடையிற் சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு உருவானது
முக்கிய வாழ்க்கைக் குறிப்புக்கள்

  • இவருக்கென்றொரு அடியார் கூட்டம் இருந்தது. அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் ஆசிகளையும் இவர் வழங்கிவந்தார்.
  • சாதி பேதம் பாராட்டாமல் இவர் செய்த நடவடிக்கைகள் சில இவருக்கெதிரான சிலரையும் உருவாக்கியது.
  • இவரது அன்பர்கள் மாமிச, மது விருந்தளித்தாலும் அவற்றையும் இவர் உட்கொண்டிருக்கிறார்.
  • இவருடைய நடவடிக்கைகள் மனநோயாளரின் நடவடிக்கைகளை ஒத்திருந்தமையால் காவல் துறையினர் இவரைப்பிடித்து கொழும்பு மனநல மருத்துவமனக்கு அனுப்புமுகமாக சிறையில் அடைத்து வைத்திருந்தனர். (மறுநாள் திறந்து பார்த்தபோது இவர் சிறையில் இருக்கவில்லை என்றொரு கதை இருக்கிறது)
  • இறுதிக் காலத்தில் இவர் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த நீராவியடியில் வெளியில் எங்கும் செல்லாது வாழ்ந்து வந்தார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தானைக்குட்டி சுவாமிகள்
இவரது இயற்பெயர் கோவிந்தசாமி என்பதாகும். தமிழ் நாடு, இராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி சமஸ்தானத் தலைவரின் புதல்வர் .தமது சமஸ்தானத்தில் ஏற்பட்ட தொற்றுநோயைத் தடுக்க முயன்ற நவநாத சித்தரையும் பெரியானைக்குட்டி சுவாமிகளையும் சந்தித்தவர் அவர்களோடு கொழும்பு வந்தார்.
குருவான பெரியானைக்குட்டி சுவாமிகளின் ஆணைப்படி முன்னேஸ்வரம் சென்று அங்கு தங்கி பல சித்த சாதனைகள் புரிந்தார். தனது குரு சமாதியடைந்ததைத் தொடர்ந்து அவர் கதிர்காமம் சென்று திஸ்ஸமகாராமை என்ற இடத்தில் சிறிது காலம் தங்கி மட்டக்களப்பை அடைந்தார். காரைதீவிலே 1951 ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார். அவருடைய சமாதி கோயிலில் ஆண்டு தோறும் ஆடிச் சுவாதி நட்சத்திரத்தில் அன்னாரின் நினைவாக குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியானைக்குட்டி சுவாமிகள் 
இவர் கண்டியிலே சிறு வயதில் சலவைத் தொழிலாளி ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்தவர். பின்னர் கண்டி கதிரேசன் கோயில் படிகளிலே தங்கிச் சித்த சாதனைகளில் ஈடுபாட்டு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு இந்தியா சென்று நவநீத சுவாமிகளின் நட்பினைப் பெற்றார். அங்கு சித்தானைக்குட்டி சுவாமிகளைத் தொண்டராக ஏற்றுக்கொண்டார். இருவருடனும் சேர்ந்து பல சாதனைகளைச் செய்துவிட்டு மூவருமாக இலங்கை வந்தனர்.
இலங்கை மீண்ட சுவாமிகள் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கியிருந்தார். கொழும்பு வீதிகளிலே அதிகமாக நடமாடினார். கொழும்பு கப்பித்தாவாத்தை பிள்ளையார் கோயிலில் தங்கியிருந்தார். இவரைப் போற்றியவர்களிலே சேர் பொன்னம்பலம் இராமநாதன் குறிப்பிடத்தக்கவர்.இவரின் சீடர்களில் சித்தானைக்குட்டி சுவாமிகளும் மொட்டைச்சி அம்மையாரும் குறிப்பிடத்தக்கவர்கள். மொட்டைச்சி அம்மையார் திருக்கேதீஸ்வரத்தில் கொட்டில் அமைத்து வாழ்ந்து வந்தார்.பெரியானைக்குட்டி சுவாமிகள் 1911 இல் சமாதியடைந்தார். இவருடைய சமாதி கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இவரது சமாதியுடன் ஒரு பிள்ளையார் கோயிலும் கட்டப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிவயோக சுவாமி
http://www.uchimurugankovil.com/images/es2.jpg 
சிவயோக சுவாமி ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு.

வாழ்க்கைக் குறிப்பு
அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக் கொப்புகளில் தனிமையில் இருப்பது இவரது பொழுது போக்கு.

கல்வி
கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்க பாதிரிமாரின் நிறுவனமொன்றில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலமும், தமிழும் படித்தார்.
அரசுப் பணி
பள்ளிப்படிப்பு முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராக அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார்.
தம்முடைய உத்தியோகக் கடமைகள் தவிர கனிதரும் மரங்களை நட்டுக் கவனமாகப் பராமரித்து வந்தார். அவ்வாறு அவர் நட்டு பராமரித்த மாமரம் ஒன்று இன்றும் "சுவாமியார் மரம்" எனும் பெயருடன் கிளிநொச்சியில் உள்ளது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
செல்லப்பா சுவாமிகளுடன் ஐக்கியமாதல்

1905 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் செல்லப்பா சுவாமியைக் கண்டதிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. இவரைக் கண்டவுடனேயே செல்லப்பா சுவாமி சிங்கக் கர்ச்சனையாக "யாரடா நீ ?" என உலுக்கி "ஒரு பொல்லாப்பும் இல்லை!" என உறுமினார். செல்லப்பாசுவாமியின் குரலிலும் பார்வை கூர்மையிலும் கட்டுப்பட்ட சதாசிவம் அக் கணமே வேலையை உதறிவிட்டு சாமியிடம் சரணடைந்தார்.
 
கொழும்புத்துறையில் ஆசிரமம்
குரு தீட்சை பெற்று கொழும்புத்துறைக்குச் சென்று, அங்கு ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிறிது காலம் மோன சுகத்தில் திழைத்தார். செல்லப்பா சாமி 1911 இல் சமாதி அடைந்த பின்னர் சாமியின் பக்தர்கள் கொழும்புத்துறையில் சிறு குடில் அமைத்துக் கொடுத்தார்கள். அங்கு சுமார் ஐந்து வருடங்கள் கடும் தியானம் புரிந்தார். ஆனால் யோகருக்கும் குருவைப் போன்று ஊர் சுற்றுவது பிடித்த காரியம். யோகர் கால் படாத தெருவே யாழ்ப்பாணத்தில் இல்லை எனலாம். வேட்டி, சண்டிக்கட்டுஇ தோளில் ஒரு துண்டு இவற்றுடன் எங்கும் நடந்து திரிவார். யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் மற்றைய பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் இவருக்கு பக்தர்கள் இருந்தனர். இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களிலும் மரியாதை இவருக்குக் கிடைக்கப்பெற்றது. டிசம்பர் 1934 இல் சிவதொண்டன் என்ற பெயரில் ஒரு மாதாந்த சஞ்சிகையை ஆரம்பித்து நடாத்தினார். 1940 ஆம் ஆண்டில் யோகசுவாமி தல யாத்திரைக்காக இந்தியா சென்றார். காசி, சிதம்பரம் என்று பல இடங்களுக்கும் சென்றவர் ரமண மகரிஷியை அவரது அருணாச்சல ஆசிரமத்தில் சந்தித்தார்.

சமாதி
மார்ச் 1964 ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் திருவடிக்கலப்புற்றார்.

நான்கு மகாவாக்கியங்கள்
செல்லப்ப தேசிகர் யோகசுவாமிகளுக்குக் ஞானத்தைப் போதிக்கும் வகையில் அருளிய மாணிக்கமணியனைய வார்த்தைகளை யோகசுவாமிகளும் தன் பக்தர்களுக்கும் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார். மேலும் இவற்றை தன்னுடைய நற்சிந்தனையிலும் பரவலாக விரவி வைத்தார். இவற்றை அவரது பக்தர்கள் மகா வாக்கியங்கள் எனப் பின்னாளில் வகைப்படுத்தினர். அவை பின்வருவன

எப்பவோ முடிந்த காரியம்
1. நாம் அறியோம்
2. ஒரு பொல்லாப்பும் இல்லை
3. முழுதும் உண்மை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
செல்லப்பா சுவாமிகள்
chellappa1.jpg
 
செந்தமிழும் சைவநெறியும் வளர்த்த யாழ்ப்பாணத்தின் தலைநகராய் விளங்கியது நல்லூர். நல்லூர்க்கந்தன் இருந்து அருள் பாலிக்கும் இவ்வூரில் நல்லூர் தேரடிக்கு தென்புறத்தே வயல்நிலங்கள் பல இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளர் நல்லூரைச்சேர்ந்த பொன்னம்மா என்பாரை மணந்து இங்கே வேளாண்மை செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பிள்ளைகள். ஆண்களில் ஒருவரின் பெயர் செல்லப்பா.
செல்லப்பா இளமையில் கந்தர்மடத்து சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி கற்றபின்இ யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குச் சென்று ஆங்கிலங் கற்று வந்தார். ஓரளவு கல்வி கற்றபின் உண்டான சூழ்நிலை காரணமாகப் படிப்பை நிறுத்தி உத்தியோகம் பார்க்க வேண்டியவரானார். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆராய்ச்சி உத்தியோகம் பெற்று வெகுதிறமையாகக் கடமையாற்றி அதிகாரிகளின் அபிமானம்பெற்று பலமுறை களஞ்சியப் பொறுப்பதிகாரியாகவும் பதிற்கடமையும் பார்த்து வந்தார்.
செல்லப்பர் தமது உத்தியோகங்களை நேர்மையாகவும் திறமையாகவும் ஒழுங்காகவும் அதிகாரிகள் மெச்சும் வகையில் பார்த்து வந்த காலத்தில், அரசவுத்தியோகம் ஆதிக்கம் செல்வாக்கு முதலிய சிறப்புக்களில் மனங்கொள்ளாது, உள்ளத்தில் ஊற்றெடுத்து வந்த ஒரு வேகத்தின்பால் சென்ற வண்ணம் வாழ்ந்து வந்தார். ஞான நாட்டங் கொண்ட செல்லப்பரின் நடையுடை பாவனைகளில் நாளிலும் பொழுதிலும் மாற்றங்கள் உண்டாயின. அவரின்போக்கு பெரிய புதிராகவே இருந்தது. எவருக்கும் பிடிகொடாமல் தாமும் தம் கடமையுமாக வெளியே நடந்த வண்ணம், தம் அகநாட்டத்தில் கருத்தூன்றிக் கந்தசுவாமியாரும் தாமும் அர்த்த சாமத்தின்பின் அந்தரங்க தொடர்புகொண்டு வந்தார். ‘பிதாவே பிதாவே’ என்று பிதற்றியும் வந்தார்.
உள்ளே ஊறிவந்த ஒருவகை ஞானப்பெருக்கு, வெளியெ வழியத்தொடங்கிய வேளையில் அவரின் போக்கு பித்தர் போலவும், பிசாசு பிடித்தவர் போலவும், குழந்தை போலவும் இருந்தது. தமக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல், ஓமோம் என்று தலையசைத்தல், வலக்கையை மேலே உயர்த்தி விசுக்கி உரத்துப்பேசி, வருவோர் போவோரைத் தம்மை அண்டவிடாது துரத்தி வந்தார். அவர் தமக்கு அண்மையிற் சென்றோரைத் துரத்தத் தொடங்கிய காலத்திலேயே தமது உத்தியோகத்தொடர்பையும் துண்டித்து கொட்டிலின் மூலையில் குந்தியிருக்கத்தொடங்கினார்.
செல்லப்பா சுவாமிகள் வெளியே உலகத் துறவில் விசர்க்கோலமும்இ உள்ளத்திலே ஒடுக்கமும் ஞான நாட்டமும் சிந்தனையுங் கொண்டு, நல்லூரான் திருவருள் வெள்ளத்தில் நாளும் நனைந்து மூழ்கியிருந்த காலத்திலேஇ நல்லூரை வட்டமிட்ட கடையிற் சுவாமிகளின் கடைக்கண் பார்வையும் தீட்சையும் உபதேசமும் கிடைத்தன என்று நம்புதற்கு இடமுண்டு. குருவருள் பெற்ற பேற்றினாலே புறக்கோலம் நீங்காமலே அந்த கரணசுத்தி பெற்றுஇ பசுகரணங்கள் பதிகரணங்களாக மலரப்பெற்றார். முன்னர் மூலையில் முடங்கிக்கிடந்தவர் குருவருட் பிரகாசத்தாலே முச்சந்திக்கு வந்தாற்போலத் தேரடியில் வந்து குந்தியிருந்து யாவருந் தரிசிக்கக் கூடியவராயிருந்தார். தேரடியிற் குந்தியிருந்து சிந்திக்கத் தொடங்கிய காலத்திலே அடியார்கள் பலர் அவரிடம் ஏதோ அற்புத சக்தியுண்டென்று அனுமானித்துஈ அவரைச் சூழ்ந்து மொய்க்கத்தொடங்கினார்கள். அதே வேளையில் அவர் தமக்குள்ளே சிந்தனைப்பேச்சுக்களை முணுமுணுக்கக் கண்ட சிறுவர்கள்இ விசரன் என்று கல்லெறியவுந் தொடங்கினர்.
உள்ளத்தில் எழுந்த துறவு மனப்பான்மையால் உலகத்தை அறவே துறந்த செல்லப்பா சுவாமிகள், வெளயுலகத்தவருக்கு விசரனாகவும், ஆன்ம ஈடேற்றங் கருதிய பெரியவர்களுக்கு ஞானியாகவும் காட்சியளித்தார். அவர் பொது மக்களிடம் வாங்கிய பட்டத்துக்கமைய மேலும் பைத்தியகோலத்தை மிகைப்படுத்தி வந்தார். பகல் முழுதும் விசர்க்கோலம் கொண்டிருக்கும் செல்லப்பா சுவாமிகள், இரவில் அர்த்தசாமப் பூசை நிறைவுற்று எல்லோரும் அகன்ற பின்னர் மெதுவாக நல்லூர் கோபுர வாசற்பக்கம் சென்று முருகனைத்தேடுவார்போல பிதாவே! பிதாவே! என்று கூவியழைத்து, அவருடன் சொல்லெதிர் பெற்றும் பெறாமலும் உரையாடி வந்தார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிவாச் சித்தர்
சிவாச் சித்தர் இலங்கையின் மட்டக்களப்பின் தெற்கே உள்ள காரைதீவு எனும் கிராமத்தில் சமாதியடைந்த சித்தர்களுள் ஒருவராவார். எனினும் தமது பெயருக்கு ஏற்ப இவர் சித்துக்களை பெரிதும் வெளிக்காட்டிக் கொண்டவரல்லர். அமைதியும், சாந்தமும் தவழும் முகத்தினரான சுவாமிகள் மக்களால் சிவாச் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர். கதிர்காம பாதயாத்திரை வந்த வழியில் காரைதீவில் தங்கிக் கொண்ட சுவாமிகள் அங்கேயே தனது அருளாசியை வழங்கி சமாதியும் அடைந்தவர் ஆனார்.இவரது சமாதி ஆலயம் காரைதீவு பொதுமயானத்தை அண்மித்ததாய் பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைந்து காணப்படுகின்றது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முருகேசு சுவாமிகள்
 
 
Murugesu_swami.jpg
 
 
முருகேசு சுவாமிகள் என அழைக்கப்பட்ட சுவாமி ஆர். கே. முருகேசு (ராமன் காளிமுத்து முருகேசு, அக்டோபர் 26, 1933 - செப்டம்பர் 24, 2007) இலங்கையின் இந்து ஆன்மீகவாதிகளில் ஒருவர். காயத்திரிச் சித்தர் என அனைவராலும் போற்றப்பட்ட இவர் இலங்கையின் நுவரெலியா நகரில் வாழ்ந்தவர். நுவரெலியா நகரில் அமைந்துள்ள இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் காயத்திரி பீடம் என்பன இவரால் நிறுவப்பட்டவை.
http://www.uchimurugankovil.com/images/es5.jpg
வாழ்க்கைக் குறிப்பு
முருகேசு சுவாமிகள் 1933ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் நாள் இலங்கையின் மத்திய மாகாணத்தின், கண்டி மாநகரில் இராமன் காளிமுத்து - சந்தனம்மா தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாகப் பிறந்தார். அவர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்ததனால், தமது இளம் பிராயத்திலேயே பல்வேறு கூலி வேலைகளுக்கும் செல்ல நேர்ந்தது. அவ்வாறான ஓர் சந்தர்ப்பத்திலேயே சுவாமிகளுக்கு ஓர் மகாத்மா காட்சியளித்து, கணபதி மந்திரங்கள் அடங்கிய நூல் ஒன்றினையும் வழங்கினார். அன்றுமுதல் சுவாமிகள் தினமும் அந்த மந்திரங்களை செபிக்க ஆரம்பித்தார்.

குரு
சுவாமிகள் பின்னாளில் இந்தியாவிற்கு சென்று பண்டிதர் கண்ணையா யோகி மகரிஷிகளை தமது சற்குருவாக ஏற்று ஆத்மஞானத்தினை பயின்றார். சுவாமிகள் தமது குருவின் கட்டளைப்படி காயத்திரி மந்திரத்தினை கற்றுஇ ஆராய்ந்துஇ அறிந்து பாண்டித்தியம் பெற்றதனால்இ காயத்திரி சித்தர் என அழைக்கப்படலானார். அத்துடன் தமது ஆராய்ச்சியின் முடிவுகளை பல நூல்களில் எழுதியுமுள்ளார்.
ஆன்மீகப் பணி
சுவாமிகள் இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுஇ காடுகள்இ மலைகள்இ குகைகளில் பல சித்தர்கள்இ முனிவர்கள்இ மஹரிஷிகளை கண்டு வணங்கி அவர்களிடமிருந்து பல்வேறு சித்திகளையும் கைவரப் பெற்றார். பின் தன் தாயகம் திரும்பிஇ ஆன்மீகப் பணிகளை தொடர்ந்தார். அவற்றுள் சுவாமிகளால் நிறுவப்பட்ட நுவரெலியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் ஸ்ரீ காயத்திரி பீடம் என்பன முக்கியமானவை. அது மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்கள்இ ஆச்சிரமங்கள்இ காயத்திரி பீடங்கள் என பலவற்றையும் நிறுவியுள்ளார். இவற்றுள் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள சப்தரிஷி மண்டபம் பிரசித்தமானது.
சீடர்கள்
முருகேசு சுவாமிகள் உலகின் பல நாடுகளுக்கு சென்று மக்களுக்கு ஆன்மீக விளிப்புணர்வினை ஏற்படுத்தினார். சுவாமிகள் விட்டுச் சென்ற சேவகளை அவரது சீடரான மட்டக்களப்பு புண்ணியரெத்தினம் சுவாமிகள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.
சமாதி
முருகேசு சுவாமிகள் கடந்த 2007ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அங்கு மருத்துவமனை ஒன்றில், செப்டம்பர் 24இ 2007 அன்று இறந்தார். நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீட வளாகத்திலுள்ள தியான மண்டபத்தில் சுவாமிகளின் ஜீவசமாதி அமைய பெற்றுள்ளது. அங்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நூல்கள்
தமிழில்:
1. ஸ்ரீ காயத்ரி மந்திர மகிமை
2. ஞான குரு
3. மனித காந்தம்
4. எளிய முறை யோகப் பயிற்சி
5. சகல தெய்வ உபாசனா சித்தி
6. காயத்ரி உபாசனா பத்ததி
7. காயத்ரி ராமாயணம்
8. காயத்ரி கீதை
9. காயத்ரி மூலம் குண்டலினி விழிப்பு
10. பிரபஞ்சம் இன்பமயம்
11. மனித உடலில் தெய்வ ஞானம்
ஆங்கிலத்தில்:
  1. The Great Science and Power of Gayathri
  2. Spiritual Tenets of Sri Gayathri Peetam
  3. Cosmo Mystic Meditation
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பரமகுரு சுவாமிகள்
http://www.uchimurugankovil.com/images/es6.jpg 
பரமகுரு சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் நிரஞ்சனானந்தர் என்ற பெயராலும் அறியப்படுகிறார். தமிழ்நாட்டின் பிரபல துறவியாக இருந்த பிரேமானந்தா தன்னுடைய பாட்டியாரின் குருவாக இவரைக் குறிப்பிடுவதோடு ஜ1ஸ தனது பிறப்பு குறித்து பரமகுரு தனது பாட்டிக்கு அக்காலத்திலேயே சொல்லிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் இலங்கையின் நடு மலைநாட்டுப் பகுதியிலுள்ள ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். இளமையிலேயே துறவு மனப்பான்மை கொண்ட இவர்இ சிறுவயது முதலே தனிமையில் நாட்டம் கொண்டவர். மாத்தளையிலிருந்து திருக்கோணமலைக்குச் செல்லும் வீதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூன்றாண்டு காலம் வாழ்ந்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. கோவணமும் பச்சை நிறப்போர்வையும் அணிந்தவராக இவர் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு அடிக்கடிச் சென்று வந்த இவர் இந்தியாவின் கிடாரிப்பட்டி என்ற இடத்தில் சிலகாலம் தவம் செய்துள்ளார் என்பதற்கு சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சுவாமி நிரஞ்சனானந்தர் என்ற பெயரும் இவருக்கு இந்தியாவிலேயே இடப்பட்டது. குழந்தைவேற் சுவாமிகளுக்கு அறிவுரை தருவதற்காக கடையிற் சுவாமிகள் இவரை கீரிமலைக்கு வரப்பண்ணியதாக கூறுவர். குழந்தைவேற் சுவாமிகள்இ பரமகுரு சுவாமிகளுக்கும் கடையிற் சுவாமிகளுக்கும் பணிவிடை செய்துவந்துள்ளார்.
மருதனார்மடம் பகுதியிலுள்ள பனங்காட்டில் இவர் தனியாக வசித்து வந்துள்ளார். அக்காலங்களில் பாசிப்பயற்றினை அவித்துக் கஞ்சியாகக் குடித்து வந்தார் என்று கூறப்படுகிறது. பரமகுரு சுவாமிகளின் பெயரால் காங்கேசன்துறையிலும் கீரிமலையிலும் மடங்கள் கட்டப்பட்டன. சேணிய தெருவில் இருந்த சின்னத்தம்பி என்பவரே இவ்விரு மடங்களையும் கட்டுவித்தவராவார்.
பரமகுரு சுவாமிகளின் சமாதி விழா 1904ம் ஆண்டில் மாத்தளையில் நடைபெற்றது. இவரது சமாதி அமைக்கும் பணிகளை சேர். அருணாசலம் முன்னின்று நிறைவேற்றியிருக்கிறார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுகளுக்கு நன்றி அன்புத்தம்பி ...... அத்தனையும் மதுரம்.......!   🙏

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள்,பிருந்தாவனம் நகர் -பாண்டிச்சேரி சித்தர்கள்.

 
பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் இன்று பார்க்கப்போறது யாழ்ப்பாணம் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள்பாரதியார் யாழ்ப்பாணத்து சித்தரை பற்றி  பாடியுள்ளார். ஆனா,   அவர் பாடியது ஸ்ரீகதிர்வேல் சுவாமிகளை பற்றின்னு உறுதியா சொல்ல முடியலை.  அது நிஜமான்னு கூகுளில் தேடினால் இன்னும் சில யாழ்ப்பாணத்து சித்தர்கள் பற்றி படிக்க முடிஞ்சது.  அவர்களை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்... 
 
1505235_746410272107323_8799813209362435785_n.jpg
போனவராம் நாம சற்குரு மகான் ஸ்ரீகணபதிசுவாமிகள் ஜீவசமாதியினை தரிசனம் செய்தோம். இந்தவாரம் நாம பார்க்கபோறது யாழ்ப்பாணம் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள் ஜீவ சமாதியினை..  நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு கொஞ்ச நாள் வரை சித்தர்கள்ன்ற வார்த்தையே புதுசு. சித்தர்கள் யார்ன்னு கேட்டால், அந்த காலத்து மருத்துவர்கள், அவர்கள் உருவாக்குனதுதான் சித்த வைத்தியம்ன்னு சொல்வாங்க. ஆன்மீகத்துல ஈடுபாடும், இலக்கியங்களை படிக்கும் ஆர்வமும் இருக்கும் சிலருக்கு பாம்பாட்டி சித்தர், போகன், காகபுஜண்டர்ன்னு சிலரை தெரியும். இணையமும், மக்களிடையே பணப்புழக்கமும் அதிகரித்து, உலகம் சுருங்கி வீட்டுக்குள் வந்தப்பிறகு, நிறைய பேருக்கு சித்தர்களை பற்றி தெரிய வந்தது.  விருப்பமுள்ளவர்கள் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தனர்.  அப்படி படிக்க ஆரம்பித்தவர்களுக்கு பதினெண் சித்தர்களையும்,   108-சித்தர்களையும் தெரிய வந்தது.  இவர்கள் எல்லோருமே காலத்தால் மிகவும் முந்தியவர்கள். 1800-களில் வாழ்ந்த பாண்டிச்சேரி சித்தர்களின் வரலாறுகூட செவிவழியாக சொல்லித்தான் நமக்கு தெரியவருகிறது. இதேப்போல் ஈழத்து சித்தர்கள் பரம்பரை என ஒன்று இருந்திருக்கிறது. அவர்களும் காலத்தில் பிந்தியவர்கள் மற்றும் இந்தியாவில் இருக்கிற அளவு சித்தர் வழிபாடு ஈழத்தில் அவ்வளவாக இல்லாமல் போனதால் அவர்களை பற்றிய குறிப்புகளும் பெரிய அளவில் கிடைக்காமல் போவிட்டன. ஸ்ரீலங்காவை எடுத்துக்கொண்டால் அந்த தேசத்தின் நான்கு  திசைகளிலும், நான்கு பெரும் சித்த சமாதிக் கோவில்கள் இருக்கு.
 
10849797_746410332107317_8089309924228332345_n.jpg
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கடையிட் சுவாமிகள் ஜீவசமாதிகிழக்கே காரை தீவில் சித்தனைக் குட்டி சுவாமிகள் ஜீவசமாதி, மேற்கே கொழும்பு முகத்துவாரத்தில் பெரியானைக் குட்டி சுவாமிகளின் ஜீவசமாதிதெற்கே நாவலப்பிட்டியில் நவநாத சித்தர் சமாதியும் இருக்கிறது அதேபோல் ஈழத்து சித்த மரபியலில் ஈழத்து பதினெண் சித்தர்கள் வரிசையில்
 
1)கடையிற்சுவாமிகள்.
2)பரம குரு சுவாமிகள்
3)குழந்தை வேற் சுவாமிகள்.
4)அருளம்பல சுவாமிகள்.
5)யோகர் சுவாமிகள்
6)நவநாத சுவாமிகள்
7)பெரியானைக் குட்டி சுவாமிகள்
😎சித்தானைக் குட்டி சுவாமிகள்
9)சடைவரத சுவாமிகள்
10)ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள்
11)செல்லாச்சி அம்மையார்
12)தாளையான் சுவாமிகள்
13)மகாதேவ சுவாமிகள்
14)சடையம்மா
15)நாகநாத சித்தர்
16)நயினாதீவு சுவாமிகள்
17)பேப்பர் சுவாமிகள்
18)செல்லப்பா சுவாமிகள்.
இப்படி ஈழத்து பதினெண் சித்தர்கள் வரிசை செல்கின்றது...
yal01.jpg
எதுக்கு திடீர்ன்னு இலங்கை பத்தி இத்தனை விவரம்ன்னா, இன்னிக்கு நாம பார்க்கப்போகும் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள்   யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். நிறைய சித்தர்களைப்போல் இவருக்கும் தாய் தந்தை யார்?பிறந்த வருடம் எதுவென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த கதிர்வேல் சுவாமிகள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆன்மீக யாத்திரை வந்தவர்ன்னு மட்டும் தெரியுது. ஆன்மீக யாத்திரையாக வந்த இடத்தில் வடலூரில் வள்ளலாரை சந்தித்தார்வள்ளலாரின் தெய்வீக ஆற்றாலால் கவரப்பட்ட கதிர்வேல் சுவாமிகள். தமிழகத்திலேயே தங்கி தன்னுடைய ஆத்ம பயணத்தை தொடங்க எண்ணினார். அப்படி அவர் தமிழகத்தில் தன்னுடைய ஆத்மவேள்விக்கு இடம் தேடினார். அப்பொழுதான் அவருக்கு இந்த புதுவையை பற்றி தெரிய வந்தது. பல ஞானிகளையும் தன்னகத்தே ஈர்க்கும் சக்தி படைத்த புதுச்சேரிகதிர்வேல் சுவாமிகளையும் தன்னகத்தே ஈர்த்தது. இவர் வாழ்ந்த காலகட்டத்தில் மாபெரும் துறவியர் கூட்டம் புதுவையிலும் புதுவையை சுற்றியுள்ள ஊர்களிலும் தங்கி இருந்து ஆத்ம சாதனைகளை செய்துவருவதை கண்டார். இதனால் கதிர்வேல் சுவாமிகள், தான் தங்க இந்த புதுவைதான் சரியான இடம் என முடிவெடுத்து புதுவையில் உள்ள  சித்தன்குடின்ற ஊரை தேர்ந்தெடுத்து அங்கேயே தங்கி விட்டார்.
 
yal1.jpg
இவர் இருக்கும் இடத்தில யாரவது பசியோடு இருந்தால் இவர் பொறுத்துக்கொள்ள மாட்டாராம். எங்கிருந்தாவது அவர்களுக்கு உணவு வழங்கிவிடுவாராம். ஏழ்மையில் வாடியவர்களை கண்டால் அவர்களுக்கு பொருளுதவி செய்வாராம். சிலசமயம் வறுமையில் வாடுபவர்களுக்கு தேங்காயை உடைத்து அதன் ஓடுகளை நாணயமாக மாற்றி அவைகளை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுவாராம். இரக்ககுணமும் சித்து விளையாட்டுகளும் இவரை ஒரு பெரிய மாகானாக அந்த ஊர் மக்கள் போற்றும்படி ஆக்கியது. நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்தீராத வியாதிகளினால் அவைதிப்படுவோருக்கும்இவர் வைத்திருந்த பச்சிலைகள் மூலம் குணப்படுத்திவிடுவாராம். இவரது  அற்புதம் என்றவென்றால்தன்னிடம் இருந்த பச்சிலயை கொண்டு ஒருவருடைய தொழுநோயை குணப்படுத்தி இருக்கிறார். மக்களுக்கு வரும் எல்லா வியாதிகளையும் போக்கும் அற்புத மருத்துவராக அந்த இடத்தில் வாழ்ந்திருக்கிறார். கதிர்வேல் சுவாமிகள். பசியெடுக்கும்போது முத்தியால்பேட் வருவாராம். அங்க இருக்கும் ஒரு மூதாட்டியிடம் ஒரு கிழங்கை கொடுத்து அதைப்பக்குவமாக சுட்டுத்தர சொல்லுவாராம். அந்த மூதாட்டியும் பக்குவமாக நெருப்பில் சுட்டு கொடுக்கும் அந்த கிழங்கைமூன்று அல்லது நான்கு நாட்கள் வரை உணவாக வைத்துக்கொள்வாராம்.
 
yal2.jpg
கதிர்வேல் சுவாமிகள் 25-05-1837-ம் ஆண்டு வைகாசி மாதம் 15-ம் நாள் ஜீவ சமாதியான குரு சித்தாந்த சுவாமிகள் பீடத்திற்கு வந்துஅங்கு ஆத்மதவத்தில் ஈடுபட்டார். பலநாள் செய்த கடுமையான தவத்தினால் ஞானம் கைவரப்பெற்றார். அந்த சமயத்தில் புதுவைக்கு விஜயம் செய்த வள்ளலாரை சந்தித்து ஆசிப்பெற்றார். அதுவரை கதிவேல் சுவாமிகள் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசுவாராம். வள்ளலாரை தரிசித்தபின் பேசுவதை அறவே விட்டுவிட்டார். எப்பொழுதும் மௌனமாகவே இருப்பாராம். இவர் சாலையில் செல்லும்போதுபின்னோக்கித்தான் நடந்து செல்வாராம். இவர் வருவதை பார்த்தால் அந்தப்பாதையில் செல்லும் பொதுமக்கள் இவருக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்வார்களாம். ஏன் பிரெஞ்ச் போலீஸார்கூட இவரை பார்த்ததும் தொப்பியை கழட்டி சல்யூட் அடித்து செல்வார்களாம். சுவாமிகளின் அளவற்ற ஆற்றலை கண்ட பொதுமக்கள் இவரிடம் ஆசிகள் பெற்று செல்வார்களாம். அவரைச்சுற்றி இருந்தவர்கள் மனநிம்மதியுடன் எந்தவித பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்துவந்தனர். இப்படியே நாட்கள் சென்றன. கதிவேல் சுவாமிகள் தான் இறைவனுடன் இரண்டற கலக்கும் நாள் வந்துவிட்டதை தனது ஞானத்தால் அறிந்துகொண்டார். உடனே சித்தன் குடிசையிலே உள்ள மாந்தோப்பின் நடுவே தனக்காக அறுகோண வடிவில் ஒரு மண்டபம் அமைத்து அதன் நடுவே தன்னுடைய உருவச்சிலையை மரத்தால் அமைத்து அதை தன்னுடைய நினைவிடமாக அமைக்கவேண்டும் என்று தனது பக்தர்களிடம் கூறினார்.
 
yal3.jpg
அவர் சொன்ன அந்த நாளும் வந்தது 01-02-1904 ம் ஆண்டு தை  மாதம் 19ம் நாள்திங்கட்கிழமை பூச நட்சத்திரம், பௌர்ணமி திதி அன்று பரம்பொருளுடன்  இரண்டற கலந்துவிட்டார். அவர் ஜீவசமாதியான தை மாதம் பௌர்ணமி தினம் ஒவ்வொரு வருடமும் அவரது குருபூஜையாக இன்றும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருது. இந்த சுவாமிகள்மீது பாரதியார் அளவற்ற பாடல்களை பாடியுள்ளார்ன்னு  சொல்றாங்க. ஆனால் இன்றளவும் புரியாத புதிராக உள்ளது பாரதியார் சந்தித்த யாழ்பாணத்து சுவாமிகள் இவர்தானா?! என்பது தான். ஏன்னா 1961ம் ஆண்டு திரு.கந்தசாமி என்பவர் ஸ்ரீலங்கா ஆகஸ்ட் இதழில் ஞானம் வளர்த்த புதுவைஎனும் கட்டுரையில் பாரதி கூறும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் யார்? என்னும் கேள்வியினை எழுப்பிவிட்டு சென்றாரே தவிர அவர் யார் என்று சொல்லவும் இல்லை அதற்கு தகுந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. இதற்கு பிறகு 1962-ம் ஆண்டு யாழ்ப்பாணத்து சுவாமிகளது அன்பரான திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் ஸ்ரீலங்கா 04.1962ல் எழுதிய கட்டுரையில் யாழப்பாணத்து சுவாமிகள்தான்  அருளம்பல சுவாமிகள் எனக் கூறியிருந்தார். அதைத்தவிர 07.05.1963 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அருளம்பல சுவாமிகளே பாரதியாரால் போற்றப்பட்ட யாழ்ப்பாணத்துச் சுவாமிஎன அங்கு நடந்த விழாவில் அருளம்பல சுவாமிகளின் சமாதிகோவிலின் அருகில் பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நினைவாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவியது எனும் வாசகம் பொறித்த நடுகல் நாட்டினர். 
 
 
yal4.jpg
இந்த விழாவினை முன்னிட்டு அன்றைய தினகரன் பத்திரிகையில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரின் கட்டுரைகளும், யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் புதுவையில் வெளியிட்ட காற்றை நிறுத்தக் காணுவன் விடையைஎனும் துண்டுப்பிரசுரமும் வெளியிட்டனர். தினகரன் என்றால் நம்மூர் பத்திரிக்கைன்னு நினைச்சுராதீங்க தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியானது. இந்தபத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன்,    எஸ். ஈஸ்வர ஐயர்,எஸ். கிருஷ்ண ஐயர், ஆர். எஸ். தங்கையா, வீ.கே.பீ.நாதன்,   பேராசிரியர் க.கைலாசபதி,ஆர்.வகுருநாதன்  ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.இவர்கள் எல்லாம் பாரதியை சம்பந்த படுத்தி துண்டுபிரசுரம் வெளியிட்டனரே தவிர எந்த ஆதாரத்தையும் மேற்கோள் காட்டவில்லை.
yal7.jpg
இந்த சந்தேகத்தை தீர்க்க ,லென்ஸ் எடுத்திட்டு கூகுள்  மேப்பின் துணையுடன் அருளம்பல சுவாமிகள் ஜீவசமாதியை தேடி  சென்றோம். அருளம்பல சுவாமிகள் வேலுப்பிள்ளை, இலட்சுமி அம்மாள் ஆகியோரின் புதல்வராவார். இவர் இலங்கையிலே யாழ்ப்பாணத்திலுள்ள வியாபாரிமூலை என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரே பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் என செல்லப்படுகிறார் என்று அங்கு செவிவழியாக சொல்லப்படுகின்றன. சுவாமிகளின் பிறந்த தினம் இதுதான் என திட்டவட்டமாக சுட்டிக்காட்டக் கூடிய சான்றுகள் இல்லாவிடினும் வியாபாரிமூலையிலுள்ள மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையில் கிடைக்கப்பெற்ற அக்காலத்து ரெஜிஸ்டர்படியும், சுவாமிகளது கையெழுத்துப் பிரதியின்படியும் சுவாமிகள் ஏறத்தாழ 07.05.1880ல் பிறந்ததாக கொள்ள முடிகின்றது. (தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார்).
 
yal6.jpg
 
வீட்டு சூழ்நிலை காரணமாக இளம் பருவத்திலிருந்தே பாட்டியார் காளியம்மையின் ஆதரவில் வியாபாரிமூலையிலேயே வளர்ந்தார். இவர் 23.10.1894 வரை மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்றார். சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இளமையிலே விவசாயம் செய்த சுவாமிகள் பின்பு திரு.த.பரமுப்பிள்ளை அவர்களின் கம்பளைக்கடையில் அவருக்கு உதவியாளராக இருந்தார். பின்பு மட்டக்களப்பில் வியாபாரம் செய்து நட்மடைந்தார். திருவருள் கூடவே நிஷ்டை கற்க சிதம்பரம் சென்றவர் நாகபட்டணத்து நாகை நீலலோசனி அம்பாள் ஆலயத்தில் தங்கினார். நீலலோசனி அம்பாளின் தரிசனப்பிரகாரம் அம்பாள் முன்பாக நான்கு ஆண்டுகள் நிஷ்டையில் இருந்தார். நிஷ்டை கைகூடியதனால் சித்தரானார்.
 
yal8.jpg
 
சுவாமிகள் நாகையில் நாகப்பட்டணம் சுவாமி, நாகை மௌன சுவாமி, மௌனகுரு, யாழ்ப்பாணத்துச் சுவாமி, பூந்தோட்டத்து ஐயா எனப்பலராலும் அழைக்கப்பட்டார். இவர் தலயாத்திரையின் பொருட்டு வேதாரண்யம்அகத்தியாம்பள்ளி, மாயவரம்பாண்டிச்சேரி(புதுவை) ஆகிய இடங்களுக்குச் சென்றார். புதுவையில் சிறிதுகாலம்  தங்கினார். அதேசமயம் 1908 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டுவரை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் புதுவையில் வாசஞ்செய்தார். குவளைக்கண்ணன் சுவாமிகளுடனும் நட்பு பூண்டிருந்தார். புதுவையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகளை குவளைக்கண்ணன் சுவாமிகள் பாரதியாரிடம் அழைத்துச் சென்றார். பாரதியார் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் மௌன நிலையில் ஈர்க்கப்பட்டார். பாரதியார் 1918-ம் ஆண்டு புதுவைவிட்டு நீங்கி மனைவியின் ஊரான கடையத்திற்குச் சென்றார்.  1921-ம் ஆண்டு செப்ரம்பர் 12 இல் பாரதியார் அமரத்துவம் எய்தினார்.
 
yal10.jpg
 
இங்க கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா கதிர்வேல் சுவாமிகள் 1904 -ம் வருடமே  அதாவது பாரதியார் புதுவைக்கு வருவதற்கு முன்னாடியே ஜீவ சமாதியாகிவிட்டார். அதனால பாரதியார் சந்திச்ச யாழ்ப்பாணம் சுவாமிகள் அருளம்பல சுவாமிகளாகவே இருக்கணும். உண்மை என்னன்னு அந்த பாரதியாருக்கும் சித்தருக்கும் மட்டுமே வெளிச்சம். இந்த யாழ்பாணத்து சுவாமிகளான அருளம்பல சுவாமிகள் பத்தி நாம விரிவாக ஒரு பதிவில் பார்க்கலாம். பராதியார் இவரை பற்றி பாடிய அநேக பாடல்களில்
யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்
கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீஙள் பாயும்
கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.40
 
தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்;
தோழரே!எந்நாளும் எனக்குப் பார்மேல்
மக்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரெனன் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி. 41
 
என்று சில வரிகள் வருகின்றன.பாரதியார் பாடிய யாழ்ப்பாணத்து சித்தர் கதிர்வேல் சுவாமிகளா இல்ல அருளம்பலசுவாமிகளா?! யார்ன்னு  இப்பாடல்களை எழுதிய பாரதியாருக்கும், கடவுளுக்குமே வெளிச்சம்.http://rajiyinkanavugal.blogspot.com/2020/04/blog-post_17.html
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்புறம்பியம் யாழ்ப்பாண ஆறுமுகசுவாமி சித்தர்

 

3300.jpg

 

யாழ்ப்பாணம் ஆறுமுகசுவாமிகள் மதுரை திருஞான சம்பந்தர் திருமடம் ஆதீனத்தில் சந்நியாசம் ஏற்றார்கள், பிறகு சில காலம் கழித்து சுவாமிகள் கும்பகோணம் வந்து, அறுபத்து மூவர் குருபூஜை திருமடம் ஸ்தாபித்தார்கள். இம்மடத்தில் 63 நாயன்மார்களின் படங்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுடன் படங்களாக வரையப்பட்டிருந்தன.

பிறகு , யாழ்ப்பாணம் சுவாமிகள் மதுரை ஆதீனத்திற்குப்பட்ட ஸ்ரீ சாட்சிநாதர் ஆலயம் இருக்கும் திருப்புறம்பயம் கிராமத்திற்குச் சென்றார்கள். அங்கு மடம் அமைத்து அடியார்களை பேணி பணியாற்றினார்கள். அப்பகுதியில் அருளாளராக விளங்கிய தமது திருமடத்திலேயே ஜீவ சமாதி அடைந்துள்ளார்கள்.

ஜீவ சமாதி சமாதி மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கிழக்குப் பார்த்த சந்நதி அதற்கு எதிரில் அவருடைய சீடர்கள் மூவரின் ஜீவசமாதி உள்ளது.

இவர்கள் வழியில் அவரது சீடரான பிரகாசம் சுவாமிகள் தற்போது சுவாமிமலையில் அருளாசி வழங்கி வருகிறார்கள்.
2012-ல் மாலை பூஜையில் நாகஜோதி ரூபமாக காட்சி கொடுத்தார்கள். 2014-ல் வியாழக்கிழமை பிரதோஷ நாளில் யாழ்ப்பாண ஆறுமுக சுவாமி ஜீவசமாதி சிவலிங்க திருமேனியின் மீது நாகராஜா தன் சட்டையை உரித்து மாலையாக அணிவித்து அன்று இரவு வரை பக்தகோடிகளுக்கு அங்கேயே காட்சி கொடுத்தார்.

சிறப்புக்கள் :

இத்தலம் வந்து வேண்டுபவர்க்கு கர்ம வினைகளும், பாப வினைகளும் நீங்குகிறது.

மேலும் பிரிந்து வாழும் தம்பதியர் இணைவர். திருமண பாக்யம், குழந்தை பாக்யம் ஆகியவை கிட்டுகிறது.

போன்:  -

-
அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மி. தொலைவிலுள்ள இன்னம்பர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் ஸ்தலம் உள்ளது. திருப்புறம்பயம் மடம் இருக்கும் தெருவிற்கு யாழ்ப்பாணம் சாமி மடம் சந்து என்றே விளங்குகிறது.

https://easanaithedi.in/arumugaswamy.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை வரம் கொடுக்கும் நவநாத சித்தர்

 
 
 
கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய  ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
அதனால்தான், கோவில்கோவிலாக செல்பவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களுக்கு தரிசனம் செய்கிறார்கள்.
இந்தியாவில்  மட்டுமல்ல இலங்கையிலும் சித்தர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது பலர் அறியாத உண்மை.

ஈழத்தின் நான்கு திசைகளிலும், நான்கு பெரும் சித்த சமாதிக் கோவில்கள் இருக்கின்றன. வடக்கே யாழ்ப்பாணத்தில் கடையிற் சுவாமிகள் சமாதியும், கிழக்கே காரைதீவில் சித்தானைக் குட்டி சுவாமிகள் சமாதியும், மேற்கே கொழும்பு முகத்துவாரத்தில் பெரியானைக் குட்டி சுவாமிகளின் சமாதியும், தெற்கே நாவலப்பிட்டியில் நவநாத சித்தர் சமாதியும் விளங்குகின்றன.
நாவலப்பிட்டி நகரில் இருந்து 19 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் தான் குயின்ஸ் பெரி. இங்கு தான் நவநாத சித்தர் ஆலயம் அமைந்துள்ளது.
ஒரே நேரத்தில் ஒன்பது இடத்தில் இருக்கும் வல்லமைக் கொண்ட நவநாத சித்தரின் இலங்கை வருகை முற்றிலும் சுவாரஸ்யமானது. நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்ட பெரியக் கங்காணி இந்தியாவில் இருந்து வருகை தந்தவர். அவரும் அவர் மனைவியும் இந்தியாவில் இருந்து இலங்கை வரும் போது நவநாத சித்தர் கங்காணியின் மனைவியிடம் எங்கே செல்கிறீர்கள் என வினவியுள்ளார், தாங்கள் இலங்கைக்கு செல்வதாக அவர் கூறியதும் தானும் அவர்களுடன் வர புறப்பட்டாராம் நவநாத சித்தர்.
ஆனால் கங்காணியின் மனைவி தாங்கள் மலைநாட்டுக்கு செல்வதாகவும் அதிக குளிர், மழை நிறைந்த இடம் என்று கூறி
நீங்கள் அங்கு வந்து காலநிலையை சமாளிக்க மாட்டீர்கள் என அவரை அங்கேயே விட்டுவிட்டு வந்து
விட்டார்கள்.  ஆனால் அவர்கள் தலைமன்னார் வந்தடைந்த
வேளையில் நவநாத சித்தரும் தலைமன்னாரை வந்திருப்பதை பார்த்து வியந்து போயுள்ளனர் கங்காணி குடும்பத்தார்.
இவர்களுடன் குயின்ஸ்பெரி தோட்டத்தை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார் நவநாத சித்தர். அங்கே சென்று வனாந்தரத்தில் கற்குகை ஒன்றில் தங்கியிருந்து தவம் செய்தார். அவர் தங்கியிருந்த குகை அருகே
தேயிலை மலைக்கு
வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களின் குழந்தைகளை விளையாட விட்டு செல்வது வழக்கமாம். அப்படி குழந்தைகளை விட்டுச் சென்றபோது அதில் ஒரு குழந்தை அவரை பார்த்து வரைந்ததாகவும் அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். இன்றுவரை அந்த நிழற்படம் இவ் ஆலயத்தில் இருப்பதுடன் நவநாத சித்தர் இப்படித்தான் இருந்திருப்பார் என்பதையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள உதவியாகவும் உள்ளதாக சொல்கிறார்கள்.
நவநாத சித்தருக்கு குயின்ஸ்பெரி தோட்டத்தார் உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
இப்படி உணவு வழங்கும் போது ஒரு முறை தோட்ட கங்காணி ஒருவரின் வீட்டில் மாமிசம் சமைத்தமையால் அவருக்கு சைவ உணவு வழங்கவேண்டும் என்பதற்காக கோவா கீரையுடன் சாதம் கொடுத்துள்ளனர் உண்ணும் உணவில் கை வைத்ததுமே சித்தர்
வேறொன்றும் இல்லையா என கேட்க வீட்டுக்காரர்கள் இல்லை
சித்தரே நீங்கள் சைவம் என்பதால் தான் இவ்வாறு உணவு வழங்கினோம் எனக் கூறி மாமிசத்தை எடுக்க சமையலறைக்கு சென்றதும் அந்த இடத்தில் இருந்து சித்தர் கிளம்பிவிட்டாராம். அவர் கை வைத்த அன்னம் நீண்டகாலம் பாதுகாக்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
வருடாந்தம் மார்கழி மாதம் வரும் திருவாதிரையன்று சித்தர் சமாதி
அடைந்த தினத்தில் விசேட பூஜை இடம்பெறுவதோடு தை மாதத்தில் வனபோசன நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த வனபோசன நிகழ்வு மிகப் பிரசித்தமானது. வழிபாடு செய்து இந்த வனபோசனத்தில் கொடுக்கப்படும். உணவை உண்டால் குழந்தைப்பாக்கியம் கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கை,
பலர் குழந்தைப்பேறு இன்றி நவநாதசித்தரை தரிசித்தமையால் அவரின் அனுக்கிரகத்தால் குழந்தைப்பேறு பெற்றுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
நவநாத சித்தர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு லிங்கம் தானாகவே தோன்றியதாகவும் அந்த லிங்கம் இன்றுவரை வளர்ந்து வருவதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.http://siththarkalsom.blogspot.com/2018/10/blog-post_77.html
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சடைவரத சுவாமிகள்

 

சுவாமிகள் அச்சுவேலியைப் பிறப்பிடாகக் கொண்டவர்கள். அச்சுவேலியிலே சலவைத்தொழிலாளர் வம்சத்திலே சுப்பையா என்றொரு உத்தமர் இருந்தார். நல்ல கடவுட் பக்தர். அடியார் பக்தியிலும் சிறந்து விளங்கியவர். இவருக்கு ஒரு உத்தம புத்திரன், சரவணை எனப்பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார். சரவணை இளமையிலேயே வசீகரமான தோற்றம் உடையவர்.

சரவணையின் வசீகரத்தோற்றம் நீராவியடியைச்சேர்ந்த வேளான் வகுப்பு அம்மையார் ஒருவருடைய மனதைக்கவர்ந்தது. சரவணைக் குழந்தையை வளர்க்க ஆசை கொண்டார். சுப்பையாவிடம் தன் கருத்தை அம்மையார் தெரிவித்தார். தனது மகன் ஒரு செல்வந்தர் வீட்டில் வாழ்வதை சுப்பையாவும் விரும்பினார். அதனால் சரவணைக்கு எக்குறையும் தெரியாது வாழும் வாழ்க்கை வசதி இறையருளால் கிட்டியது. இந்தச் சரவணைக் குழந்தை வளர்ந்து வரும் வீட்டிற்கு அயலிலேதான் கடையிற் சாமியாரின் சிஷ்யர் ஒருவருடைய வீடு இருந்தது. ஒருமுறை கடையிற் சுவாமிகள் அவ்வீட்டிற்கு வந்தபோது ஒன்பது தினங்கள் சுகவீனமாகப் படுக்கையிலே இருக்க நேர்ந்தது. அப்போ சரவணை எட்டுவயதுப் பாலகனாக இருந்தார். கடையிற் சுவாமியார் மீது அவ்வூர்க் குழந்தைகளுக்கெல்லாம் ஒரு தனிப்பிரியம். சுவாமிகளுக்கும் குழந்தைகள் மீது ஒரு அலாதியான வேட்கை. சுவாமிகள் சுகவீனமாக படுத்திருக்கின்றார் என்பதைக்கேள்வியுற்ற குழந்தைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சுவாமிகளைத் தரிசிக்க சென்றார்கள். அக்கூட்டத்திலே சரவணையும் சென்றார். சுகவீனமாகப் படுத்திருந்த சுவாமிகளை நெருங்கக் குழந்தைகள் அஞ்சினார்கள். ஆனால் சரவணை மட்டும் மலர்ந்த முகத்தோடு சுவாமிகளை அணுகி தொட்டுப்பார்த்தார். உடனே சுவாமிகள் படுக்கையை விட்டு எழுந்து அனந்தக் கூத்தாடி அவரைத் தனியாக அழைத்துச்சென்று கட்டிப்பிடித்துக் கொஞ்சித் தமது தலையிற் கிடந்த தொப்பியொன்றைக் கழற்றி சரவiணியன் தலையில் சூட்டி மகிழ்ந்தார்கள்.

வேளான் அம்மையாருக்கு குழந்தைமேல் அன்பிருந்தாலும் சாதி அபிமானம் முற்றாக அவரைவிட்டு நீங்கியதாகத் தெரியவில்லை. இது பழக்கதோஷம். அவ்வம்மையார் தான் திண்ணையிலும் சரவணையை வீட்டு நடையிலும் படுக்க விடுவது வழக்கம். ஒருநாள் அம்மையார் ஒரு கனவு கண்டார். ஒரு சந்நியாசியார் வந்து, நீ இச்சரவணையை யாரென்று நினைத்தாய்? இவன் எனது அடியவனல்லவா? இவன் பண்டாரப்பிள்ளை எனச் சொல்லி மறைந்தார். அன்று தொடக்கம் அம்மையார் சரவணையை தனக்குப் பக்கத்தில் திண்ணையில் படுக்க விடுவது வழக்கம். அன்று தொடக்கம் சரவணக் குழந்தை அம்மையாருக்கு சோதிசொரூபமாகவே காட்சி தந்தார்.

தீவுப்பகுதியை சேர்ந்தவர் முருகேசுச்சாமியார். அவர் நீண்டகாலம் கொடிகாமத்தை இருப்பிடமாக கொண்டவர். இவருக்கு ஒரு சிஷ்யை இருந்தார். அவரின் பெயர் பொன்னம்மாள் என்பது. இச்சரவணையும் பிற்காலத்தில் முருகேசு சுவாமியுடனேயே வெகுகாலம் இருந்து அவரிடம் உபதேசம் பெற்றவர். எல்லோருக்கும் குரு ஒருவர் அத்தியாவசியமானவர். குருவின் கருணையில்லாவிட்டால் யாருக்கும் முக்தியில்லை.

முருகேசு சாமியிடம் சரவணை உபதேசம் பெற்றதும், சடைவரதர் என்ற தீட்சாநாமம் சரவணைக்கு கிடைத்ததது. ஊரிலுள்ளவர்கள் சரவணை சாமி என்று அழைத்தார்களே தவிர சடைவரதர் என்ற பெயர் அவர்களுடைய வாயினுள்ளே நுழையவில்லை.

சுவாமிகள் யுவவருடம் ஆடிமாசத்து உத்தர நட்சத்திரத்திலே மகாசமாதி அடைந்தார். ‘எல்லாந் திருவருட் செயல்’ என்ற கொள்கையே எக்காலமும் எக்காரியத்திலும் எப்பொழுதும் எல்லோரும் கடைப்பிடித்தொழுகி அருளால் அனைத்தையும் பார்க்கும் அனுபவத்தை அடைந்துய்ய வேண்டும் என்பதே சுவாமிகளுடைய முக்கிய குறிக்கோளாகும். அகத்துறவையும், தன்னையறிந்து தலைவன்மேல் பற்றுதலையுமே அவர் பெரிதும் போற்றி புகட்டினார்.

அந்தக் காலத்திலே பல கோயில்களில் ஆடு கோழிகளை பலியிடுதல் ஒரு மரபாக இருந்து வந்தது. அவற்றுள் கச்சேரியடியில் இருந்த கோயிலும் ஒன்றாகும். சுவாமிகளுடைய பெருமுயற்சியினால் அக்கோயிலில் பலிநிறுத்தம் ஏற்பட்டதோடு வேறும் பல கோயில்களின் பலிநிறுத்தத்திற்கும் இச்செய்தி காரணமாக இருந்தது.

பூமாரி என்ற பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். அவர் சுவாமிகளை பற்றியும் அவர்களின் சீடர்களை பற்றியும் சடைவரத சுவாமிகளின் திருவடியார் திருநாமாவளி என்ற தலையங்கத்துடன் ‘அம்பலத்தரசே’ என்ற மெட்டில் பாடல் ஒன்று எழுதியிருந்தார்.https://www.thejaffna.com/eminence/சடைவரத-சுவாமிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

150px-12820.JPG

ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள்,பற்றிய மேலதிக விபரங்கள் எனது கண்ணுக்கு தென்படவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

960.JPG

 

https://noolaham.org/wiki/index.php/தாளையான்_சுவாமி

 

தாளையான் சுவாமி (4.45 MB) (PDF வடிவம்)

தாளையான் சுவாமிகள்,பற்றிய மேலதிக விபரங்கள் இந்த இணைய பக்கத்தில் சிறிதளவு காணப்படுகின்றது,,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தவத்திரு மகாதேவ சுவாமிகள்

ஈழத்தில் தமிழும், சைவமும் தழைத்தோங்க ஆன்மீகக் குருபரம்பரையொன்று தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கிறது. சான்றோர்கள் காலத்துக்குக் காலம் அவதரித்து தமிழ்ப்பணியும், சைவப் பணியும் புரிந்து வந்தமையால் சமய அறிவும், தமிழ் அறிவும் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. அவ்வழியில் வந்தவர்களுள் ஒருவர் ஊர்காவற்றுறை கரம்பொன் ஊரில் அவதரித்த தவத்திரு மகாதேவா சுவாமிகள் ஆவார்.

 

பலதரப்பட்ட அறிஞர் பெருமக்களை நல்கிய கரம்பொன் கிராமம் வேதாந்த வித்தகராக, சித்தாந்திகளுக்கும் விளக்கங் கொடுத்துத் தமது வேதாந்தக்கூட்டுக்கள் அணைத்த சமரச ஞானியாக, ஞானத் தாகங் கொண்டவர்களுக்கு அவர்கள் தாகம் தீர்த்த அன்புடை ஆசானாக, அறிவுத் தாகம் கொண்டவர்களுக்கு பயன் தரவல்ல பள்ளிக்கூடங்களை நிறுவிய நிறுவராக, ஆன்ம ஈடேற்றத்துக்கு வழிகாட்டும் ஆன்மீக குருவாக விளங்கிய ஆன்மீக வள்ளல் ஒருவரையும் வழங்கியதால் கரம்பன் மேலும் சிறப்படைகிறது. மகாதேவா சுவாமிகள் பிறந்த மண்ணில் பிறந்தது தாம் செய்த மாதவம் என மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

கரம்பன் ஊரைச் சேர்ந்த நாராயணப்பிள்ளை இராமநாதன் அன்னபூரணி தம்பதிகளுக்கு மூத்த புதல்வராக 05.09.1874 ஞாயிற்றுகிழமையன்று அடிகளார் அவதரித்தார்கள். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் வைத்திலிங்கம் என்பதாகும். தம்பையா என்றும் அழைக்கப்பட்டார். இவர் இளமைக் காலத்தில் தெய்வபக்தி மிகுந்தவராகவும், கல்வியில் ஆர்வம் உள்ளவராகவும் திகழ்ந்தார். அக்காலத்தில் கரம்பனில் சைவப் பாடசாலை எதுவும் இருக்கவில்லையாதலால், இவர் சண்முகநாதன் வித்தியாசாலை தற்பொழுது அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் அமைந்திருந்த பாதிரிமார் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்தார்கள். பின்னர் ஆங்கிலக் கல்வி கற்பதற்காக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பயின்று கொண்டிருந்தபோது சைவநெறியைச் சேர்ந்த மாணவர்களை மதமாற்றம் செய்வதில் பாதிரிமார் முனைப்புக் காட்டியதால் அதைப் பொறுக்க முடியாது அங்கிருந்து வெளியேறினார்.

நாவலர் அவர்களிடம் நேர்முகமாகப் பயின்றவர்களுள் ஒருவர் கரம்பனைச் சேர்ந்த முத்துகுமாரு ஆவார். இவரை முத்துக்குமாரு சட்டம்பியார் என அழைப்பது வழக்கம். இவர் கரம்பன் மேற்கில் திண்ணைப் பள்ளிக்கூடங்களை நடாத்தி வந்தார். சந்தியா வந்தன விதிகளை ஓலைகளில் மாணவர்களுக்கு எழுதிக் கொடுத்தும், சைவ நெறிமுறைகளை முறையாகக் கற்பித்தும், சைவ சமயக் கல்வியி;ல் மாணவர்களை ஊக்குவித்தார்.

கரம்பனில் சைவப்பாடசாலை எதுவும் இல்லாத அக்காலத்தில் சைவசமயத்தையும், தமிழையும் பேணிக்காத்த பெருமை சட்டம்பியாரையே சேரும். இவரின் மாணவர்களால் இவர் 'தமிழ் தந்த குறுமுனி' எனப் போற்றப்பட்டார். சட்டம்பியார் தாம் நடத்தி வந்த பணிக்கு எவ்வித ஊதியத்தையோ, உதவியையோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வாழ்ந்த இல்லம் அமைந்திருந்த இடம் இன்றும் 'உவாத்திபுலம்' என வழங்கப்பெற்று உபாத்தியாயர் அவர்களை நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது. இச்சட்டம்பியாரே இளைஞரான வைத்திலிங்கத்தின் சமய, இலக்கண, இலக்கிய ஆசிரியர் ஆவார். வைத்திலிங்கத்திடம் மலிந்திருந்த நுண்ணறிவினை மதித்தறிந்த சட்டம்பியார் தாம் பல்லாண்டுகளாக அரிதிற் தேடிப் பேணிக் காத்து வைத்திருந்த இலக்கண, இலக்கிய சமய நூல்களை எல்லாம் தமது மாணவராகிய வைத்திலிங்கத்திடமே ஒப்படைத்தார். சிவகுருநாத பீடம் என இன்று அழைக்கப்படும் வேதாந்த மடத்தில் காணப்படும் நூல்களுள் பெரும்பாலானவை சுவாமிகளால் சேகரிக்கப்பட்டவையாகும். அவற்றுள் முத்துக்குமாரு சட்டம்பியார் வழங்கியனவும் அடங்கும். இவருக்கு தம்பியர் இருவரும், தங்கைமார் இருவரும் இருந்தனர். குடும்பத்தில் மூத்தவராக இர் இருந்ததால் குடும்பப் பொறுப்பையுணர்ந்து சிறிது காலம் வணிகத் துறையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அக்காலத்தில் மட்டக்களப்பில் பெருவணிகராக விளங்கிய வைத்திலிங்கம் என்பாரிடம் கணக்காளராக சிலகாலம் கடமையாற்றினார். இவரின் அகத்தூய்மை மற்றும் செயல்களைக் கவனித்து பெருவணிகர் இவரை பெருமதிப்புடன் ஆதரித்து வந்தார்.

இக்கால கட்டத்தில்தான் பெருவணிகர் வைத்திலிங்கம் அவர்கள் கீரிமலையில் பெரிய மடம் ஒன்றைக் கட்டுவதற்கு முடிவு செய்து அதைச் செவ்வனே செய்து முடித்துத் தந்தவர் சுவாமிகளே எனத் தேர்ந்து அவரிடமே மடம் கட்டும் பொறுப்பினை ஒப்படைத்தார். இன்று நாம் காணும் வைத்திலிங்கம் மடத்தை அமைக்கும் பணியை ஏற்று அப்பணி புரிந்து கொண்டிருக்கும் நாட்களில் அங்கு வந்து சென்ற பல்வேறு அடியார்களுடனும், கல்வியாளர்களுடனும் கொண்ட தொடர்பு காரணமாக இவரின் ஆன்மீகத் தாகம் அதிகரித்தது. வேதாந்த தத்துவ விசாரணைகளில் நெருங்கிய தொடர்பு கொண்டார். ஞானத்தாகம் கொண்ட இவரது உள்ளம் தகுந்த சற்குருவை நாடியது.

கந்தர்மடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மகான் கனகரத்தின சுவாமிகள் தமது மாணவர்களுடனும் தங்களது தத்துவ வேதாந்த விசாரணைகளை நடாத்தும் பொருட்டு கீரிமலக்கு அடிக்கடி வந்து தங்குவதுண்டு. இவரது சீடர்களும் கீரிமலையில் தங்கியிருந்தார்கள். இச்சீடர்களின் உதவியுடன் கனகரத்தின சுவாமிகளின் அரவணைப்பைப் பெற்று அவர்களுடன் கலந்து தாம் பெற்றிருந்த சமய அறிவினை விரிவு படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். கனகரத்தின சுவாமிகளே இவருக்கு 'மகாதேவா சுவாமிகள்' எனப் பெயர் சூட்டி சந்நியாசம் வழங்கினார்.

கனகரத்தின சுவாமிகள் ஒரு குரு பரம்பரையைச் சேர்ந்தவர். அவர்களுடைய குரு 'சார்சன்' சுவாமிகள் என அழைக்கப்பட்ட சின்னத்தம்பி சுவாமிகள் ஆவார்கள். கனகரத்தின சுவாமிகளின் தொடர்பால் மகாதேவா சுவாமிகள் கந்தர்மடத்தில் தங்கி சற்குருவுடன் சேர்ந்து சமயத்துறையினைப் பரப்பும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

மகாதேவா சுவாமிகளின் அறிவாற்றலையும், மதிமையையும் நன்கு அறிந்த பிரபல வணிகர் வை.சி.சி. குமாரசாமி அவர்கள் சமய ஆய்வு செய்வதற்கென ஒரு மடம் கட்டுவதற்காக நான்கு பரப்புக் காணியைக் கொடுத்து உதவினார். வேறு சிலரும் காணி கொடுத்து உதவியமையால் 22 பரப்பாக விரிவடைந்தது. சுவாமி அவர்கள் அந்த இடத்தில் 'சிவகுருநாத பீடம்' என்ற பெயருடன் ஒரு வேதாந்த மடத்தை நிறுவி வேதாந்த சாஸ்த்திரங்களை கற்பித்து வந்தார்கள். சுவாமிகள் சாதி பேதம், குலபேதம் கடந்தவர் என்பர். வேதாந்த மடத்தினைக் கட்டி முடிப்பதற்கான முயற்சியில் முன்னேற்பாடான நிதி திரட்டும் பணியில் நிதி திரட்டுபவராகவும், திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு மடத்தினை அமைக்கும் பணியில் தொழிலாளர்களுடன் வேறுபாடு எதுவுமின்றித் தாமும் ஒரு தொழிலாளியாகவும், அதேவேளையில் ஆன்ம ஈடேற்றத்துக்கு வழிகாட்டுகின்ற மதிப்புக்கும், வணக்கத்துக்கும் உரிய நல்லாசிரியராகவும், பிறருக்கு போதனை செய்வதுடன் நில்லாது போதித்தவற்றைத் தாமே முதற்கண் கடைப்பிடித்தொழுகி ஒழுக்கத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும். அதற்கோர் இருப்பிடமாகவும் விளங்கினார் என்பது வெளிப்படை. இந்நிகழ்ச்சி சுவாமிகளின் நெறி பிறழாக் கடமையுணர்ச்சிக்கும், செயலுக்கும் தகுந்த சான்றாகும்.

சுவாமி மகாதேவா அவர்கள் குருமரபின் பாரம்பரியத்தைப் பேணி வந்தவர்கள் வரிசையில் ஒருவராவர். சுவாமியவர்களின் தோற்றப்பொலிவு, புலமைத்திறன், சொல்வன்மை ஆகியவற்றால் ஈர்த்துப் பெற்ற பலர் அவர்தம் மாணவர் ஆனார்கள். இங்ஙனம் தம்மை அண்டி வந்த மாணவர்களுக்கு வாழ்க்கையின் உண்மையினை உணர்த்திப் போதனை செய்து வழிபடுத்தி வந்தார்கள். அம்மாணவர் பலர் துறவு நிலையில் நின்று சிறந்த தமிழ்ப்பணியும், சமயப்பணியும் ஆற்றி வருகின்றனர். அவர்களுள் இராமலிங்க சுவாமிகளும், வடிவேற் சுவாமிகளும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க இருவராவர். ஞானாச்சாரிய பரம்பரை இன்று வடிவேற் சுவாமிகளால் பேணப்பட்டு வருகிறது.

வேதாந்த மடம் சுவாமிகளின் தலைமையில் ஒழுக்கசீலர்களின் ஒத்துழைப்புடன் பெரிய அமைப்பாக வளர்ச்சி அடைந்தது. இங்ஙனம் வளர்ச்சி அடைந்த வேதாந்த மடம், தமக்குப் பின்னதாகவும் தொடர்ந்து பல்லாண்டு பணியாற்ற வேண்டும் என்ற நன்னோக்கத்துடன் தம் காலத்திலேயே நிலையான வருவாய்க்கு வேண்டிய வழிவகைகளை வகுத்தும், நிதியம் சேமித்தும் வைத்தார்கள். அப்படியான அமைப்பொன்று விளைவேலியிலும், அதைத் தொடர்ந்து வடிவேற் சுவாமிகள் தலைமையில் உருத்திரபுரம் ஜயந்தி நகரிலும் இடம் பெற்றுள்ளன.

பூரணத்துவம்
சிவகுருநாத பீடத்துக்கு தமக்குப் பின்னர் தம் வாரிசாக இராமலிங்க சுவாமிகளை நியமித்து அவரிடம் மடத்தின் பொறுப்புக்களை ஒப்படைத்த பின்னர் இடையறாது இறைவனை தியானித்து வந்த அடிகளார் 13.11.1942 ஞாயிற்றுக் கிழமையன்று பூரணத்துவம் எய்தினார்.

கந்தர்மடம் வேதாந்த மடத்தில் கனகரத்தின சுவாமிகளின் சமாதியும், மகாதேவா சுவாமிகளின் சமாதியும் இருக்கின்றன. அவற்றுக்கு நித்திய பூசையும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.https://karampon.net/home/archives/113

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சடையம்மா அம்மையார்

102838349_957918314646972_94955935271848
 

 

103970286_314384729723522_77384611267199

(சடையம்மாவிற்கு இடதுபுறம் கடசியில் இருப்பவர் குருநாதர் இவர் சடையம்மாவின் அக்காவின் மகன் ஆவார் மற்றவர்களில் ஒருவர் தம்பிரான்தோழர்-

 

102388836_3021848634561710_5076478949949


ஒரு முக்கிய குறிப்பு: இவர் பெயரில் உள்ள நல்லூர் 63 நாயன்மார் மடம் ( தேர் முட்டிக்கு பின்புறம்) .....இப்போதும் எங்களுக்கு தெரிந்தவர்களின் உரிமத்தில் உள்ளது.. 1980 களில் ஒரே இரவில் நல்லூரில் உள்ள பிற சமூகத்தவரால் பெயர் மாற்றப்பட்டு சடையம்மா அவர்களின் சொத்துக்கள் வெளியில் தூக்கி வீசப்பட்டது. இதுக்கு சமூகம் என்ன செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சுய லாபமற்றவர்கள் சிந்திப்பது நல்லது.........

கல்வியங்காடு நல்லூர் திருநெல்வேலி கிழக்கில் செங்குந்த மரபில் 19-08-1865இல் பிறந்தார். இவரது இயற்பெயர் முத்துப்பிள்ளை. 11வயதில் கதிரேசு என்பவரைப் பெற்றோர்கள் மணம் செய்து வைத்தனர். கணவனுக்குப் பைத்தியம் பிடிக்க, இவரது கனவில் நல்லூர் முருகன் கோயிலுள்ள வைரவர் தோன்றி, திருக்கோயிலுக்கு வருமாறு கட்டளையிட்டார். கோயிலில் இருந்து சரியைத் தொண்டிலும், வழிபாட்டிலும் ஈடுபட்டு கணவன் பைத்தியம் நீங்கள் பெற்றார்.

நான்கு ஆண்டுக்கும் பின் பெண் குழந்தை பிறந்தது. ஈராண்டுகள் கழித்து இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. 6 மாதம் கழித்து, சடையம்மா கனவில் இறைவன் தோன்றி "மாங்கல்யத்தை கணவனிடம் களற்றிக் கொடு என்று பணித்து, கணவன் கனவில் இறைவன் தோன்றி "மாங்கல்யத்தைப் பெற்றுக் கொண்டு மனைவியை கதிரமலைக்கு அனுப்பு" என்று பணித்தான்.

கதிரமலை சென்று, பின் நல்லூர் வந்து, ஆண்டு தோறும் இராமேஸ்வரம் யாத்திரையின் மேற்கொண்டார்.

நல்லூர் முருகன் சன்னிதானத்தில் அன்னதான மடம் அமைத்து தொண்டாற்றிய, பின்னர் கதிர்காமத்திலும் ஒரு மடம் அமைத்தார். {கீரிமலை, திருச்செந்தூர் தலங்களிலும் மடங்கள் அமைத்தார் என்று பதிவுள்ளது}. நல்லூர் சடையம்மா மடம் இன்று 63 நாயன்மார் குருபூசை மடம் எனப் பெயர் மாற்றமடைந்துள்ளது. கீரிமலையில் தனது இறுதிக்காலத்தைக் கழித்து சமாதியடைந்தார். இவரது சமாதி ஆலயம் அங்கு உள்ளது.

அம்மையார் தனது இரு குழந்தைகளின் மறைவின் பின் கதிரேசுவுடன் சேர்ந்து சிவத்தொண்டு புரிந்தார். சட்டநாதர் கோயிலின் நந்தவனத்தைப் பாதுகாக்க மதில் எடுப்பித்தார்.

நல்லூர் மண்பெற்ற ஞானச் சித்தர் சடையம்மா.

இவரால் உருவாக்கப்பட்ட தர்மகாரியங்கள் பல...
நல்லூர் சடையம்மா மடம்(அறுபத்து மூவர் மடம்)

கீரிமலை காங்கேசன் துறை வீதியில் கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் அமைந்த சடையம்மா மடம்(வேலர்காடு என்னும் காணி.வடக்கு கடல்.கிழக்கும் தெற்கும்கனகசபை முதலியார் நிலம்.மேற்கு தெரு ஒழுங்கை)

கதிர்காமம் கோவில் அருகே இரண்டு ஏக்கர் நிலத்தில் அமைந்த சடையம்மா மடம்.(கிழக்கு எல்லை வீதியும்,தெற்கு பகீர் மடமும்,வடக்கு வலிகஸ்வத்தை பாபர் மடமும்.

திருச்செந்தூர் கீழ் ரதவீதியில் திருநெல்வேலி ஜில்லா ஶ்ரீவைகுண்டம் தாலுகா சிவசுப்பிரமணிய மடமும்
இத்தாய் உருவாக்கிய தெய்வீகச்சொத்துக்கள். இவற்றில் சில தர்மசாதனங்கள் செயலற்றுப் போய்விட்டது.அம்மையாரின் கீரிமலை சமாதி மடம் இதுவரை பொதுமக்கள் வணங்க முடியாது பாதுகாப்பு வலயத்துக்கள் அகப்பட்டுள்ளது.

05-08-1936 ஆம் ஆண்டு சடையம்மா அம்மையார் தனது 71வது வயதில் சமாதியடைந்தார்.

மூலம்: "ஈழத்து இந்துப் பெண்கள் இந்து சமயத்துக்கும் ஆற்றிய பங்களிப்பு." செல்வி மோகன்தாஸ் உதயமலர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை. - யாழ் இந்து ஆராய்ச்சி மாநாடு - 2015, அகில இலங்கை இந்து மாமன்ற வெளியீடு.
https://www.facebook.com/686231785148961/photos/basw.AbqsikPwOfkYWmTIG9cJ0cQ-p0ggWtmQ2Yid_dd6852a2OuY6r1vGjwG26CsDKRACwc39Bf5w4xclNVzxbVsasxnyrwbghDUitDNm6jPavOXEoZxtgF8WcUSwgVFMFpLmTMJxSIEP3cOjDegWE3L_u_jPi0vOh4QveW1slQZVtPgoBcvuxCGTKfXmZW2UMx1N-n-9gidspJucKxKr8L8c_u_Ft_3v-inT2kXuyHxIDXMjrGrSM_pKM5-OhR-ucUk0jQzqv3Bmwahkw27t64vSbLLlbdcj2jbR5D3x7rd1muckHOda4PE-vc00esTNhKUg_zlkATR0hRZpNNqYVOKospoMZvudGRQ2or9wBTQlpMGzH-EJ0B1sAbS4-cgRHMy7YI/957918311313639/?opaqueCursor=AbqCzruLo8XNkZzw4l9FBDMw0iEKM6F2vByufaye8HDyjPOqMtJkFrta67RHCyFBSbW7thdQ4MgZnlantBEq7ayCK57r5PFlf6XYeqO937zlszxIpMTrFYdHcogvdsGY2OgS3MzLJ5hhUhHdJenkhTqHHrp3qu-i3flAmpgJctP9Dt5JlExZLGiNmDUCIsGQYHuU1Bu5k9eUNwlv0vK_SRz795f_Wrs5fARiHlP23ZqwPiMlZrlvKApEwxXy5AL8zivAmKNdfR72fta8kWt2qcX04xILch36SDhVUbXIeg7gspo5adVibF54mnWqswMxNEUMeQi6_Y1JfhT5vC3Yon1GLaQKpmDkUd4h0AmxVmuO6PzFred2pEZ74k7100hhXV67JvZhAuUOu2hD1hLmWwHfj_cRoyLfCAJatZlcWH0DTnaiyMpeGyuH9A8zhlnvltdZ8hD8VfPEZlE18mg-nt2klYAyQH7dV90e7DwshwqnQaFL5OlnoYaUSRSNqiZ4OiZYSCc7vY4hZohlMkY7T4vjs0DjxdFqMqfgaCcAdZKqdGmvNhAFO7oozD9XwcgrrwtRW32vZR-VQUKt03ml3tre2ajkoEoNsqwezqtXAcBFcWox-CEvF52qeInCQ-pMd1xWR7ZMk7sayFTAN5gxZmrsTG_FbuYTjAudcWF_WeXP04XtKaBS1ZjCDBH5KUoivDI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நாகநாத சித்தர்
 
16.நாகநாத சித்தரும்,அவரது சீடர் யோகி குமரகுருவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆலயத்தை கொழும்பில் கட்டியுள்ளனர்.தற்போது திரு.குமரகுரு என்பவரின் குடும்பம் அந்தக் கோயிலை நிர்வகித்துவருகிறது.
இலங்கையில் இருக்கும் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் கோயில்அவர் இலங்கையில் தவம் இருந்ததை ஊர்ஜிதம் செய்கிறது.http://yogicpsychology-research.blogspot.com/2015/03/blog-post_21.html
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவுச் சுவாமிகள்

 
muthusamy-160x250.jpg

சிறுகுறிப்பு

உசாத்துணை: ஈழத்துச் சித்தர்கள் - ஆத்மஜோதி நா. முத்தையா - 1980
 

லகெங்களும் உள்ள சக்திபீடங்கள் அறுபத்துநான்கில் நயினாதீவு நாகபூஷணி ஆலயமும் ஒன்றாகும். இலக்கியங்களில் வரும் மணிபல்லவம் எனபதுவும் இதுவே. மணிமேகலையும் மணிமேகலா தெய்வமும் வரப்பெற்ற இடமாகும். நயினாதீவு முற்காலத்தில் சிறந்ததொரு துறைமுகமாகவும் விளங்கியது. மணித்தீவு, மணிநாகதீவு, நாகதீபம் என்ற பெயர்களும் இத்தீவிற்கு உண்டு. பாரத நாட்டிலிருந்து வருவோர் அம்பிகையை தரிசிக்க தவறுவதில்லை.

நான்கே நான்கு மைல் சுற்றளவுள்ள இத்தீவில் பெரும்பகுதியோர் சைவவேளான் மரபைச்சார்ந்தவர்களாகும். இம்மரபிலே ஆறுமுகம் எனும்பெரியார் ஒருவர் வாழ்நதார். அவருக்கு ஒரு மகன். அம்மகனுக்கு முத்துக்குமாரசாமி என்று நாமகரணம் சூட்டினர். இந்த முத்துக்குமாரசாமியே பிற்காலத்தில் நயினாதீவுச் சாமியார் என்று அழைக்கப்பட்டார்.

உரிய காலத்தில் ஆரம்பக்கல்வி பெற்றார். அக்கால இளைஞர்களில் பெரும்பாலானோர் ஆரம்பக்கல்வி முடிந்ததும் முடியாததுமாக யாழ்ப்பாண நகருக்கோ, கொழும்புக்கோ அன்றி கண்டி போன்ற பட்டினங்களுக்கோ சென்றுவிடுதல் வழக்கமாக இருந்தது. முத்துக்குமாரசாமி ஆரம்பக்கல்வி முடிந்ததும் கொழும்புக்குச் சென்று ஒரு வர்த்தக நிலையத்தில் வேலைக்கு அமர்ந்தார். முத்துக்குமாரசாமி வர்த்தக நிலையத்தில் சிப்பந்தியாக வேலை பார்த்தாலும் மனம் இறைபணியையே நாடி நின்றது. ஒருநாள் வர்த்தக நிலைய அதிபர் இவரை ஏசிவிட்டார். அந்த வன்சொல்லை அவரால் பொறுக்க முடியவில்லை.

ரமண பகவானுக்கு பதினாறு வயதாயிருக்கும்போது இவரது தமையனார் இவர் ஒழுங்காக படிப்பதில்லை என்பதை மனதிற்கொண்டு இப்படிப்பட்டவனுக்கு இங்கு என்ன வேலை என்று ஏசினார். இந்த ஏச்சு மனதில் தைக்க, ‘இது நல்ல விடயத்தை நாடிச்செல்லுகின்றது, இதையாரும் தேடவேண்டாம்” என்று ஒரு கடிதத்திலே எழுதிவைத்துவிட்டு திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டார். இவருடைய துறவுக்கு இவரது தமையனாரே காரணம் ஆனார்.

இச்செய்தி போன்றுதான் முத்துக்குமாரசாமியும் ஒரு சீட்டுக்கவி மாத்திரம் எழுதிவைத்துவிட்டு யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் கடையைவிட்டு சென்றுவிட்டார். கவி ஒரு விரசமான கவிதான். ஆனால் அந்த நேரத்து மனஉணர்வை அக்கவி படம்பிடித்து காட்டுகின்றது. பல இடங்களிலும் தேடினார்கள். ஊரிலும் தேடினார்கள். முத்துக்குமாரசாமி சென்ற இடத்தை யாரும் அறியார். துறவுக்கேற்ற பக்குவநிலை ஏற்படும்போது சிறு சம்பவங்கள் கூட துறவுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

அக்காலத்திலே இந்தியாவுக்கு சென்று வருவதில் எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. முத்துக்குமாரசுவாமியாருடைய உள்ளம் இறைவனை நாடி இருந்தமையால் தலயாத்திரை மேற்கொண்டார்.

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த்த தொடங்கினர்க்கு
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே

என்ற தாயுமானவரின் வாக்குப்படி இவரது யாத்திரை வீண்போகவில்லை. இவரிடத்து விளங்கிய தெய்வபக்தி, ஞானம், தூய்மை, மனஅடக்கம், இன்சொல், அருளோடு கூடிய நோக்கு, எந்த நேரமுஞ் சிவசிந்தனை ஆகிய குணங்கள் இவரைத் தகுந்த ஒரு குருவிடம் கொண்டு சென்று சேர்த்தன. அவரோடு பல ஆண்டுகள் தங்கிக் குரு உபதேசமும், சந்நியாசமும் பெற்றுக்கொண்டார். இவரது பக்குவநிலை அறிந்த குருநாதர் நீ உனது ஊருக்கு செல்லலாம் என்று உத்தரவு கொடுத்தார். குருநாதரை பிரிய மனமின்றி பிரிந்து ஊர்நோக்கி வந்தார்.

பல ஆண்டுகளுக்கு பின் நீண்ட சடா முடியும், காவிஉடையும் தரித்த சுவாமியார் ஒருவர் நயினாதீவில் உலாவுவதை நயினாதீவு மக்கள் பார்தனர். எங்களுடைய ஆறுமுகத்தாரின் மகன் முத்துக்குமாரசாமியைப்போலல்லவா தோற்றம் இருக்கின்றது என்று சிலர் பேசிக்கொண்டனர். வேறுசிலர் அதற்கு மறுப்புத்தெரிவித்தனர். முத்துக்குமாரசுவாமி இருக்கும் இடமோ போன இடமோ யாருக்கும் தெரியாது. அவர் உயிரோடு இருக்கிறார் என்பதே சந்தேகம் என்றனர். மிக நெருங்கிய உறவினர் முத்துக்குமாரசாமியுடன் நெருங்கிப்பழகி அவர் முத்துக்குமாரசாமிதான் என்று தெளிந்து கொண்டனர். உற்றார் உறவினர் அவரை அணுகி தமது இல்லத்துக்கு வருமாறு அழைத்தனர். அவர் யாருடைய இல்லத்திற்கும் செல்லுவதற்கு மறுத்துவிட்டார். நாளொரு கோயிலில் சென்று தங்கி வந்தார். கோயில் மண்டபங்களையே தமது வசிப்பிடமாக்கி கொண்டார். கோயில் மண்டபங்களிலேயே படுத்துறங்கி தானும் தன்பாடுமாய் திரிந்த சுவாமியார் என்ன சாப்பிடுகிறார்? எங்கே சாப்பிடுகின்றார் என்பதை யாரும் அறியார்.

நயினாதீவிலே உள்ள மக்கள் சுவாமிகளை முத்துக்குமார சாமியார் என்றே அழைத்தனர். அனால் அயலூரவர்கள் சுவாமியாரை பெயர் சொல்லி அழைக்க அஞ்சிப்போலும் நயினாதீவுச் சுவாமியார் என்றே அழைத்தனர். சுவாமிகளுடைய குருநாதன் பெரியானைக்குட்டி சுவாமிகளேதான். குருநாதன் அவருக்கு என்ன பெயர் வைத்தாரோ யாரறிவார்? இப்படி ஊர்பேர் தெரியாது, உலகுக்குத்த தம்மைக் காட்டி கொள்ளாது மறைந்த மகான்கள் எத்தனைபேரோ யாரறிவார்?

சுவாமியார் என்று பெயர் எடுத்துவிட்டால் அவர்களை சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கும். நயினாதீவுச்சுவாமிகள் அதற்கு விலக்கானவர் அல்ல. சுவாமிகள் தமது அடியார் கூட்டத்தோடு வடபகுதியில் உள்ள எல்லா ஆலயங்களுக்கும் யாத்திரை செய்தருளினார்கள்.

சுவாமியை நாடி வந்தவர்கள் யாவரும் ஏதோ ஒரு வகையில் பயன்பெற்றே சென்றனர். சுவாமி கொடுத்த விபூதியை பெற்று உடல்நோய், உள்ளநோய் தீரந்தவர் ஆயிரத்திற்கதிகமானவர்கள். ஆத்மஞானம் நாடிவந்தவர்கள், ஆத்மஞானம் பெற்றனர். சுவாமிகளின் சீடர் கூட்டம் இன்று எல்லா ஊர்களிலும் இருக்கின்றது. தமது சீடர்களின் முதல்வரான சண்முகரத்தினம் அவர்களை கொண்டு நயினாதீவு தென்மேற்கு பகுதி கடற்கரையில், ஒரு தீர்த்தக்கேணி அமைப்பித்தார். இன்றும் நயினாதீவு நாகம்மாள் தீர்த்தம் ஆடிவருவது இத்தீர்த்தக்கேணியில்தான் என்பது குறிப்பிடத்தக்க தொன்றாகும்.

சுவாமிகள் இயல்பாகவே கவிபாடும் திறமை வாய்ந்தவர். இவரியற்றிய தனிப்பாடல்கள் பல உள்ளன. நாகேஸ்வரி தோத்திரமாலை, நாகேஸ்வரி அந்தாதி போன்ற நூல்கள் அன்னாரின் சமாதி நிலையத்தொண்டர் சபையினரால் வெளியிடப்பட்டுள்ளன. அடியவர்களுடைய இன்னல்களை வாக்கினாலும் நோக்கினாலும் தீர்த்தருளிய சுவாமியவர்கள் 1949ம் ஆண்டு தை மாதம் 26ம் திகதி தமது அன்பரின் இல்லத்தில் யாழப்பாணம் சிவலிங்கப்புளியடியில் சமாதிநிலை எய்தினார். சுவாமிகளின் திருவுளப்படி அவரின் பூதவுடல் நயினாதீவு காட்டுக்கந்தசுவாமி கோவிலின் மேற்குப்புறத்தில் அடியார்களால் சமாதி வைக்கப்பட்டது. இன்று அதனமேல் ஒரு சோமாஸ்கந்த லிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டு நித்திய பூசை நடைபெற்று வருகின்றது.https://www.thejaffna.com/eminence/நயினாதீவுச்-சுவாமிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பர் சுவாமிகள்
(எஸ்.கே.சதாசிவம்)

 

பேப்பர் சுவாமிகள் என மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற இவர் வீரவாகு வேலுப்பிள்ளை முருகேசு (V.V.முருகேசு) எனும் இயற்பெயர் கொண்டவர். 1900 ஆம் ஆண்டு தங்கோடையில் பிறந்தவர். சுவாமிஜி முதலில் இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தார். மனைவி இறந்ததும் துறவறத்தை மேற்கொண்டவர்.

கடல் வழியாகப் பயணிக்கும் மரக்கலங்களுக்கு ஒளி பாய்ச்சி கரைகாட்டும் வெளிச்ச வீட்டுக்கு (கோவளம்) அருகே இருந்து மானிடப்பிறவி எனும் பெருங்கடற் துயரில் இருந்து கரையேறி மானிடர் தம் வாழ்வில் ஈடேற்றம் பெற முருகேசு சுவாமிகள் 1940 “ஆலவாய்
ஆச்சிரமம்” ஆரம்பித்தார். வெளிச்ச வீட்டு பங்களாவில் முதலில் இருந்து விட்டு 1944 ஆம் ஆண்டளவில் மால் போட்டார். தனித்திரு, பசித்திரு, விழித்திரு எனும் ஞான நிலையில் எட்டு வருடங்கள் இருந்த பொழுது ஆச்சிரமத்தைத் தொடங்கினார். ஆச்சிரமம் தொடங்க முன்பு வட இந்தியாவில் இருந்து இலங்கை வரையுமான சிவபூமியின் கண் யாத்திரை செய்தவர். பரத கண்ட யாத்திரையின் போது இந்தியப் பெருந்தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினார்.

வெளிச்ச வீட்டு வளவில் பர்ணசாலை அமைந்து இருத்தல் பொருத்தமானது ஆகாது எனக் கருதிய சுவாமிஜி 1970 களில் வெளிச்ச வீட்டு ஆச்சிரமத்தைக் கைவிட்டு நண்டுப்பாளி எனும் குறிச்சியில் கொல்லங்கலட்டி வளவில் ஆச்சிரமத்தை ஸ்தாபித்தார்.

திருஞான சம்பந்த சுவாமிகள் திருவீழிமிழலையில் வீற்றிருந்து இறைவன் புகழ் பாடி பதியங்கள் பாடியவர். பேப்பர் சுவாமிகள் வாழ்ந்த ஆச்சிரமத்திலும் திருவீழி மரம் இருந்தது. திருவீழி மரத்தின் கீழ் இருந்து சுவாமிகள் ஆன்மீகச் செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை. அவரின் கலந்துரையாடல்கள், சிந்தனைகள் யாவும் இம்மரத்தின் கீழே நடைபெற்றது. இம்மரத்தின் கீழ் அமர்ந்து செயற்படுவதன் மூலம் ஆன்மீக இன்பத்தை அனுபவித்தார். ஆன்மீக உள் உணர்வுகள் வெளிப்படுவதற்கு இம்மர நிழல் சுவாமிகளுக்கு உந்துசக்தியாக அமைந்தது.

கடல் அலைகள் தாலாட்டும் இயற்கை எழில் மிக்க அமைதியான சூழலில் ஆச்சிரமம் அமைத்து தவ வாழ்வு வாழ்ந்த ஞானி பேப்பர் சுவாமிகள் தன்னை நாடி வருபவர்களின் எண்ண ஓட்டங்களைச் சொல்லும் வல்லமை மிக்க ஞானம் கைவரப் பெற்றவர். தன் முன் அமர்ந்து இருப்பவரின் சிந்தனையில் உள்ளவற்றை எடுத்துச் சொல்லி அவர் தம் மனத்தில் குடி கொண்டிருக்கும் சஞ்சலத்தில் இருந்து விடுபடும் வழியைக் காட்டுவார்.

சுவாமிஜி இயற்றிய “வள்ளி கும்மி” எனும் நூலில் முப்பொருள் விளக்கம், சைவ நாற் பாத நெறிகள் குரு தத்துவம், ஆலய வழிபாட்டின் முக்கியத்துவம் ஆகியன பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். தன் ஆச்சிரமத்தில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை சுவாமிஜி பாடியுள்ளார். நன்னெறி போதிக்கும் கருத்துக்கள் சுவாமிஜின் பாடல்களில் பொதிந்து காணப்படுகின்றது. சமய குரவர் நால்வர் இல்லையேல் சைவசமயம் இல்லையென்று சிறப்பித்துக் கூறியுள்ளார். இது தவிர குறிப்புக்கள் Sayings என ஏராளம் உண்டு. தனது சரித்திரத்தை சுவாமிஜி ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார். ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்குத் தூய்மையான மனமும், களங்கமில்லா பக்தியும் தேவை என்பதைத் தமது நூல்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

உடற் பிணியால் வருந்தியவரின் நோய்களை நீக்கிய மருத்துவராகவும் சுவாமிகள் திகழ்ந்தார். காரைநகரில் வாழ்ந்த மக்கள் மட்டுமன்றி வெளியூர்களிலும் இருந்து ஏராளமான மக்கள் சுவாமிகளைத் தரிசிப்பதற்கு வருகை தந்தனர். சுவாமிகள் சைவ ஆகம முறைப்படி தயாரிக்கப்பட்ட திருநீற்றைத் தவிர வேறு விபூதி பாவிப்பதில்லை. ஞானசம்பந்தர் வழியிலே சுவாமிஜி திருநீற்றின் பெருமையை வளர்த்தவராவர். சைவ சமயப் பண்பாட்டின்படி வேட்டி கட்டினால் அன்றி விபூதி வழங்குவதில்லை. நோயறிந்து திருநீறு போடுதல், வேப்பம் குழையினால் பார்வை பார்த்தல், சமுத்திர தீர்த்தம் ஆடுதல், பிரசாதம் கொடுத்தல் போனற் பல்வேறு முறைகளைக் கையாண்டு தன்னை நாடி வருபவர்களின் நோய்களை நீக்கினார். சுவாமிகளின் ஆச்சிரமம் ஆன்ம விடுதலைக்கு வழி காட்டும் நிலையமாக இருந்ததோடு உடற்பிணி போக்கும் “தெய்வீக வைத்திய ஆலயமாகவும்” திகழ்ந்தது.

பாரத தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர் திரு. J.C.குமரப்பா நோயுற்ற வேளை சுவாமிகளின் ஆச்சிரமத்தில் தங்கியிருந்து ஆசி பெற்றுக் குணமாகியவர். திரு. குமரப்பா நோயின் நிமித்தம் தனியான குடிசையில் வசிக்க வேண்டிய தேவை இருந்தமையால் தனியான குடிசையில் வசித்தார். அவர் வாழ்ந்த குடிசை ஆச்சிரமத்திற்கு அயலில் இருந்தது.
அக்குடிசைக்கு குமரப்பா குடிசை (Kumarappa Cottage) என அழைக்கப்பட்டது.

சுவாமிகள் தவ வாழ்வின் முற்பகுதியில் வெளிச்ச வீட்டு பங்களாவில் அன்னதானம், பூசை முதலியவற்றை நடாத்தி வந்தார். மாதந்தோறும் பௌர்ணமியில் இயந்திர பூசை, விசேட பூசையாக நடைபெறும். பௌர்ணமி கூடும் நேரத்தில் சமுத்திர தீர்த்தம் ஆடி விட்டு இயந்திர பூசை நடாத்தி நைவேத்தியம் வைப்பார். குரு பூசை தினங்கள், சிவராத்திரி, நவராத்திரி, கந்தசஷ்டி, திருவம்பா, தைப்பொங்கல், வருடப்பிறப்பு போனற் திருநாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

பல அடியார்கள் விசேட தினங்களில் ஆச்சிரமத்திற்கு வருகை தந்து சுவாமிகளுடன் இணைந்து சென்று சமுர்த்திர தீர்த்தத்தில் தீர்த்தமாடி வருவார்கள். நோயாளிகளின் பிணிகளை நீக்கும் தீர்த்தமாகவும், விதவையர்களுக்கு விரத பலன்களைக் கொடுக்கும் விசேட தீர்த்தமாகவும், ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு அவர்களின் மனங்களைக் கழுவும் விசேட தீர்த்தமாகவும் இப்புனித தீர்த்தம் அமைந்திருந்தது.

வெளிச்ச வீட்டு பங்களாவில் அன்னதானம் நடக்கும் காலத்தில் இறை பூசையுடன் கோ பூசையும் தவறாது நடைபெறும். அடியார்கள் அனைவரும் உணவு அருந்துவதற்கு முன்பு இலையில் இருந்து ஒரு பிடி அன்னம் பசுவிற்கு வழங்கி விட்டே உணவு அருந்துவார்கள் சுவாமிஜி ஆச்சிரமத்தில் பசுக்கள் வளர்ப்பதில் அக்கறை செலுத்தினார். ஆச்சிரம அபிஷேகத்திற்குப் பால் கொடுத்தனர். ஒவ்வொரு நாளும் பசுவைக் கும்பிட்டவர் அன்றன்று செய்யும் பாவங்கள் அன்றன்றே தீரும் என்று சுவாமிஜி கூறியருளினார். அபிஷேகத்திற்கும் நெய்வேத்தியத்திற்கும் பால் தரும் பசுக்கள் கண்ட இடங்களில் மேயக்கூடாது. ஆச்சிரமத்திற்குள்ளேயே அவற்றை வைத்து வளர்ப்பது சுவாமிஜி இன் வழக்கம். 1970 களில் கொல்லங்கலட்டியை ஆச்சிரமத்திற்காகத் தெரிவு செய்தமை பசுக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை அங்கு அமைந்திருந்தமையே காரணமாகும். பட்டிப் பொங்கல் திருநாளில் எல்லா பசுக்களிற்கும் அர்ச்சனை, தூப, தீப ஆராதனை நடைபெறும். மாட்டுக் கொட்டகையில் மாட்டுப் பொங்கல் நடைபெற்று பசுக்களுக்கு நெய்வேத்தியம் படைக்கப்படும்.

சுவாமிஜி சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வல்லவர். சமஸ்கிருதம் எழுதிப் படிக்காமல் இயற்கையாகவே உணர்ந்தவர். சைவ சமயப் பிள்ளைகள் சைவ சமய சூழலில் கற்க வேண்டும் என விரும்பினார். அன்றைய கால கட்ட த்தில் காரைநகர் சிறார்கள் கல்வி கற்பதற்கு முனைப்புடன் செயற்பட்டார். தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை, களபூமி சுந்தரமூர்த்திநாயனார் ஆகிய பாடசாலைகளை அப்பகுதி மக்களின் ஆதரவுடன் ஆரம்பித்து வைப்பதில் இணைந்து செயற்பட்டார். பாடசாலைக்குச் செல்லாமல் மாடு மேய்த்துக் கொண்டு திரிந்த சிறுவர்களை அழைத்து பாடம் கற்பித்தார். ஆச்சிரமத்தில் தொண்டு செய்யும் சிறுவர்களுக்கும், ஆச்சிரமத்தில் படிக்கும் சிறுவர்களுக்கும் திருக்குறள் சொல்லிக் கொடுத்து மனனம் செய்விப்பது சுவாமிஜிஇன் வழக்கம். மனனம் செய்து ஒப்புவிக்கும் சிறுவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி ஊக்குவித்தார். ஆன்மீக ஈடேற்றத்திற்கான ஆன்மீகக் கல்வியை வழங்கியதோடு ஆன்மீக வழிகாட்டலையும் செய்து வாழ்விற்கு ஆதாரமான ஆங்கிலக் கல்வியையும் புகட்டினார்.

சுவாமிஜி ஆரம்ப காலத்தில் வெளிச்ச வீட்டு பங்களாவிற்கு அருகில் வசித்து வந்தார். அங்கே அவர் ஆண் பிள்ளைகளுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை இலவசமாகக் கற்பித்தார். சுவாமிகளிடம் ஆங்கிலம், கணிதம் பயின்ற இளைஞர்கள் பிற்காலத்தில் அப்பாடங்களைக் கற்பிக்கும் திறமை மிக்க ஆசான்களாகத் திகழ்ந்தார்கள். ஒரு நாள் ஆச்சிரமத்தில் உணவுப் பொருட்கள் இல்லாமையை சுவாமிகளிடம் தெரிவிக்கத் தயங்கி நின்ற மாணவர்களைப் பார்த்து சுவாமிகள் உணவுப் பொருட்கள் பாதி வழிக்கு வந்து விட்டது உணவைச் சமைப்பதற்கான பாத்திரங்களைத் தயார் செய்யுமாறு கூறினார். சிறிது நேரத்தில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரின் வாகனம் ஆச்சிரமத்திற்குத் தேவையான சமையல் பொருட்களுடன் வந்து சேர்ந்தது. சுவாமிகளின் அருட்பேற்றை ஏற்கனவே உணர்ந்திருந்த மாணவர்கள் இச்சம்பவத்தின் பின் மேலும் பயபக்தியுடன் நடக்கலாயினர்.

ஆச்சிரமத்தில் அதிக எண்ணிக்கையான தோசைகள் சுட வேண்டி இருந்தமையால் அடுப்பின் வெப்பத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தோசை சுடுபவர் ஈரப்பசுமை மிக்க துணியை நெஞ்சில் கட்டிக் கொண்டு தோசை சுடுவது வழக்கம் என அன்றைய காலத்தில் சுவாமிகளிடம் கணிதம், ஆங்கிலம் கற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் தாவரவியல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் விஞ்ஞான பாட செயலமர்விற்கு யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வருகை தந்த போது பேப்பர் சுவாமிகளைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். பேப்பர் சுவாமிகளைத் தரிசித்த பின் கலந்து கொண்ட ஆசிரியருடன் பின்வருமாறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக அவ்வாசிரியர் தெரிவித்தார். சுவாமிகள் தான் அறிந்திராத பல பத்திரிகைகள் பற்றி தன்னிடம் வினவியதாகவும் மேலும் பல முக்கியமான உலக விடயங்களைப் பற்றி தன்னிடம் தெரிவித்தமை தன்னை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியதாகவும் உங்கள் கிராமத்தில் மிகப் பெறுமதியான சுவாமிகள் வாழ்ந்து கொண்டு இருப்பதையிட்டு நீங்கள் பெருமை அடைய
வேண்டும் எனக் குறிப்பிட்டதாக அவ்வாசிரியர் தெரிவித்தார்.

திரு. ஆ.தியாகராசா அவர்கள் காலையில் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று சுவாமிகளுக்குரிய கடிதங்களைப் பெற்று வந்து சுவாமிகளிடம் கையளித்த பின்னரே பாடசாலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

பாரத தேசத்தின் தேச பிதா மகாத்மா காந்திஜி பாரத தேசத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கு சுவாமிஜி இன் அருளாசி வலுச்சேர்த்தது. பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் மகாராணியை காந்திஜி சந்திக்கச் செல்லும்பொழுது சுவாமிஜி தன் கையினால் காந்திக்கு திருநீற்று காப்பிட்டு விபூதியுடன் (நெற்றியில்) போனால் தான் வெற்றி கிட்டும் எனத் தெரிவித்து சுவாமிஜி திருநீற்று காப்பிட்டு வழியனுப்பினார். மகாத்மா காந்தியின் மரணத்தை எதிர்வு கூறி தபாலட்டை ஒன்றில் காந்திக்குக் காலம் நன்றாயில்லை. (கவனம்! கவனம்! கவனம்!) Caution! Caution! Caution! என்று எழுதி Dr.J.C.குமரப்பாவிற்கு நடுத்தெருவைச் சேர்ந்த விதானையார் ந.அருளையா மூலம் தபாலில் சேர்ப்பித்தார். தபாலட்டை கிடைத்த சில தினங்களில் விநாயகராம் கோட்சேயினால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார். காந்திஜி இன் இறுதிக் கிரியைகளில் சுவாமிஜியும் கலந்து கொண்டார். சுவாமிஜி அனுப்பிய தபாலட்டை (Post Card) இந்தியாவிலுள்ள அருங்காட்சியகம் (Museum) ஒன்றில் பேணப்படுவதாக செய்திகள் இருந்த போதிலும் உறுதி செய்து கொள்ள முடியவில்லை.

இலங்கையில் இந்தியாவின் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய திரு.V.V. கிரி தனது பதவிக் காலத்தில் பேப்பர் சுவாமிகளின் தரிசனத்திற்காக வருகை தந்தார். இவர் இந்திராகாந்தியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ஜனாதிபதியாகப் பணியாற்றியவர். பேப்பர் சுவாமிகளுக்குச் சமஸ்கிருத மொழியில் இருந்த ஆர்வத்தை அறிந்த காஷ்மீர் முதலமைச்சர் சுவாமிகளுக்கு ஒரு தொகுதி சமஸ்கிருத நூல்களை அன்பளிப்புச் செய்தார். யாழ்ப்பாணத்தின் சட்டத்தரணிகள், கல்விமான்கள், அரச அதிகாரிகள் என பல தரப்பட்ட மனிதர்கள் சஞ்சலம் மிக்க வேளைகளில் சுவாமிகளைத் தரிசிப்பது வழமை.

சுவாமிகளின் செழுமையும், புலமையும் மிக்க ஆங்கில எழுத்தாற்றல் அறிவு சார்ந்த சமூகத்தின் மத்தியிலும் அரசியல் வாதிகளின் மத்தியிலும் சுவாமிஜிக்கு உயர் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது. இலங்கை, இந்தியப் பத்திரிகைகளில் அன்றைய உலக விவகாரங்கள் தொடர்பான கட்டுரைகளை எழுதினார்.

சுவாமிகள் நயினாதீவு நாகபூசணி அம்பாளை குல தெய்வமாக வணங்கியவர். அடிக்கடி நயினாதீவு சென்று அம்பாளை வழிபடும் வழக்கத்தை வழக்கமாகக் கொண்டவர். கோவளத் துறையிலிருந்து கட்டு மரங்களில் ஏறி நயினாதீவுக்கு அடியார் கூட்டத்துடன்
சுவாமிஜி செல்வார். அம்பாளைப் பூசிக்கும் நாகபாம்பினை தன்னுடன் வரும் மக்களுக்கு சுவாமிஜி காட்டியிருக்கின்றார். பௌர்ணமி காலத்தில் நயினாதீவில் சந்திர பூசையை சுவாமிஜி தொடக்கி வைத்தார்.

சுவாமிஜி இன் ஆச்சிரமத்திற்கு அப்பால் அமைந்துள்ள பிரதேசத்தில் இருந்து கடற்றொழில் செய்பவர்கள் மாலையில் தரையில் இருந்து தொழிலுக்காகக் கடலை நோக்கி நகர்வது வழமை. சுவாமிஜி சாயங்கால பூசை நேர சங்கு ஊதும் பொழுது கடற்றொழிலாளரும் படகில் ஏறி கோயிலுக்கு நேராக வருகை தந்து “அரோகரா” “அரோகரா” என்று அம்பாளை வணங்கித் தம் தொழிலுக்கு இடையூறும் உயிராபாத்தும் வராமல் காக்கும்படி அருள் கேட்டுப் படகிற்குச் செல்வது வழக்கம்.

தான் பத்து வயது சிறுவனாக இருந்த போது தந்தையாருடன் பேப்பர் சுவாமிகளின் வெளிச்ச வீட்டு ஆச்சிரமத்திற்குச் சென்றிருக்கின்றேன். அமைதியான சூழலில் இருந்த ஆச்சிரமம் நினைவில் இருக்கின்ற பொழுதும் எழுதுவதற்காக எதுவும் ஞாபகத்தில் இல்லை.

தன் இறுதிக் காலத்தில் நண்டுப்பாளி கொல்லங்கலட்டி எனும் வளவில் அமைந்திருந்த பர்ணசாலையில் தவ வாழ்வு வாழ்ந்து சமாதியாயினார். சுவாமிஜி சமாதி கூடிய காலத்திற்கு 1976க்கு முன்பு சில காலமாகவே மோன நிலை இருக்கத் தொடங்கி விட்டார். ஒரு சில வசனங்கள் தேவையான பொழுதில் மாத்திரம் கதைப்பார். மற்றப்படி மோன நிலையே. 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் பிரதோஷ காலத்திலேயே சுவாமிஜி பூரண சமாதி நிலை கூடினார்.

பேப்பர் சுவாமிகள் சமாதி அடைந்த பின்னர் 1990 வரை சுவாமிகளின் சமாதியைத் தரிசிக்க வருகை தருகின்ற வலிகாமத்தைச் சேர்ந்த தியாகராஜ சுவாமிகள் பேப்பர் சுவாமிகளின் சமாதி காரைநகரிற்குப் பெரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும் சக்தி உடையது எனக் கூறினார்.

வளமான நண்டுப்பாளி காடு மண்டிக் கிடக்கின்றது. கைவிடப்பட்ட வீடுகள், ஒற்றையடிப் பாதையூடாக சுவாமியின் சமாதிக்குச் சென்று அடையலாம். மழை காலத்தில் நீர் நிரம்பிப் பாய்ந்து ஓடும் அறுமனா ஓடை ஒரு புறம், மறுபுறம் அமைதியான கடல், தென்னந்தோப்புக்கள், வயல்கள் சூழ்ந்த அமைவிடத்தில் தாமரைத் தடாகத்தைத் தன்னகத்தே கொண்ட கொல்லங்கலட்டி வளவில் சுவாமிஜி இன் சமாதி அமைந்துள்ளது. தரிசிப்பவர் மனத்தை தன்பால் ஈர்க்கும் வல்லமை கொண்டது சமாதியும் சமாதியின் அமைவிடமும். ஞானியர் சித்த வரிசையில் நமது கிராமத்திற்குப் பெருமை சேர்த்தவர் வரிசையில் பேப்பர் சுவாமிகள் முதன்மையானவர்.https://www.karainagar.com/pages/07-06-2021-திங்கட்கிழமை-வைகாசி-பர

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.