Jump to content

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி, இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என அந்த அறிக்கையில் அமைச்சு அறிவித்துள்ளது.

அமெரிக்க வெளிவிவகாரத் துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 4ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதஷது என தெரிவித்துள்ளது.

கொரோனா அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அமெரிக்கா பயண ஆலோசனை வழங்கப்படுகிறது என்ற போதிலும் இந்த எச்சரிக்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தற்போது எந்த அறிக்கையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எதிர்வரும் சில நாட்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

https://athavannews.com/2021/1218247

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம் – அமெரிக்கா திடீர் எச்சரிக்கை

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%
 15 Views

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுவதால் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கின்ற இலங்கையில் எதிர்வரும் நாட்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை ஒன்றை நேற்று விடுத்துள்ளது.

இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கப் பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவித்தலிலேயே இந்த எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கைக்குச் செல்வதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்ளும்படி அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை நேற்று இலங்கைக்கான புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

அதில் நாட்டில் தொடரும் கொரோனா தீரவ நிலைமைகள் காரணமாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தமது குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் கொரோனா காரணமாக அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், இலங்கைக்கான நான்காம் நிலை பயண சுகாதார அறிவிப்பை தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கின்றது.

இதேவேளை, அமெரிக்காவினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தலில், இலங்கையில் கொரோனா நெருக்கடியிடையே தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஹோட்டல்கள், போக்குவரத்து நிலையங்கள், சுற்றுலாப் பயணிகள் ஒன்றுதிரளும் இடங்கள், பல்பொருள் சந்தைகள், விமான நிலையங்கள், கலாசார உற்வச நிகழ்வுகள், கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களை இலக்குவைத்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அந்த எச்சரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் தூர இடங்களில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள், பிரச்சினைகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அதேவேளை, கலிபோர்னியாவில் உள்ள விகாரையொன்றின் விகாராதிபதி சாந்த சோபன தேரர் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் காணொளித் தகவல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இலங்கையில் தீவிரவாத தாக்குதலொன்று நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பௌத்த மக்களின் வெஷாக் பண்டிகை இன்றும், நாளையும் நடைபெறவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என ஒன்றுகூடுகின்ற இடங்களில் மக்கள் அவதானமாக இருக்கும்படியும் சாந்த சோபன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.ilakku.org/?p=50680

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, உடையார் said:

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம் – அமெரிக்கா திடீர் எச்சரிக்கை

6 hours ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

யார் அந்த தீவிரவாதிகள்???? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

யார் அந்த தீவிரவாதிகள்????

வேறு யார் நாட்டிற்குள் அதலபாதாளத்திற்கு விழுந்துகொண்டிருக்கும் ஆதரவு அலையை மறுவளமாக திருப்பியாக வேண்டிய நிலையிலிருக்கும் மாபியாக்கள் தான் , இம்முறையும் தீவிரவாதிகள் வசதியாக பெரும்பான்மைகளை தவிர்த்து விட்டு சிறுபான்மைகளையும், கலப்புகளையும் தான் குறிவைப்பினம் பாருங்கோ.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, இணையவன் said:

அமெரிக்காவின் உண்மையான அறிக்கை என்ன சொல்கிறது ?

சில முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்து இலங்கையில் முக்கிய இடங்களில் குண்டு வைக்க சொல்லியிருக்கின்றது அமெரிக்காவின் உள்ளக அறிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

அமெரிக்காவின் உண்மையான அறிக்கை என்ன சொல்கிறது ?

http://www.dailymirror.lk/breaking_news/No-change-in-terrorist-threat-level-for-Sri-Lanka-US/108-212743 
 
“Do not travel to Sri Lanka due to COVID-19. Exercise increased caution in Sri Lanka due to terrorism,” the updated travel advise said.
 
மொழி பெயர்ப்பு

பொறுப்பு துறப்பு

(க்கன்னா வுக்கு குத்து போடாமைக்கு மொழிபெயர்ப்பாளர் பொறுப்பல்ல).

கொவிட் 19 காரணமாக இலங்கைக்கு பயணிக்க வேண்டாம். பயங்கரவாத்தின் காரணமாக மேலதிக கவனம் எடுக்கவும்.

Link to comment
Share on other sites

36 minutes ago, goshan_che said:

கொவிட் 19 காரணமாக இலங்கைக்கு பயணிக்க வேண்டாம். பயங்கரவாத்தின் காரணமாக மேலதிக கவனம் எடுக்கவும்.

இங்கு 'த' தவறியமைக்கும் மொழிபெயர்ப்பாளர் பொறுப்பல்ல.🤣

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

அந்தச் செய்தியில் இப்படி இருக்கு :
“There is no change to the terrorist threat level,” the Embassy said.

ஆக, தமிழ் செய்திகள் திரிக்கப்பட்டிருக்கு. ஏன் இப்படி எழுத வேண்டும் ?

Quote

இலங்கையில் எதிர்வரும் சில நாட்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Paanch said:

இங்கு 'த' தவறியமைக்கும் மொழிபெயர்ப்பாளர் பொறுப்பல்ல.🤣

🤣 வணக்கம் பாஞ் ஐயா. சுகம்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

http://www.dailymirror.lk/breaking_news/No-change-in-terrorist-threat-level-for-Sri-Lanka-US/108-212743
 
“Do not travel to Sri Lanka due to COVID-19. Exercise increased caution in Sri Lanka due to terrorism,” the updated travel advise said.
 
மொழி பெயர்ப்பு

பொறுப்பு துறப்பு

(க்கன்னா வுக்கு குத்து போடாமைக்கு மொழிபெயர்ப்பாளர் பொறுப்பல்ல).

கொவிட் 19 காரணமாக இலங்கைக்கு பயணிக்க வேண்டாம். பயங்கரவாத்தின் காரணமாக மேலதிக கவனம் எடுக்கவும்.

ஆக.....???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, இணையவன் said:

அந்தச் செய்தியில் இப்படி இருக்கு :
“There is no change to the terrorist threat level,” the Embassy said.

ஆக, தமிழ் செய்திகள் திரிக்கப்பட்டிருக்கு. ஏன் இப்படி எழுத வேண்டும் ?

பின் வரும் காரணங்களை நான் ஊகிக்கிறேன்.

1. மொழியறிவில்லை

2. பரபரப்பு - click bait

3. எமது மக்களை ஒரு பரபரபுக்குள், வெற்று நம்பிக்கைக்குள் வைத்திருப்பது. இலங்கை கடனில் மூழ்கிறது, சீனாவின் சுயாட்சி பிரதேசம் இலங்கையில், நீல பாஸ்போர்ட்டில் தமிழுக்கு பதில் மண்டரின்.  

இப்படி எங்கள் மக்களை திசை திருப்பி விட்டால் - அரசியல், குடியேற்ற தடுப்பு முயற்சி இப்படி எதை பற்றியும் சிந்திக்க மாட்டார்கள் தானே?

இதற்கு ஒரு பொருத்தமான ஆங்கில சொல்லாடல் இருக்கிறது, சட்டென நினைவுக்கு வரேன் என்கிறது. 

இதே போல் நேற்று செய்தி திரட்டியில் “இலங்கையில் ஒரு அரச அலுவலகத்தில் தமிழ் இல்லாமல் ஆங்கிலம், சிங்களம், மண்டரீனில் மட்டும் பெயர் பலகை” சீனா வரும் போதே தமிழை சிதைக்கிறத்கு என கிட்டதட்ட 6 நாள் பழைய செய்தி ஒன்று கொழும்பு டெய்லி மிரரை ஆதாரம் காட்டி இணைக்கப்பட்டது.

அந்த செய்தியில் ஒரு பிழையும் இல்லை.

ஆனால் அதே டெய்லி மிரரில் அடுத்த நாளே - அந்த பெயர் பலகை அகற்ற பட்ட விடயமும், அது கவனகுறைவால் நிகழ்ந்தது மீண்டும் தமிழோடு அமையும் என்ற செய்தி கொட்டை எழுத்தில் வந்திருந்தது.

இந்த செய்தியை அதே திரியில் நான் இணைத்து விட்டேன். 

அப்படி போட்டால் கோஷான் சிங்களவனுக்கு கவர் எடுக்கிறான் என்ற வசை வரக்கூடும் (கோஷான் தமிழர் உணவை அவமதிக்கிறார் 🤣 என ஏலவே கூறியாகிவிட்டது), ஆனாலும் பரவாயில்லை என்றே இணைத்தேன்.

ஏனோ தெரியவில்லை ஒரு பத்திரிகையில் 6 நாளுக்கு முன்னர் வந்த செய்தியை “சீனா தமிழை பிந்தள்ளுகிறது” என்ற சுய வர்ணனையோடு இணைத்தவர்கள், 5 நாளுக்கு முன் வந்த செய்தியை காணாமல் விட்டு விட்டனர்.

உண்மையிலே பிந்திய செய்தி கண்ணில் படவில்லையா? அல்லது இதுவும் மக்களை முட்டாளாக்கும் வேலையா?

எனக்கு கொஞ்சம் சந்தேக புத்தி.

ஆனால் தொடர்ந்து இன்னொரு தமிழ் தளத்தில் வராத செய்திகளை, சீனா பாஸ்போர்ட் விட்டது, தமிழை புறக்கணித்தது என்று சுயமாக பரப்பும் போது இந்த கோணத்தில் சிந்திக்காமல் இருக்கவும் முடியவில்லை.

இதனால் தனிப்பட்டு தாக்குறார் கோஷான் என்ற கண்டனம் எழக்கூடும். எழும். 

ஆனால் இத்தனை இழப்புக்கு பின்னும், எனது மக்கள் “மொட்டை அடிக்கபடுகிறார்கள்” என்ற சந்தேகம் மனதில் எழுந்து அதை கடந்து போக முடியவில்லை.

அவப் பெயரை இன்னொரு பதக்கமாக குத்தி கொள்ளலாம். காரியமில்லை. யாரோ முகம் தெரியாத ஐடிதானே. நற்பெயரும் ஒட்டாது. அவப்பெயரும் ஒட்டாது.

நான் எழுதுவதால் இப்படியா செய்திகள் குறைந்தாலே அது யாழுக்கும், தமிழ் மட்டுமே அறிந்த  வாசகர்களுக்கும் செய்யும் குறைந்த பட்ச உதவியாகும் என கருதி அமைதி கொள்வேன். 

பிகு: நீண்ட பதிலுக்கு மன்னிகவும். பின்புலத்தை விளக்காமல் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது.

29 minutes ago, விசுகு said:

ஆக.....???🤣

🤣 பாத்து பாத்து எழுதினன் அண்ணை, க்கன்னாக்கு குத்து போட்டுட்டு, த நால தவறிட்டன்🤣

பிகு: உடையார் என் விமர்சனம் உங்கள் மீதல்ல. இலக்கு மீதும் இங்கு சுயமாக இலக்கின்றி பதிபவர்கள் மீதும்தான்.

பிகு பிகு🤣: இலக்கின்றி அல்லது ஒரு இலக்கோடு🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

பின் வரும் காரணங்களை நான் ஊகிக்கிறேன்.

1. மொழியறிவில்லை

2. பரபரப்பு - click bait

3. எமது மக்களை ஒரு பரபரபுக்குள், வெற்று நம்பிக்கைக்குள் வைத்திருப்பது. இலங்கை கடனில் மூழ்கிறது, சீனாவின் சுயாட்சி பிரதேசம் இலங்கையில், நீல பாஸ்போர்ட்டில் தமிழுக்கு பதில் மண்டரின்.  

இப்படி எங்கள் மக்களை திசை திருப்பி விட்டால் - அரசியல், குடியேற்ற தடுப்பு முயற்சி இப்படி எதை பற்றியும் சிந்திக்க மாட்டார்கள் தானே?

இதற்கு ஒரு பொருத்தமான ஆங்கில சொல்லாடல் இருக்கிறது, சட்டென நினைவுக்கு வரேன் என்கிறது. 

இதே போல் நேற்று செய்தி திரட்டியில் “இலங்கையில் ஒரு அரச அலுவலகத்தில் தமிழ் இல்லாமல் ஆங்கிலம், சிங்களம், மண்டரீனில் மட்டும் பெயர் பலகை” சீனா வரும் போதே தமிழை சிதைக்கிறத்கு என கிட்டதட்ட 6 நாள் பழைய செய்தி ஒன்று கொழும்பு டெய்லி மிரரை ஆதாரம் காட்டி இணைக்கப்பட்டது.

அந்த செய்தியில் ஒரு பிழையும் இல்லை.

ஆனால் அதே டெய்லி மிரரில் அடுத்த நாளே - அந்த பெயர் பலகை அகற்ற பட்ட விடயமும், அது கவனகுறைவால் நிகழ்ந்தது மீண்டும் தமிழோடு அமையும் என்ற செய்தி கொட்டை எழுத்தில் வந்திருந்தது.

இந்த செய்தியை அதே திரியில் நான் இணைத்து விட்டேன். 

அப்படி போட்டால் கோஷான் சிங்களவனுக்கு கவர் எடுக்கிறான் என்ற வசை வரக்கூடும் (கோஷான் தமிழர் உணவை அவமதிக்கிறார் 🤣 என ஏலவே கூறியாகிவிட்டது), ஆனாலும் பரவாயில்லை என்றே இணைத்தேன்.

ஏனோ தெரியவில்லை ஒரு பத்திரிகையில் 6 நாளுக்கு முன்னர் வந்த செய்தியை “சீனா தமிழை பிந்தள்ளுகிறது” என்ற சுய வர்ணனையோடு இணைத்தவர்கள், 5 நாளுக்கு முன் வந்த செய்தியை காணாமல் விட்டு விட்டனர்.

உண்மையிலே பிந்திய செய்தி கண்ணில் படவில்லையா? அல்லது இதுவும் மக்களை முட்டாளாக்கும் வேலையா?

எனக்கு கொஞ்சம் சந்தேக புத்தி.

ஆனால் தொடர்ந்து இன்னொரு தமிழ் தளத்தில் வராத செய்திகளை, சீனா பாஸ்போர்ட் விட்டது, தமிழை புறக்கணித்தது என்று சுயமாக பரப்பும் போது இந்த கோணத்தில் சிந்திக்காமல் இருக்கவும் முடியவில்லை.

இதனால் தனிப்பட்டு தாக்குறார் கோஷான் என்ற கண்டனம் எழக்கூடும். எழும். 

ஆனால் இத்தனை இழப்புக்கு பின்னும், எனது மக்கள் “மொட்டை அடிக்கபடுகிறார்கள்” என்ற சந்தேகம் மனதில் எழுந்து அதை கடந்து போக முடியவில்லை.

அவப் பெயரை இன்னொரு பதக்கமாக குத்தி கொள்ளலாம். காரியமில்லை. யாரோ முகம் தெரியாத ஐடிதானே. நற்பெயரும் ஒட்டாது. அவப்பெயரும் ஒட்டாது.

நான் எழுதுவதால் இப்படியா செய்திகள் குறைந்தாலே அது யாழுக்கும், தமிழ் மட்டுமே அறிந்த  வாசகர்களுக்கும் செய்யும் குறைந்த பட்ச உதவியாகும் என கருதி அமைதி கொள்வேன். 

பிகு: நீண்ட பதிலுக்கு மன்னிகவும். பின்புலத்தை விளக்காமல் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது.

இன்னொன்றையும் கவனியுங்கள் சகோ

அது சிங்களவரைவிட தமிழரே அதிக எதிர்ப்பை  காட்டியுள்ளனர்

இதற்கு  காரணம் எமக்கு  தரப்படாதது மற்றவர்களுக்கு தரப்படுகிறது என்ற ஆதங்கத்தால் என்று கூறி தாண்டிவிட முடியாது

உண்மையில் இலங்கை  தேசத்தை  அதிகம் நேசிப்பவர்கள் தமிழரே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

இன்னொன்றையும் கவனியுங்கள் சகோ

அது சிங்களவரைவிட தமிழரே அதிக எதிர்ப்பை  காட்டியுள்ளனர்

இதற்கு  காரணம் எமக்கு  தரப்படாதது மற்றவர்களுக்கு தரப்படுகிறது என்ற ஆதங்கத்தால் என்று கூறி தாண்டிவிட முடியாது

உண்மையில் இலங்கை  தேசத்தை  அதிகம் நேசிப்பவர்கள் தமிழரே.....

உண்மையில் எங்களை கெளரவமா வாழவிட்டிருந்தால் இப்ப டுபாய் சிங்கபூர் மாரி லண்டன்ல இருந்து இலங்கைக்கு வெள்ளையள் வேலைக்கு வந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை- கமால் குணரட்ண

1-100-696x440.jpg
 36 Views

இலங்கை எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண பொதுமக்கள் அமைதியாகயிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது என பொய்ப்பிரச்சாரம் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சும் முப்படையினரும் சட்டஅமுலாக்கல் தரப்பினரும் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையை அடிப்படையாக வைத்து இலங்கை பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது என தகவல்கள் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுவதால் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கின்ற இலங்கையில் எதிர்வரும் நாட்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை ஒன்றை நேற்று விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/?p=50734

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.