Jump to content

சித்தர்கள் ஆலயம்.........ஜீவ சமாதிப் பீடங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சென்னையில் உள்ள ஜீவ சமாதிகள்
 
சென்னையில் திருவொற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். தண்டையார்பேட்டை திருவருள் குணங்குடி மஸ்தான் தர்க்கா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாசல் மாசிலாமணீஸ்வரர் ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளகத்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள். இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.
Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அன்புத்தம்பி said:
சென்னையில் உள்ள ஜீவ சமாதிகள்
 
சென்னையில் திருவொற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். தண்டையார்பேட்டை திருவருள் குணங்குடி மஸ்தான் தர்க்கா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாசல் மாசிலாமணீஸ்வரர் ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளகத்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள். இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.

இந்த  தலங்களில் ஜீவ சமாதி கொண்ட சித்தர்களின் பெயர்களை அறியலாமா?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

இந்த  தலங்களில் ஜீவ சமாதி கொண்ட சித்தர்களின் பெயர்களை அறியலாமா?   

எனக்கும் அதிகம் பெயர்கள்,தெரியவில்லை முடிந்தவரை முயற்சி செய்வோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது.

அவரவருக்குப்பெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்து பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.

கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தராவார். இவருக்குச் சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்குச் சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரைத் திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கோயிலை இருப்பதாகப் பாவித்து வணங்கவும்

அடுத்து ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டிச் சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.

திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடர் ஜீவ சமாதி திருவண்ணாமலை.

புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.

ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகை மலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.

மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.

பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராம்தேவ் சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்றுப் பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.

உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.

அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.

சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.

சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பைச் சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பைச் சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.

அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாகக் கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்குச் சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.

உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்த பிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.

சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாகக் குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.

பூரட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்குத் தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.

உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரைச் சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாகப் பாவித்து வணங்கலாம்.

ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, .

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனியறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளைத் தரத் தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்த்தாவிற்குத் தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்டத் தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்குச் செலவிடுங்கள்.

சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்குத் திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைப்பிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக் கொள்ளுங்கள்…..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
அண்ணன் சுவாமிகள்
 
 
 
அண்ணன் சுவாமிகள் 1989-ம் வருடம் பிப்ரவரி 22-ம் தேதி ஜீவசமாதி அடைந்தார்கள்.தங்களின் தாயாய் இருந்து இத்தனை நாள் காத்து வந்த அண்ணன் அவர்கள் தங்களை விட்டு பிரிந்ததால் மீளா துயரத்தில் இருந்த சீடர்கள் அனைவரும் அண்ணனை ரைஸ் மில்லுக்கு எதிரே உள்ள அண்ணன் குடும்பத்தார்க்கு சொந்தமான மூங்கில் தோட்டத்தில்,சித்த புருஷருக்கு செய்யப்படும் எல்லா கிரியைகளையும் செய்து ஸ்தூல தேகத்தை அடக்கம் செய்ய விழைந்தனர்.
 
        "அண்ணனின் தேகம் வியர்த்துக்கொண்டே இருந்தது அதனை துணிகொண்டு துடைத்துக்கொண்டே இருந்தோம்.." என நேரடி சீடர்கள் பலர் கூறினர்.தன்னை இவ்வுலக விவகாரங்களில் இருந்து ஒடுக்கிகொண்டு ஸ்தூலதேகத்தை விட்டு செல்ல போவதாக அண்ணன் முன்பே பலமுறை கூறி இருந்தார்கள். அண்ணனின் மறைவு சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் ஒரு அதிர்ச்சியாக இருந்தாலும்,அது அண்ணனால் எடுக்கப்பட்ட பராசக்தியின் முடிவு என்பதில் ஐயமில்லை.
 
            பல்வேறுபட்ட சமாதி நிலைகளும், ஞான நிலைகளும் வேதாந்த சித்தாந்த நூல்களில் விளக்கப்பட்டிருந்தாலும்கூட இவற்றிலெல்லாம் சிக்கிக்கொண்டு என்ன வகையான சமாதி நிலையை அடைந்தார் நம் அண்ணன் என வினா எழுப்பும் மன நிலையில் அங்கு ஒருவர் கூட இல்லை. உடலும் மனமும் உடைந்துபோய் தம்மை காத்து நின்ற இந்த அண்ணன் என்கின்ற அம்பாளின் அம்சம்,ஒரு சித்த புருஷர், நம்மை விட்டு பிரிந்து விட்டார்களே என்ற துக்கம் மேலோங்க தம் சுய நினைவை இழந்து அழுது புரண்டவர்கள்தான் அதிகம் அன்று.
 
            அனைவரும் ஒருவாறு இயல்பு நிலைக்கு திரும்பி இனிமேல் என்ன செய்வது என்ற சகஜ நிலைக்கு வந்தபோது, ஜீவசமாதி பீடம் எழுப்பவேண்டும் என முடிவு செய்யப்பட்டு மேற்கூறியவாறு மூங்கில் தோட்டத்தில் அடக்கம் செய்தனர். அதில் பின்பு பீடம் எழுப்பப்பட்டு அண்ணனின் தவக்கோலத்தில் இருக்கும் திரு உருவச்சிலையும் ஸ்தாபிக்கப்பட்டது.இவ்வாறு எழும்பியதுதான் புதூர் ஜீவசமாதி பீடம்.
 
        வெளிப்புற செயல்களால் ஸ்தூலதேகத்தை அடக்கம் செய்து பீடம் எழுப்பப்பட்டது என சாதரணமாக நாம் இங்கு கூறி இருந்தாலும் அண்ணனின் ஜீவசமாதிக்கு பிறகு இங்கு பக்தர்கள்,சீடர்கள் கண்ட காட்சிகள்,பெறும் அனுபவங்கள், அண்ணன் முழு ஜீவனோடு அங்கும் எங்கும் உலாவி தன் பக்தர்களை ஆசீர்வதித்து வருவதை அன்பர்களின் அனுபவங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
 
            கல்லூரியில் படிக்கும் இரு மாணவர்கள் அண்ணனின் ஜீவசமாதி பீடத்தில் அண்ணனை துதித்து நிற்க,அந்த திருஉருவச் சிலையின் மார்பு, சுவாசிக்கும் போது எவ்வாறு ஏறி இறங்குமோ அவ்வாறு அசைந்ததும், அதனைக்கண்டு ஒளி விளக்கின் பிரதிபலிப்போ என இம்மாணவர்கள் ஆராய்ந்து பார்க்க அதே அசைவை மார்பில் மறுபடியும் தொடர்ந்து  தெளிவாக காண இவர்கள் வியப்புடனும், பதட்டத்துடனும் “கடவுள் காட்சியை கண்டேன்...” என அலறிக்கொண்டே வந்து இக்காட்சியை விளக்கியதாக அண்ணனின் சகோதரர் திரு.பக்தவச்சலம் ஐயா எங்களிடம் நினைவு கூர்ந்தார்கள்.
 
          தேவேந்திரன் தன் தேரிலிருந்து இறங்கிவந்து அண்ணனை தரிசித்து சென்ற காட்சியும்,வள்ளலார், அண்ணன் இருவரையும் சேர்த்து ஜீவசமாதி வளாகத்தில் காட்சியாய் கண்ட ஒரு பத்திரிக்கை நிருபரின் அனுபவமும், சீடர் ஒருவருக்கு செயலிழந்து போன கைகள், பிரசாதம் கொடுக்கும் போது தானாக நீண்டு வந்து பிரசாதத்தை வாங்கி சரியானதும்,இன்னும் பலப்பல அற்புதங்கள் நிகழ்ந்து வரும் அவ்விடத்தில்,அண்ணன் ஜீவிதமாய் இன்றும் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கின்றன.
 
        வயதில் மூத்த பல யோகிகள், ஞானிகள் அண்ணனை தரிசிக்க வந்ததும், இமயமலையில் இருந்து பாபாஜி போன்ற மஹாவதார், யோகிகள் ககன மார்க்கமாக அண்ணனை சந்திக்க வந்ததும்,பல பீடங்களின் பொறுப்புக்களும் பிரச்சினைகளும் அண்ணனுடன் கலந்துரையாடல் செய்யப்பட்டு முடிவெடுக்கப்பட்டதும் அண்ணனை ஒரு அதிகார புருஷர் என்று உறுதி செய்வதாகவே அமைந்தன.
 
        எனவே ஞானிகள்,சித்தர்கள் கூட்டம் தான் அண்ணன் தற்போது எந்நிலையில் உள்ளார்கள் என கூற இயலும்.சமாதி நிலைகள் போன்ற சம்பிரதாய வேதாந்தத்தில் நம் அண்ணனின் மறைவை அடைக்க விரும்பவில்லை நாம்.தினம் தினம் அற்புதங்களை நிகழ்த்திவரும் அண்ணன் அவர்கள் நம்மை பொருத்தவரை மரணமிலா பெருவாழ்வு வாழ்ந்து நம் அனைவரையும் காத்து வருகிறார்கள் என்பது மட்டும் நமக்கு புரிந்த ஒன்று.
 
        இந்த ஜீவசமாதி வளாகம் எளிமையும் அமைதியும் நிரம்பிய ஒரு இடம். இங்கு நவீன ஆடம்பரங்களும் ஆரவாரங்களும் நுழையா வண்ணம் இதன் எளிமையை இனிமையை இன்றும் காத்து வருவதில் அண்ணனின் சகோதரர் திரு.பக்தவச்சலம் ஐயா அவர்களின் பங்கு மிகப்பெரியது. பக்தர்கள் தாமாகவே இங்கு தமக்கு பிடித்த வகையில் அண்ணனை வழிபட்டு செல்வதுதான் இங்கு விசேஷம்.சிலர் ஊதுபத்தி ஏற்றியும்,சிலர் மலர் மாலைகளை அணிவித்தும், சிலர் தீபம் ஏற்றியும்,சிலர் மேரி பிஸ்கட்,பழம்,இனிப்பு வகைகளை வைத்தும் அண்ணனை வழிபட்டு நிற்கின்றனர்.24 மணி நேரமும் யாராவது ஒருவர் வந்து செல்வதும்,வழிபட்டு செல்வதுமாய் இவ்விடம் எப்போதும் அமைதியும் ஜீவனும் உடையதாய் இருந்து வருகின்றது.
 
 
திருவாருர்-திருத்துறைபூண்டி வழியில் நால்ரோடு நிறுத்தம் இறங்கி அங்கிருந்து சுமார் 3 கி மீ தொலைவில் உள்ளது புதூர். spacer.png
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6a626d438567ad0139a43acb1984889a.jpg
 

1 துர்க்கை சித்தர்

 

தாம்பரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள படைப்பை கூட்டி ரோட்டில் இறங்கி சென்றால் சரவணா ஐஸ்கிரீம் கடை வரும் அந்த கடைக்கு அருகில் இருக்கும் ஜெயதுர்கா பீடத்தின் கோயிலில் துர்கை சித்தரின் சமாதி இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  02 எதிராஜ ராஜ யோகி

 

தாம்பரத்திற்கு அருகாமையில் இருக்கும் ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து காரணை புதுச்சேரி என்னும் இடத்திற்கு சென்றால் இவரது சமாதியை காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   03 சச்சிதானந்த சாமி

சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து வேளச்சேரிக்கு வரும் வழியில் உள்ள ராஜ கீரப்பாக்கத்தில் சென்னை 78 காணப்படும் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையில் சச்சிதானந்த சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது.

 

 

 
Post-2-780x470-1.jpg

தேனி மாவட்டத்தில் இயற்கை எழில் உடைய கம்பம் பள்ளத்தாக்கினுள்ளும், கம்பத்திலிருந்து எட்டு கி.மீ. தூரத்தில் உள்ளது சுருளிமலை. இந்த மலையில் தோன்றும் நீர்விழ்ச்சிக்கு ‘சுருளி நீர்வீழ்ச்சி என்று பெயர். இத்தகு எழில் பொழிவைக் கொண்ட சுருளி மலைக்கும் தேனிக்கும் இடையே உள்ள சிற்றூரே கொடுவிலார் பட்டி.  இத்தகைய சீர்மிகு ஊரில் குழந்தைவேலு, பேச்சியம்மாள் தம்பதியருக்கு கி.பி.1878 ஆம் ஆண்டு சாமிகள் மகனாகப் பிறந்தார். சாமிகளின் பிள்ளைத் திருநாமம் பழனியாண்டி என்பதாகும். தம்முடைய 60வது அகவையில் துறவறம் வாங்கிய பின் ஏற்பட்ட பெயரே சச்சிதானந்த சாமிகள்.

சாமிகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்வித்தனர். இவர் (மனைவி) மகப்பேறு ஏதுமின்றி, இயற்கை எய்தியதன் காரணமாக, இவர் மீண்டும் மறுமணத்தில் நாட்டமின்றி சந்நியாச மரபைப் பின்பற்ற விரும்பினார். அக்காலத்தில் சுருளிமலை செல்லும் ஞானிகள், அருளாளர்கள் யாவரும்,  முதலில் கொடுவிலார்பட்டி பழனியாண்டியின் வீட்டில் (பிற்காலத்தில் அந்த இடமே சச்சிதானந்தத்தின் ஆசிரம மானது) சில நாட்கள் தங்கிச் செல்வது வழக்கமாக இருந்தது.  அவ்வகையில் வந்த மகான்களில் மிகச்சிறந்த ஒருவரே சொக்கலிங்க சாமிகள்.

சொக்கலிங்க சாமிகள் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கிலேயர் ஆட்சியில், சேலத்தில் உதவி ஆணையராகப் பணியாற்றியவர். நிர்வாண அவதூத ஞானி ஒருவரால் தன்னிலை உணர்த்தப்பட்டு பல காலம் திருவண்ணா மலையில் தங்கி பக்குவ நிலையடைந்தார். அப்பொழுது முன்பின் அறியாத ஒரு சாது, சொக்கலிங்கத்தைப் பெயர் சொல்லி அழைத்து, சுருளிமலைக்குச் சென்று தவம் செய்யக் கூறினார். சுருளிக்குச் சென்ற சொக்கலிங்க சாமிகள் கொடுவிலார்பட்டி பழனியாண்டி இல்லத்தில் தங்கினார்.

சொக்கலிங்க சாமிகளையே குருவாக ஏற்று பழனியாண்டி சாமி ஞானநிலையில் வல்லவரானார். சொக்கலிங்க சாமிகள் பல அமானுஷ்ய சித்துக்களையும் கற்றுக் கொடுத்தார். சொக்கலிங்க சாமிகள் வற்புறுத்தலின் காரணமாகப் பழனியாண்டி சாமி. குருவம்மாள் என்பவரை மணம் புரிந்தார். இத்தம்பதியருக்கு கடைசி மகவாகப் பிறந்தவரே பரஞ்ஜோதி சாமிகள். சொக்கலிங்க சாமிகள் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்தார். குருவின் மறைவுக்குப் பின் ஞான மார்க்கத்தில் முன்னேறிய பழனியாண்டி சாமிகள், அட்டமாசித்திகளும் கைவரப்பெற்றார்.

Picture2-150x300.pngசாமிகள் ஆசிரமத்தில் எப்போதும் அன்ன தானம் முடிவற்று நடந்து கொண்டிருக்கும். ஒரு முறை நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, உணவுப் பங்கீட்டுமுறை அமுலிலி ருந்து, பஞ்சகாலத்தில் அரிசி கிடைக்காமல், மக்கள் யாவரும் சோளம் போன்ற தானியங் களை உண்டு வாழ்ந்தனர். ஆனால் கொடு விலார்பட்டியில் பழனியாண்டி சாமிகள், அரிசியைப் பொங்கி, அன்னதானம் செய்து வந்தார். அதனால் வெள்ளைய அதிகாரிகள், சாமிகள் அரிசியை பதுக்கி வைத்திருக்க வேண்டும் எனக்கருதி, சாமிகளின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஆசிரமத்திற்குள் நுழைந்தனர்.

சாமிகளை அழைத்து, உனக்கு மட்டும் அரிசி எப்படிக் கிடைத்தது? என்று வினவினர். சாமிகள், “இது ஆண்டவன் கொடுத்த அரிசி” என்று இரண்டு கைகளையும் மேல் நோக்கிக் காட்டினார். அப்பொழுது கூரையிலிருந்து அருவியைப் போல அரிசி கொட்டியது. குன்றுபோல் குவிந்தது. இந்த அதிசயத்தைப் பார்த்த அதிகாரிகள் சாமிகளின் ஆற்றலை உணர்ந்து வணங்கிச் சென்றனர். இத்தகு ஆற்றல் பெற்ற சாமிகள் மருத்துவத்திலும் தேர்ச்சிப் பெற்று விளங்கினார்கள். தம்மை அண்டி வந்தவர்களுக்குத் திருநீறும், பச்சிலைகளும், கொடுத்து அவர்தம் நோய்களைக் குணப்படுத்தினார்.

பேரருளாராக விளங்கிய சாமிகள் தம் தொண்ணூற்று ஒன்பதாவது வயதில் 15.08.1976 அன்று பரிபூரண மானார்கள். சாமிகள் மறையும் முன், பன்னிரெண்டு ஆண்டுகள் சென்றபின் திறந்து பார்க்கச் சொன்னார். ஆனால், சாமிகளின் சீடரும் மகனுமான பரஞ்சோதி சாமிகள் பதினான்கு ஆண்டுகள் கழித்தே சமாதியைத் திறந்தார். அப்பொழுது 14 ஆண்டுகளுக்கு முன் சமாதியில் வைக்கும்போது சாமிகளின் ஸ்தூலத் திருமேனி எவ்வாறு இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கக் கண்டார். அதன்பின் சாமிகள் அறிவுறுத்தி சொல்லியபடி சமாதிக்கோயில் எழுப்பினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்க்கரை அம்மாள்

 ஆரணிக்கு தெற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தேவிகாபுரம் என்னும் ஊரில் 18 54 ஆம் வருடம் பிறந்தார் இவர் ஜீவசமாதி அடைந்த நாள் 1901 ஆம் வருடம் பிப்ரவரி 28ம் தேதி இவரது சமாதி இருக்குமிடம் எண் 75 கலாஷேத்திரா ரோடு திருவான்மையூர்.

இவர் பத்து வருடங்கள் ஆகி தவம் செய்து login சித்தரத்தை பெற்றவர் thiru.vi.ka அவர்கள் தாம் வசித்த மாடி மீது சர்க்கரை அம்மாள் பறந்து வந்து நின்று காட்சியை நேரில் கண்டதை உள்ளொளி எனும் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

 

நினைத்ததை நிறைவேற்றித்தரும் பெண் சித்தர் ஸ்ரீசக்கரை அம்மா!

நினைத்ததை நிறைவேற்றித்தரும் பெண் சித்தர் ஸ்ரீசக்கரை அம்மா!

நினைத்ததை நிறைவேற்றித்தரும் பெண் சித்தர் ஸ்ரீசக்கரை அம்மா!

நினைத்ததை நிறைவேற்றித்தரும் பெண் சித்தர் ஸ்ரீசக்கரை அம்மா!

சித்தர்கள் பல்வேறு சக்திகளைக் கொண்டவர்கள். தங்கள் தவ வலிமையின் மூலமாக சாதாரண மனிதர்களால் செய்யமுடியாத பல சாகசங்களைச் செய்பவர்கள். சித்தர்கள் என்றவுடனே நமக்கு எண்ணற்ற ஆண் சித்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சர்வ வல்லமை படைத்த பெண் சித்தர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஆனந்தாம்பாள் என்கிற 'சக்கரை அம்மாள்'.

 

சிவபெருமானையும், ஶ்ரீ சக்கரத்தையும் அனுதினமும் வழிபட்டு வந்தமையால் இவர் 'ஶ்ரீ சக்ர அம்மா' என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் இந்தப் பெயர் மருவி  'ஶ்ரீ சக்கரை அம்மா' வானது.

இவர் 1854- ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில், தேவிகாபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவர் தந்தையின் பெயர் 'சேஷ குருக்கள்'. இவர் தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் அர்ச்சகர் ஆவார். தேவிகாபுரத்தில், ஆனந்தாம்பாளின் வீட்டுக்கு மிக அருகிலேயே பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்திருக்கும். அதனால்  பெரியநாயகி அம்மன் கோயிலின் கருவறையை உற்று நோக்கியபடி மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதுதான் இவரின் பொழுதுபோக்காக இருந்தது. தியானம் பற்றி எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே பல மணிநேரம் சிவமந்திரங்களைச் சொல்லியபடி தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.

 

அவருடைய  9 -வது வயதில் சென்னையில் உள்ள கோமளீச்சுவரன் பேட்டை(புதுப்பேட்டை) சாம்பவ சிவாச்சாரியாருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். கோமாளீச்சுவரன் கோயிலில் அடியார்களுடன் நாள் முழுவதும் ஆன்மிகப் பணிகளைச் செய்துவந்தார். அதேபோல் தன் வீட்டு மொட்டை மாடியிலும் தியானம் செய்துவந்தார். ஆனந்தாம்பாளின்  20 ஆவது வயதில் அவரின் கணவர் உடல்நலக் குறைவால் காலமானார். 

நட்சத்திர குணாம்பாளுடன் உண்டான தொடர்பு

 

கணவரை இழந்தபின்பு தன் சகோதரர் வசித்த போளூருக்கு குடிபெயர்ந்தார். போளூர், திருவண்ணாமலை என அந்தப்பகுதிகளில் வாழ்ந்த அத்தனைச் சித்தர்களின் ஆசிகளையும் பெற்றார். கௌதம முனிவரின் சீடரான 'அடிமுடி சித்தர்' முக்தி நிலையை அடைவதற்கான வழிமுறைகளை ஆனந்தாம்பாளுக்குக் கற்றுத்தந்தார். எப்பொழுதும்  இறைவனைப் பற்றி சிந்திப்பதே முக்தி அடைவதற்கு சிறந்த வழி என்பதையும் போதித்தார். 

நட்சத்திரக் குன்றில் நட்சத்திர குணாம்பாள் என்பவர் வாழ்ந்துவந்தார். அவருடனும் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு ஆனந்தாம்பாளின் மீது நல்ல மதிப்பு இருந்ததால் தனது சிஷ்யையாக ஏற்றுக்கொண்டார். குழந்தையைப் போல் பார்த்துக்கொண்டார். மீண்டும் ஆனந்தாம்பாள் சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததால்தான் கற்று வைத்திருந்த 'இலகிமா' என்னும் வானில் பறக்கும்  வித்தையை அவருக்குக் கற்றுக் கொடுத்தார் . அதேபோல்தான் இறக்கும் தருவாயில் தன் ஆன்மிக ஆற்றல் அனைத்தையும் ஆனந்தாம்பாளுக்கு வழங்கினார் குணாம்பாள்.

 

இவர் சந்தித்த ஆன்மிகப் பெரியவர்கள்:

சுவாமி விவேகானந்தர், அடிமுடிப் பரதேசி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், சேஷாத்ரி சுவாமிகள், விட்டோபா ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றவர் ' ஶ்ரீ சக்கரை அம்மா'. பறந்தே சென்று திருவண்ணாமலையில் ரமண மகரிஷியைச் சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

காஞ்சிப் பெரியவர் தவம்:

1948 ம் ஆண்டு ஜனவரி மாதம், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சக்கரை அம்மாவின் சமாதியில் ஐந்து தினங்கள் தொடர்ந்து தியானம் மேற்கொண்டுள்ளார்.

 

1901 ஆம் வருடம் பிப்ரவரி 28 ம் நாள், சக்கரை அம்மா தம் உடலை விட்டு நீங்கினார். அவருக்கு அவருடைய சீடரான நஞ்சுண்டராவின் இடத்தில் சமாதி உள்ளது. இதன் மேல் கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது. திருவான்மியூர் கலாக்ஷேத்ரா சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. இது காலை 6 -10 மாலை 4 -8 திறந்திருக்கும்.

மிக நுண்ணிய வடிவத்தையும் எடுக்கக்கூடிய 'அணிமா'. சிறிய பொருளைக்கூட பெரிதாக மாற்றக்கூடிய 'மகிமா'. எதையும் மிக லேசானதாக மாற்றக்கூடிய 'இலகிமா'. கம்மியான எடை உள்ள பொருள்களைக் கனமான பொருளாக மாற்றக்கூடிய 'கரிமா'. தான் செல்ல நினைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று வரும் 'பிராப்தி', தன் ஆன்மாவை மற்றொரு உடலில் செலுத்தும் 'பிராகாமியம் 'ஆகிய பல்வேறு திறமைகளை உடையவராக போற்றப்படுகிறார் சக்கரை அம்மா.

 
 

விகடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்


1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வால்மீகி

 திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலின் எதிரில் உள்ள ஒரு கோயிலில் இவரது சமாதி இருக்கிறது

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைவேல்  சுவாமி

 இவரது ஜீவ சமாதி இருக்குமிடம் எஸ் டி பி கில்டு பில்டிங் சித்திரைக் குளம் மயிலாப்பூர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா சுவாமி

 

குழந்தைவேல் சுவாமிகளின் சீடர் இவர் இவரது சமாதி குழந்தைவேல் சாமிகளின் சமாதி இருக்கும் இடத்தில் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பர் சுவாமி 

 

இவரது சமாதி இருக்குமிடம் 171 ராயப்பேட்டை நெடுஞ்சாலை சமஸ்கிருதக் கல்லூரி எதிரில் மயிலாப்பூர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவண்ணாமலை ஆதீனம் சபாபதி சுவாமி

 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் தெற்கு மாட வீதியில் இருக்கும் வசந்த பவன் ஓட்டல் பின்புறம் உள்ள ஆதாம் தெருவில் இவரது சமாதி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர் _ வாசுகி 

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தாண்டியதும் காணப்படும் திருவள்ளுவர் சாலையில் இவரின் சமாதி உள்ளது.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிரதிசய ஆனந்தர்

 

சாங்கு சித்தரின் பிரதான சீடர் இவர்சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை மயானத்தை ஒட்டி காணப்படும் கஜபதி லா  லா தெருவில் இவருடைய சமாதி உள்ளது.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்சிணாமூர்த்தி சுவாமி

 

தண்டையார்பேட்டையில் உள்ள இரயில்வே காலனி இவருடைய சமாதி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்டையார்பேட்டை சித்தர் குப்புசாமி சித்தர் 

 

பாம்பாட்டி சித்தரின் இவர் 1995 ஆம் வருடம் பங்குனி மாதம் பூரட்டாதியில் சமாதி அடைந்தார் இங்கிருக்கும் மயானத்தில் இவருடைய சமாதி இருக்கிறது இங்கு காணப்படும் பிற சமாதிகள் வீரராகவ ஸ்வாமி கொசக் கட்டைசுவாமி மயில்சாமி ஆகியோரின் சமாதிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசுந்தர பிரம்மம்

 மேலே கண்ட முத்துக்கிருஷ்ணன் பிரம்மத்தின் சமாதி இருக்கும் இடத்தின் அருகில் இவருடைய சமாதியும் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணங்குடி மஸ்தான் சாகிப் 

ராயபுரம் காய்கறி மார்கெட் பின்புறம் இவரது சமாதி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினத்தார்

 சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள கடற்கரை ஒட்டி இருக்கும் பட்டினத்தாரின் கோவில் தெரு இவரது சமாதி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடகச்சேரி ராமலிங்க சுவாமி

 இவர் 1949 ஆம் வருடம் ஆடிப்பூரத்தன்று சமாதியானார் திருவெற்றியூர் கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோயில் தெருவில் வடக்கு நோக்கிய காணப்படும் இவருடைய பெயர் கொண்ட மனத்துக்குள் இவர் சமாதி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹைகோர்ட் சாமி( appuduசாமி)

 பாடகச்சேரி ராமலிங்க சாமியின் மடத்துக்குள் இவருடைய சமாதி இருக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரஞ்ஜோதி மகான்

 திருவெற்றியூர் கோல்கேட் பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள நம்பர் நாலு என் உள்ள நெடுஞ்சாலையில் தங்க மாளிகை அருகில் இவருடைய சமாதி உள்ளது.http://brihadeshwarar.blogspot.com/2019/04/blog-post_11.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.