Jump to content

வாழ்க்கை பூப்பூக்கின்றது...: நிழலி


Recommended Posts

சில அடிகளை கடக்க
பல நதிகளை தாண்ட வேண்டி இருக்கு
பல நதிகளை கடக்க
சில அடிகளே போதுமாகவும்
இருக்கின்றது
 
சில நதிகளைக் கடக்க
பல கடல்களை தாண்ட வேண்டி இருக்கு
பல கடல்களைக் கடக்க
ஒரு நதியே போதுமாகவும்
இருக்கின்றது
 
சில தருணங்களை கடக்க
ஒரு வாழ்வே தேவையாக இருக்கு
சில தருணங்களே
பல வாழ்க்கை வாழ்ந்த
நிறைவை தருகின்றது
 
ஒரு விரல் தொடுகைக்காக
பல உறவுகளை இழக்க நேரிடுகிறது
பல உறவுகளை தக்க வைக்க
சில விரல்களை நிராகரிக்க சொல்லுது
 
வாழ்வு வாய்க்கும் என நினைக்கும்
போது வரள்கின்றது
வரண்டு சுடுகாடாகும் எனும் போது
பூப்பூக்கின்றது!
------
 
என் வாழ்வின் இப்ப கடந்து போகும் நிகழ்வுகளை வைத்து சும்மா கிறுக்கியது. Situation கவிதை😁
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:
சில நதிகளைக் கடக்க
பல கடல்களை தாண்ட வேண்டி இருக்கு
பல கடல்களைக் கடக்க
ஒரு நதியே போதுமாகவும்
இருக்கின்றது

Beautifull!!!! ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வை இலகுவானது

ரொம்ப  ரொம்ப இனிமையானது

ருசியானது

அதை அவ்வாறே வாழணும்

முகம்  கொடுக்க துணிவிருந்தால்

வாழ்வு  எல்லாவற்றையும் கற்றுத்தரும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்களாக குத்தும் துன்பகளிடையே காயத்தை ஆற்றுவது அதில் மலரும் பூக்களே........மணம்வீசும் நல்ல கவிதை.....!  🌹

இப்பவும் வீட்டில் இருந்தா வேலை செய்கிறீர்கள்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Contradictions ஐ வைத்து அருமையாக எழுதியுள்ளீர்கள்👏🏾👏🏾👏🏾.

2 hours ago, நிழலி said:
வரண்டு சுடுகாடாகும் எனும் போது
பூப்பூக்கின்றது!

👆🏼இந்த விசயம் வீட்ல தெரியுமோ🤣

பிகு: அது என்ன பூ என்றாலும் - மென்மேலும் பூத்து குலுங்க வாழ்த்து.

Link to comment
Share on other sites

21 hours ago, suvy said:

 

இப்பவும் வீட்டில் இருந்தா வேலை செய்கிறீர்கள்.....!  

ஓமோம்...  அதுவும் வண்ணாத்துப் பூச்சிகள் அழகழகாக தங்கள் நிறங்களை காட்டிப் பறக்கும் கோடை காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டி இருக்கு - இரண்டாவது வருடமாக. சோ சாட்..

21 hours ago, goshan_che said:

 

👆🏼இந்த விசயம் வீட்ல தெரியுமோ🤣

பிகு: அது என்ன பூ என்றாலும் - மென்மேலும் பூத்து குலுங்க வாழ்த்து.

வீட்டுக்கு தெரிந்தால் பூங்கொத்து என்ன பூமரமே காலி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை....நிழலி!

கவிஞர் கண்ணதாசனின் பாடல்களில் சில வரிகள் நினைவில் ஊண்டு!

இறக்கும் திகதி முன்னே தெரிந்தால்...மனிதன் இறைவனை மதிப்பானா? என்பது தான் அது!

வாழ்க்கை திருப்பங்கள் நிறைந்தாக இருப்பதால் தான் அது திரில்லாக இருக்கின்றது என்று நான் நம்புகின்றேன்!

என்னைப் பொறுத்த வரையில், வாழ்க்கை ஒரு நதியைப் போன்றது!

மலையுச்சியில் உற்பத்தியாகி..ஆரம்பத்தில் சிற்றாறாகச் சிறு குழந்தை போலத் தவழ்ந்து, பின்னர் பல சிற்றாறுகள் சேர்ந்து,நீர்வீழ்ச்சியாக வேகத்துடன் பாய்ந்து...பின்னர் சமனிலத்தில் ஓடுகையில்,நீரின் அளவு அதிகமெனினும் அழகாகச் சமதரையில் ஓடிப் பின்னர் தனது மூலமான கடலுடன் கலக்கின்றது! பின்னர் மீண்டும், ஆவியாகி....மழையாகி, மலையுச்சியில் வீழ்ந்து அருவியாகித் தனது பயணத்தைத் தொடர்கின்றது!

எல்லாமே ஒரு வட்டம் தான்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை நிழலி.
எப்படித் தான் அடுக்கடுக்காக வந்ததோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.