Jump to content

இலங்கையில் தனி ஈழம் அமைக்க அமெரிக்க முடிவு....

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தனி ஈழம் அமைக்க அமெரிக்க முடிவு | இந்தியா அமெரிக்கா இலங்கை உள்ளே....

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

எல்லோரும் இந்த You tube பக்கத்தை subscribe செய்து அதை லைக் செய்து  அதன் views ஐ அதிகரிக்குமிடத்து  விரைவில் தமிழ் ஈழம் அமையும் வாய்ப்பு உள்ளது.  

வாய்பபை தவற விடாதீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இப்ப சினிமாவுக்கு அடுத்து தமிழ் நாட்டில் அதிக வருமானம் தரும் தொழில் ஈழ அரசியல் வீடியோக்களை யூடியூப்பில் வெளி இடுவதாகத்தான் இருக்கும் 🤣.

தமிழ் ஈழம், சீனா இலங்கையில் புதிய நாட்டை உருவாக்கியது, நீல கடவுச்சீட்டில் தமிழை நீக்கியது இப்படி தலையங்கம் வைத்தால் ஒரு flat வாங்க deposit போடும் அளவுக்கு லைக்ஸ் சப்ஸ்கிரிப்சன் எகிறும்.

பல தமிழ் நாட்டு இளைஞர்கள் நல்லா இருக்கிறார்கள் அந்த மட்டில் சந்தோசம்.

எனக்கு இந்த வீடியோவில் பிடித்த விடயம் அவரின் பெயர் -மைக் மோகன்.

ஒரு உலக அரசியல் மேதைக்கு, ஆய்வாளருக்கு என்றே செதுக்கிய பெயர்🤣.

Link to comment
Share on other sites

33 minutes ago, goshan_che said:

யாழ்பாண தமிழர் தெலுங்கர் என்பதையும் சேர்த்து கொள்ளலாம்.😃🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்ர பெயர சரியாத்தானே பொடி போட்டிருக்கு.. மைக் மோகணெண்டு.

பிறகென்னத்துக்கு பெடியக் கோவிக்கிறது... 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எல்லோரும் இந்த You tube பக்கத்தை subscribe செய்து அதை லைக் செய்து  அதன் views ஐ அதிகரிக்குமிடத்து  விரைவில் தமிழ் ஈழம் அமையும் வாய்ப்பு உள்ளது.  

வாய்பபை தவற விடாதீர்கள் 

தமிழருக்கு தமிழீழம் வேண்டாம் என்றாலும் 

அமெரிக்காவுக்கோ இந்தியாவுக்கோ தேவை ஏற்பட்டால் தமிழீழம் பிறக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

யாழ்பாண தமிழர் தெலுங்கர் என்பதையும் சேர்த்து கொள்ளலாம்.😃🙃

அத்தோட Malabar inhabitants என்பதையும் சேர்த்து கொள்ள வேண்டுகிறேன்🤣.

அண்மையில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். எம்மை பற்றி பல ஆச்சரியமான விடயங்களை சொல்கிறார் ஆசிரியர்.

https://noolaham.org/wiki/index.php/காலனித்துவ_திருகோணமலை 

Link to comment
Share on other sites

5 minutes ago, goshan_che said:

அத்தோட Malabar inhabitants என்பதையும் சேர்த்து கொள்ள வேண்டுகிறேன்🤣.

அண்மையில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். எம்மை பற்றி பல ஆச்சரியமான விடயங்களை சொல்கிறார் ஆசிரியர்.

https://noolaham.org/wiki/index.php/காலனித்துவ_திருகோணமலை 

 ஆளாளுக்கு ஆராட்சி செய்ய கிடைத்த இனம் நாங்கள் தான்.😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

மைக் மோகனின் பொழிப்புரை நல்ல நகைச்சுவையா இருந்தது.
அதே நேரம் 'ஈழத்தவர்களின் துயரமும், போராட்டமும் இப்படி வெட்டிக்கதை பேசுபவர்களின் பொருளாக மாறுமளவிற்கு இறங்கிவிட்டதே!' என்ற வருத்தமும் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

 ஆளாளுக்கு ஆராட்சி செய்ய கிடைத்த இனம் நாங்கள் தான்.😛

🤣 guinea pigs 🤣.

ஆனால் இந்த ஆராய்சியாளர் ஐரோபாவில் வாழும் தமிழர். மிக நேர்தியாக பழைய அசல் ஆவணங்களை மேற்கோள் காட்டி ஆனால் மிக சுவாரசியமாக எழுதியுள்ளார். @கிருபன் உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

 ஆளாளுக்கு ஆராட்சி செய்ய கிடைத்த இனம் நாங்கள் தான்.😛

"யானை இளைச்சால், எலி கூட குடும்பம் நடத்த கூப்பிடுமாம்.." என்ற சொலவடை ஞாபகத்துக்கு வருதப்பு.. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

Untitled.jpg

மைக் மோகனின் பொழிப்புரை நல்ல நகைச்சுவையா இருந்தது.
அதே நேரம் 'ஈழத்தவர்களின் துயரமும், போராட்டமும் இப்படி வெட்டிக்கதை பேசுபவர்களின் பொருளாக மாறுமளவிற்கு இறங்கிவிட்டதே!' என்ற வருத்தமும் வந்தது.

எம் கடும் துயர காலத்தில் மேற்கை நோக்கி பறக்கும் வசதியற்ற ஆயிரம் ஆயிரம் ஏழை ஈழத்தமிழர்களை தாங்கி பிடித்த, இன்னும் பிடிக்கின்ற மண்/மக்கள்,

எம் போராளிகளின் பின்தளமான மண்,

எம் சகோதர சகோதரிகளின் விழுபுண்ணாற்றிய மண்/மக்கள்.

நன்றி தராசின் முள் எப்போதும் உங்கள் பக்கம் சாய்ந்தே இருக்கும்.

எம்மால் சில மைக் மோகன்களாவது செழிப்புறட்டும் 🙏🏾.

இதை சீரியசாக எடுக்காமல் சிரித்து விட்டு போகும் வரை ஓகே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உண்மை கோசான். அருமையான கருத்து. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழருக்கு தமிழீழம் வேண்டாம் என்றாலும் 

அமெரிக்காவுக்கோ இந்தியாவுக்கோ தேவை ஏற்பட்டால் தமிழீழம் பிறக்கும்.

அப்பிடி ஒரு நிலை வந்தாலும் எங்கடை புத்திமான் பலவான்கள்   மாற்றுக்கருத்து வைச்சு எதிர்ப்பினம்........இஞ்சை பாக்கேல்லையே? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ  நோக்கம் எதுவோ தெரியாது.

ஆனாலும், US congress இன்  தீர்மானம் சிங்களம் செய்யமுடியாதை வலியுறுத்தி இருக்கிறது. 

US congress இன் தீர்மானம் என்பது நிர்வாகங்களை கடந்து நிரந்தரமானது. 

சிங்களம் செய்யமுடியாதற்கான hedge (against the West) ஏ சீனாவை சிங்களம் உள் இருத்தியது அம்பாந்தோட்டையிலும், பொங் சிங் (port city) இலும்.   

இலக்கை தீவை பொறுத்தவரை, US அறுதி முடிவு எடுத்துள்ளதாகவே இதன் சமிக்ஞை போலவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இது யோசிக்க வேண்டிய விடயம்தான் கடஞ்சா.

நல்ல சமிக்ஞையும் கூட.

எனக்கு யு எஸ் நடைமுறைகள் பற்றி அதிகம் தெரியாது.

அடுத்து இந்த resolution ஐ காங்கிரஸ், காங்கிரசின் வெளிவிவகார குழுவுக்கு அனுப்புமாம்.

அதன் பின் என்ன நடக்கும்?

இப்போ உள்ள நிலையில் இருந்து US State Department இன் இலங்கை சம்பந்தமான கொள்கை முடிவுகளை மாற்றும் வரைக்குமான படிமுறைகள் என்ன?

தெரிந்தால் கூறுங்கள்.

ஏனென்றால் இது இப்படியே காங்கிரசில் ஒரு தீர்மானமாக முடங்கி விட்டால் அதிக பலன் இல்லை.

ஆனால் இதன் வழியே அரசின் கொள்கை மாறும் என்றால் - நீண்ட காலத்தின் பின் எமக்காக ஒரு நல்ல செய்தியாக கொள்ளலாம்.

கீழே உள்ள இணைப்பு சில விடயங்களை சொல்கிறது.

  https://www.colombotelegraph.com/index.php/dismal-foreign-policy-failure-of-rajapaksa-regime-war-crimes-resolution-in-u-s-congress/

5 hours ago, தமிழ் சிறி said:

உண்மை கோசான். அருமையான கருத்து. 👍

நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழருக்கு தமிழீழம் வேண்டாம் என்றாலும் 

அமெரிக்காவுக்கோ இந்தியாவுக்கோ தேவை ஏற்பட்டால் தமிழீழம் பிறக்கும்.

மாஸ்டர் கூப்பிட்டு ரெண்டு குட்டு குட்டி, நான் சொல்லுறேன் உங்களுக்கு தமிழ் ஈழம் தான் தீர்வு, விருப்பமில்லாவிடில் வாய் பேசாமல் பொத்திக் கொண்டு இருங்கோ என்றால்...... சிலவேளை ஈழ எதிர் கருத்தாளர்கள் மௌனமாக இருக்கலாம் அல்லது புலிகள் இருந்த போது இருந்த உறங்கு நிலைக்கு போகலாம். நேற்று ஒருவரை கிரிக்கெட் கிளப்பில் சந்தித்தேன், எமது பிரச்சனைக்கு காரணம் இஸ்ரேல் என்று சொன்னார். ஏனப்பா பெரிய வட்டத்தில் நின்று ரவுண்டு அடிக்கிறீங்கள், முதல் உங்களை திருத்தி கொள்ளுங்கள், இயற்கை  உங்கள் வ(லி)ழிக்கு பாதை காட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது யோசிக்க வேண்டிய விடயம்தான் கடஞ்சா.

சிறிலங்காவில் சீனா முற்று முழுதாக கால் பதிப்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு மானப்பிரச்சனையாக இருக்காதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Ahasthiyan said:

 ஏனப்பா பெரிய வட்டத்தில் நின்று ரவுண்டு அடிக்கிறீங்கள், முதல் உங்களை திருத்தி கொள்ளுங்கள், இயற்கை  உங்கள் வ(லி)ழிக்கு பாதை காட்டும்.

வணக்கம் அகஸ்தியன்,

நீங்கள் சொன்ன கருத்தில் மாற்று இல்லை. 

நாம் எம்மை திருத்தி கொள்ளும் செயல்திட்டத்தில் ஒரு படி “நாம் மட்டும்தான் எமது மக்களுக்கு விடிவை வேண்டுகிறோம், நம்மை விட கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் எமது மக்களுக்கு விடிவை வேண்டவில்லை” என்ற மனநிலையை கைவிடுவது என்பதையும் நீங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

அமெரிக்கா தங்க தாம்பாளத்தில் தனிநாடு எடுத்து தந்தால் அதை வேண்டாம் என மறுக்க போகும் ஈழத்தமிழர்கள் மிக சிலரே.

இந்த திரியையே எடுத்து கொள்ளுங்கள் - வீடியோ போட்டவர் ஒரு அமெரிக்கா காங்கிரஸ் தீர்மானத்தில் இருந்து நேரடியாக தனிநாட்டுக்கு தாவுகிறார்.

இது எவ்வளவு அபத்தமானது? இதை அப்படியே ஏற்று சந்தோசமடைவதுதான் அறிவுடமையா?

இதை சுட்டிகாட்டினால் - புத்திமானுக்கு எமது மக்கள் விடுதலை அடைவது பிடிக்காது. நீங்கள் விரும்பாவிட்டாலும் அமெரிக்கா நினைத்தால் தரும் என்று எழுதுவதுதான் எம்மை நாமே திருத்தி கொள்ளும் வழியா?

இங்கே எவனுக்கோ அடிமை சேவகம் செய்வதை விட்டு, எமது மண்ணில், எமது மக்களோடு, ஒரு பூரண சுயாட்சி உள்ள நாட்டில் எனது மொழியை முதன்மையாக கொண்டு வாழ யாருக்குத்தான் கசக்கும்?

ஆனால் இது நடைமுறை சாத்தியமா இல்லையா என பார்க்காமல் யாரோ மைக் மோகன் சொல்வதை கேட்டு கை தட்டுவதா எம் இன விடுதலைக்கான வழி? நாம் திருந்தும் வழி?

இங்கே மைக்மோகன் சொன்னபடி நடக்க போகிறது எல்லாரும் புது பாஸ்போர்ட் எடுக்க ரெடியா இருங்கோ என இரெட்டை வரி கருத்தை பதிந்து என்னாலும் 10 லைக்சை அள்ள முடியும். ஆனால் அதனால் மைக் மோகனை தவிர வேறு யாருக்கு என்ன பலன்?

பிகு: கிரிகெட் இனிதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். 

3 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் சீனா முற்று முழுதாக கால் பதிப்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு மானப்பிரச்சனையாக இருக்காதா?

இந்தியாவுக்கு மானம் இருந்தால்தானே🤣.

பூட்டான், இமாச்சல் பகுதிகளை தக்கவைதாலே போதும் என்ற நிலைதான் இப்போ இந்தியாவுக்கு. 

அமெரிக்காவுக்கு மான, கேந்திர பல பிரச்சனை இருக்கிறது. 

இந்திய முகவரோடு அமெரிக்கா இறங்கி ஆடக்கூடும். ஆடினால் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இந்திய முகவரோடு அமெரிக்கா இறங்கி ஆடக்கூடும். ஆடினால் சந்தோசம்.

இந்த சந்தேகம் எனக்கு இருக்கு. 
நல்லதோ கெட்டதோ எம்மவருக்கு அழிவில்லாமல் இருந்தால் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இது யோசிக்க வேண்டிய விடயம்தான் கடஞ்சா.

நல்ல சமிக்ஞையும் கூட.

எனக்கு யு எஸ் நடைமுறைகள் பற்றி அதிகம் தெரியாது.

அடுத்து இந்த resolution ஐ காங்கிரஸ், காங்கிரசின் வெளிவிவகார குழுவுக்கு அனுப்புமாம்.

அதன் பின் என்ன நடக்கும்?

இப்போ உள்ள நிலையில் இருந்து US State Department இன் இலங்கை சம்பந்தமான கொள்கை முடிவுகளை மாற்றும் வரைக்குமான படிமுறைகள் என்ன?

தெரிந்தால் கூறுங்கள்.

ஏனென்றால் இது இப்படியே காங்கிரசில் ஒரு தீர்மானமாக முடங்கி விட்டால் அதிக பலன் இல்லை.

ஆனால் இதன் வழியே அரசின் கொள்கை மாறும் என்றால் - நீண்ட காலத்தின் பின் எமக்காக ஒரு நல்ல செய்தியாக கொள்ளலாம்.

கீழே உள்ள இணைப்பு சில விடயங்களை சொல்கிறது.

  https://www.colombotelegraph.com/index.php/dismal-foreign-policy-failure-of-rajapaksa-regime-war-crimes-resolution-in-u-s-congress/

நீங்கள் இணைத்த ஆய்வு கட்டுரையில் பல விடயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

US congress இல் வரும் தீர்மானங்கள் எழுந்தமான அல்லது உணர்வு பூர்வ அடிப்படையில் வருபவை அல்ல.

மற்றும் தீர்மானித்தாய் முன்னின்று முன்மொழிந்து, கொண்டுவந்தது எந்த அரசியல்வாதி (தனிப்பட்டவரா), குழு (Foreign Relations Committee போன்றவை ) அல்லது எந்த caucus என்பதில் தீர்மானத்தின் கனதியும், எவ்வளவு கனதியாக US எடுக்கிறது, தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதற்கான US  இன் உத்வேகம் போன்றவை தங்கி இருக்கின்றன.  

கட்டுரையில் சொல்லப்பட்டது  உண்மையானால், அதாவது இது ஏற்கனவே கொள்கை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், US அரசியல் மற்றும் நிர்வாக சம்பிரதாயத்தின் ஊடக வருகிறது.

பூகோள அரசியலில் காரணம் இன்றி காரியம் நடைபெறுவதில்லை என்ற எழுதபடாத நம்பிக்கை இருக்கிறது. 

கட்டுரையில் சொல்லப்பட Biden சொன்னது. ஆனால்  கட்டுரையில் சொல்லப்பட்ட காரணம், ஆத்திரத்தால் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.  

கிந்தியா UNHRC இல் சொன்ன இரு தூண்கள் , ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு ஆதரவு தர முடியாது என்பது (ஆயினும் அதை கிந்தியா ஆத்ம பூர்வகமாகவே சொன்னதா என்ற சந்தேகமும் இருக்கிறது). அதில் நிலபுல ஒருமைப்பாட்டையே கிந்தியா ஓர் தூணாக குறிப்பிட்டு இருந்தது.    

எனது தனிப்பட்ட முறையில், US congress இல் தீர்மானம்  கொண்டுவரப்பட்ட திகதி (may 18) மிகவும் முக்கியமானதும், அப்பட்டமானதும் (explicit) கூட. 

ஏதோ முக்கிய நோக்கத்தை (intention) மற்றும் தகவலை (message) குறித்தே இந்த திகதியில்  (may 18) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். 

மற்றது, கனடா ஒண்டாரியோ மாகாண தமிழ் இனப்படுகொலை கற்றல் வாரம் சட்ட மூல அங்கீகாரத்தின்  சூட்டுடன் US congress தீர்மானம் வந்தது.

இதில் கிந்தியாவுக்கும் ஓர் சமிக்ஞை இருப்பதாகவே எனக்கு படுகிறது. அதாவது இலங்கைத் தீவின் பூகோள  கடிவாளத்தை மீளவும் us கையில் எடுத்துள்ளது.

இந்திய உடைவு பற்றி நாம் எவருமே மூச்சு கூட காட்ட கூடாது (விருப்பம் ஆயினும்) என்பதற்கு இப்போதைய நிலையில் இதுவும் ஓர் காரணம். ஏனெனில், சிங்களதுக்கும் ஏன் கிந்தியாவுக்கும்  வசதியாக போய் விடும். மற்றது US இந்திய அரசை அதனது system த்தின் (democratic capitalist) பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கிறது, பூகோள நலன்களுக்கு அப்பால்.     

இப்படியாக பல கோடிகள்  சொறி சிங்களத்துக்கு காட்டப்படுகிறது. சிங்களம் சீனாவை உள்ளே இழுத்து இருதுகிறது.   
 
இப்படடியாக பல காரியங்கள் அடுக்காக நடைபெறுவது ஒன்றும் சாதாரண coincidence அல்ல என்றே நான் நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

Untitled.jpg

மைக் மோகனின் பொழிப்புரை நல்ல நகைச்சுவையா இருந்தது.
அதே நேரம் 'ஈழத்தவர்களின் துயரமும், போராட்டமும் இப்படி வெட்டிக்கதை பேசுபவர்களின் பொருளாக மாறுமளவிற்கு இறங்கிவிட்டதே!' என்ற வருத்தமும் வந்தது.

போராடிய இனமே வெட்டிக் கதை பேசும்போது பிறர் பேசுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. 

34 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் சீனா முற்று முழுதாக கால் பதிப்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு மானப்பிரச்சனையாக இருக்காதா?

அமெரிக்கனை கூறினீர்கள் சரிதான். இந்தியாவை ஏன் இதற்குள் கொண்டு வருகிறீர்கள். மானத்துக்கும் இந்தொயாவுக்கும் என்ன சம்பந்தம் 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kadancha said:

நீங்கள் இணைத்த ஆய்வு கட்டுரையில் பல விடயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

US congress இல் வரும் தீர்மானங்கள் எழுந்தமான அல்லது உணர்வு பூர்வ அடிப்படையில் வருபவை அல்ல.

மற்றும் தீர்மானித்தாய் முன்னின்று முன்மொழிந்து, கொண்டுவந்தது எந்த அரசியல்வாதி (தனிப்பட்டவரா), குழு (Foreign Relations Committee போன்றவை ) அல்லது எந்த caucus என்பதில் தீர்மானத்தின் கனதியும், எவ்வளவு கனதியாக US எடுக்கிறது, தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதற்கான US  இன் உத்வேகம் போன்றவை தங்கி இருக்கின்றன.  

கட்டுரையில் சொல்லப்பட்டது  உண்மையானால், அதாவது இது ஏற்கனவே கொள்கை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், US அரசியல் மற்றும் நிர்வாக சம்பிரதாயத்தின் ஊடக வருகிறது.

பூகோள அரசியலில் காரணம் இன்றி காரியம் நடைபெறுவதில்லை என்ற எழுதபடாத நம்பிக்கை இருக்கிறது. 

கட்டுரையில் சொல்லப்பட Biden சொன்னது. ஆனால்  கட்டுரையில் சொல்லப்பட்ட காரணம், ஆத்திரத்தால் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.  

கிந்தியா UNHRC இல் சொன்ன இரு தூண்கள் , ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு ஆதரவு தர முடியாது என்பது (ஆயினும் அதை கிந்தியா ஆத்ம பூர்வகமாகவே சொன்னதா என்ற சந்தேகமும் இருக்கிறது). அதில் நிலபுல ஒருமைப்பாட்டையே கிந்தியா ஓர் தூணாக குறிப்பிட்டு இருந்தது.    

எனது தனிப்பட்ட முறையில், US congress இல் தீர்மானம்  கொண்டுவரப்பட்ட திகதி (may 18) மிகவும் முக்கியமானதும், அப்பட்டமானதும் (explicit) கூட. 

ஏதோ முக்கிய நோக்கத்தை (intention) மற்றும் தகவலை (message) குறித்தே இந்த திகதியில்  (may 18) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். 

மற்றது, கனடா ஒண்டாரியோ மாகாண தமிழ் இனப்படுகொலை கற்றல் வாரம் சட்ட மூல அங்கீகாரத்தின்  சூட்டுடன் US congress தீர்மானம் வந்தது.

இதில் கிந்தியாவுக்கும் ஓர் சமிக்ஞை இருப்பதாகவே எனக்கு படுகிறது. அதாவது இலங்கைத் தீவின் பூகோள  கடிவாளத்தை மீளவும் us கையில் எடுத்துள்ளது.

இந்திய உடைவு பற்றி நாம் எவருமே மூச்சு கூட காட்ட கூடாது (விருப்பம் ஆயினும்) என்பதற்கு இப்போதைய நிலையில் இதுவும் ஓர் காரணம். ஏனெனில், சிங்களதுக்கும் ஏன் கிந்தியாவுக்கும்  வசதியாக போய் விடும். மற்றது US இந்திய அரசை அதனது system த்தின் (democratic capitalist) பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கிறது, பூகோள நலன்களுக்கு அப்பால்.     

இப்படியாக பல கோடிகள்  சொறி சிங்களத்துக்கு காட்டப்படுகிறது. சிங்களம் சீனாவை உள்ளே இழுத்து இருதுகிறது.   
 
இப்படடியாக பல காரியங்கள் அடுக்காக நடைபெறுவது ஒன்றும் சாதாரண coincidence அல்ல என்றே நான் நினைக்கிறன்.

இந்தியா சிதற வேண்டும் என பகிரங்கமாகக் நான் கூறுவதற்கான பிரதான காரணம், தமிழரின் கோபத்தையும் மனமாற்றத்தையும் பிற அறிய வேண்டும் என்பதற்காகவே.

இவ்வாறு கூறுபவர்களுக்கு எதிர்காலத்தில் பல அசெளகரியங்கள் கூட ஏற்படலாம். ஆனால் எங்களின் கோபம், மாற்றம் வெளிப்படுத்தப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இப்போதைய நிலையில் இப்படியான (தனி ஈழம், நாடு அல்லது அரசு அமைப்பது) போன்ற தலையங்களை தவிர்கபட வேண்டும்  (youtube அல்லது எந்தவொரு social media யிலும்).

உழைப்பு வேண்டுமாயின், வேறு பல topics இருக்கிறது.  இலங்கைத்த் தீவில் இருக்கும் தமிழராய் வைத்தோ அல்லது குளிர் காய்வதை கைவிடுங்கள்.

இப்பொது கூட ஏற்கனவே இலங்கைத் தீவில் இருக்கும் State system இற்கு உள்ளே., தமிழருக்கு ஓர் இடம் (accommodation) ஏற்படுத்தி கொடுப்பதே மேற்காலும் (the West), கிந்தியாவாலும்   வெளிப்படையாக காட்டப்படுகிறது.

அதை கூட இந்த பொறுப்பற்ற வீடியோ கள், தமது உழைப்பிற்காக, குழம்பினாலும் தாம் உழைத்தால் போதும் என்ற சுயநல எண்ணத்தில் வெளியிடுகிறார்கள்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

நீங்கள் இணைத்த ஆய்வு கட்டுரையில் பல விடயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

US congress இல் வரும் தீர்மானங்கள் எழுந்தமான அல்லது உணர்வு பூர்வ அடிப்படையில் வருபவை அல்ல.

மற்றும் தீர்மானித்தாய் முன்னின்று முன்மொழிந்து, கொண்டுவந்தது எந்த அரசியல்வாதி (தனிப்பட்டவரா), குழு (Foreign Relations Committee போன்றவை ) அல்லது எந்த caucus என்பதில் தீர்மானத்தின் கனதியும், எவ்வளவு கனதியாக US எடுக்கிறது, தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதற்கான US  இன் உத்வேகம் போன்றவை தங்கி இருக்கின்றன.  

கட்டுரையில் சொல்லப்பட்டது  உண்மையானால், அதாவது இது ஏற்கனவே கொள்கை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், US அரசியல் மற்றும் நிர்வாக சம்பிரதாயத்தின் ஊடக வருகிறது.

பூகோள அரசியலில் காரணம் இன்றி காரியம் நடைபெறுவதில்லை என்ற எழுதபடாத நம்பிக்கை இருக்கிறது. 

கட்டுரையில் சொல்லப்பட Biden சொன்னது. ஆனால்  கட்டுரையில் சொல்லப்பட்ட காரணம், ஆத்திரத்தால் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.  

கிந்தியா UNHRC இல் சொன்ன இரு தூண்கள் , ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு ஆதரவு தர முடியாது என்பது (ஆயினும் அதை கிந்தியா ஆத்ம பூர்வகமாகவே சொன்னதா என்ற சந்தேகமும் இருக்கிறது). அதில் நிலபுல ஒருமைப்பாட்டையே கிந்தியா ஓர் தூணாக குறிப்பிட்டு இருந்தது.    

எனது தனிப்பட்ட முறையில், US congress இல் தீர்மானம்  கொண்டுவரப்பட்ட திகதி (may 18) மிகவும் முக்கியமானதும், அப்பட்டமானதும் (explicit) கூட. 

ஏதோ முக்கிய நோக்கத்தை (intention) மற்றும் தகவலை (message) குறித்தே இந்த திகதியில்  (may 18) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். 

மற்றது, கனடா ஒண்டாரியோ மாகாண தமிழ் இனப்படுகொலை கற்றல் வாரம் சட்ட மூல அங்கீகாரத்தின்  சூட்டுடன் US congress தீர்மானம் வந்தது.

இதில் கிந்தியாவுக்கும் ஓர் சமிக்ஞை இருப்பதாகவே எனக்கு படுகிறது. அதாவது இலங்கைத் தீவின் பூகோள  கடிவாளத்தை மீளவும் us கையில் எடுத்துள்ளது.

இந்திய உடைவு பற்றி நாம் எவருமே மூச்சு கூட காட்ட கூடாது (விருப்பம் ஆயினும்) என்பதற்கு இப்போதைய நிலையில் இதுவும் ஓர் காரணம். ஏனெனில், சிங்களதுக்கும் ஏன் கிந்தியாவுக்கும்  வசதியாக போய் விடும். மற்றது US இந்திய அரசை அதனது system த்தின் (democratic capitalist) பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கிறது, பூகோள நலன்களுக்கு அப்பால்.     

இப்படியாக பல கோடிகள்  சொறி சிங்களத்துக்கு காட்டப்படுகிறது. சிங்களம் சீனாவை உள்ளே இழுத்து இருதுகிறது.   
 
இப்படடியாக பல காரியங்கள் அடுக்காக நடைபெறுவது ஒன்றும் சாதாரண coincidence அல்ல என்றே நான் நினைக்கிறன்.

நீண்ட ஆழமான பதிலுக்கு நன்றி.

Private Members Bill க்கும் ஆளும் அரசு கொண்டுவரும் விடயங்களுக்கும் இங்கே பல கனதி வித்தியாசங்கள் உண்டு. அங்கும் அப்படித்தான் போலிருக்கிறது.

நானும் இவை coincidence இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

அடுத்து யூகேயில், ஈயுவில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். 

அமெரிக்காவில் ஒன்று நிகழ்ந்தால் இங்கே அதற்கான கோரஸ் எழும். அப்படி நடந்தால் இவை ஒரு சீர் அமைக்கபட்ட நடவடிக்கைகள் என்பது இன்னும் உறுதியாகும்.

இந்த கட்டுரையாளர் அரசை விமர்சிப்பவர், தரவுகள் சரியாக இருப்பினும் அவரின் வியாக்கியானங்களில் அந்த bias இருக்கும் என்பதையும் கருத வேண்டும்.

35 minutes ago, Kadancha said:

ரையில் சொல்லப்பட்டது  உண்மையானால், அதாவது இது ஏற்கனவே கொள்கை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், US அரசியல் மற்றும் நிர்வாக சம்பிரதாயத்தின் ஊடக வருகிறது.

இதைதான் சொல்கிறேன். இது தரவு அடிப்படையில் அன்றி கட்டுரையாளர் சேர்த்த உப்பு, புளி போல எனக்கு படுகிறது.

39 minutes ago, Kadancha said:

எனது தனிப்பட்ட முறையில், US congress இல் தீர்மானம்  கொண்டுவரப்பட்ட திகதி (may 18) மிகவும் முக்கியமானதும், அப்பட்டமானதும் (explicit) கூட. 

ஏதோ முக்கிய நோக்கத்தை (intention) மற்றும் தகவலை (message) குறித்தே இந்த திகதியில்  (may 18) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். 

மற்றது, கனடா ஒண்டாரியோ மாகாண தமிழ் இனப்படுகொலை கற்றல் வாரம் சட்ட மூல அங்கீகாரத்தின்  சூட்டுடன் US congress தீர்மானம் வந்தது.

👌 நுட்பமான பார்வை. திகதி தேர்வு நிச்சயமாக தற்செயல் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.