Jump to content

இலங்கையில் தனி ஈழம் அமைக்க அமெரிக்க முடிவு....

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அவை ஒரு குறையும் வைக்கேல்ல. ஏன் தமிழர்களும் சீலையை குறுக்குக்கட்டாக உடுத்தியவர்கள்தானே..

என்ன மலையாளத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணுதான்.. ஆனால் சிங்களம் எக்காய், தெக்காய், துணாய்.. அதுக்கு அங்கால என்ன இழவெண்டே தெரியாத பாஷை!

3 வரை எண்ணுவதே நேர வேஸ்ற்.😄

Link to post
Share on other sites
 • Replies 69
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அதற்காக போராட கூடாது என்பதில்லை. இப்போ அமெரிக்காவுக்கு ஆள் தேவை படும் போது (தேவைபட்டால்) சம்/சும், ஜி ரி எப், போன்றோரைதான் அணுக போகிறாரகள்.  அப்போ ரெடியா இருந்து, தனிநாடு தா, இப்போதே குடியேற்றங்க

நீங்கள் இணைத்த ஆய்வு கட்டுரையில் பல விடயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. US congress இல் வரும் தீர்மானங்கள் எழுந்தமான அல்லது உணர்வு பூர்வ அடிப்படையில் வருபவை அல்ல. மற்றும் தீர்மானித்தாய் முன்ன

எல்லோரும் இந்த You tube பக்கத்தை subscribe செய்து அதை லைக் செய்து  அதன் views ஐ அதிகரிக்குமிடத்து  விரைவில் தமிழ் ஈழம் அமையும் வாய்ப்பு உள்ளது.   வாய்பபை தவற விடாதீர்கள் 

 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தமிழீழம் அமைப்பதில் உறுதிகொண்டுள்ளது. அமைத்து யாரிடம் கொடுப்பது என்று சிந்தித்தபோதுதான் கிறுதி வந்துவிட்டதாம். 🤔😲

அமெரிக்கா விரைந்து நலம்பெற வேண்டுகிறேன்.:100_pray:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

இது சிங்களம்.

இலங்கையில் அசத்திய வெளிநாட்டுப் பெண்கள் : வியப்பில் சிங்கள மக்கள்!! – Netrigun

இது மலையாளம்.

RASALEELA MALYALAM ACTRESS PRATHISHTA UNSEEN HOT IMAGES GALLERY IN HIGH QUALITY

உங்களுக்கு சிங்களமும் சிங்கள கலாச்சாரமும் சிங்கள நோனாக்களும் என்ன குறை வைச்சவை.

உடுப்பு கூட அங்கத்தையான் மாதிரித்தானே இருக்கு...

அண்ணருக்கு எங்கட ஆச்சியள் கட்டின கம்பாய சேலை இவ்வளவு கெதியா மறந்து போச்சே?

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

US காங்கிரஸ் தீர்மானத்திற்கும், கீழே உலா செய்துக்கும் தொடர்பு இருப்பதாகவே கருத வேண்டி உள்ளது  
 
சில முக்கியமான பந்திகள் மட்டும். (கிந்தியாவுக்கு ஆப்பு).  

செய்தி சொல்லும் சொத்துக்கள், நிலங்கள்  விற்கப்படும் என்று  port city தொடங்கும் பொது அரசால் புரசலாக வெளிவந்தாலும், செய்தியின் படி மிக விரைவாக நடைபெறுகிறது.
 
https://www.colombotelegraph.com/index.php/after-port-city-gota-set-to-sell-colombo-fort-slave-island-heritage-buildings-to-china-backed-firms/comment-page-1/#comment-2395108

After Port City, Gota Set To Sell Colombo Fort, Slave Island Heritage Buildings To China-Backed Firms...

...

The Government of President Nandasena Gotabaya Rajapaksa looks set to sell hundred acres of prime land to Chinese companies in the Colombo Fort and Slave Island areas, as Beijing continues to seize strategic control of Sri Lanka’s capital city, its major highways, and ports, Colombo Telegraph learns.

...

The proposal seeks to open multiple state-owned properties and UDA holdings for investment.

Ear-marked for “investment” under these portfolios are the Grand Oriental Hotel (GOH), the Gafoor Building, York Building, Republic Building (Ministry of Foreign Affairs), the General Post Office building (Slave Island), Hilton Hotel, Water’s Edge Hotel, Cey Nor Restaurant (Slave Island), International Coordination Centre, Kankesanthurai (Jaffna), and Grand Hyatt Colombo.

Colombo Telegraph learns that the second phase of this Rajapaksa leasing/selling spree will include the Sri Lanka Air Force HQ, SLAF Grounds, other military holdings including the FCID headquarters on Chatham Street where CHEC already has its plush offices in Colombo.

....

“By the time Gotabaya Rajapaksa concludes the first term of his presidency, China will have wrested control of several ports in the island and strategic inland property. It will own the bulk of Sri Lanka’s debt, as Colombo repeatedly leans on President Xi Jingping for bailouts amidst a serious debt crisis. Any Government that follows this regime will be saddled with this economic and strategic subjugation – there will almost be no way out,” the analyst, who did not wish to be named, told Colombo Telegraph.

Colombo was already behaving like a vassal state, with the President himself or five-man ministerial delegations going to the airport to accept delivery of the Sinopharm vaccines being donated by Beijing, the analyst pointed out. “There is no question that with every move it makes, the Rajapaksa administration making it known that it is a willing client of the Chinese Government and a supporter of Beijing’s expansion in the Indian Ocean,” the analyst told Colombo Telegraph.

As it expands its strategic advantage in Sri Lanka, Beijing has been careful to invest in all influential sections of society in the island – Buddhist temples and their chief incumbents, senior journalists and media houses, powerful trade unions in the port and medical sectors and local politicians, Colombo Telegraph learns authoritatively. Beijing also has assets situated in senior levels of the ruling Gotabaya Rajapaksa administration that are constantly looking out for China’s interests in all matters, it is learnt. Beijing’s cyber-intrusion into Sri Lanka’s social media landscape has also been noteworthy, and seen an escalation in recent months it is learnt.

It was the determination to create a monopoly on the island’s ports that led to Beijing’s mobilisation of monks and trade unions and other stakeholders to staunchly oppose the lease of the East Container Terminal in the Colombo Port to an India-Japan led joint venture, the analyst explained.

“The west terminal of the Colombo Port is very different – there is nothing there yet in terms of infrastructure, and the way the deal was manoeuvred to be handed over to the Adhani Group of India, it doesn’t look like the Indian Government will have a major role to play in the transaction,” the analyst noted. In the coming years, Sri Lanka’s national electoral battles will also become a form of proxy war between Beijing Vs. The Quad. We saw some measure of that in the 2015 presidential election when the Chinese Ambassador in Colombo himself became a canvasser of votes for the sitting President. We should expect to see this on a much bigger scale in the future,” the analyst added. (By Nimal Ratnaweera)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாயக கோட்பாட்டை அமெரிக்கா அங்கீகரிப்பதற்கு ரெலோ வரவேற்பு – ஊடகப்பேச்சாளர் சுரேன்

suren-telo-696x348.png
 2 Views

அமெரிக்க காங்கிரஸ் தமிழர் தாயக பூமியான இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை தமிழரின் பூர்வீக தாயகமாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை வரவேற்பதாக ரெலோ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரெலோ அமைப்பின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

” அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் செனட்டர்களின் ஏற்பாட்டிலே இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் தமிழர்களின் பூர்விகத் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை தயாரித்து வெளியுறவுக் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவர்களின் அங்கீகாரத்தின் பின்னர் இது செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பம் நிலவுகிறது.

அமெரிக்காவினுடைய இந்த நிலைப்பாடு தமிழர்களுடைய தாயகக் கோட்பாட்டினை சர்வதேச அரங்கிலே அங்கீகரிப்பதற்கானதும் எம்முடைய இனத்தினுடைய தேசியக் கோரிக்கைகளை படிப்படியாக வெற்றிபெற உதவும் நிலைப்பாடாக அவதானிக்கிறோம்.

இதன் பின்னணியாக அண்மையில் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் அமைந்துள்ளது.

ஒன்றிணைந்த வடகிழக்கு பிரதேசத்தை வலியுறுத்திய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1987 ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் பூகோள அரசியலில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை தமிழ் தரப்புகள் தட்டிக் கழிக்க முடியாது. இணைந்த வடக்கு கிழக்கு இலங்கைத் தமிழரின் வரலாற்று அல்லது பூர்விக வாழ்விடப் பிரதேசங்கள் என்பதை வலியுறுத்தி இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் இன்று சர்வதேச அரங்கிலே குறிப்பாக அமெரிக்கா வடக்கு கிழக்கு இலங்கை தமிழரின் பூர்விகத் தாயகமென அங்கீகரிக்க முனைய வழியமைத்திருக்கிறது.

இப்பிரேரணை வெளியுறவு கமிட்டியின் அனுமதியை பெறும் பட்சத்தில் அமெரிக்க செனட் சபையில் ஏற்றுக் கொள்ளப்படும். இது தமிழரின், இணைந்த வடக்கு கிழக்கு தாயகக் கோட்பாட்டுக்கும் அதன் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்குமான கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் அமெரிக்காவின் வெளியுறவு கமிட்டியின் முடிவு இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தங்கியுள்ளது. உள்ளக அரசியலில் தமிழர் தரப்பாகிய நாம் ஒன்று பட்ட குரலுடன் செயல்படுவதே சர்வதேச நாடுகளின் முயற்சிக்கு பலமளிக்கும்.

இப்பூகோள சூழல்களை உணர்ந்து அதை எமது மக்களுக்கு சாதகமாக்க தமிழர் தரப்பின் ஐக்கியத்தின் அவசியத்தை அண்மையில் நாம் வலுயுறுத்தியுள்ளோம். அதற்கான ஆரம்ப கட்ட பேச்சுக்களையும் முன்னெடுத்துள்ளோம்.

தமது பதவிகள், தேர்தல் நோக்கங்கள், கட்சி நலன்கள் , தற்பெருமை என்பவற்றை கடந்து நாம் இந்த கணத்தில் எம்மக்களுக்காக ஒன்றுபட்டு சர்வதேச அரசியல் சூழலை சாதகமாக்க செயல்படத் தவறினால், எந்த நியாயப் படுத்தலுக்கும் அப்பால், பாரிய வரலாற்றுத் துரோகத்தை இழைத்தவர்கள் ஆவோம்.

https://www.ilakku.org/?p=51349

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க காங்கிரஸில் புலிகளின் ஆதரவாளர்கள் உள்ளதாக இலங்கை குற்றச்சாட்டு

1-3-696x387.jpg
 48 Views

அமெரிக்க காங்கிரஸில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உள்ளனர் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் மே 18 ம் திகதி சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டொபோரா கே ரொஸ் உட்பட ஐந்து உறுப்பினர்கள் தீர்மானமொன்றை சமர்ப்பித்துள்ளதை கவனத்தில் எடுத்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மே 18 ம் திகதி சபையின் வெளிவிவகார குழுவின் பரிசீலனைக்கு அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தீர்மானத்தில் ஆதாரமற்ற அப்பட்டமான பொய்களை அடிப்படையாக கொண்ட குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தின் நோக்கம் குறித்து கடும் சந்தேகங்கள் எழுவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.ilakku.org/?p=51352

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையாக எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு, சிங்களம் pathfinder (மிலிந்த மொரகொடவின்) ஊடாக,  Asia Society Policy Institute (ASPI) பின்னணியுடன், காய்களை நகர்த்துகிறது.  

http://www.lankaweb.com/news/items/2021/06/02/pathfinder-foundation-asia-society-policy-institute-report-on-sri-lanka-us-bilateral-relations-handed-over-president-gotabaya-rajapaksa/

அனாலும், தென்சூடானுனின் 160 வரையான cosponsors  ஒப்பிடும் போது, இதன் cosponsors மிகவும் குறைவு.

தீர்மானமே தமிழரின் கோரிக்கை என்று சொல்லி இருப்பதால்,  தமிழர் ஒவொருவரும் பகிரங்க கோரிக்கையாக ஏனைய  காங்கிரஸ் உறுப்பினர்களிடம் cosponsor செய்யுமாறு கோரலாம்.

change.org இல் ஓர் petition ஐ தொடங்கலாம் 117 ஆவது  US காங்கிரஸ் க்கு மனுவாக. முக்கியமாக நேரடியாக பாதிக்கப்பட்டோர் (காணாமல்போனோர், பலவேறு நாடுகளில் இருக்கும் தமிழ் அகதிகள் உதவி அமைப்புகள்  , இப்படியாக உள்ள பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து).   

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குறித்த தீர்மானத்தை கைவிடுங்கள் – தூதுவர் ரவிநாத அமெரிக்காவிடம் கோரிக்கை

%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%
 3 Views

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் மீது எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டாம் என அமெரிக்க வெளிவிவகாரக் குழுவிடம் இலங்கை அவசரக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. வாஷிங்டனிலுள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக கொழும்பில் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கடந்த 18 ஆம் திகதி இலங்கை குறித்த கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இரண்டு தினங்களுக்கு முன்னர் தமது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக தற்போது மற்றொரு அவசர கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

“பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் உள்ளடக்கத்தில் இலங்கை மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை, பக்கசார்பானவை, ஆதாரமற்றவை” எனத் தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், “இந்தத் தீர்மானம் என்ன நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது” என்பதையிட்டு பாரிய சந்தேகம் எழுந்திருப்பதாகவும் இலங்கை தெரிவித்திருக்கின்றது.

தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஆவணத்தில், குறிப்பிட்ட தீர்மானம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அதில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“பாரம்பரிய தமிழர் தாயகம்” எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம், பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படுவதுடன், இலங்கையின் தன்மையைக்  கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இது சரித்திர உண்மைகளைத் திரிவுபடுத்துவதாகவும், தற்கால யதார்த்தங்களுக்கு முரணானதாகவும் அமைந்திருக்கின்றது. இது இலங்கையைச் சிதைவுபடுத்துவதற்கும் விடுதலைப் புலிகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் தமது இலக்குகளை அடைவதற்கு ஆதரவாகவே உள்ளது.

சர்வதேச பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போதைய தருணத்தில் ஒரு சூழ்ச்சிகரமானதாகும். ஏனெனில் அரசாங்கம் கடந்த ஜனவரியில் நம்பகத்தன்மையானதும், வெளிப்படையானதுமான ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. 2021 மார்ச் 4 ஆம் திகதி இந்த விசாரணைக்குழுவுக்கு யாரும் எழுத்துமூலமாகவோ அல்லது வேறுவடிவத்திலோ தமது கருத்துக்குளை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தக் குழு விசாரணைகளை முன்னெடுக்கின்றது.”

இவ்வாறு இந்த ஆவணத்தில் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

https://www.ilakku.org/?p=51589

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2021 at 12:20, Kapithan said:

இந்தியா சிதற வேண்டும் என பகிரங்கமாகக் நான் கூறுவதற்கான பிரதான காரணம், தமிழரின் கோபத்தையும் மனமாற்றத்தையும் பிற அறிய வேண்டும் என்பதற்காகவே.

இவ்வாறு கூறுபவர்களுக்கு எதிர்காலத்தில் பல அசெளகரியங்கள் கூட ஏற்படலாம். ஆனால் எங்களின் கோபம், மாற்றம் வெளிப்படுத்தப்பட வேண்டும். 

புத்தியை பாவித்து, வேறு ஒரு வழியில் அணுகலாம். அது கிந்தியா யானையின் தும்பிக்கையில் எறும்பு என்ற நிலையாக இருக்கும் என்று நினைக்கிறன்.

நீங்கள் சொல்வது மனதில்  உள்ள வெப்பியாரத்தை தனிப்பதாக இருக்கலாம், ஆனால் செயல் அளவில் அளவில் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. மற்றும், அது (சிதறல்) எனும் கருத்து எம்மைக்கு எதிராக திரும்ப, திருபுபடுவதற்கு பல இடம், பொருள், ஏவல், காலம், வாய்ப்புகள் உள்ளது.

இப்போதைய US காங்கிரஸ் தீர்மானம் வடகிழக்கு வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு வந்துள்ளது என்பதை ஏற்கிறது.

இதில் கிந்தியாவின் பங்கை, 100 வருடங்களுக்கு மேல் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து இலங்கைத்தீவின் பொருளாதாரத்தை தூக்கி பிடித்த  மலையக தமிழர் ஒடுக்கப்பட்டு, பின்பு அதில் பாதியான சனத்தொகை அவர்களின் விருப்பு இன்றி, வலோற்றகரமாக நாடுகடத்தப்பட்டனர். இலங்கைத்தீவில்  இந்த நவீன  இனச் சுத்திகரிப்பை செய்ததின் சூத்திரதாரியும், முதன்மை பங்காளரும் கிந்தியாவே. பிரச்னை இது இப்பொது மழுங்கடிக்க பட்டு விட்டது.    பின் கிந்தியாவின் 1987, 2009 இனச்சுத்திகரிப்பு, படுகொலை போன்றவற்றின் பங்குகளை சுட்டி காட்டியும். 

கிந்தியாவே வரலாற்று ரீதியான ஒடுக்குமுறையை இலங்கை தீவில் உள்ள தமிழருக்கு செய்து உள்ளது என்றதை US காங்கிரஸ் மற்றும் செனட் உறுப்பினர்களுக்கு கொண்டு செல்லலாம்.

மலையகத்தமிழரின் வலோற்கார  நாடு அப்புறப்படுதலை, US இன் Lincoln காலத்துக்கு தொடர்பு படுத்துவது  (இதை பற்றிய வரலாற்றை முதலில்  அறியுங்கள்  ) US காங்கிரஸ் மற்றும் Senate உறுப்பினர்களுக்கு ஓர் உணர்வு பூர்வமான புரிதலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சுருக்கமான  வரலாறு, US  Liberea ஐ சுதந்திர அரசாக உருவாக்க முதல்,    Lincoln US இல்  உள்ள கறுப்பர்களை Librea ஆவிற்கு குடிபெயர்த்து, அவ்ரக்ளுக்கு என்ற ஒரு நாட்டை உருவாக்கி, விருத்தி செய்ய   US முழு உள பூர்வமாகவும், மூச்சுடனும் முன்னின்று செயற்றப்படுவதே அந்த திட்டம், பின்பு கைவிடப்பட்டது. Lincoln, US civil war ஐ நடத்தினார், ஓர் காரணம்  அடிமைத்தனத்தை US government system இல் இருந்து அகற்றுவதற்கு.       ஹிந்தியை செய்தது எல்லாம் ஓர் இனம் இன்னொரு இனத்தை ஒடுக்குவதற்கும், அழிப்பதற்கும் ஆன சூழ்நிலைகளை நீடித்தது  ஆழத்து பலப்படுத்தியது. இது கிந்தியாவின் நோயான தமிழர் மீதுள்ள வெறுப்பும், அருவருப்பும்.             

அதனால்,   இலங்கைத் தீவில் உள்ள தமிழர் மற்றும் வடக்கு கிழக்கிற்கு, கிந்தியாவின் கொள்கைகளில் இருந்து தனித்தும், சுதந்திரமானதகவும் us இன்  கொள்கைகள் இருக்க வேண்டும் என்பதை கேட்கலாம். இது ஒருவரையும் தாக்காது, அனால், கிந்தியவிற்கு தலையில் ஆப்பு அடித்ததாகவும், மடியில் வெந்தணலும் வைத்ததாகவும்  இருக்கும்.  இது ஓரிரு நாள் வேலை அல்ல. திட்டமிட்டு program ஆக செய்ய வேண்டும்.

இதை சிந்தித்து பார்க்கவும்.

தீர்மானத்தின் முதல் விளைவு, USAID வேலை செய்வதற்கு சிங்களம் வரவழைத்து உள்ளது. 

பெயர் USAID ஆயினும், அதில் அமரிக்காவின் பல்வேறு உளவு அமைப்புகளின் (CIA, DIA, NSA) பிரதிநிதிகளும் USAID இல் உள்ளனர், உளவு பார்ப்பதற்காக.  

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியமும் மனித உரிமை, பயங்கரவாத சட்டத்தை மறுசீரமைத்தல் போன்ற ஓர் தீர்மானத்தை இயற்றி உள்ளதாக செய்திகள். விபரம் தெரியவில்லை. 

அனால், us  காங்கிரஸ் தீர்மானத்தை விட விடயப் பரப்பின் அள்வு EU தீர்மானத்தில் குறைவாக இருந்ததாகவே தெரிகிறது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம். 

https://www.europarl.europa.eu/doceo/document/RC-9-2021-0355_EN.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பெரிய தகப்பன் சாமிகளாக விழுந்தடித்து எமது கூத்தமைப்பு இடையே போய் விழுந்து 
குடுமியை திரும்ப கொண்டு போய் ஹிந்தியாவிடம் கொடுக்க அனுமதிக்காமல், அமைதியாக வேடிக்கை பார்ப்பதே பொருத்தமானது. இன்னும் பல விடயங்கள் மிகவிரைவில் வரலாம், அதற்கு எமது அரசியல் அவியலாளர்களும் ,நாம் தெரிவுசெய்து வைத்திருக்கும் கூத்தாடிகளும் அமெரிக்க தலைமையில் நேட்டோ இறங்கப்போகிறது தனி ஈழம் அமையப்போகிறது என்ற  உதார் உளரல்களை கூடுமான முறையில் தவிர்க்க வேண்டும், இந்த மறை கழண்ட கேஸ்களில் அறிக்கைகள் தான் சிங்களவர்களிடம் அப்படியே கொண்டு செல்லப்பட்டு எமக்கெதிரான வினைகள் ஆற்றப்படுவதிற்கு மூலகாரணம், தற்போது சிங்கள  மக்களிடையே முற்றாகவே ஆதரவை இழந்திருக்கும் இந்த அரசாங்கத்திற்கு பொல்லை எடுத்து கொடுக்காமல் உள்நாட்டு விடயங்களை மட்டும்  பாராளுமன்றத்தில் கூவுவதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும், கப்பல், கொரோனா என்று கூவ பலவிடயங்கள் இருக்கும்போது அத்துடன் கூத்தாடிகள் நிறுத்திக்கொள்வார்கள் என்றால் நடக்கவேண்டியவை எல்லாம் நன்றாகவே நடக்கும்        

Edited by அக்னியஷ்த்ரா
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இந்தச் சந்தர்ப்பையாவது கொண்டுபோய் இந்திய - இலங்கை கொலையாளிகளின் காலடியில் போட்டுவிட்டு வாலாட்டுகிறார்களா அல்லது, இந்த ஒருமுறையாவது மக்களின் நலனுக்காக உருப்படியாக ஏதாச்சும் செய்கிறார்களா இந்த கூத்தமைப்பினர் என்று பார்க்கலாம், ஆனால் நம்பிக்கை என்னவோ குறைவாகத்தான் இருக்கிறது.

அநேகமாக இதையும் சொதப்புவார்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரஞ்சித் said:

அண்ணை 
2009 இல் போனை ஆப் பண்ணிவிட்டு இந்தியாவில் ஒழித்துக்கொண்டு குப்புறப்படுத்திருந்த அந்தக்கணமே இனி எமது அரசியல் தலைமைகள் RAW & சவுத் ப்ளொக் என்பது விதிக்கப்பட்டுவிட்டது, அப்படியான ஒரு Proxy கூட்டத்தின் உச்சபட்ச அரசியல் இயலுமை தான் இந்த பத்துவருடங்கள் அவர்கள் செய்தது, அதை அவர்கள் தெளிவாகவே செய்திருக்கிறார்கள் இதனை விட அவர்களால் வேறு எதுவும் செய்யவும் முடியாது, அதிகமாக அவர்களிடம் எதிர்பார்த்தது நமது தவறு, இனியும் எமது தலைமைகளின் அரசியலில்  இந்திய ஆதரவுத்தளத்தை/முடியாவிட்டால் அந்த தலைமைகளை  நாம் நீக்கம்செய்யவில்லை என்றால் ,எவ்விதமான அக ,புற,உலக அரசியல் ஒழுங்குகளில் மாற்றம் வந்தாலும் அவற்றிலிருந்து எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத அதேவேளை இந்திய நலனுக்காக சதாகாலமும் எமது அரசியல்,சமூக  எதிர்காலத்தை அடைமானம் வைத்த செம்மறியாட்டு பண்ணை மந்தைகளாகத்தான் எமது வருங்காலம் இருக்கப்போகிறது    

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

சிறப்பான கருத்து.

சில விடயங்கள்.

1 . சீமான் கூட்டமைப்பை விட அதிகம், றோ சவுத் பிளாக்கின் நண்டு பிடியில் உள்ளார் என நான் சொன்ன போது - அந்த தர்க்கத்தை நீங்கள் தர்க்க ரீதியாக மறுக்கவில்லை ஆனால் இன்னொரு திரியில் போய் எல்லாத்துக்குக் ரோவை குற்றம் சொல்கிறேன் என்பது போல் நக்கல் அடித்தீர்கள். இப்போ நீங்களே கூட்டமைப்பை றோ கட்டு படுத்துவதாக சொல்கிறீகள். 

பிழை பிடிக்க சொல்லவில்லை. உங்களுக்கு சீமானை பிடிக்கும் ஆகவே அவர் ரோவின் கட்டுபாட்டில் இல்லை.

உங்களுக்கு கூட்டமைப்பை பிடியாது ஆகவே அவர்கள் ரோவின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். என நீங்கள் சொல்வது போல படுகிறது. 

2. கூட்டமைப்பு, மனோ, விக்கி, சீமான் எல்லாரும் ரோவின் பிடியில். கஜன் யாரிடம் கதைக்கவே ரேடியில்லை. டக்லஸ், அங்கஜன், சந்திரகாந்தன், முரளிதரன் இலங்கையின் நண்டு பிடியில். ஆகவே யாரை வைத்து அரசியலை முன்நகர்துவது?

3. இவர்கள் எல்லாரையும் நீக்கலாம்? ஆனால் யார் பிரதியீடு?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சீமான் கூட்டமைப்பை விட அதிகம், றோ சவுத் பிளாக்கின் நண்டு பிடியில் உள்ளார் என நான் சொன்ன போது - அந்த தர்க்கத்தை நீங்கள் தர்க்க ரீதியாக மறுக்கவில்லை

நீங்கள் மேற்கூறியவற்றை நான் மறுக்காத காரணம் சுப. முத்துக்குமாரை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததே நீங்கள் தான் என்றபடியால் என்னை விட அவர் சார்ந்த விவகாரங்களில் உங்களுக்கு அதிக அறிவும் தேடலும் இருந்திருக்கும் எனவே நடந்தவைகளின் அடிப்படையில் நீங்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு உங்கள் வசமிருக்கக் கூடிய தரவுகளும் தர்க்கங்களும் அதிகமாக இருக்கும், ஆனால் என்ன எனக்கு இதை விட ஆதாரங்கள் சற்று அதிகமாக தேவைப்படுகின்றன

1 hour ago, goshan_che said:

ஆனால் இன்னொரு திரியில் போய் எல்லாத்துக்குக் ரோவை குற்றம் சொல்கிறேன் என்பது போல் நக்கல் அடித்தீர்கள். இப்போ நீங்களே கூட்டமைப்பை றோ கட்டு படுத்துவதாக சொல்கிறீகள். 

பிழை பிடிக்க சொல்லவில்லை. உங்களுக்கு சீமானை பிடிக்கும் ஆகவே அவர் ரோவின் கட்டுபாட்டில் இல்லை.

உங்களுக்கு கூட்டமைப்பை பிடியாது ஆகவே அவர்கள் ரோவின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். என நீங்கள் சொல்வது போல படுகிறது.

மேற்கூறியவற்றை அடிப்படையாக வைத்தே கூட்டமைப்பு தொடர்பாக எனது எண்ணம் அமைகிறது. 2009 இல் தம்மை தேர்ந்தெடுத்த மக்களை கொத்திக் கிளறி வெறியாட்டம் ஆடும் போது அந்த நாட்டிலேயே இல்லாமல் இன்னுமோர் நாட்டில் போய் ஒழித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் தைரியமும் அவர்களுக்கு ஏற்படுகிறது என்றால் இதற்கு பின்னால் உள்ள விடையத்தை ஊகித்தறிவது சீமான் சமாச்சாரம் போல அத்தனை கடினமானது அல்ல.

இத்தனைக்கும் இவர்கள் ஒன்றும் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு கொலை மிரட்டலுக்கு உள்ளாகியவர்களும் இல்லை, இந்திய அரசின் ஆசிர்வாதமும் அனுசரனையும் இல்லாமல் இவர்களால் இதனை நடத்திக்காட்டியிருக்கவே முடியாது,

அத்துடன் இவர்கள் இந்தியாவுடனும் வடக்கு துணைத்தூதரக அதிகாரிகளுடன் காட்டும் நெருக்கம் முதலானவைகள் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இவற்றை பார்க்கும் சிறு பிள்ளையும் இலகுவாக ஊகித்தறிந்து விடும், ஆனால் சீமான் இப்படி கையும் மெய்யுமாக மாட்டும் வரை அது ஒரு Conspiracy theory ஆக மட்டும் பார்க்கும் வாய்ப்பே அதிகம்.

Conspiracy Theory என்பது எப்போதும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவது வாடிக்கை

1 hour ago, goshan_che said:

கூட்டமைப்பு, மனோ, விக்கி, சீமான் எல்லாரும் ரோவின் பிடியில். கஜன் யாரிடம் கதைக்கவே ரேடியில்லை. டக்லஸ், அங்கஜன், சந்திரகாந்தன், முரளிதரன் இலங்கையின் நண்டு பிடியில். ஆகவே யாரை வைத்து அரசியலை முன்நகர்துவது?

3. இவர்கள் எல்லாரையும் நீக்கலாம்? ஆனால் யார் பிரதியீடு?

அரசியலை முன்னகர்த்துவது என்பதை விட ஆமை நடை நடந்தாலே போதும், கோத்தா என்ற ஒரு கடைந்தெடுத்த இனவாதியையும் அவரது மாபியாவை வீட்டிற்கு அனுப்பும் வரைக்காவது அரசியல் என்ற பெயரில் தமிழரசியல் வாதிகள்(கூத்தமைப்பு, மனோ) குட்டையை குழப்பாமல் இருக்க வேண்டும். 

இலங்கை அரசியலின் நண்டு பிடியில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை அங்கிருப்பவர்கள் சடுதியாக ஆதரித்ததன் காரணத்தையும் நீங்கள் சற்று உள்ளிறங்கி ஆராய வேண்டும், கிழக்கு முஸ்லிம்களின் நெருக்குவாரம் ஒரு காரணம் என்றாலும் நான் கேட்ட இன்னுமோர் கேள்வி இன்றும் யாழில் இருக்கிறது

"நாளைக்கே பெரும்பான்மை பலத்துடன் கோத்தா ஜனதிபதியானால் உங்களிடம் என்ன அரசியல் இருக்கிறது" என்பதே அந்தக் கேள்வி, இறுதியாக நடந்ததும் அதுவே, கூத்தமைப்பின் உதவியுடன் எதிர்த்து துடைத்தழிக்கப்படுவதை தவிர்த்து ஆதரித்து உக்கிரத்தையாவது குறைப்போம் என்ற நோக்கமே அது, 

என்னைப் பொறுத்தவரை இப்போது எமது அரசியல்வாதிகள் சர்வதேச  அரசியலே செய்யவேண்டியதில்லை அவர்கள் தமிழர்களின் வாழ்வாதாரம் சிதையாமல், முக்கியமாக இந்த கொரோனா இடர்பாடுகளில் கவனத்தை செலுத்தினாலே போதும். எங்கே இவர்களை வைத்து இனவாத தீயை மூட்டி தாம் குளிர்காயலாம் என்றிருக்கும் கோத்தா கும்பலுக்கு விறகடுக்கி கொடுக்காமல் இருந்தாலே உத்தமம்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
44 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நீங்கள் மேற்கூறியவற்றை நான் மறுக்காத காரணம் சுப. முத்துக்குமாரை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததே நீங்கள் தான் என்றபடியால் என்னை விட அவர் சார்ந்த விவகாரங்களில் உங்களுக்கு அதிக அறிவும் தேடலும் இருந்திருக்கும் எனவே நடந்தவைகளின் அடிப்படையில் நீங்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு உங்கள் வசமிருக்கக் கூடிய தரவுகளும் தர்க்கங்களும் அதிகமாக இருக்கும், ஆனால் என்ன எனக்கு இதை விட ஆதாரங்கள் சற்று அதிகமாக தேவைப்படுகின்றன

மேற்கூறியவற்றை அடிப்படையாக வைத்தே கூட்டமைப்பு தொடர்பாக எனது எண்ணம் அமைகிறது. 2009 இல் தம்மை தேர்ந்தெடுத்த மக்களை கொத்திக் கிளறி வெறியாட்டம் ஆடும் போது அந்த நாட்டிலேயே இல்லாமல் இன்னுமோர் நாட்டில் போய் ஒழித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் தைரியமும் அவர்களுக்கு ஏற்படுகிறது என்றால் இதற்கு பின்னால் உள்ள விடையத்தை ஊகித்தறிவது சீமான் சமாச்சாரம் போல அத்தனை கடினமானது அல்ல.

இத்தனைக்கும் இவர்கள் ஒன்றும் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு கொலை மிரட்டலுக்கு உள்ளாகியவர்களும் இல்லை, இந்திய அரசின் ஆசிர்வாதமும் அனுசரனையும் இல்லாமல் இவர்களால் இதனை நடத்திக்காட்டியிருக்கவே முடியாது,

அத்துடன் இவர்கள் இந்தியாவுடனும் வடக்கு துணைத்தூதரக அதிகாரிகளுடன் காட்டும் நெருக்கம் முதலானவைகள் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இவற்றை பார்க்கும் சிறு பிள்ளையும் இலகுவாக ஊகித்தறிந்து விடும், ஆனால் சீமான் இப்படி கையும் மெய்யுமாக மாட்டும் வரை அது ஒரு Conspiracy theory ஆக மட்டும் பார்க்கும் வாய்ப்பே அதிகம்.

Conspiracy Theory என்பது எப்போதும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவது வாடிக்கை

அரசியலை முன்னகர்த்துவது என்பதை விட ஆமை நடை நடந்தாலே போதும், கோத்தா என்ற ஒரு கடைந்தெடுத்த இனவாதியையும் அவரது மாபியாவை வீட்டிற்கு அனுப்பும் வரைக்காவது அரசியல் என்ற பெயரில் தமிழரசியல் வாதிகள்(கூத்தமைப்பு, மனோ) குட்டையை குழப்பாமல் இருக்க வேண்டும். 

இலங்கை அரசியலின் நண்டு பிடியில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை அங்கிருப்பவர்கள் சடுதியாக ஆதரித்ததன் காரணத்தையும் நீங்கள் சற்று உள்ளிறங்கி ஆராய வேண்டும், கிழக்கு முஸ்லிம்களின் நெருக்குவாரம் ஒரு காரணம் என்றாலும் நான் கேட்ட இன்னுமோர் கேள்வி இன்றும் யாழில் இருக்கிறது

"நாளைக்கே பெரும்பான்மை பலத்துடன் கோத்தா ஜனதிபதியானால் உங்களிடம் என்ன அரசியல் இருக்கிறது" என்பதே அந்தக் கேள்வி, இறுதியாக நடந்ததும் அதுவே, கூத்தமைப்பின் உதவியுடன் எதிர்த்து துடைத்தழிக்கப்படுவதை தவிர்த்து ஆதரித்து உக்கிரத்தையாவது குறைப்போம் என்ற நோக்கமே அது, 

என்னைப் பொறுத்தவரை இப்போது எமது அரசியல்வாதிகள் சர்வதேச  அரசியலே செய்யவேண்டியதில்லை அவர்கள் தமிழர்களின் வாழ்வாதாரம் சிதையாமல், முக்கியமாக இந்த கொரோனா இடர்பாடுகளில் கவனத்தை செலுத்தினாலே போதும். எங்கே இவர்களை வைத்து இனவாத தீயை மூட்டி தாம் குளிர்காயலாம் என்றிருக்கும் கோத்தா கும்பலுக்கு விறகடுக்கி கொடுக்காமல் இருந்தாலே உத்தமம்.

பதிலுக்கு நன்றி.

1. எனது பார்வையில் கூட்டமைப்பு றோவின் தாளத்துக்கு ஆடுகிறது என்பதும், சீமான் றோவின் தாளத்துக்கு ஆடுகிறார் என்பதும் இரெண்டுமே சந்தர்ப்ப சாத்தியங்களை மட்டுமே வைத்து செய்ய கூடிய வாதங்களே.

இது விடயத்தில் எனது தேடல் கூட, நெடுமாறனும், வைகோவும் செய்யமுடியாத்தை செய்ய சீமான் ஏன் அனுமதிக்கபடுகிறார் என்ற மிக எளிய கேள்வியில் இருந்தே ஆரம்பித்தது. அதுவே நான் சொல்வதின் அடியாகவும் உள்ளது.

இதில் ஒன்றை circumstantial argument என்றும் மற்றையதை conspiracy theory என்றும் சொல்லுவது எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்பால் என்றே நம்புகிறேன்.

ஆனால் இதில் நமக்குள் ஒருமித்த (ஏக்கிய🤣) கருத்து ஏற்படுவது கஸ்டம் (இப்போதைக்கு) என்பதாலும், திரியில் இருந்து விலக வேண்டாம் என்பதாலும் இதை விட்டு நகர்கிறேன்.

2. நான் முன்பே சொல்லி உள்ளேன். நீங்கள் இப்போது எடுத்துள்ள இன்ன கட்சிக்குத்தான் என் வாக்கு என்ற அரசியல் நிலைப்பாட்டை நான் புரிந்து கொள்கிறேன். “மூக்கை பிடித்து கொண்டு சிலதை செய்யவேண்டும்” என்பார்கள். அதை போல ஒரு நிலைபாடாகவே நான் இதை காண்கிறேன். நானே அங்கே இருந்தால் இந்த நிலைப்பாட்டை எடுக்க கூடும்.

3. ஆனால் கோத்தா விடயத்தில் - எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் வெல்ல போகிறார் என்று தெரிந்து விட்டது என நினைக்கிறேன். எனது அனுபவத்தில் அவர்களோடு இணைந்து அரசியல் செய்வதால் எமக்கு மிக சொற்ப சலுகைகளை மட்டுமே தருவார்கள் என்பதில் என்றும் உறுதியாக இருக்கிறேன்.  

4. சந்திரகாந்தன், வியாழேந்திரன் அரச பக்கம் வந்த பின்னும் ஒன்றும் பெரிதாக ஆகவில்லை என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். உண்மையை சொல்ல போனால் எனக்கு சிங்கள பேரினவாதத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை. அது ஒரு போதும் எமக்கு காத்திரமாக ஒன்றையும் செய்யாது. ஆனால் தன்னோடு இசைபவர்களை அது ஒரு லிமிட் வரைக்கும் வாழவைக்கும். அது இராணுவத்தில் சிப்பாயக சேர்பவர், அரசாங்க அதிபர், மந்திரி, யாராயினும். ஆகவே அப்போதே சொன்னது போல், கோட்டா வெல்ல கூடாது என்பதுதான் என் நிலைபாடாக இருந்ததே தவிர அவருடன் இணந்து  வெல்வதால் நாம் எதையும் (தனி நலங்களை தவிர) பெறலாம் என்ற அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நான் ஊரில் இல்லை. ஊரில் இருந்தால் எல்லாவற்றையும் விட ஒரு 50 பேருக்கு அரச வேலை கொடுப்பது முக்கியம் எனக்கு தோன்ற கூடும். @தனிக்காட்டு ராஜா .இதை மிக அழகாக பல இடங்களில் எழுதியுள்ளார். ஆகவே நான் உங்கள் நிலைப்பாட்டை புரிந்து கொண்டாலும், அது ஒரு பயந்தரு மூலோபாயமாக எனக்குப்படவில்லை.

5. உண்மையில் @ampanaiயிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் கோட்டாவுக்கு தமிழர் வாக்கு போட வேண்டும். கோட்டா வென்றால் எம்மீது கடும்போக்கு எடுப்பார் அதனால் எமது அரசியல் முன்னேறும் என்றார். நான் அதை எதிர்த்தேன்.

அவர் எதிர்பார்த்த அளவில் தமிழர்கள் கோட்டவுக்கு போடவில்லை. கோட்டவும், நில அபகரிப்பு போல பலவகையில் எம்மை நெருக்கினாலும் பெரிதாக கொடுமைகள் ஒப்பீட்டளவில் செய்யவில்லை. ஆனால் கோட்ட வென்றதால் மேற்கில் சில நகர்வு மாற்றங்கள் வருகிறதாக தென்படுகிறது. இது வெறும் கானல் நீராகவும் போகலாம். 

6. இப்போதைக்கு எதுவும் செய்யாமல் தமிழ் தலைமைகள் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தினமும் கூவி கொண்டிருக்காமல், தேவையான இடத்தில் தேவையானதை செய்ய வேண்டும்.

Edited by goshan_che
 • Like 1
Link to post
Share on other sites

அக்னி, கோஷான் உங்கள் இருவரினதும் உரையாடல் நல்லா இருக்கு. பல கீறிட்ட இடங்களை நிரப்பக் கூடியதாக அமைந்துள்ளது. நன்றி

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

பெரிய தகப்பன் சாமிகளாக விழுந்தடித்து எமது கூத்தமைப்பு இடையே போய் விழுந்து 
குடுமியை திரும்ப கொண்டு போய் ஹிந்தியாவிடம் கொடுக்க அனுமதிக்காமல், அமைதியாக வேடிக்கை பார்ப்பதே பொருத்தமானது. இன்னும் பல விடயங்கள் மிகவிரைவில் வரலாம், அதற்கு எமது அரசியல் அவியலாளர்களும் ,நாம் தெரிவுசெய்து வைத்திருக்கும் கூத்தாடிகளும் அமெரிக்க தலைமையில் நேட்டோ இறங்கப்போகிறது தனி ஈழம் அமையப்போகிறது என்ற  உதார் உளரல்களை கூடுமான முறையில் தவிர்க்க வேண்டும், இந்த மறை கழண்ட கேஸ்களில் அறிக்கைகள் தான் சிங்களவர்களிடம் அப்படியே கொண்டு செல்லப்பட்டு எமக்கெதிரான வினைகள் ஆற்றப்படுவதிற்கு மூலகாரணம், தற்போது சிங்கள  மக்களிடையே முற்றாகவே ஆதரவை இழந்திருக்கும் இந்த அரசாங்கத்திற்கு பொல்லை எடுத்து கொடுக்காமல் உள்நாட்டு விடயங்களை மட்டும்  பாராளுமன்றத்தில் கூவுவதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும், கப்பல், கொரோனா என்று கூவ பலவிடயங்கள் இருக்கும்போது அத்துடன் கூத்தாடிகள் நிறுத்திக்கொள்வார்கள் என்றால் நடக்கவேண்டியவை எல்லாம் நன்றாகவே நடக்கும்        

அக்னியஷ்த்ரா.... சரியான கணிப்பு.  👍 :) 👏
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

இப்போதைக்கு எதுவும் செய்யாமல் தமிழ் தலைமைகள் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தினமும் கூவி கொண்டிருக்காமல், தேவையான இடத்தில் தேவையானதை செய்ய வேண்டும்.

இன்னும் எத்தனை வருடங்கள் போனாலும்  எதுவும் இங்கே மாறப்போவதில்லை மாறுவது மனிதர்களும் அவர்களது செயற்பாடுகள் சூழலுமே 

இன்னும்  எத்தனை வருடங்கள் கழிந்தாலும் கருத்துக்கள் மட்டும் இங்கு மிஞ்சும் அடிபிடியும் , பட்டம் கொடுத்து கெளரவிப்பும் ஆனால் இலங்கை தீர்வை கொடுக்காது மாறாக இனப்பரம்பலை அதிகரிக்கும் எல்லா இடங்களிலும் அதிலே தனித்தமிழ் என்று இல்லாமல் எல்லா இனங்களையும் எல்லா இடங்களிலும் புகுத்தி பல கேள்விகளை இல்லாமல் செய்யும் ( வவுனியா , திருகோணமலை, அம்பாறை ) இந்த மாவட்டம் மெதுவாக நான் சொன்ன விடயத்தில் புகுந்துள்ளது இதுக்கு இந்த கருத்து மாணிக்கங்கள் என்ன சொல்ல போறாங்களோ தெரியல‌

அதுமட்டும் அல்ல  இந்தியாவில் பல ஈழத்தமிழர்கள் கைது இந்த செய்தி தெரியுமோ என்னவோ கனடா செல்ல புறப்பட்டவர்களாம் அதிலே இலங்கையில் இருந்து சென்றவர்களும் அடக்கமாம் இப்படி வெளிக்கிட்டால் சிங்களவர்கள் வேற  என்ன செய்வார்கள் இடம் காலியாக இருந்தால் பிடிப்பார்கள் பிறகு ஐயோ நிலம் பறிபோகுது என்று அங்கிருந்து கூக்குரலிடுவார்கள் 😜

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.