Jump to content

திருமண வாழ்த்துக்கள்


Recommended Posts

008cnm18479084wu9.jpg

நமது கள உறுப்பினர்களான காதலர்கள் மணிவாசகனும் ரசிகையும் எதிர்வரும் 11ம் திகதி திருமணபந்தத்தில் இணையவிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றேன். இவ்விளஞ்சோடிகளை நேரில் சென்று வாழ்த்த முடியாமையால் இக்களத்தின் வாயிலாக வாழ்த்துகின்றேன்.

திருமண வாழ்க்கை என்றும் இனிமையாக நிலைத்து நிற்க வாழ்த்துமழை தூறுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமண நல் வாழ்த்துக்கள் ரசிகைக்கும் மணிவாசகனுக்கும்....(களத்தில் வந்து காதலர்களா? அல்லது களத்துக்கு வந்த காதலர்களா?) ..வாழ்க வளமுடன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தும் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்! என்றும் நிம்மதியுடன் இன்புற்றிருக்க வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

மணிக்கும், இரசிகைக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்!

:D

இந்த இனிய பொழுதில் ரசிகையும், மணியும் முன்பு ஒரு முறை (தமக்குள்?) பரிமாறிக்கொண்ட கவிதைகளை (காதல் ஏவுகணை - இந்த ஏவுகணைகளோட ஒப்பிடேக்க அமெரிக்கா வச்சிருக்கிற ஏவுகணை எந்த மூலைக்காம்!) திரும்பவும் தம்பதியருக்கு சொல்வது பொருத்தமாக இருக்கும்... :P

இரசிகை இப்படி இப்படி எல்லாம் சொல்லுறா... :D

சூரியன் தான் ஆணா ...?

ஆனாலும்தான் என்ன ?

சொல்லடி கிளியே

அவர்க்கு......

பூமியின் பாதி நாள்

இருள் தொலைக்க

நாமும் பங்காளியானோம்

ஒரு நிலவாய்!!

உயிரதில் ஒளிந்து கிடக்கிறான்..

எந்தன் உறக்கத்தை கொன்று தொலைக்கிறான்...

எனை கைப்பிடிக்க பிறந்த கண்ணன்-அவன்

கமலம் போல் நிறம் கொண்ட கள்ளன்!

என் மனசின் ஓசை அறிவானோ?

தன் மனசில் சிறை ஒன்று தருவானோ?

உதிரமாய் என்னுள் வருவானோ?

தன் உயிரினில் பாதி தருவானோ?

தவமிருக்கும் நந்தவனமென்றானேன்

நீ தந்துவிடு உன்னை....

மழை சலவை செய்த

மல்லிகை மொட்டு என்றாவேன்...

ஜீவனே வா....

என் உயிரை முழுதாய்

எனக்கு திருப்பி தா...!

மணி நடைமுறை விஞ்ஞானம் பற்றி இப்படி சொல்லுறார் (ரொம்பத் தேவைப்படுமாக்கும்! :D )....

அடித்தடித்துத் துணிதுவைத்து

அலுப்படைந்த காலம்போய்

கணப்பொழுதில் சலவைசெய்ய

கருவியினைக் கண்டுதந்த விஞ்ஞானமே!

பொம்பிளைப் பிள்ளைகள் மணி சொல்வதைக் கேளுங்கோ...

சீரழிவாய்ப் போய்விட்ட

சீதனம் செய்துவிட்ட

சிறுமையினைப் பாரென்று

சினந்திருக்கும் பெண்களுக்கு

சந்தோச வாழ்க்கைக்கு

சாபமாய்ப் போய்விட்ட

சவக்கிடங்கைப் பாரென்று

சலித்திருக்கும் பெண்களுக்கு

அடுக்காத செயலாலே

அழிந்தவர்கள் பெண்களென்று

ஆண்மகரைத் திட்டிநிற்கும்

அன்பான பெண்களுக்கு

தமிழரிடை பரவிவிட்ட

தறிகெட்ட வழக்கத்தால்

இனிமையான வாழ்க்கையினை

இழந்தவர்கள் நாங்களும்தான்

அநியாயச் சடங்காலே

ஆடவர்க்கு அழிவேது

அலட்சியமாய்க் கேட்போர்க்கு

அடியேன்நல் உதாரணமாம்

சீர்கெட்ட சீதனத்தால்

சிதைந்தவர்பெண் மட்டுமென்ற

சிந்தனையை உம்மிடத்தில்

சிதைத்துவிடும் எந்தன்கதை

தறிகெட்ட வழக்கத்தால்

தகர்ந்தவர்பெண் மட்டுமென்ற

தர்க்கத்தைத் தவிர்ப்பதற்காய்

தருகின்றேன் என்கதையை

இளமைப் பருவத்தின்

இனிய கனவுகளை

இதயத்தில் சுமந்தவனாய்

இசைபாடித் திரிந்தவன்நான்

எதிர்கால வாழ்வுபற்றி

எத்தனையோ எண்ணங்கள்

என்னவளைப் பற்றித்தான்

ஏராளம் கற்பனைகள்

பணக்காரி தேவையில்லை

பகட்டுகளும் தேவையில்லை

பல்கலை சென்றுபெற்ற

பட்டமும் தேவையில்லை

பதியாகப் பாவித்து

பணிந்திடவும் தேவையில்லை

எஜமானாய்ப் பாவித்து

எனக்குழைக்கத் தேவையில்லை

தலைவன்நீ என்றுசொல்லி

தவறிழைக்கும் போதெல்லாம்

தஞ்சாவுூர்ப் பொம்மையாகத்

தலையாட்டத் தேவையில்லை

தவறொன்று செய்துவிட்டால்

தட்டிக் கேட்கவெண்டும்

பிழையொன்று செய்துவிட்டால்

பிழையென்று சொல்லவெண்டும்

இன்பமோ துன்பமோ

இணையாகப் பகிர்ந்துகொள்ள

உற்றதுணை ஒன்றைத்தான்

உண்மையிலே தேடிநின்றேன்

என்துணையாய் வரப்போகும்

என்னவளைப் பற்றியெந்தன்

அடிமனதில் பதிந்திட்ட

ஆயிரமாம் கற்பனைகள்

தமிழர் குடும்பத்தில்

தலைமகனாய்ப் பிறந்ததனால்

ஆசைக் கனவெல்லாம்

ஆகாயக் கோட்டையாச்சு

கல்யாணச் சந்தையிலே

கழுத்தை மெல்லநீட்டுதற்காய்

அடுக்கடுக்காய் காத்திருந்த

அன்பான சோதரிகள்

அவர்தம் வாழ்க்கையினை

அழகாக அமைப்பதற்காய்

அடிமனதில் பதிந்திருந்த

ஆசைகளை எரித்துவிட்டேன்

சகஉதர வாழ்க்கைக்காய்

சகலதையும் மறந்தேநான்

எட்டாத கொப்பொன்றை

எட்டிப் பிடித்துவிட்டேன்

வந்தவளைப் பற்றியும்நான்

வரைந்திடுவேன் நான்குவரி

வரைந்து முடிப்பதற்குள்

வந்துவிட்டால் பெருஞ்சமர்தான்

பலலட்சம் சொத்துள்ள

பணக்காரி என்மனைவி

வளமான குடும்பத்தின்

வாரீசாம் என்மனைவி

பணத்திற்கு மட்டுமல்ல

பகட்டிற்கும் குறைவில்லை

செல்வத்தில் மட்டமல்ல

செருக்கிற்கும் குறைவில்லை

அணிகலனில் மட்டுமல்ல

ஆணவத்தில் குறைவில்லை

தங்கத்தில் மட்டுமல்ல

தலைக்கனத்தில் குறைவில்லை

பணம்கொடுத்து வாங்கியதால்

பரிகாசம் செய்கின்றாள்

விலைகொடுத்து வாங்கியதால்

வீணனாகப் பார்க்கின்றாள்

கணவனென்னை மதிக்கவில்லை

கர்வத்தால் மிதிக்கின்றாள்

புருசனென்று பார்க்கவில்லை

புல்லென்று தூற்றுகின்றாள்

கைநீட்டி வாங்கியதால்

கைகட்டி நிற்கின்றேன்

பலலட்சம் வாங்கியதால்

பதிலின்றி நிற்கின்றேன்

விலைபோன காரணத்தால்

விதியைநொந்து நிற்கின்றேன்

தீனி போடமட்டும்

திறக்கின்றேன் என்வாயை

என்கதையைக் கேட்டதுமே

எதற்காக அழுகின்றீர்

என்னைப்போல் வாழ்விழந்தோர்

ஏராளம் இவ்வுலகில்

இச்சடங்கு இனிமேலும்

இருக்கவேண்டாம் இம்மண்ணில்

அடுத்தவர்நல் வாழ்க்கைக்காய்

அழித்திடுவோம் இந்நிலையை

தமிழ்மக்கள் மகிழ்ச்சியினை

தடுத்துநிற்கும் இவ்வழக்கை

ஒழித்துவிட வேண்டுமென்றால்

ஒன்றுபட்டு முயலவேண்டும்

ஆவேசம் கொண்டதனால்

அறிவிழந்து நிற்கின்றீர்

அமைதியாய்ச் சிந்தித்து

அணிதிரள வந்திடுவீர்

உங்கள் மகனுக்கு

உரியதுணை தேடுங்கள்

வியாபாரச் சந்தையிலே

விற்பனைக்கு வைக்காதீர்

அடுக்காத வழக்கத்தை

அழிப்பதற்காய் உம்முடனே

அணிதிரள எப்போதும்

ஆண்மக்கள் நாம்தயாரே

மணி வசந்தத்தைத் தருவாயா என்று இப்படி ரசிகையிடம் கேட்கிறார்...

காலக் களத்தினிலே

கடுங்காயம் பட்டவனாய்

உடலெல்லாம் புண்ணாகி

உயிர்போகக் கிடந்தவனை

பத்திரமாய் அணைத்தெடுத்துப்

பாச மருந்திட்டுக்

காதற் துணிகொண்டு

காயத்தைக் களைந்தவளே

அழகிழந்த சித்திரமாய்

அடிவளவில் கிடந்தவனை

கனிவுடனே கரமெடுத்துக்

கறையானைத் தட்டி

அன்பு நீர்கொண்டு

அழுக்கெல்லாம் களைந்தகற்றி

அழகாய் முன்னறையில்

அமர்ந்திருக்கச் செய்தவளே

வாழ்க்கைப் படகிழுக்க

வழியெதுவும் தெரியாமல்

துன்பப் பெருங்கடலில்

துடுப்பிழந்து நின்றவனை

மூர்ச்சித்து மெல்லமெல்ல

மூச்சிழந்து போனவனை

கைப்பற்றி மெல்லமெல்ல

கரையிழுத்து வந்தவளே

வெறுமைக் கோடையெனும்

வெந்தணலில் சிக்கியதால்

வெந்து தினங்கருகி

வெளிறிப் போகையிலே

நட்பென்னும் நீர்தேடி

நாள்தோறும் அலைகையிலே

நிழல்தழையும் மரத்தின்கீழ்

நீர்க்குடமாய் வந்தவளே

யாசித்துக் கேட்காமல்

யோசித்துச் செய்தவுந்தன்;

இதயத்தில் உட்கார

இடமொன்று தருவாயா

இல்லையென்னும் சொல்லறியா

இதமான பெண்ணேநீ

வசந்தத்தை என்வாழ்வில்

வருவித்துத் தருவாயா

கலியாண மந்திரம் எண்டு மணி கலியாணச் சடங்கைப்பற்றி இப்படி சொல்லுறார்.... எண்ட ஐயோ! அடாடா, அடடா, மணி இதை வாசிக்க எனக்கு புல்லரிக்கிது.... நீங்களும் ஒரு தீர்க்கதரிசியோ?

துணையுன்னைக் கேட்பேன்

இல்லறத்தை நல்லறமாய்

இறுதிவரை இனிதாக்க

இணையாக வந்துள்ள

இணையுன்னைக் கேட்பேன்

மணவாழ்வில் என்னோடு

மனதார வந்திடவே

மகிழ்வோடு இணையும்என்

மனையுன்னைக் கேட்பேன்

வாழ்க்கைப் படகிழுக்கும்

வலுவான துடுப்பாக

வந்தருகில் அமர்ந்துவிட்ட

வடிவுன்னைக் கேட்பேன்

உள்ளொன்று வைக்காத

உயிர்நண்பி யாகி

உணர்வோடு கலந்தேநீ

உறவாட வேண்டும்

இதயத்துச் சுமைபாதி

எடுத்தாக வேண்டும்

பதிலாக உன்பழுவைப்

பகிர்ந்தாக வேண்டும்

பதியென்று எனைச்சொல்லிப்

பயந்தோடாப் பெண்ணாய்

பலகாலம் துணைவந்து

பலம்சேர்க்க வேண்டும்

துன்பத்தில் துவளாமல்

துடிப்போடு வாழ

துளிகூடப் பிரியாத

துணையாய்நீ வேண்டும்

தாயிடத்தில் பசிசொல்லத்

தயங்காத மகன்போல்

சங்கடங்கள் ஏதுமில்லாச்

சகியாய் வேண்டும்

கண்ணீரை உன்கண்ணில்

கனவினிலும் காணாப்

பாக்கியத்தை எந்தனுக்குப்

பரிசாக்க வேண்டும்

கதிநீயே எனச் சொல்லித்

துதிபாடாப் பெண்ணாய்

விதியுள்ள நாள்மட்டும்

சுதிசேர்க்க வேண்டும்

வழிமாறிச் செல்லாமல்

வழிகாட்டியாய் நீ

வந்தெந்தன் வாழ்க்கையினை

வடிவாக்க வேண்டும்

மணிக்கும், இரசிகைக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்! :D

:P :D :P

பி/கு: மணி, இரசிகை இதைபார்த்துவிட்டு கோபிக்கபடாது. யாம் பெற்ற இன்பம் பெறுக இந்த வையம் என்ற நல்லநோக்கில்தான் இவற்றை துருவி ஆராய்ந்து புலனாய்வு செய்தபின் இங்கு இணைத்துள்ளேன்.. B)

Link to comment
Share on other sites

இனிய வாழ்வு கண்டு

எல்லோரும் போற்ற

குறைவின்றி எந்நாளும்

நல்வாழ்வு காண

இறைவனை வணங்கி

வாழ்த்துவது...

நட்புடன்

விகடகவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருவருக்கும் எனது இனிய திருமண வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

wdgspl04tj4.jpg

மணிவாசகன் அத்தானுக்கும் ரசிகை மாமிக்கும் வாழ்த்துகள்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட மனமார வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமண நல் வாழ்த்துக்கள் ரசிகைக்கும் மணிவாசகனுக்கும்

Link to comment
Share on other sites

யாழில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்களும் நடக்கின்றதைப் பார்க்கும்போது சந்தோஷம் வழிகின்றது.

இணையப்போகும் புதிய ஜோடிகளை வாழ்த்துபவர்களுடன் நானும் இணைந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

வாழ்த்துக்களை இதில் ஆரம்பித்த நண்பி நிலாவுக்கும் எனது பாராட்டுக்கள்.

வாழ்க, இணைந்து மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகாலம் வாழ்க வென வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன் இரசிகை இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்.

'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட' என்று குமாரசாமி அவர்கள் மணமக்களை வாழ்த்தி உள்ளார். மணிவாககன் , இரசிகையின் கவனத்துக்கு - இங்கு 16 என்பது 16 குழந்தைகளைக் குறிப்பிடுவது அல்ல.

Link to comment
Share on other sites

புரிந்து கொண்ட

இதயங்கள்

புரிந்துகொள்ளா

உறவுதனை

புரிந்து கொண்டு

புதிய காவியம்

படைத்திட

எனது வாழ்ந்துக்கள்

Link to comment
Share on other sites

மணிவாசகன் ரசிகை இருவருக்கும் என் இனிய திருமண வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் இணைந்த இதயங்கள்

இல்லறத்திலும் இணைந்து

இன்புற புத்தனின் வாழ்த்துகள்........

(மணி கியல வடக்நா இத்திங் கொமத)

Link to comment
Share on other sites

அண்ணாவிற்கும், ரசிகைக்கும் தூயாகுடும்பத்தின் வாழ்த்துக்களை இந்த பதிவின் மூலம் அனுப்புகின்றேன். :)

Link to comment
Share on other sites

என்ன எல்லோரும் மொய் எழுதாமல் வாழ்த்துக்களை களத்தினுடாக இலவசமாக முடிக்கின்ற நோக்கமா.. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.