Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

`28 வயதில் எம்.பி; 1,000 பள்ளிகளை திறந்து சாதனை’ - 101 வயதில் மறைந்த டி.எம்.காளியண்ணன் கவுண்டர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

`28 வயதில் எம்.பி; 1,000 பள்ளிகளை திறந்து சாதனை’ - 101 வயதில் மறைந்த டி.எம்.காளியண்ணன் கவுண்டர்

காளியண்ணன் கவுண்டர்

காளியண்ணன் கவுண்டர் ( நா.ராஜமுருகன் )

இந்தப் பதவியை வைத்து ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஆயிரம் பள்ளிகளை இவர் திறந்தார். 'இங்குள்ள பிள்ளைகள் நாலெழுத்து படிக்கோணும். அதுக்காகதான் ஆயிரம் பள்ளிகள். கடைக்கோடி பிள்ளைக்கும் கல்வி கிடைக்கணும்னா, இன்னும் அதிகம் பள்ளிகளை திறப்பேன்' என்று தெரிவித்தார்.

28 வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை எனப்படும் திருச்செங்கோடு முதல் பாராளுமன்ற உறுப்பினர், 1,000 பள்ளிகளை திறந்த கல்வியாளர், 36 முறை தேர்தலைச் சந்தித்தவர், ஜமீன்தார் என்றாலும், தனது சொத்துகளை மக்களுக்காக செலவிட்டவர் செய்தவர் என்று பல்வேறு சிறப்புகளை பெற்ற டி.எம்.காளியண்ணன் கவுண்டர், தனது 101 வயதில் கொரோனா தொற்றால் காலமானார். 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
 
அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நா.ராஜமுருகன்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்தவர் டி.எம்.காளியண்ணன் கவுண்டர். கஸ்தூரிப்பட்டி ஜமீன் பரம்பரையில் வந்தவர். இவரது தந்தை முத்துநல்லிக் கவுண்டர், தாய் பாப்பாயம்மாள். இவர், 1921 ஆம் ஆண்டு, ஜனவரி 10 - ஆம் தேதி பிறந்தார். அப்போதே, இவர் பி.காம், எம்.ஏ பொருளாதாரம் உள்ளிட்டப் படிப்புகளை படித்தார். இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகள். இவர், கஸ்தூரிப்பட்டி ஜமீன் வம்சமாக இருந்தாலும், ஏகபோகமாக நிலபுலன்கள் இருந்தாலும், கடந்த 1956 - ஆம் ஆண்டு, டாக்டர் சுப்பராயன் கொண்டு வந்த ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்துக்கு முழு ஆதரவளித்து, தனது நிலங்களை வழங்கினார்.

ஆறுதல் சொல்லும் மதிவேந்தன்
 
ஆறுதல் சொல்லும் மதிவேந்தன் நா.ராஜமுருகன்

கடந்த, 1948 - ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபைக்கு சென்ற இளம் உறுப்பினர் இவர்தான். அப்போது, காளியண்ணன் கவுண்டருக்கு வயது 28. டாக்டர் சுப்பராயன் இந்தியாவின் தூதுவராக இந்தோனேசியா சென்றதால், அரசியல் நிர்ணய சபையில் ஒரு இடம் காலியானது. அதை நிரப்ப, டி.எம் காளியண்ணன் பெயரை, சுப்பராயன் பரிந்துரைத்தார். அதோடு, காளியண்ணன் கவுண்டரை காமராஜரும் பரிந்துரை செய்தார். அதனால், அவர் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்வானார்.

அப்போது, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் அம்பேத்கார், நேரு, ராஜாஜி, ராஜேந்திரபிரசாத், முன்ஷி, மௌலானா அப்துல் கலாம் ஆசாத், சிவசுப்ரமணியம், வெங்கட்ராமன் மற்றும் தேசிய தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, எம்.எல்.ஏ, எம்.பி, எம்.எல்.சி ஆக இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராகவும், பொருளாளராகவும், மேலவை துணைத்தலைவராகவும் பொறுப்புகள் வகித்திருக்கிறார். இப்படி, பல்வேறு பொறுப்புக்களுக்காக 36 முறை தேர்தலில் நின்ற பழுத்த அனுபவம் கொண்டவர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேலம் பகுதியில் பெரிய பதவியான ஜில்லா போர்டு தலைவர் பதவியை வகித்தவர். அந்தப் பதவி அமைச்சர் பதவியைவிட அதிகாரமிக்கது. இந்தப் பதவியை வைத்து ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஆயிரம் பள்ளிகளை இவர் திறந்தார்.

இறுதி அஞ்சலி
 
இறுதி அஞ்சலி நா.ராஜமுருகன்

'இங்குள்ள பிள்ளைகள் நாலெழுத்து படிக்கோணும். அதுக்காகதான் ஆயிரம் பள்ளிகள். கடைக்கோடி பிள்ளைக்கும் கல்வி கிடைக்கணும்னா, இன்னும் அதிகம் பள்ளிகளை திறப்பேன்' என்று தெரிவித்தார். ஜமீன்தார், பல பதவிகளை வகித்தவர் என்றபோதிலும், எளிமையான, ஆடம்பரம் இல்லாத அரசியல்வாதியாக திகழ்ந்தார். ஏழை மக்கள் என்ன உதவி கேட்டாலும், உடனே அதை செய்து கொடுப்பார். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், தகுதியான பலருக்கும் சிபாரிசு செய்து அரசு பணிகளை வாங்கி கொடுத்திருக்கிறார். தேர்தல் செலவுக்காகவும், மக்களுக்கு உதவுவதற்காகவும் யாரிடமும் நிதி பெறாமல், தனது சொத்துகள் அனைத்தையும் விற்று செலவு செய்தவர்.

தொடர்ந்து, சேலம் மாவட்ட நூலக தலைவர், இந்தியன் வங்கி இயக்குநர் ஆகிய பதவிகளையும் வகித்தார். திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அர்ததநாரீஸ்வரருக்கு கோடி அர்ச்சனை செய்வித்தார். அதோடு, சிலப்பதிகாரத்தின் மீது அதீத ஈடுபாடு கொண்ட காளியண்ணன் கவுண்டர், தொடர்ந்து கண்ணகி விழாவை 66 ஆண்டுகளாக நடத்தி வந்தார். 'மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் வெட்டி உபரி நீரை திருமணி முத்தாற்றில் விட்டால், 70 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்' என்று 1952 - ஆம் ஆண்டிலிருந்தே பாடுபட்டவர். திருச்செங்கோடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தை நிறுவியவர். பள்ளிபாளையம் காவிரி பாலம், சேசசாயி காகித ஆலை ஆகியவை இவர் கொண்டு வந்தது. இவரது, ஒரே ஆசை கண்ணகிக்கு கோட்டம் கட்ட வேண்டும் என்பது. அது இன்று வரை கனவாகவே உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான இவர், பழுத்த ஆன்மிகவாதியும்கூட. சிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் விளங்கினார். ஆனால், அரசியலை வைத்து சொத்து சேர்க்காதவர்.

இறுதி அஞ்சலி
 
இறுதி அஞ்சலி நா.ராஜமுருகன்

இப்படிப்பட்ட சிறப்புமிக்க காளியண்ணன் கவுண்டருக்கு வயது 101. வீட்டிலேயே முடங்கியிருந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரது உறவினர்கள், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்று மறைந்தார். இதை அறிந்த தமிழக அரசு, காளியண்ணன் கவுண்டரின் உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி சின்ராஜ், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் காளியண்ணன் கவுண்டரின் உடல், செங்கோடன்பாளையம் மின்மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்க்கை வாழ்ந்த காளியண்ணன் கவுண்டர் புகழ், நூற்றாண்டுகள் கடந்தாலும் மறையாது என்பதே திண்ணம்.

 

 

https://www.vikatan.com/news/tamilnadu/kaliyannan-koundar-died-in-corona-virus

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர்  அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்........!  

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Popular Now

 • Topics

 • Posts

  • வீட்டில் "இந்தப்பூனையும் பால் குடிக்குமா" என்று இருக்கும் அந்நிய ஆண்களுடன் கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று டேற்ரிங் பண்ணிட்டு வருகுதுகள்.....சில மாதங்களில் வேறுஒருத்தரை மணமுடிக்குதுகள்....! சகோதரங்களுக்குள்ளேயே விடாப்பிடியாய் நின்று மணமுடிக்குதுகள்....இப்படி நிறைய பார்த்து மனசு மரத்து போய் விட்டது......! மரத்துக்கும் மரத்துக்கும் கலியாணம், கழுதைக்கும் கழுதைக்கும் கலியாணம்,நாய்க்கும் மனுசனுக்கும் கலியாணம் என்றும் நிறைய பார்த்தாச்சுது.......! வாழ்த்துவதாய் இருந்தால் அது மனப்பூர்வமாய் இருக்க வேண்டும்...... அது முடியவில்லை....! இதையெல்லாம் இரண்டு குலை போட்ட வாழை, நாலு கிளையுடன் நிக்கும் பனை என்று செய்தியாக பார்த்து கடந்து போக வேண்டும்......அவ்வளவுதான்.......!  
  • (ஆர்.யசி)   பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சகலரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும்,  அண்மைக் காலங்களில்  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பல கைதுகள் இடம்பெற்றுள்ளமை, பொது மக்களின் காணி அபகரிப்பு, ஜனநாயக செயற்பாடுகள் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளமை போன்ற பல்வேறு விடயங்களை இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எடுத்துக்கூறியுள்ளதுடன் சிறுபான்மை மக்களின் நீண்டகால உரிமைகளை பெற்றுக்கொள்ளும் ரீதியில் அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுக்க ஜி.ஸ்.பி பிளஸ் சலுகையை நீக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.       இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயும் நோக்கில் இலங்கை வந்க்துள்ள  ஐவர் கொண்ட  ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் இன்று மாலை  தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் கலந்துரையாடியிருந்தனர் . தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் மாலை 5.15 மணியளவில்  இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.   இந்த சந்திப்பில் தலைவர் சம்பந்தனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன்,இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவர்களான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் கூறுகையில், வருடா வருடம் அவர்களின் மீளாய்வு  குழுவினர் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்வது வழமையான ஒன்றாகும். அவ்வாறே இம்முறையும் அவர்களின் கண்காணிப்புக்குழு இலங்கை வந்துள்ளதுடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற விதத்தில் எம்முடனும் அவர்கள் கலந்துரையாடி தமிழர் தரப்பின் பிரச்சினைகள் மற்றும் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்தும், தற்போது நாட்டில் காணப்படும் மனித உரிமை செயற்பாடுகள், நல்லிணக்க முயற்சிகள், ஜனநாயகத்திற்கு எவ்வாறான சவால்கள் ஏற்பட்டுள்ளன, சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நெருக்கடி நிலைமைகள் குறித்து ஒவ்வொன்றாக எம்மிடம் கேட்டறிந்து கொண்டனர், இதே வேளையில் பயங்கரவாத பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து நாம் எடுத்துக் கூறினோம். குறிப்பாக தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், அதேபோல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சகலரும் விடுவிக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அண்மைய கால செயற்பாடுகளின் போதும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பல கைதுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் நாம் அவர்களிடத்தில் எடுத்துக் கூறியுள்ளோம், தேசிய பாதுகாப்பு விடயங்களை போலவே ஜனநாயகமும் பாதிக்கப்படக்கூடாது என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். அவ்வாறு இருக்கையில் அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது மிக மோசமான செயற்பாடு என்பதை நாமும் எடுத்துக்கூறினோம் மேலும் நாட்டில் இடம்பெறும் நில ஆக்கிமிப்பு செயற்பாடுகள் குறித்தும் இராணுவத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் குறித்தும் எடுத்துக்கூறினோம். வடக்கு கிழக்கில் இதுவரை இடம்பெற்றுள்ள ஆகிரமிப்பு செயற்பாடுகள், தமிழ் பேசும் மக்களின் காணிகள்  எவ்வாறு எப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற ஆதாரங்களுடன் நாம் உரிய காரணிகளை எடுத்துக்கூறியுள்ளோம். நீண்டகால அரசியல் தீர்வு விடயங்களில் எமது எதிர்பார்ப்பு என்னவென்பதை கூறியுள்ளோம், தமிழ் மக்க்களின் நீண்டகால அபிலாசைகள் ,சுய உரிமைகளை, கௌரவத்தை உறுதிபடுத்தும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதுவரை காலமாக எமக்கான சம உரிமைகள் நிராகரிக்கப்பட்டதன் விளைவாக தமிழ் மக்கள் பலவற்றை இழந்துள்ளோம். அதற்கான நியாயம் கேட்டு இன்று நாம் போராடிக்கொண்டு உள்ளோம். தேசிய ரீதியிலான எந்தவித முன்னேற்றகரமான நகர்வுகளும் அவதானிக்க முடியாத காரணத்தினால் தான் நாம் சர்வதேச தரப்பை நம்பி செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுளோம். ஆகவே தமிழ் மக்களின் உரிமைகள், சுய கௌரவம், சமத்துவம் மொழி உரிமைகள் உறுதிப்படுத்தும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தியதுடன், சர்வதேச ரீதியில் அவர்களின் ஒத்துபைப்பையும் நாம் கேட்டுக்கொண்டும். மேலும், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாமால் போனால் நாடாக சகலருக்கும் அதில் பாதிப்பு ஏற்படும். ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதரத்தைத்தையும் அது பாதிக்கும். ஆகவே அதற்கு நாம் விரும்பாது போனாலும் கூட, எமது மக்களுக்கான உரிமைகளை, அந்தஸ்தை  பெற்றுக்கொள்ளவும், நீண்டகால முரண்பாடுகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளவும் எந்த வகையிலேனும் அழுத்தங்களை பிரயோகித்து எமது இலக்கை அடைய வேண்டியுள்ளது என்பது வெளிப்படையாகவே நாம் தெரிவித்துள்ளோம். ஆகவே நாட்டில் இல்லாது போயுள்ள மனித உரிமைகளை பெற்றுக்கொள்ளவும், சிறுபான்மை மக்களை இலக்குவைத்து பாயும் சட்டங்களிய நீக்கிக்கொள்ளவும் அதற்கான வழியில் அரசாங்கத்தை இயங்க வைக்கும் நோக்கத்தில் ஜி.எஸ்,பி பிளஸ் சலுகையை ரத்து செய்யுமாறும் நாம் ஐரோப்பிய ஒன்றிய விசேட  குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள், மற்றும் அண்மைக்கால மனித உரிமை மீறகள் குறித்து அவர்கள் அறிந்திருந்த விடயங்களை ஒவ்வொன்றாக அவர்கள் எம்மிடம் கேட்டறிந்துகொண்டனர். சுமார் ஒரு மணிநேரம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. ஏனைய எதிர்க்கட்சி தரப்பினருடனும் அவர்கள் காலையில் இருந்து பேச்சுவாரத்தைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சகல தரப்பின் காரணிகளையும் அவர்கள் கருத்தில் கொண்டுள்ளனர். நாளைய தினம் (இன்று) அரசாங்கத்துடன் அவர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ள நிலையில் நாம் முன்வைத்துள்ள சகல காரணிகளையும் அரச தரப்பிடம் கூறி அதன் பின்னர் அவர்களின் நிலைப்பாட்டையும், தாம் சேகரித்துள்ள காரணிகளையும் தமது அறிக்கையில் முன்வைப்பதாகவும் நாம் கூறியுள்ள காரணிகளையும் குறித்த அறிக்கையில் இணைப்பதாகவும் கூறியுள்ளனர் என்றார். ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விடுத்துள்ள கோரிக்கை | Virakesari.lk
  • நீங்கள் இருவரும் சொல்வதில் ஒன்றுடன் உடன்படுகிறேன்.  மேற்குலகை பொறுத்தவரை ஹோமோசெக்சுவாலிட்டி இப்போ ஒரு settled matter சட்டரீதியாகவேனும். இப்போ இங்கே பேசு பொருள் gender dysphoria, ஆண்/பெண்ணாக மாறுவது, எந்த வயதில் ஆப்பரேசன் செய்யலாம், அது சம்பந்தமான உரிமைகள் பற்றியே. இப்போ யார் பெண் என்பதே இங்கே பேசுபொருளாக இருக்கிறது. Women v trans women, are trans women, women ? இவைதான் இங்கே பேசப்படுகிறன.
  • நடந்த நிகழ்ச்சிக்கும் இங்கு வாழ்த்துக்கள் கூறியவர்களுக்கும் எந்த சம்பந்தமில்லை நாங்கள் வாழ்த்தவிட்டாலும். எதிர்காலத்தில் இப்படி நடைபெறும்...இருந்தும் வாழ்த்தியது  ஒரு ஊக்குவிப்பு என்பதை எற்றுக்கொள்கிறேன்.  ஆனாலும் வாழ்த்துவதைவிட வேறு வழி இல்லை 
  • Free யா விடுங்க பங்கு 😀. வரலாறு என்பது காட்டாறு, அதை தடுக்க முடியாது.  இந்த வரைவிலக்கணம் நாட்டுக்கு நாடு வேறுபடும். யூகேயில் ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் சிவில் திருமணம் செய்யலாம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.