Jump to content

மதுரை வடை ஃபேக்டரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
உணவு இன் படமாக இருக்கக்கூடும்
 
மதுரை_வடை_ஃபேக்டரிகள்*
*மதுரையில்* நிறைய வடைக் கடைகளை கடை என்பதை விட வடை ஃபேக்டரின்னே கூறலாம். சர்வ சாதாரணமாக 2000 வடைகள் தினமும் விற்கும் கடைகளே நூற்றுக்கும் அதிகமாக இருக்கும்.! அதில் தலையானது மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் இருக்கும் பாம்பே ஸ்வீட்ஸ்!
சூரியன் உதிப்பதற்கு முன்பே அந்த சூரியன் போன்ற வெப்பத்துடன் தயாராகும் அப்பம் மதுரையின் அடையாளம் ஆகும் அதிகாலை 4 மணிக்கே இனிப்பு அப்பத்துடன் தனது நாளை துவக்குபவர்கள் சூரிய உதயத்திற்கு பின்பு அசால்ட்டாக..
உளுந்தவடை, மசால்வடை, காரவடை, வெங்காயவடை, சமோசா என வெரைட்டிக்கு மாறுவார்கள்.. ஒவ்வொன்றிலும் தலா 200 வடைகள் போடுவார்கள். அதிகாலை அப்பம் தன் வெப்பம் இழந்து ஆறியிருந்தாலும்..
அந்த அப்பத்தை சுவைத்துவிட்டு தேங்காய் சட்னியோடு 2 வெங்காய வடையோ உளுந்தவடையோ உண்ணும் ஜீவராசிகள் பலர் மதுரையில் உண்டு. 12 வருடங்களுக்கு முன்பு நானும் அந்தப்பட்டியலில் இருந்தேன்.! என் பிடித்த மெனு அப்பம் & சமோசா!
அதிலும் சமோசாவிற்கு ஒரு ஆனியன் தக்காளி குருமாவும், வடைகளுக்கு கடலைமாவில் செய்த பாம்பே சாம்பாரும் தருவார்கள் அடடா என்ன காம்பினேஷன் தெரியுமா அது! சில நேரங்களில் வெள்ளையப்பம், காரபோண்டா, தவளவடை, மசால்வடைக்கு
அருமையான தக்காளி மல்லிச் சட்னி கிடைக்கும். மொறு மொறுன்னு அங்கம் மினு மினுக்க கிடைக்கும் பூண்டு தட்டிப்போட்ட மசால் வடைக்கும், தவளவடைக்கும் அந்தச் சட்னி தேவார்மிதமாக இருக்கும், மாலையில் மைசூர் போண்டா என்றோ பட்டணம் பக்கோடா என்றோ அழைக்கப்படும்..
போண்டாவிற்கு ஒரு புதினா சட்னியும் மிளகாய் சட்னியும் தருவார்கள் பாருங்கள் அது டிவைன்.! அதே போல பஜ்ஜியில் தான் எத்தனை எத்தனை வகைகள்.!பெரிய கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய், வெங்காயம் என..
வெரைட்டியாக பாஜக கலரில் வந்து இலையில் விழும் கொதிக்கும் பஜ்ஜியோடு சட்னியை சுவைத்துக் கொண்டே ரோட்டில் செல்லும் பெண்களை சைட் அடிக்கும் பெண் பார்க்கும் படலத்தை ஆண்கள் நடத்துவார்கள்.
சில சமயம் சூடான அதே பாஜக நிறத்தில் சொஜ்ஜியும் (கேசரி) கிடைக்கும்.! பிரமாதமான இனிப்பில் முந்திரி, திராட்சையுடன் வாயில் வைத்தாலே சர்ரென வயிற்றில் இறங்கும் வழவழப்பில் தயாரிக்கப்பட்ட கேசரி அது.!
வெங்காய பஜ்ஜி சாப்பிடுவது தான் கொஞ்சம் கஷ்டம்.. அவர்கள் தரும் சூட்டில் பஜ்ஜியைக் கடித்தால் வாய் வெந்து விடும்.! ஓபன் ஹார்ட் சர்ஜரி போல பஜ்ஜியை இரண்டாகப் பிளந்து அதன் சூடு போக வாயால் அதை ஊதி ஊதி..
வெங்காயத்தை லேயர் லேயராக எடுத்து சட்னியில் குழைத்து ரசித்து உண்ணவேண்டும்.! அப்படியே அண்ணா பஸ்ஸ்டாண்ட் சென்றால் அங்கு ஒரு வடைக் கடை இருக்கிறது ஒவ்வொரு வடையும் ஒரு டோனெட்டை விட
2 சுற்று பெரியதாக இருக்கும் காலையில் 2 வடை ஒரு டீ சாப்பிட்டாலே மதியம் வரை பசிக்காது.! இங்கும் மெதுவடை, ஆமைவடை, போண்டா, வெங்காய வடை, சமோசா எல்லாம் கிடைக்கும் அதன் சூடும் அந்தச்சட்னியும் அடடா.! செம.!
அதே போல யானைக்கல் ஆசீர்வாதம் கடையின் வடைகளை எல்லாம் ஒரு யானையே வந்து விழுங்குவது போல மதுரையன்கள் விரும்பி விழுங்குவார்கள். கூடல்நகர் பாலம், பீபிகுளம் உழவர் சந்தையில் வண்டிக் கடைகளில்..
மல்லி சட்னியோடு வடைகள், போண்டா, சமோசா என இங்கும் உண்டு விலை அதிகமில்லை ₹5மட்டுமே..,மஹால் ஏரியா, முனிச்சாலை சென்றுவிட்டால் முள் முருங்கைவடை இட்லிப் பொடியுடன் கிடைக்கும். வாழைப்பூ வடை,
கீரை போண்டா, மெது போண்டா, கருப்பு உளுந்தவடை, கார சீயம், இனிப்பு சீயம், தேங்காய் போளி, பருப்பு போளி என வெரைட்டியாகவும், சுவையில் வித்தியாசமாகவும் பலப்பல வடை பதார்த்தங்களை ருசிக்கலாம்.
கல்யாண முருங்கையில் குட்டி பூரி போல சுடப்பட்டும் முள் முருங்கை வடை ருசியானதும் ஆரோக்கியமானதும் கூட சின்னச் சொக்கிக்குளத்தில்
அருமையான தயிர்வடை, சாம்பார் வடை காராபூந்தி தூவி கிடைக்கும்.
இங்கு கிடைக்கும் உருளைக் கிழங்கு போண்டாவிற்கு புவிசார்பு குறியீடு வழங்கினாலும் தவறில்லை.! பீபீ குளம் மீனாட்சிபுரம் ஜங்ஷனில் கிடைக்கும் பால்பன், முட்டை கோஸ் அப்பம், வடைகள் எல்லாம் 5ஸ்டார் மதிப்புடையவை.
கிருஷ்ணாபுரம் காலனியில் வண்டிக்கடையில் சுண்டல் குழம்பு & சமோசா, மிளகாய்பஜ்ஜி, கார உருண்டை, நைஸ் மசால் போண்டா, வெங்காய போண்டா, உளுந்து போண்டா, இவையெல்லாம் முறையே தேங்காய்/தக்காளி/மல்லிச்..
சட்னிகளோடு பரிமாறப்படும் போனஸாக அந்த சுண்டல் குழம்பும் கடலைமாவு பாம்பே சாம்பாரும் வழங்கப்படும் சூடாக போடும் வரை காத்திருந்தே இங்கு சாப்பிடமுடியும். மதுரை பழைய ராஜ்மஹால் கடையிலிருந்து அம்மன் சன்னதி போகத் திரும்பும் சந்திப்பில் இருக்கும் போளி, வடைக்கடை,
பெரியார் பேருந்து நிலைய கேபிஎஸ் ஓட்டல் வாசல் மெகா சைஸ் மெதுவடைக் கடை, கிராஸ் ரோடு வடைக் கடை செல்லூர் மெயின் ரோட்டில் இருக்கும் செல்வம் கடை என மதுரையில் பலப் பல வடை ஃபேக்டரிகள் உண்டு.!
இங்கு நான் சொன்னது கொஞ்சமே.! மதுரையின் 16 திசைகளிலும் சுடச்சுட வெரைட்டியாக கிடைக்கும் அற்புத உணவு வடைகள் மட்டுமே. கதைகளில் காகங்கள் பாட்டியிடம் வடை திருடினாலும் மதுரையில் மட்டும்..
வடை சுட்டு விற்கும் பாட்டிகளுக்கு அது நஷ்டமே இல்லை..! ஏனெனில் முதல் வடையை சுட்டதும் அதை காக்கைக்கு வைத்துவிட்டே கடையைத் துவக்குகிறார்கள்.! மதுரைக்கு வந்தால் சிறந்த வடைக்கடையை அடையாளம் காண..
சிறந்த வழி ஒன்று இருக்கிறது..! அந்த வடைக்கு அவர்கள் எவ்வளவு சட்னி வகைகள் வைத்திருக்கிறார்கள் எனப் பார்த்தாலே போதும்.! இரண்டு சட்னிகள் எனில் அது 3 ஸ்டார்.. 3க்கு மேல் எனில் அது 5 ஸ்டார்..
விதவிதமாக என்றால் அது 7ஸ்டார்.! திருவிளையாடலில் ஞானப்பழத்திற்கு பதில் நாரதர் வடையை கொண்டு வந்து வைத்திருந்தால் தற்போது பழனி மலை மதுரையில் அமைந்திருக்கும் என்பதே ஆகச்சிறந்த உண்மை!
 
முகநூலிலிருந்து.....

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.