Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பாலியல் புகார்களும் பாரத தேசமும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பாலியல் புகார்களும் பாரத தேசமும்
+++++++++++++++++++++++++++++

spacer.png

 

இன்று சென்னை பத்ம சேஷாத்திரி பால பவன் பாடசாலையில் கற்பித்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர்மீது பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு செய்யப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். விசாரணைகள் ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் இதனை பிராமணர்களுக்கு எதிரான, பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான ஒன்றாக மாற்றுவதில் பலர் முனைப்பாக இருக்கிறார்கள்.

இதேபோல 2018ம் ஆண்டு இந்தியாவில் கவிஞர் வைரமுத்து உட்பட பல பிரமுகர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்போது கேரளா மாநிலத்தின் ONV Cultural Academy யினால் விருதுக்கு வைரமுத்து தெரிவான நிலையில்அவர் மீதான குற்றச்சாட்டு மீண்டும் பேசப்படுகிறது.
  

இவ்வாறு பெண்கள் தம்மீது நடாத்தப்பட்ட பாலியல் தாக்குதலைத் துணிந்து பகிரங்கப்படுத்த உறுதுணையாக இருந்தது 2006 இல் அமெரிக்க கறுப்பினத்தவரான Tarana Burke என்பவர் ஆரம்பித்த Me Too movementதான். இந்த கட்டமைப்பின் #metoo hashtag 2017 இல் வைரல் ஆனதைத் தொடர்ந்து உலக அளவில் பெண்கள் தமக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பகிரங்கப்படுத்தத் தொடங்கினர். 

உண்மையில் ஒரு பாலியல் குற்றவாளிதான் இந்த கட்டமைப்புப் பிரபலமாகவும் ஏனைய பல நாடுகளிலும் இதுபோன்ற அமைப்புகள் தோன்றுவதற்கும் காரணியாக இருந்துள்ளார். Harvey Weinstein (வயது 69) என்ற ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர்தான் அவர். 2017 இல் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் நியூயோர்க்கில் வெளியாகும் முக்கியமான இரண்டு பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள் இவர்மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட அடிப்படையாக அமைந்தன. இந்த விசாரணைகள் ஆரம்பித்த பின்னர், 80 க்கும் மேற்பட்ட பெண்கள் அவருக்கு எதிராகப் புகார் கொடுத்தனர். அவற்றுள் இரண்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 2020ல் 23 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறார். 

அடுத்தவர், பிரபலமான நகைச்சுவை நடிகரான Bill Cosby (வயது 83). 2005ல் இவர் மீது புகார் வந்தாலும் போதுமான நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை என வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்பு 2014ல் ஒரு நிகழ்ச்சியில் இன்னொரு நகைச்சுவை நடிகரான Hannibal Buress, Bill Cosby யின் பாலியல் நடத்தைகள் தொடர்பாக விபரித்ததைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 60 பெண்கள் வெளிவந்து 1965ல் இருந்து 2008 வரை தங்களுக்கு நேர்ந்தவற்றை பகிர்ந்து கொண்டனர். இந்த வழக்குகள் நடைபெறும் காலத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பல விருதுகள் மீளப் பெறப்பட்டடோடு அவர் இப்போது 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். 

கனடாவிலும் என்ற ஒன்டாரியோ conservative கட்சியின் மாகாண முதல்வர் தேர்தலில் போட்டியிட இருந்த Patrick Brown என்ற பிரபல அரசியல்வாதி குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலும் 2018 இல் போட்டியிலிருந்து விலகவேண்டி ஏற்பட்டது. அதேபோல CBC வானொலியில் பிரபல தொகுப்பாளராக இருந்த Jian Ghomeshi யும் இதே போன்ற குற்றச்சாட்டினால் தனது வேலையை இழக்க நேரிட்டது.

இவ்வாறு  2017 இல் அமெரிக்காவில் சூடுபிடித்த இந்த Me Too இயக்கம்  சினிமாத் துறைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், நிறுவன உயர் அதிகாரிகள், ஊடகத்துறை பிரபலங்கள் கல்லூரி பேராசிரியர்கள், ஒலிம்பிக் பயிற்சியாளர்கள் என 201 பெருந்தலைகளை வீழ்த்தியது. பலர் சிறை சென்றார்கள். எல்லாரும் பதவி இழந்தார்கள். அந்தப் பதவிகளில் 62% ஆனவை மீள நிரப்பப்பட்டுள்ள நிலையில் 44% வீதமான பதவிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் Me Too இயக்கம் சூடுபிடித்தபோது இந்தியாவிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டது. பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பல பெண்களும் சமூக ஊடகங்களினூடாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கினர். இதில் 34 பிரபலமான பெண்கள் உட்பட பல பெண்கள் தம்மை வெவ்வேறு காலங்களில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தொடர்பான பொதுவெளியில் பேச முன்வந்தனர்.

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி கொடுத்த புகாரும் சமூகவலைதளத்தில்  வெளிப்படையாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் அதிகம் பேசப்பட்டன. அவரைத் தொடர்ந்து வேறு பல பெண்களும் வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பல பெண்கள் சின்மயிக்கு ஆதரவாக நின்றபோதும் சில பிரபலமான பெண்களே சின்மயியை விமர்சித்தனர்.

அமெரிக்காவில் நடந்தற்கு மாறாக இந்தியாவில் ஒரு ஆண் மீது பாலியல் தொந்தரவுக் குற்றம் சுமத்தியமைக்காக, வழக்குத் தொடுத்தவரான சின்மயி தனது துறையில் இயங்க முடியாதபடி செய்யப்பட்டார். அவர் பிறந்த சாதியை அடிப்படையாகக் கொண்டு, திராவிடத் தமிழரை அவமானப்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்ட  பார்ப்பனர்களின் சதி,  இதன் பின்னால் பா.ஜ.க. இருக்கிறது போன்ற விதத்தில் பலராலும் எதிர்பிரச்சாம் செய்யப்பட்டு பிராமணர் அல்லாத தமிழ் சமூகமும் தூண்டிவிடப்பட்டது..

வைரமுத்து மீது 2019 மார்ச் மாதம் சின்மயி வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து அதே வருடம் டிசெம்பர் மாதம், “எனக்காகக் குரல் கொடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி. இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக் கவலை?” என்று அவர் அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது. 

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, சில வருடங்களுக்கு முன்னர் பிராமணரல்லாத வைரமுத்து மீது பிராமணப் பெண்ணொருவர்  குற்றச்சாட்டை முன்வைத்தபோது வைரமுத்துவுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, சின்மயியை அவரின் சாதியையும், அவர் சார்ந்த துறையையும் முன்னிலைப்படுத்தி அவர் மீது சேறு பூசும் வேலையைத்தான் அதிகம் பேர் செய்தார்கள்.

இன்று பத்ம சேஷாத்திரி பள்ளி விடயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் பிராமணர் என்பதை அடிப்படையாகக் கொண்டு மறுபக்கம் நின்றுகொண்டு  பள்ளி மீது ஒட்டு மொத்தமாக பழி சுமத்துவதுவதுடன் சாதியையும் இழுக்கும் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் அங்கு பலர் செய்துகொண்டு இருக்கிறார்கள். 

இவ்வாறான பாலியல் அத்துமீறல்களும் அசிங்கங்களும் பல பள்ளிக்கூடங்களிலும் தொடர்ந்து நடக்கின்றன. பல்கலைக் கழகங்களிலும் நடக்கின்றன. இது வெளியே தெரிய வந்தது அவ்வளவுதான். களை எடுக்க வேண்டியது எல்லோரையும்தான். ஆனால் இப்படியான சம்பவங்களுக்குள் சாதி, மதம் சேர்ப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமே.

இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில், தற்போது குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபாலன் உடனைடியாகவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். ஆனால் வைரமுத்துவோ எந்தவிதமான பிரச்சனையும் அற்ற வகையில் இயங்குவதுடன், வருடா வருடம் கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். 

வருடா வருடம் ஏதாவது விருது வாங்கிவிடும் வைரமுத்துவிற்கு இம்முறையும் ONV Cultural Academy யால் சிறந்த கவிஞர் விருது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவித்தல் வந்ததுமே தற்போதைய தமிழக முதல்வர் கையால் வைரமுத்து வாழ்த்தும் பெற்றார். ஆனாலும் மலையாளக் கலைஞர்கள் பலரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ONV Cultural Academy வைரமுத்துவுக்கு விருது கொடுப்பதை மீள்பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
இங்கு வைரமுத்து குற்றமற்றவரா? விருதுக்குத் தகுதியானவரா? என்பதை விவாதிப்பதல்ல எனது நோக்கம். இந்தியா போன்ற நாட்டில் ஒரு பெண் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைப்பதில் உள்ள அடிப்படைத் தடைகளை சுட்டிக்காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம். 

இந்தியாவில் சட்ட ஆட்சி இருப்பது உண்மையெனில் இன்று ராஜகோபாலன் விசாரிக்கப்படுவது போலவே இதுவரை குற்றம் சாட்டப்பட்ட அனைத்துப் பிரபலங்களும் சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டியவர்களும் சாட்சிகளும் மிரட்டப்படாத சூழல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அரசின் மீதும் நீதித்துறை மீதும் நம்பிக்கை வரும். 

அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சட்ட நுணுக்கங்களுக்கு முகங்கொடுத்து வழக்கினைக் கையாண்டால் நியாயம் கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகம். ஆனால் இந்தியாவில் ஒரு சம்பவத்திற்குப் பூசப்படும் சாதி, கட்சி, பின்பற்றும் சமயம், மொழி எனப் பல சாயங்களைத் தாண்டியும், ஆணாதிக்கச் சமூகம், ஆணாதிக்கத்தை ஆராதிக்கும் பெண்கள் கூட்டம், அரசியல், பண செல்வாக்குகள் என்பவற்றையும் தாண்டித்தான் ஒரு பெண் நியாயத்திற்காகப் போராடும் சூழல்தான் இன்றும் இருக்கிறது.

நன்றி: Rajesh Kumar - இவரது பக்கத்திலிருந்து சில தரவுகள் எடுக்கப்பட்டன.

 

 

https://www.facebook.com/101881847986243/posts/337493987758360/?d=n

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வைரமுத்து மீது 2019 மார்ச் மாதம் சின்மயி வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து அதே வருடம் டிசெம்பர் மாதம்

சின்மயி வைரமுத்து மீது வழக்கு தொடுக்கவே இல்லையே. தன் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக  வைரமுத்து சொல்லியும்  வலைத்தளங்களில் அவர் மீது அவதூறு பரப்புவதை மட்டுமே சின்மயி செய்து கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் வைரமுத்து மீது ஏன் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கதறுகிறார்..😂

சின்மயியையும் பாடசாலைப் பிள்ளைகளையும் ஒரே தராசில் நிறுக்கும் கட்டுரையாசிரியரின் அறிவை என்ன சொல்ல... 🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சின்மயி வைரமுத்து மீது வழக்கு தொடுக்கவே இல்லையே. தன் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக  வைரமுத்து சொல்லியும்  வலைத்தளங்களில் அவர் மீது அவதூறு பரப்புவதை மட்டுமே சின்மயி செய்து கொண்டிருக்கிறார்.

 

வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

 

வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?

 

சுமா, பிரச்சனை என்னவென்றால்...சட்டத்தை அமுல் படுத்துபவர்களும் ''அவாள்"".
சின்மயியும் ஒரு அவாள்..!
வைரமுத்துவுக்கு தீர்ப்பு எப்படி வருமென்று ஏற்கனவே தெரியும்...!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா

வயதால் நம் வாழ்வு முறியுமா
வாய் முத்தம் வயது அறியுமா
நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா

இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா


என்வாழ்வில் தந்தை இல்லையே
தந்தைபோல் கணவன் வேண்டுமே

என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா

ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது
காதல் நீதி என்பது
காலம் தோறும் மாறுது

வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது
விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது


ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது
யாரு கேள்வி கேட்பது?

 

காதல் சிந்தும் மழையிலே
காலம் தேசம் அழியுதே
எங்கே சிந்தை அழியுதோ
காதல் அங்கே மலருதே!


அறிவழிந்து போனபின்
வயது வந்து தோன்றுமா
பொருள் அழிந்து போனபின்
நிழல் கிடந்து வாழுமா?


அறமிருக்கும் வாழ்விலே
முரணிருக்கும் என்பதால்
முரணிருக்கும் வாழ்விலும்
அறமிருக்கும் இல்லையா


என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா
என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா.

இது அண்மையில் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள். PSBB பாடசாலை ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு எழுதிய Pedo கவிதை மாதிரி இருக்குது.

 

 

14 minutes ago, புங்கையூரன் said:

சுமா, பிரச்சனை என்னவென்றால்...சட்டத்தை அமுல் படுத்துபவர்களும் ''அவாள்"".
சின்மயியும் ஒரு அவாள்..!
வைரமுத்துவுக்கு தீர்ப்பு எப்படி வருமென்று ஏற்கனவே தெரியும்...!

நீங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு விருப்பமான நிற கண்ணாடி அணிந்து பாக்கின்றீர்கள். இந்திய நீதி துறையில்  இருப்பவர்கள் எல்லோரும்  'அவாள்' கள் அல்ல. 

Edited by zuma
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அவாள்களை விட தமிழகத்தில் திராவிடம் வலுவாக இருக்கின்றது. அந்தத் திராவிடம் வயிரமுத்துவை தன் செட்டைகளுக்குள் வைத்துப் பாதுகாத்துக்கொள்ளும். மெட்டுக்கு பல திரைப்படப் பாடல்களை எழுதி அவை மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது வயிரமுத்துவுக்கு தன்னிலை காக்க வாய்ப்பாக அமைந்துவிட்டது. 

Edited by வாலி
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, zuma said:

 

என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா

வயதால் நம் வாழ்வு முறியுமா
வாய் முத்தம் வயது அறியுமா
நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா

இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா


என்வாழ்வில் தந்தை இல்லையே
தந்தைபோல் கணவன் வேண்டுமே

என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா

ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது
காதல் நீதி என்பது
காலம் தோறும் மாறுது

வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது
விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது


ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது
யாரு கேள்வி கேட்பது?

 

காதல் சிந்தும் மழையிலே
காலம் தேசம் அழியுதே
எங்கே சிந்தை அழியுதோ
காதல் அங்கே மலருதே!


அறிவழிந்து போனபின்
வயது வந்து தோன்றுமா
பொருள் அழிந்து போனபின்
நிழல் கிடந்து வாழுமா?


அறமிருக்கும் வாழ்விலே
முரணிருக்கும் என்பதால்
முரணிருக்கும் வாழ்விலும்
அறமிருக்கும் இல்லையா


என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா
என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா.

இது அண்மையில் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள். PSBB பாடசாலை ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு எழுதிய Pedo கவிதை மாதிரி இருக்குது.

 

 

நீங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு விருப்பமான நிற கண்ணாடி அணிந்து பாக்கின்றீர்கள். இந்திய நீதி துறையில்  இருப்பவர்கள் எல்லோரும்  'அவாள்' கள் அல்ல. 

ஓ...அப்படியா?

நான் கண்ணாடி அணிவதில்லை....!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, zuma said:

 

வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?

 

அதனை தான் சின்மயி எதிர்பார்க்கிறார். அவரிடம் சான்றுகள் இல்லை, ஆனால் வழக்கு என்று வந்தால், சும்மாவே கேள்விகள் கேட்டு நாறடிக்கலாம்.

ஆனால், வைரமுத்து, அதிமுக காலத்தில், பிஜேபி செல்வாக்கு காரணமாக தவிர்த்தார்.

இப்போது அவருக்கு சார்பான திமுக ஆட்சிக்கு வந்ததால், சின்மயி தனது நிலையினை சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்  என்றே சொல்லலாம்.  

கருணாநிதியின் அரசியல் அலம்பறை செய்யும் பெண்களை மடக்கும் ஒரு தந்திரம்: விபச்சார நோக்கத்துடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றார் அல்லது ஹோட்டலில் கைதானார் என்று சிக்க வைப்பது. ஆனால் முதலிலே எச்சரிக்கை செய்வார், இல்லாவிடில் கோவிந்தா.

சசிகலா கணவர் நடராஜனை வழிக்கு கொண்டு வர, அவருடன் வேலை செய்த ஒரு இளம் பெண்ணை, உள்ளே தூக்கி போட்டார் ஜெயலலிதா. அவரது வளர்ப்பு மகன் சுதாகரனை, கஞ்சா வைத்திருந்தார் என்று உள்ளே தள்ளினார்.

திமுக அரசு, வைரமுத்துவுக்காக அதிரடி காட்ட இன்னும் இரண்டொரு மாதமாகலாம். 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா,

நம்ம கவிப்பேரரசுக்கு,

1. பிஜேபி கவர் எடுக்கிறது

2. அதிமுக கவர் எடுக்கிறது

3. திமுக கவர் எடுக்கிறது

இத்தனை ஆதரவும் Indian establishment இடம் பெறும் ஒருவர், இவர்கள் அனைவரும் வெறுத்த, புலிகளுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் எம் இனத்துக்கும் எப்படி நண்பராக இருக்க முடியும் என்ற அடிப்படை கேள்வியை கூட கேட்காமல்

அவரின் 2009 கள்ள மெளனத்தை மறந்து அல்லது மறைத்தபடி,

இந்த பாழாய்போன ஈழத்தமிழ் இனமும் அல்லவா அவருக்காக வரிந்து கட்டுகிறது.

நடிகரின் கட் அவுட்டுக்கு பாலூத்தும் தென்னிந்திய ரசிகர்கள் திரை கவர்ச்சிக்கு மயங்கினார்கள்.

எம்மவர்கள் ? எழுத்து கவர்சிக்கு மயங்குகிறார்கள்🤦‍♂️.

இதில் வழமையாக இரு பகுதியாக பிரியும் பலர் அணி மாறி வேறு கருத்திடுகிறார்கள்.

1. ஆணில் குற்றமா, பெண்ணில் குற்றமா என்பது இங்கே பொருட்டல்ல

2. வைரமுத்து தமிழனா, சின்மயி பிராணமணாளா என்பதும் இங்கே பொருட்டல்ல

3. யார் அதிகம் உண்மை பேசுகிறார் என்பதும் இங்கே பொருட்டல்ல.

குறைந்த பட்சம் கருணாநிதியின் 2009 துரோகத்தை காலம் தாழ்ந்தாவது பகிரங்கமாக ஏற்று கொள்ளாதவரை

அவரின் பிரச்ச்னையை இந்த இனம் கவனத்தில் எடுக்கும் தகுதியற்றவர் வைரமுத்து.

ஈழத்தமிழர்களால் வீதியில் கிடக்கும் அசிங்கம் போல கடந்து செல்ல படவேண்டியவர் வைரமுத்து.

 

யாழ் களத்தின் அதி தீவிர தமிழ் தேசிய படையணிக்கு:

கொஞ்சம் அடக்கித்தான் வாசியுங்கள் வீரர்களே.

மிக விரைவில் தன் உற்ற நண்பர் ஸ்டாலினிடம் டோட்டல் சரண்டர் ஆவர் முத்து சார்.

இப்போ சீமான் சொல்லி விட்டார் சாட்டை துரை சொல்லி விட்டார் என்று வைரமுத்துவுக்கு ஆதரவாக கம்பு சுத்தியதை எண்ணி அப்போ வருத்தபட வேண்டி வரலாம்.

அப்புறம் கோஷான் போன்ற கண்ட கண்ட பயலுகள் எல்லாம் மீண்டும் ஒரு முறை I told you so என்று சொல்லும்பசியாகலாம்🤣.

 • Thanks 1
 • Confused 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

 

கருணாநிதியின் அரசியல் அலம்பறை செய்யும் பெண்களை மடக்கும் ஒரு தந்திரம்: விபச்சார நோக்கத்துடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றார் அல்லது ஹோட்டலில் கைதானார் என்று சிக்க வைப்பது. ஆனால் முதலிலே எச்சரிக்கை செய்வார், இல்லாவிடில் கோவிந்தா.

சசிகலா கணவர் நடராஜனை வழிக்கு கொண்டு வர, அவருடன் வேலை செய்த ஒரு இளம் பெண்ணை, உள்ளே தூக்கி போட்டார் ஜெயலலிதா. அவரது வளர்ப்பு மகன் சுதாகரனை, கஞ்சா வைத்திருந்தார் என்று உள்ளே தள்ளினார்.

 

நாதம்,

நீங்கள் மேலே சொல்லியதை வைத்து எனக்கு ஒரு ஐயம். ஆம் இல்லை என்று பதில் சொன்னால் போதுமானது.

நீங்கள் சொல்வதை பார்த்தால் - தமிழ் நாட்டு அரசில் அல்லது இந்திய மத்திய அரசில் ஆட்சியில் இருப்பவர்கள் - யாராவது ஒருவர் தமக்கு விரோதமாக தனிப்பட்டு செயல்பட்டாலோ அல்லது தமக்கு விரோதமான கொள்கைகளை முன்னெடுத்தாலோ அவர்கள் மீது பொய் வழக்கு சோடித்து உள்ளே தள்ளி விடுவார்கள் போலுள்ளது.

அப்படித்தானா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நாதம்,

நீங்கள் மேலே சொல்லியதை வைத்து எனக்கு ஒரு ஐயம். ஆம் இல்லை என்று பதில் சொன்னால் போதுமானது.

நீங்கள் சொல்வதை பார்த்தால் - தமிழ் நாட்டு அரசில் அல்லது இந்திய மத்திய அரசில் ஆட்சியில் இருப்பவர்கள் - யாராவது ஒருவர் தமக்கு விரோதமாக தனிப்பட்டு செயல்பட்டாலோ அல்லது தமக்கு விரோதமான கொள்கைகளை முன்னெடுத்தாலோ அவர்கள் மீது பொய் வழக்கு சோடித்து உள்ளே தள்ளி விடுவார்கள் போலுள்ளது.

அப்படித்தானா?

ஆம் 😰

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

ஆம் 😰

இந்த கேள்விக்கு எனது பதிலும் ஆம் என்பதுதான்.

ஆனால்,

விடுதலை புலிகளை ஆதரிக்கும், தலைவரின் படத்தை பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்லும், ராஜீவை நாம்தான் கொன்றோம் என பொது மேடையில் கூறிய சீமானின் மீது ஏன் எந்த சோடிக்க பட்ட வழக்கும் பாயவில்லை?

என்னை பொறுத்தவரை இதற்கு 2 காரணங்கள் தான் இருக்க முடியும்.

1. இந்திய மத்திய அரசு, பிஜேபி, மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகள் எல்லாம் விடுதலை புலிகளின் கொள்கையை, தலைமையை ஏற்று கொண்டு விட்டன. அதை தமிழ் நாட்டில் பரப்புவதற்கு அவர்களுக்கு முழு சம்மதம்.

2. இந்திய மத்திய அரசு, பிஜேபி, மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகள் சீமானுடன் ஒரு டீலுக்கு போயுள்ளன. எனவே அவர் மீது எந்த வழக்கும் பாயாது/பாயவில்லை.

இதில் எது காரணம்?

அல்லது சீமான் இப்படி பொய் வழக்கில் கைதாகாமல் இருக்க வேறு ஏதேனும் காரணங்கள் இருக்க கூடுமா?

பிகு: திரியை திசை திருப்புவதாக தெரிந்தால் மன்னிகவும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, goshan_che said:

பிகு: திரியை திசை திருப்புவதாக தெரிந்தால் மன்னிகவும்.

எனக்கு இப்போதெல்லாம் இது புரிவதில்லை, இந்த விவாதத்தில் ஆர்வம் இல்லை.. அதை விடுங்கோ. இதை பாருங்கோ.

எனது நண்பர், லண்டனில் இருந்து கொழும்பு போய், கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கினார்.

இலங்கை கடவுசீட்டு வைத்திருந்தார். அதிகாரி ஏதோ கிரந்த கேள்வி கேட்க, இவருக்கு ஏறி விட்டது. என்னவோ சொல்லிப்போட்டார். லண்டன் பழக்கம். அவர் அப்படியே அந்த கதிரையில் இரு என்று சொல்லி விட்டு போய் விட்டார். கடவுசீட்டு அவரிடம்...

பல மணிநேரத்தில் பின்னர் ஒரு அதிகாரி வந்தார். உன்னை கொண்டுபோக புலனாய்வு அதிகாரிகளை வர சொல்லி உள்ளோம். நீ புலி என்று சந்தேகம் என்கிறார். 

விசயம் புரிந்து தலைக்கு ஏறியவுடன், தடாலடியாக சரண்டர் ஆனார். அய்யா நான் பிரித்தானிய கடவு சீட்டும் வைத்திருக்கிறேன், நான் இரண்டு நாட்டு குடியுரிமையும் வைத்திருப்பதால், அவர் கேட்டது எனக்கு கொஞ்சம் கடுப்பாகி விட்டது. அய்யா எங்கே, அவரிடம் மன்னிப்பு கேட்க்கிறேன் என்று சொல்லி, காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டு, ஓடி வந்து விட்டார், $200 டொலரையும் கொடுத்துதான்.... அதுவே இந்தியா.

பிரித்தானிய கடவு சீட்டும், காசும் இல்லாவிடில், இன்று தூள் கடத்தினார் என்று ஒரு பத்து வருசம் கம்பி எண்ணி இருப்பாய் என்று சொல்ல, சிலிர்த்துக் கொள்வார்.

ஒரே ஒரு விசயம்.... இந்திய விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகளிடம் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எனக்கு இப்போதெல்லாம் இது புரிவதில்லை. அதை விடுங்கோ. 

ஓ… உங்களுக்கும் புரியவில்லையா….சரி அப்ப இதை விடுவம்.

ஆனால் அவர் இந்திய புலானாய்வு முகவரா இல்லையா என உங்களுக்கு தெளிவில்லாத நிலையில் (எனக்கும் இதே குழப்பம்தான்) -அவரின் அரசியலை ஆதரித்து எழுதும் போது கவனம் எடுப்பீர்கள் என நம்புகிறேன்.

 

நீங்கள் மேலே சொன்னதில் எனக்கு துளியும் முரண்பாடில்லை. நானே அனுபவப்பட்ட விடயம்தான் இந்த இந்திய விமானநிலைய அதிகாரிகளின் அட்டூழியம்.

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?

பாதிக்கபட்ட சின்மயி குற்றம் செய்தவர் மீது வழக்கு தொடுக்க விரும்பவில்லை 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

சட்டத்தை அமுல் படுத்துபவர்களும் ''அவாள்"".
சின்மயியும் ஒரு அவாள்

சின்மயிக்கு தன்மீது குற்றம் செய்தவர் மீது வழக்கு போட்டு தண்டிக்க விரும்பவில்லை 😂

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

பாதிக்கபட்ட சின்மயி குற்றம் செய்தவர் மீது வழக்கு தொடுக்க விரும்பவில்லை 😂

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

சின்மயிக்கு தன்மீது குற்றம் செய்தவர் மீது வழக்கு போட்டு தண்டிக்க விரும்பவில்லை 😂

 

ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்தப் போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே


இதில் யார் தோல்வியுறும் போதும்
அதுதான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மனக் கிடங்குகள் தீப்பற்றித் தித்திக்கணும்

எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிகப் பிடித்தது என்னில்
பகல் பொழுதின் பேரழகா
ராத்திரியின் பூரணமா
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா

ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனகலிடும் ஒலிப்பிடிக்கும்
கட்டில் மேல் எல்லாம் களைந்த பின்னே பின்னே
களையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்

என் நாயகா எனைப் பிரிகையில்
என் ஞாபகம் தலை காட்டுமா
உன் ஆண் மனம் தடுமாறுமா
பிற பெண்கள் மேல் மனம் போகுமா
கண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா

தேவதை புன்னகை செய்தால்
சிறு தேப்பிறை முழு நிலவாகும்
குறைகுடமாய் நானிருந்தேன்
நிறைகுடமாய் ஏன் நிறைந்தேன்
உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்

ஜீவித நதியென விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என்ன
ஆண் தான் ஆண் தான்
பெண்ணுக்கு முழுமை என்ன
ஆண் தான் ஆண் தான்

அடி காற்றினிலே வான் நிறையுது
நம் காதலால் உயிர் நிறையுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்னத்தான் எதிர்ப்பார்க்கிறாய்
ஜீவனின் மையம் தேடி
கைகள் மீண்டும் வருமா?

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வரலாறு: ஆப்ரிக்காவின் இரக்கமில்லா கன்னிப்பெண் மெய்க்காப்பாளர்கள் - அதிகம் அறியப்படாத பழங்குடி சமூகம் ஃப்லோர் மெக்டொனால்டு பிபிசி ட்ராவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHRIS HELLIER/GETTY IMAGES   படக்குறிப்பு, பெனின் பெண் போராளிகளை அமேசான்கள் என்று ஐரோப்பியர்கள் அழைத்தனர். அமேசான் என்பது கிரேக்க புராணத்தில் கூறப்பட்டுள்ள இரக்கமற்ற போர் வீரர்களைக் குறிக்கும். (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 19ஆம் கட்டுரை இது) கிரேக்க புராணங்களில் காணப்பட்ட இரக்கமற்ற போராளிகளுக்கு பிறகு, இந்த ஆப்ரிக்காவின் அனைத்து பெண்களை உள்ளடக்கிய போராளிகளை ஐரோப்பிய காலனித்துவவாதிகள், 'கருப்பின அமேசான்கள்' என்று அழைக்கும் அளவுக்கு இந்த பெண் ராணுவம் இரக்கமற்றதாக இருந்தது. இவர்களின் வரலாற்றுப் பதிவுகள், வெள்ளித்திரையில் மார்வெல் ஸ்டூடியோ தயாரிப்பில் பிளாக் பாந்தர் என்கிற பெயரில் 2018ல் வெளிவந்தபோது, அதில் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக பரிணமித்ததாக நடிகர்கள் சாட்விக் போஸ்மேன், மைக்கேல் பி. ஜோர்டான் ஆகியோர் பாராட்டப்பட்டனர். ஆனால், அவர்களை விட டோரா மிலாஜே என்ற கதாபாத்திரம் புனைக்கதையாக நம்பப்பட்ட வகாண்டா ராஜ்ஜியத்தின் இளம் பெண்கள் சிறப்புப் படையில் இடம்பெற்றதையே சிறப்பான விஷயமாக கூறுவேன். மிலாஜே போன்ற பெண் மெய்க்காப்பாளர்கள்தான் பிளாக் பாந்தர் படத்தின் அடிநாதமாக விளங்கி படத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். நிஜ வாழ்வில் இப்படியும் ஒரு பெண்கள் சமூகம், அதுவும் ராஜ்ஜியத்தின் மெய்க்காப்பாளர்களாக, ஈவு இரக்கமற்றவர்களாக வாழ்ந்தார்கள் என்பதை அறிந்தபோது உண்மையில் நான் ஈர்க்கப்பட்டேன். இந்தப்பெண்கள் சமூகத்தின் வழி, வழியாக வந்த தலைமுறையினர் இப்போதும் வாழ்கிறார்கள். தங்களுடைய மூதாதையர்களின் பாரம்பரியத்தை இப்போதும் அவர்களில் சிலர் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள் என்பதை அறிந்து மேலும் வியந்தேன். வரலாற்றுத் தொடர் 18: பூடான்: தொலைந்த வரலாறை தேடும் 'சந்தோஷ சாம்ராஜ்ஜியம்' வரலாற்றுத் தொடர் 17: ஜெனோபியா: பால்மைரா சிற்றரசியின் வரலாறு வரலாற்றுத் தொடர் 16: ஹிட்லருக்காக 'ஆரிய' கர்ப்பிணிகள் பிரசவித்த பல ஆயிரம் குழந்தைகள் வரலாற்றுத் தொடர் 15: சாஃபோ: லெஸ்பியன் உறவுக்காக கவிதையில் உருகிய பழங்கால கிரேக்க பெண் கவிஞர் வரலாற்றுத் தொடர் 14: 3ம் நூற்றாண்டில் சீனர்களை விரட்டியடித்த வியட்நாமிய லேடி ட்ரியூ வரலாற்றுத் தொடர் 13: ரோமானிய, பிரிட்டன் துருப்புகளை அலற விட்ட ராணி பூடிக்கா அந்த காலத்து டஹோமி சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது அபோமி. இப்போது அது பெனின் நாட்டில் தென்பகுதியில் உள்ளது. அந்தக்காலத்து ஆப்ரிக்க மெய்க்காப்பாளர்கள் படை சமூகத்தின் வழி, வழியாக வந்தவர்கள் இப்போதும் தங்களுடைய தலைமுறை ராணிக்கு மரியாதை செய்கிறார்கள். இந்த அமேசான் பெண்கள் மெய்க்காவலர்கள் படைக்குழுவை உருவாக்கியவர் ராணி ஹாங்பே. இவரது வழிவந்த டஹோமிய ராஜ்ஜியத்தின் தற்போதைய ராணியை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. தங்களுடைய பாரம்பரிய வழக்கத்தின்படியே தமது பட்டத்தையும் அதிகாரத்தையும் இவர் கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றிலும் நான்கு மெய்காப்பாளர்களாக பெண்கள் இருக்கிறார்கள். கையால் நெய்யப்பட்ட தரைவிரிப்பானில் அவர்கள் அமர்ந்திருந்தனர். அந்த அறை ராஜ கம்பீரத்துடன் காட்சியளித்தது. மேஜைகள், பார்வையாளர்களுக்கான இருக்கைகள் எல்லாம் அங்கிருந்தன. பழங்கால தொலைக்காட்சியொன்றையும் காண முடிந்தது. அதன் அருகே தற்காலிக மர வேலைப்பாடு அமைப்பு போன்ற மதுபான அறையும் இருந்தது. ராணியின் செயலாளராக 24 வயது பெண் ரூபினெல் பணியாற்றுகிறார். "இவர் எங்களுடைய ராஜா. எங்களுடைய கடவுள். அவருக்காக நாங்கள் சாகவும் துணிவோம்," என மிகக் கவனமாக இந்த வார்த்தைகளை ரூபினெல் என்னிடம் பகிர்ந்து கொண்டார். ராணியைப் பார்த்தவுடன் நான் விழுந்து வணங்கி, பிறகு சம்பிரதாய முறையில் குடிநீரைப் பருக வேண்டும் என்று எனக்கு அவர்கள் உணர்த்தினர். அதைத்தொடர்ந்து, ரூபினெல்லும் அவரது பாட்டியும் தங்களுடைய மூதாதையர்களின் கதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். பட மூலாதாரம்,MARVEL/DISNEY   படக்குறிப்பு, அமேசான் பெண் போர் வீரர்களால் உந்தப்பட்டு ப்ளாக் பேந்தர் படத்தில் டோரா மிலாஜெ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது மேற்கு ஆப்ரிக்காவில் 1625 முதல் 1894வரை இருந்த டஹோமி சாம்ராஜ்ஜியத்தின் முன்கள வீரர்களாக டஹோமி அமேசான்கள் இருந்தனர். இப்போது அந்த பகுதி நவீன கால பெனின் ஆக உள்ளது. முந்தைய காலத்தில் வாழ்ந்த டஹோமி சாம்ராஜ்ஜியத்தின் பல தடயங்கள் இப்போதும் இங்குள்ளன. நைஜீரியா மற்றும் டோகோ கடலோர பகுதிகளுக்கு இடையே இந்த இடம் உள்ளது. அண்டை பகுதிகளில் உள்ள பழங்குடிகளை வெல்லும்போதும், ஐரோப்பிய படைகளுக்கு எதிர்வினையாற்றும் தீரத்திலும் அச்சமற்றவர்களாக இந்த அமோசான் பெண் மெய்க்காப்பாளர்கள் விளங்கினர். 1892-ல் இந்த ராஜ்ஜியம் பிரெஞ்சு காலனியாக மாறுவதற்கு முன்பாக, இந்த பகுதியில் அமேசானிய பெண்களின் கடைசி யுத்தம் நடந்ததாக வரலாறு கூறுகிறது. அப்போது 434 மெய்காப்பாளர்களில் 17 பேர் மட்டுமே உயிருடன் ராஜ்ஜியத்துக்கு திரும்பினர். வரலாற்றுக்கூற்றுப்படி, ஹாங்பே 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமது இரட்டை சகோதரர் அகாபா இறந்த பிறகு மணி மூடியை ஏற்றார். ஆனால், அதிகாரப்பசி கொண்ட மற்றொரு சகோதரரான அகாஜாவால் அவர் அரியணையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அகாஜா பதவிக்காலத்தில் தமது மூதாதையர்களின் அனைத்து தடயங்களையும் அழித்ததாக தற்போதைய ராணி ஹாங்பே கூறுகிறார். வரலாற்றுத்தொடர் 12: பாலியல் தொழில், தகாத உறவு - சீன கடல் கொள்ளை ராணி வரலாற்றுத்தொடர் 11: பேரரசர் அலெக்சாண்டர் 32 வயதில் உயிருடன் புதைக்கப்பட்டாரா? வரலாற்றுத் தொடர் 10: இன்கா நாகரிகம்: நம்பிக்கை துரோகத்தை அனுபவித்தவர்களின் வரலாறு வரலாற்றுத் தொடர் 09: எதிரிகளின் ரத்தம் குடித்த சிதியர்கள் - யார் இந்த திகில் உலக ராஜாக்கள்? காரணம், அந்த காலத்தில் அரியணையை ஏற்க தகுதி பெற்றவர்கள் ஆண்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அகாஜா கொண்டிருந்தார். அபோமியில் உள்ள அரண்மனை சுவற்றில் இப்போதும் சில பகுதிகளில் வெண்கல சிற்பக்காட்சிகளில் வழி, வழியாக வந்த ராஜ்ஜிய குடும்பம் பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால், அதில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹாங்பே பற்றிய அறிகுறி இல்லை என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படியொருவர் வாழ்ந்தாரா என்று கூட சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். பழங்கால ராணியின் வாழ்க்கை முறையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பண்பாளர்களாக ராணியின் மெய்க்காப்பாளர்களாக விளங்கிய பெண்களின் தலைமுறைகள் உள்ளன. இந்த பெண் மெய்க்காப்பாளர்களின் தோற்றம் தொடர்பாக வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் பல குறிப்புகள் உள்ளன. சிலர் ஆரம்பத்தில் யானை வேட்டையாளர்களாக இந்த அமேசானிய பெண்கள் இருந்தனர் என்றும் அவர்கள் காலப்போக்கில் மனிதர்களை வேட்டையாடக் கூடியவர்களாக மாறினர் என்றும் கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலானவர்கள், இந்த கன்னிப்பெண் மெய்க்காப்பாளர்கள் ஹாங்பே ராணிக்கு பிறகு ராஜ்ஜியத்துக்கு தலைமை தாங்கிய ராஜாக்களுக்கும் மெய்க்காப்பாளர்களாக வாழ்ந்தனர் என்று கூறுகின்றனர். இந்தக் கூற்று ஏற்புடையதாக உள்ளது என்கின்றனர், இவர்களின் வரலாறை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள். பட மூலாதாரம்,FLEUR MACDONALD   படக்குறிப்பு, அமேசான் வீராங்கனைகளின் வழி வந்தவர்களே ஹாங்பே அரசியின் உதவிப் பெண்களாக உள்ளனர். இதன்படி, 1818 முதல் 1858இல் டஹோமியை ஆட்சி செய்த மன்னர் கெசோதான் முதல் முறையாக தமது ராணுவப்படையில் அமேசான் பெண்களை அதிகாரபூர்வ இணையச் செய்கிறார். அந்த காலத்தில் ஐரோப்பிய அடிமை வர்த்தகம் தலைதூக்கியிருந்ததால் ராணுவத்தில் சேர ஆள் பற்றாக்குறை இருந்துள்ளது. அதை சமாளிக்கும் விதமாக இந்த பெண் மெய்க்காப்பாளர்களை சேர்க்கும் ஏற்பாட்டை மன்னர் கெசோ செய்திருக்கக் கூடும் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். டஹோமி ராஜ்ஜியத்தில் அமேசான்கள் அங்கீகரிக்கப்பட்ட படை வீராங்கனைகளான பிறகு அவர்களின் பலம் பெருகியது. ஏற்கெனவே அவர்கள் டஹோமி ஆளுகையில் சிறந்த பலசாலிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தனர். வூடூ மத அடிப்படையில் தற்போதைய பெனின் நாட்டின் அலுவல்பூர்வ மதமான வென்டூன் மேம்பட்டதும் இந்த காலகட்டத்தில்தான். புவியை படைக்க ஆண் கடவுளும், பெண் கடவுளும் சேர்ந்தே வந்ததாகவும் மதம், அரசியல், ராணுவம் என எதுவானாலும் அதில் ஆணும் பெண்ணும் சரிசமமாக இருக்க வேண்டும் என்ற போதனையை இந்த மதம் வலியுறுத்தியது. வரலாற்றுத்தொடர் 08: 'மாயன் நாள்காட்டி': உலகம் அழியும் என்று கணித்தது உண்மையா? வரலாற்றுத்தொடர் 07: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த ஆஸ்டெக் பேரரசைதெரியுமா? வரலாற்றுத்தொடர் 06: ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னரின் குடும்பம் சுட்டுக் கொல்லப்பட்ட ரத்த வரலாறு வரலாற்றுத்தொடர் 05: பழங்கால மெசபடோமிய நகரான பாபிலோன் வரலாறு உங்களுக்கு தெரியுமா? பல ஐரோப்பிய அடிமை வர்த்தகர்கள், மிஷனரிகள் மற்றும் காலனித்துவவாதிகள் தங்களுடைய குறிப்புகளில், இந்த அமேசானிய அச்சமற்ற பெண்களுடனான தங்களின் சந்திப்புகளைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும், அமேசான்கள் பற்றிய நேரடி வரலாற்றுக் குறிப்புகள் நம்பக்கூடியவையாக இல்லை. 1861ஆம் ஆண்டில், இத்தாலிய பாதிரியார் ஃபிரான்செஸ்கோ போர்ஹெரோ, ஒரு ராணுவப் பயிற்சி பற்றி விவரித்திருந்தார், அதில் ஆயிரக்கணக்கான பெண்கள் 120 மீட்டர் உயரமுள்ள முட்கள் நிறைந்த அகாசியா புதர்களில் வெறுங்காலுடன் நடந்தனர் என்று குறிப்பிடுகிறார். 1889ஆம் ஆண்டில், பிரெஞ்சு காலனித்துவ நிர்வாகி ஜீன் பயோல், தான் நேரில் கண்ட ஒரு இளம் அமேசான் பெண் கைதியின் அணுகுமுறை பற்றி விவரித்தார். "[அவர்] சர்வ சாதாரணமாக மேலே நடந்து, இரண்டு கைகளாலும் தன் வாளை மூன்று முறை சுழற்றினாள், பின் தலையை உடற்பகுதியில் இணைத்திருந்த கடைசி சதையை வெட்டினார்... பின்னர் அவர் அந்த ஆயுதத்திலிருந்து ரத்தத்தை நக்கி விழுங்கினார்," என்று குறிப்பிடுகிறார். 19ஆம் நூற்றாண்டில் ராஜ்யத்திற்கு வருகை தந்த ஐரோப்பியர்கள் டஹோமியின் பெண் போராளிகளை அமேசான்கள் என்றும் கிரேக்க புராணங்களின் இரக்கமற்ற போர்வீரர்கள் என்றும் அழைத்தனர். இன்று, வரலாற்றாசிரியர்கள் இந்த பெண் மெய்க்காப்பாளர்களை மினோ என்று குறிப்பிடுகின்றனர். இதை உள்ளூர் ஃபோன் மொழியில் 'எங்கள் தாய்மார்கள்' என்று மொழிபெயர்க்கலாம். இருப்பினும், பெனினில் பிறந்து இப்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் பேராசிரியராகவும், கோட்டோனுவில் உள்ள ஆப்ரிக்க பொருளாதார கல்லூரியின் நிறுவனருமான லியோனார்ட் வாண்ட்செகான், சமகால டஹோமி சமுதாயத்தில் இந்த போர்வீராங்கனைகளின் பங்கு துல்லியமாக பிரதிபலிக்கவில்லை என்று கூறுகிறார். "மினோ என்றால் சூனியக்காரி" என்று அவர் வாதிடுகிறார். பட மூலாதாரம்,THE PICTURE ART COLLECTION/ALAMY இன்று, இப்போதைய ராணி ஹாங்பே மற்றும் அவரது அமேசான் பெண்களின் பங்களிப்பு என்பது வெறும் சடங்கு போலவே உள்ளது. ராணியின் வீட்டுக்கு அருகிலுள்ள கோயிலில் நடக்கும் மத சடங்குகளுக்கு மட்டுமே அவர் தலைமை தாங்குகிறார். ராணி ஹாங்பேயின் புகைப்படங்களை எடுக்க நான் கேட்டபோது, மற்றொரு அமேசானான பியரெட், தனது எஜமானியின் மீது ஒரு சம்பிரதாய துணியை வைத்து புகைப்படம் எடுக்க அனுமதித்தார். ஆடை தயாரிப்பாளரான பியர்ரெட் ஒவ்வொரு ஆண்டும் தனது ராணிக்கு ஒரு புதிய குடையை வடிவமைக்கிறார். குறியீடுகளால் நிரம்பிய, விரிவாக அலங்கரிக்கப்பட்ட இந்த ஆடை, ஒருமுறை டஹோமி அரசவையில் காட்சிப்படுத்தப்பட்டது. ராணி ஹாங்பேயின் குடை ஒப்பீட்டளவில் எளிமையானது, இருப்பினும் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், அது பெரும்பாலும் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளின் எலும்புகளால் அலங்கரிக்கப்பட்டன. பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்களையும், அமேசான்கள் போரில் பயன்படுத்திய வட்ட - தலை வடிவங்களிலும் இது தயாரிக்கப்பட்டது. வரலாற்றுத்தொடர் 04: இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன? வரலாற்றுத்தொடர் 03: பேரரசர் நெப்போலியன் வாழ்வு, மரணம் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? வரலாற்றுத்தொடர் 02: 15,000 ஜப்பானியர்களை 1,500 இந்தியர்கள் வென்ற கதை வரலாற்றுத்தொடர் 01: சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய மன்னரின் கல்லறை ரகசியம் இந்த கொடிய ஆயுதங்கள் அரண்மனை கட்டடங்களின் மண் சுவர் வேலைப்பாடுகளில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அரசரும் தனது முன்னோடிக்கு அடுத்ததாக ஒரு புதிய அரண்மனையைக் கட்டுவார்கள், முந்தையதை ஒரு கல்லறையாக விட்டுவிடுவார்கள். டஹோமி பேரரசின் கடைசி மன்னரான பெஹான்சின், பிரெஞ்சுக்காரர்கள் வருவதற்கு முன்பு அரண்மனைகளை எரித்த போதிலும், ஒரு பகுதி இன்னும் அபோமியில் வீற்றிருக்கிறது. துருப்பிடித்த யுனெஸ்கோவின் சின்னம், அதன் நுழைவு வாயிலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எதிரிகளை அழிக்க அமேசான்கள் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. ஒரு தூசு நிறைந்த அலமாரியில், மனித மண்டை ஓட்டில் இருந்து பாயும் குதிரை வால் போன்ற ஒரு கோப்பை வடிவிலான ஸ்வெட்டர் போன்ற ஆடை இருந்தது. அதை அரசருக்கு ஒரு அமேசான் மெய்க்காப்பாளர் போரின் முடிவில் வழங்கியதாக கருதப்படுகிறது. பட மூலாதாரம்,ULLSTEIN BILD/GETTY IMAGES   படக்குறிப்பு, டஹோமி பேரரசின் வரலாறு, தற்கால பெனின் நகரில் உள்ள அபோமே அரண்மனை கட்டடங்களில் காணப்படுகிறது. அமேசான் பெண்கள் பற்றிய தகவல்கள் மீது எப்போதுமே ஒருவித ஈர்ப்பு இருந்தது, ஆனால் அதன் தன்மை மாறிக்கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பிளாக் பாந்தர் திரைப்படம். ஆனால் மேற்கு ஆப்பிரிக்காவில் பெண்களின் வரலாறு பற்றிய புதிய பாடத்தை அறிமுகப்படுத்திய அபோமி-கலாவி பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆர்தர் விடோ மற்றொரு கோட்பாட்டைக் கொண்டுள்ளார். "ஆப்ரிக்காவில் பெண்களின் நிலை மாறி வருவதால், மக்கள் கடந்த காலத்தில் அவர்களின் பங்கைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். அமேசானிய பெண்கள் இரக்கமற்று இருந்தனர் என்ற கருத்தாக்கத்தை இதுவரை வாழ்ந்த பலரும் கொண்டிருந்தாலும், அவர்களின் போர் நடவடிக்கைகள் மிகைப்படுத்தப்படும் கருத்துகளை வான்ட்செக்கான் என்ற ஆய்வாளர் ஏற்கவில்லை. "போர் வீராங்கனைகளாக அவர்கள் தங்களுடைய பணியை செய்தார்கள். அவர்கள் படைவீரர்களாக என்ன சாதித்தார்கள் என்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வான்ட்செக்கான். சமுதாயத்திற்கு முக்கியமான ஒரு தொழில் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் இடத்தில், ஆண்களுக்கு இணையாக இந்த சிறப்பான பலம் வாய்ந்த பெண்களின் பிரிவை நாம் ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கேட்கிறார் அவர். அபோமியின் மேற்கில் உள்ள வான்ட்செக்கான் வளர்ந்த கிராமம், அமேசான்களின் பயிற்சி முகாமின் தளமாக அந்தக்காலத்தில் இருந்தது. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு கிராமத்திற்கு குடிபெயர்ந்த ஒரு வயதான அமேசானை இவரது அத்தை கவனித்துக் கொண்டார். இந்த கிராமவாசிகள் இன்னும் முன்னாள் ராணுவ வீரர்களை, "வலிமையான, சுதந்திரமான மற்றும் சக்திவாய்ந்தவர்கள்" என்று நினைவுகூர்கின்றனர், என வான்ட்செக்கான் கூறினார். கிராமத்தில் கடைப்பிடிக்கப்படும் அதிகார நிலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க இந்த பெண்மணி தயங்கியதில்லை. காரணம், அவர் ஒரு அமேசானாக விளங்கினார். லட்சியமும் கனவும் சுதந்திரமும் நிறைந்த இந்த பெண்மணியின் சிந்தனை, தனது தாய் உள்பட உள்ளூர் பெண்களாலும் ஈர்க்கப்பட்டதாகக் கூறுகிறார் வான்ட்செக்கான். இந்த காரணத்துக்காகவே அமேசான் பெண்கள் இன்றும் அவசியமானவர்கள் என்கிறார் வான்ட்செக்கான். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் அவர்களுடன் ஏன் சரிசமமாக பெண்கள் இருக்கும் நிலையை உருவாக்கக் கூடாது? பட மூலாதாரம்,FLEUR MACDONALD   படக்குறிப்பு, ஹாங்பே அரசி என்பது இப்போது ஒரு சம்பிரதாயப் பதவி மட்டுமே. அமேசானிய பெண்களின் ராணுவ ஆற்றல் மட்டுமே அவர்களை சிறப்பானவர்களாக்கவில்லை. அவர்களின் சமூக பங்களிப்பும்தான் அவர்கள் பிறருக்கு முன்னுதாரணமாகக் காட்டுகிறது என்கிற செய்தியை ஆப்பிரிக்க சமூகத்துக்கு உணர்த்தியது பிளாக் பாந்தர் திரைப்படம். வரலாற்றில் அதிகம் அறியப்படாத இந்த அமேசானிய ஆப்ரிக்க பெண் மெய்க்காப்பாளர்களின் பழங்காலம் முதல் இந்தக் கால வாழ்க்கை முறையை பற்றிய அறிந்த பிறகு தற்போதைய ராணி ஹாங்பேயிடம் இருந்து நான் விடைபெற்றேன். பிறகு அவர்கள் வாழ்ந்த நகரத்தைக் கடந்து வந்தபோது, சாலையில் ஆங்காங்கே மிக உயரமான மற்றும் விரிந்த தோள்களுடன் கம்பீரமாக அமேசானிய பெண்களின் சிலைகள் காட்சியளித்தன. அவை ஒவ்வொன்றும் ராணியின் மெய்க்காப்பாளராக இருக்கும் ரூபினெல் போன்ற பலரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக இருந்தன. https://www.bbc.com/tamil/global-59023105
  • இலங்கையின் வளங்கள் மற்றும் நிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் ஈழத்திற்கான உரிமை வழங்கக் கூடாது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.  கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிற்கும் திருகோணமலையில் உள்ள எண்ணெய் கஞ்சியங்களை இந்தியாவிற்கும் கெரவலபிட்டி மின் நிலையம் அமெரிக்காவிற்கும் என வளங்களை வழங்கினால் தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானதாக இருக்கும் என விக்ரமபாகு  கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.  தமது ஈழ மண்ணிற்காக வடக்கில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மேற்கத்திய உலகத்தால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தமிழர்களுக்கு ஈழம் வழங்கப்பட வேண்டும் என்றும் அது சர்வதேச அங்கீகாரதிற்கு வழியேற்படுத்தும் என்றும் பாகு கூறியுள்ளார்.  https://www.lankanewsweb.net/tamil/126-தமிழ்/95485-தமிழர்களுக்கு-தனி-ஈழம்-வழங்க-வேண்டும்---விக்ரமபாகு-கருணாரத்ன-அதிரடி-அறிவிப்பு-    
  • வேறொன்றுமில்லிங்க....  உள்ளூர் பொறிமுறைக்காக உளுந்தும் கூடவே எலிப்புழுக்கையும் காயுது ..  🤣
  • நான்காம் ஈழப்போரில் ஏவுண்ணலால்(bullet hit) விழுப்புண்ணடைந்த ஒரு அக்கா       படிமத்தின் மேல் தம் வலைத்தளத்தின் பெயரினை எழுதுவது மலத்திலும் கீழான செயல்!
  • TRO கட்டமைப்புகள் 20 இன் தகவல்கள் சேர்த்து இற்றைப்படுதியுள்ளேன்(update)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.