Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நாட்டின் மொழி கொள்கையை... பின்பற்ற வேண்டும் – சீன நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர்

நாட்டின் மொழி கொள்கையை... பின்பற்ற வேண்டும் – சீன நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்

நாட்டின் மொழி கொள்கையை பின்பற்றுமாறு கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் இது கவலைக்குரிய விடயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆங்கிலம், சீன மற்றும் சிங்களத்துடன் அடையாளப்படுத்தப்பட்ட பெயர் பலகைகள் காரணமாக கொழும்பு துறைமுக நகர நிறுவனம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

கொழும்பு துறைமுக நகரம் கட்டுமானத்தில் உள்ளது என்றும் தள ஊழியர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களின் நலனுக்காக அடையாள பெயர் பலகைகளும் ஒப்பந்தக்காரரால் அமைக்கப்பட்டன என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், இந்த நாட்டின் மொழி கொள்கையுடன் கட்டாயம் கொழும்பு துறைமுக நகர நிறுவனம் இணக்கம் இருக்க வேண்டும் என கூறினார்.

https://athavannews.com/2021/1219247

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சீனாவின் மொழிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசின் கொள்கைகளை மீறிய செயற்பாடாக மட்டும் அமைச்சர் திரு. பீரிஸ் இனங்காண்பது இங்கு வேடிக்கை.  சீனா தமிழ் மொழியை புறக்கணித்ததன்மூலம் இலங்கை அரசிலமைப்பின் மொழிச் சட்டங்களை மீறியிருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவைக்க சிங்கள இனவெறி அரசுக்கு நாதியில்லை.

Edited by vanangaamudi
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, vanangaamudi said:

சீனாவின் மொழிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசின் கொள்கைகளை மீறிய செயற்பாடாக மட்டும் அமைச்சர் திரு. பீரிஸ் இனங்காண்பது இங்கு வேடிக்கை.  

இதில் என்ன வேடிக்கை?
 

34 minutes ago, vanangaamudi said:

சீனா தமிழ் மொழியை புறக்கணித்ததன்மூலம் இலங்கை அரசிலமைப்பின் மொழிச் சட்டங்களை மீறியிருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவைக்க சிங்கள இனவெறி அரசுக்கு நாதியில்லை.

சொல்லிவைத்தவுடன் இலங்கை அரசை சிங்கள பௌத்த மக்கள் ஏற்றுக் கொண்டது போல அனைத்து ஈழத்தமிழரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்பத்தகுந்த உத்தரவாதம் தந்தால் தாரளமாக அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம், உத்தரவாதம் ஆயத்தமா?😇

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vanangaamudi said:

 சீனா தமிழ் மொழியை புறக்கணித்ததன்மூலம் இலங்கை அரசிலமைப்பின் மொழிச் சட்டங்களை மீறியிருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவைக்க சிங்கள இனவெறி அரசுக்கு நாதியில்லை.

எப்படிச் சொல்ல முடியும்? அவர்களே தங்கள் அரசமைப்பில் உள்ள மொழிச் சட்டத்தை மீறி செயற்படுகிறார்கள். 

Link to comment
Share on other sites

5 hours ago, கற்பகதரு said:

இதில் என்ன வேடிக்கை?
 

சொல்லிவைத்தவுடன் இலங்கை அரசை சிங்கள பௌத்த மக்கள் ஏற்றுக் கொண்டது போல அனைத்து ஈழத்தமிழரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்பத்தகுந்த உத்தரவாதம் தந்தால் தாரளமாக அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம், உத்தரவாதம் ஆயத்தமா?😇

 

என்னை பொறுத்தவரை

தமிழரை விட இலங்கையை  விரும்புபவர்கள்  எவருமே  இல்லை

அது இராமநாதன் பொன்னம்பலத்திலிருந்து இருந்து பிரபாகரன் வரை.............

 

 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நிச்சயமாக...  ஆவணப்படுத்த வேண்டும். உங்களால் அல்லது ரஞ்சித்தால்  முடியும். 👍 இல்லாவிடில்.... வருடா வருடம், இதே வேலையாக...   புலிகளை, வம்புக்கு இழுத்துக் கொண்டு இருப்பார்கள்.  😡
  • மட்டக்களப்பில்... 5 ஆயிரம் ரூபா, இலஞ்சமாக பெற்ற 3 போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம்! மட்டக்களப்பில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது முச்சக்கரவண்டி செலுத்திச் சென்றவரிடம் 5 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற மட்டு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவரும் 3 பேரை    உடனடியாக  தற்காலிகமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து செங்கலடி பிரதேசத்திற்கு முகத்துவாரம் வீதி ஊடாக முச்சக்கரவண்டியில் சம்பவதினமான நேற்று (புதன்கிழமை)   மாலை  சென்று கொண்டிருந்த போது சவுக்கடி பாலத்திற்கு அருகில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிசார் குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முச்சக்கரவண்டியை செலுத்துச் சென்றுள்ளதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து குறித்த முச்சக்கரவண்டி சாரதியிடம் போக்குவரத்து  பொலிஸார் சாரதி அனுமதிப்பத்திரமின்றி செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபோவதாகவும் அதனை செய்யாது அங்கிருந்து விடுவிக்க 10 ஆயிரம் ரூபா இலஞ்சமாக கோரியுள்ளனர். இதனையடுத்து 5 ஆயிரம் ரூபாதான் இருக்கின்றது என 5 ஆயிரம் ரூபாவை போக்குவரத்து பொலிசர் இலஞ்சமாக பெற்ற பின்னர் அவரை விடுவித்ததையடுத்து முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னிடம் 5 ஆயிரம் ரூபா  இலஞ்சமாக போக்குவரத்து பொலிசார் பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில்; தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கிழக்கு  பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தலில் உடனடியாக  பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த  போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவந்த 3 பொலிஸாரையும் உடன் அமுலுக்குவரும் வரையில் நேற்று புதன்கிழமை உடனடியாக கடமையில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2021/1247123
  • இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு! இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 200க்கும் அதிகமான தமிழர்கள் சார்பில் global Rights Compliance LLP என்ற அமைப்பினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கையின் பல மூத்த அதிகாரிகளை விசாரணை செய்து உரிய நேரத்தில் கைது செய்ய தலைமை வழக்கறிஞருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள், கடத்தல்கள், சட்டவிரோத காவலில் வைத்தல் மற்றும் சித்திரவதை போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட துன்புறுத்தலின் தீவிரம் இலங்கையை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைவதைத் தவிர அmவர்களுக்கு வேறு வழியில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தலைமையிலான இலங்கை பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல்களின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமையை இழந்தனர் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களின் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களாலும், இங்கிலாந்தில் தங்களை நோக்கித் தொடரும் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களாலும் தாம் தொடர்ந்து அவதிப்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படுகின்ற முதலாவது வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247083
  • புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம் – சஜித் புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். காசல் வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சீன உரம் கொண்ட கப்பல் எவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவியது என்பது எமக்கு ஆச்சரியமாக உள்ளது. அது எவ்வாறு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் பிரவேசித்தது? எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட எவரையும் ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது. இலங்கையை நாடகமாட எவரையும் அனுமதிக்க மாட்டோம்” என அவர் மேலும் கூறினார். https://athavannews.com/2021/1247104
  • “தாக்குதலை முன்கூட்டியே அறிந்து நாட்டைவிட்டு செல்லும் அளவிற்கு பலவீனமானவனல்ல” -மைத்திரி ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து நாட்டை விட்டுவெளியேறும் அளவிற்கு பலவீனமான நபர் தான் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து தான் ஆரம்பத்தில் அறித்ததாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்பேற்க தயாராக இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஒருபோதும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். இதேவேளை இரசாயன உரத்திற்கு தடை விதித்து சேதன பசளைக்கு செல்வது பெரும் பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதனால் அத்திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரியதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். இருப்பினும் சேதன பசளை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார். https://athavannews.com/2021/1246965
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.