-
Tell a friend
-
Topics
-
2
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ரஷ்யர்கள் பங்குபற்றுவதை 40 நாடுகள் எதிர்க்கலாம் என போலந்து எதிர்வுகூறல் By DIGITAL DESK 5 03 FEB, 2023 | 01:32 PM (என்.வீ.ஏ.) பாரிஸ் 2024 ஓலிம்பிக் விளையாட்டு விழாவில் ரஷ்யர்களுக்கு பங்குபற்ற அனுமதி வழங்கப்படுமாயின் அதனை 40 நாடுகள் எதிர்ப்பதுடன் அவை ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பகிஷ்கரிக்கக்கூடும் என போலந்து எதிர்பார்க்கிறது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு வீரர்களை பாரிஸ் 2024 ஓலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றச் செய்தால் பல நாடுகள் அதனை எதிர்க்கும் என எதிர்பார்ப்பதாக போலந்து விளையாட்டுத்துறை அமைச்சர் காமில் போர்ட்னிக்ஸுக் தெரிவித்தார். 'அடுத்த வாரம் 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூடி இந்த விடயம் தொடர்பாக ஓர் உறுதியான முடிவை எடுக்கும் என கருதுகிறேன்' என தேசிய தொலைக்காட்சி சேவைக்கு அவர் கூறியுள்ளார். 'ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ரஷ்யர்களும் பெலாரஷ்யர்களும் பங்குபற்றுவதை இந்த நாடுகள் ஆணித்தரமாக எதிர்க்கும்' என அவர் மேலும் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிர்த்தானியாவும் இந்த எதிர்ப்பில் கலந்துகொள்ளும் என நம்புவதாக அவர் கூறினார். ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு வீரர்களை நடுநிலையாக பங்குபற்றுவதற்கு அனுமதிப்பதாக வியாழனன்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. ஆனால், ஐக்கிய அமெரிக்கா அதற்கு உடன்படாது என கருதுவதாக போர்ட்னிக்ஸுக் தெரிவித்தார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பெப்ரவரி 10ஆம் திகதி வீடியோ அழைப்பு மூலம் கலந்துரையாடவுள்ளனர். தமது நாட்டின் மீது ரஷ்யா தொடுத்த மிலேச்சத்தனமான போர் காரணமாக ரஷ்யாவையும் பெலாரஸையும் முழமையாக தடைசெய்ய வேண்டும் என யுக்ரெய்ன் வலியுறுத்தி வருகிறது. இந்தப் போரினால் தமது விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் யுக்ரெய்ன் சுட்டிக்காட்டியது. இதேவேளை, ஒலிம்பிக் அரசியல் மயமாக்கப்படக்கூடாது என குறிப்பிட்டுள்ள ரஷ்யா, தமது நாட்டின் மீதான சகல கட்டுப்பாடுகளையும் நீக்கவேண்டும் எனவும் கோரியுள்ளது. ரஷ்யர்களை நடுநிலையான போட்டியாளர்களாக ஒலிம்பிக்கில் பங்குபற்றச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்துவருவதாக சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/147351 -
மார்ச் 9 இல் தேர்தல் நிச்சயம் – பசில் மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சிமன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் தெரிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கூறியுள்ளார். எனவே அதனை எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/237550
-
பொம்மை நாயகி சினிமா விமர்சனம் - ஹீரோவாக யோகி பாபு வெற்றி பெற உதவுமா? பட மூலாதாரம்,TWITTER/OFFICIALNEELAM 3 பிப்ரவரி 2023, 10:36 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சாதிய தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அப்பா - மகள் பாசம் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளி வந்திருக்கும் பொம்மை நாயகி படம் எப்படி இருக்கிறது? இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் தியேட்டரில் வெளியாகியுள்ளது பொம்மை நாயகி திரைப்படம். இந்தப் படத்தில் யோகி பாபு நாயகனாகவும், சுபத்ரா நாயகியாகவும், குழந்தை கதாபாத்திரத்தில் ஸ்ரீமதியும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்கியுள்ளார். படத்தின் கதை என்ன? பட மூலாதாரம்,TWITTER/OFFICIALNEELAM கடலூர் அருகேயுள்ள கிராமத்தில் மனைவி, மகளுடன் வாழ்ந்து வருகிறார் வேலு(யோகி பாபு). யோகி பாபுவின் தாய் இரண்டாம் தாரம் என்பதாலும், அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சொந்த அண்ணனாலும், சொந்த ஊரிலும் யோகிபாபு பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார். இந்நிலையில் ஊர் திருவிழாவின்போது தனது அண்ணனின் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் யோகி பாபுவின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இதை ஊரில் யாரும் தட்டிக் கேட்காத நிலையில், காவல்துறை மற்றும் நீதித்துறையின் உதவிக்காக யோகி பாபு நாடிச் செல்கிறார். இறுதியில் அவருக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக் கதை. படம் வெளியீட்டுக்கு முன்பே திரைப் பிரபலங்களுக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இவர்கள் அனைவரும் தெரிவித்த கருத்துகளால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பொம்மை நாயகி இருக்கிறதா என ஊடகங்களின் விமர்சனங்களை அறிந்து கொள்வோம். Twitter பதிவை கடந்து செல்ல Twitter பதிவை அனுமதிக்கலாமா? இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும். ஏற்பு மற்றும் தொடரவும் காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு என்ன சொல்கின்றன ஊடகங்கள் "பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து படம் விரிவாகப் பேசி இருக்கிறது. பா. இரஞ்சித் தயாரிப்பு என்றாலும் வழக்கமான அம்பேத்கர் புரட்சி வசனங்கள் பெரிதாக இடம் பெறாமல் இடதுசாரிய சிந்தனையை கருத்தியலாகக் கொண்டு இயக்குநர் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். நீதிமன்றக் காட்சிகளில் இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி வசனங்களை எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். யோகி பாபுவின் நேர்த்தியான நடிப்பு படத்தில் நிறைவாக இருக்கிறது," என்று தினமணி நாளிதழ் விமர்சனம் எழுதியுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார் - கமல்ஹாசன், சிரஞ்சீவி அஞ்சலி9 மணி நேரங்களுக்கு முன்னர் 'பதான்' வசூல் சாதனை: ஆமிர் கான் தவறியதை ஷாரூக் கான் சாதித்துக் காட்டியது எப்படி?31 ஜனவரி 2023 ரஜினியின் ஸ்டைல், குரல், மேனரிசங்களை யூடியூப், மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தலாமா?29 ஜனவரி 2023 சமூகத் தீண்டாமைக்கு எதிரான கேள்வி பட மூலாதாரம்,TWITTER/OFFICIALNEELAM "தன்னை எப்போதுமே ஒரு காமெடியன் என்று சொல்லிக் கொண்டாலும், அவரால் கனமான கதாபாத்திரங்களையும் நேர்த்தியாகக் கையாள முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் யோகி பாபு நிரூபித்து இருக்கிறார். படத்தில் அவர் எங்குமே சிரிக்கவில்லை." "சமூகத்தில் இன்னும் நிலவும் தீண்டாமை குறித்து படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கேள்வி எழுப்பும் விதத்தில் அமைந்துள்ளது," என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் விமர்சனம் வழங்கியுள்ளது. யோகி பாபு ஏமாற்றவில்லை "சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்பாவி அப்பாவாக வரும் யோகி பாபுவின் நடிப்பு ஏமாற்றவில்லை. அவரது மனைவி கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்திருக்கிறது. உணர்வுப்பூர்வமான கதையை படமாக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் மீது வர வேண்டிய அனுதாபம் ஏற்படாமல் போனது படத்தின் ஜீவனைக் குறைக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவும், இசையும் காட்சிகளின் உணர்வை அதிகரிக்க உதவி இருக்கிறது," என்று தினமலர் நாளிதழ் விமர்சனம் வழங்கியுள்ளது. நீதிக்காக போராடும் அப்பா பட மூலாதாரம்,TWITTER/OFFICIALNEELAM அப்பாவியாக அதே நேரத்தில் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து போராடும் கதாபாத்திரத்தில் யோகி பாபு மிளிர்கிறார். ஆனால் அவரது நடிப்பைத் தவிர படத்தில் வரும் பெரும்பாலானோரின் நடிப்பு கதையுடன் ஒன்றவில்லை என்று தி நியூஸ் மினிட் விமர்சனம் எழுதியுள்ளது. படத்தின் பேசப்படும் கதையும், அரசியலும் சிறப்பாக இருந்தாலும், திரைக்கதை அமைப்பு சில நேரங்களில் குழப்பத்துடன் நகர்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. பாரத மாதா யார்? "ஒடுக்கப்படும் சமூகத்தினருக்கு நீதி கிடைக்க நடத்தப்படும் போராட்டத்தை பொம்மை நாயகி காட்சிப்படுத்த முயற்சி செய்துள்ளது. நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்பு நீதிமன்றத்துக்கு வெளியே எப்படி மதிக்கப்படுகிறது என்பதை இயக்குநர் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். படத்தில் வரும் சீன்கள் தனித்தனியாக நன்றாக இருக்கிறது. ஆனால் திரைக்கதையாகப் பார்க்கும் போது கதையை வேகமாகச் சொல்ல வேண்டும் என்ற இயக்குநரின் முனைப்பு தெரிகிறது," என தி இந்து ஆங்கில நாளிதழ் விமர்சனம் எழுதியுள்ளது. படத்தின் இறுதியில் ‘பாரத மாதா யார்’ என்று இயக்குநர் ஷான் விவரிக்கும் காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது என தி இந்து எழுதியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cw409xdye3vo
-
மின் உற்பத்திக்கு மேலதிக நீரை வழங்க முடியாது - மகாவலி அதிகாரசபை By VISHNU 03 FEB, 2023 | 04:41 PM (எம்.மனோசித்ரா) மின் உற்பத்திக்காக வழமையாக வழங்கப்படும் நீரை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை , மின்சக்தி அமைச்சிற்கு அறிவித்துள்ளது. எதிர்பார்த்தளவிற்கு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாமையின் காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியான மின் உற்பத்திக்கு தேவையான மேலதிக நீரை வழங்க முடியாது என்றும் மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மகாவலி அதிகாரசபை இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்காக , மேலதிகமாக நீரை வழங்குவது தொடர்பில் நீர் முகாமைத்துவ குழுவில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. எவ்வாறிருப்பினும் எதிர்பார்த்தளவிற்கு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாமை மற்றும் விவசாயம் , குடிநீர் தேவைகளைக் கருத்திற் கொண்டு வழமையைப் போன்று நீர் மின் உற்பத்திக்கான நீரை வழங்க இதன் போது தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/147371 இன்று 03/02/2023 இரவு 6.10 - 7.10 வரை மின்தடை அமுலாகியது. வடமாகாண மின்சாரசபை 0212024444 முறைப்பாட்டு இலக்கத்திற்கு அழைத்த பின்னர் தான் மின்வெட்டுப் பற்றி தெரியவந்தது. அட்டவணை மாலை 5.45 இற்கு தான் தங்களுக்கு வந்ததாக கூறினார்கள். நீதிமன்றத்தில் 2 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை என்று உறுதி கூறியது பொய்யானது.
-
வவுனியாவில் கடும் மழை : 63 பேர் பாதிப்பு : 2 வீடுகள் பகுதியளவில் சேதம் By VISHNU 03 FEB, 2023 | 03:36 PM வவுனியாவில் இன்று (03) பெய்த கடும்மழை காரணமாக 23 குடும்பங்களை சேர்ந்த 63 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக திருநாவற்குளம், மகாறம்பைக்குளம், வெங்கலச்செட்டிக்குளம், பிரமநாலங்குளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுடன் சில வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இதேவேளை அறுவடைக்கு தயாராக இருந்து நெற்பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வவுனியா நகரில் நேற்று (02) காலை முதல் இன்று (03) காலை வரையான 24 மணித்தியாலயத்தில் 189.2மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/147362
-
Recommended Posts