Jump to content

பிரெஞ்சு ஓபனிலிருந்து விலகினார் ஒசாகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு ஓபனிலிருந்து விலகினார் ஒசாகா

உலக நம்பர் டூ வீராங்கனையான நவோமி ஒசாகா பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை அறிவிக்கும் ஒரு டுவிட்டர் பதிவில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, 2018 ஆம் ஆண்டில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதிலிருந்து தான் நீண்டகால மன அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறினார்.

merlin_188509128_06c487d0-e4e9-4d0a-a73b

இந்த மன அழுத்தம் காரணாக ஒசாகா போட்டிக்கு பிந்தைய ஊடகவியலாளர் சந்திப்புக்களை புறக்கணித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோலண்ட் கரோஸ் போட்டியின்போது தனது முதல் சுற்று வெற்றியின் பின்னர் இடம்பெற்ற செய்தி மாநாட்டைத் தவிர்த்ததற்காக ஒசாக்காவிற்கு 15,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேநேர் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டி அமைப்பாளர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் ஒசாகா தொடர்ந்தும் ஊடக சந்திப்பினை புறக்கணித்து வந்தால் அவர் அதிக அபராதம் மற்றும் எதிர்கால கிராண்ட்ஸ்லாம் இடைநீக்கங்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.

இந்நிலையிலேயே, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து நவோமி ஒசாகா விலகுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான 23 வயதான நவோமி ஒசாகா 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை வீழ்த்தி 2 ஆவது சுற்றுக்கு முன்னேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/106638

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.