Jump to content

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் நிதியுதவி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் நிதியுதவி

(எம்.மனோசித்ரா)

பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

623.jpg

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/106658

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்குறது முழுக்க, கடனும், பிச்சையும்....

அதுக்கும் அனுமதி கொடுத்ததாம் அமைச்சரவை.

Link to comment
Share on other sites

ஒன்றரை மில்லியன் டொலர் 🤪 😂 இதுக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் வேற (நீங்கள் கிழக்கில் துறைமுகத்தைப் பிடித்தால் நாங்கள் வடக்கில் விமானத்தளத்தைப் பிடிப்போம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியை சீனாவிட்டை குடுத்திருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பலாலியை சீனாவிட்டை குடுத்திருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பன். 😎

நானும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பலாலியை சீனாவிட்டை குடுத்திருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பன். 😎

சீனன் முன்னால குத்துவான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

சீனன் முன்னால குத்துவான்

சொல்லிப்போட்டுத்தானே குத்துவான். 

சொல்லாமல் குத்துற நாடுகளிலும் பார்க்க, (அதாவது நம்ப வைச்சு கழுத்தறுக்கிற) அது பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

ஒன்றரை மில்லியன் டொலர் 🤪 😂 இதுக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் வேற (நீங்கள் கிழக்கில் துறைமுகத்தைப் பிடித்தால் நாங்கள் வடக்கில் விமானத்தளத்தைப் பிடிப்போம்)

சில புலம்பெயர் உறவுகள் சாமத்திய வீடு செய்யுற காசு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

நானும் தான்.

3 hours ago, விசுகு said:

சீனன் முன்னால குத்துவான்

2 hours ago, Nathamuni said:

சொல்லிப்போட்டுத்தானே குத்துவான். 

சொல்லாமல் குத்துற நாடுகளிலும் பார்க்க, (அதாவது நம்ப வைச்சு கழுத்தறுக்கிற) அது பரவாயில்லை.

என்னப்பா எல்லாரும் என்னை மாதிரி யோசிக்கிறியள்.😁

 💯 தமிழன் எண்டால் ஒரே மாதிரித்தானே யோசினை வரும். 💪🏽 👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-06-01-20-28-49-777-org-m 👍...👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீதி அமைப்பும் வீதியில போற ஆட்டோ முதல் கொண்டு பஸ் கார்  இரு சக்கர வாகனங்கள்வரை இந்திய உதவி & கொடுக்கல் வாங்கல்

தண்டவாளம், அதுக்குமேல விடுற ரயில் இந்தியக்கடன்.

துறைமுக அபிவிருத்தி , துறைமுகத்தில வந்து நிக்கிற கப்பல் இந்திய சீன உதவி.

வீடமைப்பு திட்டம் இந்திய உதவி.

வட்டியில்லா கடன் & வட்டியோட கடன் இந்திய உதவி 

வேற எங்கையும் வாங்கின கடனை திருப்பி கட்ட இந்திய கடன்

விமானநிலைய அபிவிருத்தி இந்திய உதவி.

கலாச்சார மண்டபம் இந்திய உதவி.

மலையக மக்களுக்கான வீடமைப்பு திட்டம் இந்திய உதவி.

அம்புலன்ஸ் அன்பளிப்பு இந்திய உதவி

விவசாய உபகரணங்கள்  விதைகள் இந்திய அன்பளிப்பு.

தொலை தொடர்பு நிறுவனங்களிலிருந்து தும்மல் இருமல் வந்தா போடுற குளிசைகள் வரை இந்திய நிறுவனங்களில் தங்கியிருப்பு.

வேட்டி சட்டையிலிருந்து கலர் கோவணங்கள் அதாவது ஜட்டிவரை இந்திய மயம்.

இதுக்கு ஏன் இலங்கை ஜனாதிபதியா கோத்தபாயவும் பிரதமரா மஹிந்தவும் இருக்க வேணும்?

இலங்கையின் ஜனாதிபதியா மோடியும் பிரதமரா வெங்கையா நாயுடுவும் இருப்பதுதான் நியாயம், அதுதான் தர்மம்.

இந்த லட்சணத்தில விடுவாங்கள் ஒரு வசனம், 

இலங்கை இறைமைமிக்க கெளரவமான ஒரு நாடு வெளி சக்திகள் (கடனை தவிர)  எமது விஷயத்தில் தலையிடகூடாது........... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

சில புலம்பெயர் உறவுகள் சாமத்திய வீடு செய்யுற காசு🤣

கொரனோ  புண்ணியத்தில் இப்ப பலமடங்கு ஆகியிருக்கும் இந்தியாக்காரனிடம் இரந்துவதை  விட இங்கு ஈழத்தை தருகிறேன்  என்று சொல்லி பிச்சை எடுக்கலாம் என்று .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

கொரனோ  புண்ணியத்தில் இப்ப பலமடங்கு ஆகியிருக்கும் இந்தியாக்காரனிடம் இரந்துவதை  விட இங்கு ஈழத்தை தருகிறேன்  என்று சொல்லி பிச்சை எடுக்கலாம் என்று .🤣

🤣 சோமாலியாவிடம் கடன் வாங்கினாலும் உந்த டீலுக்கு மட்டும் வராயினம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பழமொழி சொல்வார்கள்: "ஊசி போற இடம் பார்ப்பாராம் உலக்கை போற இடம் பாராராம்." சொந்தமக்களோடு உரிமையை பகிர்ந்து மகிச்சியாய் வாழ முடியாமல் பல்லைக்காட்டி  கடன் வாங்குவதில் மகிழ்ந்து வேற்று நாட்டுக்கு  அடிமையாய்  வாழ பிரியப்படுகிறார்கள் முட்டாள்கள் மட்டுமல்ல சோம்பேறிகளுங்கூட. இந்த நாட்டுக்கு ஏன் வேற்று நாடுகள்  இவ்வளவு கடன் கொடுக்குது? என்று யோசிக்கக்கூட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நன்கொடை தரும் பெருந்தகைகளின் நாமங்களை நாங்கள் கல்லில் பொறித்து விமானநிலையத்தில் விளம்பரப்படுத்துவோம் எனக்கேட்டு வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் உண்டியல் குலுக்கி பார்க்கலாம். நல்ல வசூல் சேரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

வீதி அமைப்பும் வீதியில போற ஆட்டோ முதல் கொண்டு பஸ் கார்  இரு சக்கர வாகனங்கள்வரை இந்திய உதவி & கொடுக்கல் வாங்கல்

தண்டவாளம், அதுக்குமேல விடுற ரயில் இந்தியக்கடன்.

துறைமுக அபிவிருத்தி , துறைமுகத்தில வந்து நிக்கிற கப்பல் இந்திய சீன உதவி.

வீடமைப்பு திட்டம் இந்திய உதவி.

வட்டியில்லா கடன் & வட்டியோட கடன் இந்திய உதவி 

வேற எங்கையும் வாங்கின கடனை திருப்பி கட்ட இந்திய கடன்

விமானநிலைய அபிவிருத்தி இந்திய உதவி.

கலாச்சார மண்டபம் இந்திய உதவி.

மலையக மக்களுக்கான வீடமைப்பு திட்டம் இந்திய உதவி.

அம்புலன்ஸ் அன்பளிப்பு இந்திய உதவி

விவசாய உபகரணங்கள்  விதைகள் இந்திய அன்பளிப்பு.

தொலை தொடர்பு நிறுவனங்களிலிருந்து தும்மல் இருமல் வந்தா போடுற குளிசைகள் வரை இந்திய நிறுவனங்களில் தங்கியிருப்பு.

வேட்டி சட்டையிலிருந்து கலர் கோவணங்கள் அதாவது ஜட்டிவரை இந்திய மயம்.

இதுக்கு ஏன் இலங்கை ஜனாதிபதியா கோத்தபாயவும் பிரதமரா மஹிந்தவும் இருக்க வேணும்?

இலங்கையின் ஜனாதிபதியா மோடியும் பிரதமரா வெங்கையா நாயுடுவும் இருப்பதுதான் நியாயம், அதுதான் தர்மம்.

இந்த லட்சணத்தில விடுவாங்கள் ஒரு வசனம், 

இலங்கை இறைமைமிக்க கெளரவமான ஒரு நாடு வெளி சக்திகள் (கடனை தவிர)  எமது விஷயத்தில் தலையிடகூடாது........... 

ஏன் கனக்க!
புலம்பெயர் நாட்டிலை எங்கடை சனங்களின்ரை கலியாணவீடு/சாமத்திய வீட்டு கொண்டாட்டங்களிலை எல்லாம்  made in india தானே  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏன் கனக்க!
புலம்பெயர் நாட்டிலை எங்கடை சனங்களின்ரை கலியாணவீடு/சாமத்திய வீட்டு கொண்டாட்டங்களிலை எல்லாம்  made in india தானே  😁

முதலே கலியாண சாமத்திய சாமான் வாங்க இந்தியா போகிறேன் என்று ஒரு பெரிய விளம்பரம் கொடுத்து இந்தியாவுக்கு சென்று வாங்கி கொண்டு வருவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2021 at 14:12, goshan_che said:

சில புலம்பெயர் உறவுகள் சாமத்திய வீடு செய்யுற காசு🤣

அப்படியும் இப்படியும் புகைந்து கொண்ட செய்தி இன்று உறுதியாகி உள்ளது திமுகாவின்  ஜெகத்ரட்சகன் இலங்கையில் முதலிட்ட  தொகை 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சிங்கப்பூரில்  பதிவு செய்த நிறுவனம் மூலம் அம்பாந்தோட்டைக்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை  என்று இந்திய மதிப்பில் 25 ஆயிரம் கோடியை கொண்டுபோய் கொட்டியுள்ளார்கள். ஒரு சாதாரண திமுக எம்பிக்கே இவ்வளவு பணம் என்றால் மிகுதியை நீங்களே கணக்கு பண்ணுங்க .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விளங்க நினைப்பவன் said:

முதலே கலியாண சாமத்திய சாமான் வாங்க இந்தியா போகிறேன் என்று ஒரு பெரிய விளம்பரம் கொடுத்து இந்தியாவுக்கு சென்று வாங்கி கொண்டு வருவார்கள்

அதை ஸ்டைலா சாரி ஷொப்பிங் என்றழைப்பது மரபு.

1 hour ago, பெருமாள் said:

அப்படியும் இப்படியும் புகைந்து கொண்ட செய்தி இன்று உறுதியாகி உள்ளது திமுகாவின்  ஜெகத்ரட்சகன் இலங்கையில் முதலிட்ட  தொகை 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சிங்கப்பூரில்  பதிவு செய்த நிறுவனம் மூலம் அம்பாந்தோட்டைக்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை  என்று இந்திய மதிப்பில் 25 ஆயிரம் கோடியை கொண்டுபோய் கொட்டியுள்ளார்கள். ஒரு சாதாரண திமுக எம்பிக்கே இவ்வளவு பணம் என்றால் மிகுதியை நீங்களே கணக்கு பண்ணுங்க .🤣

அப்படியா? 3.8 பில்லியன் யு எஸ் ….இலங்கை காசில சைவர் எண்ணவே கஸ்டபடவேண்டும்.

இதன் லிங்க் ஏதும்? அல்லது அந்த நிறுவனத்தின் பெயர்?

மாணிக்கம் தாகூர், ஜெகத்ரட்சகன், இன்னும் பலருக்கு முதலீடுகள் இருப்பதாக கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடிபார்த்தால் 30% ஓமான் அரசு. 70% இந்தியாவின் அக்கோர்ட் குரூப்பின், சிங்கபூர் நிறுவனம் என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அப்படியும் இப்படியும் புகைந்து கொண்ட செய்தி இன்று உறுதியாகி உள்ளது திமுகாவின்  ஜெகத்ரட்சகன் இலங்கையில் முதலிட்ட  தொகை 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சிங்கப்பூரில்  பதிவு செய்த நிறுவனம் மூலம் அம்பாந்தோட்டைக்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை  என்று இந்திய மதிப்பில் 25 ஆயிரம் கோடியை கொண்டுபோய் கொட்டியுள்ளார்கள். ஒரு சாதாரண திமுக எம்பிக்கே இவ்வளவு பணம் என்றால் மிகுதியை நீங்களே கணக்கு பண்ணுங்க .🤣

அட... இப்படியும், உள்ளாலை... வேலை பார்க்கிறார்களா?
தீம்கா... எப்போதும், சுப்பிரமணிய சாமி மாதிரி... 
வெளிப்படையாக  செய்யா விட்டாலும்...
உள்ளடி, வேலை செய்வதில்... மூன்றாம்  கலைஞரின், 
"கிரிக்கெட்"  ஆர்வத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அதை ஸ்டைலா சாரி ஷொப்பிங் என்றழைப்பது மரபு.

😂

அந்த ஷொப்பிங்கில் அவர்கள் என்ன வாங்குகிறர்களோ இல்லையோ ஆனால் கலியாணம்  சாமத்திய கொண்டாட்டத்திற்காக  ஷொப்பிங் செய்ய  இந்தியா போகிறேன் என்று பலருக்கு சொல்வது தான் மரபு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

😂

அந்த ஷொப்பிங்கில் அவர்கள் என்ன வாங்குகிறர்களோ இல்லையோ ஆனால் கலியாணம்  சாமத்திய கொண்டாட்டத்திற்காக  ஷொப்பிங் செய்ய  இந்தியா போகிறேன் என்று பலருக்கு சொல்வது தான் மரபு.

அப்ப பாடப்போறன்  படம் நடிக்க போறன் என்று சொல்லி இந்தியா போறதெல்லாம் எந்த கணக்கில சாமி வரும் அதுக்கு மட்டும் இந்தியா தேவ 

ஆனால் நாளைக்கே சனம் நேரடியாக பலாலிக்கு வரலாம் என்றால் வரிசையாக நிப்பாங்கள் கதைகளை தூரம் வைத்து விட்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2021 at 16:23, தனிக்காட்டு ராஜா said:

அப்ப பாடப்போறன்  படம் நடிக்க போறன் என்று சொல்லி இந்தியா போறதெல்லாம் எந்த கணக்கில சாமி வரும் அதுக்கு மட்டும் இந்தியா தேவ 

ஆனால் நாளைக்கே சனம் நேரடியாக பலாலிக்கு வரலாம் என்றால் வரிசையாக நிப்பாங்கள் கதைகளை தூரம் வைத்து விட்டு 

சோப்பிங்,மற்றும் தள  யாத்திரிகை.புலம் பெயர் தேச கோவிகளுக்கு தேவையான சகல் பொருட்களும் இந்தியாவிடமிருந்து தான்....

இதற்கு முக்கிய காரணம் இராவணன்,இராஜராஜ சோழன் ஆகியோரின் தூரநோக்கு பார்வை😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2021 at 20:48, goshan_che said:

இந்தியாவின் அக்கோர்ட் குரூப்பின்

அதன் உரிமையாளரையும் தேடிப்பாருங்கள் பூனைக்குட்டி வெளியாலை வந்து விழும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.