Jump to content

யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

தற்செயலாக இந்தக் காணொளியை இன்று பார்க்க நேர்ந்தது.

இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளே அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளையும் சுருக்கமாக விபரிக்கிறது இந்தக் காணொளி.

நல்லெண்ணத்துடன்(?) அமைக்கப்பட்டுள்ளதா..? என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்..! 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Vadivelu Images : Tamil Memes Creator | Comedian Vadivelu Memes Download |  Vadivelu comedy images with dialogues | Tamil Cinema Comedians Images |  Online Memes Generator for Vadivelu - Memees.in

இந்திய உதவியாமே....

யாழ்பாணத்தில சோளக காத்து காலத்தில நிக்குமா இது? கூரை இல்லைத்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வசதிகளின் படங்கள்..

t2.jpg

t3.jpg

t1.jpg

t4.jpg

3 minutes ago, Nathamuni said:

இந்திய உதவியாமே....

யாழ்பாணத்தில சோளக காத்து காலத்தில நிக்குமா இது? கூரை இல்லைத்தானே!

நாதமுனி, காணொளியை முழுவதும் பார்த்தீர்களா..?

உங்கள் கேள்வியின் பொருள் புரியவில்லை. 🤔

Link to comment
Share on other sites

நல்ல விடயம், தொகுப்பாளர் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்தியன், சீனா, அமெரிக்கா, சிறிலங்கா யார் உதவி செய்தாலும், அதனை நாம் தாம் சிறப்பாக பயன்படுத்தவேண்டும். இப்படித்தான் யாழ் புகையிரத பாதை .போடும் பொழுதும் நொட்டை கதை சொன்னவர்கள் பலர், ஆனால் அதனால் அடைந்த நன்மைகள் பல.
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

Picture1.png

தற்செயலாக இந்தக் காணொளியை இன்று பார்க்க நேர்ந்தது.

இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளே அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளையும் சுருக்கமாக விபரிக்கிறது இந்தக் காணொளி.

நல்லெண்ணத்துடன்(?) அமைக்கப்பட்டுள்ளதா..? என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்..! 🤔

நல்லெண்ணம்தான் வன்னியன் சார். தனது பிராந்திய ஆளுமை குறையக்கூடாது என்ற நல்லெண்ணம்.

ஆனால் வந்த வரைக்கும் லாபம் என்ற வகையில் இதை மக்கள் பயன்பாட்டிற்கு விட்டால் - மக்களும் பயனடையக்கூடும்.

இந்த கட்டிடம் எழும்பிய சமயம் - இங்கே பெயர் சிபாரிசு செய்யுமாறு ஒரு உறவு கேட்டு நாங்களும் அடித்து பிடித்து எழுதினோம்🤣.

பின்னர் இதை பரமரிக்க காசு இல்லை என்றும், இலங்கை இராணுவம் ஏற்று நடத்த போவதாயும் செய்திகள் வந்தன.

இப்போதைக்கு இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

என் தகவல்கள் தவறு என்றால் சுட்டவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் ஒரு தன்னிறைவு பெற்ற,வலிமையான இனமாக வருவதை இந்தியாவும் சரி, இலங்கையும் சரி விரும்பவில்லை என்பது கண்கூடு. அவர்கள் முற்றிலும் புறக்கணிப்படுவதாக எழும் முறைப்பாடுகளை சமாளிக்கவே இந்த மாட்டுக் கொட்டகை போன்ற யாழ் சர்வதேச விமான நிலையம், பாதுகாப்பிற்காக தொடருந்து வசதி, கலாச்சார மண்டபம், பிரசன்னத்தை வலியுறுத்த தூதரக அலுவலகம் போன்றவைகள்..

இவற்றை தவிர்த்து மீண்டெழ தமிழர்களுக்கு வாய்ப்புகள் உள்ளனவா..? இல்லை அவர்களை சார்ந்தே காரியத்தை சாதிப்பதா..? என்பது ஈழத்தமிழர்களின் தெரிவு.

காலம் எப்படி செல்கிறது என்பதை பார்க்கலாம்!

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு (இலங்கை திறைசேரி மேற்பார்வையின் கீழாவது) fund raising அதிகாரங்களை வழங்குவார்களாயின் - இலங்கையும் தேவையில்லை, இந்தியாவும் தேவையில்லை எமது முதலீடுகளாலே நாம் பொருளாதார வளர்சியை அடைந்து, ஏனைய பகுதிகளுக்கும் உதவலாம்.

ஆனால் விடமாட்டர்கள். முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பித்து புலம்பெயர் உதவிகளை ஆக்கபூர்வமாக செய்வதாக தேர்தல் நேரம் வாக்குறுதி அளித்தார். 

ஆனால் செய்யவிடவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

சில வசதிகளின் படங்கள்..

t2.jpg

t3.jpg

t1.jpg

t4.jpg

நாதமுனி, காணொளியை முழுவதும் பார்த்தீர்களா..?

உங்கள் கேள்வியின் பொருள் புரியவில்லை. 🤔

சென்னை விமான நிலைய கூரை போல விழாதா என கேட்க வருகிறார் என நினைக்கிறேன்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

ஈழத்தமிழர்கள் ஒரு தன்னிறைவு பெற்ற,வலிமையான இனமாக வருவதை இந்தியாவும் சரி, இலங்கையும் சரி விரும்பவில்லை என்பது கண்கூடு. அவர்கள் முற்றிலும் புறக்கணிப்படுவதாக எழும் முறைப்பாடுகளை சமாளிக்கவே இந்த மாட்டுக் கொட்டகை போன்ற யாழ் சர்வதேச விமான நிலையம், பாதுகாப்பிற்காக தொடருந்து வசதி, கலாச்சார மண்டபம், பிரசன்னத்தை வலியுறுத்த தூதரக அலுவலகம் போன்றவைகள்..

இவற்றை தவிர்த்து மீண்டெழ தமிழர்களுக்கு வாய்ப்புகள் உள்ளனவா..? இல்லை அவர்களை சார்ந்தே காரியத்தை சாதிப்பதா..? என்பது ஈழத்தமிழர்களின் தெரிவு.

காலம் எப்படி செல்கிறது என்பதை பார்க்கலாம்!

இனவழிப்பு என்பதில் நேரடி போர் வெறும் 25 வீதம்தான் 
மற்றைய 75 வீதமும் வரலாறுகளை அழித்தல் ... கலாச்சார முறைமைகளை அழித்தல் 
மொழிகலப்பு நில ஆக்கிரமிப்பு ... அரசியல் அதிகார அழிப்பு போன்ற திட்டமிடலால் 
வெற்றிகொள்ள படுவதுதான்.

இது இன்னமும் ஈழத்தமிழருக்கு விளங்கவில்லை 
அப்ப அப்ப முன்னேற்றம் என்ற பெயரில் எதிரிகளுக்கு விளக்கு 
பிடிப்பதால் தாம் எதோ மக்கள் நலன் பற்றி சிந்திப்பதாக பீத்திக்கொண்டு 
திரிவது தவிர்த்து எதிர்வினைகள் பற்றி சிந்திப்பது இல்லை 
மணியோசை வந்தால் யானை வரும் பின்னே என்பது புரிவதில்லை.

ஈழத்தமிழரை பொறுத்தவரை இன்று யாருமே எதிர்பார்க்காத ஒரு மிக பெருத்த பொருளாதார 
பலம் எங்கள் கைகளில் சிக்கி இருக்கிறது நாம் சரியான திட்டமிடலுடன் நகர்வோமாக இருந்தால் 
தெற்காசியாவில் ஒரு இன்றியமையாத இனமாக முன்னேறமுடியும்.

யாழ்பாணத்தனின் அகங்காரப்போக்கு ... சுயநலம் ... மூட சிந்தனைகள்.
போலிகளுக்கு வால்பிடித்து தம்மை உயர்வாக எண்ணுதல் ஒற்றுமை இன்மை.
உலக வரலாற்றின்  தலை சிறந்த துரோகிகள் என்பவற்றால் 

போர் முடிந்து  10 வருடம் ஆகியும் இன்றும் உணவு இன்றி ஒழுங்கான உடை இன்றி 
ஒரு மக்கள் கூட்டம் அங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறது. 
இங்கு பதினைந்து உதவும் நிறுவனங்களும் மாதாந்த கூட்டங்களும் 
எந்த குறையுமில்லாது நடக்கிறது. 

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

ஈழத்தமிழரை பொறுத்தவரை இன்று யாருமே எதிர்பார்க்காத ஒரு மிக பெருத்த பொருளாதார 
பலம் எங்கள் கைகளில் சிக்கி இருக்கிறது நாம் சரியான திட்டமிடலுடன் நகர்வோமாக இருந்தால் 
தெற்காசியாவில் ஒரு இன்றியமையாத இனமாக முன்னேறமுடியும்.

இது என்ன பலம்?

புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களின் கூட்டு-பொருளாதார வளமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு விக்னேஸ்வரன் இருந்த போது ஒரு நிதியம் அமைத்து புலம்பெயர் நிதியை வடக்கிற்கு கொண்டுவர முயன்றார். 

ஆனால் சில விடயங்களில் இலங்கை மிக தெளிவாக இருக்கிறது.

அவற்றில் ஒன்று எந்த வகையிலும் பொருளாதார/நிதி  சுதந்திரத்தை தமிழர்கள் கையில் கொடுப்பதில்லை என்பது.

உதாரணமாக ஸ்டாலின் தடுப்பூசிகளை நேரடியாக வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்கிறார். தியாகராஜன் ஜேசி ஜக்சனுடன் டீல் போடுகிறார்.

ஆனால் இலங்கையில்?

89 இல் இணைந்த வட-கிழக்கு மாகாணசபை ஒரு டெண்டர் பேப்பரில் வெளியிட்ட போது, Provincial Government என போட, மறுநாளே அதை பிரேமதாசா Provincial Council என மாற்றும்படி செய்தார். 

மாகாண சபைகளுக்கு காணி, பொலீஸ் அதிகாரம் வழங்காமையும் இதனால்தான்.

ஆகவே எம்மிடம் பெரும் பொருளாதார வளம் புலம்பெயர் நாட்டில் இருந்தாலும் (இருந்தாலும்), அதை நாம் பொது நோக்கில் ஒருங்கிணைத்தாலும் (ஒருங்கிணத்தாலும்- நடக்கிற காரியமா இது?) அதை நாட்டில் எப்படி முதலிடுவது என்பது பெரும் கேள்வி குறி.

எதையும் சட்டபடி செய்ய முடியாது எனும் போது இரு வழிகள்தான் உள்ளன.

1. நம்பி ஒரு அமைப்பிடம் இதை சட்டத்துக்கு அப்பாற்பட்டு செய்யுங்கள் என கொடுப்பது. அப்படி ஒரு அமைப்பும் 2009 க்கு பின் இல்லை. 2009 க்கு முன் அவர்களிடம் கொடுத்தால் பணம் சரியாக பயன்படும் என்று நம்பிக்கை இருந்ததது.

இப்போ?

புலம் பெயர் நாட்டில் ஒரு உண்ணாவிரதத்தில் கூட பல சந்தேகங்கள் - யாரை நம்பி கொடுப்பது?

2. தனி மனிதர்களாக, ஊர் ஒன்றியங்களா செயல்படுவது. @விசுகு அண்ணை @விவசாயி விக். இருவரும் இதற்கு நல்ல உதாரணங்கள். ஆனால் அவர்களே பலமுறை எழுதி உள்ளார்கள் - ஏற்படுத்தபடும் தடங்கல்கள் பற்றி.

இதை விட நடைமுறை சாத்தியமாக வேறு எதையும் இப்போது செய்யமுடியும் என என் அறிவிற்கு எட்டவில்லை.

சீன வரவால் புவிசார் அரசியலில் இலங்கையை ஒட்டி ஒரு மாற்றம் ஏற்பட்டு எமக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்தால் ஒழிய - இதுதான் கள நிலை.

ஆகவே அங்கே இருக்கும் மக்கள் இப்படியான வசதிகளை, அது ஏர்போர்ட்டோ, கலாச்சார மண்டபமோ பயன்படுத்தத்தான் முனைவார்கள்.

நாம் வெளிநாட்டில், மைதானம், ஆடிடோரியம், சகல வசதிகளையும் அனுபவிக்கிறோம். ஆகவே நாம் அவர்களை எமது பெரும் புலம் பெயர் பொருளாதார உதவி வரும் வரை பொறுங்கள் என ஈசியாக கேட்கலாம்.

ஆனால் அவர்கள் காத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு 18 மாடி கட்டிடம், இத்தனை வசதிகளோடு கிடைத்தால் அதை எப்படி பாவிக்கலாம் என்றே யோசிப்பார்கள்.

பிகு:

புலிகள் சுனாமி நேரத்தில் PTOMS என்ற ஒரு கட்டமைப்பை கோரினார்களே, நியாபகம் உள்ளதா?

அதை இலங்கை நிராகரிக்கவும் இதுதான் காரணம். வெளிநாட்டு பண வரவை கையாளும் சுதந்திரம் தமிழர் கைகளில் இருக்க கூடாது.

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

இலங்கை அரசாங்கம் தமிழர் தரப்பு நிதியை கையாளுவதற்கு ஒருபோதும்/ தற்போதைக்கு விடமாட்டார்கள்.இலங்கை அரசுக்கு நேரடியாக நிதி கொடுக்கமுடியாது( தங்களுடைய மக்களுக்கு செல்லவேண்டிய நிதியையே ஆட்டை போடுகின்றவர்கள், தமிழர் நிதி என்றால் சொல்லவா வேண்டும்). நேரடியாகவும் செய்ய பல முட்டுக்கட்டைகள்  உள்ளன.

புலம்பெயர்ந்த தமிழர் தமது நாட்டு அரசாங்கங்களுடன் இணைந்து பங்களிப்பு செய்யமுடியுமா எனப்பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு,  இலங்கையில் கனேடிய சர்வதேச உதவி.

https://www.international.gc.ca/world-monde/issues_development-enjeux_developpement/priorities-priorites/where-ou/sri_lanka.aspx?lang=eng

இலங்கை உதவி செயல்திறன் தொடர்பான பாரிஸ் பிரகடனத்திக்கு   ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, கனடாவும் பிற நன்கொடையாளர்களும் இலங்கை அரசுக்கு நேரடியாக நிதி கொடுப்பதில்லை . நன்கொடையாளர்கள் இலங்கையில் தங்கள் பணிகளை வழிநடத்துவதற்கும், சாத்தியமான இடங்களில் கூட்டு மதிப்பீடுகளை நடத்துவதற்கும் ஒரு பொதுவான கொள்கைகளை உருவாக்கி உதவிசெய்வார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சரியான திட்டமிடல் 
சரியான திட்டமிடல் 
சரியான திட்டமிடல் 
என்பது எதிரியின் நாடி நரம்புகளை சரியாக அறிந்து செயலாற்றுவது 
நாம் ஒரு நிறுவனத்தின் பெயரிலோ ... ஒரு சாரிட்டியின் பெயரிலோ ஒரு 10 கோடிக்கு 
மேலே கொண்டு சென்றாலே ... "பயங்கரவாதம்" என்ற ஒற்றை சொல்லாலேயே அவர்களால் 
துடைத்து வழிக்க முடியும். அதே நேரம் நாம் பெரியதொரு தொகையை உள்ளே கொண்டு செல்லும்போது 
அந்நிய செலவாணி வருவானம் மூலம் அவர்களுக்கும் லாபம் இருக்கிறது. ஆகவே நாம் பெரிய ஒரு 
தொகையை அங்கு கொண்டு செல்வது என்பதும் அவர்களை நாமே பலமாக்குவது என்றும் ஆகும். 

நாம் வன்னிக்காட்டுக்கு பூராக நீர்பாய்ச்சுவது என்றால் எவ்வளவு செலவாகும்?
எவ்வளவு பெரிய தொழில்நுட்பம் வேண்டும்? 
யாருக்கும் பெரிதாக தெரியாமல் ஒரு நள்ளிரவில் பெய்யும் மழை 
சிறு சிறு துளியாக எல்லா மரத்துக்கும் நீர்பாய்ச்சி காடு செழிப்பாக வளர 
வழி வகுக்கிறது. எங்களுடைய செயல்பாடுகள் மலைபோல இருக்கவேண்டும் எல்லோருக்கும் 
சேரவேண்டும். அதே நேரம் எல்லோரும் எல்லா ரீதியில் வளரவும் வாய்ப்பை உண்டுபண்ண வேண்டும் 

இலங்கையின் தற்போதைய உள்நாட்டு வருவானம் வருடா வருடம் இரட்டிப்பு ஆகிறது என்றால் 
பொருட்டுகளின் விலைவாசி அதைவிட கூடிக்கொண்டே இருக்கிறது என்றுதான் பொருள். பெருமளவான பொருட்கள்  இறக்குமதி ஆகிக்கொண்டு இருக்கினறன ஒரு குறிப்பிட வீத இறக்குமதியை நாம் எமது கைகளில்  எடுத்துக் கொள்ளவேண்டும் ... அங்கே நுகர்வோரும் குறிப்பிட்ட வீதம் நாம்தான். 

ஒரு சிறிய உதாரணத்துக்கு,  அடுத்த பத்து வருடங்களில் இலங்கை உல்லாச பிரயாணிகளின் முக்கிய இடமாக மாறும் இந்திய மத்திய வர்க்கம் பாகிஸ்தான் மத்திய வர்க்கம் சீனர்கள் என்று ஒரு அலை மோதும் 
அவர்களை நாம் வட கிழக்கு நோக்கி நகர்த்த வேண்டும் அதே நேரம் இங்கிருந்தும் அவர்களை அங்கே கொண்டுசெல்வதில்  ஓரளவு வீத வருமானம் பெறவேண்டும். 

இங்கிருப்பவர்களுக்கு முதலில் பொருளாதாரம் பற்றிய அறிவு வேண்டும் 
முதலீடு செய்வதன் மூலம் தொடர் லாபம் பெற்று முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் 
கல்வியில் முன்னேற்றம் என்பது இங்கும் அங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கவேண்டும்.
அங்கு இருக்கும் கெட்டிக்கார பிள்ளைகளை எமது செலவில் வெளிநாடுகளில் இருக்கும் உயர்நிலை பல்கலை கழகங்களில்  சேர்க்கவேண்டும். 

நான் சொன்ன பொருளாதார பலம் என்பது உங்களுடைய தனிப்பட்ட பலம்தான் 
கோசான் இலங்கையில் இருந்தால் எவ்வளவு லண்டன் பவுன்சை உங்கள் பாக்கெட்டில் வைத்திருக்க முடியும்?இப்போ எவ்வளவு இருக்கிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, zuma said:

நல்ல தகவல் மற்றும் காத்திரமான குறிகாட்டல் (sign-posting) சுமா.

இதில் எனது அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன்.

இந்த நாடுகளில் எம்பிகள் இதர அமைபுக்களோடு தொடர்பில் உள்ளவர்கள் அந்த நாட்டின் இலங்கைக்கான foreign aid எங்கே செலவழிக்கபடுகிறது என்பதை தீர்மானிக்கும், இல்லை, பிரேரிக்கும் நிலையில் கூட இல்லை என்பதும் உண்மையல்லவா?

உதாராணமாக யூகேயின் குறித்த ஒரு ஆண்டுக்கான உதவி இலங்கையில் எங்கே எப்படி செலவழிக்க படப்போகிறது என்பதை இலங்கையும், யூகேயுமே தீர்மானிக்க வல்லன.

நமக்கு அளுத்தம் கொடுக்கும் வலு இருந்தால் (இருந்தால்) ஒரு குறித்த தொகையை வடகிழக்கிற்கு அனுப்ப வேண்டும் என ஓரளவுக்கு அளுத்தலாம். 

ஆனாலும் சனத்தொகை பரம்பல் காராணமாக பெருந்தொகை வட கிழக்கிற்கு வெளியேதான் செல்லும்.

இன்னொரு பிரதிகூலம் - இந்த நாட்டின் பிரஜைகளாக நாம் நேரடியாக இந்த நாட்டு அரசுகள் வழியே முதலிட முடியாது.

உதாராணமாக ஒரு தமிழ் அமைப்பிடம் 100 மில்லியன் டாலர் இருந்தால் - அதை இந்த அரசுகளிடம் கொடுத்து - தனியே வட கிழக்கு திட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் என்று சொல்லவும் முடியாது. அவர்கள் செய்யமாட்டார்கள், இலங்கை செய்யவும் விடாது.

மேலும் ஒரு பிரதிகூலம் அரசுகள் செய்வது aid என்ற அளவில் மட்டுப்பட்டு விடுகிறது. நாம் செய்ய விழைவது nation building அதை இவர்களும் விரும்பபோவதில்லை, அவர்களும் விடப்போவதில்லை.

ஆனால் நீங்கள் சொன்ன வழிமுறையில் முயற்சிக்கலாம் - குறைந்த பட்சம் இந்த நாடுகளின் aid இல் கணிசமான அளவு எமது பகுதியில், வினைத்திறனாக செலவாகிறது என்பதையாவது உறுதிப்படுத்தலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

சரியான திட்டமிடல் 
சரியான திட்டமிடல் 
சரியான திட்டமிடல் 
என்பது எதிரியின் நாடி நரம்புகளை சரியாக அறிந்து செயலாற்றுவது 
நாம் ஒரு நிறுவனத்தின் பெயரிலோ ... ஒரு சாரிட்டியின் பெயரிலோ ஒரு 10 கோடிக்கு 
மேலே கொண்டு சென்றாலே ... "பயங்கரவாதம்" என்ற ஒற்றை சொல்லாலேயே அவர்களால் 
துடைத்து வழிக்க முடியும். அதே நேரம் நாம் பெரியதொரு தொகையை உள்ளே கொண்டு செல்லும்போது 
அந்நிய செலவாணி வருவானம் மூலம் அவர்களுக்கும் லாபம் இருக்கிறது. ஆகவே நாம் பெரிய ஒரு 
தொகையை அங்கு கொண்டு செல்வது என்பதும் அவர்களை நாமே பலமாக்குவது என்றும் ஆகும். 

நாம் வன்னிக்காட்டுக்கு பூராக நீர்பாய்ச்சுவது என்றால் எவ்வளவு செலவாகும்?
எவ்வளவு பெரிய தொழில்நுட்பம் வேண்டும்? 
யாருக்கும் பெரிதாக தெரியாமல் ஒரு நள்ளிரவில் பெய்யும் மழை 
சிறு சிறு துளியாக எல்லா மரத்துக்கும் நீர்பாய்ச்சி காடு செழிப்பாக வளர 
வழி வகுக்கிறது. எங்களுடைய செயல்பாடுகள் மலைபோல இருக்கவேண்டும் எல்லோருக்கும் 
சேரவேண்டும். அதே நேரம் எல்லோரும் எல்லா ரீதியில் வளரவும் வாய்ப்பை உண்டுபண்ண வேண்டும் 

இலங்கையின் தற்போதைய உள்நாட்டு வருவானம் வருடா வருடம் இரட்டிப்பு ஆகிறது என்றால் 
பொருட்டுகளின் விலைவாசி அதைவிட கூடிக்கொண்டே இருக்கிறது என்றுதான் பொருள். பெருமளவான பொருட்கள்  இறக்குமதி ஆகிக்கொண்டு இருக்கினறன ஒரு குறிப்பிட வீத இறக்குமதியை நாம் எமது கைகளில்  எடுத்துக் கொள்ளவேண்டும் ... அங்கே நுகர்வோரும் குறிப்பிட்ட வீதம் நாம்தான். 

ஒரு சிறிய உதாரணத்துக்கு,  அடுத்த பத்து வருடங்களில் இலங்கை உல்லாச பிரயாணிகளின் முக்கிய இடமாக மாறும் இந்திய மத்திய வர்க்கம் பாகிஸ்தான் மத்திய வர்க்கம் சீனர்கள் என்று ஒரு அலை மோதும் 
அவர்களை நாம் வட கிழக்கு நோக்கி நகர்த்த வேண்டும் அதே நேரம் இங்கிருந்தும் அவர்களை அங்கே கொண்டுசெல்வதில்  ஓரளவு வீத வருமானம் பெறவேண்டும். 

இங்கிருப்பவர்களுக்கு முதலில் பொருளாதாரம் பற்றிய அறிவு வேண்டும் 
முதலீடு செய்வதன் மூலம் தொடர் லாபம் பெற்று முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் 
கல்வியில் முன்னேற்றம் என்பது இங்கும் அங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கவேண்டும்.
அங்கு இருக்கும் கெட்டிக்கார பிள்ளைகளை எமது செலவில் வெளிநாடுகளில் இருக்கும் உயர்நிலை பல்கலை கழகங்களில்  சேர்க்கவேண்டும். 

நான் சொன்ன பொருளாதார பலம் என்பது உங்களுடைய தனிப்பட்ட பலம்தான் 
கோசான் இலங்கையில் இருந்தால் எவ்வளவு லண்டன் பவுன்சை உங்கள் பாக்கெட்டில் வைத்திருக்க முடியும்?இப்போ எவ்வளவு இருக்கிறது? 

நீங்கள் சொல்வதை நான் தெளிவாக புரிந்து கொண்டால் -

நாம் தனிப்பட்டு செயல்பட வேண்டும் ஆனால் ஒரு சொல்லப்படாதா, எழுத்தில் இல்லாத பெரும் திட்டத்துடன் திட்டமிடல் இன்றியே நாம் திட்டமிட்டு ஒருங்கிணைய வேண்டும்.

இது சாத்தியம் என நானும் நம்புகிறேன். 

கொஞ்சம் நடைமுறையிலும் நடக்கிறது.

ஆனால் அவர்களும் ஒரு அளவுக்கு மேல் வளரவிடாது பார்த்து கொள்கிறார்கள் என்பதும் உண்மையே.

16 minutes ago, Maruthankerny said:

கோசான் இலங்கையில் இருந்தால் எவ்வளவு லண்டன் பவுன்சை உங்கள் பாக்கெட்டில் வைத்திருக்க முடியும்?இப்போ எவ்வளவு இருக்கிறது? 

இலங்கையில் இன்னும் இருந்திருந்தால் - அநேகமாக இப்போ இருப்பதை காட்டிலும் கூட இருந்திருக்கும்🤣.

பகிடிக்கு சொன்னேன் - நீங்கள் சொல்வது புரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வதை நான் தெளிவாக புரிந்து கொண்டால் -

நாம் தனிப்பட்டு செயல்பட வேண்டும் ஆனால் ஒரு சொல்லப்படாதா, எழுத்தில் இல்லாத பெரும் திட்டத்துடன் திட்டமிடல் இன்றியே நாம் திட்டமிட்டு ஒருங்கிணைய வேண்டும்.

இது சாத்தியம் என நானும் நம்புகிறேன். 

கொஞ்சம் நடைமுறையிலும் நடக்கிறது.

ஆனால் அவர்களும் ஒரு அளவுக்கு மேல் வளரவிடாது பார்த்து கொள்கிறார்கள் என்பதும் உண்மையே.

இலங்கையில் இன்னும் இருந்திருந்தால் - அநேகமாக இப்போ இருப்பதை காட்டிலும் கூட இருந்திருக்கும்🤣.

பகிடிக்கு சொன்னேன் - நீங்கள் சொல்வது புரிகிறது.

நம் இளைய தலைமுறை தறுதலைகள் ஆகுமுன்பு 
அவர்களை பிடித்து இதில் தள்ளிவிட வேண்டும் 
அவர்களுக்கும் இப்போ பெரிதாக வேறு வலிகள் இல்லை 
போதிய வருவானம் வரும்போது அதுக்கு மேலாக செலவை கூட்டி விடுவது 
என்பதை இங்கிருக்கும் நுகர்வோர் சந்தை வல்லுநர்களுக்கு மிக நுட்பமாக தெரியும் 
ஆகவே அவர்களிடம் இவர்கள் சிக்குண்டு .. அடுத்தவருக்கு பகடு காட்டிட 
பிஎம்டவுள் கார்  வீடு என்று மாட்டி விடுவார்கள் 

நாம் இன்று கூகுளில் தட்டினால் வரும் இணையதளங்கள் வெறும் 
30 வீதம் கூட இல்லை இண்டெர்நெட் என்பது மிக பெருத்த வலைப்பின்னல் 
30வீதம் வரை ப்ளாக்நெட் (dark web  + Deep Web)  இருக்கிறது யாருக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியாதது வேறு ஒருவருக்கும் தெரியாமல் இது நடந்துகொண்டு இருக்கிறது என்பதுதான் நாம் புரிய வேண்டிய ஒன்று 

எமது பொருளாதார வலைப்பின்னல் என்பது பிளாக்நெட் போன்ற வடிவத்திலேயே 
இருக்கவேண்டும் வெளியில் சத்தம் எதுவும் இருக்க கூடாது.
எமது இளையதலைமுறையிடம் நாம் முழுதாக இதை கையளிக்கும்போதே இது சாத்தியமும் கூட 
இதில் இரண்டு மாங்காய் இலக்காக இருக்கும். இங்கிருக்கும் தலைமுறையை நாம் பக்குவமாக வளர்ப்பது 
அங்கு ஒரு பெரும் பலத்தை பெறுவது   

Deep Web, Dark Web, Darkness, Binary, Code, Null, One

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

புலிகள் சுனாமி நேரத்தில் PTOMS என்ற ஒரு கட்டமைப்பை கோரினார்களே, நியாபகம் உள்ளதா?

நன்றி நினைவு படுத்தியத்துக்கு .

விவசாயியிக்கு @ போட்டும் பலனில்லை கோசான் .

விவாசாயி விக் அருமையான மனிதர் .

  • Sad 1
Link to comment
Share on other sites

6 hours ago, goshan_che said:

புலிகள் சுனாமி நேரத்தில் PTOMS என்ற ஒரு கட்டமைப்பை கோரினார்களே, நியாபகம் உள்ளதா?

அதை இலங்கை நிராகரிக்கவும் இதுதான் காரணம். வெளிநாட்டு பண வரவை கையாளும் சுதந்திரம் தமிழர் கைகளில் இருக்க கூடாது.

எனது நினைவு வித்தயாசமாக இருக்கிறதே? மிகுந்த அளவிலன பேரம்பேசலின் பின்னர் ரனில் PTOMS இடைக்கால நிருவாகத்தை ஏற்றுக்கொண்டு சீமேந்தும் தொலைதொடர்பு சாதனங்களும் தமிழீழம் செல்ல அனுமதித்ததும், அந்த வார இறுதியில் சந்திரிக்கா மகிந்தவின் நிர்ப்பந்தத்தில்  அதனால் ரனில் அரசை கலைத்ததும், அதை தொடர்ந்து வந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்து மகிந்தவை அமோக வெற்றி பெற செய்ததும், அடுத்து வந்த மாவீரர் நாள் செய்தியில் மகிந்த ஏதோசெய்வார் என்ற நம்பிக்கை வெளிப்பட்டதுமே எனது நினைவு.... அறளை பெயர்ந்து விட்டதோ என்ற பயம் வருகிறது. 🤫

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

இல்லையே எனது நினைவின் படி ஜெயந்த தனபாலவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியும், அது செயல்பட முதலே, அதன் முக்கிய சரத்துகளை அரசியல் சட்டத்துக்கு முரணானது என ஒரு இடைக்கால தடை மூலம் உச்ச நீதி மன்றம் முடக்கி விட்டது.

இது நடந்து சில மாதங்களின் பின்னே 2005 ஜனாதிபதி தேர்தல் வந்தது.

எனக்கும் சரியாக நியாபகம் இல்லை ஆனால் தகவல்கள் சரி என நினைக்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழே விக்கி இப்படி சொல்கிறது.

இதை ஆதாரமாக இணைக்கவில்லை. நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.

On 26 December 2004, the Indian Ocean tsunami struck Sri Lanka, killing more than 35,000 people and leaving many more homeless. A great deal of aid arrived from around the world, but there was immediate disagreement over how it should be distributed to the Tamil regions under LTTE control. By 24 June the government and LTTE agreed on the Post-Tsunami Operational Management Structure (P-TOMS), but it received sharp criticism from the JVP, who left the government in protest. The legality of P-TOMS was also challenged in the courts. President Kumaratunga eventually had to scrap P-TOMS, which led to widespread criticism that sufficient aid was not reaching the north and east of the country. However, immediately following the tsunami there was a marked decrease in violence in the north.[citation needed]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

எனது நினைவு வித்தயாசமாக இருக்கிறதே? மிகுந்த அளவிலன பேரம்பேசலின் பின்னர் ரனில் PTOMS இடைக்கால நிருவாகத்தை ஏற்றுக்கொண்டு சீமேந்தும் தொலைதொடர்பு சாதனங்களும் தமிழீழம் செல்ல அனுமதித்ததும், அந்த வார இறுதியில் சந்திரிக்கா மகிந்தவின் நிர்ப்பந்தத்தில்  அதனால் ரனில் அரசை கலைத்ததும், அதை தொடர்ந்து வந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்து மகிந்தவை அமோக வெற்றி பெற செய்ததும், அடுத்து வந்த மாவீரர் நாள் செய்தியில் மகிந்த ஏதோசெய்வார் என்ற நம்பிக்கை வெளிப்பட்டதுமே எனது நினைவு.... அறளை பெயர்ந்து விட்டதோ என்ற பயம் வருகிறது. 🤫

அனைத்து மாவீரர்நாள்  உரையிலும்

புதிய சிங்கள அரசை வரவேற்றும்

தமிழ்  மக்களது  எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கோரிக்கையும் 

மிக  மிக மன்றாட்டமான செய்தி  வெளியிடப்படுவது  வழமை

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அனைத்து மாவீரர்நாள்  உரையிலும்

புதிய சிங்கள அரசை வரவேற்றும்

தமிழ்  மக்களது  எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கோரிக்கையும் 

மிக  மிக மன்றாட்டமான செய்தி  வெளியிடப்படுவது  வழமை

அதுவா இப்போ முக்கியம்?
புலிகள் சர்வாதிகாரிகளாகவும் பிழையான அரசியல் முடிவுகள் எடுப்பவர்களாவும் இருந்தார்கள் 
1958லேயே அது தெளிவாக தெரிந்து இருந்ததால் சிங்கள கருணை மிகு புத்த மத வழிவந்து 
அன்பு அறம் துறவம் ஒன்றே வாழ்வின் சிர்த்தார்த்தம் என்று வாழ்ந்தவர்கள் 
பின்னாளில் கஸ்ரபட போகிறார்கள் என்று ......1958லேயே கொல்ல தொடங்கினார்கள். 
இதை நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வாரு திரியிலும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Maruthankerny said:

அதுவா இப்போ முக்கியம்?
புலிகள் சர்வாதிகாரிகளாகவும் பிழையான அரசியல் முடிவுகள் எடுப்பவர்களாவும் இருந்தார்கள் 
1958லேயே அது தெளிவாக தெரிந்து இருந்ததால் சிங்கள கருணை மிகு புத்த மத வழிவந்து 
அன்பு அறம் துறவம் ஒன்றே வாழ்வின் சிர்த்தார்த்தம் என்று வாழ்ந்தவர்கள் 
பின்னாளில் கஸ்ரபட போகிறார்கள் என்று ......1958லேயே கொல்ல தொடங்கினார்கள். 
இதை நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வாரு திரியிலும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்.  

உண்மையில்

நான் மிகவும் யாலியானவன் பழக  பேச இனிமையானவன் என்று  சொல்வார்கள்

இங்கே எவருடனும் முட்டுப்படவோ கோபப்படவோ  நான் விரும்புவதில்லை

ஏனெனில் இதிலேயே எமக்குள் ஒற்றுமையாக  இருக்கமுடியாத  நாம்

எமது  பெரும் கனவும் நீண்டநாள் பயணத்தையும் எவ்வாறு செய்யமுடியும்???

ஆனால் சிலவற்றை அவ்வாறு  தாண்டி  விட முடியாது  கூடாது

புலிகள் மீதான தூற்றுதல்களுக்கு அல்லது கை  நீட்டுதல்களுக்கு என்று  சில  தகுதிகள் வேண்டும்

என்னைப்பொறுத்தவரை  அது உயிரோடுள்ள  எம் எவருக்கும் இல்லை

Edited by விசுகு
Link to comment
Share on other sites

ஒவ்வொரு தடவையும் வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும்போது ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. இந்தக் கட்டடமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இவ்வளவு பணத்தினை பிரதியுபகாரமின்றி கட்டிக் கொடுக்க மாட்டார்கள். அந்த ஒப்பந்தம் என்ன ?

இந்தக் கட்டம் மூலம் சரியான வருமானம் இல்லாவிட்டால் இதனைப் பராமரிப்பது மிகக் கடினம். இலத்திரனியல் கருவிகள், குளிரூட்டல், பாதுகாப்பு, சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கான பாரிய செலவை இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தால் நிவர்த்தி செய்ய முடியுமா ? அதற்கான திட்டங்கள் எவை ? இலாபமற்ற பொதுநல திட்டமாக இருந்தால் வெகுதூரம் செல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.