Jump to content

பாம்பெண்ணை மருத்துவம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பெண்ணை மருத்துவம்!

18 ஆம்  நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய, அமெரிக்க தேசங்களில் ஒரு புது வகையான தொழில் துறை கொடி கட்டிப் பறந்தது. குதிரை வண்டியில் ஊரூராகத் திரிந்து சகல வகையான நோய்களையும் தீர்க்கும் "பாம்பு எண்ணை" என்று பெற்றோலியத்தின் ஒரு பகுதியான கனிம எண்ணையை விற்பதே அந்தத் தொழில். இது ஏன் பாம்பு எண்ணை (snake oil) என அழைக்கப் பட்டது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஆனால், இன்று ஆங்கிலத்தில் "பாம்பு எண்ணை" என்பது எந்தப் பலனுமற்ற போலி மருந்துகளைச் சுட்டப் பயன் படும் ஒரு சொல்லாகி விட்டது. போலி மருந்துகளை விற்கும் வியாபாரி "பாம்பெண்ணை விற்பவர் (snake oil salesman)" எனப் படுகிறார். 

கோவிட் 19 இற்கு தீர்வினைத் தேடி மருத்துவ விஞ்ஞானம் உழைத்துக் கொண்டிருக்கும் போது, பல பாம்பெண்ணை மருந்துகளும் வெளிவந்து வியாபாரிகளுக்கு மட்டும் எதிர்பார்த்த  "பலன்களை" கொள்ளை லாபமாகத் தந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் கேகாலை வைத்தியரின் பாணி, மடகஸ்காரில் அந்த நாட்டு தலைவர்களே தயாரித்து விற்கும் மருத்துவ சோடா, என்று நீளும் பட்டியலில் இப்போது இணைந்து கொண்டிருப்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் பரியாரி நெல்லூர் அனந்தையாவின் மூலிகைப் பாணி!. நேற்று இந்த மூலிகைப் பாணியை அந்த மாநிலத்தில் பயன்படுத்த ஆந்திர மாநில முதலமைச்சர் விசேட கூட்டம் கூட்டி அனுமதியும் வழங்கியிருக்கிறார்.

"முதலமைச்சரே அனுமதி கொடுத்து விட்டார், எனவே மருந்து வேலை செய்கிறது" என்று வட்சப் குழுமங்களில் குதிக்கிறார்கள் - இப்படி மகிழ்ந்து செய்தி பரப்பியோரில் சிலர் விஞ்ஞானத் துறையில் உயர் பட்டம் பெற்றவர்களாக இருந்தது ஆச்சரியமான தகவல் (தொழிலுக்கு அவசியம் என்று மேலதிக பட்டம் பெற்று பிரேம் போட்டிருப்பார்கள் போல, பட்டம் பிரேமிற்குள் முடங்கி விட்டது!). 

சீரியசாக, அந்த ஆந்திரமாநில மூலிகைப் பாணியில் என்ன இருக்கிறது, அனுமதி எப்படி வழங்கப்பட்டது என்று பார்க்கலாம். நான்கு வகையான மூலிகைப் பாணிகளைத் தயாரித்து "கோவிட் எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்த நெல்லூர் அனந்தையா முயன்றார். இதை முதலில் கோவிட் மருந்தாக விளம்பரம் செய்ய ஆந்திர அரசு அனுமதிக்கவில்லை. பல்வேறு அழுத்தங்களின் பின்னர், அகில இந்திய ஆயுர்வேத மருந்து ஆய்வகம் (CCRAS) என்ற அமைப்பு இந்த மூலிகைப் பாணிகளைப் பரிசீலிக்க ஒப்புக் கொண்டது. "பரிசீலித்தல்" என்றால் நோயாளிகளுக்குக் கொடுத்துப் பரிசீலிக்க என்றல்ல - இந்த மூலிகைகளும் அவை கலக்கப் படும் முறைகளும் ஆபத்தானவையா இல்லையா என்பதைப் பரிசீலிக்க அந்த அமைப்பு முன்வந்தது. அதன் படி அவர்கள் முன்னிலையில், தனது நான்கு பாணிகளில் மூன்றை அனந்தையா தயாரித்துக் காட்டினார். நான்காவது பாணிக்கு அவசியமான மூலிகைகள் கையிருப்பில் இருக்காததால், அந்த நான்காவது மூலிகை பரிசீலிக்கப் படவில்லை. 

இந்த “தென்னாசிய பாணியிலான” பரிசோதனை முடிவில் அகில இந்திய ஆயுர்வேத அமைப்பு வெளியிட்ட  முடிவுகள் இரண்டு: 1. இந்த மூலிகைப் பாணிகள் கோவிட்டைக் குணமாக்கும் என்பதற்குரிய ஆதாரங்கள் இல்லை. 2. இந்த மூலிகைகள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாதவை. 

இந்த முடிவுகளை ஆராய்ந்த ஆந்திர மாநில முதல்வர், பின்வரும் முடிவுகளை அறிவித்தார்: 1. இந்த பரிசீலிக்கப் பட்ட மூன்று மூலிகைப் பாணிகளை மக்கள் பயன்படுத்தலாம். 2. ஆனால், கோவிட்டிற்கு நிவாரணமாக வழங்கப் படும் ஏனைய மருந்துகளை மக்கள் நிறுத்தி விடக் கூடாது.

மேற்கூறிய அறிவிப்பை இந்தியாவின் சில பரபரப்பு மஞ்சள் பத்திரிகை பாணி ஊடகங்கள் வெளியிட்ட தோரணையோ, அனந்தையாவின் மூலிகைப் பாணிகள் கோவிட்டிற்கு மருந்தாக அனுமதிக்கப், பட்டிருக்கின்றன என்ற வகையில் இருந்தன. ஒரு இணைய ஊடகத்தில் அனந்தையாவின் அனுமதிக்கப் படாத நான்காவது மூலிகை மருந்தை எடுத்துக் கொண்ட ஒருவர் "நான் உடனே குணமாகி விட்டேன்" என்று பேட்டி கொடுத்தார் - அது பரபரப்பாக இணைய ஊடகங்களில் பரவியது. மறு நாள் அதே நபர் உடலில் ஒக்சிசன் குன்றி மருத்துவமனையில் காலமாகி விட்டார் - இந்தச் செய்தி பிரதான ஊடகங்களில் மட்டும் வந்தது. 

ஆனால், இப்படியான பாம்பு எண்ணை விற்பவர்களின் வியாபார நுட்பம் வேலை செய்கிறது என்பதற்கு சாட்சியாக, ஆயிரக் கணக்கான மக்கள் அனந்தையாவின் நெல்லூர் நோக்கிப் படையெடுத்துள்ளனர். முட்டி மோதி வரிசையில் நிற்கும் இந்த மக்களில் பலருக்கு கோவிட் பரிசோதனை செய்யப் பட்ட போது சிலருக்கு ஏற்கனவே கோவிட் தொற்று இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். எனவே, பாம்பு எண்ணை வாங்கப் போய் கோவிட் தொற்றைப் பெற்று வரும் "புத்தி சாலிகளை" இந்த அனந்தையா சம்பவம் உருவாக்கி விட்டது எனலாம்!

இது ஆந்திராவில் நடக்கிறது, இதை ஏன் நான் மெனக்கெட்டு எழுதுகிறேன் என்று வாசிப்பவர் யோசிக்கலாம் (நிச்சயமாக என் தெலுங்கு பூர்வீகம் காரணமல்ல!). காரணம்: இந்த பாம்பெண்ணை மருத்துவம் என்பது - பல்வேறு வடிவங்களில்- எங்களிடையேயும் வழக்கத்தில் இருக்கிறது. கறிவேப்பிலை சாப்பிட்டால் முடி வளரும், பாகற்காய் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி மறையும் போன்ற பாம்பெண்ணை மருத்துவங்களோடு, இன்று பல வகையான கோவிட் கைவைத்தியங்களும் எங்களிடையே தாராளமாகக் கேள்விகள் இன்றிப் பரவி வருகின்றன. இதன் பலன் நோயாளிகளுக்கோ பாவனையாளர்களுக்கோ இல்லை - அப்படி இருப்பதாக நிறுவும் எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால், பயன் தாராளமாக பாம்பெண்ணையை விற்பவர்களுக்கு கிடைக்கின்றது. 

சிறந்த உதாரணம் கறி மஞ்சள். யாழ்ப்பாணம் நோக்கி கஞ்சாவுடன் மஞ்சளும் தமிழகத்திலிருந்து கடத்தி வரப்படும் அளவுக்கு அங்கே மஞ்சள் கோவிட் தடுப்புப் பொருளாக பொய்ப்பிரச்சாரம் செய்யப் பட்டிருக்கிறது. கறிமஞ்சள் கொரனாவைரசைக் கொல்லாது, நோயையும் குணமாக்காது, -அது மட்டுமன்றி கறி மஞ்சளில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட குகுமின் (Curcumin) என்ற பதார்த்தம் எங்கள் உணவுக் கால்வாயில் இருந்து உறிஞ்சப் படுவதே மிகவும் குறைவு. இந்த நிலையில், ஏமாளிகளிடம் விற்று இலாபம் பார்க்க மட்டுமே கறி மஞ்சள் பயன்படும் என்பது தெளிவு. 

எனவே, அனந்தையாவின் அபூர்வ கோவிட் மூலிகைப் பாணியை யாராவது புலம் பெயர் உறவுகள் இறக்குமதி செய்யும் பிசினஸ் திட்டம் இருந்தால் திட்டத்தைக் கைவிடுங்கள். கோவிட்டிற்கு தற்போதைக்கு சிறந்த நிவாரணம் - தடுப்பு முறைகள் மட்டுமே: 

1. தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. முகக் கவசம், கைகழுவுதல் சமூக இடைவெளி பேண வேண்டிய இடங்களில் பேணுங்கள்.
3. ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கை முறை, உறக்கம் என்பன மூலம் நலம் பேணுங்கள்.

சமூக இடைவெளிக்கு ஆறடியென்றால், பாம்பெண்ணை வியாபாரிகள், விளம்பர தாரிகளிடம் பன்னிரன்டு அடிகள் தள்ளியே நில்லுங்கள்!

-ஜஸ்ரின்

தொடர்பு பட்ட செய்தி: https://timesofindia.indiatimes.com/city/vijayawada/take-decision-on-distribution-of-anandayyas-herbal-medicine-andhra-pradesh-high-court/articleshow/83025305.cms 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், ஜஸ்ரின்..!

தொடர்ந்தும் இப்படியான ஆய்வுகளை இணையுங்கள்..!

யாருக்குத் தெரியும்?

சில வேளைகளில், இப்படியான கட்டுரைகள் பல உயிர்கள் தேவையில்லாமல் பலி போவதைத் தடுக்கக் கூடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Justin said:

அற்புதமான கட்டுரை அண்ணா. மேலே புங்கை அண்ணா சொன்னது போல் ஒரு உயிர் இதை வாசித்து தப்பினாலும் நன்மைதான்.

இந்த பாம்பெண்ணை வைத்தியர் என்ற சொற்பதம் இப்போ அதன் literal meaning ஐ தாண்டி metaphor ஆகவும் பயன்படுத்த படுகிறது என நினைக்கிறேன்.

ஏனெனில் பொய்யான முதலீட்டு திட்டங்கள், இதர பணம் காய்ச்சி போலி திட்டங்களை காவித்திரிபவர்களையும் snake oil salesman என விளிப்பதை கண்டுளேன்.

ஆனால் இதுவரை இதை ஒரு சொல்லாடல் என்று மட்டுமே நினைத்தேன்.

இன்றைக்குத்தான் உண்மையிலேயே பெற்றோலியம் ஜெல்ஐ பாம்பெண்ணை என விற்றார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த பாம்பெண்ணை

ஊரிலை வெங்கிடாந்தி பாம்பு எண்ணை விக்குது தெரியுமோ? ஐ மீன் தைலம்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஊரிலை வெங்கிடாந்தி பாம்பு எண்ணை விக்குது தெரியுமோ? ஐ மீன் தைலம்😎

மலைப் பாம்பு எண்ணை, மயில் எண்ணை எண்டு விக்கிறார்கள் என்று தெரியும்!

வெங்கணாத்திப் பாம்பு மிகவும் மெல்லிசாக இருக்கும்! 

அதிலிருந்து கனக்க எண்ணை வராது என்று நினைக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

ஊரிலை வெங்கிடாந்தி பாம்பு எண்ணை விக்குது தெரியுமோ? ஐ மீன் தைலம்😎

தெரியாதண்ணை. நீங்கள் பாவிக்கிறனியள் எண்டு தெரியும் 😎😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புங்கையூரன் said:

மலைப் பாம்பு எண்ணை, மயில் எண்ணை எண்டு விக்கிறார்கள் என்று தெரியும்!

வெங்கணாத்திப் பாம்பு மிகவும் மெல்லிசாக இருக்கும்! 

அதிலிருந்து கனக்க எண்ணை வராது என்று நினைக்கின்றேன்!

வணக்கம் புங்கை அண்ணா,

இது வேற மேட்டர். விட்டுடுங்கோ 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

வணக்கம் புங்கை அண்ணா,

இது வேற மேட்டர். விட்டுடுங்கோ 🤣.

எங்கடை ஓர்கானிக் பாம்பெண்ணை விற்க ஏதும் சந்தை இருந்தா சொல்லுங்கோ 
சும்மா வருமானம் ஒன்றும் இல்லாமல் வீணாகுது 🤣

வெங்கணாந்தி பாப்பெண்ணையை பிறகு பார்ப்போம் 

Beware the snake-oil merchants of alternative medicine - your life could  depend on it

http://walyou.com/wp-content/uploads//2012/01/snake-wine.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

சமூக இடைவெளிக்கு ஆறடியென்றால், பாம்பெண்ணை வியாபாரிகள், விளம்பர தாரிகளிடம் பன்னிரன்டு அடிகள் தள்ளியே நில்லுங்கள்!

என்னதான் சொன்னாலும், கபசுர குடிநீர் தமிழ்க்கடைகளில் அமோகமாக விற்கப்படுகின்றது!

வைரஸுக்கு மருந்து இல்லை. தடுப்பூசிதான் இருக்கு என்று சொல்லியும் கேட்காதவர்கள் கொரோனா அம்மன் ஆட்கொள்ளும்போது நிச்சயம் புரிந்துகொள்வார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2021 at 18:13, புங்கையூரன் said:

வணக்கம், ஜஸ்ரின்..!

தொடர்ந்தும் இப்படியான ஆய்வுகளை இணையுங்கள்..!

யாருக்குத் தெரியும்?

சில வேளைகளில், இப்படியான கட்டுரைகள் பல உயிர்கள் தேவையில்லாமல் பலி போவதைத் தடுக்கக் கூடும்!

நன்றி, பொதுச்சுகாதாரம் ஆரோக்கியம் பற்றிய பதிவுகளில்  நான் 10% விதியை நம்புகிறேன். 10 பேர் வாசித்து ஒருவர் உள்வாங்கிக் கொண்டாலும் வெற்றியே.

On 1/6/2021 at 18:21, goshan_che said:

அற்புதமான கட்டுரை அண்ணா. மேலே புங்கை அண்ணா சொன்னது போல் ஒரு உயிர் இதை வாசித்து தப்பினாலும் நன்மைதான்.

இந்த பாம்பெண்ணை வைத்தியர் என்ற சொற்பதம் இப்போ அதன் literal meaning ஐ தாண்டி metaphor ஆகவும் பயன்படுத்த படுகிறது என நினைக்கிறேன்.

ஏனெனில் பொய்யான முதலீட்டு திட்டங்கள், இதர பணம் காய்ச்சி போலி திட்டங்களை காவித்திரிபவர்களையும் snake oil salesman என விளிப்பதை கண்டுளேன்.

ஆனால் இதுவரை இதை ஒரு சொல்லாடல் என்று மட்டுமே நினைத்தேன்.

இன்றைக்குத்தான் உண்மையிலேயே பெற்றோலியம் ஜெல்ஐ பாம்பெண்ணை என விற்றார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

உண்மை, இது மருந்து அல்லாத பயனற்ற பல ஏமாற்றுப் பொருட்கள் சேவைகளுக்கும் பயன்படுகிறது. ஆனால், சீனர்கள் ஒரு வகையான பாம்பில் இருந்து எடுத்த எண்ணையை மருத்துவ குணம் கொண்டது என்று பயன்படுத்தியதால் அமெரிக்காவிலும் இந்தப் பெயரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று விக்கிபீடியா சொல்கிறது. ஆனால், அமெரிக்காவில் பாம்பைப் பிடித்து எண்ணை எடுக்கும் தில்😂 இல்லாததால் கனிம எண்ணையை விற்றிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2021 at 02:47, கிருபன் said:

என்னதான் சொன்னாலும், கபசுர குடிநீர் தமிழ்க்கடைகளில் அமோகமாக விற்கப்படுகின்றது!

வைரஸுக்கு மருந்து இல்லை. தடுப்பூசிதான் இருக்கு என்று சொல்லியும் கேட்காதவர்கள் கொரோனா அம்மன் ஆட்கொள்ளும்போது நிச்சயம் புரிந்துகொள்வார்கள். 

சில மருத்துவர்கள் கபசுரக் குடிநீரையும் கொரனா தடுப்புப் போசணையில் சேர்த்து ஆலோசனை கொடுப்பதைக் கண்டிருக்கிறேன். எந்தத் தீங்கும் இல்லாத பொருட்கள் சேர்க்கப் படும் வரை எதையும் குடிக்கலாம் தானே என்ற எண்ணமென நினைக்கிறேன். ஆனால், குடி நீர் குடிக்கிறோம் என்று தடுப்பூசி எடுக்காமல் திரிவது ஆபத்து.

மூலிகைகளுக்குத் தட்டுப் பாடு வந்தால், கண்டதையும் பரியாரி மாற்றீடாகப் போட்டு அவித்தால் சுமேக்கு நடந்தது போல ஈரல் பாதிப்பு வரலாம். பொதுவாக மூலிகைப் பாணிகளுக்கு GMP தரக்கட்டுபாடுகள் பார்க்கப் படுவதில்லையென்பதால் இந்த ஆபத்து இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் மிகவும் தேவையான, சிறப்பான பதிவு. இதைவிட மாட்டு முத்திரம், மாட்டு சாணம், ராமதேவ் பாபா வின் Coronil என்று  வடஇந்தியா களைகட்டுது.
நாங்கள் பேராதனையில் இருந்த காலத்தில், கரடித்தைலம்  போட்டால் முடி வளரும் அல்லது கொட்டுவது நின்று விடும்  என்று யாரோ ஒருத்தன் புரளியை கிளம்பிவிட, பொலநறுவையில் இருந்து அதை எடுத்து கொண்டு வா என்று அங்கிருந்து வந்த ஒருவனுக்கு நிறைய பிரஷர் போனது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நீர்வேலியான் said:

நாங்கள் பேராதனையில் இருந்த காலத்தில், கரடித்தைலம்  போட்டால் முடி வளரும் அல்லது கொட்டுவது நின்று விடும்  என்று யாரோ ஒருத்தன் புரளியை கிளம்பிவிட, பொலநறுவையில் இருந்து அதை எடுத்து கொண்டு வா என்று அங்கிருந்து வந்த ஒருவனுக்கு நிறைய பிரஷர் போனது. 

கருணாசேனா ஜயலத்தின் சிங்கள நாவல் ஒன்று தம்பிஐயா தேவதாஸ் அவர்களால் “நெஞ்சில் ஒரு இரகசியம்” என வீரகேசரி பிரசுரமாக வந்தது. அந்த நாவல் என்ன கதை என்று மறந்தாலும் அதில் வந்த கரடித் தைலம் பாவித்தால் முடிவளரும் என்ற விசயம் மட்டும் நல்ல ஞாபகம் உள்ளது😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நீர்வேலியான் said:

இந்த நேரத்தில் மிகவும் தேவையான, சிறப்பான பதிவு. இதைவிட மாட்டு முத்திரம், மாட்டு சாணம், ராமதேவ் பாபா வின் Coronil என்று  வடஇந்தியா களைகட்டுது.
நாங்கள் பேராதனையில் இருந்த காலத்தில், கரடித்தைலம்  போட்டால் முடி வளரும் அல்லது கொட்டுவது நின்று விடும்  என்று யாரோ ஒருத்தன் புரளியை கிளம்பிவிட, பொலநறுவையில் இருந்து அதை எடுத்து கொண்டு வா என்று அங்கிருந்து வந்த ஒருவனுக்கு நிறைய பிரஷர் போனது. 

இதுதான் “கரடி விடுதல்” போலும்🤣.

மிக அழகான சூழல் பேரா பல்கலை. அங்கே படிக்கவில்லை என்ற ஏக்கம் இப்போதும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நீர்வேலியான் said:

ஆம், நீர்வேலியான். யாழிலேயே சில கட்டுரைகள் இணைக்கப் பட்டிருக்கின்றன (நிர்வாகத்தால் அகற்றப் பட்டிருக்கின்றன அனேகமானவை). ஆட்டு மூளை சாப்பிட்டால் மூளைக்கு நல்லது, ஆட்டு விதை சாப்பிட்டால் ஆண்மைக்கு நல்லது இப்படி.. நீளமாக உங்கள் உறுப்பைப் பலப் படுத்த அதே உறுப்பைச் சாப்பிட வேண்டுமென்று சொல்லும் போலி மருத்துவ கட்டுரைகள். இவற்றைத் தனித்தனியாக மறுப்பது நேர விரயம் - எனவே இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மக்களை விழிப்புணர்வூட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

இதுதான் “கரடி விடுதல்” போலும்🤣.

மிக அழகான சூழல் பேரா பல்கலை. அங்கே படிக்கவில்லை என்ற ஏக்கம் இப்போதும் உண்டு.

ஆம்  பேராதனையில் இருந்த காலங்கள் மறக்கமுடியாதவை, அப்பொழுது தமிழர்களும் நிறைய அங்கு படித்தார்கள்   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.