Jump to content

யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி

 
cinoman3.jpg
 46 Views

யாழ் மல்லாகம் ஐயனார் கோவிலடியில் வசிக்கும் அருணாசலம் விஜயகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டுத் தோட்டத்தில் 2012 இல் கறுவா மரங்களை நாட்டி தற்போது அறுவடை செய்திருக்கின்றார்.

cinoman2.jpg

ஓரளவு நிழலான பகுதியில் அதிகம் நீர் தேவைப்படாத பணப்பயிராக இது விளைகின்றதாக அவர் கூறுகின்றார். தென்னிலங்கையில் விளைகின்ற கறுவாப்பட்டைகளை விட யாழில் விளைந்த கறுவா அதிக காரம் ,உறைப்பு ,இனிப்பு கொண்டதாக இருப்பதாகவும் மேலும் அவர் குறிப்பிடுகின்றார்.

cinoman.jpg

யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் இவ் உற்பத்தியை சிறப்பாக மேற்கொள்ளலாம் என்பதை விஜயகிருஷ்ணன் அவர்கள் நிருபித்துள்ளார். பலரும் அவரது முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 

https://www.ilakku.org/?p=51201

 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எல்லாமே கொஞ்சம் உறைப்புத் தான் உடையார்!

மாம்பழம், கருவாடு, மீன்,நண்டு, கணவாய், முருங்கை,நல்லெண்ணை, பனங்காய், கள்ளு , கருவேப்பிலை என்று ஒரு தொடரே எழுதலாம்!

அது தான் அந்த மண்ணின் மகிமை...!
அந்தக் கடலின் பெருமை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, புங்கையூரன் said:

யாழில் எல்லாமே கொஞ்சம் உறைப்புத் தான் உடையார்!

மாம்பழம், கருவாடு, மீன்,நண்டு, கணவாய், முருங்கை,நல்லெண்ணை, பனங்காய், கள்ளு , கருவேப்பிலை என்று ஒரு தொடரே எழுதலாம்!

அது தான் அந்த மண்ணின் மகிமை...!
அந்தக் கடலின் பெருமை...!

புங்கையூரான், செத்தல் மிளகாயை.... மறந்து போனீங்கள்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

புங்கையூரான், செத்தல் மிளகாயை.... மறந்து போனீங்கள்.  :)

அது குமாரசாமி அண்ணையின்ர டிப்பார்ட்மென்ற்..!

அவர் வந்து விளக்குவார்..!🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

யாழில் எல்லாமே கொஞ்சம் உறைப்புத் தான் உடையார்!

மாம்பழம், கருவாடு, மீன்,நண்டு, கணவாய், முருங்கை,நல்லெண்ணை, பனங்காய், கள்ளு , கருவேப்பிலை என்று ஒரு தொடரே எழுதலாம்!

அது தான் அந்த மண்ணின் மகிமை...!
அந்தக் கடலின் பெருமை...!

மங்கை அதையும் மறந்திட்டீங்கள்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரா என பாருங்கள்..!

எல்லாம் சரி இந்த கறுவா..(????) கறுவா..? அதுதான் என்னவென்றே புரியவில்லை..!

பிரியாணிக்கு போடும் பட்டை மாதிரி இருக்கிறது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ராசவன்னியன் said:

எல்லாம் சரி இந்த கறுவா..(????) கறுவா..? அதுதான் என்னவென்றே புரியவில்லை..!

பிரியாணிக்கு போடும் பட்டை மாதிரி இருக்கிறது.

அதேதான்... ராஜவன்னியன். 
தமிழ்நாட்டில்... பட்டை  என்று சொல்வார்கள். 
இலங்கையில்... அது கறுவா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ராசவன்னியன் said:

இவரா என பாருங்கள்..!

எல்லாம் சரி இந்த கறுவா..(????) கறுவா..? அதுதான் என்னவென்றே புரியவில்லை..!

பிரியாணிக்கு போடும் பட்டை மாதிரி இருக்கிறது.

 

 

 

5 minutes ago, தமிழ் சிறி said:

அதேதான்... ராஜவன்னியன். 
தமிழ்நாட்டில்... பட்டை  என்று சொல்வார்கள். 
இலங்கையில்... அது கறுவா. :)

கறுவாப்பட்டை என்றும் சொல்லுவினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.