Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழ்வியலை வெளிப்படுத்தும் """"ஏரோபிளேன் ஈழத்து குறும்படம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏரோபிளேன்: மலையக மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் உயிரோட்டமான ஈழத்து குறும்படம்.

மலையக மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படதை, தமது வேலை நேரத்தில் இறந்து போன பல தேயிலைத் தோட்ட தொழிலாள தாய்மார்களுக்கு இப்படத்தினை சமர்ப்பணம் செய்வதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேவி, நிரஞ்சன், ஷான் சதீஸ், கிருஷாந்தி, திலீபா, கல்யாணி ஆகியோர் நடித்திருக்கும் இக்குறும்படம் வாழ்க்கைப் போராட்டத்திற்கும் கனவுகளுக்கும் நடுவே ஊசலாடும் மலையக மக்களின் பிரச்சினையின் ஒரு பகுதியை சொல்லிப்போகின்றது.

அட்டைக்கடி, சிறுத்தைகள் சஞ்சாரம், குளவித் தாக்குதல் இவற்றின் மத்தியில் தேயிலைக் கொழுந்து கொய்யும் மலையகத் தாய்மாரின் இடர்களை படம்பிடித்துக் காட்டுகின்றது. படத்தில் மலையக மக்களின் லய வாழ்வியலை அப்படியே பிரதிபலித்திருக்கின்றது. சின்னச்சின்ன விசயங்களையும் கவனித்து பதிவேற்றியிருக்கின்றார் இயக்குனர்.

குறும்படத்தில் நேரடியாக கள ஒலிப்பதிவை பாவித்தமை சிறப்பு. அதிலும் குறிப்பாக அவர்கள் பேசும் மொழியை அப்படியே பதிவு செய்தமை அதிசிறப்பு.

ஒளிப்பதிவு கச்சிதம். மலையகத்தின் அழகை கழுகு பார்வையில் காட்டியதும் சிறப்பு ஏழ்மையின் மறுபக்கத்தை பதிவு செய்த விதமும் சிறப்பு. படத்தொகுப்பும் கிராபிக்ஸ் காட்சிகளும் கை கொடுத்திருக்கின்றது. அந்த வகையில் பிரசாத் பாராட்டுக்குரியவர்.

‘கனவு காண்பதற்கு அல்ல, சாதிப்பதற்கு’ என்பதை அடிக்கோடிட்டுச் செல்லும் இக்குறும்படம் மலையக மக்கள் சார்ந்த வாழ்வியல் சினிமாவின் முக்கிய பதிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

https://www.youtube.com/watch?v=nQqPGInFBvU

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.