Jump to content

மறக்க முடியாத... இலங்கை, இனிப்புகள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DeltaToffee - YouTube

நாம்... சிறு வயதாக,  இருக்கும் போது... பெற்றோரிடம் இருந்து எமக்கு,  
"பொக்கற் மணியாக"  கிடைக்கும்,  சில்லறை காசில்...
எமக்கு... விரும்பிய, இனிப்புகளை,  🍬 🍫 🍭
உடனே.. ஓடிப் போய், அருகில் உள்ள கடைகளில் வாங்கி... 🥰

அதனை... அன்று முழுவதும், சாப்பிடாமல்...
அதன் வாசனையை, அது சுற்றிய... ஈயக்  கடுதாசியை, ரசித்தது மட்டுமல்லாமல்...
அந்தக் கடுதாசியை, சேர்த்து வைத்தும்.. நண்பர்களுக்கு காட்டி,
பெருமைப் படும் வயது... ஒன்று, இருந்தது. 

அந்த நினைவுகளை.. மீண்டும், இரை மீட்டும் பதிவு இது.  

எத்தனையோ... வருடங்கள், கடந்தாலும்...
இன்றும்.. அந்த இனிப்பு வகைகளை, கேள்விப்  படும் போது...
அந்த வாசனையும், சுவையும்... மறக்காமல் நினைவில் உள்ளது ஆச்சரியமாக உள்ளது.  ♥️

நீங்கள், ரசித்த இனிப்புகள்... எவை என்றும்,
ஏன்... அதனை  விரும்பினீர்கள் என்றும்.. சொல்லுங்களேன். 

அந்த இனிப்புக்களின்... படங்கள் இருந்தால், மறக்காமல்... இணைத்து விடுங்கள்.  :)

Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to மறக்க முடியாத... இலங்கை, இனிப்புகள்.
  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Can you explain your childhood memory of Javvu Mittai/Bombay Mittai? - Quora

கை மணிக்கூடு எல்லாம் கனவில கூட வராத காலங்களில் வந்த ஏக்கத்தைத் தீர்த்தது ஜவ்வு மிட்டாய்தான்.....!  😇 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தர்மடம் சந்தி, மலையக கச்சான் கடைக்காரர், அதிலை ஒரு சோளம் போடாமல் ஒரு பாக்கெட் வாங்கி சாப்பிடாவிடில் அன்று நாளே ஓடாது. 

வைகறை மேகங்கள்...!: 09/02/16

நல்லூர் கச்சான் கடை

தலைகுளி என்று சிங்கள ஊரிலை இருந்து ஒரு எள்ளு + சக்கரை சேர்த்த ஒரு வெள்ளை திசு பேப்பரில், கரையில் இருபக்கமும், குஞ்சம் வைத்து வரும் ஒரு அருமையான தின்பண்டம்.... சொல்லி வேலை இல்லை.
 
*****

நல்லூர் கச்சான் கடை என்று தேடினால், இந்த படமும் வருகிறதே...  :grin:

என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன் - கதை கதையாம் - கருத்துக்களம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

Can you explain your childhood memory of Javvu Mittai/Bombay Mittai? - Quora

கை மணிக்கூடு எல்லாம் கனவில கூட வராத காலங்களில் வந்த ஏக்கத்தைத் தீர்த்தது ஜவ்வு மிட்டாய்தான்.....!  😇 

சுவியர்... இப்போ எல்லாம், ஒரு பிற மனிதர்..
எமது, கையை... தொட்டு, மணிக்கூடு கட்ட...
நாம், சம்மதிப்போமா... 

"கொரோனா"...  எவ்வளவு, பெரிய ... தலை முறை மாற்றங்களை,  
கொண்டு வந்துள்ளமை  கவலைக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதிகம் சாபிட்ட ரொபி புளூட்டோ. வெள்ளை ரிசு பேப்பரில் சுத்தப்பட்ட மண்ணிறமான கிட்டத்தட்ட ஒரு இஞ்சி நீளமான இனிப்பு. ஒன்று ஐம்பது சதம். கடைகளை பொறுத்து தரம், நிறம்- மென்னிறம், கருநிறம், சுவை எல்லாம் வேறுபடும். இரண்டு ரூபாய்க்கு நாலு புளூட்டோ ரொபி வாங்கினால் ஒரு நாளைக்கு போதும். வாயில் ஒன்றை போட்டு அரை மணித்தியாலம்கூட மினக்கடலாம். ரியூசன் போகும் போதும், வரும்போதும் புளூட்டோ வாங்குவது வழமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

கந்தர்மடம் சந்தி, மலையக கச்சான் கடைக்காரர், அதிலை ஒரு சோளம் போடாமல் ஒரு பாக்கெட் வாங்கி சாப்பிடாவிடில் அன்று நாளே ஓடாது. 

வைகறை மேகங்கள்...!: 09/02/16

நல்லூர் கச்சான் கடை

நல்லூர் கச்சான் கடை என்று தேடினால், இந்த படமும் வருகிறதே...  :grin:

என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன் - கதை கதையாம் - கருத்துக்களம்

என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன் - கதை கதையாம் - கருத்துக்களம்

இவர், யார்...   நாதமுனி    :)
இவரை,  எங்கேயோ... கண்ட  மாதிரி கிடக்குது. 🙃 :grin:

டிஸ்கி:  நிழலி,  கோவிக்காதேங்கோ. சும்மா.. பகிடிக்கு, உங்களை.. கோத்து  விட்டிருக்கிறம்.  🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன் - கதை கதையாம் - கருத்துக்களம்

யார்... இவர், நாதமுனி?  :)
இவரை,  எங்கேயோ... கண்ட  மாதிரி கிடக்குது. 🙃

டிஸ்கி: நிழலி,  கோவிக்காதேங்கோ. சும்மா.. பகிடிக்கு, உங்களை.. கோத்து  விட்டிருக்கிறம்.  🤣

காரணம் இதுதான்..

நாங்கள் எல்லாம் 'பக்தியோடை' கும்பிட போனால், இவர் 'பரவசத்தோடை' வேற எதுக்கோ போயிருக்கிறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நான் அதிகம் சாபிட்ட ரொபி புளூட்டோ. வெள்ளை ரிசு பேப்பரில் சுத்தப்பட்ட மண்ணிறமான கிட்டத்தட்ட ஒரு இஞ்சி நீளமான இனிப்பு. ஒன்று ஐம்பது சதம். கடைகளை பொறுத்து தரம், நிறம்- மென்னிறம், கருநிறம், சுவை எல்லாம் வேறுபடும். இரண்டு ரூபாய்க்கு நாலு புளூட்டோ ரொபி வாங்கினால் ஒரு நாளைக்கு போதும். வாயில் ஒன்றை போட்டு அரை மணித்தியாலம்கூட மினக்கடலாம். ரியூசன் போகும் போதும், வரும்போதும் புளூட்டோ வாங்குவது வழமை.

புளூட்டோ ரொபியை .... நான் வாங்கி சாப்பிட்ட காலங்களில், பத்து சதம்.
அதன் லேபிளில்... "குணசேன" என்று சிங்களப்  பெயர்,  இருந்த நினைவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

பள்ளிப் பருவத்தில் வாங்கி உண்ட பண்டங்களைப் பற்றிக் கூறுக? - Quora

பல்லி மிட்டாய்

உடையார்... நீங்கள், நம்ப மாட்டீர்கள்...
பல வருடங்களின் பின்,  நான்... இலங்கைக்கு போன  காலத்தில்,
"கார்கிள்ஸ்" கடையில்...  பல்லி முட்டாயும், புளூட்டோ  ரொஃபியும்  வாங்கி வந்தேன்.

ஆனாலும்.... அந்த, வயதில்.... கிடைத்த இன்பம், இப்ப கிடைக்கவில்லை  என்றாலும்,
மனதிற்கு... ஒரு திருப்தி,  இருந்த மாதிரி... ஒரு உணர்வு இருந்தது உண்மை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரம்,  சிங்களத்தில் இருந்தாலும்... 
நீங்கள், ரசிப்பீர்கள்... என நினைக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எனது அபிமான இனிப்புகள் பல ஏலவே அலச பட்டு விட்டன. மேலும் சில.

மோல்டோவா - கரும் ப்ரெளண் நிறத்தில் சுற்றி வரும். 80 களின் இறுதியில் கூட 50 சதம். கொஞ்ச காலம் இது வரவில்லை பின்னர் இளம் ப்ரெளண் நிறத்தில் வந்தது சொக்கோமோல்ட் என்ற பெயருடன்.

மோல்டோவா இனி வராது என கடைக்காரர் சொன்னதும் வந்த சோகம் அதன் பின் வந்த காதல் தோல்விகளில் கூட வந்ததில்லை 🤣.

வல்வெட்டி துறை எள்ளுருண்டை -பொதுவாக இலங்கை எங்கும் ரொம்ப மெலிதாக மாபிள் சைசில் இருக்கும் கறுப்பு எள்ளுருண்டைகளே கிடைக்கும். ஆனால் வல்வெட்டிதுறைபக்கம் முழு நெல்லி சைசில் வெள்ளை நிற எள்ளுருண்டை கிடைக்கும். அற்புதமான சுவை. அதி ஆரோகியமான இனிப்பும்.

இது வேறு இடங்களில் கிடைக்குமா தெரியவில்லை. ஆனால் இலங்கையின் ஏனைய இடங்களில் கடைகளில் நான் கண்டதில்லை.

ஜுஸ் பக்கெட்- 1989 யூஸ் பக்கெட் யாழுக்கு அறிமுகமான ஆண்டு என நினைக்கிறேன். பொலிதின் பைகளை மெழுகுதிரியில் பிடித்து சின்ன குழாய் போல செய்து அதில் ஜூசையோ, சோடாவையோ ஊற்றி. குளிரூட்டியில் போட்டால் - ஜூஸ் பக்கெட் ரெடி. பல சைசில் பல விலையில் கிடைக்கும். குறைந்த விலை அப்போ 30 சதம் என நினைவு. இன்றும் வாங்கலாம். யாழுக்கு வெளியே கண்டதில்லை.

காசு பபுள்கம் - வெள்ளிகாசுகள் போல தாள்கள் உள்ளே வெள்ளை அல்லது ரோஸ் நிறத்தில் பபுள்கம் இருக்கும்.

நைஸ் - அப்பம் சைசில், பல முட்டாஸ் கலரில் -தொட்டால் உடையும் பதத்தில் கிடைக்கும். வாயில் போட்டது கரையும்.

கொச்சி/ஜெம் பிஸ்கேட் - சின்ன சின்ன வட்ட பிஸ்கேட்டுகள், அதன் மேல் ஒரு துளி போல ஐசிங் சுகரால் ஒரு இனிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பி மிட்டாய் - வீதியால் வரும் அல்லது திருவிழாவில் இருக்கும் கடைக்காரர் சுத்தி தருவார். ஒட்டி இழுக்கும் தும்பு போல இருக்கும். வெளிநாட்டில் கடற்கரைகளில் அல்லது கேளிக்கை விழாக்களில் கிடைக்கும்.

தோடம்பழ இனிப்பு - தோடம்பழத்தின் சுளை போல அதே நிறத்தில் இருக்கும். மேலே மா தூவி இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளுகோ ரச அல்லது ஜுஜூப்ஸ் - பல்வேறு வடிவங்களில் கடித்தால் இறைச்சி துண்டு பதத்தில் இருக்கும் ஜெலி. மேலே சீனி தூவி இருக்கும். பல நிறங்களில் பக்கெட்டுகளில் இருக்கும்:

தேங்காய் பூ இனிப்பு coconut rock - ரோஸ், பச்சை கலரில் கிடைக்கும். தேங்காய்பூவும் டின்பாலும் சேர்த்து செய்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இங்கே எனது அபிமான இனிப்புகள் பல ஏலவே அலச பட்டு விட்டன. மேலும் சில.

------

நைஸ் - அப்பம் சைசில், பல முட்டாஸ் கலரில் -தொட்டால் உடையும் பதத்தில் கிடைக்கும். வாயில் போட்டது கரையும்.

Münze 25 Cent Sri Lanka Kupfer/Nickel 1975 Preis

கோசான்... இந்த நைஸ் அப்பளத்தை,  நானும் சாப்பிட்டிருக்கின்றேன்.
பள்ளிக்கூட வாசலில்,  "தும்பு முட்டாஸ்"  விற்பவர், 
ஒரு, கண்ணாடி பெட்டியில் வைத்து  விற்பார்.
அதனை...  ஒரு கையால், தூக்கிக் கொண்டு போகக்  கூடிய சிறிய பெட்டி.

அந்தப் பெட்டியின், மேல் பகுதியில்...  "தும்பு முட்டாசும்",
கீழ் பகுதியில்... நீங்கள் சொன்ன, "நைஸ்" என்ற அப்பளமும் வைத்திருப்பார்கள்.

அந்தக் காலத்தில்.... அப்பம்மா, தருகின்ற 25 சதக் குத்தியில்...
பள்ளிக்கூடம்  போன காலத்திலேயே.. பல, பொருட்களை சுவைத்துப் பார்த்திருக்கின்றேன்.

ஐ, மிஸ்...  மை  அப்பம்மா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒவ்வொருவாரினதும் ரொபி அனுபவங்கள் சுவையாக உள்ளது.

சிறி அண்ணாவும் நீங்களும் இலங்கை ரொபி வல்லுணர்கள் போல் தெரிகிறது.

49 minutes ago, goshan_che said:

தும்பி மிட்டாய் - வீதியால் வரும் அல்லது திருவிழாவில் இருக்கும் கடைக்காரர் சுத்தி தருவார். ஒட்டி இழுக்கும் தும்பு போல இருக்கும். வெளிநாட்டில் கடற்கரைகளில் அல்லது கேளிக்கை விழாக்களில் கிடைக்கும்.

அது வெளிநாட்டில் விழாக்களில் கிடைக்கிறது நான் சாப்பிடுகிறனான்.  தும்பும் பஞ்சும் போன்று இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இங்கே ஒவ்வொருவாரினதும் ரொபி அனுபவங்கள் சுவையாக உள்ளது.

சிறி அண்ணாவும் நீங்களும் இலங்கை ரொபி வல்லுணர்கள் போல் தெரிகிறது.

அது வெளிநாட்டில் விழாக்களில் கிடைக்கிறது நான் சாப்பிடுகிறனான்.  தும்பும் பஞ்சும் போன்று இருக்கும்.

🤣.உண்மைதான். மிராசுதாரர் போல நாங்கள் மிட்டாசுதாரர்🤣.

வாலியும் நிறையவற்றை திண்ணையில் நினைவு கூர்ந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தும்பி மிட்டாய் - வீதியால் வரும் அல்லது திருவிழாவில் இருக்கும் கடைக்காரர் சுத்தி தருவார். ஒட்டி இழுக்கும் தும்பு போல இருக்கும். வெளிநாட்டில் கடற்கரைகளில் அல்லது கேளிக்கை விழாக்களில் கிடைக்கும்.

தோடம்பழ இனிப்பு - தோடம்பழத்தின் சுளை போல அதே நிறத்தில் இருக்கும். மேலே மா தூவி இருப்பார்கள். 

http://1.bp.blogspot.com/-HVPl0W4yVKc/UGb9gChG42I/AAAAAAAABCE/9vkXMftyPO4/s1600/NellaiEruvadi_Article_1169_1_2012321-41.jpg

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dc9JeDztsFVM&psig=AOvVaw02joJqAF4CpSzFUd9Iz4XQ&ust=1622765518888000&source=images&cd=vfe&ved=0CAIQjRxqFwoTCJCWw_iW-vACFQAAAAAdAAAAABAL

1 hour ago, தமிழ் சிறி said:

Münze 25 Cent Sri Lanka Kupfer/Nickel 1975 Preis

கோசான்... இந்த நைஸ் அப்பளத்தை,  நானும் சாப்பிட்டிருக்கின்றேன்.
பள்ளிக்கூட வாசலில்,  "தும்பு முட்டாஸ்"  விற்பவர், 
ஒரு, கண்ணாடி பெட்டியில் வைத்து  விற்பார்.
அதனை...  ஒரு கையால், தூக்கிக் கொண்டு போகக்  கூடிய சிறிய பெட்டி.

அந்தப் பெட்டியின், மேல் பகுதியில்...  "தும்பு முட்டாசும்",
கீழ் பகுதியில்... நீங்கள் சொன்ன, "நைஸ்" என்ற அப்பளமும் வைத்திருப்பார்கள்.

அந்தக் காலத்தில்.... அப்பம்மா, தருகின்ற 25 சதக் குத்தியில்...
பள்ளிக்கூடம்  போன காலத்திலேயே.. பல, பொருட்களை சுவைத்துப் பார்த்திருக்கின்றேன்.

ஐ, மிஸ்...  மை  அப்பம்மா. 

http://3.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/Sr49dFiSGTI/AAAAAAAAGtg/qDEMCnp5WmQ/s1600/thumbu.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vaasi said:

http://3.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/Sr49dFiSGTI/AAAAAAAAGtg/qDEMCnp5WmQ/s1600/thumbu.jpg

வாசி. இதுதான்... தும்பு முட்டாஸ், விற்கும் பெட்டியின் படம்.
உடனே... அந்தப் படத்தை, எடுத்துத் தந்தமைக்கு... நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

1990 - 1995 காலப்பகுதிகளில் நாங்கள் இடம்பெயர்ந்து நீர்வேலில இருந்தம். நீர்வேலில தேன்துளி எண்டு ஒரு இனிப்பு தயாரிக்கும் இடம் இருந்தது. பாடசாலை போகும்போதும் வரும்போதும் அந்த தேன்துளி அமைந்துள்ள பாதையாலைதான் போய் வருவம் (சைக்கிள் எல்லாம் இல்லை. நடராசாதான்). பாடசாலை விட்டுவரும்போது ஒரு 50 சதத்துக்கு தேன்துளியில் இனிப்பு தூள் / துகள் (இனிப்புகள் செய்யும்போது உடைந்து வரும் குறுணி துண்டுகள் - இதுக்கை அவர்கள் தயாரிக்கும் எல்லாவகையானா இனிப்புகளின் துகள்களும் கலந்திருக்கும் - ஒரு பேப்பரில் கோன் போல சுருட்டி அதுக்கை நிறைய போட்டு தருவார்கள்) வாங்கினானால் அண்டு முழுவது சாப்பிடாலும் முடியாது. 

அன்றைய நிதி நிலைமை காரணமாக ஒவ்வொருநாளும் வாங்க கிடைக்காது. எப்படியும் கிழமைக்கு  ஒருக்கா அல்லது 2 தரம் அம்மாவை இணாப்பி 50 சதம் வாங்கிப்போடுவன். 

அந்த 50 சதம் கிடைத்து, அதைக்கொண்டு தேன்துளில இனிப்பு தூள் வாங்கிக் தின்னும்போது கிடைத்த சந்தோசம், திருப்தி , இப்ப இங்க தேவையான அளவு உழைத்து விருப்பம்போல செலவு செய்தாலும் கிடைக்குதிலை.
அம்மா அப்பாவின் நிழலில் வாழ்ந்தகாலங்கள்..... நினைத்தாலே கண்கள் கலங்குது ..... மறுபடியும் அந்த பாக்கியம் கிட்டாது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொரிவிளங்காய் ,இது முன்பே இங்கு பதிவிடப்படட ஒன்றுதான்,,

(ஞாபகம் வருதா ?????)என்ற பதிவின் கீழ்

இருந்தாலும் சிறு வயதில் இதை சாப்பிட்ட்தும் வாய் நல்ல சிவப்பா வரும் ,அதனாலோ என்னவோ பல்லை காட்டிக்கொண்டு திரியுறது,
வாங்கிறதுக்கு காசு வேணும் கிடைச்சா முதலில் பொரிவிளங்காயோடு தான் வாராது,
சிலநேரம்களில் அதி சாப்பிடணும் என்கிறதுக்காக எங்கயும் கோடடைப்பெட்டியில் காய் வைக்கத்தோணும்
இதுக்கு வேறு பேர் உண்டோ தெரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் எனக்குத் தெரிஞ்ச எல்லா இனிப்புக்களையும் எழுதிப் போட்டினம்!

கடைசியா ஒண்டை மட்டும் எனக்காக விட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது!

அது தான் பாம்பு இனிப்பு!

யாருக்காவது நினைவிருக்குதோ? 

ஒரு உலக்கையில ஒட்டியிருக்கும்! அதை இழுத்து...இழுத்துத் ( விலைக்கேற்ப) தருவார்கள்!
அனேகமாகத் திருவிழாக்காலங்களில், எமது ஊருக்கு இதுவும் வரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, புங்கையூரன் said:

எல்லாரும் எனக்குத் தெரிஞ்ச எல்லா இனிப்புக்களையும் எழுதிப் போட்டினம்!

கடைசியா ஒண்டை மட்டும் எனக்காக விட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது!

அது தான் பாம்பு இனிப்பு!

யாருக்காவது நினைவிருக்குதோ? 

ஒரு உலக்கையில ஒட்டியிருக்கும்! அதை இழுத்து...இழுத்துத் ( விலைக்கேற்ப) தருவார்கள்!
அனேகமாகத் திருவிழாக்காலங்களில், எமது ஊருக்கு இதுவும் வரும்!

ஜவ்வு மிட்டாய்

எனக்கு தெரிஞ்சு ஈழத்தில் ஜவ்வு மிட்டாய்
அப்பிடின்னு சொன்ன மாதிரி தெரியலை இதுக்கு வேறு பெயர் சொன்ன மாதிரி இருக்கு ,நம்ம மன்மதன் கு சாமி அல்லங்காட்டி😜 தமிழ் சிறி சொல்லுவாங்க...

javvu.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.