Jump to content

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்!


Recommended Posts

சில நாட்களிற்கு முன் ஐரோப்பாவில் உள்ள பிரபல தமிழ் ஊடகம் ஒன்றில் உரையாடிய ஒருவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் போதைப் பொருட்களிற்கு அடிமையாய் வாழ்ந்ததாகக் கூறியிருந்தார்.

இதைப்பற்றி நான் இன்னுமொருவருடன் உரையாடியபோது அவர் இன்னும் கொஞ்சம் மேல போய், "எங்கிருந்தோ வந்தான் இடைக்காடு நான் எனறான்.." என்ற பாரதியாரின் அழகிய பாடலிற்கு புதியவிளக்கம் தந்தார். அதாவது பாரதியார் கஞ்சாவுக்கு அடிமையாக இருந்ததாகவும், அப்போது கஞ்சா அவருக்கு கிடைக்காத நேரத்தில் (பற்றாக்குறையாக இருந்த நேரத்தில்)எங்கிருந்தோ வந்த பையன் ஒருவன் அவரிடம் சிறிதளவு கஞ்சாவை அன்பளிப்பாக கொடுத்ததாகவும், இதனால் மிகவும் சந்தோசமடைந்த கவிஞர் மேற்கூறிய "எங்கிருந்தோ வந்தான், இடைக்காடு நான் என்றான்.." என்ற பாடலை எழுதியதாகவும் சொன்னார். இதைவிட, பாரதியார் தனது சொந்த ஊரிலேயே 13 வருடங்கள் அகதியாக வாழ்ந்ததாகவும் சொன்னார்.

நான் இந்த தலைப்பை இணைத்ததன் நோக்கம், மகாகவியைப் பற்றிய இப்படி ஒரு செய்தியை நான் இதுவரை கேள்விப்படவில்லை. மகாகவியின் கவிதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா தொடக்கம், ஒளிபடைத்த கண்ணிணாய் வா வா வா, தீராத விளையாட்டுப் பிள்ளை, காக்கைச் சிறகினிலே நந்தலாலா... " என ஏராளம் பாடல்கள் எனது உணர்வுகளினுள் ஊறிவிட்டவை. உயிருடன் கலந்துவிட்டவை என்று கூட சொல்லலாம். நான் பாரதியாரின் பாடல்களை வாய்ப்பாடு, வீணை, புல்லாங்குழல், நாதஸ்வரம், வயலின் என அனைத்து ரூபங்களிலும் வெவ்வேறு சுவைகளுடன் கேட்டு மகிழ்ந்துள்ளேன். சில வேளைகளில் தூக்கத்தால் எழுந்ததும் பாரதியாரின் பாடல்களை நாதஸ்வரத்தில் கேட்டுக்கொண்டே எனது நாளாந்த அலுவல்களை ஆரம்பிப்பேன். அதாவது பாரதியாரின் பாடல்கள் என்பது எனக்கு உடலில் உள்ள ஒரு முக்கிய நரம்பிற்கு ஒப்பானது என்று சொல்லலாம். வாழ்க்கையில் பலதடவைகள் நான் சோர்ந்து விழுந்தபோது, பாரதியாரின் பாடல்களே என்னை திரும்பவும் தூக்கிவிட்டன.

ஆனால், இப்படி ஒரு செய்தியை ஊடகம் ஒன்றில் முதன் முதலாக கேட்டது, எனது மனதில் வித்தியாசமான எண்ணங்களையும், உணர்வுகளையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனது முதலாவது கேள்வி, ஒரு மகாகவி இறந்த பின்னர் இப்படி ஊடகங்களில் அவரைப்பற்றி கண்மூடித்தனமாக கதைப்பது சரியானதா? (பாரதி போதைக்கு அடிமையாக இருந்தாரா அல்லது இல்லையா என்பது அடுத்த பிரச்சனை)

எனது இரண்டாவது கேள்வி, போதைக்கு அடிமையாக இருந்தமையால்தான் பாரதியால் இவ்வாறான எமது உயிரைப் பிழிந்து எடுக்கும், எமது உணர்வுகளுடன் இரண்டறக் கலக்கும் பாடல்களை எழுதக்கூடியதாய் இருந்தது என்ற தப்பான சிந்தனை இப்படியான செய்திகளின் காரணத்தால் பிறக்காதா? (கண்ணதாசன் பாடல்கள் எழுதியதற்கும் இதேபோல வேறு சில காரணங்கள் கூறுவார்கள்)

மூன்றாவது கேள்வி, சரி, இச்செய்தி உண்மையாக இருந்தால், இப்படி ஒர் செய்தியை நீங்கள் அறிந்தபின் இவ்வாறு ஒரு கலைஞன் படைக்கும் கலைப்படைப்புக்களை உள்வாங்கிக் கொள்வதில் உங்களுக்கு ஏதாவது உளவியல் சிக்கல்கள் வருவதில்லையா? அதாவது, "அட இவனே ஒரு Drug Addict! இவன் சொல்வதை கேட்டு எப்படி நம்மட வாழ்வில் முன்னேற முடியும்?" போன்ற சிந்தனைகள்....

நான்காவது கேள்வி, உங்களுக்கு ஏற்கனவே "மகாகவி சுப்பிரமணிய பாரதியார் போதைக்கு அடிமையாக இருந்தார்!" என்ற இப்படியான செய்திகள் தெரிந்திருந்தால் நீங்கள் இது பற்றி என்ன கூறிக்கொள்ள விரும்புகின்றீர்கள்?

ஐந்தாவது கேள்வி, உங்களுக்கு என்னைப்போல் இந்த செய்தி புதிய ஒரு செய்தியாக இருந்தால், உங்கள் இப்போதைய மனநிலை என்ன? இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

உங்கள் எண்ணங்களை இங்கு பரிமாறிக்கொள்ளவும். நன்றி!

Link to comment
Share on other sites

  • Replies 126
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர்கள் வழமையாகப் போதைக்கு (மது, மாது, போதைப் பொருள்) அடிமையாவது உண்டு. இல்லாவிடில் கற்பனை உலகில் சஞ்சாரித்துக் காவியங்களைப் படிப்பது கடினமான விடயமாக இருக்கக் கூடும்.. மேற்கத்தையக் கலைஞர்கள் பலர் போதைப்பொருள் பாவித்துப் பிடிபடுவது செய்திகளில் வருவதுதானே..

Link to comment
Share on other sites

நான் இந்த தலைப்பை இணைத்ததன் நோக்கம், மகாகவியைப் பற்றிய இப்படி ஒரு செய்தியை நான் இதுவரை கேள்விப்படவில்லை. மகாகவியின் கவிதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா தொடக்கம், ஒளிபடைத்த கண்ணிணாய் வா வா வா, தீராத விளையாட்டுப் பிள்ளை, காக்கைச் சிறகினிலே நந்தலாலா... " என ஏராளம் பாடல்கள் எனது உணர்வுகளினுள் ஊறிவிட்டவை. உயிருடன் கலந்துவிட்டவை என்று கூட சொல்லலாம். நான் பாரதியாரின் பாடல்களை வாய்ப்பாடு, வீணை, புல்லாங்குழல், நாதஸ்வரம், வயலின் என அனைத்து ரூபங்களிலும் வெவ்வேறு சுவைகளுடன் கேட்டு மகிழ்ந்துள்ளேன். சில வேளைகளில் தூக்கத்தால் எழுந்ததும் பாரதியாரின் பாடல்களை நாதஸ்வரத்தில் கேட்டுக்கொண்டே எனது நாளாந்த அலுவல்களை ஆரம்பிப்பேன். அதாவது பாரதியாரின் பாடல்கள் என்பது எனக்கு உடலில் உள்ள ஒரு முக்கிய நரம்பிற்கு ஒப்பானது என்று சொல்லலாம். வாழ்க்கையில் பலதடவைகள் நான் சோர்ந்து விழுந்தபோது, பாரதியாரின் பாடல்களே என்னை திரும்பவும் தூக்கிவிட்டன.ஆனால், இப்படி ஒரு செய்தியை ஊடகம் ஒன்றில் முதன் முதலாக கேட்டது, எனது மனதில் வித்தியாசமான எண்ணங்களையும், உணர்வுகளையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.எனது முதலாவது கேள்வி, ஒரு மகாகவி இறந்த பின்னர் இப்படி ஊடகங்களில் அவரைப்பற்றி கண்மூடித்தனமாக கதைப்பது சரியானதா? (பாரதி போதைக்கு அடிமையாக இருந்தாரா அல்லது இல்லையா என்பது அடுத்த பிரச்சனை)எனது இரண்டாவது கேள்வி, போதைக்கு அடிமையாக இருந்தமையால்தான் பாரதியால் இவ்வாறான எமது உயிரைப் பிழிந்து எடுக்கும், எமது உணர்வுகளுடன் இரண்டறக் கலக்கும் பாடல்களை எழுதக்கூடியதாய் இருந்தது என்ற தப்பான சிந்தனை இப்படியான செய்திகளின் காரணத்தால் பிறக்காதா? (கண்ணதாசன் பாடல்கள் எழுதியதற்கும் இதேபோல வேறு சில காரணங்கள் கூறுவார்கள்)மூன்றாவது கேள்வி, சரி, இச்செய்தி உண்மையாக இருந்தால், இப்படி ஒர் செய்தியை நீங்கள் அறிந்தபின் இவ்வாறு ஒரு கலைஞன் படைக்கும் கலைப்படைப்புக்களை உள்வாங்கிக் கொள்வதில் உங்களுக்கு ஏதாவது உளவியல் சிக்கல்கள் வருவதில்லையா? அதாவது, "அட இவனே ஒரு Drug Addict! இவன் சொல்வதை கேட்டு எப்படி நம்மட வாழ்வில் முன்னேற முடியும்?" போன்ற சிந்தனைகள்....நான்காவது கேள்வி, உங்களுக்கு ஏற்கனவே "மகாகவி சுப்பிரமணிய பாரதியார் போதைக்கு அடிமையாக இருந்தார்!" என்ற இப்படியான செய்திகள் தெரிந்திருந்தால் நீங்கள் இது பற்றி என்ன கூறிக்கொள்ள விரும்புகின்றீர்கள்?ஐந்தாவது கேள்வி, உங்களுக்கு என்னைப்போல் இந்த செய்தி புதிய ஒரு செய்தியாக இருந்தால், உங்கள் இப்போதைய மனநிலை என்ன? இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?உங்கள் எண்ணங்களை இங்கு பரிமாறிக்கொள்ளவும். நன்றி!

ம்.. :):rolleyes:

மகாகவியின் பாடல்வரிகள் உணர்ச்சி ததும்ப வடிக்கப்பட்டன. வீரம், காதல், பாசம் என எல்லா வகைகளிலுமே. எனவே அந்த வரிகளில் தம்மை இழந்துவிடுவது வியப்பல்ல.

சரி. இப்போது விடயத்திற்கு வருவோம். மகாகவியின் பாடல்கள், அவற்றின் கம்பீரம் என்பன நமக்குள்ளே பாரதிக்கு ஒரு பிம்பத்தினை உருவாக்கி விடுகிறது. உண்மையில் நாம்விரும்புவது பாடல் வரிகளை மட்டுமே என்றால், பாரதி எப்படியிருந்தாலும் பிரச்சனை இல்லை. பாரதியின் பாடல்களை அவரின் "image"ஐ நீக்கிவிட்டு பார்க்கமுடியுமா? என்றால் ... அது எல்லோராலும் முடிவதில்லை. எனவே முதலாவது கேள்விக்கு பதில், எண்ணங்களை பகுக்க முடியாத (I think more than 96% of people) மக்களுக்கு, இப்படி ஒரு "மொடல்" இன் negative side ஐ ஊடகங்களில் விமர்சிப்பது நல்லதல்ல.

இரண்டாவது கேள்வி.- ஆம். எங்கே இதெல்லாம் உண்மை இல்லயோ, வெறும் கற்பனை தானோ என்ற குழப்பம் உருவாகும். நம்பிக்கையை சிதைக்கும்.

மூன்றாவது கேள்வி:- இன்னொருவர் சொல்லித்தான் நான் நல்லவனாக இருக்கவேண்டும் என்பது வெறும் அபத்தம். இது ஒருவகை ஏமாற்று கூட. நல்லவனாக வாழ மதம், அறநூல்கள், etc.. என்பன தேவையற்றன. இதை மிக ஆழமாக சிந்தித்தால் புரியும். (வேறொரு பதிவில் விவாதிக்கலாம்.)

நாலாவது கேள்வி: அது மகாகவியின் சொந்த விருப்பு-வெறுப்பு. என்னை பொறுத்தள்வில் நான் நேசிப்பது அவர் பாடல்கள், அவற்றின் உள்ளார்ந்த உயிர்த்துடிப்பு. அவற்றை பாரதி எமக்கு தந்தார். அவ்வளவே.

ஐந்தாவது கேள்வி:-ஆமாம். எனக்கும் இது புதிய தகவல் தான். இது என் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Link to comment
Share on other sites

ஏன் யாழ்களத்தில்கூட உள்ள கனபடைப்பாளிகள்.... கலைஞர்கள்... எழுத்தாளர்கள்... அப்படியென களஉறவுகள் அடிக்கடி சுட்டிக்காட்டுவது அறியவில்லையோ... :rolleyes::D:)

Link to comment
Share on other sites

ஏன் யாழ்களத்தில்கூட உள்ள கனபடைப்பாளிகள்.... கலைஞர்கள்... எழுத்தாளர்கள்... அப்படியென களஉறவுகள் அடிக்கடி சுட்டிக்காட்டுவது அறியவில்லையோ... :rolleyes::D:)

ஹி ஹி :D:D

நாசாவில் இருக்கும் சில விஞ்ஞனிகளும் அப்படித்தான். இதன் காரணமாக ஒரு விபத்து கூட நேர்ந்தது.

Link to comment
Share on other sites

ஒரு கலைஞனின் படைப்பை மட்டுமே பார்ப்பது சிறந்தது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவரது படைப்புக்களையும் போட்டுப் குளப்புவதால் எந்த நல்லவற்றையும் நாம் இனம்காண முடியாது. அந்தந்த காலகட்டத்தில் அவர்களுக்கிருந்த வேதனைகளை, மனக்குறைகளை மறக்க சிலவேளை இப்படியான பழக்கங்களை அவர்கள் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அதை வைத்து அவர்களது படைப்புக்களை எடை போட முடியாது.

ஒரு மகாகவி இறந்த பின்னர் இப்படி ஊடகங்களில் அவரைப்பற்றி கண்மூடித்தனமாக கதைப்பது சரியானதா? என்ற கேள்வியைக் கேட்ட நீங்களே இன்னொரு ஊடகமான இணையத்தில் அதே தவறைச் செய்திருப்பது வருத்தமளிக்கின்றது. நீங்கள் ஒரு வேளை சொல்லலாம் நான் எனது சந்தேகங்களை தீர்க்கவே இங்கு இதனை இணைத்தேனென்று. ஆனால் இது பற்றிய விவாதங்கள் அந்த மகாகவியை மட்டுமல்ல இன்னும் பல படைப்பாளிகளையும் கேவலப்படுத்தவே வழி செய்யும்.

Link to comment
Share on other sites

பாரதியார் கஞ்சா குடித்தார் என்ற கதையை நான் இப்போது தான் கேள்விப்படுகின்றேன்ஆனால் அதையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை. அவர் பாடல்களின் கருத்துக்கள்மனித நேயத்துடன் காணப்பட்டன. ஏற்ற தாழ்வுகள் வேண்டாம் என்று உணர்ச்சியுடன் கவி எழுதினார் அவைகளுக்கே நான் முக்கியத்துவம் கொடுக்கின்றேன்.

பாரதியார் கஞ்சா குடித்தாலும் அவர் வாழ்ந்த சமூக சூழல் அவரை ஒரு போராளியாக்கியது. மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் பிரச்சனைகளை நேரில் கண்டு உணர்ந்து உள்வாங்கி கவி பாடினதே பிரதானமானது. அதுவே அவரின் கவியின் உணர்ச்சிக்கும் உயிரோட்டத்துக்கும் காரணமாகின்றது.

ஒருவன் ஒரு சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றான் என்றால் அவன் அந்த சமூகத்தில் வாழ்கின்றான் என்றால் அதுவே பிரதானமானது. அந்த சமூகத்தில் கள்ளு குடிப்பவனும் இருப்பான் கஞ்சா குடிப்பவனும் இருப்பான் அது சமூகத்தின் இயல்பு.

இன்று எங்கட புத்தியீவிகள் எத்தனை பேர் முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவ நாட்டு மக்களின் வசதி வாய்ப்புக்களுக்கு நிகரான வசதி வாய்புக்களுடன் வாழ்ந்து கொண்டு இலங்கையில் கம்னியுசம் வரவேண்டும் மாரக்ஸிசம் வர வேண்டும் என்று மல்லுக்கட்டிக்கொண்டு நிக்கினம்? அது கூடப்பரவாயில்லை ஈழத்துக்கு நேரெதிரே உலகின் அடுத்த கோடியில் இருந்து கொண்டு ராணுவம் செய்யும் கொலைகளை கூட நிராகரிப்பவர்கள் இருக்கின்றார்கள். அங்கே உள்ள சாட்சிகள் சொன்ன போதும் அதை நிராகரிப்பவர் இருக்கின்றார்கள்.

தான் வாழும் சமூகத்தை விட்டு விலகாமல் வாழும் ஒருவனை அவனின் தனிப்பட்ட சிறு சிறு பிரச்சனைகளை வைத்து விலத்திவைக்க முடியாது. வாழும் இடமும் சூழலும் முக்கியம். சமூகத்தில் இருந்து பிரிந்து வாழும் ஒருவனுக்கும் சமூகத்தின் ஒரு அங்கமாக வாழும் ஒருவனும் என்ற கண்ணோட்டமே முக்கியமானது. தவிர கஞ்சாக்கதை விதண்டாவாதமானதாகவே படுகின்றது.

நாம் எமது தாயகத்தை பிரிந்து வாழ்கின்றோம் ஆனால்தாயக உறவுகளின் போரட்டத்தோடு முரண்படவில்லை. அவர்கள் முயற்சிக்கு முன்னுரிமை கொடுத்து அதை பின்பற்றுகின்றோம். தாயத்தில்வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதில் தெளிவு உண்டு. அங்கே ஒரு பத்திரிகையாளன் தண்ணி அடிக்கின்றான் என்று அவன் கருத்தை நிராகரிக்க முடியுமா? அவன் பேனா ஆயிரம் உயிரை காப்பற்றிக்கொண்டிருக்கும் அவன் பேனா பிடித்ததுக்காக நடுத்தெருவில் கொல்லப்படலாம். ஆகவே வாழும் சூழல் தான் முக்கியமானது. தனிப்பட்ட சிறு சிறு குறைகள் மனுடத்தின் இயல்பு. என்பதே எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி நான் இன்னுமொருவருடன் உரையாடியபோது அவர் இன்னும் கொஞ்சம் மேல போய், "எங்கிருந்தோ வந்தான் இடைக்காடு நான் எனறான்.." என்ற பாரதியாரின் அழகிய பாடலிற்கு புதியவிளக்கம் தந்தார். அதாவது பாரதியார் கஞ்சாவுக்கு அடிமையாக இருந்ததாகவும், அப்போது கஞ்சா அவருக்கு கிடைக்காத நேரத்தில் (பற்றாக்குறையாக இருந்த நேரத்தில்)எங்கிருந்தோ வந்த பையன் ஒருவன் அவரிடம் சிறிதளவு கஞ்சாவை அன்பளிப்பாக கொடுத்ததாகவும், இதனால் மிகவும் சந்தோசமடைந்த கவிஞர் மேற்கூறிய "எங்கிருந்தோ வந்தான், இடைக்காடு நான் என்றான்.." என்ற பாடலை எழுதியதாகவும் சொன்னார். இதைவிட, பாரதியார் தனது சொந்த ஊரிலேயே 13 வருடங்கள் அகதியாக வாழ்ந்ததாகவும் சொன்னார்.

பாடலின் ஒற்றை வரியை மட்டும் வைத்துக் கொண்டு பாரதியாரின் பூர்வீகத்தையே அறியும் திறமை நம் ஆராச்சியாளர்களுக்குத் தான் உண்டு.

உண்மையின் படி பாடல், "எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நான் என்றான்....." என்று தான் வருகின்றது. பாரதியார் ஒரு கண்ணன் பக்தர். அவரது பாடல்கள் பல அவரை நோக்கியே பாடப்பட்டிருக்கும். கோகுலத்தில் பசுக்கன்றுகளை மேய்த்தவராகக் கருதப்படுகின்ற இடையரான கண்ணன் மீது பாடப்பட்ட பாடல் தான் இப்பாடலுமாகும். ( கலைஞன் சொன்ன இந்தப் பாடல்வரிகளும், கண்ணன் மேலே பாடப்பட்டவை.ஒளிபடைத்த கண்ணிணாய் வா வா வா, தீராத விளையாட்டுப் பிள்ளை, காக்கைச் சிறகினிலே நந்தலாலா... " ) எனவே தான் ....இடைச்சாதி நான் என்றான்... என்று பாடல் வருகின்றது

மேற்குறித்து விமர்சனம் செய்த அவருக்கே பாடல் வரி ஒழுங்காகத் தெரிந்திருக்கவில்லை. இடைக்காடு என்பதற்கும், இடைச்சாதி என்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு. அதைத் தவிர இடைக்காடு என்பதை வைத்து எவ்வாறு கஞ்சாவோடு தொடர்புபடுத்துகின்றார்கள்???

முதலில் இவர்கள் கஞ்சா உற்பட்ட போதை ஏதும் பாவிக்காமல் இருந்து விமர்சனம் செய்கின்றார்களா என்று ஆராய்ந்திட வேண்டும்.

Link to comment
Share on other sites

இவர்கள் கஞ்சா உற்பட்ட போதை ஏதும் பாவிக்காமல் இருந்து விமர்சனம் செய்கின்றார்களா என்று ஆராய்ந்திட வேண்டும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதி திரைப்படத்தில் அவர் கஞ்சா அருந்துவது சொல்லப்படுகிறது.

அது உண்மைதான்

ஆனால் குடிக்கிறவன் கெட்டவன் மற்றவன் நல்லவன் என்கின்ற எங்கட சமூக மனநிலைத் தராசு இதையும் குழப்பித்தான் கொள்ளும்.

Link to comment
Share on other sites

இந்தியாவில் காட்டில் வாழும் துறவிகள் கஞ்சா அடித்துவிட்டு சிவ வழிபாடு செய்வதை சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் காட்டினார்கள்.

Link to comment
Share on other sites

பாரதி கஞ்சா அடித்தது உண்மை என்றுதான் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரதி திரைப்படத்திலும் "இந்தப் புதிய பழக்கமும் என்னுடைய தலையை சுற்றச் செய்கிறது" என்று பாரதி சொல்வதாக காட்சி அமைத்து, பாரதி கஞ்சா அடித்தது பற்றி காட்டி இருப்பார்கள்.

பாரதியை அன்றைய சமூகம் மிகவும் துன்புறுத்தியது.

பாரதி யானை தாக்கி இறக்கவில்லை. தன்னுடைய படைப்புக்கள் புத்தக வடிவில் வரவேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்து தன்னை மாய்த்துக் கொண்டார். பட்டினியால் இறந்தார் என்று சொல்பவர்களும் உண்டு.

Link to comment
Share on other sites

ஒரு நல்ல உணர்வாளனை அவர் மறைந்த பிறகு அவரிடம் களங்கம் கற்பிப்பது அழகல்ல..

சலிர் இருக்கும் போதே இமயமலைக்கு அடிக்கடி போகிறார்கள் ஆன்மீகமாகவா..

கஞ்சா அடிக்கவா..

அதைக்கண்டுபிடியுங்களேன்..

Link to comment
Share on other sites

அவர் இருக்கும் போதே தெரிந்த உண்மை இது. இதில் மறைப்பதற்கும் களங்கம் செய்வதற்கும் ஒன்றும் இல்லை.

பாரதி ஒரு குறுகிய காலமே கஞ்சா உபயோகித்திருக்கிறார். அவர் கஞ்சாவிற்கு அடிமையாக இருந்தார் என்று சொல்வது சற்று அதிகம்.

பாரதி ஒரு பெருங்கவி. அதுதான் அவருடைய முகவரி. இடையில் சிலகாலம் கஞ்சா பாவித்தது அவருடைய புகழை மங்கச் செய்யாது.

Link to comment
Share on other sites

வணக்கம்!

மீண்டும் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாம் என நினைக்கின்றேன். கோபிக்கப்படாது!

1. தமிழீழத்தில் போதைப் பொருட்கள் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது. உயிரைப் பிழிந்து எடுக்கும் படைப்புக்களை மது, மாது, போதையை சுவைப்பதன் மூலமே உருவாக்க முடியும் என்றால், தமிழீழத்தில் வாழும் கவிஞர் புதுவை இரத்தினதுரை (உதாரணத்திற்கு) அவர்களால் எவ்வாறு மிகச்சிறந்த பாடல்களை எழுதமுடிகின்றது?

2. ஒருவன் மற்றவர்களிற்கு கூறும் அறிவுரை ஒரு சமூகத்தில் எடுபட வேண்டுமாக இருந்தால், குறிப்பிட்ட சமூகம் அவனிடம் சில அடிப்படைத் தகமைகளை, நல்லொழுக்கத்தை எதிர்பார்க்கும். இந்நிலையில் இப்போது கஞ்சா அடிக்கும் (எமது சமூகத்தில் உள்ள) ஒருவர் கூறும் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கின்றீர்களா? பாரதியார் கஞ்சா அடித்து பாடல் எழுதுகின்றார் என்ற தகவல் அனைவருக்கும் காலம், காலமாக தெரிந்து வந்திருந்தால், பாரதி கூறிய கருத்துக்கள் எமது சமூகத்தில் எடுபட்டு இருக்குமா?

3. அந்த மாகவி பாரதியே கஞ்சா அடித்துள்ளார்! எனவே, நான் கஞ்சா அடிப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்று ஒருவன் கேட்டால் அவனுக்கு என்ன பதில் உங்களால் கூறமுடியும்?

4. பாரதியார் வெறும் கலைஞனாக அல்லது படைப்பாளியாக மட்டும் எமது சமுகத்தில் வைத்து பார்க்கப்படவில்லை. ஒரு ஞானியாக, சீர்திருத்தவாதியாக, தீர்க்கதரிசியாக பல முகங்களில் வைத்து போற்றப்படுகின்றார். எனவே, ஒரு கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கையை அவனது படைப்புக்களுடன் வைத்து குழப்பக்கூடாது என்ற கருத்து பாரதியார் விடயத்தில் எவ்வளவு தூரம் பொருந்தும்?

Link to comment
Share on other sites

வசம்பு சொல்வதுபோல் கலையை மட்டும் ரசிப்போம் கலைஞனின் அந்தரங்க வாழ்வை மறப்போம்

பாரதியார் கவிதைகள் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் வீழந்துகொண்டுதானிருக்கின்ற

Link to comment
Share on other sites

பாரதியரை அன்றைய சமூகம் நடத்தியது போன்று நாமும் புதுவை ரத்தினதுரையை நடத்தினால் அவரும் சில வேளைகளில் கஞ்சா அடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரும் தப்பா நெனைக்கக் கூடாது..

புதுவை நல்லா வெத்திலை போடுவார்..

வெத்திலை போதையா என எனக்குத் தெரியாது..

Link to comment
Share on other sites

1. தமிழீழத்தில் போதைப் பொருட்கள் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது. உயிரைப் பிழிந்து எடுக்கும் படைப்புக்களை மதுஇ மாதுஇ போதையை சுவைப்பதன் மூலமே உருவாக்க முடியும் என்றால்இ தமிழீழத்தில் வாழும் கவிஞர் புதுவை இரத்தினதுரை (உதாரணத்திற்கு) அவர்களால் எவ்வாறு மிகச்சிறந்த பாடல்களை எழுதமுடிகின்றது?

................................................................................

...........................

வாழும் சூழல் உணர்வில் கலந்து மலர்கின்றது.

................................................................................

...........

3. அந்த மாகவி பாரதியே கஞ்சா அடித்துள்ளார்! எனவேஇ நான் கஞ்சா அடிப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்று ஒருவன் கேட்டால் அவனுக்கு என்ன பதில் உங்களால் கூறமுடியும்?

.............................................................................

நாம் கும்பிடும் அந்த தமிழ்கடவுள் முருகனே இரண்டு பொண்டாட்டி வைத்திருக்கின்றார் நான் வைத்திருந்தால் என்ன தப்பு என்று ஒருவன் கேட்டால் அதுக்கு சமூகம் நிறைய பதில் வைத்திருக்கின்றது அது போல இதுக்கும் வைத்திருக்கும்

...........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி திரைப்படத்தில் அவர் கஞ்சா அருந்துவது சொல்லப்படுகிறது.

அது உண்மைதான்

ஆனால் குடிக்கிறவன் கெட்டவன் மற்றவன் நல்லவன் என்கின்ற எங்கட சமூக மனநிலைத் தராசு இதையும் குழப்பித்தான் கொள்ளும்.

கண்ணதாசனை ஏற்றுக் கொண்டதே??

குடிக்கின்றவன் கெட்டவனோ இல்லையோ, குடிக்காது இருப்பதை வரவேற்றுக் குடிப்பவனை ஒதுக்குவது என்பது ஒருவனை அவ்வாறு நடக்கவிடாமல் இருக்கத் தூண்டுமல்லவா

Link to comment
Share on other sites

பாரதி என்ன கண்ணதாசன் கூட சிறையில் கஞ்சா அடித்து விட்டு

"சிறைக்கஞ்சா சிங்கம்" என்று கவிதை எழுதி இருக்கிறார். கஞ்சா என்பது கற்பனையை சிறகடிக்கச் செய்யும் ஒரு மூலிகை. அவ்வளவு தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். கிரேக்க தத்துவஞானி சோக்ரடீஸ் கூட பாவித்த மூலிகை தான் அது. :unsure::(

அப்பனே கவிஞன் கஞ்சா அடித்தால் கவிதை வரும்.

கண்டவனும் அடித்தால் புகை மட்டும் தான் வரும்.

Link to comment
Share on other sites

இதோ ஒரு இனிய பாரதி கவிதை

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்

காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு

தூற்றினை யொத்த இதழ்களும் - நில

வூறித் ததும்பும் விழிகளும் - பத்து

மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த

வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை

வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்

விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த

நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்

போயின, போயின துன்பங்கள் நினைப்

பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்

வாயினி லேயமு தூறுதே - கண்ணம்

மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்

தீயினி லேவளர் சோதியே - என்றன்

சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)

"உயிர்த்தீயினிலே வளர் சோதியே

என்றன் சிந்தனையே என் சித்தமே"

இவ்வளவு அழகான வரிகள் அமர கவிகளுக்கு மட்டும் தான் கைவரும் என்று நினைக்கிறேன்.

தமிழ் உள்ள அளவும் நின் புகழ் வாழும் அமர கவியே!!!

Link to comment
Share on other sites

நன்றி பாரதியின் பாடலை இணைத்தமைக்கு

நகைச்சுவையாக ஒரு கேள்வி

இந்தப்பாடல் கண்ணம்மாவிற்காக பாடியதா ? கஞ்சாவிற்காக பாடியதா ,? பாரதியாரைத்தான் கேட்கவேண்டும்.

Link to comment
Share on other sites

மகாகவி பாரதி ஒரு புரட்சியாளர் அவர் போதைக்கு தம் வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே அடிமையானார் ...

கண்ணதாசன் அப்படியல்ல.. கண்ணதாசனையும் பாரதியையும் ஒப்பிடுவது சரியல்ல...

பாரதிக்கு அன்றைய கால கட்டத்தில் மிகுந்த மன அழுத்தம் இருந்தது .... அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தேடப்பட்டு .... பொருளாதாரம் நலிந்து மிகவும் துன்புற்றார் எனவே அவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட போதைப்பொருள் நாடியிருக்கலாம்.... அதற்காக அவர் போதைபொருள் உட்கொண்டதால் நாமோ அல்லது மற்ற கவிஞர்களோ அவ்வாறு செய்யவேண்டுமென்பது என்ன நியாயம் .

பாரதி மிகுந்த உணர்ச்சிப்பெருக்கு உள்ளவர்... பொதுவுடமை சிந்தனையாளர்... அவருக்கு யானைகள் மிகவும் பிடிக்கும் ..

மதுரை கோவில் யானையை மிகவும் ரசிப்பார்... அருகில் சென்று கொஞ்சி மகிழ்வார்..சில சமயம் அதன் துதிக்கையை செல்லமாக கடிப்பார் என்றும்..... அவ்வாறு மிக அருகாமையில் யானையை கொஞ்சும் போது அது அவரை மிரட்சியில் அவரை தூக்கி வீசி விட்டது.... அந்த சம்பவத்தால் அவர் மிகுந்த அதிர்ச்சியடைந்தார் என்றும் அதனால் அவரது சாவு விரைவாக அவரை நாடியது என்பார்கள் .

போதை உட்கொள்வது அவர் சொந்த பிரச்சனை அதனால் பிறர்க்கு எந்த கேடும் ஏற்படவில்லை ... தன்னைத்தானே வருத்திக்கொண்டு உடல் நலம் குன்றினார்.... நாம் அவரது படைப்புகளை மட்டும் ரசிப்போம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.