Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழீழ வரலாற்று நிகழ்பட(Video) ஆவணங்களை சேகரிப்பதற்கும் காப்பதற்கும் ஒரு நல்ல தளம் | A site for Eelam video archives


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

வலைத்தளத்திற்கான கொழுவி: https://eelam.tv/

 

  --> இனத்திற்கு நன்மையென்பதால் ஒரு வலைத்தளத்திற்கு நானாக முன்வந்து இலவச விளம்பரம் கொடுக்கிறேன். <--

 

எல்லா(Hello)..

வணக்கம் மக்களே../\...

இது ஒரு தமிழீழ வரலாற்று ஆவணங்களை காப்பதற்கான ஒரு நல்ல தளம். இதற்குள் நீங்கள் உங்களிடம் இருக்கின்ற நிகழ்படங்களை ஏற்றி பாதுகாக்கலாம். இது 2018 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. நான் இதை 2021 ஆம் அண்டு சனவரியில்தான் கண்டறிந்தேன். ஏப்ரலில் இருந்து தொடர்ச்சியாக பதிவேற்றி வருகிறேன். அங்கும் Nanni Chozhan  என்னும் பெயரில் தான் இயங்குகிறேன். 

என்னிடம் இருந்த தமிழீழ நிகழ்படங்கள் 1000+ இதற்குள் பதிவேற்றியுள்ளேன். கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் அத்துணை நிகழ்படங்களையும் சேகரித்து இதற்குள் ஏற்றிவிட்டேன்.  'ஒளிவீச்சு' அத்துணையும் இதற்குள் உண்டு(வேறொருவர் ஏற்றியுள்ளார்). நான் ஏற்றியவற்றுள் 400 மேற்பட்டவை இனப்படுகொலை தொடர்பாக விடுதலைப் புலிகள் நேரடியாக வெளியிட்டவை. மேலும், பன்னூறு பாடல்கள், வரலாறுகள் மற்றும்  ஆவணங்கள் தொடர்பான நிகழ்படங்களையும் இதற்குள் ஏற்றியுள்ளேன். ஆங்கிலத்தில்தான் உண்டு.. எனவே தமிழறியா உங்கள் குழந்தைகளையும் இதை பயன்படுத்த அறிவுறுத்தலாம்.

ஓரளவிற்கு யூடியூப்பிற்கு நிகரான ஓரளவான வசதி இதற்கு உண்டு. பிறரோடு கதைக்கலாம்; விருப்பங்கள் இடலாம். இன்ன பல. குறிப்பாக ஸ்ரேரஸ் வைக்கலாம். இதில் இன்னொரு வசதி உண்டு என்னவென்றால் நீங்கள் இந்த வலைத்தளதிற்குள்ளேயே விளம்பரம் செய்யலாம்🤣. மெய்யே. அதற்கு தேவையான காசினையும் நீங்கள் இதற்குள் ஏற்றும் நிகழ்படங்கள் கொண்டே உழைக்கலாம். ஆனால் அந்த காசை வெளியில் எடுக்க முடியாது என்பது ஒரு பம்பலான தகவல். இதைவிட இன்னும் பல வசதிகள் உண்டு. ஆனால், நீங்கள் ஏற்றும் நிகழ்படங்கள் பொறுப்பாளரால் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும். 

இதற்குள் உள்ள நிகழ்படங்கள் துல்லியமான அளவிற்கு  வகை பிரிக்கப்படவில்லை. நான் இந்த வலைத்தளத்தை நடத்துபவருடன் கதைத்த மட்டில் அறிந்ததில் அவருக்கு எமது போராட்ட வரலாறுகள் தொடர்பான தகவல்கள் சுழியத்தைவிட கொஞ்சம் மேலதான் தெரியும். ஆனால் வயது 30+.  அப்படித்தான் என்னுடன் அவர் கதைத்தார்(அவர் நிகழ்படங்களை வகை பிரித்துள்ள விதத்தில் இருந்து நீங்களே அறியலாம்). ஆனால், எமது வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கொண்ட செல்ல வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளார். இது ஒன்றே காணும். எமக்கு வேண்டியது, நிகழ்படங்களை பிறரிடம் கொண்டு செல்லவும் பாதுகாக்கவும் ஒரு நல்ல வலைத்தளம். அந்த தகுதி இதற்கு உண்டு. எனவே இதை நீங்கள் பயன்படுத்தலாம். 

இதை நடத்துபவர்கள் தனியாக ஒரு தொலைக்காட்சி சன்னலும் வைத்துள்ளனர் என்று தேடிக் கண்டறிந்தேன். அதுவும் eelamtv என்னும் பெயரில்தான் இயங்குகிறது.(இரு பெயரும் சின்னமும் ஒரே போல்தான் உள்ளதால் நான் அவ்வாறாக நினைக்கின்றேன். பிழையாகவும் வாய்ப்புண்டு.)

இந்த வலைத்தளம் பற்றி நானறிந்த எல்லாவற்றையும் தெரிவித்துவிட்டேன். என்னால் முடிந்த ஒரு நிகழ்பட ஆவணக்காப்பினையும் செய்துள்ளேன். இனிமேல் பயன்படுத்துவதும் பயன்படுத்தாதும் தமிழீழ மக்களாகிய உங்களைப் பொறுத்ததே.

  • இதற்குள் உள்ள நிகழ்படங்களை பதிவிறக்க கீழ்க்கண்ட கொழுவியை பயன்படுத்துங்கள்:  https://getfvideo.com/

 

 

ஆக்கம் & வெளியீடு 
நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ வரலாற்று நிகழ்பட(Video) ஆவணங்களை சேகரிக்கவும் காப்பதற்கும் ஒரு தளம் | A site for Eelam video archives
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

கணினியில் அதன் முகப்பு இப்படித்தான் தெரியும்.

 

May be an image of 2 people, screen and text that says "தமிழீழ Goமொழி... நிகழ்ட அகரமுதலி தமிழ் ஈ.TV Pavanar ஆறுமுகம்பி... தளட அமுதாப் கிட் Reading அண்ணன் நினைவாக PolaC Upload ரை EGORIES Latest ideos Nanni Chozhan @NanniChozhan 10:17 கருணாநிதியி Subscriptions Myartice துரோ.. பில்.. ஏவுபலகை Advertising Trending 2:50 னில் புலிகளின் N”ghmode LTTE manufacturing டையின் இரண்ட எவது பறப்பு search எதிரியின் றறிவளைப்பை தகர்க் சண்டி யன் rocket launchpad Sandiyan 11:15PM 6/3/2021"

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ வரலாற்று நிகழ்பட(Video) ஆவணங்களை சேகரிப்பதற்கும் காப்பதற்கும் ஒரு நல்ல தளம் | A site for Eelam video archives

நன்றி நன்னிச் சோழன்.

குறிப்பிட்ட இணையத்தளத்தில் About us என்பது வெறுமையாக உள்ளது. அநாமதேய இணையத்தளத்தை எவ்வாறு நம்புவது ?

2009 ற்குப் பின்னர் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று காணாமல் போயுள்ளன. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
4 hours ago, இணையவன் said:

நன்றி நன்னிச் சோழன்.

குறிப்பிட்ட இணையத்தளத்தில் About us என்பது வெறுமையாக உள்ளது. அநாமதேய இணையத்தளத்தை எவ்வாறு நம்புவது ?

2009 ற்குப் பின்னர் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று காணாமல் போயுள்ளன. 

 

(நீண்ட மறுமொழிக்கு மன்னியுங்கோ)

 

வணக்கம் அண்ணை,

எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது அண்ணா. ஆனால் நாம் இந்த வலைத்தளத்தை முற்றாக நம்பலாம்; நம்புகிறேன். அதற்கான காரணம் யாதென்னில்,

இந்த வலைத்தளத்தைப் பற்றி நான் மற்றொன்று எழுத மறந்து விட்டேன். அதாவது நான் 2021 சனவரியில் கண்டறியும் வரை இது ஒரு பேய் மாளிகை போன்று தான் இருந்தது. மெய்யே. இப்போது நீங்கள் இந்த வலைத்தளத்தைபோய் பார்த்தீர்கள் என்றால் நான் சொல்லப்போவதை நம்ப மாட்டிர்கள். 

நான் நுழையும்போது இதனுள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருந்தது, ஆனால் வேலை செய்யவில்லை. கருத்துக்கள் ஒழுங்காக பதிய முடியாது. ஒரு நிகழ்படங்கள் தரம் பிரித்தல் இல்லை. ஏன் ஒருசில ஒப்சனே வேலை செய்யவில்லை. கிட்டத்தட்ட ஒரு பாழடைந்த மாளிகை போன்றுதான் இருந்தது. 

ஒருநாள் நான் இதன் முதலாளியை(https://eelam.tv/@Chozhan) ஒருவழியாகக் கண்டுபிடித்து அவருடைய கருத்துப் பெட்டியில் ஒரு மாதிரி கருத்திட்டு ஒரு குறுஞ்செய்தி வசதியை ஏற்படுத்தினேன். அப்போதுதான் அறிந்தேன் அவர் தன்பாட்டில் சொந்தமாக நிரல் எழுதி எழுதிதான் இதை உருவாக்குகின்றார் என்று. ஏனென்றால் பின்னாளில் அவரிடம் மேலும் பல வசதிகள் தொடர்பாக உரையாடியதில் அவர் தானாகவே நிரல் அடித்துதான் இதை உருவாக்குவதை முற்றாக அறிந்துகொண்டேன். பின்னர் இந்த வலைத்தளத்தின் வரலாறு தொடர்பில் கேட்ட போது, தானிந்த வலைத்தளத்தை வேறொரு கைவிடப்பட்ட ஒருவரிடம் இருந்து வாங்கியதாகவும்(நான் நம்பவில்லை) நேரம் கிடைக்கும்போது பிழைகளை சரி செய்து மேம்படுத்திவருவதாகவும் கூறினர். பின்னர், மாதங்கள் ஆக நானும் பதிவேற்ற தொடங்க இந்த வலைத்தளத்தை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தி இப்போது உள்ள நிலைமைக்கு கொண்டந்தார். எனவே ஒருவரினதோ/ ஒரு குழுவினரதோ சொந்த முயற்சியால்தான் இந்த வலைத்தளம் எழும்புவதை நாம் அறியலாம்.

மற்றொன்றையும் நான் பறைய விரும்புகிறேன். இவர்/இவர்கள் விடுதலைப் புலிகளின் நிகழ்படங்களில்தான் ஆர்வம் செலுத்துகின்றனர். ஏனெனில் நான் கடந்த மே - 18 ஐக் குறிவைத்து அதிவேகமாக இனப்படுகொலை நிகழ்படங்களை 2 கிழமைகளுக்குள் ஏற்றினேன். அப்போது என்னை இடைநிறுத்துமாறும் விடுதலைப்புலிகளின் நிகழ்படங்களை ஏற்றுமாறும் கேட்டுக் கொண்டனர்(நான் முன்னரே தெரிவித்துவிட்டேன்.. என்னிடம் திரளாக இருக்கிறது என்று). ஆனாலும் நான் நிறுத்தவில்லை. முற்றாக ஏற்றிய பின்னரே தவிபு நிகழ்படங்களைதான் ஏற்றினேன். எனவே இதிலிருந்து இவர்(கள்) தவிபு நிகழ்படங்களை சேகரிக்க முனைகின்றனர் எனபதையும் அறியலாம்.

இவ்வளவு ஏன், எனக்கு முன்னரே இதற்குள் 300+ நிகழ்படங்களை 2 ஆண்டுகளாக பலர் ஏற்றி வருகின்றனர்(12 ஆண்டுகளாக செயற்படும் http://www.eelamview.com/category/eelam/page/2/ என்ற வலைத்தளம் தனது நிகழ்படங்களை இதனுள்ளேதான் ஏற்றிவருகின்றது. இதான் அவங்கட தடம் என நினைக்கிறேன்:  https://eelam.tv/@vijasan)  

 

இதன் வயது இப்போது 3. எனவே இதை தாங்கள் தாராளமாக நம்பலாம். 

 

 

------------------------------------------------------------

 

 

இந்த நிகழ்பட வலைத்தளத்தின்

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.