கருத்துக்கள உறவுகள் கிருபன் பதியப்பட்டது June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது June 4, 2021 முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான் மின்னம்பலம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யக் கோரி அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், எழுவர் விடுதலையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இன்று (ஜூன் 4) சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தனர். சீமான் ரூ. 5 லட்சம் வழங்கினார். பின்னர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி முதல்வரிடம் சீமான் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். சீமான் பேசுகையில், “பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்ததாகத் தெரிவித்தார். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், அதன் போக்கை வைத்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கூறினார். மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்வது தொடர்பாகப் பேசியிருக்கிறோம். 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறேன் என்று முதல்வர் சொன்னதாகச் சீமான் கூறினார். மேலும் அவர், “தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக மருத்துவத் துறையில் மா.சுப்பிரமணியன் சிறப்பாகச் செயல்படுகிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவதே பெரிய போராட்டமாக இருக்கிறது. 12ஆம் வகுப்புத் தேர்வு நடத்துவது தொடர்பாக யோசித்து வருவதாக முதல்வர் தெரிவித்தார். மாணவர்கள் உயிருக்கு பாதிப்பு என்றால் யார் பொறுப்பேற்பது. தேர்வை வைக்க வேண்டும் என்று கூறுபவர்கள் பொறுப்பேற்பார்களா. தேர்வைச் சிறிதுகாலம் தள்ளிவைக்கலாம்” என்றார். ஃபேமிலி மேன் 2 தொடர் வெளியானது தொடர்பாக பேசிய சீமான், “காலூன்ற முடியாத இடங்களில் பயங்கரவாதம் என முத்திரை குத்த பாஜக அரசு முயல்கிறது. எங்களது போராட்டம் பயங்கரவாதம், தீவிரவாதம் இல்லை. அது இன விடுதலைக்கான போராட்டம். சிங்கள அரச பயங்கரவாதத்தைக் கண்டிக்காத இந்த நாடு, 800க்கும் மேற்பட்ட மீனவர்களை கொன்ற சிங்கள அரசை கண்டிக்காத நாடு, எங்களைப் பயங்கரவாதிகள் என கூறி வேலை செய்கிறது. குற்றம், குறை சொல்பவர்களைக் கண்டு கொள்ளாமல் போய் விட வேண்டும்” என்று குறிப்பிட்டார். முதல்வருடனான சந்திப்பு குறித்துப் பேசிய சீமான், “அரசியலில் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் என்னுடைய அப்பாவின் இறப்புக்கு முதல்வர் அறிக்கை விட்டார். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் தொலைபேசியில் அழைத்து என்னிடம் பேசினார். அப்போது நான் நெகிழ்ந்துவிட்டேன். அதனால்தான் சந்தித்துப் பேசலாம் என்று முடிவெடுத்தேன்” என்றும் கூறினார். https://minnambalam.com/politics/2021/06/04/22/seeman-meets-mk-stalin-for-corona-fund Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 சீமான், பாரதிராஜா அவர்கள் முதல்வர் ஸ்ராலினை சந்தித்தமை வரவேற்கது. 2 Link to comment Share on other sites More sharing options...
zuma Posted June 4, 2021 Share Posted June 4, 2021 (edited) Quote அரசியலில் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் என்னுடைய அப்பாவின் இறப்புக்கு முதல்வர் அறிக்கை விட்டார். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் தொலைபேசியில் அழைத்து என்னிடம் பேசினார். அப்போது நான் நெகிழ்ந்துவிட்டேன். அதனால்தான் சந்தித்துப் பேசலாம் என்று முடிவெடுத்தேன் நல்ல விடயம். ஜிங்கோயிசம் செய்யாமல், ஒரு வளரும் அரசியல் கட்சியாய் நடைமுறை அரசியல் செய்ய வேண்டும். Edited June 4, 2021 by zuma Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 எழுவர் விடுதலை: தமிழக முதல்வருடன் சீமான், பாரதிராஜா சந்திப்பு 22 Views தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்படத் தயாரிப்பாளர் பாரதிராஜா உள்ளிட்டோர் சந்தித்து எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து சீமான் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ”முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினோம். ஏழு பேர் விடுதலை குறித்துப் பேசினோம். அப்போது எழுவர் விடுதலை விவகாரத்தில் அரசு உறுதியாக உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. அதில் வரும் போக்கை வைத்து நகர்வோம் என்று முதல்வர் சொன்னார். விடாமல் தொடர்ச்சியாகப் போராடுவோம் என்று என்னிடம் சொன்னார்” என்றார். மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த சீமான், கூட்டணியில் உள்ள காங்கிரஸே எதிர்க்கிறதே? அதை விடுங்கள். மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முடியாதா? அதையும் பேசியிருக்கிறோம். அதை விட்டுவிட மாட்டோம், தொடர்ச்சியாகக் கண்காணித்துச் செய்வோம் என முதல்வர் உறுதி அளித்துள்ளார். ஆகவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வருகிறது என்று பார்ப்போம், அதன் பின்னர் முடிவெடுப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார். திமுகவின் 30 நாட்கள் ஆட்சி எப்படி உள்ளது? சரியாக இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் வேகமாக இயங்குகிறார்கள், மருத்துவத் துறையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்பாக இயங்குகிறார்கள். அழைத்துப் பாராட்டுகிறோம். கொரோனா தொற்றில் அதைக் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாக உள்ளது. ஏழு பேர் விடுதலையில் முதல்வர் உறுதியளித்தாரா? ஏழு பேர் விடுதலையில் நான் மிக உறுதியாக இருக்கிறேன் என்று முதல்வர் கூறினார். நன்றி – இந்து தமிழ் திசை https://www.ilakku.org/?p=51469 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 ` ஆட்சி சரியா இருக்கு' - முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு சீமான், பாரதிராஜா பேட்டி! பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் - சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிதிக்கு, சீமான் நிதியளித்தார். ஸ்டாலின் சீமான் சந்திப்பு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ``எனது தந்தையின் மரணத்தின் போது ஆறுதல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதுவே எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அவர் நினைத்திருந்தால் அதோடு விட்டிருக்கலாம். ஆனால், அவர் என்னை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியது என்னை நெகிழவைத்துவிட்டது. இந்த சந்திப்பஇ நான் பெருமைக்குரியதாக பார்க்கிறேன்.... பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பற்றி முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். அவர் அதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். பிளஸ் 2 தேர்வு நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார்கள். மாணவர்களின் உயிர் தான் முக்கியம். ஒரு வருடம் தேர்வு எழுதாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது. எனது கருத்தையும் தெரிவித்திருக்கிறேன்." என்றார். புதிய அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, `` ஆட்சி சரியா இருக்கு. நல்லா வேகமா இயங்குறாங்க. மருத்துவத்துறையில அண்ணன் மா.சு சிறப்பா இயங்குறாரு " என்றார். தி ஃபேமிலி மேன் -2 தொடர் குறித்து கேட்க்கப்பட்ட கேள்விக்கு, ``ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தமிழ் தீவரவாத அமைப்புகள் என்பது போல தொடர்புபடுத்தி கொண்டுவருகிறார்கள். பா.ஜ.க அரசால் எங்கு கால் பதிக்க முடியவில்லையோ, அங்கெல்லாம் பயங்கரவாத இயக்கம் என்ற பிம்பத்தை கட்டமைக்க நினைக்கிறது. நாங்கள் ( விடுதலைப் புலிகள்) இன விடுதலைக்காக போராடத் தொடங்கினோம். சிங்கள அரச பயங்கரவாதத்தை கண்டிக்காத இந்த அரசு (பா.ஜ.க) எங்களை பயங்கரவாதிகள் என்று கூறும் இதுபோன்ற தொடர்களை அனுமதித்துக் கொண்டிருக்கிறது." என்றார். https://www.vikatan.com/government-and-politics/politics/seeman-director-barathiraja-meets-cm-stalin-says-government-is-acting-good Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted June 4, 2021 Share Posted June 4, 2021 எதிர் கட்சி என்றால் எதிரிக் கட்சி போன்று எல்லாவற்றையும் எதிர்த்து அரசியல் செய்யாமல், நல்ல விடயங்களை செய்யும் போது வரவேற்கின்ற பண்பு நல்ல அரசியலுக்கு தேவையானது. சீமான் அரசியலில் பக்குவப்பட்டுக் கொண்டு வருகின்றார் போலத் தெரிகின்றது. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விளங்க நினைப்பவன் Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 தமிழகன் இது பற்றி என்ன கருத்து சொல்கிறார்? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் வாத்தியார் Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 10 hours ago, உடையார் said: திமுகவின் 30 நாட்கள் ஆட்சி எப்படி உள்ளது? சரியாக இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் வேகமாக இயங்குகிறார்கள், மருத்துவத் துறையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்பாக இயங்குகிறார்கள். அழைத்துப் பாராட்டுகிறோம். கொரோனா தொற்றில் அதைக் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாக உள்ளது. இது நல்ல அறிகுறியாக இருக்கின்றதே...... அடுத்த தேர்தலில் சீமான் ஸ்டாலினுடன் கூட்டணி அமைப்பாரோ ? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 1 hour ago, வாத்தியார் said: இது நல்ல அறிகுறியாக இருக்கின்றதே...... அடுத்த தேர்தலில் சீமான் ஸ்டாலினுடன் கூட்டணி அமைப்பாரோ ? ஆரம்பமே டெல்லியை பள்ளி விடயத்தில் பகைத்து கொண்டாயிற்று அதைவிட திமுகவின் இந்து சமுத்திர தீவுகளில் உள்ள பினாமி முதலீடுகள் கிண்டியெடுத்து கொள்கிறார்கள் ஊழல் செய்வதிலும் அதி புத்திசாலித்தனம் என்பார்கள் பலநாள் கள்ளன் ஒருநாள் என்ற பழமொழி தமிழில் இருப்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதானே அடக்கி வாசிக்கினமாம் .எது எப்படியாயினும் அது அவர்களின் பிரச்சனை நாங்கள் மண்டையை உடைக்க தேவையில்லை . Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 10 hours ago, உடையார் said: எது நடந்ததோ அது எதிர்வு கூறியபடியே நடந்தது. எது நடக்கிறதோ அது எதிர்வு கூறியபடியே நடக்கிறது. எது நடக்குமோ அதுவும் எதிர்வு கூறியபடியே நடக்கும். - கீதையில் கண்ணன் அல்ல - போதையில் உடான்ஸ் சாமியார் அருளியது- 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 2 minutes ago, goshan_che said: போதையில் உடான்ஸ் சாமியார் அருளியது- இன்னும் ஐந்து வருடம் இருக்கு சாமி ஆட்சி புரிய இடைவழியில் எதுவும் நடக்கலாம் விதி வலியது அருளியது பெருமாள் சித்தன் .🤣 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 6 minutes ago, பெருமாள் said: ஆரம்பமே டெல்லியை பள்ளி விடயத்தில் பகைத்து கொண்டாயிற்று அதைவிட திமுகவின் இந்து சமுத்திர தீவுகளில் உள்ள பினாமி முதலீடுகள் கிண்டியெடுத்து கொள்கிறார்கள் ஊழல் செய்வதிலும் அதி புத்திசாலித்தனம் என்பார்கள் பலநாள் கள்ளன் ஒருநாள் என்ற பழமொழி தமிழில் இருப்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதானே அடக்கி வாசிக்கினமாம் .எது எப்படியாயினும் அது அவர்களின் பிரச்சனை நாங்கள் மண்டையை உடைக்க தேவையில்லை . சுப்பிரமணிய சாமி.... பத்மா சேஷாத்திரி பள்ளி விடயத்தில், “சவுண்டு” கொடுத்த பின்... தி.மு.க. அமைதியாகி விட்டது போல் தெரிகின்றது. பத்து வருசத்துக்கு பிறகு... ஆட்சிக்கு வந்தவர்களுக்கு பயம் இருக்கத்தானே செய்யும். பிராமணர்களுக்கும்... 4,000 ரூபாய் உதவித் தொகை கொடுத்து... வேறை “ரூட்டிலை” போகிறார்கள் போலுள்ளது. 😁 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 இந்த செய்தி பற்றிய எனது அவதானங்கள். 1. சீமானுக்கு அந்த ரோஸ் கலர் சேர்ட் நல்லா செட் ஆகுது. 2. தலைமயிரும் வெட்டி இருக்கிறார். எடுப்பாக இருக்கிறது. 3. உடல் மெலிந்து நல்ல டிரிம்மாக இருக்கிறார். 4. பாரதிராஜாவும் மெலிந்து டிரிம்மாக இருக்கிறார். 5. ஏன் சீமான் வாக்கிங் போறவன் நாயை கூட்டிட்டு போறமாரி பாரதிராஜாவ எல்லா இடமும் கூட்டிப்போறார்னு தெரியவில்லை. 6. எல்லாரும் மாஸ்க் போட்டிருக்கிறாகள்👍🏿. அரசியல்? ஓ மறந்தே போய்விட்டேன்…. அத்தனை அரசியலும் மேலே தொங்கி கொண்டிருக்கும் கருநாநிதியின் நக்கல் சிரிப்பில் இருக்கிறது. எழுத எதுவுமில்லை. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 2 minutes ago, தமிழ் சிறி said: பிராமணர்களுக்கும்... 4,000 ரூபாய் உதவித் தொகை இந்த விடயம் இங்குள்ள சிங்கங்களுக்கு தெரிந்தும் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு கொட்டாவி விடுகினம் ஆக்கும் .🤣 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 1 minute ago, பெருமாள் said: இந்த விடயம் இங்குள்ள சிங்கங்களுக்கு தெரிந்தும் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு கொட்டாவி விடுகினம் ஆக்கும் .🤣 அதை வெளியே காட்டிக் கொண்டால்.... தீம்காவிற்கு.... எப்பிடி, முட்டுக் கொடுக்கிறது என்று, தீக்கோழி மாதிரி... தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள். 😁 😂 🤣 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 3 minutes ago, பெருமாள் said: இந்த விடயம் இங்குள்ள சிங்கங்களுக்கு தெரிந்தும் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு கொட்டாவி விடுகினம் ஆக்கும் .🤣 நாங்கள் பார்ப்பனியத்துக்கு எதிர் எண்டால் நம்பமாட்டியளே? 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 2 minutes ago, குமாரசாமி said: நாங்கள் பார்ப்பனியத்துக்கு எதிர் எண்டால் நம்பமாட்டியளே? பொய்யான நாடகங்களை நம்பி தங்கள் பின் பகுதியில் சுடுகோலால் குறி இளுத்து கொண்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .🤣 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 5 minutes ago, பெருமாள் said: இந்த விடயம் இங்குள்ள சிங்கங்களுக்கு தெரிந்தும் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு கொட்டாவி விடுகினம் ஆக்கும் .🤣 சிங்கங்கள விடுங்கோ. கொள்கையில்லாத ஆட்கள். நாங்கள் அப்படியா? திமுக இந்த இனத்தின் வரலாற்று எதிரி. சமரசம் இன்றி களமாடுவோம். ஈழப்படுகொலையில் கருணாநிதி கூட்டு குற்றவாளி. ஒரு போதும் இனி திமுக ஆட்சி கட்டிலில் ஏற, நாம் தமிழர் விடமாட்டோம். மண்டியிடா மானம்…. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 2 minutes ago, தமிழ் சிறி said: அதை வெளியே காட்டிக் கொண்டால்.... தீம்காவிற்கு.... எப்பிடி, முட்டுக் கொடுக்கிறது என்று, தீக்கோழி மாதிரி... தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள். 😁😂🤣 ஒரு பார்ப்பனம் சொல்கின்றது தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதியாம். அந்த பெண்ணுக்கு இங்கே ஒரு சிலர் ஆலவட்டம் பிடிக்கின்றார்கள். ஏனெனில் அவர் பெண்ணாம். 😁 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 4 minutes ago, goshan_che said: சிங்கங்கள விடுங்கோ. கொள்கையில்லாத ஆட்கள். நாங்கள் அப்படியா? திமுக இந்த இனத்தின் வரலாற்று எதிரி. சமரசம் இன்றி களமாடுவோம். ஈழப்படுகொலையில் கருணாநிதி கூட்டு குற்றவாளி. ஒரு போதும் இனி திமுக ஆட்சி கட்டிலில் ஏற, நாம் தமிழர் விடமாட்டோம். மண்டியிடா மானம்…. அரசியலில் அதெல்லாம் சகஜமுங்கோ 🤣 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 18 minutes ago, தமிழ் சிறி said: பிராமணர்களுக்கும்... 4,000 ரூபாய் உதவித் தொகை கொடுத்து... வேறை “ரூட்டிலை” போகிறார்கள் போலுள்ளது இதை பற்றி ஸ்டாலினிடம் சீமான் மிக கடுமையாக, கிட்டதட்ட மிரட்டும் தொனியில் பேசி இருக்க கூடும். பயந்துபோய் ஸ்டாலின் இந்த திட்டத்தை இத்தோட நிறுத்தி விடுவார். இவை எனது ஊகங்கள். 2 minutes ago, குமாரசாமி said: ஒரு பார்ப்பனம் சொல்கின்றது தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதியாம். அந்த பெண்ணுக்கு இங்கே ஒரு சிலர் ஆலவட்டம் பிடிக்கின்றார்கள். ஏனெனில் அவர் பெண்ணாம். 😁 மதுவந்தி பொம்பிளையா…இதென்ன புது புரளி🤣 5 minutes ago, பெருமாள் said: அரசியலில் அதெல்லாம் சகஜமுங்கோ 🤣 #பப்ளிக் #பப்ளிக் 🤣 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 Just now, goshan_che said: இதை பற்றி ஸ்டாலினிடம் சீமான் மிக கடுமையாக, கிட்டதட்ட மிரட்டும் தொனியில் பேசி இருக்க கூடும். பயந்துபோய் ஸ்டாலின் இந்த திட்டத்தை இத்தோட நிறுத்தி விடுவார். இவை எனது ஊகங்கள். பாஸ் திமுக என்பது மாபெரும் கட்சி அவர்களின் நிதி மூலம்கள் உலகின் பல பகுதிகளிலும் வேறு பெயர்களில் உள்ளன இலங்கையில் உள்ள கடன்களை ஒரே மூச்சில் அடைக்க கூடிய வல்லமை உள்ளவர்கள் . ஸ்டானிலுக்கு நிர்வாக திறமை தற்போது இல்லையாகினும் ஆட்சி அதிகாரம் கொண்டுவந்துவிடும் இல்லையேல் பிஜேபி பருந்து கொத்தி விடும் இதுதான் யதார்த்தம் உங்கள் நக்கல் நளினம் திமுக ஆட்சியை முழுமையாக முடிக்கும் போது வைத்து கொள்ளுங்கள் . 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 12 minutes ago, குமாரசாமி said: ஒரு பார்ப்பனம் சொல்கின்றது தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதியாம். அந்த பெண்ணுக்கு இங்கே ஒரு சிலர் ஆலவட்டம் பிடிக்கின்றார்கள். ஏனெனில் அவர் பெண்ணாம். 😁 11 minutes ago, goshan_che said: மதுவந்தி பொம்பிளையா…இதென்ன புது புரளி🤣 மதுவந்தியின் கணவர், மதுவந்தியிடம் இருந்து... விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறாராம். அதனால்... மதுவந்தி பெண் என்பது உறுதியாகின்றது. 🤣 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted June 4, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2021 Just now, பெருமாள் said: பாஸ் திமுக என்பது மாபெரும் கட்சி அவர்களின் நிதி மூலம்கள் உலகின் பல பகுதிகளிலும் வேறு பெயர்களில் உள்ளன இலங்கையில் உள்ள கடன்களை ஒரே மூச்சில் அடைக்க கூடிய வல்லமை உள்ளவர்கள் . ஸ்டானிலுக்கு நிர்வாக திறமை தற்போது இல்லையாகினும் ஆட்சி அதிகாரம் கொண்டுவந்துவிடும் இல்லையேல் பிஜேபி பருந்து கொத்தி விடும் இதுதான் யதார்த்தம் உங்கள் நக்கல் நளினம் திமுக ஆட்சியை முழுமையாக முடிக்கும் போது வைத்து கொள்ளுங்கள் . நானும் அப்படித்தான் நினைத்தேன். தி மு கவில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு சீமானின் பேட்டி பார்த்தீர்களா? கீழே இணைப்பு. ஆட்சி மிக சிறப்பாக நடக்கிறது என்கிறார். அப்படியே ஷாக் ஆயிட்டேன். நாம்தான் இதுநாளும் தி மு க வை தப்பாக எடை போட்டு விட்டோமோ? என்ன தான் அரசியல் நாகரிகம் என்றாலும் இந்த இனத்தின் பரம வைரிகளை சீமான் புகழமாட்டார்தானே? முள்ளிவாய்க்கால் கொலையில் கருணாநிதிக்கு பங்கு என்றால், அவரின் படத்துக்கு கீழ் அவரின் மகனுடன் சீமான் ஒரு போதும் போஸ் கொடுக்க மாட்டார்தானே? (சீமான் ஒன்றும் திருமா இல்லையே). ஆகவே திமுகவை நாம் தாம் பிழையாக எடை போட்டு விட்டோம் போலிருக்கு. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted June 5, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 5, 2021 1 minute ago, goshan_che said: நானும் அப்படித்தான் நினைத்தேன். தி மு கவில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு சீமானின் பேட்டி பார்த்தீர்களா? கீழே இணைப்பு. ஆட்சி மிக சிறப்பாக நடக்கிறது என்கிறார். அப்படியே ஷாக் ஆயிட்டேன். நாம்தான் இதுநாளும் தி மு க வை தப்பாக எடை போட்டு விட்டோமோ? என்ன தான் அரசியல் நாகரிகம் என்றாலும் இந்த இனத்தின் பரம வைரிகளை சீமான் புகழமாட்டார்தானே? முள்ளிவாய்க்கால் கொலையில் கருணாநிதிக்கு பங்கு என்றால், அவரின் படத்துக்கு கீழ் அவரின் மகனுடன் சீமான் ஒரு போதும் போஸ் கொடுக்க மாட்டார்தானே? (சீமான் ஒன்றும் திருமா இல்லையே). ஆகவே திமுகவை நாம் தாம் பிழையாக எடை போட்டு விட்டோம் போலிருக்கு. பெரிதாய் பாய வேண்டாம் உங்கடை கருத்துக்கள் இதே யாழில் உள்ளன நாளைக்கு தேடி இணைத்து கொள்கிறேன் ஒருமணியாகி விட்டது கோப்பி கடை பக்கம் போகணும் அறுவார் நாளை சனிக்கிழமை 8 மணிக்கு தான் திறப்பார்கள் நமக்கு ஐந்துக்கு முழிப்பு வந்திடும் வம்புக்கு இருமணி நேரம் கண்ணை முடிக்கிடப்பது நரக வேதனை . இனிய இரவு அனைவருக்கும் . Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts