Jump to content

இன்று.... சிவகுமாரின், 47 ஆவது நினைவு தினம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

தமிழீழ விடுதலைப் போரில்... முதல் முதலாக, 
சயனைடு உட்கொண்டு.. சாவினை தழுவிய, வீரத் தமிழ்மகன் சிவகுமாருக்கு வீரவணக்கம்....
🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழரின் விடுதலைக்காக முதல் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த சிவகுமாரன் ; இன்று நினைவு நாள்

 
Sevakumar-04-1.png
 69 Views

ஈழத் தமிழ் மக்களது விடுதலைக்காக முதன் முதலில் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த தியாகி பொன் சிவகுமாரனின் 47 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

1950ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பிறந்து 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பின் போது நஞ்சருந்தி மரணமடைந்தார் பொன் சிவகுமாரன். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர்நீத்தவர் இவராகவே உள்ளார் .

10-2.jpgயாழ்ப்பாணம் உரும்பிராய் பொதுச்சந்தைக்கு அருகில் அவரது நினைவாக நினைவுச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதனைவிட உரும்பிராய் வேம்படி மயானத்தில் அவருக்கு ஒரு நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளமையும் சிறப்பான அம்சம்.

பொன்.சிவகுமாரன் இறக்கும்போது அவருக்கு வயது 23 மட்டுமே. ஈழப்போராட்ட வரலாறுகளின் ஆரம்பம் பெரும்பாலும் மாணவர்களின் முன்னெடுப்புகளால் நிறைந்தது.

தமிழர்களின் கல்வி ஒடுக்குமுறைக்கு வித்திட்டது கல்வித் தரப்படுத்தல். அதனைத் தமிழ் மாணவர்கள் மீது திணித்த போது ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் நஞ்சு (சயனைட்) அருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பொன்.சிவகுமாரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன். மாணவர்களின் பெரும் புரட்சிக்கும் எழுச்சிக்கும் வித்திட்ட ஒரு மூத்த வழிகாட்டியம் கூட.

முதல் தற்கொடையாளன் தியாகி பொன். சிவகுமாரனின் நினைவு நாளாகிய ஜூன் 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஜூன் 6ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.

எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய காலத்தில் சிவகுமாரனின் சாவு இளைஞர்களிடத்திலே ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது.

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அவரது இறுதி நிகழ்வு அமைந்தது.

சிவகுமாரனின் எழுச்சிமிகு செயற்பாடுகள் அப்போதைய இளைய சமூகத்தை கவர்ந்து அவர்பின் அனைவரும் அணிதிரள தொடங்கியமையால் சிவகுமாரனின் தலைக்கு ஐயாயிரம் இலங்கை ரூபா பரிசு தரப்படும் என அரசு அறிவித்தது.

ஈழப் போரில் முதலில் மாணவனாக இருந்து. சயனைட் அருந்தி தற்கொடையாளனாகச் சாவடைந்த இவர், ஈழப்போராட்ட வரலாற்றில் ஒரு விதை!

 

https://www.ilakku.org/?p=51506

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.