Jump to content

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

COVID-19: Pfizer requests emergency authorisation for coronavirus vaccine  in US | UK News | Sky News

கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும். 

உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது அனுபவம்...

கடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள்.

Primary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர் என் ஏ தடுப்பூசியே தரப்பட்டது.

உங்களுக்கு தடுப்பூசி போட முதல் ஒவ்வாமை.. மற்றும் நீண்ட நாட்பட்ட நோய்கள் மற்றும்.. சிலவகை மருந்துகளை எடுக்கிறீர்களா.. 28 நாளைக்குள் கொவிட்-19 கண்டதா.. அல்லது வேறேதும் தடுப்பூசி பெறப்பட்டதாக போன்ற கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் உங்களின் நிலைமைக்கு ஏற்ப உள்ளபடி உங்கள் பதிலை அளியுங்கள். 

தடுப்பூசி போட்டுக் கொள்ள.. உங்களின் தேசிய சுகாதார சேவை இலக்கம் (NHS number) அவசியம்.

அதன் பின்.. இணையவழி பதிவின் மூலம் நேரமும் திகதியும் பதியப்பட்டு.. தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போடும் போது எந்தச் சிக்கலும் இல்லை. போட்ட பின் 15 நிமிடங்கள் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதற்காக காத்திருக்கும் அறையில் காத்திருக்கச் சொல்வார்கள். ஒவ்வாமை பிரச்சனை இல்லை என்றால்.. தரப்பட்ட தடுப்பூசி போட்டது என்பதை உறுதிப்படுத்தும் பத்திரத்தோடு பணிக்குச் சொல்ல அனுமதித்தார்கள்.

தடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடியவில்லை.

ஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை.

மறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது. 

தடுப்பூசி போட்டு 3ம் நாளில் இருந்து எந்தப் பிரச்சனையும் உணரப்படவில்லை.

எம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது.

ஒவ்வொருவரின் உடல் நிலைக்கும் உடல் வலுமைக்கும் ஏற்ப இந்த தடுப்பூசிக்குப் பின்னான குணம் குறிகள் மாறுபடலாம்.

secondary vaccine (Booster)- இரண்டாம் தடுப்பூசி..

இது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும்.

இதேபோல்..

உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்..

நன்றி. 

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

secondary vaccine (Booster)- இரண்டாம் தடுப்பூசி..

இது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும்.

இங்கு முதல் தடுப்பூசி எடுத்து 3-4 கிழமையில் இரண்டாவது ஊசி போடுகிறார்கள்.
எனது மகள் இரண்டாவது ஊசியும் எடுத்துவிட்டா.
கை கொஞ்சம் நோவாக இருந்தது.அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த ஊசி போடுற ஐடியா இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

எம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது.

நண்பர்கள், உறவினர்கள் என்று பலருக்கு கொரோனா வந்து அவர்களின் கதைகளைக் கேட்டபின்னர், நான் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் தடுப்பூசி போடவுள்ளேன்.  எனது இணை NHS இல் வேலை செய்வதால் போன ஞாயிறு தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஊசிபோட்ட கையில் இரண்டுநாள் நோவைத் தவிர வேறு எதுவித அறிகுறிகளும் இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

தடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடியவில்லை.

ஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை.

மறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது. 

நாம் சிறுவயதில் போட்ட தடுப்பு ஊசிகளுக்கும் இதே பின் விளைவுகள் இருந்தது தானே?. ஊசி போட்ட இடத்தில் சிதல்கூட்டி புண் வந்திருக்கும். எனக்கு நான்கு அடையாளங்கள் இருக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் நல்லதொரு அனுபவபகிர்வு. பலருக்கு இது பயன் படும்.

நன்றி நெடுக்கர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கு முதல் தடுப்பூசி எடுத்து 3-4 கிழமையில் இரண்டாவது ஊசி போடுகிறார்கள்.
எனது மகள் இரண்டாவது ஊசியும் எடுத்துவிட்டா.
கை கொஞ்சம் நோவாக இருந்தது.அவ்வளவு தான்.

ஆம் ஆரம்பத்தில் இங்கும் 21 நாள் இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசி போடுவது பற்றி சிந்தித்து செயற்பட்டார்கள். ஆனால்.. இப்போது குறைந்தது முதலாவது தடுப்பூசியையாவது அதிகம் பேருக்கும் முதலில் அளிக்க வேண்டும் என்ற நோக்கிலும்.. முதலாவது தடுப்பூசி தரும் நிர்ப்பீடனம்.. 3 மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கும் என்ற கணிப்பிலும்.. 3 வாரம் என்பது 3 மாதங்களாக மாற்றப்பட்டுள்ளது. 

அமெரிக்கா இந்த தடுப்பூசியை தயாரிக்கும் நாடு என்பதால்.. ஜேர்மனியில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்..  உங்களுக்கு முன்னுரிமை உண்டு. உலகில் அதிகம் கொவிட்-19 பாதிப்புக் கண்ட நாடாகவும் அமெரிக்காவே விளங்குகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ் ..... இது போன்ற அனுபவப் பதிவுகளால் பயம் கொஞ்சம் குறையலாம்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

எனக்கு இந்த ஊசி போடுற ஐடியா இல்லை .

உங்களைப் போன்றவர்களுக்கும் பாதுகாப்புக்கு ஒரு நேரம் வரும்.. அதாவது Herd immunity என்பதற்கான வாய்ப்பு வரும் போது. அதாவது தொற்று மூலம் நிர்ப்பீடனம் கண்டோடும்  மற்றும் தடுப்பூசி மூலம் நிர்ப்பீடனம் கண்டோரும் சமூகத்தில் அதிகரிக்கும் போது கொவிட்-19 சமூகப் பரவல் என்பதை இயல்பாகக் கட்டுப்படுத்தும் போது.

What is herd immunity and how many people need to be vaccinated to protect  a community?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவி    NHSவேலை செய்வதால் இன்று 10.30 மணிக்கு தடுப்பூசி(PFIZER) போட்டுக்கொண்டார் இதுவரை பெரிய பின்விளைவுகள் வரவில்லை.எனது மாமியார்80 வயது கடந்த 4 நாட்களுக்குமன் போட்டுக்கொண்டார் அவருக்கு எந்தப் பின்விளைவுகளும் வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கு இந்த ஊசி போடுற ஐடியா இல்லை .

ஊசி போடாவிட்டால் விமானபயணம் செய்ய முடியாது.
ஊசி போட்ட அத்தாட்சி இருந்தால்த் தான் நாட்டுக்குள் விடுவோம் என்று பல நாடுகளும் சட்டம் இயற்றலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அமெரிக்கா இந்த தடுப்பூசியை தயாரிக்கும் நாடு என்பதால்.. ஜேர்மனியில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்.. 

எனக்கு உந்த ஒரு வசனமே காணும். என்ரை பிரிட்டிஷ் மச்சானை கவுட்டு மூடுறதுக்கு...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

எனக்கு உந்த ஒரு வசனமே காணும். என்ரை பிரிட்டிஷ் மச்சானை கவுட்டு மூடுறதுக்கு...😎

மீனுக்குத் தூண்டில் போட்டு லட்சம் பேரை பிடித்த இளம்பெண்

தூண்டில் போடுகிறவர் கண்ணாடி போட்டிருந்தாலும் கண் எப்போதும் மிதவையில்தான் இருக்கும்.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேத்த பதிவுக்கு நன்றி.நானும் ஊசி போடுவதில் பெரும் குழப்பத்தில் இருக்கிறேன்.எனது குடும்ப வைத்தியரை (புதியவர்)கேட்க்க அவர் போடுவது நல்லம் ஆனால் நீங்கள் தான் முடிவெடுக்க வேணும் என்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் ஊசி போட்ட 23 முதியவர்கள் இறந்ததாக பத்திரிகை செய்தி சொல்கிறது.

Link to comment
Share on other sites

10 minutes ago, ஈழப்பிரியன் said:

நோர்வேயில் ஊசி போட்ட 23 முதியவர்கள் இறந்ததாக பத்திரிகை செய்தி சொல்கிறது.

https://nypost.com/tag/covid-vaccine/
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

நோர்வேயில் ஊசி போட்ட 23 முதியவர்கள் இறந்ததாக பத்திரிகை செய்தி சொல்கிறது.

ஜேர்மனியிலும் ஊசி போட்ட பத்து முதியவர்களுக்கு கிட்ட இறந்துள்ளார்களாம்.. செய்திகளில் வாசிக்கமுடிந்தது..கனடாவில்்்Nhsகற்கு பணியாற்றுபவர்களும் ஊசி போடுவதாக தெரிய வில்லை.. கட்டாயமாக்கப் பட்டால் போட்டுக் கொள்ள இருக்கிறார்களாம்..குறிப்பாக home visit Psw workers and house keeping.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, யாயினி said:

தடுப்பூசி பற்றி பயங்காட்டும் செய்திகள் அதிகம் பரவும் காலம் இது. சமூகவலைத் தளங்களில் இதற்கென்றே பலர் தீயாக வேலை செய்கின்றார்கள்.😀

நோர்வேயில் 23 எண்பது வயதுக்கு மேற்பட்ட care home இல் இருந்தவர்கள் தடுப்பூசி போட்ட பின்னர் இறந்ததாக பிரித்தானிய tabloid (மஞ்சள்/பரபரப்பு) பத்திரிகைகளில் வந்தன. அதில் 13 பேர் மட்டும்தான் side effects காரணமாக இறந்தாலும், தடுப்பூசி பாதுகாப்பானது என்றுதான் நோர்வே அதிகாரிகள் சொல்லியுள்ளனர். அவர்கள் தடுப்பூசி போடுவதையும் நிறுத்தியதாக செய்தியில்லை. 

பிரித்தானியாவில் 3.5 மில்லியன் மக்களுக்கு முதல் dose உம் 1/2 மில்லியன் மக்களுக்கு இரண்டாவது dose உம் போட்டாயிற்று. இங்கு  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொத்துக்கொத்தாக சாகவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nedukkalapoovan said:

COVID-19: Pfizer requests emergency authorisation for coronavirus vaccine  in US | UK News | Sky News

கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும். 

உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது அனுபவம்...

கடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள்.

Primary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர் என் ஏ தடுப்பூசியே தரப்பட்டது.

உங்களுக்கு தடுப்பூசி போட முதல் ஒவ்வாமை.. மற்றும் நீண்ட நாட்பட்ட நோய்கள் மற்றும்.. சிலவகை மருந்துகளை எடுக்கிறீர்களா.. 28 நாளைக்குள் கொவிட்-19 கண்டதா.. அல்லது வேறேதும் தடுப்பூசி பெறப்பட்டதாக போன்ற கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் உங்களின் நிலைமைக்கு ஏற்ப உள்ளபடி உங்கள் பதிலை அளியுங்கள். 

தடுப்பூசி போட்டுக் கொள்ள.. உங்களின் தேசிய சுகாதார சேவை இலக்கம் (NHS number) அவசியம்.

அதன் பின்.. இணையவழி பதிவின் மூலம் நேரமும் திகதியும் பதியப்பட்டு.. தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போடும் போது எந்தச் சிக்கலும் இல்லை. போட்ட பின் 15 நிமிடங்கள் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதற்காக காத்திருக்கும் அறையில் காத்திருக்கச் சொல்வார்கள். ஒவ்வாமை பிரச்சனை இல்லை என்றால்.. தரப்பட்ட தடுப்பூசி போட்டது என்பதை உறுதிப்படுத்தும் பத்திரத்தோடு பணிக்குச் சொல்ல அனுமதித்தார்கள்.

தடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடியவில்லை.

ஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை.

மறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது. 

தடுப்பூசி போட்டு 3ம் நாளில் இருந்து எந்தப் பிரச்சனையும் உணரப்படவில்லை.

எம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது.

ஒவ்வொருவரின் உடல் நிலைக்கும் உடல் வலுமைக்கும் ஏற்ப இந்த தடுப்பூசிக்குப் பின்னான குணம் குறிகள் மாறுபடலாம்.

secondary vaccine (Booster)- இரண்டாம் தடுப்பூசி..

இது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும்.

இதேபோல்..

உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்..

நன்றி. 

காலம் கருதிய பதிவுக்கு நன்றி நெடுக்ஸ்.

எனது சகோதரர்கள் இருவரும், நண்பர்கள் இருவரும் போட்டு இப்போ 3 கிழமைக்கு மேல் ஆகிறது.

சொல்லி கொள்ளும்படி பக்க விளைவுகள் ஏதுமில்லை. ஆனால் அவர்களுக்கு எந்த உடல் உபாதையும் இல்லை.

யூகேயில் இருக்கும் இடத்தை பொறுத்து போடும் விகிதம் மாறுபடுகிறது போல் தெரிகிறது.

எனது தாயாரை தவிர உறவினர் 4 பேர்  எனது நேரடி-அற்ற கண்காணிப்பில் உள்ளார்கள். இவர்களில் எனது தாயாரை விட வயது குறைந்த ஒருவருக்கு போன கிழமை போட்டார்கள். தாயாருக்கு போன் பண்ணி கேட்டாலும், கூப்பிடும் வரை பொறுங்கள் என்பதே பதில்.

ஊசி போட்டு கொண்டவர் 70 வயதுக்கு மேலானவர். அதிக பருமன் உள்ளவர் ஆனால் வேறு எந்த பிரச்சனையும்மில்லை. அவருக்கும் ஒரு பக்க விளைவும் இல்லை.

பிற்சேர்க்கை:

சகோதரர்கள் 17ம் திகதி போட்டார்கள். ஒரு மாதம் ஆகி விட்டது. ஒருவருக்கு லேசான தொய்வு, அலர்ஜி சின்ன வயதில் இருந்தது. ஆனால் அவருக்கும் ஊசி போட்ட பின் பெரிய விளைவுகள் ஏதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

எனக்கு இந்த ஊசி போடுற ஐடியா இல்லை .

2 hours ago, சுவைப்பிரியன் said:

காலத்துக்கேத்த பதிவுக்கு நன்றி.நானும் ஊசி போடுவதில் பெரும் குழப்பத்தில் இருக்கிறேன்.எனது குடும்ப வைத்தியரை (புதியவர்)கேட்க்க அவர் போடுவது நல்லம் ஆனால் நீங்கள் தான் முடிவெடுக்க வேணும் என்கிறார்.

இது உங்கள் தனிப்பட்ட முடிவு. யோசித்து எடுங்கள்.

ஆனால் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மறவாதீர்கள்.

மேலே நெடுக்கு சொன்ன மந்தை எதிர்ப்பு சக்தி herd immunity - வருவதற்கும் ஒரு சனத்தொகையில் குறிப்பிட்ட அளவு ஆட்கள் ஊசி போட்டோ, வேறு வழியிலோ நோயெதிர்ப்பு சக்தியை பெற்றாலே முடியும்.

எல்லாரும் “என்னால் முடியாது” என ஒதுங்கினால் herd immunity வர மிகவும் பிந்தும்.

23 வயது பிள்ளைகளே போட்டு கொண்டு வேலைக்கு போகிறார்கள்.

தனிப்பட்டு - என்னை கூப்பிட்டவுடன் ஓடிப்போய் குத்துவதே என் தீர்மானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎01‎-‎2021 at 17:14, nedukkalapoovan said:

COVID-19: Pfizer requests emergency authorisation for coronavirus vaccine  in US | UK News | Sky News

கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும். 

உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது அனுபவம்...

கடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள்.

Primary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர் என் ஏ தடுப்பூசியே தரப்பட்டது.

உங்களுக்கு தடுப்பூசி போட முதல் ஒவ்வாமை.. மற்றும் நீண்ட நாட்பட்ட நோய்கள் மற்றும்.. சிலவகை மருந்துகளை எடுக்கிறீர்களா.. 28 நாளைக்குள் கொவிட்-19 கண்டதா.. அல்லது வேறேதும் தடுப்பூசி பெறப்பட்டதாக போன்ற கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் உங்களின் நிலைமைக்கு ஏற்ப உள்ளபடி உங்கள் பதிலை அளியுங்கள். 

தடுப்பூசி போட்டுக் கொள்ள.. உங்களின் தேசிய சுகாதார சேவை இலக்கம் (NHS number) அவசியம்.

அதன் பின்.. இணையவழி பதிவின் மூலம் நேரமும் திகதியும் பதியப்பட்டு.. தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போடும் போது எந்தச் சிக்கலும் இல்லை. போட்ட பின் 15 நிமிடங்கள் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதற்காக காத்திருக்கும் அறையில் காத்திருக்கச் சொல்வார்கள். ஒவ்வாமை பிரச்சனை இல்லை என்றால்.. தரப்பட்ட தடுப்பூசி போட்டது என்பதை உறுதிப்படுத்தும் பத்திரத்தோடு பணிக்குச் சொல்ல அனுமதித்தார்கள்.

தடுப்பூசி போட்ட பின் உடனடியாக எந்த தாக்கமும் உணர முடியவில்லை.

ஆனால் ஒரு 6 மணித்தியலாங்கள் கழித்து தடுப்பூசி போட்ட இடத்தில் நோவு ஆரம்பித்தது. அதன் பின் அன்றைய தினம் இரவு லேசான காய்ச்சல்.. மற்றும் தலையிடி. வாய் கசப்பு இருந்தது. அதற்கு எந்த மருத்துவமும் எடுக்கவில்லை.

மறுநாள் காலையில்... தடுப்பூசி போட்ட கையை உயர்த்த முடியாத அளவுக்கு நோவு இருந்தது. சுடு நீர் சவர் எடுத்தேன். சிறிதளவு தலைச் சுற்றும் இருந்தது. காய்ச்சல் லேசாக நீடித்தது. இருந்தாலும் நல்ல உணவு.. மற்றும் போதிய அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்ட பின் நிலைமை சீரடைந்தது. 

தடுப்பூசி போட்டு 3ம் நாளில் இருந்து எந்தப் பிரச்சனையும் உணரப்படவில்லை.

எம்மோடு தடுப்பூசி போட்டுக் கொண்டோரில்.. எல்லாருக்கும் இருந்த பொது அறிகுறி.. ஊசி போட்ட கைப் பகுதியில் வீக்கமும் நோவும்... தான். அதுவும் 48 மணி நேரத்தில் சரியாகிவிட்டது.

ஒவ்வொருவரின் உடல் நிலைக்கும் உடல் வலுமைக்கும் ஏற்ப இந்த தடுப்பூசிக்குப் பின்னான குணம் குறிகள் மாறுபடலாம்.

secondary vaccine (Booster)- இரண்டாம் தடுப்பூசி..

இது தற்போதைய நடமுறையில்.. முதல் தடுப்பூசி எடுத்து 12 வாரங்களில் போடப்படும். அதற்கான முன்பதிவை முதல் தடுப்பூசி எடுத்ததும் அல்லது எடுக்க முன்பதிவு செய்ததும் மேற்கொள்ள முடியும்.

இதேபோல்..

உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்..

நன்றி. 

நெடுக்ஸ் , இந்த ஊசி போட்டவர்கள் அதற்கு பிறகு மாஸ்க் போடாமல் பயமில்லாமல்  வெளியே போகலாமா ?
 
19 hours ago, ஈழப்பிரியன் said:

ஊசி போடாவிட்டால் விமானபயணம் செய்ய முடியாது.
ஊசி போட்ட அத்தாட்சி இருந்தால்த் தான் நாட்டுக்குள் விடுவோம் என்று பல நாடுகளும் சட்டம் இயற்றலாம்.

அதை  நானும் கேள்விப் பட்டேன்...பொறுத்திருந்து பார்ப்போம் 
 
1 hour ago, goshan_che said:

இது உங்கள் தனிப்பட்ட முடிவு. யோசித்து எடுங்கள்.

ஆனால் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மறவாதீர்கள்.

மேலே நெடுக்கு சொன்ன மந்தை எதிர்ப்பு சக்தி herd immunity - வருவதற்கும் ஒரு சனத்தொகையில் குறிப்பிட்ட அளவு ஆட்கள் ஊசி போட்டோ, வேறு வழியிலோ நோயெதிர்ப்பு சக்தியை பெற்றாலே முடியும்.

எல்லாரும் “என்னால் முடியாது” என ஒதுங்கினால் herd immunity வர மிகவும் பிந்தும்.

23 வயது பிள்ளைகளே போட்டு கொண்டு வேலைக்கு போகிறார்கள்.

தனிப்பட்டு - என்னை கூப்பிட்டவுடன் ஓடிப்போய் குத்துவதே என் தீர்மானம்.

நன்றி ,,,நீங்கள் கொரோனாவுக்கு பயத்தில் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கிறீர்கள்😆 ...கட்டாயம் போடத் தான் வேண்டும் .
என்னைப் பொறுத்த வரை எதுவும் என் கைகளில் இல்லை ...கொரோனா வந்து போடத் தான் வேண்டும் என்றால் ஒன்றும் செய்யேலாது 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

நன்றி ,,,நீங்கள் கொரோனாவுக்கு பயத்தில் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கிறீர்கள்😆 ...கட்டாயம் போடத் தான் வேண்டும் .

🤣 எவ்வளவு காலத்துக்குத்தான் ஒன்லைன் வாழ்க்கை வாழ முடியும்.🤣

யாழில் எனக்கு கட்டணம் அறவிடவும் கூடும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நோர்வேயில் 23 எண்பது வயதுக்கு மேற்பட்ட care home இல் இருந்தவர்கள் தடுப்பூசி போட்ட பின்னர் இறந்ததாக பிரித்தானிய tabloid (மஞ்சள்/பரபரப்பு) பத்திரிகைகளில் வந்தன. அதில் 13 பேர் மட்டும்தான் side effects காரணமாக இறந்தாலும், தடுப்பூசி பாதுகாப்பானது என்றுதான் நோர்வே அதிகாரிகள் சொல்லியுள்ளனர். அவர்கள் தடுப்பூசி போடுவதையும் நிறுத்தியதாக செய்தியில்லை. 

அமெரிக்காவில் இப்படியான செய்திகள் இதுவரை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

நெடுக்ஸ் , இந்த ஊசி போட்டவர்கள் அதற்கு பிறகு மாஸ்க் போடாமல் பயமில்லாமல்  வெளியே போகலாமா ?

இல்லை. அரசாங்கம் அதன் மருத்துவ.. விஞ்ஞான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய..  அறிவிக்கும் வரை தொடர்ந்து அணிய வேண்டும்.

மேலும்.. புதிய மாறல் கொவிட்-19 வைரசுக்களின் தாக்கமும் இந்தத் தடுப்பூசியின் விளைவுகளும் பொறுத்து சரியான உறுதிப்படுத்தல்கள் வரும் வரை.. எல்லா தனிநபர் பாதுகாப்பு பொறிமுறைகளும் பின்பற்றப்பட்டே ஆக வேண்டும். 

தொற்றுக் கண்டவரோடு.. தொற்றற்றவர்கள் நெருங்கிப் பழகினால் அவர்கள்.. அந்த வைரசின் பெளதீகக் காவிகளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே.. எல்லா சுகாதார நடைமுறைகளும்.. எந்த அரசாங்க அறிவித்தலும் இன்றி கைவிடப்பட முடியாது. அது தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

Link to comment
Share on other sites

10 hours ago, suvy said:

மீனுக்குத் தூண்டில் போட்டு லட்சம் பேரை பிடித்த இளம்பெண்

தூண்டில் போடுகிறவர் கண்ணாடி போட்டிருந்தாலும் கண் எப்போதும் மிதவையில்தான் இருக்கும்.....!  😂

இருக்கலாம். இதைப் பார்ப்பவர்கள் கண்கள் எங்கெல்லாம் மேயும் என்பதையும் சொல்லியிருக்கலாமே சுவித்தம்பி.😍🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

இல்லை. அரசாங்கம் அதன் மருத்துவ.. விஞ்ஞான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய..  அறிவிக்கும் வரை தொடர்ந்து அணிய வேண்டும்.

மேலும்.. புதிய மாறல் கொவிட்-19 வைரசுக்களின் தாக்கமும் இந்தத் தடுப்பூசியின் விளைவுகளும் பொறுத்து சரியான உறுதிப்படுத்தல்கள் வரும் வரை.. எல்லா தனிநபர் பாதுகாப்பு பொறிமுறைகளும் பின்பற்றப்பட்டே ஆக வேண்டும். 

தொற்றுக் கண்டவரோடு.. தொற்றற்றவர்கள் நெருங்கிப் பழகினால் அவர்கள்.. அந்த வைரசின் பெளதீகக் காவிகளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே.. எல்லா சுகாதார நடைமுறைகளும்.. எந்த அரசாங்க அறிவித்தலும் இன்றி கைவிடப்பட முடியாது. அது தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

நன்றி நெடுக்ஸ் ...ஊசி போட்ட பின்னும் எல்லாத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் பிறகெதற்கு ஊசி போடுவான்?

18 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் இப்படியான செய்திகள் இதுவரை இல்லை.

மறைச்சிருப்பினம் 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.