கருத்துக்கள உறவுகள் நிலாமதி பதியப்பட்டது June 6, 2021 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது June 6, 2021 வணக்கம் சேர் ..... இந்த வருட இறுதி பரீடசை நல்ல படியாக பாஸ் செய்யவேண்டுமென குல தெய்வம் கருப்புசாமியிடம் வேண்டுதல் செய்துள்ளேன். எனது அடுத்த கல்லூரி நுழைவுக்கு ஆங்கிலம் கடடாய பாடம் . தயவு செய்து 40 புள்ளியாவது போட்டு பாஸ் பண்ணி விடவும். எப்படியும் மற்ற பாடங்களில் தேறி விடுவேன். ஆங்கிலம் மட்டும் ஏறவே ஏறாது பக்கத்துவீட்டு ராமு டுஷன் வகுப்புக்கு போகிறவன் பாஸ் செய்து விடுவான். நான் பெயிலானால் அவன் அம்மா , என் அம்மவை ஏளனமாக கதைப்பார் . நாங்க வறுமை படட குடும்பம் அம்மா களை எடுக்க போய் தான் எங்களுக்கு சாப்பாடு தந்து வளர்கிறா. அப்பா கோவித்துப்போய் மூணுவருஷங்களாகிறது . எனக்கு கீழே இரண்டு தங்கைமார். நான் படிச்சு வேலைக்கு போய் அம்மா வுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். தயவு செய்து என்னை தலைமை ஆசிரியையிடம் போட்டு கொடுக்க வேண்டாம். மன்றாட் டமாக கேட்க்கிறேன்.ஒரு நாற்பது புள்ளிகள் மட்டும் போதும் நான் பாஸாகி விடுவேன். இத்துடன் நான் களைபிடுங்க போன காசு பத்து ரூபாய் இணைத்துள்ளேன். நான் யாருக்கும் சொல்ல மாடடேன். சார் ...தயவு பண்ணி ....என்னை ஆங்கிலத்தில் பாஸ் செய்து விடணும். கோவாலு எனும் கோபால கிருஷ்ணன். ஆசிரியர் என்ன செய்வார் ? 3 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புங்கையூரன் Posted June 6, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 6, 2021 ஆசிரியர் அந்தப் பத்து ரூபாயை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும்! பெடி எல்லா வாத்தி மாருக்கும் அவரவர் பாடங்களைப் போட்டுக் கடிதம் எழுதியிருக்கும்! பார பட்சம் காட்டக் கூடாது! Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பிரபா சிதம்பரநாதன் Posted June 6, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 6, 2021 ஆசிரியராக உள்ள ஒருவருக்கு குறைந்தபட்சம் தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பநிலை, பொருளாதார மற்றும் பழக்கவழக்கங்களை பற்றிய அடிப்படை அறிவாவது தெரிந்திருக்கும்.. தெரிந்திருக்கவேண்டும்.. ஆகையால் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு, இந்த மாதிரி செய்யவதால் ஏற்படும் பிரச்சனைகளின் பாதிப்பை கூறவேண்டும். அதுமட்டுமல்ல கட்டாயம் இன்னொரு வாய்ப்பு வழங்கவேண்டும்.. ஏனெனில் அந்த மாணவனை இப்படி செய்ய தூண்டியது அந்த மாணவனது குடும்ப நிலையே காரணம்.. இவ்வளவும் அந்த மாணவன் உண்மையிலேயே வசதி குறைந்தவனாக இருந்தால் மட்டுமே செய்யவேண்டும் 3 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Paanch Posted June 6, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted June 6, 2021 ஆசிரியர் அந்த மாணவனுக்கு, அவன் ஆங்கிலம் கற்றுத் தேறுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும். வறுமை அவர்களுக்குப் புதிதல்ல, அதனைத் தாங்கிக்கொள்ளும் மன உரத்தைப் பெற்றுக்கொண்டதாகவே அந்தக் குடும்பநிலை தெரிவிக்கிறது. ஆகவே இந்தத்தடவை அந்த மாணவன் பெயிலானாலும் அடுத்ததடவை கல்லூரி நுழைவுக்கான தகுதிக்கு அவனை உருவாக்கிவிட வேண்டும். அதனை அந்த ஆசிரியராலேயே மேற்கொள்ள முடியும். 1 Quote Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.