Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+
 • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!

----------------------------------------------

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உலகின் அங்கீகரிக்கப்பட்ட நாட்டிடம் இருக்கும் மரபுவழிப்படை போன்று முப்படைகளையும் கொண்டிருந்ததது. அம்முப்படைகளுடன் சேர்த்து முற்றிலும் புதிதாக ஓர் படையையும் கொண்டிருந்தனர்.. அதுதான் தற்கொடைப்படை, அதாவது கரும்புலிகள் என்று அவர்கள் மொழியில்.. இவைதான் அவர்களிடம் இருந்த தமிழர்களின் புதுமைக்கால நாற்படைகள் ஆகும்.. அவை மொத்தமாக,

 1. தரைப்புலிகள்
 2. வான்புலிகள்
 3. கடற்புலிகள்
 4. கரும்புலிகள்

இத்துடன் வேவுப்புலிகள் என்னும் ஐந்தாம் படையையும் அவர்கள் வைத்திருந்தனர் . இவர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடல்லாமல் நிழலராசாக(de-facto) செயற்பட்டதால் படைவீரர்கள் எனாமல் போராளிகள் எனப்பட்டனர்.

 • எண்ணிக்கை: 15 - 17ஆ ( மக்கள்படை & பணியாளர்கள் நீங்கலாக)
 • வீரச்சாவு = ~27,000 (2009 மே-19 வரை களமாடி மடிந்தோர்… )
 • ஆயுதம் மௌனித்து சிங்களத்திடம் சென்றபிறகு அங்கு சரணடைந்தோர்: ~15,000
  • இவர்களில் பதின்மூவாயிரத்து எழுநூற்றுச் சொச்சம் பேர்தான் தன்னிடம் இருப்பதாக கோத்தபாய மாமா முன்னொரு காலத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். அவர்களில் ஆயிரத்து எண்ணூற்றுச் சொச்சம்பேர் 'முதற் தரக் குற்றவாளிகளாகவும்' பதினோராயிரத்து தொள்ளாயிரத்திச் சொச்சம்பேர் 'இரண்டாந் தரக் குற்றவாளிகளாகவும்' அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக அந்தக் காலத்தில் (2015 கிட்டதாக) செய்திகள் வெளிவந்திருந்தது.

இவ்வியக்கத்தினரின்,

 • பழைய பெயர்: புதிய தமிழ்ப் புலிகள் (1972 இல் 'மாமனிதர்' இராசரத்தினம் அவர்களால் சூட்டப்பட்டது)
 • புதிய பெயர்: தமிழீழ விடுதலைப் புலிகள்- தவிபு - (5-5-1976 இல் இருந்து)
  • புலிகள் - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்ற பன்மையால் பலவால் தொடர்ந்து சுட்டப்படுகின்றனர்.
 • பட்டப்பெயர்கள்:
  • இயக்கம் - இப்பெயர் கூலிப்படைகளாகச் செயல்பட்ட மாற்று இயக்கங்கள் ஒழிக்கப்பட்ட பின்னர் மக்களால் புலிகளைக் குறிக்கப் பயன்பட்டது ஆகும்.
  • கொம்பனி - படையின் ஒரு அலகான கொம்பனியை, Company என்று ஆங்கிலத்தில் புலிகள் அழைத்தனர். அதனால் புலிகளிற்கும் இதுவே பெயரானது. இராணுவத்தினருக்கு புரியாது இருக்க புலிகளின் புலனாய்வுத் துறையினரும் மக்களுக்கு தங்களை அடையாளம் காட்ட இந்தப் பெயரை பயன்படுத்தினர். ஆகையால் இது மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. | புலன கிட்டிப்பு(credit): ஐங்கரன் தமிழரசன்
 • பயத்தால் பட்டப்பெயர்:
  • பீரங்கி - இது 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்தில் 'கட்டாய ஆட்சேர்ப்பு' காரணமாக இளைஞர்களால் புலிகளை சுட்டப் பயன்பட்டது ஆகும்.. (அவர்களின் ஓர் குறும்படத்தில் இருந்து இப் பற்றியத்தை எடுத்தேன்)
 • செல்லப்பெயர்:
  • பெடியள்- புலிகள் இயக்கத்தின் தொடக்க காலத்தில் ஆண்களே இருந்ததால் மக்களால் பெடியள் என்று அழைக்கப்பட்டு அதுவே இவர்களை இறுதி வரையும் சுட்டலாயிற்று.
 • உலகத்தால் வழங்கப்பட்ட அடைமொழி:
  • Tamil Tigers - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்பதன் ஒருமையான 'புலி' என்பதையும், அவர்தம் இனம் தமிழர்களாகவும் இருந்ததால் இரண்டையும் ஒன்றிணைத்து 'தமிழ்ப்புலி' என்று அழைக்கப்படலாயினர். இவ்வாறு ஈழத்தினில் வழங்கப்பட்டது மிக அரிதாகும்.

 

சரி இனி படையணிகளைப் பற்றிப் பார்ப்போம். இப்புலனங்களை புலிகள் ஆதரவு இணையத்தளங்கள் மூலமாகவும் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பெற்ற ஒரு சில புத்தகங்களின் துணை கொண்டும் தேடி எடுத்து தொகுத்து பதிவிட்டிருக்கிறேன்.. படித்து அறிந்து கொள்ளவும்…

தரைப்புலிகள் (தரைப்படை ):-

 • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (இதுவே முதலாவது மரபுவழிப் படையணியாகும். இதில் ஈழத்தீவின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆண் வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். பெரும்பாலும் யாழ் & வன்னியைச் போராளிகளே இடம்பெற்றிருந்தனர். உருவாக்கப்பட்டது: 1991 சித்திரை 10 ) | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 1000–2000 (2008)
  • வான்காப்பு அணி(சாள்ஸ் அன்ரனிக்கானது)
  • கன ஆய்தப் பிரிவு
 • ஜெயந்தன் படையணி (இதுவே தரைத் தாக்குதல்களிற்கான பொது ஆண் வீரர்களைக் கொண்டிருந்த படையாணியாகும். ஆனால் இதில் பெரும்பாலும்  தென் தமிழீழத்தைச் சேர்ந்த போராளிகளே இடம்பெற்றிருந்தனர்.) தரிப்பிடம்: மட்டு-அம்பாறை. சில தாக்குதலணிகள் வட தமிழீழத்திலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் | எண்ணிக்கை: 1500-3000 (2008)
  • கன ஆய்தப் பிரிவு
 • விசாலகன் படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: <1000
 • வினோதன் படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: <1000
 • இளங்கோ படையணி  | தரிப்பிடம்: திருகோணமலை . இதன் தளவாய் 'விமல்' என்பவர் ஆவார். | எண்ணிக்கை: <1000
 • அன்பரசி படையணி (இது தரைத் தாக்குதல்களிற்கான பொது பெண் வீரர்களைக் கொண்டிருந்த படையாணியாகும். இதுவே பெயர் சூட்டப்பட்ட முதலாவது மகளீர் படையணியாகும். உருவாக்கப்பட்டது: 1995<) | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 500 - 1000
  • வான்காப்பு அணி
 • மதனா படையணி ( இது தரைத் தாக்குதல்களிற்கான பொது பெண் வீரர்களைக் கொண்டிருந்த படையாணியாகும். உருவாக்கப்பட்டது: 95/96 ) | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 500 - 1000
  • கன ஆய்தப் பிரிவு
 • மாலதி படையணி (இது தரைத் தாக்குதல்களிற்கான பொது பெண் வீரர்களைக் கொண்டிருந்த படையாணியாகும். ) | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500 - 1000 | உருவாக்கப்பட்டது: 1997
  • கன ஆய்தப் பிரிவு
  • சிறப்பு அதிரடிப்படை
   • மாலதி படையணியானது அதற்கு முன்னர் மகளிர் படையணி என்னும் பெயரில் செயல்பட்டு வந்தது. ஜெயசிக்குறுயி எதிர்ச்சமரக் காலத்தின் தொடக்கத்தில் இது மாலதி படையணி என உதயமாகியது.
 • சோதியா படையணி ( இது தரைத் தாக்குதல்களிற்கான பொது பெண் வீரர்களைக் கொண்டிருந்த படையாணியாகும்.) | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500 - 1000 | உருவாக்கப்பட்டது : 1997
  • கன ஆய்தப் பிரிவு
 • திலகா படையணி
 • யாழ் செல்லும் படையணி(ஆ&பெ)
 • ராதா வான்காப்புப் படையணி | (2002 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்படும் வரை இவர்கள் இம்ரான் - பாண்டியனின் ஓர் உறுப்பாக 'ராதா வான்காப்பு அணி' என செயல்பட்டு வந்தனர்.)
  • யேசுதாஸ் பாதுகாப்பு அணி
  • வான் எதிர்ப்பு ஏவுகணையணி
  • வான் கண்காணிப்பு அணி
  • அனைத்துலகத் தொடர்பகம்
 • பூநகரிப் படையணி (2007 - 2008 இறுதிவரை) (ஆ&பெ)
  • சிறப்பு அதிரடிப்படை
  • வேவு அணி
 • கிட்டு பீரங்கிப் படையணி(ஆ&பெ) | உருவாக்கப்பட்டது : 1995
  • முன்னிலை நோக்குநர் அணி | புலன கிட்டிப்பு:
   புஸ்பகுமார் சற்குணநாதன் (இவர்கள் முன்களத்தில் நிற்பார்கள், ஆனால் சமரில் ஈடுபடாமல் தமது உயிரை பணயம் வைத்து சமர்க் களத்தில் தம்மையும் பாதுகாத்துக்கொண்டு பின்களத்தில் இருந்து விடுதலைப் புலிகளால் ஏவப்படும் எறிகணைகளுக்கு ஏற்றக்கோண வேறுபாடு(Elevation Deference) பார்த்து தெரிவிப்பார்கள்.)
 • ஜோன்சன் மோட்டார் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
  • முன்னிலை நோக்குநர் அணி
 • குட்டிசிறி மோட்டார் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: வட தமிழீழம்
  • முன்னிலை நோக்குநர் அணி
 • பசீலன் மோட்டார் பிரிவு (தமிழீழத்தில் பெயர் சூட்டப்பட்ட முதலாவது சேணேவி(artillery) படைத்துறை பிரிவு)
 • மாருதியன் படை | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
 • ரிம் 1.5 விசேட படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
  • இப்படையணி வீரர்கள், இதன் கட்டளையாளரும் தமிழ்த் துரோகியுமான 'துரோகி றொபேட்' ஆல் நேரடியாகவே பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் 'ரிம் 1.5 சொந்த விசேட படையணி' என்றும், இதன் தாக்குதல் திறனால் "அமெரிக்கன் படை" என்றும் மட்டக்களப்பைச் சார்ந்தோரால் அழைக்கப்படுவதுண்டு.
 • 4,1 படையணி (ஆ&பெ) (மீளச் சேர்ந்தோருக்கானது)
 • இம்ரான் - பாண்டியன் படையணி/ சைவர் பிரிவு ( இது தலைவரின் நேரடிக் கட்டளையின் கீழ் செயல்பட்ட ஒரு கூட்டுப் படையணியாகும். 1–10–1992ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்.கட்டைக்காட்டு தாக்குதலின் போதுதான் இவர்களின் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது) இதன் கீழ் இருந்த அணிகள் , பிரிவுகள், படையணிகள் ஆவன:
  • சூரன் கவச அணி
  • பதுங்கித் தாக்குதல் அணிகள்
  • கௌதமன் புலனாய்வு அணி
  • சங்கர் ஆழஊடுருவித் தாக்கும் அணி  - (LTTE's DPU)
  • பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு (பெ) - 1999.04.28 இல் உருவாக்கப்பட்டது
   • சிறப்பு கண்ணிவெடிப் பிரிவு
  • குறிசூட்டுப் பிரிவு (sniper)(ஆ&பெ)
   • மயூரன் குறிசூட்டுப் பிரிவு
   • செண்பகம் குறிசூட்டுப் பிரிவு - (செண்பகம் என்ற குறிசூட்டு துமுக்கியைப் பயன்படுத்துவோர்)
  • சிறப்பு உந்துருளி படையணி | எண்ணிக்கை: <250
   • அதிவேக உந்துருளி சிறப்பு அணி
  • விக்டர் கவச எதிர்புப் படையணி (இப்படையணியின் உந்துகணை சூட்டாளரிற்கு RPG Commando என்னும் அடைமொழி வழங்கப்பட்டிருந்தது)(ஆ&பெ) | எண்ணிக்கை: <1000
   • சிறப்பு உந்துகணை செலுத்திப் பிரிவு(ஆ&பெ)
 • கிழக்கில் தரித்திருந்த ஓர் உந்துகணை செலுத்திப் படையணி.
  • இப்படையணி தனக்கென இலச்சினை எல்லாம் கொண்டிருந்தது. ஆனால் இதன் பெயரை அறிய முடியவில்லை!
 • வண்ணாளன் உந்துருளி படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
 • பாதுகாவலர் பிரிவு(ஆ&பெ)
 • களமுனை முறியடிப்புப் பிரிவு(ஆ&பெ)
 • சிறப்பு வரைபடப் பிரிவு(ஆ&பெ)
 • களமுனை மருத்துவப் பிரிவு(ஆ&பெ)
 • தேசிய மண் மீட்புப் படை [கைத்துப்பு குழு (pistol gang)]
 • தமிழீழ தேசிய துணைப்படை
  • இவர்கள் 1991 வைகாசியில் இருந்து ஆடி 1992 வரை 'எல்லைக் கிராம பாதுகாப்புப் படை' என்ற பெயரால் அழைக்கப்பட்டனர்.
  • நீலன் துணைப்படை(ஆ&பெ)
 • உள்ளக பாதுகாப்புப் படை - திருநகர், பூநகரி என்று ஒவ்வொரு வட்டங்களுக்கும் இருந்தது.
 • மக்கள் படை:-
  • எல்லைப்படை(ஆ&பெ)
   • இவர்கள் 'எல்லைப்புலி ' எனவும் அழைக்கப்பட்டனர்
  • சிறப்பு எல்லைப்படை(ஆ)
   • இவர்கள்  சண்டைப் பயிற்சிபெற்ற எல்லைப்படையினர் ஆவர்
  • ஊரகத் தொண்டர் சிறப்புப் படை(ஆ)
  • போருதவிப்படை(ஆ)
  • கிராமியப்படை(ஆ&பெ) - இதை 'ஈழப்படை' என்றும் மக்கள் அழைப்பர்
   • கிராமிய சிறப்புப் படை
  • உள்ளக மகளீர் பாதுகாப்பு அணி(பெ)

மேலும், புலிகள் தாங்களாக தங்கள் நிருவாகப் பகுதிகளுக்குள் உருவாக்கியிருந்த துறைகளில் ஒவ்வொரு துறையும் தத்தம் பணியாளர்களைத் தனித்தனி தாக்குதலணியாக உருவாக்கி களமுனைகளிற்கு சுழற்சி முறையில் பணிக்கனுப்பியது:

அத்தாக்குதலணிகள் ஆவன,

 • அரசியற்றுறை தாக்குதலணி
 • புலனாய்வுத்துறை தாக்குதலணி
 • வருவாய்த்துறை தாக்குதலணி
 • நிதித்துறை தாக்குதலணி
 • காவற்றுறை தாக்குதலணி
 • மணாளன் தலைமைச் செயலக சிறப்புத் தாக்குதலணி

 

ஈரூடகப்படை ( marines)-

 • சேரன் ஈருடக தாக்குதலணி

 

கடற்புலிகள் (கடற்படை) :- “கடற்புறா “ என்ற சிறு அணி இந்திய தமிழீழ கடல்வழி நகர்வுகளைக்காக உருவாக்கப்பட்டது. அது பின்பு தமிழீழக் கடல் பகுதிகளின் பாதுகாப்புக்காகவும் நடவடிக்கைகளுக்குமாக 1990 ஆம் ஆண்டு படையாக பரிணாம வளர்ச்சி பெற்றது. அதுவே கடற்புலிகள் என்றானது! | எண்ணிக்கை: 2000 - 3000

main-qimg-da0cf1ad2539f58b441c072d3ed1b2ce.jpg

 • ஆசிர் சிறப்பு கடற்றாக்குதல் படையணி
  • (இதுதான் முதலாவது கடற்றாக்குதல் படையணி. இது மேஜர் ஆசிர் நினைவாக கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் சாள்ஸ் அவர்களின் தலைமையில் 1993 தை மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டது ஆகும். பின்னாளில் வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்.)
 • சாள்ஸ் சிறப்பு கடல் தாக்குதலணி(ஆ) (உருவாக்கப்பட்டது : 11-11-1993.
  • இது முதலில் "சிறப்பு கடற் படையணி" என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்)
 • நளாயினி சிறப்பு கடல் தாக்குதலணி(பெ)
  • (இது முதலில் "சிறப்பு கடற் படையணி " என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்)
 • பாக்கியன் ஆழ்கடல் தாக்குதலணி(ஆ & பெ)
 • வசந்தன் படையணி(உருவாக்கப்பட்டது : 1994. பின்னாளில்(~2000) வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்)
 • சங்கர் படையணி(regiment)
 • நரேஷ் படையணி
 • டேவிற் படையணி
 • எழிற்கண்ணன் படையணி
 • கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி
  • புனிதா தரைத்தாக்குதல் அணி(பெ)
  • சுகன்யா தரைத்தாக்குதல் அணி(பெ)
  • சூட்டி தரைத்தாக்குதல் அணி(ஆ)
 • சிறப்புப் படையணி
  • கப்பல் பிரிவு (இதில் பணியாற்றியவர்கள் ஆழ்கடலோடிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களிடம் சொந்தமாக 20–25 கப்பல்கள் இருந்தன. அவற்றுள் 15 போரின் போது மூழ்கடிக்கப்பட்டு விட்டது)
  • சிறப்பு பணிப் பிரிவு
 • நீரடி நீச்சல் பிரிவு
  • கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994) ()
   • (சுலோயன் என்று இருந்த இதன் பெயர் 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது)
  • அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ஆம் மாதத்திற்குப் பின்னர்) (பெ),
 • தமிழீழ கடற் துணைப்படை(ஆ):-
  • தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை:-
   • மறவன் துணைப்படை
   • திருவடி துணைப்படை
   • நவரசன் துணைப்படை
   • ஜோன்சன் துணைப்படை
  • ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்பு துணைப்படை அணி - இது கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கை ஆற்றுதல் அணி ஆகும்
 • சிறப்பு சுற்றுக்காவல் அணி
 • கடல் வேவு அணி
 • வானூர்தி எதிர்ப்பு அணி
 • கடற்கண்காணிப்பு பிரிவு (radar monitoring)
 • சதீஸ் இயந்திரவியல் பிரிவு
  • உள் இணைப்பு இயந்திரத் பிரிவு
  • வெளியிணைப்பு இயந்திரப் பிரிவு
  • டீசல் இயந்திரப் பிரிவு
 • வழங்கல் பிரிவு
 • படகு கட்டுமான பகுதி
  • மங்கை படகு கட்டுமானப் பிரிவு & டேவிட்(சண்முகம்) படகு கட்டுமானப் பிரிவு
   • ஆடியிழை கட்டுத்துறை (Fibreglass yard )
   • மாதிரி கட்டுத்துறை(Model yard) ,
   • மாதிரி கட்டுத்துறை வரைபடபிரிவு
 • மலரவன் வெடிமருந்துப் பிரிவு

இவற்றுடன் கடற்புலிகளிற்கென்று

 • நிருவாகச் செயலகம்
 • அரசியல் துறை
 • புலனாய்வுத் துறை
 • பொறியியல் துறை
 • மருத்துவப் பகுதி

என்பனவும் இருந்தன.

 

வான்புலிகள் (வான்படை ):-

main-qimg-fa50f764479b9c7424f9137a240878bc.jpg

 • வானூர்தித் தாக்குதல் அணி
  • வானோடிகள் அணி
 • ராஜன் கல்விப்பிரிவு
 • வானூர்தி தொழில்நுட்பப் பிரிவு
 • வானூர்தி ஓடுதள பாதுகாப்புப் பிரிவு
 • வான் கண்காணிப்புப் பிரிவு

 

சிறுத்தைப்படை (அதிரடிப் படை):-

main-qimg-b777bb2f4c0bfc32422a518152a7428f.png

 • தரைச் சிறுத்தைகள் - land commando (ஆ&பெ)
 • காட்டுச் சிறுத்தைகள் - forest commando (ஆ&பெ)
 • கடற்சிறுத்தைகள் - naval commando (ஆ&பெ)

 

கரும்புலிகள் (தற்கொடைப்படை)

கரும்புலிகள் பொத்தாம் பொதுவாக 'தடைநீக்கிகள்' என்று அழைக்கப்பட்டனர்.

main-qimg-b4c1359af566be470b035577f0dd7c4e.jpg

 • மறைமுகக் கரும்புலிகள்
 • தரைக் கரும்புலிகள் (இவர்கள் தேசப்புயல்கள் என்றும் அழைக்கப்பட்டனர்)
 • வான் கரும்புலிகள்
 • கடற்கரும்புலிகள் (இவர்கள் உயிராயுதங்கள் என்றும் அழைக்கப்பட்டனர்)
  • நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
   • செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி
   • புகழரசன் கடற்கரும்புலிகள் அணி
  • நீரடி நீச்சல் கரும்புலிகள்
   • கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994) ()
   • அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ஆம் மாதத்திற்குப் பின்னர்) (பெ),

 

என படையணி கட்டுமானங்கள் நிமிர்ந்து நின்றன.

 

இவற்றை விட ஒவ்வொரு களமுனைகளையும் ஒருங்கிணைத்து

 • வடபோர்முனை கட்டளைப் பணியகம்
 • மன்னார் கட்டளைப் பணியகம்
 • மணலாறு கட்டளைப் பணியகம்
 • வவுனியா கட்டளைப் பணியகம்
 • மட்டக்களப்பு கட்டளைப் பணியகம்
 • அம்பாறை கட்டளைப் பணியகம்
 • திருமலை கட்டளைப் பணியகம்

என கட்டளைப் பணியகங்களையும் புலிகள் உருவாக்கியிருந்தனர்.


 

 

புலனாய்வுத்துறை (ஐந்தாம்படை)

→ உளவுத்துறை பெயர்: புலி இயக்கப் பாதுகாப்பு புலனாய்வு சேவை [Tiger Organization Security Intelligence Service] - TOSIS

 • புலனாய்வுத்துறை தாக்குதல் அணி
 • பன்னாட்டு புலனாய்வு அணி
 • தேசியப் புலனாய்வுப் பிரிவு
  • தகவல் சேகரிப்புப் பிரிவு
  • ஆய்வு மற்றும் வெளியீட்டுப் பிரிவு
  • பயிற்சி மற்றும் தொழில் நுட்பப் பிரிவு
  • நிருவாகம் மற்றும் அறிக்கைப் பிரிவு
 • படையப் புலனாய்வுப் பிரிவு
  • தரைப்படைத் தகவல் சேகரிப்புப் பிரிவு
  • கடற்படைத் தகவல் சேகரிப்புப் பிரிவு
  • வான்படைத் தகவல் சேகரிப்புப் பிரிவு
  • நிருவாகம் மற்றும் அறிக்கைப் பிரிவு
 • உள்ளகப் புலனாய்வுப் பிரிவு
 • வெளியகப் புலனாய்வுப் பிரிவு
 • நிருவாக புலனாய்வுப் பிரிவு
 • நிதிப்புலனாய்வுப் பிரிவு
 • உளவியல் செயற்பாட்டுப் பிரிவு
 • முகவர்கள்
  • வெளிக்கள முகவர்கள் < <-இடைநிலையாளர்கள்(குருவிகள்)-> < முதன்மை முகவர்கள்
 • மறைமுக உறுப்பினர்கள்
 • இரகசிய நடவடிக்கை அணிகள்
 • ஊடுருவல் முறியடிப்பு பிரிவு
 • ராதா புலனாய்வுப் பிரிவு
 • புலனாய்வு பயிற்சி மையம்

 

வேவுப்புலிகள்:-

 • செம்பியன் வேவு அணி - (இம்ரான்-பாண்டியன் படையணியின் கீழ் செயல்பட்டது)
 • சாள்ஸ் வேவு அணி
 • முகிலன் 'நீண்ட தூர விசேட வேவு அணி' (LRRP)
 • இவ்வேவுப் பணியில் சில வேளைகளில் கரும்புலிகளும் ஈடுபடுத்தப் படுவதுண்டு.

 

இப்படையணிகளின் வழங்கல்களுக்காகவும் அவற்றினை நெறிப்படுத்துவதற்காகவும் கீழ்க்கண்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டிருந்தன.

 1. போர்க்கருவி தொழிலகம்
 2. ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவு
 3. மலரவன் வெடிமருந்துப் பிரிவு
 4. ஒற்றாடல் பிரிவு ( படைத்துறை நகர்வுகள், வானூர்தி தாக்குதல்கள் பற்றிய தகவல்களை ஒட்டுக்கேட்டு உசார்படுத்தும் பிரிவு)
 5. வரைபடப் பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி , தொலைத்தொடர்பு பரிபாசை தாள்கள் விளைவிக்கும் அணி)
 6. சமராய்வு மையம்
 7. செய்தித் தகவல் மையம்
 8. களமுனை ஆய்வுப்பிரிவு
 9. கள விசாரணை பகுதி
 10. அனைத்துலக தொலைத்தொடர்புசெயலகம் (வெளிநாட்டு கிளைகள் நிர்வாகம்)
 11. வழங்கற் பிரிவு
 12. விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம்
 13. இராணுவ தொழிநுட்ப பிரிவு
 14. சமர் நூலாக்கப்பிரிவு- இவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன. இவர்கள் MOD என்னும் ஓர் தமிழ் படைத்துறை அகராதியையும் உருவாக்கியிருந்தார்கள்.
 15. வாகனப்பகுதி
 16. கண்ணிவெடி உற்பத்தி தொழிற்சாலை
 17. கைக்குண்டு உற்பத்தி தொழிற்சாலை
 18. மிதிவெடி உற்பத்தி தொழிற்சாலை
 19. எறிகணை உற்பத்தி தொழிற்சாலை
 20. கடற்புலிகளின் படகு வடிவமைப்புத் தொழிற்சாலை
 21. வெடிபொருள் களஞ்சியம் & விநியோகப் பிரிவு
 22. ஆயுத களஞ்சியம் / பராமரிப்பு & விநியோகப் பிரிவு
 23. அனைத்துலகத் தொடர்பகம்
 24. பல பயிற்சிப் பாசறைகள்
 25. கணினிப் பிரிவு → இதன் கீழ்ச்செயல்பட்ட பிரிவுகளாவன:
 • வன்பகுதி
 • மென்பகுதி
 • மென்பொருள் கட்டுமானப்பகுதி
 • தொழில்நுட்பக் கல்லூரிகள்
 • கொள்வனவுப்பகுதி
 • சிறப்புத் தாக்குதல் அணி
 • திட்டமியல் செயலகம்

 

இவை தவிர தங்களின் இராணுவ வீரர்களுக்கு படைத்துறை தொடர்பான பயிற்சிகள் வழங்குவதற்காக பல்வேறு கல்லூரிகளையும் திறந்து வைத்திருந்தனர். அவையாவன

 1. தமிழீழ படைத்துறைப் பள்ளி
 2. படைய தொடக்கப் பயிற்சிக் கல்லூரி
 3. சிறப்பு பயிற்சிக் கல்லூரி
 4. இராணுவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
 5. பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி- (மட்டு)
 6. ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனம்
 7. அப்பையா வெடிபொருள் பயிற்சிக் கல்லூரி
 8. ராஜன் படைத்துறை பயிற்சிக் கல்லூரி
 9. புலேந்திரன் சிறப்புப்படை பயிற்சிக் கல்லூரி
 10. தூயவன் அரசறிவியற்கூடம்
 11. நிரோயன் கடற்படைக் கல்லூரி
 12. சிங்கள மொழி கலாச்சார கல்வி நிலையம் - (புலனாய்வுத்துறை & கரும்புலிகளுக்கானது)
 13. சரத்பாபு பயிற்சி கல்லூரி
 14. மகளிர் அடிப்படை பயிற்சிக் கல்லூரி
 15. மகளீர் படைத்துறைப் பயிற்சிக் கல்லூரி
 16. கடற்புலிகளின் அரசியற் பயிற்சிப் பள்ளி
 • மொழியாக்கப் பிரிவு

 

சரி, இனி இப்படையணிகளுக்கான இலச்சினைகளைப் பற்றிப்பார்ப்போம்..

 • விடுதலைபுலிகள் அமைப்பின் இராணுவ பொது இலச்சினை:

main-qimg-27dca4e1cf907826f0ef8e91e4f55886.png

 

 • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி

main-qimg-649195bd25f29467d8798916f9f46db6.jpg

 

 • ஜெயந்தன் படையணி

main-qimg-9a1cb492c946ee29de9f9bd723f98f61.jpg

'நீலத்திற்குப் பின்புலத்தில் போராளிகள் படமில்லாமல் 'பச்சை-நீலம்-மண்ணிறம்' என்ற நிரல் வரிசை ஒழுங்கு முறையில் மூன்றாகப் பிரிந்த நிறங்கள் வர வேண்டும்.'

 

 • குட்டிசிறி மோட்டார் படையணி

main-qimg-0014a4d3f5fe7f1dc3e9be48bb430541.jpg

 

 • விக்டர் கவச எதிர்ப்புப் படையணி

main-qimg-1639b8e61d07cd3a145c33a3778ddfc0.jpg

 

 • சோதியா படையணி

main-qimg-2afd05cb7a978e87fa79d2135e700276.jpg

 

 • தமிழீழ தேசிய துணைப்படை

main-qimg-92974104cb9c24def9465187c1ae1ca6.jpg

 

 • இம்ரான் - பாண்டியன் படையணி

முழக்கம்:

"தலைவன் நினைவைச் செயலில் செய்வோம்

தலைகள் கொடுத்தும் தடைகள் வெல்வோம்"

main-qimg-b10b1d3b350611d277a66047e7f46099.jpg

 

 • தேசிய மண் மீட்புப் படை

முழக்கம்: "உடல் தேசத்திற்கு உயிர் விடுதலைக்கு"

தேசிய மண் மீட்புப் படை முழக்கம்- உடல் தேசத்திற்கு உயிர் விடுதலைக்கு.jpg

 

 • தமிழீழ கடற் துணைப்படை

Untitled.jpg

வால் மேன்னோக்கி நின்றபடி இடது புறம் நோக்கி பாயும் சிறுத்தை. (எனது தன்விரிப்புப் படத்தில்(Profile picture) இருக்கும் புலியினை ஒத்த சின்னம். இச்சின்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்புறம் ஒரு விதமான நீல நிறம். நீல நிற விதப் பெயர் எனக்குத் தெரியவில்லை). சின்னத்திற்குக் கீழே 'தமிழீழ கடற் துணைப்படை' என எழுதப்பட்டிருக்கும், அரை வட்ட வடிவத்தில்.

 

 • திலகா படையணி

main-qimg-af01b9743d304bb69801914d2e2d560d.jpg

 

 • அன்பரசி படையணி

main-qimg-824b212d6edfef14ca0003a838e7ab53.jpg

 

 • விநோதன் படையணி

main-qimg-df8e94245db9d66e20ab7e395ec2045b.jpg

 

 • மாலதி படையணி

main-qimg-67b8c6e75e0cd206d3b8320d4bc0e788.jpg

 

 • தரைக்கரும்புலிகள்

main-qimg-1d5884ded4b3165b580b5cd1b4040e3b.jpg

இவர்கள் தங்கள் உடையில் இச்சின்னத்தைப் பொறிக்கும் போது இவ்வாறு இருக்கும்.

main-qimg-7ce50ed270b9e3f6428e5f96eaa65a57.png

 

 • கடற்கரும்புலிகள் (முந்தைய சின்னம்)

main-qimg-48eac31264d7ecfcf14c7bd797ca2299.png

 

 • கடற்கரும்புலிகள் (பிந்தைய சின்னம்)

main-qimg-5507e0e68b167bad26d326901d509f0e.jpg

 

 • மறைமுகக் கரும்புலிகள்:

முழக்கம்: எம்நேரத்திற்குள் எங்கெங்கும்

main-qimg-2c20642eb2c42ea1fde404a712a02a91.png

 

 • இங்குதெரியும் கொடி எந்தப் படையணிக் கொடி என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை

main-qimg-669650d709ccdec8f0f43e55c512fa11.jpg

 

 • கிட்டு பீரங்கிப் படையணி:

இது 29.4.2003 அன்று நடந்த ஆனையிறவு வெற்றியின் மூன்றாம் ஆண்டு விழாவில் ஏற்றப்பட்ட பீரங்கிப் படையணியின் கொடி.

main-qimg-ffe78e2058d6985e107e5844c0201047.png

main-qimg-84ec183fb5d5122bddf960b6f16455f0.jpg

'இதுதான் கிட்டு பீரங்கி படையணியின் சின்னம்'

main-qimg-76d1852ebe2a2a185ca88d172a8eb52f.jpg

'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்..'

இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது

 

 • பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு:

இப் பெண்புலியின் கவியில்(cap) உள்ள வில்லையினை நோக்கவும்

main-qimg-cfc6f8df939809bc934537ab269085a9.png

 

main-qimg-2f5159f0d4560173db4de8d596245c75.png

'இதுவும் அன்று ஆனையிறவில் ஏற்றப்பட்ட பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவின் கொடிதான்'

 

 • இது எந்தப் படையணிச் சின்னம்மென்று தெரியவில்லை

main-qimg-bfea7da564bf626ac639902e54066125.jpg

 

 • மக்கள்படை:-

main-qimg-661f753b453bea68aa94a5cdc52adc49.png

 

 • சமராய்வு மையம்:

முழக்கம்: மெய்ப்பொருள் காண்பதறிவு

main-qimg-93b9aaee987205c32a2367add12e4b51.png

 

 • புலனாய்வுத்துறை & கரும்புலிகளுக்கான……

main-qimg-33c90a00c7c3d35bf8e9e980d7f49c0e.png


 

பிற்சேர்க்கை(1–12–2021)

 • மட்டக்களப்பில் தரித்து நின்ற படையணிகள்:

→ மட்டக்களப்பில் இருந்த படையணிகளின் மொத்த சின்னங்கள்:

இங்கிருப்பவை கருணா துரோகியாகும் வரை தவிபுவின் தலைவரின் தலைமையையேற்று புலிகளின் சிந்தாந்தத்தின் கீழ் மட்டக்களப்பில் தரிபெற்ற படையணிகளின் இலச்சினைகளாகும். இவை எவற்றினதும் விவரம் எனக்குத் தெரியவில்லை. யாரேனும் அறிந்தால் எனக்கு வரலாற்றை எழுத கொடுத்துதவுங்கள்.

main-qimg-3650cb748b3c765a1c31f66d093a6da2.jpg

'இங்குதெரியும் கொடி எந்தப் படையணிக் கொடி என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை.'

 

main-qimg-b46cce39edf90c04c086c3680c9f2fd8.jpg

''கருணாவிற்குப் பின்னால் இருக்கும் அந்த மேடையில் ஐந்து சின்னங்கள் தெரிகின்றன''

அவற்றில் இருந்து நான் பிரித்தெடுத்தவை:-

main-qimg-751a45ba2545bd7cc2df7d3ea6411f5b.png

''இது மதனா படையணியினதாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் அவ்விலைச்சினைதான் மஞ்சள் நிறமான வட்ட வடிவமாக இருக்கும். மேற்கண்ட படத்திலும் அதுதான் உள்ளது. | ஆதாரம்: Fighters killed in Vavunathivu SLA camp attack remembered ''

 

main-qimg-b9193c08803b0cbf8aa9d75df13e5929.png

 

இடது பக்கத்தில் இருக்கும் இரு இலச்சினைகளினதும் அண்மையாக்கப்பட்ட படங்கள்:

இப்படங்கள் நான் மேலே சுட்டிய படத்தில் உள்ள மேடையில் இல்லாத ஏனைய இரு படங்களாகும் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

main-qimg-61547b8632029ed56a7e9272a7dc83e2.png

main-qimg-928349954f0660a89b23237f0cfd9873.jpg

'தேனகம் - கரடியனாறு, மட்டக்களப்பு, தெந்தமிழீழம் | பறக்கும் கொடிகளில் இனங்காணப்பட்டவை: (இடமிருந்து வலமாக) மதனா, வினோதன், தெரியவில்லை, தெரியவில்லை'

 

main-qimg-6832b02a2f2940f4fecf17c0031b3409.jpg

மேற்கண்ட படத்தில் இரு மேல் மூலைகளிலும் இரு சின்னங்கள் தெரிகின்றன. அவையாவும் எந்தப் படையணியினது என்று எனக்குத் தெரியவில்லை!

 

 


 • கடற்புலிகளின் படையணிக் கொடிகள்

main-qimg-45c61515846505fa830cb666be544b1d.jpg

 


ஒரு பக்கம் பார்த்தால் எப்படி மறுபக்கம் பார்க்க வேண்டாமா?


 

உசாத்துணை :

படிமப்புரவு

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழில் இதன் ஆங்கிலப் பதிப்பினை பின்னர் வெளியிடுகிறேன்...

 

அதற்கு முன்னர் ஒன்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
 மேற்கண்டவற்றை நான் அங்கிலத்தில் வெளியிடும் முன்னர் யாரேனும் ஆங்கிலத்தில் வெளியிட விரும்பினால்,

 • இம்ரான் பாண்டியன், கிட்டு, குட்டிசிறி ஆகியவற்றினை மட்டும் 'Brigade' என்ற சொல்லால் குறிக்க வேண்டும்.
 • எங்கெல்லாம் 'படையணி' என்று வருகிறதோ அதையெல்லாம் 'Regiment' என்ற சொல்லாலும் (ஆனால் ஜெயந்தன் படையணியினை 'Brigade' சொல்லால் தான் குறிக்க வேண்டும். )
 • எங்கெல்லாம் 'தாக்குதலணி' என்று வருகிறதோ அதையெல்லாம் 'Attack team or Battalion' என்ற சொற்களாலும்
 • எங்கெல்லாம் 'பிரிவு' என்று வருகிறதோ அதையெல்லாம் 'Unit' என்ற சொல்லாலும்

குறியுங்கள். விடுதலைப் புலிகள் 'Brigade' என்பதை 'படைத்தொகுதிஎன்ற சொல்லால் குறித்தனர். இச்சொல்லானது தவிபு இன் 1998 - 2001 வரை வெளிவந்த நாளிதழ்களில் இடம்பெற்றிருக்கிறது.

----------------------------------------------

மேலும், சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியானது 'Charles Antony Special Regiment' என்றே விடுதலைப் புலிகளின் ஆவணங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு ஏன் சாள்ஸ் அன்ரனி வரலாறு தொடர்பாக வெளிவந்த 30 நிமிட நிகழ்படத்தில்(video) கூட ''Charles Antony Special Regiment'' என்று தான் ஆங்கிலத்தில் கூறினர். அதை சுருக்கிக் கூறும்போது 'CASR' என்று அதில் குறிப்பிட்டனர்.  கேணல் நகுலன் அவர்கள்(அப்போது லெப்.கேணல் தரத்தில் இருந்தார். பின்னர் மட்டு-அம்பறை அனுப்பப்பட்டபோது கேணல் ஆக தரம் உயர்த்தப்பட்டார்.)   CASR என்று தான் குறிப்பிடுவார். எனவே தயவு கூர்ந்து எமது வரலாற்றை திரிக்காத்தீர்கள். எதிர்காலச் சந்ததிக்கு திரித்த வரலாற்றை விட்டுச் செல்லாதீர்.

----------------------------------------------

 

ஆனால் இம்ரான் பாண்டியன் ஒரு கூட்டுப் படையணி ஆகும். கூட்டுப் படையணிகளை வெள்ளையர் 'Brigade' என்ற சொல்லால்தான் குறிப்பிடுவர். நாமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது அவ்வாறுதான் செய்தல் வேண்டும்.
 

------------------------------------------------

 

கிட்டு & குட்டி சிறி படையணிகள் ஆனவை சேணேவிகளுக்கென்றே(Artillery) ஒதுக்கப்பட்ட படையணிகள் ஆகும். அவ்வாறு சேணேவிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டவையையும் 27 இற்கு மேற்பட்ட சேணேவிகளைக்(Artillery) கொண்டவையையும் 'Artillery Brigade / Mortar Brigade' என்ற சொல்லால் ஆங்கிலத்தில் குறிக்கப்படும். நாமும் அவ்வாறே குறித்தல் வேண்டும்.

ஒரு நாளும் வரலாற்றை திரிக்க வேண்டாம்.
 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to post
Share on other sites
 • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகள் விரிப்பு(விபரம்) - ஆவணம்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By நன்னிச் சோழன்
   'நம் வரலாற்றை
   நாமே எழுதுவோம்'
   ------------------------
   எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற கடற்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
    
   குறிப்பு: கீழுள்ள எந்தப் படிமமும் மீளிணைக்கப்படவில்லை  
   புலிகள் காலத்து தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் இலச்சினை:-

    
    
   கடற்புலிகளின் முதன்மைத் தாக்குதல் கடற்கலங்கள் மிராஜ் வகைக் கலங்கள் ஆகும். இதனுள் பிரசாந்த், மதன் என இரு வகுப்புக் கடற்கலங்கள் இருந்ததாக நானறிகிறேன். இதைத் தவிர தல்ராஜ் வகை என்று மற்றொன்று இருந்ததாக நோர்வேயியன் மொழியில் எழுதப்பட்ட ஒரு கடற்புலிகள் பற்றிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு அந்த தல்ராஜ் பற்றி ஒன்றும் தெரியாது... தல்ராஜையும் மிராஜையும் கீழே குழப்பியடித்திருந்தால் என்னை மன்னித்து அருளுமாறு வாசகரிடம் கேட்டுக் கொள்கிறேன்...
   உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் அது பற்றிய தகவல் கொடுத்துதவுங்கள்... வெறும் கடற்கலப் பெயர் மட்டுமே எதிர்பார்கிறேன். வேறேதும் இல்லை. பெயர் தவிர அறிந்தோரிடம் நானேதும் யாசிக்கவில்லை.
    
   என்னைத் கொடர்பு கொள்ள யாழிலோ இல்லை கோராவிலோ(https://www.quora.com/profile/நன்னிச்-சோழன்-Nanni-Chozhan) அணுகுங்கள்.
    
   நானெழுதிய மிராஜ் கலங்கள் தொடர்பான ஒரு ஆவணம்: 
   https://ta.quora.com/ஈழத்தமிழரால்-கடலில்
    
   கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge nad logo. Wored only in 2000. 

    

   கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge and logo. Wored from 2001- end of LTTE era.

    
  • By நன்னிச் சோழன்
   'நம் வரலாற்றை
   நாமே எழுதுவோம்'
   ------------------------
   எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
   என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
    
   மட்டு-அம்பாறை படையணிகள் மூன்று  | 3 Mattu-Amparai Regiments கீழே மூன்று விதமான சீருடை அணிந்தோர் நிற்கின்றனர்(பச்சை, வரி, ஒருவித Olive/sap பச்சை)

    
    

    
    

    
    

   'Two different colours of uniform'
    

    

    

    

    

   'Two different colours of uniform'
    
    

    
    

    
    

    
    

    

    
    

    
    

    

    
    

    

    
 • Topics

 • Posts

  • சீர்காழி அவர்களின் அதிமதுரக் குரலில் சீர்காழி அவர்களின் அதிமதுரக் குரலில்
  • தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான * அகத்தியம், * செயிற்றியம், * சயந்தம், * குணநூல் போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம். இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே "கூத்து" எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு கூத்தினை, வேந்தியல் (மன்னர்களுக்காக ஆடுவது), பொதுவியல் (பொது மக்களுக்காக ஆடுவது) என இருவகைப்படுத்தலாம். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை "அபிநயம்" பற்றி விளக்குகிறது. பெண்கள் ஐந்து வயதிலிருந்து பன்னிரெண்டு வயதுவரை (7ஆண்டுகள்) பரதநாட்டியம் கற்றனர். பாடலின் பொருளை முகபாவம், அங்க அசைவுகள் போன்றவற்றின் வாயிலாக விளக்குவதே நடனம் (அ) கூத்து என வரலாற்று ஆய்வாளரான என்.சுப்பிரமணியன் விளக்கம் தருகிறார். கூத்துக் கலைஞர்களும், கூத்தநூல்களும்: நடனமாடும் ஆண்மகன் * கூத்தன், * ஆடுமகன், * ஆடுகளமகன் எனப்பட்டான். நடமாடும் பெண்மகள் * நடனமகள், * விறலி, * கூத்தி, * ஆடுமகள், * ஆடுகளமகள் * எனப்பட்டாள். இவர்கள் நடனமாடிய அரங்கம் "ஆடுகளம்" எனப்பட்டது. * வீரம், * அச்சம், * இழிவு, * வியப்பு, * இன்பம், * துன்பம், * நகை, * நடுவுநிலை, * வெகுளி என்னும் ஒன்பது சுவைகள் நடனத்துக்குரியவையாகக் கருதப்பட்டன. "சந்திக்கூத்து" எனப்படும் கூத்தை ஆடியவர்கள் "கண்ணுளர்" எனப்பட்டனர். * பரதம், * பரதசேனாபதியம், * குணநூல், * முறுவல், * சயந்தம், * கூத்தநூல், * இந்திரகாளியம், * செயிற்றியம், * இசை நுணுக்கம், * அகத்தியம், * மதிவாணனார் நாடகத்தமிழ், * பஞ்சமரபு போன்றவற்றை சங்க காலத்தில் இருந்த கூத்த நூல்களாக வகைப்படுத்தலாம்.   கூத்துக்கலை பற்றிய ஆதாரங்கள்: கல்வெட்டு ஆய்வாளரான என்.ராமசந்திரன் 1962ல் அங்கல்லூர் (நல்லமலை) என்ற இடத்தில் கண்டறிந்த கல்வெட்டானது தொல்தமிழரின் நடனம் பற்றி விளக்குகிறது. இதன் காலம் கி.பி.3ம் நூற்றாண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் நடனக் குறியீடுகள் "சமணத்துறவி" ஒருவரால் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டில் வரையப்பெற்ற "சித்தன்ன வாசல் ஓவியங்கள்" வாயிலாக பல்லவர் நடனக்கலையின் சிறப்பம்சத்தினை உணரலாம். இங்குள்ள பரதநாட்டிய அபிநயங்களில் "ஹஸ்த அபிநயச் சிற்பம்" குறிப்பிடத் தக்கதாகும். இராஜராஜசோழன் 108 பரதநாட்டிய கரணங்களை, பிரகதீஸ்வரர் ஆலயத்தின் உச்சியில் வரையுமாறு செய்ததில் இருந்து அம் மன்னனுக்கு நாட்டியத்தின் மீது கொண்ட ஈடுபாடு விளங்கும். கூத்துக்கலையும் தேவதாசிகளும்: இந்தியாவில் கோயில்களில் தெய்வப்பணி புரிவதற்காக ஆண்டவர்க்கு அணங்குகளை அர்ப்பணிக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது என்பதை வரையறுத்துக்கூற இயலாது. ஆனால், தமிழகத்தில் தேவதாசி முறையைப் புகுத்தியவர்கள் "சோழர்கள்" என்பர். "பொட்டுக்கட்டுதல்" என்னும் வழக்கத்தின் வாயிலாக கோயிலுக்கு பெண்கள் (தேவரடியார்கள்) காணிக்கை ஆக்கப்பட்டனர். பெரும்பாலும் 14 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பொட்டுக்கட்டுதல் என்னும் சடங்கு ஏறக்குறைய திருமண நிகழ்ச்சி போலவே ஏற்பாடு செய்யப்பட்டு, கோயிலில் சேர்க்கப்பட்டனர். "பொட்டுத்தாலி" என்னும் ஒருவகை மங்கலநாண் அணிவித்து பெண்கள் கோயிலில் பணிசெய்ய அமர்த்தப்பட்டனர். பொட்டுத்தாலியை கோயிலின் இறைவனுக்குப் பதிலாக கோயில் அந்தணர்(அ) பூசாரியே நேர்ந்து விடப்பட்ட பெண்ணுக்குக் கட்டினார். இச் சடங்குக்குப்பின் குறிப்பிட்ட பெண் கோயிலுக்கு சொந்தமானவளாக கருதப்பட்டாள். இல்வாழ்க்கையில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி இல்லை. கோயிலுக்கு பொட்டுக்கட்டிவிடும் இவ்வழக்கம் சிரியா நாட்டு "ஹேலியோ போலிஷ்" மற்றும் அர்மீனியா, மேற்கு சிற்றாசியாவில் உள்ள லிடியா மற்றும் கிரேக்க நாட்டின் கோசின்னித் (Cuzinith) என்ற நகரிலும் நிலை கொண்டிருந்தது. மெசபடோமியாவிலும் இதே முறை பின்பற்றப்பட்டு வந்தது. "மர்துக்" மற்றும் "ஷமஷ்" போன்ற கடவுளர்களுக்கு அங்குள்ள மகளிர் மணம் செய்து வைக்கப்பட்டனர். (மேலும் பார்க்க - http://www.kamat.com/kalranga/women/devadasi.htm)   கோயிலில் நடமாடுதல் மட்டுமல்லாது, கோயிலில் திருவலகிடுதல், திருமெழுகிடுதல், படையல் அரிசியைத் தூய்மைப்படுத்துதல், திருப்பதிகம் பாடல் போன்ற பணிகளையும் தேவரடியார் செய்துவந்தனர். பல்லவர்கள் காலத்தில் தேவதாசிகள் விற்கிருதை, பிரத்தியை, பக்தை, கிருதை, அலங்கரி, ருத்திரகணிகை, கோபிகை என ஏழு வகைப் பிரிவினராக இருந்தனர்.   தேவரடியர்(அ) தேவதாசிகள் திருநீறுத்தட்டும், புஷ்பத்தளிகை போன்றவற்றை விழாக்காலங்களில் எடுத்துச்செல்வர். அம்மன் மற்றும் சுவாமிக்கு இவர்கள் "கவரி" வீசவும் செய்ததால் "கவரிப்பிணா" என்றும் அழைக்கப்பட்டனர். சிவன் கோயிலில் பணி செய்து வந்தவர்கள் ரிஷபத்தளியலார் என்றும், வைணவக் கோயில்களில் இருந்தவர்கள் ஸ்ரீவைஷ்ணவ மாணிக்கம் எனவும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. முதலாம் இராசராசன், தஞ்சைப் பெரிய கோயிலின் இறை பணிக்காகவும், இசை நடனத்தை வளர்க்கவும் ஆடல், பாடல்களில் வல்ல 400 பெண்கள் வரவழைத்தான். அவர்கள் தளிச்சேரிப் பெண்டுகள்(தளி - கோயில்) எனப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த இடம் "தளிச்சேரி" எனப்பட்டது. முதலாம் இராசராசனால் குடியமர்த்தப்பட்ட பெண்டுகள் அனைவரும் சோழர் பழந் தலைநகரமான "பழையாறையின்" வடதளி, தென்தளி எனப்படும் சிவாலயங்களைச் சேர்ந்தவர்களாவர். முதலாம் இராசேந்திரன் கங்கை கொண்ட சோழபுரக்கோயிலைச் சேர்ந்த 24 தேவதாசிகளுக்கு நிலமும், பொன்னும் கொடையாக அளிக்கப்பட்ட செய்தியை "குளம்பந்தல் கல்வெட்டு" வாயிலாக அறியலாம்.   தலைக்கோலி, காவிதிகானை பேராள், காவிதிதாங்கி போன்ற பட்டங்கள் தேவரடியார்களுக்கு வழங்கப்பட்டன. "தலைக்கோல்" என்பது ஏழுசாண் நீளத்தில் மூங்கிலால் ஆனதாகும். கணுக்கள் தோறும் மணிகள் பதிக்கப்பட்டு இடையிடையே "பொன்கட்டு" இடப்பட்டிருந்தது. இந்திர விழாவின்போது தலைக்கோலுக்குப் பூசை நடத்தப்பட்டு ஆடல் மகளிருக்கு இக்கோல் வழங்கப்பட்டது. இக்கோலைப் பெற்றவள், "தலைக்கோலி" எனவும், நட்டுவன் "தலைக்கோலாசான்" எனவும் பாடல் பாடியோர் "தோரியமடந்தை" என்றும் அறியப்பட்டனர். தேவரடியார்களில் சிலர் அறப்பணியும் மேற்கொண்டனர் என்பதற்கு ஆதாரமாக, சடையவர்மன் வீரபாண்டியன் (13ம் நூற்றாண்டு) ஆட்சி காலத்தில் தேவரடியார்களில் ஒருத்தியான துக்கையாண்டி மகள் நாச்சி குடுமியான்மலை குடைவரையின் தெற்குப் பக்கத்தில் உள்ள "சவுந்திரநாயகி அம்மன்" கோயிலைக் கட்டியிருக்கிறாள் என அறியப்படுகிறது. கோயில் கலைப்பணிக்காக நியமிக்கப்பட்ட தேவரடியார்கள் அமைப்புகாலப்போக்கில் மாறுதல் அடைந்தது. அம்முறை பின் ஒழிக்கப்பட்டது. தமிழ்க் கூத்துக்கலையிலிருந்து பிரிந்து உருவான பரதம் இன்றளவிலும் ஓரளவு சிறப்புப் பெற்றிருப்பினும் பிற கூத்து நடனங்கள் ஆதரவின்றி அழியக்கூடிய தருவாயில் உள்ளன என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.   நலிந்து வரும் கூத்துக் கலைஞர்களுக்கு ஆதரவளித்து, கூத்துக்கலையை காப்பதன் வாயிலாகவே தமிழர் பண்பாட்டை உலக அரங்கில் மிளிரச்செய்ய இயலும்.   இல. கணபதிமுருகன்   நன்றி: தமிழ்மணி (தினமணி)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.