Jump to content

தமிழீழ விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகள் விரிப்பு(விபரம்) - ஆவணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறி 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!

----------------------------------------------

 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உலகின் அங்கீகரிக்கப்பட்ட நாட்டிடம் இருக்கும் மரபுவழிப்படை போன்று முப்படைகளையும் கொண்டிருந்ததது. அம்முப்படைகளுடன் சேர்த்து முற்றிலும் புதிதாக ஓர் படையையும் கொண்டிருந்தனர்.. அதுதான் தற்கொடைப்படை, அதாவது கரும்புலிகள் என்று அவர்கள் மொழியில்.. இவைதான் அவர்களிடம் இருந்த தமிழர்களின் புதுமைக்கால நாற்படைகள் ஆகும்.. அவை மொத்தமாக,

  1. தரைப்புலிகள்
  2. வான்புலிகள்
  3. கடற்புலிகள்
  4. கரும்புலிகள்

இத்துடன் வேவுப்புலிகள் என்னும் ஐந்தாம் படையையும் அவர்கள் வைத்திருந்தனர் . இவர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடல்லாமல் நடைமுறையரசாக(de-facto) செயற்பட்டதால் 'படைவீரர்கள்' எனாமல் போராளிகள் எனப்பட்டனர்.

  • எண்ணிக்கை: 15 - 17ஆ ( மக்கள்படை & பணியாளர்கள் நீங்கலாக)
  • வீரச்சாவு = 25,500 - 26,500 (2009 மே-19 வரை களமாடி மடிந்தோர்… )
  • ஆயுதம் மௌனித்து சிங்களத்திடம் சென்றபிறகு அங்கு சரணடைந்தோர்: ~15,000
    • இவர்களில் பதின்மூவாயிரத்து எழுநூற்றுச் சொச்சம் பேர்தான் தன்னிடம் இருப்பதாக கோத்தபாய மாமா முன்னொரு காலத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். அவர்களில் ஆயிரத்து எண்ணூற்றுச் சொச்சம்பேர் 'முதற் தரக் குற்றவாளிகளாகவும்' பதினோராயிரத்து தொள்ளாயிரத்திச் சொச்சம்பேர் 'இரண்டாந் தரக் குற்றவாளிகளாகவும்' அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக அந்தக் காலத்தில் (2015 கிட்டதாக) செய்திகள் வெளிவந்திருந்தது.

இவ்வியக்கத்தினரின்,

  • பழைய பெயர்: புதிய தமிழ்ப் புலிகள் (1972 இல் 'மாமனிதர்' இராசரத்தினம் அவர்களின் ஆலோசனையில் சூட்டப்பட்டது)
  • புதிய பெயர்: தமிழீழ விடுதலைப் புலிகள்- தவிபு - (5-5-1976 இல் இருந்து)
    • புலிகள் - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்ற பன்மையால் பலரால் தொடர்ந்து சுட்டப்படுகின்றனர்.
  • பட்டப்பெயர்கள்:
    • இயக்கம் - இப்பெயர் கூலிப்படைகளாகச் செயல்பட்ட மாற்று இயக்கங்கள் ஒழிக்கப்பட்ட பின்னர் மக்களால் புலிகளைக் குறிக்கப் பயன்பட்டது ஆகும்.
    • கொம்பனி - படையின் ஒரு அலகான கொம்பனியை, Company என்று ஆங்கிலத்தில் புலிகள் அழைத்தனர். அதனால் புலிகளிற்கும் இதுவே பெயரானது. இராணுவத்தினருக்கு புரியாது இருக்க புலிகளின் புலனாய்வுத் துறையினரும் மக்களுக்கு தங்களை அடையாளம் காட்ட இந்தப் பெயரை பயன்படுத்தினர். ஆகையால் இது மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. | புலன கிட்டிப்பு(credit): ஐங்கரன் தமிழரசன்
    • புலிப்படை - வீரத்தின் பெயரால் ஒட்டுமொத்த தமிழர் சேனையையும் குறிக்க அமைந்த பெயர்.
  • பயத்தால் பட்டப்பெயர்:
    • பீரங்கி - இது 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்தில் 'கட்டாய ஆட்சேர்ப்பு' காரணமாக இளைஞர்களால் புலிகளை சுட்டப் பயன்பட்டது ஆகும்.. (அவர்களின் ஓர் குறும்படத்தில் இருந்து இப் பற்றியத்தை எடுத்தேன்)
  • செல்லப்பெயர்:
    • பெடியள்- புலிகள் இயக்கத்தின் தொடக்க காலத்தில் ஆண்களே இருந்ததால் மக்களால் பெடியள் என்று அழைக்கப்பட்டு அதுவே இவர்களை இறுதி வரையும் சுட்டலாயிற்று.
  • உலகத்தால் வழங்கப்பட்ட அடைமொழி:
    • Tamil Tigers - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்பதன் ஒருமையான 'புலி' என்பதையும், அவர்தம் இனம் தமிழர்களாகவும் இருந்ததால் இரண்டையும் ஒன்றிணைத்து 'தமிழ்ப்புலி' என்று அழைக்கப்படலாயினர். இவ்வாறு ஈழத்தினில் வழங்கப்பட்டது மிக அரிதாகும்.

 

சரி இனி படையணிகளைப் பற்றிப் பார்ப்போம். இப்புலனங்களை புலிகள் ஆதரவு இணையத்தளங்கள் மூலமாகவும் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பெற்ற ஒரு சில புத்தகங்களின் துணை கொண்டும் தேடி எடுத்து தொகுத்து பதிவிட்டிருக்கிறேன்.. படித்து அறிந்து கொள்ளவும்…

தரைப்புலிகள் (தரைப்படை ):-

நிரந்தரப்படை (ஆ&பெ):-

  • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (இதுவே முதலாவது மரபுவழிப் படையணியாகும். இதில் ஈழத்தீவின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆண் வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். பெரும்பாலும் யாழ் & வன்னியைச் போராளிகளே இடம்பெற்றிருந்தனர். உருவாக்கப்பட்டது: 1991.04.10 ) | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 1000–2000 (2008)
    • வான்காப்பு அணி(சாள்ஸ் அன்ரனிக்கானது)
    • கனவகை ஆய்தப் பிரிவு
  • ஜெயந்தன் படையணி (இதுவே தரைத் தாக்குதல்களிற்கான பொது ஆண் வீரர்களைக் கொண்டிருந்த படையாணியாகும். ஆனால் இதில் பெரும்பாலும்  தென் தமிழீழத்தைச் சேர்ந்த போராளிகளே இடம்பெற்றிருந்தனர்.) உருவாக்கப்பட்டது: 1993.05.04 தரிப்பிடம்: மட்டு-அம்பாறை. சில தாக்குதலணிகள் வட தமிழீழத்திலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் | எண்ணிக்கை: 1000-3000 (2008)
    • கனவகை ஆய்தப் பிரிவு
  • பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி (இது இயந்திர சுடுகலன்களுக்கான அணியாகும்.. எல்லாப் படையணிகள் கீழும் இது இயங்கியது)
  • விசாலகன் சிறப்புப் படையணி | உருவாக்கப்பட்டது: 1991-1994 | தரிப்பிடம்: வாகரைக் கோட்டம் | எண்ணிக்கை: <1000
  • வினோதன் படையணி | உருவாக்கப்பட்டது: ~1996 | தரிப்பிடம்: குடும்பிமலைக் கோட்டம் | எண்ணிக்கை: <1000
  • இளங்கோ படையணி  | தரிப்பிடம்: திருகோணமலை . இதன் கட்டளையாளர் 'விமல்' என்பவர் ஆவார். | எண்ணிக்கை: <1000
  • அன்பரசி படையணி (இது தரைத் தாக்குதல்களிற்கான பொது பெண் வீரர்களைக் கொண்டிருந்த படையாணியாகும். இதுவே பெயர் சூட்டப்பட்ட முதலாவது மகளீர் படையணியாகும். உருவாக்கப்பட்டது: 1995<) | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 250-750
    • வான்காப்பு அணி
  • மதனா படையணி ( இது தரைத் தாக்குதல்களிற்கான பொது பெண் வீரர்களைக் கொண்டிருந்த படையாணியாகும். உருவாக்கப்பட்டது: 95/96 ) | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 250-750
    • கனவகை ஆய்தப் பிரிவு
  • மாலதி படையணி (இது தரைத் தாக்குதல்களிற்கான பொது பெண் வீரர்களைக் கொண்டிருந்த படையாணியாகும். ) | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500 - 1000 | உருவாக்கப்பட்டது: 04.1996>
    • கனவகை ஆய்தப் பிரிவு
    • சிறப்பு அதிரடிப்படை
      • மாலதி படையணியானது அதற்கு முன்னர் மகளிர் படையணி என்னும் பெயரில் செயல்பட்டு வந்தது. ஜெயசிக்குறுய் எதிர்ச்சமரக் காலத்தின் தொடக்கத்தில் இது மாலதி படையணி என உதயமாகியது.
  • சோதியா படையணி ( இது தரைத் தாக்குதல்களிற்கான பொது பெண் வீரர்களைக் கொண்டிருந்த படையாணியாகும்.) | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500 - 1000 | உருவாக்கப்பட்டது : 1997
    • கனவகை ஆய்தப் பிரிவு
  • திலகா படையணி
  • யாழ் செல்லும் படையணி(ஆ&பெ) | உருவாக்கப்பட்டது: 1999
  • ராதா வான்காப்புப் படையணி | (2002 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்படும் வரை இவர்கள் இம்ரான் - பாண்டியனின் ஓர் உறுப்பாக 'ராதா வானூர்தி எதிர்ப்பு அணி' என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர்.)
    • யேசுதாஸ் பாதுகாப்பு அணி
    • வான் எதிர்ப்பு ஏவுகணை ணி
    • வான் கண்காணிப்பு அணி
  • பூநகரிப் படையணி (2007 - 2008 இறுதிவரை) (ஆ&பெ)
    • சிறப்பு அதிரடிப்படை
    • வேவு அணி
  • கிட்டு பீரங்கிப் படையணி(ஆ&பெ) | உருவாக்கப்பட்டது : 1995
    • முன்னிலை நோக்குநர் அணி | புலன கிட்டிப்பு:
      புஸ்பகுமார் சற்குணநாதன் (இவர்கள் முன்களத்தில் நிற்பார்கள், ஆனால் சமரில் ஈடுபடாமல் தமது உயிரை பணயம் வைத்து சமர்க் களத்தில் தம்மையும் பாதுகாத்துக்கொண்டு பின்களத்தில் இருந்து விடுதலைப் புலிகளால் ஏவப்படும் எறிகணைகளுக்கு ஏற்றக்கோண வேறுபாடு(Elevation Deference) பார்த்து தெரிவிப்பார்கள்.)
  • ஜோன்சன் மோட்டார் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
    • முன்னிலை நோக்குநர் அணி
  • குட்டிசிறி மோட்டார் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: வட தமிழீழம்
    • முன்னிலை நோக்குநர் அணி
  • பசீலன் மோட்டார் பிரிவு (தமிழீழத்தில் பெயர் சூட்டப்பட்ட முதலாவது சேணேவி(artillery) படைத்துறை பிரிவு)
  • மாருதியன் படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
  • ரிம் 1.5 விசேட படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
    • இப்படையணி வீரர்கள், இதன் கட்டளையாளரும் தமிழ்த் துரோகியுமான 'வஞ்சகன் றொபேட்' ஆல் நேரடியாகவே பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் 'ரிம் 1.5 சொந்த விசேட படையணி' என்றும், இதன் தாக்குதல் திறனால் "அமெரிக்கன் படை" என்றும் மட்டக்களப்பைச் சார்ந்தோரால் அழைக்கப்படுவதுண்டு.
  • 4.1 படையணி (ஆ&பெ) (மீளச் சேர்ந்தோருக்கானது)
  • இம்ரான் - பாண்டியன் படையணி/ சைவர் பிரிவு (இது தலைவரின் நேரடிக் கட்டளையின் கீழ் செயல்பட்ட ஒரு கூட்டுப் படையணியாகும். 1–10–1992ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்.கட்டைக்காட்டு தாக்குதலின் போதுதான் இவர்களின் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது) இதன் கீழ் இருந்த அணிகள், பிரிவுகள், படையணிகள் ஆவன:
    • சூரன் கவச அணி
    • பதுங்கித் தாக்குதல் அணிகள்
    • கௌதமன் புலனாய்வு அணி
    • சங்கர் ஆழ ஊடுருவித்தாக்கும் அணி  - (LTTE's DPU)
    • படைக்காவலர் அணி
    • பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு (பெ) - 1999.04.28 இல் உருவாக்கப்பட்டது
      • சிறப்பு கண்ணிவெடிப் பிரிவு
    • குறிசூட்டுப் பிரிவு (sniper)(ஆ&பெ)
      • மயூரன் குறிசூட்டுப் பிரிவு
      • செண்பகம் குறிசூட்டுப் பிரிவு - (செண்பகம் என்ற குறிசூட்டு துமுக்கியைப் பயன்படுத்துவோர்)
    • சிறப்பு உந்துருளி படையணி | எண்ணிக்கை: <250
      • அதிவேக உந்துருளி சிறப்பு அணி
    • விக்டர் கவச எதிர்புப் படையணி (1997 இன் முற்பாதியில் உருவாக்கப்பட்டது. இப்படையணியின் உந்துகணை சூட்டாளரிற்கு RPG Commando என்னும் அடைமொழி வழங்கப்பட்டிருந்தது. இப்படையணியின் வீரர்கள் 1997 இற்கு முன்னர் ராங்கி எதிர்ப்பு அணி  என்ற 04- 1992 இல் உருவாக்கப்பட்ட அணியில் பணியாற்றியோர் ஆவர்.)(ஆ&பெ) | எண்ணிக்கை: <500
      • சிறப்பு உந்துகணை செலுத்திப் பிரிவு(ஆ&பெ)
  • கிழக்கில் தரித்திருந்த ஓர் உந்துகணை செலுத்திப் படையணி.
    • இப்படையணி தனக்கென இலச்சினை எல்லாம் கொண்டிருந்தது. ஆனால் இதன் பெயரை அறிய முடியவில்லை!
  • வண்ணாளன் உந்துருளி படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
  • பாதுகாவலர் பிரிவு(ஆ&பெ)
  • களமுனை முறியடிப்புப் பிரிவு(ஆ&பெ)
  • சிறப்பு வரைபடப் பிரிவு(ஆ&பெ)
  • களமுனை மருத்துவப் பிரிவு(ஆ&பெ)
  • தேசிய மண்மீட்புப் படை [கைச்சுடுகலன் குழு (pistol gang)]
  • தமிழீழ தேசிய துணைப்படை
    • இவர்கள் 1991 வைகாசியில் இருந்து ஆடி 1992 வரை 'எல்லைக் கிராம பாதுகாப்புப் படை' என்ற பெயரால் அழைக்கப்பட்டனர்.
    • நீலன் துணைப்படை(ஆ&பெ)
    • உந்துகணை செலுத்திப் பிரிவு
  • உள்ளக பாதுகாப்புப் படை - திருநகர், பூநகரி என்று ஒவ்வொரு வட்டங்களுக்கும் இருந்தது.

என தரைப்புலிகளின் படையணிகள் மிடுக்குடன் நடந்தன.

 

 

படையணிகள் தவிர்த்து மக்களுக்கும் படைத்துறைப் பயிற்சி, முதலுதவிப் பயிற்சி என பல்வகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்றோர் அனைவரும் மக்கள் படையென நிமிர்ந்தனர். அம்மக்கள் படையானது

  • மக்கள் படை:-
    • எல்லைப்படை(ஆ&பெ) | | (1999-2009)
      • இவர்கள் 'எல்லைப்புலிகள் ' எனவும் அழைக்கப்பட்டனர்
    • சிறப்பு எல்லைப்படை(ஆ&பெ)
      • இவர்கள்  சண்டைப் பயிற்சி பெற்ற எல்லைப்படையினர் ஆவர்
      • 1998-2000 வரை மட்டுமே இப்படை செயல்ப்பட்டது
    • ஊரகத் தொண்டர் சிறப்புப் படை(ஆ)
      • 2005-2009 வரை மட்டுமே இப்படை செயல்ப்பட்டது
    • போருதவிப்படை(ஆ)
      • 2005-2009 வரை மட்டுமே இப்படை செயல்ப்பட்டது
    • கிராமியப்படை(ஆ&பெ) - இதை 'ஈழப்படை' என்றும் மக்கள் அழைப்பர் | (1999-2009)
      • -> கிராமிய சிறப்புப் படை (2005-2009)
    • உள்ளக மகளீர் பாதுகாப்பு அணி(பெ)

 

என படைக்கட்டுமானங்களாக செயலுருப்பெற்றன. மேற்கண்ட மக்கள்படைக் கட்டுமானத்தை 'தமிழீழ தேசிய எழுச்சிப் பேரவை' ஆளுவப்படுத்தியது.

 

மேலும், புலிகள் தாங்களாக தங்கள் நிருவாகப் பகுதிகளுக்குள் உருவாக்கியிருந்த துறைகளில் ஒவ்வொரு துறையும் தத்தம் பணியாளர்களைத் தனித்தனி தாக்குதலணியாக உருவாக்கி களமுனைகளிற்கு சுழற்சி முறையில் பணிக்கனுப்பியது:

அத்தாக்குதலணிகள் ஆவன,

  • அரசியற்றுறை தாக்குதலணி
  • புலனாய்வுத்துறை தாக்குதலணி
  • வருவாய்த்துறை தாக்குதலணி
  • நிதித்துறை தாக்குதலணி
  • மணாளன் தலைமைச் செயலக சிறப்புத் தாக்குதலணி

 

ஈரூடகப்படை ( marines)-

  • சேரன் ஈருடக தாக்குதலணி

 

கடற்புலிகள் (கடற்படை) :- “கடற்புறா “ என்ற சிறு அணி இந்திய தமிழீழ கடல்வழி நகர்வுகளைக்காக உருவாக்கப்பட்டது. அது பின்பு தமிழீழக் கடல் பகுதிகளின் பாதுகாப்புக்காகவும் நடவடிக்கைகளுக்குமாக 1990 ஆம் ஆண்டு படையாக பரிணாம வளர்ச்சி பெற்றது. அதுவே கடற்புலிகள் என்றானது! | எண்ணிக்கை: 2000 - 3000

main-qimg-da0cf1ad2539f58b441c072d3ed1b2ce.jpg

  • ஆசிர் சிறப்பு கடற்றாக்குதல் படையணி
    • (இதுதான் முதலாவது கடற்றாக்குதல் படையணி. இது மேஜர் ஆசிர் நினைவாக கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் சாள்ஸ் அவர்களின் தலைமையில் 1993 தை மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டது ஆகும். பின்னாளில் வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்.)
  • சாள்ஸ் சிறப்பு கடல் தாக்குதலணி(ஆ) (உருவாக்கப்பட்டது : 11-11-1993.
    • இது முதலில் "சிறப்பு கடற் படையணி" என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்)
  • நளாயினி சிறப்பு கடல் தாக்குதலணி(பெ)
    • (இது முதலில் "சிறப்பு கடற் படையணி " என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்)
  • பாக்கியன் ஆழ்கடல் தாக்குதலணி(ஆ & பெ)
  • வசந்தன் படையணி(உருவாக்கப்பட்டது : 1994. பின்னாளில்(~2000) வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்)
  • சங்கர் படையணி(regiment)
  • நரேஷ் படையணி
  • டேவிற் படையணி
  • எழிற்கண்ணன் படையணி
  • கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி
    • புனிதா தரைத் தாக்குதலணி(பெ)
    • சுகன்யா தரைத் தாக்குதலணி(பெ)
    • சூட்டி தரைத் தாக்குதலணி(ஆ) | உருவாக்கப்பட்டது: 5.7.1995
  • சிறப்புப் படையணி
    • கப்பல் பிரிவு (இதில் பணியாற்றியவர்கள் ஆழ்கடலோடிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களிடம் சொந்தமாக 20–25 கப்பல்கள் இருந்தன. அவற்றுள் 15 போரின் போது மூழ்கடிக்கப்பட்டு விட்டது)
    • சிறப்பு பணிப் பிரிவு
  • நீரடி நீச்சல் பிரிவு
    • கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994) ()
      • (சுலோயன் என்று இருந்த இதன் பெயர் 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது)
    • அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ஆம் மாதத்திற்குப் பின்னர்) (பெ),
  • சிறப்பு சுற்றுக்காவல் அணி
  • கடல் வேவு அணி
  • வானூர்தி எதிர்ப்பு அணி
  • கடற்கண்காணிப்பு பிரிவு (radar monitoring)
  • சதீஸ் இயந்திரவியல் பிரிவு
    • உள் இணைப்பு இயந்திரத் பிரிவு
    • வெளியிணைப்பு இயந்திரப் பிரிவு
    • டீசல் இயந்திரப் பிரிவு
  • வழங்கல் பிரிவு
  • படகு கட்டுமான பகுதி
    • மங்கை படகு கட்டுமானப் பிரிவு & டேவிட்(சண்முகம்) படகு கட்டுமானப் பிரிவு
      • ஆடியிழை கட்டுத்துறை (Fibreglass yard )
      • மாதிரி கட்டுத்துறை(Model yard) ,
      • மாதிரி கட்டுத்துறை வரைபடபிரிவு
  • மலரவன் வெடிமருந்துப் பிரிவு
  • தமிழீழ கடற் துணைப்படை(ஆ):-
    • தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை:-
      • மறவன் துணைப்படை
      • திருவடி துணைப்படை
      • நவரசன் துணைப்படை
      • ஜோன்சன் துணைப்படை
    • ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்பு துணைப்படை அணி - இது கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கை ஆற்றுதல் அணி ஆகும்

இவற்றுடன் கடற்புலிகளிற்கென்று

  • நிருவாகச் செயலகம்
  • அரசியல் துறை (1991 இல் தொட.)
  • புலனாய்வுத் துறை
  • பொறியியல் துறை
  • மருத்துவப் பகுதி

என்பனவும் இருந்தன.

 

வான்புலிகள் (வான்படை ):-

main-qimg-fa50f764479b9c7424f9137a240878bc.jpg

  • வானூர்தி தாக்குதலணி
    • வானோடிகள் அணி
  • ராஜன் கல்விப்பிரிவு
  • வானூர்தி தொழில்நுட்பப் பிரிவு
  • வானூர்தி ஓடுதள பாதுகாப்புப் பிரிவு
  • வான் கண்காணிப்புப் பிரிவு

 

சிறுத்தைப்படை (அதிரடிப்படை):-

main-qimg-b777bb2f4c0bfc32422a518152a7428f.png

  • தரைச் சிறுத்தைகள் - land commandos (ஆ&பெ)
  • காட்டுச் சிறுத்தைகள் - jungle commandos (ஆ&பெ)
  • கடற்சிறுத்தைகள் - naval commandos (ஆ&பெ)

 

கரும்புலிகள் (சிறப்புப்படை & தற்கொடைப்படை)

கரும்புலிகள் பொத்தாம் பொதுவாக 'தடைநீக்கிகள்' என்று அழைக்கப்பட்டனர்.

main-qimg-b4c1359af566be470b035577f0dd7c4e.jpg

  • மறைமுகக் கரும்புலிகள் 
  • தரைக் கரும்புலிகள் (இவர்கள் தேசத்தின் புயல்கள் என்றும் அழைக்கப்பட்டனர்)
  • வான் கரும்புலிகள்
  • கடற்கரும்புலிகள் (இவர்கள் உயிராயுதங்கள் என்றும் அழைக்கப்பட்டனர்)
    • நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் (இவர்கள் 'இடியர்கள்' என அழைக்கப்பட்டனர்)
      • செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி
      • புகழரசன் கடற்கரும்புலிகள் அணி
    • நீரடி நீச்சல் கரும்புலிகள்
      • கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994) ()
      • அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ஆம் மாதத்திற்குப் பின்னர்) (பெ),

 

என படையணி கட்டுமானங்கள் நிமிர்ந்து நின்றன.

 

இவற்றை விட ஒவ்வொரு களமுனைகளையும் ஒருங்கிணைத்து

  • வடபோர்முனை கட்டளைப் பணியகம்
  • மன்னார் கட்டளைப் பணியகம்
  • மணலாறு கட்டளைப் பணியகம்
  • வவுனியா கட்டளைப் பணியகம்
  • மட்டக்களப்பு கட்டளைப் பணியகம்
  • அம்பாறை கட்டளைப் பணியகம்
  • திருமலை கட்டளைப் பணியகம்

என கட்டளைப் பணியகங்களையும் புலிகள் உருவாக்கியிருந்தனர்.


 

 

புலனாய்வுத்துறை (ஐந்தாம்படை)

→ உளவுத்துறை பெயர்: புலி இயக்கப் பாதுகாப்பு புலனாய்வு சேவை [Tiger Organization Security Intelligence Service] - TOSIS

  • புலனாய்வுத்துறை தாக்குதல் அணி
  • பன்னாட்டு புலனாய்வு அணி
  • தேசிய புலனாய்வுப் பிரிவு
    • தகவல் சேகரிப்புப் பிரிவு
    • ஆய்வு மற்றும் வெளியீட்டுப் பிரிவு
    • பயிற்சி மற்றும் தொழில் நுட்பப் பிரிவு
    • நிருவாகம் மற்றும் அறிக்கைப் பிரிவு
  • படைய புலனாய்வுப் பிரிவு
    • தரைப்படைத் தகவல் சேகரிப்புப் பிரிவு
    • கடற்படைத் தகவல் சேகரிப்புப் பிரிவு
    • வான்படைத் தகவல் சேகரிப்புப் பிரிவு
    • நிருவாகம் மற்றும் அறிக்கைப் பிரிவு
  • உள்ளக புலனாய்வுப் பிரிவு
  • வெளியக புலனாய்வுப் பிரிவு
  • நிருவாக புலனாய்வுப் பிரிவு
  • நிதிப் புலனாய்வுப் பிரிவு
  • உளவியல் செயற்பாட்டுப் பிரிவு
  • முகவர்கள்
    • வெளிக்கள முகவர்கள் < <-இடைநிலையாளர்கள்(குருவிகள்)-> < முதன்மை முகவர்கள்
  • மறைமுக உறுப்பினர்கள்
  • இரகசிய நடவடிக்கை அணிகள்
  • ஊடுருவல் முறியடிப்பு பிரிவு
  • ராதா புலனாய்வுப் பிரிவு
  • புலனாய்வு பயிற்சி மையம்
  • கல்விக்குழு

 

வேவுப்புலிகள் (ஆ&பெ):-

  • செம்பியன் வேவு அணி - (இம்ரான்-பாண்டியன் படையணியின் கீழ் செயல்பட்டது)
  • சாள்ஸ் வேவு அணி
  • முகிலன் 'நீண்ட தூர விசேட வேவு அணி' (LRRP)
  • இவ்வேவுப் பணியில் சில வேளைகளில் கரும்புலிகளும் ஈடுபடுத்தப் படுவதுண்டு.

 

இப்படையணிகளின் வழங்கல்களுக்காகவும் அவற்றினை நெறிப்படுத்துவதற்காகவும் கீழ்க்கண்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டிருந்தன.

  1. போர்க்கருவி தொழிலகம்
  2. ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவு
  3. மலரவன் வெடிமருந்துப் பிரிவு
  4. ஒற்றாடல் பிரிவு ( படைத்துறை நகர்வுகள், வானூர்தி தாக்குதல்கள் பற்றிய தகவல்களை ஒட்டுக்கேட்டு உசார்படுத்தும் பிரிவு)
  5. வரைபடப் பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி , தொலைத்தொடர்பு பரிபாசை தாள்கள் விளைவிக்கும் அணி)
  6. சமராய்வு மையம்
  7. செய்தித் தகவல் மையம்
  8. களமுனை ஆய்வுப்பிரிவு
  9. கள விசாரணை பகுதி
  10. அனைத்துலக தொலைத்தொடர்புசெயலகம் (வெளிநாட்டு கிளைகள் நிர்வாகம்)
  11. வழங்கற் பிரிவு
  12. விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம்
  13. இராணுவ தொழிநுட்ப பிரிவு
  14. சமர் நூலாக்கப்பிரிவு- இவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன. இவர்கள் MOD என்னும் ஓர் தமிழ் படைத்துறை அகராதியையும் உருவாக்கியிருந்தார்கள்.
  15. வாகனப்பகுதி
  16. கண்ணிவெடி உற்பத்தி தொழிற்சாலை
  17. கைக்குண்டு உற்பத்தி தொழிற்சாலை
  18. மிதிவெடி உற்பத்தி தொழிற்சாலை
  19. எறிகணை உற்பத்தி தொழிற்சாலை
  20. கடற்புலிகளின் படகு வடிவமைப்புத் தொழிற்சாலை
  21. வெடிபொருள் களஞ்சியம் & விநியோகப் பிரிவு
  22. ஆயுத களஞ்சியம் / பராமரிப்பு & விநியோகப் பிரிவு
  23. அனைத்துலகத் தொடர்பகம்
  24. பல பயிற்சிப் பாசறைகள்
  25. கணினிப் பிரிவு → இதன் கீழ்ச்செயல்பட்ட பிரிவுகளாவன:
  • வன்பகுதி
  • மென்பகுதி
  • மென்பொருள் கட்டுமானப்பகுதி
  • தொழில்நுட்பக் கல்லூரிகள்
  • கொள்வனவுப்பகுதி
  • சிறப்புத் தாக்குதல் அணி
  • திட்டமியல் செயலகம்

 

இவை தவிர தங்களின் இராணுவ வீரர்களுக்கு படைத்துறை தொடர்பான பயிற்சிகள் வழங்குவதற்காக பல்வேறு கல்லூரிகளையும் திறந்து வைத்திருந்தனர். அவையாவன,

  1. தமிழீழ படைத்துறைப் பள்ளி
  2. படைய தொடக்கப் பயிற்சிக் கல்லூரி
  3. அன்னக்கிளி பயிற்சிக் கல்லூரி(குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே தொழிற்பட்டது)
  4. சிறப்பு பயிற்சிக் கல்லூரி
  5. இராணுவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
  6. பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி- (மட்டு)
  7. ராயு படைய அறிவியல் தொழினுட்ப ஆய்வு நிறுவனம்
  8. அப்பையா வெடிபொருள் பயிற்சிக் கல்லூரி
  9. ராஜன் படைத்துறை பயிற்சிக் கல்லூரி
  10. புலேந்திரன் சிறப்புப்படை பயிற்சிக் கல்லூரி
  11. தூயவன் அரசறிவியற்கூடம்
  12. சிங்கள மொழி கலாச்சார கல்வி நிலையம் - (புலனாய்வுத்துறை & கரும்புலிகளுக்கானது)
  13. சரத்பாபு பயிற்சிக் கல்லூரி
  14. மகளீர் அடிப்படை பயிற்சிக் கல்லூரி
  15. மகளீர் படைத்துறைப் பயிற்சிக் கல்லூரி
  16. றோய் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி 
  17. கடற்புலிகளின் கடற்படைப் படைத்துறைப் பள்ளி
  18. நிரோயன் ஆரம்பக் கடற்படை பயிற்சிக் கல்லூரி
  19. ஆசிர் கடற்படைப் பயிற்சிக் கல்லூரி (1992 இல் )
  20. நரேஸ் தொழினுட்பக் கல்லூரி
  21. பெத்தா அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி
  22. கடற்புலிகளின் அரசியற் பயிற்சிப் பள்ளி
  • மொழியாக்கப் பிரிவு

 

சரி, இனி இப்படையணிகளுக்கான இலச்சினைகளைப் பற்றிப்பார்ப்போம்..

  • விடுதலைபுலிகள் அமைப்பின் படைத்துறை பொது இலச்சினை:

main-qimg-27dca4e1cf907826f0ef8e91e4f55886.png

 

  • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி

main-qimg-649195bd25f29467d8798916f9f46db6.jpg

 

  • ஜெயந்தன் படையணி

main-qimg-9a1cb492c946ee29de9f9bd723f98f61.jpg

'நீலத்திற்குப் பின்புலத்தில் போராளிகள் படமில்லாமல் 'பச்சை-நீலம்-மண்ணிறம்' என்ற நிரல் வரிசை ஒழுங்கு முறையில் மூன்றாகப் பிரிந்த நிறங்கள் வர வேண்டும்.'

 

  • குட்டிசிறி மோட்டார் படையணி

முழக்கம்:
"புதிய மூச்சாய் பிறந்தோம்
புதிய வரலாற்றைப் படைப்போம்"

main-qimg-0014a4d3f5fe7f1dc3e9be48bb430541.jpg

 

  • விக்டர் கவச எதிர்ப்புப் படையணி

main-qimg-1639b8e61d07cd3a145c33a3778ddfc0.jpg

 

  • சோதியா படையணி

main-qimg-2afd05cb7a978e87fa79d2135e700276.jpg

 

  • தமிழீழ தேசிய துணைப்படை

main-qimg-92974104cb9c24def9465187c1ae1ca6.jpg

 

  • இம்ரான் - பாண்டியன் படையணி

முழக்கம்:

"தலைவன் நினைவைச் செயலில் செய்வோம்

தலைகள் கொடுத்தும் தடைகள் வெல்வோம்"

main-qimg-b10b1d3b350611d277a66047e7f46099.jpg

 

  • தேசிய மண்மீட்புப் படை

முழக்கம்: "உடல் தேசத்திற்கு உயிர் விடுதலைக்கு"

தேசிய மண் மீட்புப் படை முழக்கம்- உடல் தேசத்திற்கு உயிர் விடுதலைக்கு.jpg

 

  • தமிழீழ கடற் துணைப்படை

Untitled.jpg

வால் மேன்னோக்கி நின்றபடி இடது புறம் நோக்கி பாயும் சிறுத்தை. (எனது தன்விரிப்புப் படத்தில்(Profile picture) இருக்கும் புலியினை ஒத்த சின்னம். இச்சின்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்புறம் ஒரு விதமான நீல நிறம். நீல நிற விதப் பெயர் எனக்குத் தெரியவில்லை). சின்னத்திற்குக் கீழே 'தமிழீழ கடற் துணைப்படை' என எழுதப்பட்டிருக்கும், அரை வட்ட வடிவத்தில்.

 

  • திலகா படையணி

main-qimg-af01b9743d304bb69801914d2e2d560d.jpg

 

  • அன்பரசி படையணி

main-qimg-824b212d6edfef14ca0003a838e7ab53.jpg

 

  • விநோதன் படையணி

main-qimg-df8e94245db9d66e20ab7e395ec2045b.jpg

 

  • மாலதி படையணி

முழக்கம்:
"எட்டும்வரை மாய்வோம்
கிட்டும்வரை ஓயோம்"

main-qimg-67b8c6e75e0cd206d3b8320d4bc0e788.jpg

 

 

  • பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு:

ponnammaan.jpg

 

  •  பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி

pothu nookku iyanthira ani.jpg

 

  • கரும்புலிகள்:

 முழக்கம்:

"எம் தேசத்திற்காய்

எங்கெங்கும்"

'கரும்புலிகள் பாகம்-2' பாடல் தொகுப்பின் முகவுரையின் முதல் வரியில் எழுதப்பட்டுள்ளது. இது அனைத்துப் பிரிவுகளுக்கும் பொதுவானதாகும்.

 

  • தரைக்கரும்புலிகள்

main-qimg-1d5884ded4b3165b580b5cd1b4040e3b.jpg

இவர்கள் தங்கள் உடையில் இச்சின்னத்தைப் பொறிக்கும் போது இவ்வாறு இருக்கும்.

main-qimg-7ce50ed270b9e3f6428e5f96eaa65a57.png

 

  • கடற்கரும்புலிகள் (முந்தைய சின்னம்)

main-qimg-48eac31264d7ecfcf14c7bd797ca2299.png

 

  • கடற்கரும்புலிகள் (பிந்தைய சின்னம்)

main-qimg-5507e0e68b167bad26d326901d509f0e.jpg

 

  • மறைமுகக் கரும்புலிகள்:

main-qimg-2c20642eb2c42ea1fde404a712a02a91.png

 

  • இங்குதெரியும் கொடி எந்தப் படையணிக் கொடி என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை

main-qimg-669650d709ccdec8f0f43e55c512fa11.jpg

 

  • கிட்டு பீரங்கிப் படையணி:

முழக்கம்:
"பீரங்கி கொண்டு தமிழீழம் மீட்போம்"

 

main-qimg-84ec183fb5d5122bddf960b6f16455f0.jpg

'இதுதான் கிட்டு பீரங்கி படையணியின் சின்னம்'

main-qimg-76d1852ebe2a2a185ca88d172a8eb52f.jpg

'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்..'

இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது

 

  • இது எந்தப் படையணிச் சின்னம்மென்று தெரியவில்லை

main-qimg-bfea7da564bf626ac639902e54066125.jpg

 

  • மக்கள்படை:-

main-qimg-661f753b453bea68aa94a5cdc52adc49.png

 

 

on malathy 15.png

'2002-10-10 ஆம் ஆண்டு 'மாலதி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளில் நிகராளிகள்(Representatives) வலமிருந்து: அன்பரசி படையணி, மாலதி படையணி, திலகா படையணி, சோதியா படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறுத்தைப்படை, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி, பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவு, கடற் படையணி | இதில் இவர்கள் கொண்டுள்ள கொடியின் நிறங்களே படையணிக் கொடிகளின் செந்தரமான நிறங்களாகும்

 

  • சமராய்வு மையம்:

முழக்கம்: மெய்ப்பொருள் காண்பதறிவு

main-qimg-93b9aaee987205c32a2367add12e4b51.png

 

  • புலனாய்வுத்துறை & கரும்புலிகளுக்கான……

இங்கு பகைப்புலம் செல்லும் மறைமுகக் கரும்புலிகள் மற்றும் புலனாய்வுத்துறை வீரர்களுக்கு சிங்கள மொழி மற்றும் கலாச்சாரம் பற்றிய கல்வி போதிக்கப்படும்.

main-qimg-33c90a00c7c3d35bf8e9e980d7f49c0e.png


 

பிற்சேர்க்கை(1–12–2021)

  • மட்டக்களப்பில் தரித்து நின்ற படையணிகள்:

→ மட்டக்களப்பில் இருந்த படையணிகளின் மொத்த சின்னங்கள்:

இங்கிருப்பவை கருணா துரோகியாகும் வரை தவிபுவின் தலைவரின் தலைமையையேற்று புலிகளின் சிந்தாந்தத்தின் கீழ் மட்டக்களப்பில் தரிபெற்ற படையணிகளின் இலச்சினைகளாகும். இவை எவற்றினதும் விவரம் எனக்குத் தெரியவில்லை. யாரேனும் அறிந்தால் எனக்கு வரலாற்றை எழுத கொடுத்துதவுங்கள்.

main-qimg-3650cb748b3c765a1c31f66d093a6da2.jpg

'இங்குதெரியும் கொடி எந்தப் படையணிக் கொடி என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை.'

 

main-qimg-b46cce39edf90c04c086c3680c9f2fd8.jpg

''கருணாவிற்குப் பின்னால் இருக்கும் அந்த மேடையில் ஐந்து சின்னங்கள் தெரிகின்றன''

அவற்றில் இருந்து நான் பிரித்தெடுத்தவை:-

main-qimg-751a45ba2545bd7cc2df7d3ea6411f5b.png

''இது மதனா படையணியினதாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் அவ்விலைச்சினைதான் மஞ்சள் நிறமான வட்ட வடிவமாக இருக்கும். மேற்கண்ட படத்திலும் அதுதான் உள்ளது. | ஆதாரம்: Fighters killed in Vavunathivu SLA camp attack remembered ''

 

main-qimg-b9193c08803b0cbf8aa9d75df13e5929.png

 

இடது பக்கத்தில் இருக்கும் இரு இலச்சினைகளினதும் அண்மையாக்கப்பட்ட படங்கள்:

இப்படங்கள் நான் மேலே சுட்டிய படத்தில் உள்ள மேடையில் இல்லாத ஏனைய இரு படங்களாகும் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

main-qimg-61547b8632029ed56a7e9272a7dc83e2.png

main-qimg-928349954f0660a89b23237f0cfd9873.jpg

'தேனகம் - கரடியனாறு, மட்டக்களப்பு, தெந்தமிழீழம் | பறக்கும் கொடிகளில் இனங்காணப்பட்டவை: (இடமிருந்து வலமாக) மதனா, தெரியவில்லை, தெரியவில்லை, தெரியவில்லை'

 

main-qimg-6832b02a2f2940f4fecf17c0031b3409.jpg

மேற்கண்ட படத்தில் இரு மேல் மூலைகளிலும் இரு சின்னங்கள் தெரிகின்றன. அவையாவும் எந்தப் படையணியினது என்று எனக்குத் தெரியவில்லை!

 

----------------------------------------------------------------------

 

இது 2007 ஆம் ஆண்டு வன்னியில் பயிற்சி முடித்து வெளியேறின படையணி. இதனது புய வில்லையினை நோக்கவும். இதன் பெயர் அறிந்தோர் கூறவும்.

Unknown regiment of LTTE, unleashed on the first half of 2008.jpg

 


  • கடற்புலிகளின் படையணிக் கொடிகள்

main-qimg-45c61515846505fa830cb666be544b1d.jpg

 


ஒரு பக்கம் பார்த்தால் எப்படி மறுபக்கம் பார்க்க வேண்டாமா?


 

கூடுதல் தகவல்கள்:-

புதுமைக் கால ஈழத் தமிழரின் படைக் கட்டமைப்பின் கட்டளையாளர் பதவிநிலைகள் (>2009 மே):

  1. சிறப்புத் தளபதி > தளபதி > துணைத் தளபதி > தாக்குதல் தளபதி > இளநிலை அதிகாரி/ கட்டளை அதிகாரி > அணித் தலைவர் > சூட்டணித் தலைவர் > வீரவேங்கை (Very Lower rank…).
    1. தளபதி = T.(தளம்) + S.(பதி)

 


  1. பின்னுத்தைப்பற்ற(SPG-9, M40A1) சுடுகலச் சூட்டணி - 4 பேர் (எறிகணை காவுபவர்-1, சுடுகலன் காவுபவர்-2 & துணைவர்-1 )
  2. பின்னுத்தைப்பற்ற(Carl Gustav) சுடுகலச் சூட்டணி - 2/3 பேர் [எறிகணை காவுபவர்-1, சுடுகலன் காவுபவர்-1(இவரும் எறிகணை காவிச் செல்வார்), கட்டளையாளர்-1 (சிலவேளைகளில் மட்டும்) ]
  3. ஒரு 7.62 மி.மீ.(PK) இயந்திரச் சுடுகலச் சூட்டணி - 2 பேர் (சூட்டாளர் & துணைவர் (சிலவேளை ஏ.கே. உடன்… சிலவேளை வெறுமனே) )
  4. ஒரு 12.7 மி.மீ. (வகை-54, வகை-85, QJZ-89, DShK, KPV/NSV) கன இயந்திரச் சுடுகலச் சூட்டணி-4 பேர் [கணைப் பெட்டி (Ammo Box) காவுபவர்-1, சுடுகலன் காவுபவர்-2 & துணைவர்-1(பெரும்பாலும் இருப்பார்) ]
  5. ஒரு 14.5 மி.மீ. (ZPU-1) கன இயந்திரச் சுடுகலச் சூட்டணி(சில்லில்) - 6 பேர் [கணைப் பெட்டி காவுபவர்-1, சுடுகலன் காவுபவர்-3 (இழுக்க இருவர்; தள்ள ஒருவர்), கட்டளையாளர்-1, துணைவர்- 1 ]
    1. KPV/NSV - சில்லென்றால் இதே 6 பேர்தான் (புதுக்குடியிருப்பு முறியடிப்புச் சமர் நிகழ்படம்(video) ஒன்றில் கண்டுள்ளேன்)
  6. காலாட்படை கணையெக்கி(Infantry Mortar) சூட்டணி
    1. 60mm - 2 பேர் (கணையெக்கி காவுபவர் & கணைப் பெட்டி காவுபவர்)
    2. 81mm - 7 பேர்
    3. 120mm - அறியில்லை
  7. சுடுதல் & மறத்தல் தகரி எதிர்ப்பு ஏவுகணை (Fire and Forget Anti-Tank Missile) அணி- FGM-17 / FGM 148 - எத்தனை பேர் என்று தெரியவில்லை. நான்காம் ஈழப்போரில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது . அவர்கள் இதனை '17' என்னும் குழுஉ மொழியில்(code language) அழைத்தனராம்.
    1. புலன கிட்டிப்பு(credit): @புஸ்பகுமார் சற்குணநாதன் (முன்னாள் விடுதலை போராட்ட போராளி)
  8. உந்துகணை பிலிறுந்தும் கைக்குண்டு(RPG.. (LAW தவிர்த்து)) சூட்டணி- 2 பேர் [சூட்டாளர் & துணைவர்(ஏ.கே./இ.இ.சு உடன்… இவர் சூட்டாளரிற்கு தேவையான 3 கூடுதல் உந்துகணைகளையும் காவிச் செல்வார்) ]
  9. கைக்குண்டு செலுத்தி(AGS-17, Mk-19, STK 40 AGL) - 4 பேர் (கணைப் பெட்டி காவுபவர்-1, செலுத்தி காவுபவர்-2 & துணைவர்-1 )

 

உசாத்துணை :

படிமப்புரவு

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழில் இதன் ஆங்கிலப் பதிப்பினை பின்னர் வெளியிடுகிறேன்...

 

அதற்கு முன்னர் ஒன்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
 மேற்கண்டவற்றை நான் அங்கிலத்தில் வெளியிடும் முன்னர் யாரேனும் ஆங்கிலத்தில் வெளியிட விரும்பினால்,

  • கிட்டு, குட்டிசிறி ஆகியவற்றினை மட்டும் 'Brigade' என்ற சொல்லால் குறிக்க வேண்டும்.
  • எங்கெல்லாம் 'படையணி' என்று வருகிறதோ அதையெல்லாம் 'Regiment' என்ற சொல்லாலும் (ஆனால் ஜெயந்தன் படையணியினை 'Brigade' சொல்லால் தான் குறிக்க வேண்டும். )
  • எங்கெல்லாம் 'தாக்குதலணி' என்று வருகிறதோ அதையெல்லாம் 'Attack team' என்ற சொற்களாலும்
  • எங்கெல்லாம் 'பிரிவு' என்று வருகிறதோ அதையெல்லாம் 'Unit' என்ற சொல்லாலும்

குறியுங்கள். விடுதலைப் புலிகள் 'Brigade' என்பதை 'படைத்தொகுதிஎன்ற சொல்லால் குறித்தனர். இச்சொல்லானது தவிபு இன் 1998 - 2001 வரை வெளிவந்த நாளிதழ்களில் இடம்பெற்றிருக்கிறது.

 

----------------------------------------------

 

மேலும், சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியானது 'Charles Antony Special Regiment' என்றே விடுதலைப் புலிகளின் ஆவணங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு ஏன் சாள்ஸ் அன்ரனி வரலாறு தொடர்பாக வெளிவந்த 30 நிமிட நிகழ்படத்தில்(video) கூட ''Charles Antony Special Regiment'' என்று தான் ஆங்கிலத்தில் கூறினர். அதை சுருக்கிக் கூறும்போது 'CASR' என்று அதில் குறிப்பிட்டனர்.  கேணல் நகுலன் அவர்கள்(அப்போது லெப்.கேணல் தரத்தில் இருந்தார். பின்னர் மட்டு-அம்பறை அனுப்பப்பட்டபோது கேணல் ஆக தரம் உயர்த்தப்பட்டார்.)   CASR என்று தான் குறிப்பிடுவார். எனவே தயவு கூர்ந்து எமது வரலாற்றை திரிக்காத்தீர்கள். எதிர்காலச் சந்ததிக்கு திரித்த வரலாற்றை விட்டுச் செல்லாதீர்.

 

------------------------------------------------

 

கிட்டு & குட்டிசிறி படையணிகள் ஆனவை சேணேவிகளுக்கென்றே(Artillery) ஒதுக்கப்பட்ட படையணிகள் ஆகும். அவ்வாறு சேணேவிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டவையையும் 27 இற்கு மேற்பட்ட சேணேவிகளைக்(Artillery) கொண்டவையையும் 'Artillery Brigade / Mortar Brigade' என்ற சொல்லால் ஆங்கிலத்தில் குறிக்கப்படும். நாமும் அவ்வாறே குறித்தல் வேண்டும்.

ஒரு நாளும் வரலாற்றை திரிக்க வேண்டாம்.
 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகள் விரிப்பு(விபரம்) - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+
  • நிரந்தரப்படை  - 17 வயது நிரம்பிய ஆண்கள் பெண்கள் போர்ப்பயிற்சி பெற்று நிரந்தரப்படையில் இணைந்தனர். ஏனைய மக்கள் படையினர் இவர்களுக்கு உதவியாக ஏனைய படைகளாக மாறி களத்தில் இவர்களுக்கு உதவி புரிந்தனர் .


மக்கள படைகளான

  • கிராமியப்படை - உணவு வழங்கல், அரத்தம் வழங்கல், பின்களப்பணி
  •     --> கிராமிய சிறப்புப்  படை - கிராமியப்படையில் சுடுகலப் பயிற்சி பெற்றோர்
  • எல்லைப்படை - சமர்க்களத்தில் பணி புரிதல்
  • சிறப்பு எல்லைப்படை - ஒரு துணைப்படை போண்று சண்டைப்பயிற்சி பெற்று எதிரியுடன் நேரடியாக சமராடுதல்
  • போருதவிப்படை - சமர்க்களத்தில் போராளிகளுக்கு வேண்டிய பதுங்குகுழி அகழ்தல், காப்பரண் அமைத்தல் போன்ற உதவிகளை செய்து கொடுப்போர்.
  • ஊரகத் தொண்டர் சிறப்புப் படை - கன வகை ஆயுதப் பயிற்சி முதல் சண்டை பயிற்சி வரை எடுத்தோர்.

ஆகியன தமக்கென இடப்பட்ட பணிகளை போர்ர்க்காலத்தில் மேற்கொண்டன. இவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் பணி புரிந்தனர்.

 

இவை அனைத்தும் ஒருங்கிணைத்து கிராமியமட்ட, வலயமட்ட, வட்டமட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட 'போர் எழுச்சிக் குழுக்கள்' செயற்பட்டன.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1990-2001 ஆம் ஆண்டு காலத்தில் மாவட்ட பெயரிலான சில படையணிகள்:

இப்படையணிகள் யாவும் மேற்குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் பிற்காலத்திலுமாக பெயர் சூட்டப்பட்ட படையணிகளாக விரிந்து நிமிர்ந்தன. சிலது இறுதிவரை அப்பெயரிலே செயற்பட்டன.

அவையாவன,

  1. மட்டக்களப்பு - அம்பாறை படையணி -  1993 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு கப்டன் ஜெயந்தன் படையணி, லெப்.கேணல் விசாலகன் படையணி என புதிய படையணிகள் உருவாக்கப்பட்டு இதன் போராளிகள்  பல அவற்றிற்குள் உள்வாங்கப்பட்டனர்.
  2. மன்னார் படையணி - 2001 ஆம் ஆண்டுவரை அதே பெயரில் செயற்பட்டதற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளது(விடுதலைப்புலிகள் மாத இதழ்: ஐப்பசி-கார்த்திகை 1999). அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
  3. மணலாறு படையணி - முடிவு என்னவென்று தெரியவில்லை.
  4. யாழ் படையணி - நான்காம் ஈழப்போரில் 'யாழ் செல்லும் படையணி' என பெயர் மாற்றம் அடைந்து 2008 இறுதி வரை செயற்பட்டது.
  5. வன்னி படையணி/1.9 படையணி - 1995 இற்குப் பின்னர் கலைக்கப்பட்டு வேறு பல படையணிகளுடன் இதன் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
  6. தலைநகர் படையணி/திருமலை படையணி - 2001 ஆம் ஆண்டுவரை அதே பெயரில் செயற்பட்டதற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளது(எரிமலை ஓகஸ்ட், 2000). அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
  7. மகளீர் படையணி (வட தமி.)- 1997 ஆம் ஆண்டில் 2ம் லெப் மாலதி படையணி, மேஜர் சோதியா படையணி என இரண்டாகப் பிரிக்கப்பட்டு, விரிந்தது.
Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
  • மக்கள்படை உறுதிமொழி:

"அனைத்து விதமான சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலைபெற்று 
சமவுடமை, தன்னாட்சி தமிழீழ விடுதலைக்காக 
எனது உள்ளம், உயிர், உடல், உடமை 
அனைத்தையும் இயைந்து 
உறுதியோடு போராடுவேன் என்றும் 
எமது தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 
வழிநடத்தலை உளமாக ஏற்று 
அவருக்கு என்றும் 
உண்மையாகவும், நம்பிக்கையாகவும் செயல்படுவேன் என்றும் 
இதனால் உறுதிமொழி கூறுகிறேன்.

புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம்"

 

தகவல் நன்றி: குணா கவியழகன் அவர்கள்

 

 

 

==================================

 

  • விடுதலைப்புலிகளின் உறுதிமொழி:

https://eelam.tv/watch/தம-ழ-ழ-வ-ட-தல-ப-ப-ல-கள-ன-உற-த-ம-ழ-தம-ழ-ழ-பட-த-த-ற-உற-த-ம-ழ_7AyzDgVP79BQf6r.html

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.