Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகள் விரிப்பு - ஆவணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உலகின் அங்கீகரிக்கப்பட்ட நாட்டிடம் இருக்கும் மரபுவழிப்படை போன்று முப்படைகளையும் கொண்டிருந்ததது. அம்முப்படைகளுடன் சேர்த்து முற்றிலும் புதிதாக ஓர் படையையும் கொண்டிருந்தனர். அதுதான் தற்கொடைப்படை, அதாவது கரும்புலிகள் என்று அவர்கள் மொழியில். இவைதான் அவர்களிடம் இருந்த தமிழர்களின் புதுமைக்கால நாற்படைகள் ஆகும். அவை மொத்தமாக,

  1. தரைப்புலிகள்
  2. வான்புலிகள்
  3. கடற்புலிகள்
  4. கரும்புலிகள்

இத்துடன் வேவுப்புலிகள் என்னும் ஐந்தாம் படையையும் அவர்கள் வைத்திருந்தனர் . இவர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடல்லாமல் நடைமுறையரசாக(de-facto) செயற்பட்டதால் 'படைவீரர்கள்' எனாமல் போராளிகள் எனப்பட்டனர்.

  • எண்ணிக்கை: 10 - 15 ஆ ( மக்கள்படை & பணியாளர்கள் நீங்கலாக)
  • வீரச்சாவு = 25,500 - 26,500 (2009 மே-19 வரை களமாடி மடிந்தோர்… )
  • ஆயுதம் மௌனித்து சிங்களத்திடம் சென்றபிறகு அங்கு சரணடைந்த தவிபு உறுப்பினர்கள் : 11,644 (இவர்களுள் மிகச் சிலரே போராளிகள் ஆவர். ஏனையோர் விடுதலைப்புலிகளின் பணியாளர்கள், அவர்களின் சமையல்கலைஞர்கள், சாதாரண இள வயது பொதுமக்கள் போன்றோரே ஆவர்)

இவ்வியக்கத்தினரின்,

  • பழைய பெயர்: புதிய தமிழ்ப் புலிகள் (1972 இல் 'மாமனிதர்' இராசரத்தினம் அவர்களின் ஆலோசனையில் சூட்டப்பட்டது)
  • புதிய பெயர்: தமிழீழ விடுதலைப் புலிகள்- தவிபு - (5-5-1976 இல் இருந்து)
    • புலிகள் - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்ற பன்மையால் பலரால் தொடர்ந்து சுட்டப்படுகின்றனர்.
  • பட்டப்பெயர்கள்:
    • இயக்கம் - இப்பெயர் கூலிப்படைகளாகச் செயல்பட்ட மாற்று இயக்கங்கள் ஒழிக்கப்பட்ட பின்னர் மக்களால் புலிகளைக் குறிக்கப் பயன்பட்டது ஆகும்.
    • கொம்பனி - படையின் ஒரு அலகான கொம்பனியை, Company என்று ஆங்கிலத்தில் புலிகள் அழைத்தனர். அதனால் புலிகளிற்கும் இதுவே பெயரானது. சிங்களப் படையினருக்கு புரியாது இருக்க புலிகளின் புலனாய்வுத்துறையினரும் மக்களுக்கு தங்களை அடையாளம் காட்ட இந்தப் பெயரை பயன்படுத்தினர். ஆகையால் இது மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. | புலன கிட்டிப்பு(credit): ஐங்கரன் தமிழரசன்
    • புலிப்படை - வீரத்தின் பெயரால் ஒட்டுமொத்த தமிழர் சேனையையும் குறிக்க அமைந்த பெயர்.
  • பயத்தால் பட்டப்பெயர்:
    • பீரங்கி - இது 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்தில் 'கட்டாய ஆட்சேர்ப்பு' காரணமாக இளைஞர்களால் புலிகளை சுட்டப் பயன்பட்டது ஆகும்.. (அவர்களின் ஓர் குறும்படத்தில் இருந்து இப் பற்றியத்தை எடுத்தேன்)
  • செல்லப்பெயர்:
    • பெடியள்- புலிகள் இயக்கத்தின் தொடக்க காலத்தில் ஆண்களே இருந்ததால் மக்களால் பெடியள் என்று அழைக்கப்பட்டு அதுவே இவர்களை இறுதி வரையும் சுட்டலாயிற்று.
  • உலகத்தால் வழங்கப்பட்ட அடைமொழி:
    • Tamil Tigers - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்பதன் ஒருமையான 'புலி' என்பதையும், அவர்தம் இனம் தமிழர்களாகவும் இருந்ததால் இரண்டையும் ஒன்றிணைத்து 'தமிழ்ப்புலி' என்று அழைக்கப்படலாயினர். இவ்வாறு ஈழத்தினில் வழங்கப்பட்டது மிக அரிதாகும்.

 

சரி இனி படையணிகளைப் பற்றிப் பார்ப்போம். இப்புலனங்களை புலிகள் ஆதரவு இணையத்தளங்கள் மூலமாகவும் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பெற்ற ஒரு சில புத்தகங்களின் துணைகொண்டும் தேடியெடுத்து தொகுத்து பதிவிட்டிருக்கிறேன்.. வாசித்து அறிந்து கொள்ளவும்…

தரைப்புலிகள் (தரைப்படை):-

நிரந்தரப்படை (ஆ&பெ):-

  • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (இதுவே முதலாவது மரபுவழிப் படையணியாகும். இதில் யாழ் & வன்னியைச் போராளிகள் இடம்பெற்றிருந்தனர். உருவாக்கப்பட்டது: 1991.04.10 ) | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 1000–2000 (2008)
    • வான்காப்பு அணி(சாள்ஸ் அன்ரனிக்கானது)
    • கனவகை ஆயுதப்பிரிவு
    • சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு
    • சாள்ஸ் அன்ரனி வேவு அணி
    • பாலா மோட்டார் அணி
  • ஜெயந்தன் படையணி (இதில் தென் தமிழீழத்தைச் சேர்ந்த ஆண் போராளிகள் இடம்பெற்றிருந்தனர்.) உருவாக்கப்பட்டது: 1993.05.04 தரிப்பிடம்: மட்டு-அம்பாறை. சில தாக்குதலணிகள் வட தமிழீழத்திலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். | எண்ணிக்கை: 1000-2000 (2008)
    • கனவகை ஆயுதப் பிரிவு
  • பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி (இது இயந்திர சுடுகலன்களுக்கான அணியாகும்.. எல்லாப் படையணிகள் கீழும் இது இயங்கியது)
  • விசாலகன் சிறப்புப் படையணி | உருவாக்கப்பட்டது: 1991-1994 | தரிப்பிடம்: வாகரைக் கோட்டம் | எண்ணிக்கை: 750<
  • வினோதன் படையணி | உருவாக்கப்பட்டது: ~1996 | தரிப்பிடம்: குடும்பிமலைக் கோட்டம் | எண்ணிக்கை: 750<
  • இளங்கோ படையணி  | தரிப்பிடம்: திருகோணமலை . இதன் கட்டளையாளர் 'விமல்' என்பவர் ஆவார். 
  • மாலதி படையணி | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500-750 | உருவாக்கப்பட்டது: சூரியக்கதிர் -1 எதிர்ச்சமரின் முடிவில். மாலதி படையணியானது அதற்கு முன்னர் மகளிர் படையணி என்னும் பெயரில் செயல்பட்டு வந்தது.
    • கனவகை ஆயுதப்பிரிவு
    • சிறப்பு அதிரடிப்படை
    • சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு
  • அன்பரசி படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 250-750 | உருவாக்கப்பட்டது: சூரியக்கதிர் -1 எதிர்ச்சமரின் முடிவில்அன்பரசி படையணியானது அதற்கு முன்னர் மட்டு-அம்பாறை மகளிர் படையணி என்னும் பெயரில் செயற்பட்டு வந்தது.
    • வான்காப்பு அணி
    • கனவகை ஆயுதப்பிரிவு
  • சோதியா படையணி | உருவாக்கப்பட்டது : 14.07.1996 | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500 - 750
    • கனவகை ஆயுதப்பிரிவு
  • மதனா படையணி | உருவாக்கப்பட்டது: 1997 | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 250-750
    • கனவகை ஆய்தப்பிரிவு
  • திலகா படையணி
  • யாழ் செல்லும் படையணி(ஆ&பெ) | உருவாக்கப்பட்டது: 1999
  • ராதா வான்காப்புப் படையணி | (2002 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்படும் வரை இவர்கள் இம்ரான் - பாண்டியனின் ஓர் உறுப்பாக 'ராதா வானூர்தி எதிர்ப்பு அணி' என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர்.)
    • யேசுதாஸ் பாதுகாப்பு அணி
    • வான் எதிர்ப்பு ஏவுகணை அணி
    • வான் கண்காணிப்பு அணி
  • பூநகரி படையணி (2007 - 2008 இறுதிவரை) (ஆ&பெ)
    • சிறப்பு அதிரடிப்படை
    • வேவு அணி
  • கிட்டு பீரங்கிப் படையணி(ஆ&பெ) | உருவாக்கப்பட்டது : 1995
    • முன்னிலை நோக்குநர் அணி 
  • ஜோன்சன் பீரங்கிப் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
    • முன்னிலை நோக்குநர் அணி
  • குட்டிசிறி மோட்டார் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: வட தமிழீழம்
    • முன்னிலை நோக்குநர் அணி
  • பசீலன் மோட்டார் பிரிவு (தமிழீழத்தில் பெயர் சூட்டப்பட்ட முதலாவது சேணேவி(artillery) படைத்துறை பிரிவு)
  • மாருதியன் படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
  • ரிம் 1.5 விசேட படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
    • இப்படையணியின் போராளிகள், இதன் கட்டளையாளரும் 2004இல் வஞ்சகனாய் மாறியவனுமான 'றொபேட்' ஆல் நேரடியாகவே பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் 'ரிம் 1.5 சொந்த விசேட படையணி' என்றும், இதன் தாக்குதல் திறனால் "அமெரிக்கன் படை" என்றும் மட்டக்களப்பைச் சார்ந்தோரால் அழைக்கப்படுவதுண்டு.
  • 4.1 படையணி (ஆ&பெ) (மீளச் சேர்ந்தோருக்கானது)
  • 2.3 படையணி
  • 1-9 படையணி
  • சந்தோசம் படையணி (மூன்றாம் ஈழப்போரில் மட்டுமே இயங்கியது)
  • இம்ரான் - பாண்டியன் படையணி/ சைவர் {0} பிரிவு (இது ஒரு கூட்டுப் படையணியாகும். 1–10–1992ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்.கட்டைக்காட்டு தாக்குதலின் போதுதான் இவர்களின் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது) இதன் கீழ் இருந்த அணிகள், பிரிவுகள், படையணிகள் ஆவன:
    • சூரன் கவச அணி
    • பதுங்கித் தாக்குதல் அணிகள்
    • கௌதமன் புலனாய்வு அணி
    • சங்கர் ஆழ ஊடுருவித்தாக்கும் அணி  - (LTTE's DPU)
    • படைக்காவலர் அணி
    • பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு (பெ) - 1999.04.28 இல் உருவாக்கப்பட்டது
      • சிறப்பு கண்ணிவெடிப்பிரிவு
    • குறிசூட்டுப்பிரிவு (ஆ&பெ)
      • மயூரன் குறிசூட்டுப்பிரிவு
      • செண்பகம் குறிசூட்டுப்பிரிவு - (செண்பகம் என்ற குறிசூட்டுத் துமுக்கியைப் பயன்படுத்துவோர்)
    • சிறப்பு உந்துருளி படையணி | எண்ணிக்கை: <250
      • அதிவேக உந்துருளி சிறப்பு அணி
    • செம்பியன் வேவு அணி
    • விக்டர் கவச எதிர்புப் படையணி (1997 இன் முற்பாதியில் உருவாக்கப்பட்டது. இப்படையணியின் உந்துகணை சூட்டாளரிற்கு RPG Commando என்னும் அடைமொழி வழங்கப்பட்டிருந்தது. இப்படையணியின் வீரர்கள் 1997 இற்கு முன்னர் ராங்கி எதிர்ப்பு அணி என்ற 04- 1992 இல் உருவாக்கப்பட்ட அணியில் பணியாற்றியோர் ஆவர்.(ஆ&பெ)
    • அனைத்துலகத் தொடர்பகம்
    • வெடிபொருள் களஞ்சியம் & வழங்கல் பிரிவு
    • ஆயுதக் களஞ்சியம் / பராமரிப்பு & வழங்கல் பிரிவு
  • கிழக்கில் தரித்திருந்த ஓர் உந்துகணை செலுத்திப் படையணி.
    • இப்படையணி தனக்கென இலச்சினை எல்லாம் கொண்டிருந்தது. ஆனால் இதன் பெயரை அறிய முடியவில்லை!
  • வண்ணாளன் உந்துருளி படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை
  • பாதுகாவலர் பிரிவு(ஆ&பெ)
  • களமுனை முறியடிப்புப்பிரிவு(ஆ&பெ)
  • சிறப்பு வரைபடப்பிரிவு(ஆ&பெ)
  • நீலன் துணைப்படை(ஆ)
  • தமிழீழ தேசிய துணைப்படை (ஆ&பெ)
    • இவர்கள் 1991 வைகாசியில் இருந்து ஆடி 1992 வரை 'எல்லைக் கிராமப்  பாதுகாப்புப் படை' என்ற பெயரால் அழைக்கப்பட்டனர்.
    • உந்துகணை செலுத்தி பிரிவு
    • பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி

 

என தரைப்புலிகளின் படையணிகள் மிடுக்குடன் நடந்தன. இவற்றில் 1-9, 4.1, 2.3 ஆகிய படையணிகள் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டு அதன் பின் கலைக்கப்பட்டவையாகும்.

இவற்றோடு மகளிர் படையணிகள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு 'மகளிர் பேரவை' என்ற அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. பெண்போராளிகளின் பரிணமிப்பு:

  • 1984ல் "சுதந்திரப் பறவைகள்
  • பின் "மகளிர் அமைப்பு"
  • பின் 1990ல் "மகளிர் படையணி & மட்டு-அம்பாறை மகளிர் படையணி
  • பேந்து 'சூரியகதிர்' ஒன்றின் முடிவில் "மாலதி படையணி" மற்றும் "அன்பரசி படையணி" களாக பரிணமித்து பின் பற்பல சண்டை உருவாக்கங்களாகி வீறுநடை போட்டனர்.

 

படையணிகள் தவிர்த்து மக்களுக்கும் படைத்துறைப் பயிற்சி, முதலுதவிப் பயிற்சி என பல்வகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்றோர் அனைவரும் மக்கள் படையென நிமிர்ந்தனர். அம்மக்கள் படையானது

  • மக்கள்படை:-
    • எல்லைப்படை(ஆ&பெ) - இவர்கள் 'எல்லைப்புலிகள் ' எனவும் அழைக்கப்பட்டனர்
    • சிறப்பு எல்லைப்படை(ஆ&பெ)
    • ஊரகத் தொண்டர் படை(ஆ)
      • பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி
      • உந்துகணை செலுத்திப் பிரிவு
      • ஆசிரியர் தொண்டர் படை
    • போருதவிப்படை(ஆ)
    • கிராமியப்படை(ஆ&பெ) - இதை 'ஈழப்படை' என்றும் மக்கள் அழைப்பர் 
      • கிராமிய விசேட படையணி
    • உள்ளகப் பாதுகாப்புப் படை (ஆ&பெ)
      • உள்ளக மகளீர் பாதுகாப்பு அணி(பெ)
      • லெப். 'தமிழ்ப்பாண்டி உள்ளகப் பாதுகாப்பு அணி'
    • மாணவர் படை

 

என மக்கள்படைக் கட்டமைப்புகளாக செயலுருப்பெற்றன. மேற்கண்ட மக்கள்படைக் கட்டமைப்பை 'தமிழீழ தேசிய எழுச்சிப் பேரவை' ஆளுவப்படுத்தியது.

 

மேலும், புலிகள் தாங்களாக தங்கள் நிருவாகப் பகுதிகளுக்குள் உருவாக்கியிருந்த துறைகளில் ஒவ்வொரு துறையும் தத்தம் பணியாளர்களைத் தனித்தனி தாக்குதலணியாக உருவாக்கி களமுனைகளிற்கு சுழற்சி முறையில் பணிக்கனுப்பியது:

அத்தாக்குதலணிகள் ஆவன,

  • அரசியல்துறை தாக்குதலணி
  • புலனாய்வுத்துறை தாக்குதலணி
  • வருவாய்த்துறை தாக்குதலணி
  • நிதித்துறை தாக்குதலணி

 

ஈரூடகப்படை ( marines)-

  • சேரன் ஈருடகத் தாக்குதலணி

 

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் (கடற்படை) :- “கடற்புறா “ என்ற சிறு அணி இந்திய தமிழீழ கடல்வழி நகர்வுகளைக்காக உருவாக்கப்பட்டது. அது பின்பு தமிழீழக் கடல் பகுதிகளின் பாதுகாப்புக்காகவும் நடவடிக்கைகளுக்குமாக 1990 ஆம் ஆண்டு படையாக பரிணாம வளர்ச்சி பெற்றது. அதுவே கடற்புலிகள் என்றானது! | எண்ணிக்கை: 1000 - 2000

  • ஆசிர் சிறப்புக் கடற்தாக்குதல் படையணி
    • (இதுதான் முதலாவது சிறப்புக் கடற்றாக்குதல் படையணி ஆகும். இது மேஜர் ஆசிர் நினைவாக கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் சாள்ஸ் அவர்களின் தலைமையில் 1993 தை மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டது ஆகும். பின்னாளில் வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்.)
  • சாள்ஸ் சிறப்புக் கடற்தாக்குதல் அணி(ஆ) (உருவாக்கப்பட்டது : 11-11-1993.
    • நடவடிக்கை அணி
    • தாக்குதலணி
      • (இது முதலில் "சிறப்புக் கடற்படையணி" என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்)
  • நளாயினி சிறப்புக் கடற்தாக்குதல் அணி(பெ)
    • நடவடிக்கை அணி
    • தாக்குதலணி
      • (இது முதலில் "சிறப்புக் கடற்படையணி " என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்)
  • பாக்கியன் ஆழ்கடல் தாக்குதல் அணி (ஆ & பெ)
  • வசந்தன் கடற்படையணி (உருவாக்கப்பட்டது : 1994. பின்னாளில்(~2000) வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்)
  • சங்கர் கடற்படையணி
  • நரேஷ் கடற்படையணி
  • மாதவி கடற்படையணி
  • டேவிட் கடற்படையணி
  • எழிற்கண்ணன் கடற்படையணி
  • கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி
    • புனிதா தரைத்தாக்குதல் அணி(பெ)
    • சுகன்யா தரைத்தாக்குதல் அணி(பெ)
    • சூட்டி தரைத்தாக்குதல் அணி(ஆ) | உருவாக்கப்பட்டது: 5.7.1995
  • சிறப்புப் படையணி
    • கப்பல் பிரிவு (இதில் பணியாற்றியவர்கள் ஆழ்கடலோடிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களிடம் சொந்தமாக 20–25 கப்பல்கள் இருந்தன. அவற்றுள் 15 போரின் போது மூழ்கடிக்கப்பட்டு விட்டது)
    • சிறப்புப் பணிப்பிரிவு
  • நீரடி நீச்சல் பிரிவு
    • கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994) ()
      • (சுலோயன் என்று இருந்த இதன் பெயர் 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது)
    • அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ஆம் மாதத்திற்குப் பின்னர்) (பெ),
  • சிறப்பு சுற்றுக்காவல் அணி
  • கடல் வேவு அணி
  • வானூர்தி எதிர்ப்பு அணி
  • கடற் கண்காணிப்புப்பிரிவு (radar monitoring)
  • சதீஸ் இயந்திரவியல் பிரிவு
    • உள்ளிணைப்பு இயந்திரப்பிரிவு
    • வெளியிணைப்பு இயந்திரப்பிரிவு
    • டீசல் இயந்திரப்பிரிவு
  • வழங்கல் பிரிவு
  • படகுக் கட்டுமானப் பகுதி
    • மங்கை படகுக் கட்டுமானப்பிரிவு & டேவிட்(சண்முகம்) படகு கட்டுமானப்பிரிவு
      • ஆடியிழை கட்டுத்துறை (Fibreglass yard )
      • மாதிரி கட்டுத்துறை(Model yard) ,
      • மாதிரி கட்டுத்துறை வரைபடப்பிரிவு
  • மலரவன் வெடிமருந்துப் பிரிவு
  • தமிழீழக் கடற் துணைப்படை(ஆ):-
    • தமிழீழக் கரையோரக் காவல் துணைப்படை:-
      • மறவன் துணைப்படை
      • திருவடி துணைப்படை
      • நவரசன் துணைப்படை
      • ஜோன்சன் துணைப்படை
    • ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்புத் துணைப்படை அணி - இது கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கை ஆற்றுதல் அணி ஆகும்

இவற்றுடன் கடற்புலிகளிற்கென்று

  • நிருவாகச் செயலகம்
  • அரசியல்துறை (1991 இல் தொட.)
  • புலனாய்வுத்துறை
  • பொறியியல்துறை
  • மருத்துவப்பகுதி

என்பனவும் இருந்தன.

கனவகை கடற்றாக்குதல் ஆய்தங்கள் தேவைப்படும் இடங்களில் கடற்புலிகளின் கடற்படையணிகளும் தாக்குதலணிகளும் களமிறக்கப்பட்டிருந்தன.

 

விடுதலைப்புலிகள் வான்புலிகள் (வான்படை ):-

  • வானூர்தி தாக்குதலணி
    • வானோடிகள் அணி
  • ராஜன் கல்விப்பிரிவு
  • வானூர்தி தொழில்நுட்பப்பிரிவு
  • வானூர்தி ஓடுதளப் பாதுகாப்புப்பிரிவு
  • வான் கண்காணிப்புப்பிரிவு
  • சிறப்புத் தாக்குதலணி

 

சிறுத்தைப்படை (அதிரடிப்படை):-

  • தரைச் சிறுத்தைகள் - land commandos (ஆ&பெ)
  • காட்டுச் சிறுத்தைகள் - jungle commandos (ஆ&பெ)
  • கடற்சிறுத்தைகள் - naval commandos (ஆ&பெ)

 

கரும்புலிகள் (சிறப்புப்படை & தற்கொடைப்படை)

கரும்புலிகள் பொத்தாம் பொதுவாக 'தடைநீக்கிகள்' என்று அழைக்கப்பட்டனர்.

  • மறைமுகக் கரும்புலிகள் (புலனாய்வுத்துறையின் கீழ் இயங்கியது)
  • தரைக்கரும்புலிகள் (இவர்கள் தேசத்தின் புயல்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மேலும் கரும்புலிகள் என்று பொதுவாக குறிக்கப்பட்டனர்; இ.பா. படையணியின் கீழ் இயங்கியது.)
  • வான்கரும்புலிகள் (வான்புலிகளின் கீழ் இயங்கியது)
  • கடற்கரும்புலிகள் (இவர்கள் உயிராயுதங்கள் என்றும் அழைக்கப்பட்டனர்; கடற்புலிகளின் கீழ் இயங்கியது.)
    • நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் (இவர்கள் 'இடியர்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். மேலும் கடற்கரும்புலிகள் என்று பொதுவாக குறிக்கப்பட்டனர்.)
      • செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி
      • புகழரசன் கடற்கரும்புலிகள் அணி
    • நீரடி நீச்சல் கரும்புலிகள்
      • கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு (இது முதலில் "சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவு" என்ற பெயரால் அழைக்கப்பட்டு 2008இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. உருவாக்கப்பட்டது: 1994) ()
      • அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ம் மாதத்திற்கு பின்னர்) (பெ)

 

என சண்டை உருவாக்கங்கள் நிமிர்ந்து நின்றன.

 

இவற்றை விட ஒவ்வொரு களமுனைகளையும் ஒருங்கிணைத்து

  • வடபோர்முனை கட்டளைப்பணியகம்
  • மன்னார் கட்டளைப்பணியகம்
  • மணலாறு கட்டளைப்பணியகம்
  • வவுனியா கட்டளைப்பணியகம்
  • மட்டக்களப்பு கட்டளைப்பணியகம்
  • அம்பாறை கட்டளைப்பணியகம்
  • திருமலை கட்டளைப்பணியகம்

என கட்டளைப் பணியகங்களையும் புலிகள் உருவாக்கியிருந்தனர்.


 

புலனாய்வுத்துறை (ஐந்தாம்படை)

→ உளவுத்துறை பெயர்: புலி இயக்கப் பாதுகாப்பு புலனாய்வுச் சேவை [Tiger Organization Security Intelligence Service] - TOSIS

  • புலனாய்வுத்துறை தாக்குதலணி
  • பன்னாட்டுப் புலனாய்வு அணி
  • தேசிய புலனாய்வுப்பிரிவு
    • தகவல் சேகரிப்புப்பிரிவு
    • ஆய்வு மற்றும் வெளியீட்டுப்பிரிவு
    • பயிற்சி மற்றும் தொழில்நுட்பப்பிரிவு
    • நிருவாகம் மற்றும் அறிக்கைப்பிரிவு
  • படையப் புலனாய்வுப்பிரிவு
    • தரைப்படை தகவல் சேகரிப்புப்பிரிவு
    • கடற்படை தகவல் சேகரிப்புப்பிரிவு
    • வான்படை தகவல் சேகரிப்புப்பிரிவு
    • நிருவாகம் மற்றும் அறிக்கைப்பிரிவு
  • உள்ளகப் புலனாய்வுப்பிரிவு
  • வெளியகப் புலனாய்வுப்பிரிவு
  • நிருவாகப் புலனாய்வுப்பிரிவு
  • நிதிப் புலனாய்வுப்பிரிவு
  • உளவியல் செயற்பாட்டுப்பிரிவு
  • முகவர்கள்
    • வெளிக்கள முகவர்கள் < <-இடைநிலையாளர்கள்(குருவிகள்)-> < முதன்மை முகவர்கள்
  • மறைமுக உறுப்பினர்கள்
  • இரகசிய நடவடிக்கை அணிகள்
  • ஊடுருவல் முறியடிப்புப்பிரிவு
  • ராதா புலனாய்வுப்பிரிவு
  • புலனாய்வு பயிற்சி மையம்
  • கல்விக்குழு
  • தேசிய மண்மீட்புப்படை (இதை 'பிஸ்ரல் குழு' என்றே குறிப்பிடுவர்.)

 

வேவுப்புலிகள் (ஆ&பெ):-

  • முகிலன் நீண்டதூர விசேட வேவு அணி (LRRP)
  • இவ்வேவு பணியில் சில வேளைகளில் கரும்புலிகளும் ஈடுபடுத்தப்படுவதுண்டு.

 

இப்படையணிகளின் வழங்கல்களுக்காகவும் அவற்றினை நெறிப்படுத்துவதற்காகவும் கீழ்க்கண்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டிருந்தன.

  1. நளன் வானொலி தொலைத்தொடர்புப் பிரிவு
  2. போர்க்கருவி தொழிலகம்
  3. ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவு
  4. மலரவன் வெடிமருந்து பிரிவு
  5. ஒற்றாடல் பிரிவு ( படைத்துறை நகர்வுகள், வானூர்தி தாக்குதல்கள் பற்றிய தகவல்களை ஒட்டுக்கேட்டு உசார்படுத்தும் பிரிவு)
  6. வரைபடப்பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி , தொலைத்தொடர்பு பரிபாசை தாள்கள் விளைவிக்கும் அணி)
  7. சமராய்வு மையம்
  8. செய்தித் தகவல் மையம்
  9. களமுனை ஆய்வுப்பிரிவு
  10. கள விசாரணைப்பகுதி
  11. வழங்கல் பிரிவு
  12. படையத் தொழிநுட்பப்பிரிவு
  13. சமர் நூலாக்கப் பிரிவு- இவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன. இவர்கள் MOD என்னும் ஓர் தமிழ் படைத்துறை அகராதியையும் உருவாக்கியிருந்தார்கள்.
  14. வாகனப்பகுதி
  15. கண்ணிவெடி உற்பத்தித் தொழிற்சாலை
  16. கைக்குண்டு உற்பத்தித் தொழிற்சாலை
  17. மிதிவெடி உற்பத்தித் தொழிற்சாலை
  18. எறிகணை உற்பத்தித் தொழிற்சாலை
  19. கடற்புலிகளின் படகு வடிவமைப்பு தொழிற்சாலை
  20. பல பயிற்சிப் பாசறைகள்
  21. ராயு படைய அறிவியல் தொழினுட்ப ஆய்வு நிறுவனம் (கணினிப் பிரிவு) 
  • வன்தொழினுட்பப் பிரிவு
  • மென்தொழினுட்பப் பிரிவு- 
    • மென்தொழினுட்பப் படையணி - தாரக மந்திரம்: "கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம்"
  • படைய தொழினுட்பவியல் கல்லூரி
  • மென்பொருள் கட்டுமானப்பகுதி
  • தொழில்நுட்பக் கல்லூரிகள்
  • கொள்வனவுப்பகுதி
  • சிறப்புத் தாக்குதலணி
  • திட்டமியல் செயலகம்
  • கடற்புலிகள்

 

இவை தவிர தங்களின் படைத்துறை போராளிகளுக்கு படைத்துறை தொடர்பான பயிற்சிகள் வழங்குவதற்காக பல்வேறு கல்லூரிகளையும் திறந்து வைத்திருந்தனர். அவையாவன,

  1. தமிழீழ படைத்துறைப்பள்ளி (ஆ&பெ)
  2. படையத் தொடக்கப் பயிற்சிக்கல்லூரி
  3. அன்னக்கிளி பயிற்சிக்கல்லூரி(குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே தொழிற்பட்டது)
  4. சிறப்புப் பயிற்சிக்கல்லூரி
  5. திலீபன் அரசியல் கல்லூரி
  6. போர்ப்பயிற்சி ஆசிரியர் கல்லூரி
  7. G 10 போர் பயிற்சிக்கல்லூரி
  8. பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி- (மட்டு)
  9. அப்பையா வெடிபொருள் பயிற்சிக்கல்லூரி
  10. ராஜன் படைத்துறை பயிற்சிக்கல்லூரி
  11. புலேந்திரன் சிறப்புப்படை பயிற்சிக்கல்லூரி
  12. தூயவன் அரசறிவியற்கூடம்
  13. சிங்கள மொழி கலாச்சார கல்வி நிலையம் - (புலனாய்வுத்துறை & கரும்புலிகளுக்கானது)
  14. சரத்பாபு பயிற்சிக்கல்லூரி
  15. மகளீர் அடிப்படை பயிற்சிக்கல்லூரி
  16. மகளீர் படைத்துறை பயிற்சிக்கல்லூரி
  17. றோய் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி 
  18. கடற்புலிகளின் கடற்படை படைத்துறைப்பள்ளி 
  19. நிரோயன் ஆரம்பக் கடற்படை பயிற்சிக்கல்லூரி
  20. ஆசிர் கடற்படை பயிற்சிக்கல்லூரி (1992 இல் )
  21. நரேஸ் தொழினுட்பக் கல்லூரி
  22. பெத்தா அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி
  23. கடற்புலிகளின் அரசியற் பயிற்சிப்பள்ளி
  • மொழியாக்கப்பிரிவு

 

அடிபாட்டாளர்களின் மருத்துவ வசதிக்காக 'விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவு' உருவாக்கப்பட்டிருந்தது. இதன் கட்டமைப்பு பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. கிடைத்த பற்றியத்தை ஏலுமானவரை கோர்வையாக்கியுள்ளேன். அதில் ஒவ்வொரு சண்டை உருவாக்கத்திற்குமென தனித்தனி மருத்துவப்பிரிவுகளும் இயங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவு:

  • தமிழீழ மருத்துவக்கற்கை பயிற்சிக்கல்லூரி
  • தமிழீழ தாதியர் பயிற்சிக்கல்லூரி
  • கள மருத்துவக் கல்லூரி
  • மருந்துக் களஞ்சியம்
  • கள மருத்துவம்
    • கள மருத்துவப்பிரிவு
      • உப மருத்துவப்பிரிவு
      • முன்மாதிரி மருத்துவமனை
  • தள மருத்துவம்  
    • முதன்மை மருத்துவப்பிரிவு (படைய மருத்துவமனைகள்)
      • அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை
      • சிந்தனைச்செல்வன் ஞாபகார்த்த மருத்துவமனை
      • எஸ்தர் மருத்துவமனை
      • யாழ்வேள் மருத்துவமனை
      • முல்லை மருத்துவமனை  (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்)
      • நெய்தல் மருத்துவமனை  (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்)
  • மற்றும் பல அலகுகள்

 

ஒரு பக்கம் பார்த்தால் எப்படி மறுபக்கம் பார்க்க வேண்டாமா?



 

உசாத்துணை :

முன்னிலை நோக்குநர் அணி | புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (இவர்கள் முன்களத்தில் நிற்பார்கள், ஆனால் சமரில் ஈடுபடாமல் தமது உயிரை பணயம் வைத்து சமர்க் களத்தில் தம்மையும் பாதுகாத்துக்கொண்டு பின்களத்தில் இருந்து விடுதலைப் புலிகளால் ஏவப்படும் எறிகணைகளுக்கு ஏற்றக்கோண வேறுபாடு பார்த்து தெரிவிப்பார்கள்.)

(இவையெல்லாம் தமிழில் எழுதப்பட்ட உசாத்துணைகள்தான். ஆதலால் ஒரு சரிபார்ப்பாகவாவது இவற்றைக் கொள்ளவும்.)

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சரி, இனி இப்படையணிகளுக்கான இலச்சினைகளைப் பற்றிப்பார்ப்போம்..

(ஏற்கனவே மேலே பதியப்பட்டிருந்ததைத்தான் பிரித்தெடுத்து இங்கே பதிவிடுகிறேன்)

 

விடுதலைப்புலிகள் அமைப்பின் படைத்துறைப் பொது இலச்சினை:

main-qimg-27dca4e1cf907826f0ef8e91e4f55886.png

 

 

 

  • சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு:

Logo of Special RPG Unit of LTT.jpg

 

  •  பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி:

pothu nookku iyanthira ani.jpg

 

  • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி

main-qimg-649195bd25f29467d8798916f9f46db6.jpg

 

  • ஜெயந்தன் படையணி

main-qimg-9a1cb492c946ee29de9f9bd723f98f61.jpg

'நீலத்திற்குப் பின்புலத்தில் போராளிகள் படமில்லாமல் 'பச்சை-நீலம்-மண்ணிறம்' என்ற நிரல் வரிசை ஒழுங்கு முறையில் மூன்றாகப் பிரிந்த நிறங்கள் வர வேண்டும்.'

 

  • குட்டிசிறி மோட்டார் படையணி

முழக்கம்:
"புதிய மூச்சாய் பிறந்தோம்
புதிய வரலாற்றைப் படைப்போம்"

main-qimg-0014a4d3f5fe7f1dc3e9be48bb430541.jpg

 

  • விக்டர் கவச எதிர்ப்புப் படையணி

main-qimg-1639b8e61d07cd3a145c33a3778ddfc0.jpg

 

  • சோதியா படையணி

main-qimg-2afd05cb7a978e87fa79d2135e700276.jpg

 

  • இம்ரான் - பாண்டியன் படையணி

முழக்கம்:
"தலைவன் நினைவைச் செயலில் செய்வோம்
தலைகள் கொடுத்தும் தடைகள் வெல்வோம்"

main-qimg-b10b1d3b350611d277a66047e7f46099.jpg

 

  • தேசிய மண்மீட்புப்படை

முழக்கம்:
"உடல் தேசத்திற்கு உயிர் விடுதலைக்கு"

தேசிய மண் மீட்புப் படை முழக்கம்- உடல் தேசத்திற்கு உயிர் விடுதலைக்கு.jpg

 

  • திலகா படையணி

main-qimg-af01b9743d304bb69801914d2e2d560d.jpg

 

  • அன்பரசி படையணி

main-qimg-824b212d6edfef14ca0003a838e7ab53.jpg

 

  • விநோதன் சிறப்புப் படையணி

main-qimg-df8e94245db9d66e20ab7e395ec2045b.jpg

 

  • மாலதி படையணி

முழக்கம்:
"எட்டும்வரை மாய்வோம்
கிட்டும்வரை ஓயோம்"

main-qimg-67b8c6e75e0cd206d3b8320d4bc0e788.jpg

 

  • பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு:

ponnammaan.jpg

 

  • கிட்டு பீரங்கிப் படையணி:

முழக்கம்:
"பீரங்கி கொண்டு தமிழீழம் மீட்போம்"

கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் இலச்சினை - Logo of Col. Kittu Artillery Brigade.jpg

 

main-qimg-76d1852ebe2a2a185ca88d172a8eb52f.jpg

'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்.'

இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது.

 

  • தமிழீழத் தேசியத் துணைப்படை

main-qimg-92974104cb9c24def9465187c1ae1ca6.jpg

 

 

on malathy 15.png

'2002-10-10 ஆம் ஆண்டு 'மாலதி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளில் நிகராளிகள்(Representatives) வலமிருந்து: அன்பரசி படையணி, மாலதி படையணி, திலகா படையணி, சோதியா படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறுத்தைப்படை, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி, பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவு, கடற் படையணி | இதில் இவர்கள் கொண்டுள்ள கொடியின் நிறங்களே படையணிக் கொடிகளின் செந்தரமான நிறங்களாகும்'

 

  • இங்குதெரியும் கொடி எந்தப் படையணிக் கொடி என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை

main-qimg-669650d709ccdec8f0f43e55c512fa11.jpg

 

  • இது எந்தப் படையணிச் சின்னம்மென்று தெரியவில்லை

main-qimg-bfea7da564bf626ac639902e54066125.jpg

 

 

  • மட்டக்களப்பில் தரித்து நின்ற படையணிகளில் சின்னம் அறியப்படாதவை:

→ மட்டக்களப்பில் இருந்த படையணிகளின் மொத்த சின்னங்கள்:

இங்கிருப்பவை கருணா துரோகியாகும் வரை தவிபுவின் தலைவரின் தலைமையையேற்று புலிகளின் சிந்தாந்தத்தின் கீழ் மட்டக்களப்பில் தரிபெற்ற படையணிகளின் இலச்சினைகளாகும். இவை எவற்றினதும் விவரம் எனக்குத் தெரியவில்லை. யாரேனும் அறிந்தால் எனக்கு வரலாற்றை எழுத கொடுத்துதவுங்கள்.

main-qimg-3650cb748b3c765a1c31f66d093a6da2.jpg

'இங்குதெரியும் கொடி எந்தப் படையணிக் கொடி என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை.'

 

main-qimg-b46cce39edf90c04c086c3680c9f2fd8.jpg

''கருணாவிற்குப் பின்னால் இருக்கும் அந்த மேடையில் ஐந்து சின்னங்கள் தெரிகின்றன''

அவற்றில் இருந்து நான் பிரித்தெடுத்தவை:-

main-qimg-751a45ba2545bd7cc2df7d3ea6411f5b.png

''இது மதனா படையணியினதாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் அவ்விலைச்சினைதான் மஞ்சள் நிறமான வட்ட வடிவமாக இருக்கும். மேற்கண்ட படத்திலும் அதுதான் உள்ளது. | ஆதாரம்: Fighters killed in Vavunathivu SLA camp attack remembered ''

 

main-qimg-b9193c08803b0cbf8aa9d75df13e5929.png

 

இடது பக்கத்தில் இருக்கும் இரு இலச்சினைகளினதும் அண்மையாக்கப்பட்ட படங்கள்:

இப்படங்கள் நான் மேலே சுட்டிய படத்தில் உள்ள மேடையில் இல்லாத ஏனைய இரு படங்களாகும் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

main-qimg-61547b8632029ed56a7e9272a7dc83e2.png

main-qimg-928349954f0660a89b23237f0cfd9873.jpg

'தேனகம் - கரடியனாறு, மட்டக்களப்பு, தெந்தமிழீழம் | பறக்கும் கொடிகளில் இனங்காணப்பட்டவை: (இடமிருந்து வலமாக) மதனா, தெரியவில்லை, தெரியவில்லை, தெரியவில்லை'

 

main-qimg-6832b02a2f2940f4fecf17c0031b3409.jpg

மேற்கண்ட படத்தில் இரு மேல் மூலைகளிலும் இரு சின்னங்கள் தெரிகின்றன. அவையாவும் எந்தப் படையணியினது என்று எனக்குத் தெரியவில்லை!

 

----------------------------------------------------------------------

 

இது 2007 ஆம் ஆண்டு வன்னியில் பயிற்சி முடித்து வெளியேறின படையணி. இதனது புய வில்லையினை நோக்கவும். இதன் பெயர் அறிந்தோர் கூறவும்.

Unknown regiment of LTTE, unleashed on the first half of 2008.jpg

 

 

 


  • கடற்புலிகள் :

main-qimg-da0cf1ad2539f58b441c072d3ed1b2ce.jpg

 

  • கடற்புலிகளின் கடற்படையணிக் கொடிகள்

main-qimg-45c61515846505fa830cb666be544b1d.jpg

 

  • தமிழீழக் கடற் துணைப்படை

Untitled.jpg

வால் மேன்னோக்கி நின்றபடி இடது புறம் நோக்கி பாயும் சிறுத்தை. (எனது தன்விரிப்புப் படத்தில்(Profile picture) இருக்கும் புலியினை ஒத்த சின்னம். இச்சின்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்புறம் ஒரு விதமான நீல நிறம். நீல நிற விதப் பெயர் எனக்குத் தெரியவில்லை). சின்னத்திற்குக் கீழே 'தமிழீழக் கடற் துணைப்படை' என எழுதப்பட்டிருக்கும், அரை வட்ட வடிவத்தில்.

 

 


  • வான்புலிகள்:

main-qimg-fa50f764479b9c7424f9137a240878bc.jpg

 

 

 


  • தரைக்கரும்புலிகள்:

main-qimg-1d5884ded4b3165b580b5cd1b4040e3b.jpg

'இவர்கள் தங்கள் உடையில் இச்சின்னத்தைப் பொறிக்கும் போது இவ்வாறு இருக்கும்'

 

Tamil Eelam Land Black Tigers Logo - LTTE.jpg

 

  • கடற்கரும்புலிகள் (முந்தைய சின்னம்)

main-qimg-48eac31264d7ecfcf14c7bd797ca2299.png

 

  • கடற்கரும்புலிகள் (பிந்தைய சின்னம்)

main-qimg-5507e0e68b167bad26d326901d509f0e.jpg

 

  • மறைமுகக் கரும்புலிகள்:

முழக்கம்: 
"எம் தேசத்திற்காய் 
எங்கெங்கும்"

main-qimg-2c20642eb2c42ea1fde404a712a02a91.png

 

 

 


  • மக்கள்படை:-

 LTTE's Civil Force' Internal Security Force Logo.jpg main-qimg-661f753b453bea68aa94a5cdc52adc49.png

''இரு இலச்சினைகளும் ஒன்றுதான். மக்கள் படையின் இலச்சினைகளில் புலியின் கால்களுக்கு இடையில் 'தமிழீழ மக்கள்படை' என எழுதப்பட்டிருக்கும். அதன் மேற்பக்கத்தில் விதப்பாக அதனது உட்பிரிவின் பெயர் எழுதப்பட்டிருக்கும். எ.கா: வலது பக்க இலச்சினையை நோக்குக. அதன் மேற்பக்கத்தில் 'உள்ளகப் பாதுகாப்புப் படை' என எழுதப்பட்டிருக்கிறது.''

 

 

 


  • சிறுத்தைப்படை:

முழக்கம்:
"எந்த நேரத்திலும்
எந்தச் சூழ்நிலையிலும்"

main-qimg-b777bb2f4c0bfc32422a518152a7428f.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகள் விரிப்பு(விபரம்) - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+
  • நிரந்தரப்படை  - 17 வயது நிரம்பிய ஆண்கள் பெண்கள் போர்ப்பயிற்சி பெற்று நிரந்தரப்படையில் இணைந்தனர். ஏனைய மக்கள் படையினர் இவர்களுக்கு உதவியாக ஏனைய படைகளாக மாறி களத்தில் இவர்களுக்கு உதவி புரிந்தனர் .


மக்கள படைகளான

  • கிராமியப்படை - உணவு வழங்கல், அரத்தம் வழங்கல், பின்களப்பணி (1999-2009)
  •     --> கிராமிய விசேட  படையணி - கிராமியப்படையில் சுடுகலப் பயிற்சி பெற்றோர் - (2005-2009) 
  • எல்லைப்படை - சமர்க்களத்தில் பணி புரிதல் - (1999-2009)
  • சிறப்பு எல்லைப்படை - ஒரு துணைப்படை போன்று சண்டைப்பயிற்சி பெற்று எதிரியுடன் நேரடியாக சமராடுதல் - (1998-2001) 
  • போருதவிப்படை - சமர்க்களத்தில் போராளிகளுக்கு வேண்டிய பதுங்குகுழி அகழ்தல், காப்பரண் அமைத்தல் போன்ற உதவிகளை செய்து கொடுப்போர். - (2005-2009)
  • ஊரகத் தொண்டர் சிறப்புப்படை - கன வகை ஆயுதப் பயிற்சி முதல் சண்டை பயிற்சி வரை எடுத்தோர். - (2005-2009)
  • உள்ளகப் பாதுகாப்புப் படை - திருநகர், பூநகரி என்று ஒவ்வொரு வட்டங்களுக்கும் இருந்தது.

ஆகியன தமக்கென இடப்பட்ட பணிகளை போர்ர்க்காலத்தில் மேற்கொண்டன. இவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் பணி புரிந்தனர்.

 

இவை அனைத்தும் ஒருங்கிணைத்து கிராமியமட்ட, வலயமட்ட, வட்டமட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட 'போர் எழுச்சிக் குழுக்கள்' செயற்பட்டன.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1990-2001 ஆம் ஆண்டு காலத்திலிருந்த மாவட்ட பெயரிலான சில படையணிகள்

 

இப்படையணிகள் யாவும் மேற்குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் பிற்காலத்திலுமாக பெயர் சூட்டப்பட்ட படையணிகளாக விரிந்து நிமிர்ந்தன. சிலது இறுதிவரை அப்பெயரிலே செயற்பட்டன.

அவையாவன,

  1. மட்டக்களப்பு-அம்பாறை படையணி -  1993 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு கப்டன் ஜெயந்தன் படையணி, லெப்.கேணல் விசாலகன் படையணி என புதிய படையணிகள் உருவாக்கப்பட்டு இதன் போராளிகள் அனைவரும் இவற்றிற்குள் உள்வாங்கப்பட்டனர்.
  2. மன்னார் படையணி - 2001 ஆம் ஆண்டுவரை அதே பெயரில் செயற்பட்டதற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளது(விடுதலைப்புலிகள் மாத இதழ்: ஐப்பசி-கார்த்திகை 1999). அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
  3. மணலாற்றுப் படையணி - நீர்சிந்து – 1 நடவடிக்கை நடந்து சிலநாட்களின் பின்னர் என்று நினைக்கிறேன், சில தேவைகள் கருதி இந்த மணலாறு மாவட்டப்படையணி கலைக்கப்பட்டு அக்கட்டமைப்பிலிருந்த போராளிகள் ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் பிரித்து விடப்பட்டனர்.
  4. யாழ் படையணி - மூன்றாம் ஈழப்போரில் 'யாழ் செல்லும் படையணி' என பெயர் மாற்றம் அடைந்து 2008 இறுதி வரை செயற்பட்டது.
  5. வன்னி படையணி/1.9 படையணி - 1995 இற்குப் பின்னர் கலைக்கப்பட்டு வேறு பல படையணிகளுடன் இதன் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
  6. திருமலை படையணி/தலைநகர் படையணி - 2001 ஆம் ஆண்டுவரை அதே பெயரில் செயற்பட்டதற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளது(எரிமலை ஓகஸ்ட், 2000). அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
  7. மகளிர் படையணி (வட தமி.)- 1997 ஆம் ஆண்டில் 2ம் லெப் மாலதி படையணி, மேஜர் சோதியா படையணி என இரண்டாகப் பிரிக்கப்பட்டு, விரிந்தது.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
  • மக்கள்படை உறுதியுரை:

“எமது தாயகமாம் தமிழீழத்தை 
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து 
இழந்துவிட்ட எம் இறைமையையும் இனத்தின் மதிப்பையும் நிலைநாட்ட 
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் தலைமையின் கீழ் அணிதிரண்டு 
இறுதிவரை தேசத்தின் விடுதலைக்காகவும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் 
உண்மையுடன் நின்று உழைப்பேன் என்று 
இத்தால் உறுதியெடுத்துக்கொள்கின்றேன்."

 

மூலம்: https://telibrary.com/pledge-for-peoples-fight-division/

 

==================================

 

  • விடுதலைப்புலிகளின் உறுதியுரை:

https://eelam.tv/watch/எமத-ப-ரட-ச-இயக-கத-த-ன-தம-ழ-ழ-வ-ட-தல-ப-ப-ல-கள-ன-உற-த-ய-ர-emathu-puratchi-iyakkaththin_RUppawjfTll9fIk.html

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரநிலைகள் & பதவிநிலைகள்

 

 

நவீன கால ஈழத்தமிழரின் படைத்துறை தரநிலைகள் (2009 மே>):

  • பிரிகேடியர் > கேணல் > லெப். கேணல் > மேஜர் > கப்டன் > லெப்டினன்ட் > 2ம் லெப்டினன்ட் > வீரவேங்கை
    • (கடைசிச்சொல் தவிர ஏனைய அனைத்தும் ஆங்கிலச் சொற்களின் தற்பவங்களே ஆகும்.)

 


 

 

நவீன கால ஈழத்தமிழரின் படைத்துறையின் படையணி பதவிநிலைகள் (2009 மே>):

அனைவரும் பொத்தாம் பொதுவாக 'போராளி(கள்)' எனப்பட்டனர்.

  • சிறப்புத் தளபதி > தளபதி > துணைத் தளபதி > தாக்குதல் தளபதி > இளநிலை அதிகாரி/ கட்டளை அதிகாரி > அணித் தலைவர் > சூட்டணித் தலைவர் > உறுப்பினர்
    • தளபதி = T.(தளம்) + S.(பதி)
    • நடுவில் சில விடுபட்டுள்ளன. நானறிந்தவற்றை அடுக்கமைவு செய்துள்ளேன்.
  • சேணேவி படையணிகளுக்கென வரும்போது மேற்கண்ட பதவி நிலைகளுடன் கூடுதல் பதவிநிலையாக 'பீரங்கி ஒருங்கிணைப்புத் தளபதி' 'மோட்டார் ஒருங்கிணைப்புத் தளபதி'  என்ற பதவிநிலையும் இருந்தது. இதைத் தவிர வேறேதும் இருந்ததா என்பது அறியில்லை.

இப்படியான பதவிகளில் உள்ள படைத்துறை கட்டளையாளர்கள், நிருவாகத் தேவைக்கேற்ப, 

  • பிராந்தியத் தளபதி/கோட்டத் தளபதி > மாவட்டத் தளபதி > வட்டத் தளபதி

எனவும் பிரிக்கப்பட்டிருந்தனர். இவற்றைத் தவிர வேறேதும் இருந்ததா என்பது அறியில்லை.

இவற்றைத் தவிர துறைசார் பதவிநிலைகள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றின் முதன்மையான (உயர்ந்த அ மேல்) பதவிநிலை வகிப்பவர் 'பொறுப்பாளர்' எனப்பட்டார்.

இப்பதவி நிலைகளுக்கு பன்னாட்டு படைத்துறைகளில் இருப்பது போன்ற தேர்வு எழுதி ஒரு பதவிக்கு வருவதோ இல்லை பரிந்துரை மூலமாக உயர் பதவிகளுக்கு வருவதோ தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. மாறாக ஒவ்வொருவருக்குமான பதவி உயர்வு அவர்களின்

  • சமர்க்களச் செயல்கள்
  • சமர்க்களப் பட்டறிவு
  • சமர்க்களத்தில் வினையாற்றும் திறன்
  • ஆளுமை தகைமை

ஆகியவற்றின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது. இதுவே உள்ளூர் ஆளுமை பதவிகளுக்கும் பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு சில தளர்வுகள் இருந்தன.

 


 

 

நவீன கால ஈழத்தமிழரின் படைத்துறையின் சமர்க்கள கட்டளையாளர் பதவிநிலைகள் (2009 மே>):

இவை பொதுவாக வெளியில் அறியப்பட்டதில்லை. ஆனால் இப்பதவிகள் வகிப்பவர்களில் சிலபேர் படையணிக் கட்டளையாளர்கள்; சில பேர் இதற்கென நியமிக்கப்பட்டவர்கள். இப் பதவிநிலையானது பொதுவெளியில் வெளியிடப்படாதது ஆகும். ஒரு சமர்க்கள தளபதி வீரச்சாவடையும்போது மட்டுமே இப்பதவிநிலை வெளித்தெரியவரும். அவ்வாறு வந்தவற்றுள் என்னால் அறியப்பட்டவை,

  • கட்டளைத் தளபதி > துணைக் கட்டளைத் தளபதி > ... தாக்குதல் தளபதி > ... பகுதித் தளபதி >...

ஆகியவனவே.

ஓயாத அலைகள் மூன்றின் போது ஒவ்வொரு கட்டத்திற்கும் என்று 'ஒருங்கிணைப்புத் தளபதி' என்ற பதவி நிலை பயன்படுத்தப்பட்டது.

ஓயாத அலைகள் மூன்று முடிந்த போது விடுதலைப்புலிகளில் 'படைத்துறை துணைத் தளபதி' என்ற பதவி நிலை உருவாக்கப்பட்டு 2008 வரை தொழிற்பட்டது. இதை வகித்தவர் புலிகளின் மூத்த கட்டளையாளர் 'பிரிகேடியர் பால்ராஜ்' அவர்கள் ஆவார். ஆனால் ஒட்டு மொத்த படைத்துறை கட்டளையாளராக - நெறியாளர் நாயகமாக - தேசியத் தலைவர் செயற்பட்டார். பிரிகேடியர் பால்ராஜின் இறப்பிற்குப்பின் இப் பதவிநிலை யாருக்கும் வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் 'படைத்துறை செயலர்' என்ற பதவி நிலை உருவாக்கப்பட்டது. இதை கேணல் 'தமிழேந்தி' அவர்கள் வகித்து வந்தார். 2009 மார்ச் அவரது இறப்பிற்குப் பின்னர் அப்பதவி நிலை நீக்கம் செய்யப்பட்டது.

 

 

 

(இவற்றை விக்கியில் எழுதியவனும் நாந்தான்)

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகள் விரிப்பு - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+

 

main-qimg-2c757d90043a7d48593c575db3e2e943.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
  • புலேந்திரன் சிறப்புப்படைப் பயிற்சிக்கல்லூரி:

 

Pulenthiran Special Force Training College.jpg

 

 

  • சமராய்வு மையம்:

முழக்கம்: 
"மெய்ப்பொருள் காண்பதறிவு"

main-qimg-93b9aaee987205c32a2367add12e4b51.png

 

  • புலனாய்வுத்துறை & கரும்புலிகளுக்கான...

இங்கு பகைப்புலம் செல்லும் மறைமுகக் கரும்புலிகள் மற்றும் புலனாய்வுத்துறை போராளிகளுக்கு சிங்கள மொழி மற்றும் கலாச்சாரம் பற்றிய கல்வி போதிக்கப்படும். 

(2009 மார்ச் கால சிங்கள நிகழ்படம் ஒன்டில இருந்து திரைப்பிடிப்புச் செஞ்சனான்.)

main-qimg-33c90a00c7c3d35bf8e9e980d7f49c0e.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அம்ரித்பால் சிங்: 'ஐஎஸ்ஐ தொடர்பு, வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை' என சந்தேகம் எழுப்பும் பஞ்சாப் போலீஸ் - இதுவரை நடந்தவை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, அம்ரித்பால் சிங் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பிடிப்பதற்கான நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தனர். இதுவரை, ‘வாரிஸ் பஞ்சாப் டி’ செயல்பாட்டாளர்கள் மீது ஆறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பஞ்சாப் காவல்துறை தலைமையக தலைவர் (ஐ.ஜி) சுக்செயின் சிங் கில், தல்ஜித் கால்சி, பசந்த் சிங், குர்மீத் சிங் புக்கன்வாலா, பக்வந்த் சிங், அமிர்த் பாலின் மாமா ஹரிஜீத் சிங் ஆகியோர் அசாமின் திப்ருகார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஹர்ஜீத் சிங் என்பவர் அசாமுக்கு செல்லும் வழியில் இருப்பதாகவும் கூறினார். போலீஸாரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டுள்ள தல்ஜித் சிங் கால்சி, அமிரித்பால் சிங்குக்கு நெருக்கமானவர் மற்றும் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்புக்கு நிதி வழங்குபவர்.   அம்ரித்பால் சிங்கின் மாமா ஹர்ஜீத் சிங், ஓட்டுநர் ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸிடம் சரண் அடைந்தனர். ஜலந்திரின் ஷால்கோட்டில் மார்ச் 19-20ஆம் தேதி இரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று ஜலந்தர் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஸ்வரன்தீப் சிங் கூறுகிறார். ஹர்ஜீத் சிங் துபையில் தொழில்முறை டிரான்ஸ்போர்ட்டர் தொழிலை செய்து வருகிறார். மேலும், அம்ரித்பால் சிங் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆடம்பர சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். அந்த கார், ஹர்ஜீத் சிங் வசம் இருந்துள்ளது. இந்த ஐந்து பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று கூறிய அவர், பஞ்சாப் அமைதியான மாநிலம் என்றும், பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதுவரை கைதானவர்கள் எத்தனை பேர்? அம்ரிபால் சிங் தொடர்புடைய வன்முறை விவகாரத்தில் இதுவரை 114 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் வன்முறை நடந்த முதல் நாளிலேயே 78 பேரை போலீஸார் பிடித்தனர். இரண்டாம் நாளில் 34 பேரும் மூன்றாம் நாளில் 2 பேரும் பிடிபட்டனர். அனைவரும் மாநிலத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள் என்று காவல்துறை ஐ.ஜி கில் தெரிவித்தார். "இந்த வழக்கில் வெளிநாட்டு நிதி மற்றும் ஐஎஸ்ஐ தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்," என்கிறார் ஐ.ஜி கில். அம்ரித்பால் சிங் விவகாரத்தில் இதுவரை நாம் அறிந்தவை மற்றும் பதிலளிக்கப்படாத கேள்விகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:- “நாங்கள் ஏன் காலிஸ்தான் கோரிக்கையை முன் வைக்கிறோம்?” – அம்ரித்பால் சிங் நேர்காணல்5 மார்ச் 2023 'நான் இந்தியன் இல்லை' - இந்தியாவுக்கு அச்சத்தை விளைவிக்கும் இந்த மத போதகர் யார்?1 மார்ச் 2023 அம்ரித்பால் சிங்: யார் இந்த மத போதகர்? திடீரென இவர் பிரபலம் அடைந்தது எப்படி?2 மார்ச் 2023 கடந்த சில நாட்களில் என்ன நடந்தது? அம்ரித்பால் சிங் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் போலீஸ் ஐ.ஜி சுக்செயின் சிங் கில் தெரிவித்தார். பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, சனிக்கிழமை பிற்பகல் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஷாகோட்-மால்சியன் சாலையில் 'வாரிஸ் பஞ்சாப் டி' (WPD) இன் செயல்பாட்டாளர்கள் ஏழு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மாநில அளவிலான நடவடிக்கையின் போது இதுவரை ஒரு '.315' போர் ரைபிள், ஏழு 12 போர் ரைபிள்கள், ஒரு ரிவால்வர் மற்றும் 373 லைவ் கார்ட்ரிட்ஜ்கள் (பயன்படுத்தப்படாத தோட்டா பேழைகள்) உட்பட 9 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஜலந்தர் போலீசார் உரிமை கோரப்படாத ஆடம்பர சொகுசு வாகனம் ஒன்றையும் மீட்டுள்ளனர். இந்த வாகனத்தை அம்ரித்பால் சிங் தப்பியோட பயன்படுத்தியதாக போலீசார் கூறுகின்றனர். கைவிடப்பட்ட வாகனத்தில் இருந்து .315 போர்த்துப்பாக்கி, 57 தோட்டாக்கள், வாள் மற்றும் வாக்கி-டாக்கி பெட்டி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. சில உள்நாட்டு தோட்டாக்களையும் மீட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பஞ்சாபில் போராட்டங்கள் பட மூலாதாரம்,ANI பஞ்சாபில், அம்ரித்பால் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக குவாமி இன்சாஃப் மோர்ச்சாவின் சில செயல்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மொஹாலியில் உள்ள விமான நிலைய சாலையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அந்த இடத்தில் 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உள்ளனர். இதுவரை அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்திற்கு செல்லும் சாலையின் ஒரு பகுதி போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், கர்னாலில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் ஹரியாணா சீக்கியர்களை மார்ச் 21ஆம் தேதி கர்னாலில் ஒன்றுகூடி அம்ரித்பால் சிங் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக சண்டீகர் மற்றும் பஞ்சாபின் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மூன்றாவது நாளாக காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இராக்கில் சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் - இருபது வருடங்களுக்கு முந்தைய வரலாறு எழுப்பும் கேள்விகள்3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏஜென்சி மோசடி: கனடாவாழ் இந்தியர்கள் பலரது எதிர்காலம் கேள்விக்குரியதாகிறதா?5 மணி நேரங்களுக்கு முன்னர் கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்மா லக்ஷ்மிக்கு சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டு5 மணி நேரங்களுக்கு முன்னர் பஞ்சாபில் இப்போது நிலைமை என்ன? அம்ரித்பால் சிங் விவகாரம் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாரிஸ் பஞ்சாப் டி அமைப்புடன் தொடர்புடைய இமான் சிங் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்ரித்பாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பஞ்சாப் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு பட்டியலிட்டுள்ளது. பதற்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாநில உள்துறை செல்பேசி இணைய சேவையை சனிக்கிழமை முதல் இடைநிறுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடு மார்ச் 21ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை தொடரும். விடை தெரியாத கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES அம்ரித்பால் சிங் இன்னும் தலைமறைவாக உள்ளதாக போலீசார் கூறி வருகின்றனர். சனிக்கிழமையன்று, அம்ரித்பால் சிங் ஷாகோட்டின் குருத்வாரா சாஹிப்பில் இருப்பதாக சில ஊடக தகவல்கள் வந்தன. ஆனால், அன்று மாலையே அவர் தப்பியோடிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அம்ரித்பால் சிங்கைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அம்ரித்பால் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அம்ரித்பால் சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை எவ்வளவு காலம் தொடரும் என்பதை பஞ்சாப் போலீசார் தெரிவிக்கவில்லை. பஞ்சாப் போலீசார் மத வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக கிராமங்களில் உள்ள குருத்வாராக்கள் முன்பு நிறுத்தப்பட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது எந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஜலந்தர் காவல்துறையின் கூற்றுப்படி, வாரிஸ் பஞ்சாப் டி செயல்பாட்டாளர்கள் மீது சமூக அமைதியின்மையை உருவாக்குதல், உள்நோக்கத்துடன் கொலை செய்தல், காவல்துறை அதிகாரிகளைத் தாக்குதல் மற்றும் அரசு ஊழியர்கள் சட்டபூர்வமாக தங்களுடைய கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. அஜ்னாலா காவல் நிலையம் மீதான தாக்குதலுக்காக 'வாரிஸ் பஞ்சாப் டி' செயல்பாட்டாளர்கள் மீது 24-02-2023 தேதியிட்ட வழக்கு எண் 39 பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES உள்ளூர் மற்றும் தேசிய ஊடகங்கள் பஞ்சாபில் நடக்கும் முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமையன்று, அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டு அசாமில் உள்ள திப்ருகாருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலையிலவ் சில ஊடக நிறுவனங்கள் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதாகக் கூறி, அது தொடர்பான தகவல்களை அவற்றின் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தன. பிறகு அவற்றை நீக்கின. பஞ்சாப் காவல்துறை, அம்ரித்பால் சிங் கைது தொடர்பான செய்தி பொய்யானது என்றும் மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2vp4yrppzo
    • பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன் அண்ணா, வாழ்க வளத்துடன்.
    • இணையவனுக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன் ......!   🌹
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.