Jump to content

மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

துபாய் நகரின் புறநகர் பகுதியான 'துபாய் மெரீனா' என்பது பெரும்பாலும் கோடிகளில் புரளும் ஐரோப்பிய செல்வந்தர்கள் வாழும் பகுதியாகும். மற்றொருபுறம் அலுவலகங்கள் நிறைந்த ஜெ.எல்.டி(Jumeirah lake towers) எனப்படும் உயரடுக்கு மாடிகள் கொண்ட பகுதிகள். இந்த பகுதிகளுக்குள் சென்றால் நமக்கு கழுத்தில் சுளுக்கு வந்துவிடும், ஏனெனில் பெரும்பாலும் அனைத்து கட்டிடங்களும் குறைந்தது 25 மாடிகளுக்கு மேல்..சில கட்டிடங்கள் 60, 80 எனவும் உண்டு.

இப்பகுதிகளைக் கடந்தால் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள் நிறைந்த 'ஜெபல் அலி' பகுதிகள் வரும். எனக்கு பெரும்பாலும் இப்பகுதிகளுக்குள் அலுவலக வேலை சம்பந்தமாக அடிக்கடி சென்று வரக்கூடிய வாய்ப்புக்கள் வரும்.. முதலில் மிக பிரமிப்பாக இருந்தது.. இப்பொழுது ரொம்ப பழகிப்போச்சுது..:)

ஆடம்பரமான வாழ்க்கை கொண்ட இப்பகுதியை பார்த்து நாம் பெருமூச்சுதான் விடமுடியும்..!

அப்படி ரசித்தவைகளில் ஒன்று, இந்த புதிய "பென்ட் ஹவுஸ்.."

56 வது தளத்தில், சுமார் 6400 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட இந்த அடுக்குமாடி வீட்டில், அனைத்து அடிப்படை(?) வசதிகளும் உண்டு..

விலை ரொம்ப கம்மிதான்.. 15 மில்லியன் திர்ஹாம்கள்..

உங்கள் பார்வைக்கு..!

டிஸ்கி:

அதுசரி, திரியின் தலைப்பிற்கும், உள்ளேயுள்ள விசயங்களுக்கும் என்ன சம்மந்தம் என முழிக்கிறீங்களா..?

மாடி... அதிலிருக்கும் பொண்ணு..! சரியா இருக்கா..? ஹி..ஹி..😜

Edited by ராசவன்னியன்
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 மில்லியன் பவுண்ஸா. மாடியோடு மீனாவையும் சேர்த்து விலை சொல்கிறார்கள் போல் உள்ளதே 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

3 மில்லியன் பவுண்ஸா. மாடியோடு மீனாவையும் சேர்த்து விலை சொல்கிறார்கள் போல் உள்ளதே 🤣

தெரியாமல் ஒரு 'ஃப்லோ'வில் 'பொண்ணு' என சொல்லிவிட்டேன்.

அது அம்மா எனும் அம்மணி..🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வன்னியர். 

நான் ஒரு முறை நான்கு நாட்கள் தங்கி இருக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அசந்து போயிருந்தேன் இங்கே இருந்த வசதிகளைப் பார்த்து.

வேலை செய்த நிறுவனம் ஒன்றில் ஒரு புதுமையாக பரிசு ஒன்றினை அளித்தார்கள். பொதுவாக பரிசு வழங்குவது, வரி விதிப்புக்கு உள்ளாவது. அதனை தவிர்க்க ஒரே வழி, அதனை லாட்டரி மூலம் வழங்குவது.

அதிட்டம் இருந்தால், பரிசு கிடைக்கும்.

நிறுவனத்தின் முந்தைய வருடம் கிடைத்த லாபத்தினை அறிவிக்க, முக்கிய ஊழியர்களை அழைத்து கூட்டம் போட்டு அறிவித்தார்கள். பரிசாக, துபாயில் தங்க ஒரு வார விடுமுறை. 

அந்த வகையில் கிடைத்தது இந்த சந்தர்ப்பம். சரி எப்படி லாட்டரி விழுந்தது.

நாம் இருந்த சீட்டின் கீழ் பகுதியில் ஒட்டி வைத்து இருந்தார்கள், ஒரு சீட்டினை. யார் இருந்த சீட்டில் அது இருந்ததோ, அவர்களுக்கு அதிஷ்டம். 

விசயம் தெரியாமல், எனக்காக, அந்த சீட்டினை தந்து விட்டு, தள்ளிப் போயிருந்த நபரின் முகத்தினை நான் பார்க்கவில்லை. பேயறைந்தது போல இருந்தார் என்று எனது பக்கத்து, மேசை நண்பர் பின்னர் சொன்னார்.

நம்ம லுங்கியை கட்டிக்கொண்டு, அரச மரத்தடியில் படுக்கும் சுகமே சுகம். இது எல்லாம் ஒரு போலி என்று உணர்வு வந்தது. 

***

விடியோவை பார்க்கும் போது, அம்மணி சொல்லுவதை வைத்தும், வரும் உணர்வு.... (குளித்துக்கொண்டு வெளியே பார்த்து ரசிக்கலாமாம்) யாராவது பைனாகுலர் வைத்துக்கொண்டு, இங்கே நடப்பதை பார்க்கலாமே.

***

மகிந்த ராஜபக்சே மச்சான் மனைவியின் சகோதரர், விக்ரமசிங்க குறித்து ஒரு கட்டுரை போட்டிருந்தேன். இவரை சிறிலங்கன் விமான நிறுவன தலைவராக மகிந்த போட்டிருந்தார்.

அதிலே, சிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு இந்த வகையில் ஒரு வீடு இருந்தது. அதிலே, நிர்வாக பயிச்சிக்கு அலுவகர்களை துபாய்க்கு அனுப்பும் போது தங்க வைப்பார்கள்.

அந்த வீட்டில், ஏர் ஹோஸ்டர்ஸ் ஆக வேலை செய்த ஒரு பெண்ணை, மடக்கி, அங்கே தங்க வைத்திருந்தார், ஒரு வருடமாக. தனது செகிரேட்டரி என்று சொல்லி, சம்பளம் வேறு கொடுக்க உத்தரவு போட்டிருந்தார்.  

கொழும்பில் இயங்கிய நிறுவன தலைவரின், செயலாளருக்கு துபாயில் என்ன வேலை என்று கேட்க கூடாது.

Edited by Nathamuni
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

தெரியாமல் ஒரு 'ஃப்லோ'வில் 'பொண்ணு' என சொல்லிவிட்டேன்.

அது அம்மா எனும் அம்மணி..🤣

மாடி வீட்டு  மைனா பைங்கிளி  இன்னும் நன்றாக பொருந்தும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

3 மில்லியன் பவுண்ஸா. மாடியோடு மீனாவையும் சேர்த்து விலை சொல்கிறார்கள் போல் உள்ளதே 🤣

Cobham பக்கம் நாம்மாட்கள் தான் விலை அதிகமில்லை ஆரம்பமே ஐந்து மில்லியனில்தான் தொடங்கும் வீடுகளில் இருக்கினம் தலை அந்த பக்கம் கேள்விப்படவில்லையாக்கும் .1000பவுன்ஸ் கட்டி கப்பலில் வந்த கூட்டம் 1958 முதல் அடிக்கு வெளிக்கிட்டவை அவர்களிடம் சிலோன் போகவில்லையா வந்ததுக்கு  என்றால் யோசித்துவிட்டு இருக்கிற சொத்துக்களை  விற்பதுக்கு ஓரிரு முறை போனோம் என்கினம் அவ்வளவுதான் அவர்களின் பிறந்த பூமியுடன் ஆன  பந்தம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

3 மில்லியன் பவுண்ஸா. மாடியோடு மீனாவையும் சேர்த்து விலை சொல்கிறார்கள் போல் உள்ளதே 🤣

உந்த மீனாவுக்கு நான் மூண்டு ரூபாயும் குடுக்கன்..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Nathamuni said:

யாராவது பைனாகுலர் வைத்துக்கொண்டு, இங்கே நடப்பதை பார்க்கலாமே.

நாங்கள் கீழ் வீட்டிலை இருந்து கொண்டே பக்கத்து வீட்டு புதினம் பாக்கிற ஆக்கள். அதுவும் 80 மாடி வீடுகளிலை எண்டால்  பைனாகுலரோடை சுழல் கதிரையிலை இருந்து சுழண்டு அடிக்க வேண்டியது தான்.😁

Edited by குமாரசாமி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நாங்கள் கீழ் வீட்டிலை இருந்து கொண்டே பக்கத்து வீட்டு புதினம் பாக்கிற ஆக்கள். அதுவும் 80 மாடி வீடுகளிலை எண்டால்  பைனாகுலரோடை சிழல் கதிரையிலை இருந்து சுழண்டு அடிக்க வேண்டியது தான்.😁

உந்த வீட்டை வாங்கிப்போட்டு, மறைப்புக்கு, கிடுகு வேலி உள்ளுக்கு கட்டதான் வேணும். ஒரு மறைப்பு கிடையாது. மூலையில, ஒரு மெல்லிய திரைசீலை தொங்குது...

அம்மணி வேறை புளுகித் தள்ளுது.... படுக்கை அறையில் இருந்து 180 பாகையில சுத்திப் பார்க்கலாம். வேற வீட்டிலை இருந்து பைனாகுலர் வைத்துக்கொண்டு வடிவா பார்க்கலாமே. 😁
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

Picture1.png

வணக்கம் வன்னியர்! துபாயில்  இந்தியாவில் இல்லாதது, அமெரிக்காவில் இல்லாதது, ஐரோப்பாவில் இல்லாதது என அப்படி என்னதான் இருக்கின்றது?

துபாயின் இயற்கை என எதை சொல்லலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் வன்னியர்! துபாயில்  இந்தியாவில் இல்லாதது, அமெரிக்காவில் இல்லாதது, ஐரோப்பாவில் இல்லாதது என அப்படி என்னதான் இருக்கின்றது?

துபாயின் இயற்கை என எதை சொல்லலாம்?

இயற்கை வளம் என்பது பாலைவனம் தான்.

கச்சா எண்ணெய் இந்தப்பகுதியில் இல்லை, அல்லது தோண்டியெடுக்க முயற்சிக்கவில்லை.

கச்சா எண்ணை வளம் துபாய்க்கு தெற்கே 140 கி.மீ தூரத்திலிருக்கும் அபுதாபி மாநிலத்தில் தான் மிக அதிகம்.

துபாயின் வருமானம், சுற்றுலா மற்றும் வியாபாரம் சார்ந்த பொருளாதாரம் மட்டுமே.

தன்னிடம் இருக்கும் வளங்களைக் கொண்டு எப்படி புது புது விடயங்களை செய்யலாம் என சிந்திப்பது. அவற்றை மிக கவர்ச்சியாக, பிரமிப்புடன் உலகிற்கு அறிமுகம் செய்வதில் வல்லவர்கள். இதற்கென உலகத்தின் திறன் வாய்ந்த ஆலோசனை சொல்லும் நிறுவனங்களை (Consultants) அமர்த்தியுள்ளார்கள். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தொலைநோக்கு பார்வை, எந்த வேலையிலும் நேர்த்தி, எதை தொட்டால் நாட்டுக்கு செல்வம் பெருகும் என்ற திட்டமிடல்..

தாரக மந்திரம்,உங்கள் பணத்தை கொண்டு வாருங்கள், வசதிகளை ஒழுக்கமுடன் அனுபவியுங்கள்..

இந்தியாவில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், லஞ்சம் இங்கே இல்லை. குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள்..

இங்கே மண்ணின் மைந்தர்கள்(Natives) மக்கள் தொகை மிகக்குறைவு..பெரும்பாலும் வெளிநாட்டவரே.. 150க்கும் மேற்பட்ட வகை வகையான வெளிநாட்டவர்கள் வாழும் நாடு.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் வன்னியர்! துபாயில்  இந்தியாவில் இல்லாதது, அமெரிக்காவில் இல்லாதது, ஐரோப்பாவில் இல்லாதது என அப்படி என்னதான் இருக்கின்றது?

துபாயின் இயற்கை என எதை சொல்லலாம்?

உண்மைதான், இந்தியாவில் மிகத் தரமான ஆடம்பர வாழ்வு வாழமுடியும் என்கிறார்கள்.

இந்த 3 மில்லியன் பவுனுக்கு இங்கே ஐரோப்பாவில் மிகத்தரமான வீடு வாங்கிப் போடமுடியும். குடியுரிமையும் தந்து விடுவார்கள்.

பிஜேபி சார்பில் குமரகுரு என்னும் ஒருவர் தமிழக டிவி களில் தோன்றி வாதம் செய்வார்.

முன்னாள் திமுக சபாநாயர் ஒருவர் மகன். சென்னையில் பாடசாலைகள் நடாத்தும் குடும்பம். 

இப்போது பிரிட்டனுக்கு குடி பெயர்த்துள்ளார். £2 மில்லியனுக்கு வீடு வாங்கி போட்டு உள்ளார்.

துபாய், குடியுரிமை ஒருபோதுமே கிடைக்காது. இங்கே வாழ்வது பெருமையானது என்கிறார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

...துபாய், குடியுரிமை ஒருபோதுமே கிடைக்காது.

நாதமுனி சொலவது உண்மைதான், என்ன குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே குடியுரிமை கிடைக்காது..

வந்தமா, பணத்தை சம்பாதித்தோமா அல்லது செலவழித்து அனுபவித்தோமா.. என எதிலும் மூக்கை நுழைக்காமல், சொந்த நாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கோணும்..!

அதுவே நிம்மதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

நாதமுனி சொலவது உண்மைதான், என்ன குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே குடியுரிமை கிடைக்காது..

14 minutes ago, Nathamuni said:

துபாய், குடியுரிமை ஒருபோதுமே கிடைக்காது. இங்கே வாழ்வது பெருமையானது என்கிறார். 

என்ன காரணம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

என்ன காரணம்?

ஒரு வெள்ளையர் YT ல் துபாய் குறித்து சொன்னார்.

உலகின் மிக மோசமான இனவெறி பிடித்தவர்கள், சவூதி, துபாய் அரபு சேக்குகள் என்று.

உண்மையில் அற்பனுக்கு பவுசு வந்த கதைதான். எண்ணை கண்டுபிடிக்க முன்னம், பர தேசி பிடித்த நாடுகள் தான் இவை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

என்ன காரணம்?

இங்கே மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகள் எங்குமே குடியுரிமை கிடைக்காது. இதற்கு அவர்களின் பூமி நலன் சார்ந்த அரசியல் காரணங்கள் உண்டு. அவை வெளியில் தெரிவதில்லை.

1 hour ago, குமாரசாமி said:

உந்த மீனாவுக்கு நான் மூண்டு ரூபாயும் குடுக்கன்..:cool:

ஏன், அதற்கு மேலும் கொடுக்க மயக்கமா? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

ஏன், அதற்கு மேலும் கொடுக்க மயக்கமா? 😜

நேற்று , முந்தநாள் எல்லாம் இஞ்சை பயங்கர வெய்யில் வெக்கை...... உந்த மீனா எல்லாம் இஞ்சத்தையான் வெள்ளை ஒல்டன் கோல்டன் வுமனிட்டை பிச்சை வாங்கோணும் கண்டியளோ...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

Cobham பக்கம் நாம்மாட்கள் தான் விலை அதிகமில்லை ஆரம்பமே ஐந்து மில்லியனில்தான் தொடங்கும் வீடுகளில் இருக்கினம் தலை அந்த பக்கம் கேள்விப்படவில்லையாக்கும் .1000பவுன்ஸ் கட்டி கப்பலில் வந்த கூட்டம் 1958 முதல் அடிக்கு வெளிக்கிட்டவை அவர்களிடம் சிலோன் போகவில்லையா வந்ததுக்கு  என்றால் யோசித்துவிட்டு இருக்கிற சொத்துக்களை  விற்பதுக்கு ஓரிரு முறை போனோம் என்கினம் அவ்வளவுதான் அவர்களின் பிறந்த பூமியுடன் ஆன  பந்தம் .

துபாயின் வீட்டு விலையை லண்டன் வீட்டு விலையோடு ஒப்பிட முடியாது பெருமாள். இஞ்ச மேற்கு லண்டனில் semi detached 3 அறை வீடுகளே 600, 650K எண்டு போகுது. இன்னும் பத்து வருடத்துல எல்லாரும் மில்லியனர்🤣.  

அதே 600K காசுக்கு அங்க நல்ல லக்சறி பிளட் வாங்கலாம். அதான் அங்கே 3 மில்லியன் என்றால் அதன் தரம் இன்னும் எகிறும் என்ற கருத்தில் சொன்னேன். இது லக்சறி penthouse அதனால் இந்த விலை போலும்.

@குமாரசாமி அண்ணை,

டுபாயில் எனக்கு பிடித்த விசயம் பாலைவன 4x4 சவாரியும், இரவு நேர பாலைவன பார்பிகியூ மற்றும் அரேபிய பெண்களின் பெல்லி டான்ஸ் 😎.

ஒரு அனுபவத்திற்கு Burj Khalifa ஹோட்டல் போன்றவற்றில் ஒரு நேரச்சாப்பாடும், உலகில் உயரமான கட்டிடத்தில் ஏறுதல் போன்றவற்றை செய்யலாம்.

சிறுவர்களுக்கு அபுதாபியில் நிறைய விசயங்கள் இருக்கு. Ferrari World, Warner Bros World, Water World இப்படியாக. 

யாழ்கள ஒன்றுகூடல் ஒன்றை டுபாயில் செய்வதாக முன்னர் ஒருதரம் பேசிகொண்டோம். வருவியள்தானே😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

யாழ்கள ஒன்றுகூடல் ஒன்றை டுபாயில் செய்வதாக முன்னர் ஒருதரம் பேசிகொண்டோம். வருவியள்தானே😎.

ஒன்றரை வருசமா ஏழரை பிடித்து போய்  அடங்கி கிடக்கிறம் நிச்சயம் வருவம் 2022 தாண்டியும் கொரனோ படம் காட்டும் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

ஒன்றரை வருசமா ஏழரை பிடித்து போய்  அடங்கி கிடக்கிறம் நிச்சயம் வருவம் 2022 தாண்டியும் கொரனோ படம் காட்டும் போல் உள்ளது .

எல்லாம் சரிவரும். இஞ்ச 3ம் அலை தொடங்கீட்டு எண்டுறாங்கள்.

2 hours ago, குமாரசாமி said:

உந்த மீனாவுக்கு நான் மூண்டு ரூபாயும் குடுக்கன்..:cool:

🤣🤣🤣 இலங்கை காசிலயுமோ🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இதனைப் பார்த்தவுடன் Colombo Port City தான் நினைவுக்கு வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

3 மில்லியன் பவுண்ஸா. மாடியோடு மீனாவையும் சேர்த்து விலை சொல்கிறார்கள் போல் உள்ளதே 🤣

மீனா இல்லாமலே கொழும்பில் மாடி வீடுமட்டும் இந்த விலைக்கு வர நாட்கள் அதிகம் இல்லை 
நாம் அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டுக்கொண்டு இருக்கிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

Cobham பக்கம் நாம்மாட்கள் தான் விலை அதிகமில்லை ஆரம்பமே ஐந்து மில்லியனில்தான் தொடங்கும் வீடுகளில் இருக்கினம் தலை அந்த பக்கம் கேள்விப்படவில்லையாக்கும் .1000பவுன்ஸ் கட்டி கப்பலில் வந்த கூட்டம் 1958 முதல் அடிக்கு வெளிக்கிட்டவை அவர்களிடம் சிலோன் போகவில்லையா வந்ததுக்கு  என்றால் யோசித்துவிட்டு இருக்கிற சொத்துக்களை  விற்பதுக்கு ஓரிரு முறை போனோம் என்கினம் அவ்வளவுதான் அவர்களின் பிறந்த பூமியுடன் ஆன  பந்தம் .

ஆம் இப்பகுதிக்கு நான் வந்துள்ளேன். இது கில்ஃபொர்ட், சரே என்ன்னும் ஏரியாவில் உள்ளது என நினக்கின்றேன். அழகிய பெரிய வீடுகள். 

7 hours ago, ராசவன்னியன் said:

இங்கே மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகள் எங்குமே குடியுரிமை கிடைக்காது. இதற்கு அவர்களின் பூமி நலன் சார்ந்த அரசியல் காரணங்கள் உண்டு. அவை வெளியில் தெரிவதில்லை.

ஏன், அதற்கு மேலும் கொடுக்க மயக்கமா? 😜

விதி விலக்கு உண்டு. உதரணமாக யூசுப் அலி‍ ‍மலயாளி ‍ லூலூ குழும அதிபர்

7 hours ago, Nathamuni said:

ஒரு வெள்ளையர் YT ல் துபாய் குறித்து சொன்னார்.

உலகின் மிக மோசமான இனவெறி பிடித்தவர்கள், சவூதி, துபாய் அரபு சேக்குகள் என்று.

உண்மையில் அற்பனுக்கு பவுசு வந்த கதைதான். எண்ணை கண்டுபிடிக்க முன்னம், பர தேசி பிடித்த நாடுகள் தான் இவை. 

மிகவும் மத வெறியும்/ இனவெறியும் உடைய மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் நாடுகள் இவை. 

7 hours ago, Nathamuni said:

உண்மைதான், இந்தியாவில் மிகத் தரமான ஆடம்பர வாழ்வு வாழமுடியும் என்கிறார்கள்.

இந்த 3 மில்லியன் பவுனுக்கு இங்கே ஐரோப்பாவில் மிகத்தரமான வீடு வாங்கிப் போடமுடியும். குடியுரிமையும் தந்து விடுவார்கள்.

பிஜேபி சார்பில் குமரகுரு என்னும் ஒருவர் தமிழக டிவி களில் தோன்றி வாதம் செய்வார்.

முன்னாள் திமுக சபாநாயர் ஒருவர் மகன். சென்னையில் பாடசாலைகள் நடாத்தும் குடும்பம். 

இப்போது பிரிட்டனுக்கு குடி பெயர்த்துள்ளார். £2 மில்லியனுக்கு வீடு வாங்கி போட்டு உள்ளார்.

துபாய், குடியுரிமை ஒருபோதுமே கிடைக்காது. இங்கே வாழ்வது பெருமையானது என்கிறார். 

ஏன் இரண்டு மில்லியன்? இதிவிட குறைவாக பல்வேறு நாடுகளில் குடியுரிமமை இலகுவாக வங்கலாம். உதாரணம் போர்த்துகல், பனாமா  அல்லது தென்னம‌ரிக்க நாடுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

யாழ்கள ஒன்றுகூடல் ஒன்றை டுபாயில் செய்வதாக முன்னர் ஒருதரம் பேசிகொண்டோம். வருவியள்தானே😎.

இங்கிருந்தால் கட்டாயமாக நானும் வருவேன். (அடுத்த வருடம் சிலகாலம் நண்பனுடன் டோக்கியோ, ஜப்பானில் வேலை செய்ய நினத்துள்ளேன். செலவுகள் / வாழ்க்கைதரம் எப்படியோ தெரியாது)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

மீனா இல்லாமலே கொழும்பில் மாடி வீடுமட்டும் இந்த விலைக்கு வர நாட்கள் அதிகம் இல்லை 
நாம் அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டுக்கொண்டு இருக்கிறோம் 

வெளியார் வீடு வாங்கும் இலகு டுபாய் போல் இருக்கும் என்றால் கொழும்பு port city யில் பல மாடிகள் புலம்பெயர் தமிழர்களுடையதாய் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இப்போ கொழும்பில் இருக்கும் top end flats இன் விலையை இது பாதிக்குமோ என்றும் சிலர் பயப்படுகிறார்கள்.

2 hours ago, colomban said:

விதி விலக்கு உண்டு. உதரணமாக யூசுப் அலி‍ ‍மலயாளி ‍ லூலூ குழும அதிபர்

யு ஏ இ ஐ பிரதிதிதிதுவம் செய்யும் தடகள வீரருக்கும் உண்டு என நினைக்கிறேன். 

6 hours ago, Kapithan said:

இதனைப் பார்த்தவுடன் Colombo Port City தான் நினைவுக்கு வருகின்றது.

அவர்களின் அனிமேட்டட் வீடியோவை முதல் முறை பார்த்ததும் எனக்கும் இப்படி தோன்றியது.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.