Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஒர்  அகதியின் கதை 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒர்  அகதியின் கதை 

என் ஈழத்திரு நாட்டிலே  யுத்தகால வேலைகளில் ...நம்மவர்கள் அடைந்த துயரங்கள்  உயிரிழப்புகள் சொத்து இழப்புகள்   உறவுகளைத் தொலைத்த சோகங்கள்  சொல்ல வார்த்தையில்லை . சொந்த மண்ணிலே அகதியாகிய சோகம் ஏழேழு தலைமுறைக்கும்  வரலாறாய் இருக்கும்.  கண்ணீரோடும் செந்நீரோடும் கலைந்து  போன உறவுகள் . உயிரிலும் மேலாக மதிக்கும் போராளிகள் அவர்களை  ஈந்த பெற்றோர்  கணவனை இழந்த மனைவி , தந்தையை ,தாயை இழந்த குழந்தைகள், உறவுகளை இழந்த உள்ளங்கள் , படட துன்பங்கள் வார்ததையில் வடிக்க முடியாத சோகங்கள் இத்தனையும் சந்தித்த ஒரு அகதியின்  கதை. 

1990இல் ஒரு ஆவணி  மாதத்தில் யாழ் நகரையும் அதன் சூழ உள்ள தீவுகளையும் இலங்கையின்  ராணுவத்தினர்  தரையாலும் கடலாலும் ஆகாயத்தின் பரப்பிலும்  ஆக்கிரமித்து இருந்த   காலம்.  வயது வேறுபாடின்றி ஓடிக்கொண்டு ,செல்லடியிலும்  , உயிர்ப்பயமும் ராணுவத்தின் கைதுகளும் ஆக்கிரமித்திருந்த காலம்.   ஆரம்பத்தில் உறவினர் வீடுகளில் ஒன்று கூடியவர்கள் பின் மத வழிபட்டு நிலையங்களிலும்  அடர்ந்த ஆலமரங்கள் நிழலிலும்  பாடசாலைகளிலும்  தஞ்சம் புகுந்தார்கள்.   முதுமையால் வாடியவர்கள்   இளம் கற்பிணித்தாய்மார்கள்  பிறந்து மூன்று நாளே   யானா  குழந்தையை துணியால் சுற்றி மூடிக்கொண்டு ..ஆண்கள் பெண்கள் சிறுவர்  அவர்களுடன் கூட வளர்ப்பு பிராணிகள்   எல்லோரும் ஓடினார்கள். .மிதிவண்டியில்  வண்டிலில்  கால் நடையாக  கையில் அகப்பட்ட் உடு புடவை உணவுபொருளுடன் எங்கே போகிறோம் என்று  தெரியாது ஓடிக்கொண்டு இருந்தர்கள் . தங்கு ம் இடங்களில் இருந்தவற்றை கஞ்சியாகவோ கூழாகவோ ஆக்கி  ஒரு வேளை க்கு மட்டுமே போதுமானதாக இருந்ததை பகிர்ந்து உண்டு  இரவில் கண்விழித்தும் பகலில்  தூக்க கலக்கமுடனும். பயத்துடனும் அவர்கள் பொழுதுகள் நகர்ந்து கொண்டு இருந்தன ..இடையில் விடுதலை வீரர்களின் வழிகாட்டுதலும் இருந்தது.  

தேவகியும்   மூன்றுவயது  , எட்டுமாத இரு கைக் குழந்தைகளுடனும் வயதான தாய் தந்தையருடனும் சைக்கிளில்  கொளுவ  படட  இரண்டு பைகளில் குழந்தைகளுக்கு உணவும்  குடிநீரும் மிக அத்தியாவசியமான பத்  திரங்கள்  ஒரு சில மருந்து பொருட்களுடனும்  நடந்து கொண்டிருக்கிறாள்.  வாரம் ஒன்று உருண்டோடியது   . தாயாருக்கு தொழுவத்தில் கட்டி வளர்த்த பசுமாடுகள் என்ன ஆயினவோ ?   வீடு வாசல் என்ன ஆச்சோ  எனும் கவலை .  ஒரு சில வாரங்களில் திருப்பபோகலாம் என்று தான் நினைத்திருந்தார்கள்.   ஆனால் அவர்கள் தங்கிய இடமே அவர்களுக்கு நிரந்தரமாகி விடப்போகிறது என்று  யாரும் எண்ணவில்லை .  ஆகாயத்திலே  வடடமிட்டு  பறந்து குண்டுகளை கொட்டித்தீர்க்கு ம் விமானங்கள்  ட்ராக் வண்டிகளில் சுற்றும் ராணுவத்தினர் ...இரவில் பாரா வெளிச்சத்தில் தேடும்  ஆகாய படையும். தங்கள்  உக்கிர சேவையில்  சற்றும் ஓயாமல்  தொடர்ந்து கொண்டு இருந்தார்கள் .  கொண்டு வந்த உணவும் தீர்ந்து விடவே வயதான தாயும் தந்தையும்  அருகில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு உறவினர் வீட்டுக்கு செல்லும் படியாக கெஞ்சினார்கள் . நாங்கள் வயதானவர் எப்படியோ சமாளித்து கொள்கிறோம்  நீங்கள்   பாதுகாப்பாக  படடனத்துக்கு சென்று விடுங்கள் என்றார்கள்.  ..

செய்வதறியாது   தன குழந்தைகளுடனும் சித்தப்பாவுடனும்  கடைசித் தம்பியுடனும்  இரவோடு இரவாக அராலி கடந்து ஒரு இந்து ஆலயத்தில் தஞ்சமானார்கள்.  அங்கும்  வானூர்தியின் (ஹெலிகாப்டர் ) வடடமடிப்பும் துப்பாக்கி வே ட்டுக களின் ஒலியும்யும்  மேலும் அச்சமூட்டின.  அங்கிருந்து  ஒரு வாறு நடந்து ..மூன்றாம் நாள்  உறவினர் வீடடை அடைந்தார்கள். அங்கு அவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது வீட்டு வாயிலில்  பெரிய  பூட்டு தொங்கியது ..கூப்பிட்டு பார்த்தர்கள் யாருமே இல்லை . கடைசியாக யாழில் கரையோர மாக அமைத்திருந்த குடியிருப்பில்    யாருமே இல்லாத  ஒரு குடிசையை  அடைந்தார்கள்  வெளியே சென்ற சித்தப்பா ஒரு தேங்காயுடனும்      ஒரு கிலோ அரிசியுடனும் வந்தார் . அவற்றை கஞ்சியாக காய்ச்சி   யாவரும் பசியாறியபின் ..களைப்பின் மிகுதியால்   சோர்வுடன் கண்ணயர்ந்தனர்.  

மாலை  ஆறுமணியிருக்கும்  வெளியே சென்று வந்த சித்தப்பா .. இரவு   எட்டுமணியளவில்  ஒரு மீன் பிடி வள்ளம் வெறுமையாக  பூநகரி வரை செல்லும் என சேதி சொன்னார்..  இரவு  ஏழரை மணியளவில் எல்லோரும்  கரையில் வள்ளத்துக்காக  காத்திருந்தனர் ..வேறு சிலரும் ஏறிக் கொண்டனர் ....வள்ளம்  செல்ல தொடங்கியது ... வள்ளத்தின் உரிமையாளன்    நிறை வெறியில் . நிற்க முடியாமல் தள்ளாடி கொண்டிருந்தான்  ஏனைய  மீன்பிடி உதவியாளர் களும்   அதில் வேறு சிலரும்   இருந்தனர் . 

  வள்ளம் நகரத்தொடங்கியது    சீரும் காற்றின் கொந்தளிப்பிலும்    அலைமீது ஏறி இறங்கும்  போது ஏற்படும்  பயத்திலும்   குளிரோடும்  , மிக மங்கிய நிலவொளியில்   சுற்றிச் சுற்றி வடடமிடும்  வானூர்தியின்   அக்கினித் தணலாக கக்கும் பரா வெளிச்சத்திலும் உயிரைக் கையில்  பிடித்தவாறு   உள்ள தெய்வங்களெல்லாம் வேண்டிக்  கொண்டு  இருந்தார்கள்.  

உதவி மீனவர்கள்   வள்ளத்தை ஒட்டி  கரைசேர்ப்பதில் மும்முரமாய் இருந்தார்கள்.      வ ள்ளத்தில் இருந்த  ஏனைய மீனவர்கள்  தாம்  பிடித்த மீன்களை   நகரத்தில் விற்று தமக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ..வீடு நோக்கி .செல்லபவர் களாக  இருந்தார்கள் .  சம்மாட்டி   தள்ளாடியபடி   தூக்க கலக்கத்தில்  இருந்தான்  .விழப்  போகும் தருணத்தில் ஏனைய  உதவியாளர் தாங்கியபடி இருந்தர்கள்.  இருப்பினும் அவன் குறுக்கும் மறுக்குமாக    நடக்க தொடங்கினான். தேவகி  அருகில் வரும் போது  அவளின் முன்பக்கத்தை சீண்ட எத்தணி த்தான் அவள் குழந்தையை மார்போடு இறுக அணைத்து கொண்டு இருந்தா தாள்  குழந்தையின் தலைதான் அவன் கைகளுக்கு தட்டுப்பட்ட்து ..அடிக்கடி தூஷண வார்த் தை களும் தாராளமாக சொன்னான்.  இப்படியாக பயணம் பாதி வழி  சென்றது  . மீண்டும் வெறி காரன்   அவளை அண்மிக்கும் பொது  தன் ஷர்ட்  பொக்கற்றை தொட்டுக்காட்டி இவ்வ்ளவு பணம் இருக்கிறது என்னோடு வா என கேட்டுக் கொண்டிருந்தான்.   வள்ளத்தில்  தொடக்கத்திலும் முடிவிலும்  நின்ற மீனவர்கள்  கேடு கெடடவன்  நம்மூர் பெயரை கெடுக்க பார்க்கின்றான் . குழந்தை குஞ்சுக ளோடு   அந்தரித்து வந்தவர்கள் கரையில் கொண்டு சேர்க்க வேண்டுமென முணுமுணுத்து கொண்டு இருந்தார்கள்  வெறிக்காரன்  அங்கும் இங்கும் நடமாடுவதை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை பருத்த உடல்வாகு கொண்டவனாக ,  அதிகாரத்தோரணை கொண்டவனாக  இருந்த்த்தான் . 

ஓரளவு  கரை தென்படும்  நிலையில் .அவனை எல்லோரும் சேர்ந்து இறுக்கி பிடிக்க ..சித்தப்பாவிடம்  எப்படியாவது  இறங்கி (முழங்காலளவு தண்ணீரில்)  ஓடிப்போய்விடுங்கள் என மற்றைய  மீனவர்கள்  சொன்னார்கள் .   இவர்கள்  இறங்கி   நடந்து . காலில் இருந்த .ஒரே ஒரு (மற்றையது வள்ளத்தில்)   செருப்பையும்  கழற்றி எறிந்துவிட்டு ..சற்று  ஊர்மனை போல இருந்தா  பகுதியை  அடைந்து  ...சற்று இளைப்பாறினார்கள். பயம் பசிக்களை யும் சேர்ந்து கொண்டது .  காலை  அதிகாலை  மூன்று மணி இருக்கும் சித்தப்பாவின் மனம் ஒரு நிலையில் இல்லை.  நாங்கள் இங்கே தங்குவது  சரியானதாகப்  படவில்லை ...புறப்படுவோம் என ...நடக்க ஆரம்பித்தார்கள்   பொழுது விடிந்தது ..காலை வேளை  .பிரதான வீதிக்கு வந்து விடடார்கள் . பேக்கரியில் பாண் வாசனை  வீசியது ..இவர்களை ஓரிடத்தில்  இருக்க செய்து ..குழந்தைகளுக்கு  பணிசும் . பெரியவர்களுக்கு  பாணும்  வாங்கி வந்தார். உண்டு சற்று  களையாரிக் கொண்டு இருக்கும் போது  ...அவ் வீதியால் ஒரு லொறி வாகனம் வந்து  தரித்தது ...அது அருகில் இருக்கும் பட்டினத்துக்கு  அரிசி மூடடை களை தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்து விட்டு  காலியாக  மன்னார்   வரை   செல்ல இருந்தது ..பின் அதில் ஏறி ..சிறு  குழந்தைகளுடன் இருக்கும் தாய் எனும் இரக்கத்தால்  ..அவர்களை மடு  தேவாலயத்தில்  இறக்கி விட்ட்ர்கள்.  இவர்களும் அங்கு சென்ற போது அங்கும் நிறைந்த ஜனக்கூட்ட்ம்  ...சித்தப்பா அங்கு பொறுப்பாக இருந்த  பாதிரியாருடன் பேசி  சிறுகுழந்தைகளி ன் நலனுக்காக ஒரு சிறிய வீட்டின்  அரைப்பகுதியை  தங்குவதற்கு கொடுத்தார்.  ஏனைய பகுதியில்   கொக்கிளாய்ப்பகுதியில்  இருந்து ..கொழும்புக்கு போகமுடியமல்  ஒரு நிறுவனத்தின் அதிகாரி குடும்பம் இருந்தர்கள். 

இத்தனை அல்லோல கல்லோலம் தாண்டிய பின்   பாதிரியார் மூலம்  மத்திய கிழக்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்த , இவர்களின் நிலையறியாது செய்திகள் கேட்டு  தவித்துக்  கொண்டிருந்த கணவனுக்கு .. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என சேதி அனுப்பி னால்  மறுவாரத்தில்  அவளுக்கு பாதிரியார் மூலம் பணம் அனுப்பி இருந்தான்.  அவசரப்பட்டு  ஊருக்குப்போக எத்தணிக்க வேண்டாம்  அங்கேயே இருக்கும் படி கேட்டுக் கொண்டான்.  பின் மூன்று மாதங்களின் பின் . கணவன் இவர்களை  கொழும்புக்கு  எடுப்பித்து .. வேலையை  விட்டு தானும் வந்து இணைந்து கொண்டான்.   

 தமிழனுக்கே  உரிய   அகதி  வாழ்வு என்று தான் மாறுமோ ... செந்நீரும் கண்ணீரும் கண்ட   ஈழத் தாயகமே  என் அருமைத் திருநாடே  வணங்குகிறேன். 

***மிக நீண்ட  காலத்தின் பின் ( 20 years ) நம்மூரை சேர்ந்த ஒருவரை முகபுத்தக  வாயிலாக  கண்டு,  தொடர்புகொண்டு ..அவரின் சோக கதையின்  சாரத்தையொட்டி எழுதிய பதிவு. 

  • Like 1
  • Sad 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிலாமதி said:

பகிர்விற்கு நன்றிகள் சகோதரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.