Jump to content

தாலவிலாசம் – வைத்தியர் கணேசன் சபாரட்ணம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தாலவிலாசம் – வைத்தியர் கணேசன் சபாரட்ணம்

 
%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%
 14 Views

தாலவிலாசம் என்பது பனையின் பெருமைகளைக் கூறுவதற்காகச் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூலாகும். நானூறுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த இந்த நூலை யாழ்ப்பாணத்தின் நவாலி என்னும் ஊரைச் சேர்ந்த சோமசுந்தரப் புலவர் இயற்றினார். 1940 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் எழுதப்பட்ட இந்நூலை 1940ஆம் ஆண்டில் தொல்புரம் பனைத்தொழில் விருத்தி ஐக்கிய சங்கம் என்னும் அமைப்பு அச்சிட்டு வெளியிட்டது.

பனையின் பெருமைகளைக் கூறுவதே இந்நூலின் நோக்கம் என்பது மன்னுநீர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெல்லாம் பன்னுகலி வெண்பாவாற் பாடவே….. என்று வரும் இதன் காப்புச் செய்யுள் அடிகளில் இருந்து விளங்கும். எனினும் இந்நூலின் அடிப்படை நோக்கம் அக்காலத்துச் சமூகத் தேவை சார்ந்து எழுந்தது என்று கூறுவது பொருந்தும். யாழ்ப்பாணம் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் இருந்தபோது இந்த நூல் எழுதப்பட்டது. அண்டை நாடான இந்தியாவில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டத்தின் தாக்கமும், முந்திய நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ஆறுமுகநாவலர் போன்றவர்கள் கல்வி, சமயம் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியும், யாழ்ப்பாணத்தில் தேசிய உணர்வுகளை ஏற்படுத்தியிருந்த காலம் அது. அந்நியர் ஆட்சிக் காலத்தில் பிறநாட்டுப் பொருட்களின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த விருப்பினால், உள்நாட்டுப் பொருட்களுக்குரிய பெருமைகள் குறைத்து மதிப்பிடப்பட்டன. இந்நிலையை மாற்றுவதற்குப் பல்வேறு குழுக்களும், தனிப்பட்டவர்களும் முயன்று வந்தனர். இதன் ஒரு பகுதியாகவே யாழ்ப்பாணத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வந்த பனம் பொருட்களுக்கு மீண்டும் மதிப்பை உண்டாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

சோமசுந்தரப் புலவரும் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தது, அவரது பிற பாடல்கள் மூலம் விளங்கும். குழந்தைகளுக்காக அவர் இயற்றிய பனை தொடர்பான கும்மிப் பாடலிலே, நூலின் கருப்பொருளான பனை

“திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும்

தென்னவனும் ஔவை சொற்படியே

மங்கல மாயுண்ட தெய்வப் பனம்பழம்

மரியாதை அற்றதோ ஞானப்பெண்ணே “

என்று மக்கள் பனம்பழத்தைக் குறைவாக மதிப்பிடுவதைக் குறை கூறுவதுடன், அதே பாடலின் இன்னொரு பகுதியில்,

அங்கே பிறர்சமைத் திங்கே விடுமவைக்

காசைப் பட்டோமடி ஞானப்பெண்ணே “

என்று மக்களின் பிற நாட்டுப் பொருட்களின் மீதான விருப்பைச் சாடுவதையும் காணலாம். இந்த உணர்வுகளின் அடிப்படையிலேயே தாலவிலாசம் நூலின் நோக்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மூல நூல்களும் தகவல்களும்

நூலின் இறுதியிலே இந் நூலுக்கு மூலமாக அமைந்தவற்றைப் பற்றிப் புலவர் குறிப்பிட்டுள்ளார். “இப்பனையின் மெய்ப்புகழை ஆதியிலே தாலவிலாசமெனச் செப்பினார் செந்நாப் புலவர்” என்று குறிப்பிட்டுள்ளதனால், இப்பெயரில் முற்காலத்து நூலொன்று இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. அத்துடன் வேக்குசன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலொன்று இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு நூல்களும் தனக்கு மூல நூல்களாகப் பயன்பட்டதாகப் புலவர் குறித்துள்ளார். இவை தவிர, தமது தந்தையார் முந்தைய நூல்களில் இருந்து கற்றுத் தனக்குச் சொன்ன விடயங்களையும், அக்கால உலக வழக்கையும் பயன்படுத்தியே இந்நூலை எழுதியதாகப் புலவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழின் செய்யுள் நடை மரபுக்கு அமைய பிள்ளையாரை வணங்கி, வெண்பா வகையில் அமைந்த காப்புப்பாடலுடன் இந்நூல் தொடங்குகிறது. இதன் பின்னர் ‘நூல்’ என்ற தலைப்புடன் நூல் பகுதி தொடங்குகிறது. இதிலும் முதலில் கடவுள் வணக்கமாக ஒரு வெண்பாப் பாடல் உள்ளது. பின்னர் 400 இற்குச் சிறிது மேற்பட்ட அடிகளுடன் கூடிய கலிவெண்பாப் பாடல் அமைந்துள்ளது. இறுதியில், மழை, பூமி, உயிர்கள், அறம், பனை, தமிழ் ஆகியவற்றை வாழ்த்தும் நான்கு அடிகளைக் கொண்ட ஒரு வெண்பாவுடன் நூல் நிறைவடைகிறது.

உள்ளடக்கம்

நூலின் உள்ளடக்கம் பெரும்பாலும் பனையின் பயன்களை விபரிப்பதாக அமைகின்றது. பனையின் வேரில் இருந்து குருத்து வரையான எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களுக்குக் கிடைக்கும் நூற்றுக்கு மேற்பட்ட பயன்கள் எடுத்துக் கூறப்படுகின்றன. வெறுமனே பயன்களைக் கூறாது, பல இடங்களிலே குறித்த பொருட்கள் கிடைக்கும் காலம், அவற்றிலிருந்து பயன்படு பொருட்களைச் செய்யும் விதம், அவற்றினால் விளையும் நன்மைகள், பனையின் பகுதிகளைக் குறிப்பிடத் தமிழில் வழங்கும் சொற்கள் போன்ற பல தகவல்கள் செய்யுள் வடிவில் தரப்பட்டுள்ளன. நூலின் முக்கிய நோக்கம் பனையின் மேன்மைகளைக் கூறுவதும், அதன்பால் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுமே. ஆயினும் நூல் கவி நயங்களுடன் ஆக்கப்பட்டுள்ளது. பல்வேறு சுவைகளுடன் கூடிய உவமைகளும் பல இடங்களிலே எடுத்தாளப்பட்டுள்ளன.

பனையின் தோற்றம் பற்றிய கதை

நூலுக்குச் சுவை கூட்டுவதற்காகவும், பனையின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகவும் அதன் தோற்றம் பற்றி ஒரு கதையையும் புலவர் கற்பனையாகப் புனைந்துள்ளார்

ஒரு காலத்தில் மக்களுடைய பசியைப் போக்குவதற்கும், வீட்டுக்குத் தேவையான தட்டுமுட்டுப் பொருட்களைச் செய்வதற்கும், நோய்களைப் போக்குவதற்கும், தேவையானவற்றை வழங்குவதற்கு, தேவலோகத்தில் உள்ள கற்பகதருவைப் போன்ற ஒன்று இந்த உலகத்தில் இல்லையே என்று வருத்தப்பட்ட இவ்வுலகத்தவர், சிவபெருமானைத் தொழுது வேண்டினராம். சிவபெருமானும் மனமிரங்கியவராய், உலகத்தைக் காக்கும் கடமையைச் செய்பவராகிய விட்டுணு மீது கோபம் கொண்டு, காத்தல் தொழிலிலிருந்து தவறியமைக்கான காரணம் என்னவென்று வினவினாராம். விட்டுணுவோ தன்னில் குறை எதுவும் இல்லையென்றும், படைப்புக் கடவுளான பிரமன் படைத்தவற்றுள் அவ்வாறான ஒன்று இல்லையென்றும் பணிவுடன் கூறினாராம். சிவனுடைய கோபம் பிரமன் மீது திரும்பவே அவரும் தனக்குத் தெரிந்தவற்றைத் தான் படைத்துள்ளேன் என்று பயத்துடன் கூறவே, உமாதேவியார் சிவனின் சினம் தணித்து, புவியில் அப்பொழுதே பனை மரத்தைப் படைக்குமாறு கூறினாராம். பிரமனும் உடனே பனை மரத்தைப் பனையூர், பனங்காட்டூர், பனந்தரையூர் என்னும் மூன்று தேசங்களில் படைத்தார் என்பது அக்கதை.

உவமை நயம்

தாலவிலாசம் நூலில் சுவைதரக் கூடிய உவமைகள் பரவலாகக் காணப்படுகின்றன. பனையினதும் அதன் வழியாகக் கிடைக்கும் பொருட்களினதும் பயன்களையும், அவற்றின் இயல்புகளையும் எடுத்துக் கூறும்போது உவமைகளைப் பெருமளவில் கையாண்டுள்ளார் புலவர். சாதாரண விடயங்கள் முதல் சமயத் தத்துவங்கள் வரை இவ்வுவமைகளுக்குக் கருப்பொருள் ஆவதையும் நூலில் காணமுடிகின்றது.

எடுத்துக் காட்டுகள்

பனம்பழத்தின் களியைப் பாயில் பரவிக் காயவிட்டுப் பனாட்டுச் செய்வர். பனாட்டு மெல்லிய தகடாகப் பாயில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதை உழவாரம் போன்ற ஒரு கருவியால் கவனமாக உரித்து எடுக்க வேண்டும். அல்லது பாயைக் கிழித்துவிடும். இதனைக் கூறும்போது,

“…………………………………… – செப்பமில்லாப்

புல்லர்பால் இச்சகம் பேசிப் பொருள் பெறல்போல்

மெல்ல மெல்லப் பாயிதழை வெட்டாமல் …

என்று இச்செயலுக்கு கெட்டவர்களை நாசூக்காகப் புகழ்ந்து அவர்களிடம் இருந்து தந்திரமாகப் பொருள் பெறுவதை உவமையாகக் காட்டுகிறார்.

பனையின் விதை முளைவிட்டு, ஆடு மாடுகளுக்குத் தப்பி வளர்ந்துவிட்டால், அது பொய்யாமல் நீண்டகாலம் பயன் கொடுக்கும் என்பதை,

“முப்பாசந் தீர்த்த முனிவர்மொழி வாய்மைபோல்

எப்போதும் நின்று பயனீயுமே …..

என்று பனை, முனிவர்களுடைய வாய்மொழி என்றென்றும் உண்மையாக விளங்கிப் பயன் தருவதுபோல் பயன் தரும் என்று பனைக்கு முனிவர்களது வாய்மொழியை உவமையாகக் கூறுகிறார்.

பனம் மட்டை எனப்படும் பனையின் ஓலையின் காம்பின் இரு புறமும் கருக்கு எனப்படும் கூரான விளிம்பு கொண்டு இரு புறமும் கூரான வாள் போல் தோற்றமளிக்கும். இதனையும், வேண்டியன அளித்து மக்களைக் காப்பதையும் கூறும்போது,

“……………………………………… பொல்லாக்

கலிகொன்று காமர் குடைக்கீழ்ப் – பொலியும்

உருக்குவாள் வேந்தன்போ லோரிருபாற் கூருங்

கருக்குவாள் கொண்டுலகைக் காக்கும்….

பகை ஒழித்து வெண் கொற்றக் குடையின் கீழ் ஆட்சி செய்யும் உருக்கினால் ஆன வாளை ஏந்திய வேந்தனைப் பனைக்கு உவமையாகக் கூறுகிறார் புலவர்.

பழமொழிகள்

யாழ்ப்பாணத்தில் வழங்கிய பழமொழிகள் சிலவற்றையும் தேவைக்கேற்ப ஆங்காங்கே செய்யுள் நடைக்கு அமையப் புகுத்தியுள்ளார் புலவர். பத்து ஆண்டுகளில் பனை பயன் கொடுக்கத் தொடங்கும் என்பதைக் கூறும்போது பெண் பிள்ளைகளையும், பனையையும் ஒப்பிட்டுக் கூறும் பழமொழியை “பெண்பிளையும் தண்பனையும் பேணிவளர்த்தால் வருடம் பண்பிலொரு பத்தில் பயன் கொடுக்கும் ” என்கிறது தாலவிலாசம்.

பனை இருந்தாலும் நீண்ட காலம் வாழ்ந்து பயன்கொடுக்கும், வெட்டி வீழ்த்திய பின்னும் தூண், துலா, வளை போன்ற பல்வேறு பொருட்களாக நீண்டகாலம் பயன் கொடுக்கும் என்பதைக் குறிக்கும் பழமொழியை, “நட்டாயிரம் வருடம் நானிலத்தில் காய்த்து நிற்கும் பட்டாயிரம் வருடம் பாழ்போகா ” என்று நூலில் புகுத்தியுள்ளார் புலவர்.

 

https://www.ilakku.org/?p=51834

 

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கொரோனாச் சந்தைகளும் தமிழ் அரசியல்வாதிகளும்! நிலாந்தன்! June 13, 2021 கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் சொன்னார்.திரு நகரிலும் உதய நகரிலும் கொரோனாச் சந்தைகள் இயங்குவதாக.பிரதான சந்தைகள் மூடப்பட்ட காரணத்தால் தற்காலிக கள்ளச் சந்தைகளாக இவை இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.சிலசமயங்களில் உதயநகர் சந்தையில் படைத்தரப்பும் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருள் வாங்குவதை தான் கண்டதாகவும் சொன்னார். இதைப்போலவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒர் ஊடகவியலாளர் சொன்னார் கொக்குவில் இந்து பள்ளிக்கூடத்தின் மைதான வீதியில் காலை வேளைகளில் ஒரு மீன் சந்தை இயங்குவதாகவும் அது மிகவும் நெரிசலான ஒரு சந்தை என்றும்.யாழ்ப்பாணம் பாசையூர் சந்தையும் இயங்குகிறது. இடையில் போலீசாரோடு சில முரண்பாடுகள் வந்தன.வழமையான நாட்களோடு ஒப்பிடுகையில் சனத்தொகை குறைவு என்றாலும் அதுவும் ஒரு சனத்திரட்சிதான். இப்படித்தான் யாழ் திருநெல்வேலி சந்தையும் அயலில் இருக்கும் உள் வீதிகளில் சிதறி இயங்குகிறது. இடைக்கிடை போலீசார் பாய்வார்கள். எனினும் போலீசாரை கண்டதும் மூடி போலீசார் போனதும் திறந்து ஆங்காங்கே வீதியோரங்களிலும் வீடுகளுக்குள்ளேயே சிறு சிறு சந்தைகள் இயங்குகின்றன. யாழ் பருத்தித்துறை வீதியிலும் தோட்டக் காணிகள் அதிகமுள்ள பகுதிகளில் குறிப்பாக புத்தூர் பகுதியில் வீடுகளுக்குள் சந்தைகள் இயங்குவதாக ஒரு செய்தியாளர் தெரிவித்தார். மேற்படி உத்தியோகப்பற்றற்ற சிறிய சந்தைகள் யாவும் அவற்றின் விளைவுகளை கருதிக் கூறின் மெய்யான பொருளில் கொரோனாத் தொற்றுச் சந்தைகளே என்று ஒரு நண்பர் கூறினார். ஏனெனில் இந்த சிறு சிறு சந்தைகள் யாவும் சில சமயங்களில் வைரஸ் தொற்றுக் கொத்தணிகளாக மாறக்கூடிய வாய்ப்பு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கண்டி வீதியில் போய் நின்று பார்த்தால் தெரியும் டிப்பர்கள் வழமைபோல ஓடுகின்றன. இது இப்பொழுது மட்டுமல்ல உலகத்தொற்றுநோய் பீடித்த நாட்களிலிருந்து எல்லா தொற்றலைகளின் போதும் எல்லா சமூக முடக்கங்களின் போதும் கண்டி வீதி பெருமளவுக்கு பொது சன நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்த நாட்கள் எல்லாவற்றிலும் டிப்பர்கள் மட்டும் போவதையும் வருவதையும் காணலாம். பூநகரி வீதியிலும் அப்படித்தான். ஒரு பெரும் தொற்றுநோய் காலத்திலும் கிளிநொச்சியில் அக்கராயனில் மரங்களை வெட்டி மண் அகழப்படுவதாக கிளிநொச்சியை மையமாகக்கொண்ட முன் சொன்ன ஊடகவியலாளர் தெரிவித்தார். அரசாங்கம் அத்தியாவசிய தேவைகள் என்று சொல்லி ஒரு தொகுதி சேவைகளை பட்டியலிட்டிருக்கிறது.அதன் பிரகாரம் மீன் பிடிக்கலாம் வேளாண்மை செய்யலாம்.கட்டடம் கட்டலாம்.அப்படியென்றால் பிடித்த மீனை எங்கே எப்படி விற்பது?விவசாய விளைபொருட்களை எங்கு எப்படி விற்பது ?இது விடயத்தில் அரசாங்கம் நடமாடும் வியாபாரிகளை அனுமதித்திருக்கிறது. நடமாடும் வியாபாரிகள் ஆங்காங்கே உள்வீதிகளில் சில இடங்களில் வீதியோரங்களில் நின்று சிறு சந்தைகளை திறந்து விடுகிறார்கள். இதுதான் தமிழ் பகுதிகளில் பயணத் தடை அல்லது சமூகமுடக்கத்தின் தொகுக்கப்பட்ட சித்திரமாகும். அப்படியென்றால் பயணத்தடை அல்லது சமூகமுடக்கத்தின் நோக்கம் என்ன ?அல்லது இதை மாற்றியும் கேட்கலாம் அரசாங்கம் சமூகத்தை முழுமையாக முடக்கத் தயாரில்லையா? அதனால்தான் உத்தியோகப்பற்றற்ற விதங்களில் சிதறிப்போன சிறிய சந்தைகளை அல்லது கொரோனா சந்தைகளை கண்டும் காணாமல் விடுகிறதா? ஆம்.அரசாங்கம்,பயணத்தடையையும் சமூகமுடக்கத்தையும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கத் தயங்குகின்றது.ஒருபுறம் பொருளாதார நெருக்கடிகள்;கடன் சுமை;பங்களாதேசிடமே கடன்வாங்க வேண்டிய ஒரு நிலை இன்னொருபுறம் வைரஸ்.போதாக்குறைக்கு கொழும்புத் துறைமுகத்தில் ரசாயனங்களுடன் ஒரு கப்பல் எரிந்து மூழ்கிவிட்டது.இது கடற்றொழில் வாணிபத்தைப் பாதிக்கும்.இப்படியாக பன்முக நெருக்கடிகளுக்குள் அரசாங்கம் ஒரு முழு முடக்கத்துகுப் போகத் தயங்குகிறது. ஆனால் முழு முடக்கமோ அரை முடக்கமோ பாதிக்கப்படுவது அன்றாடம் காய்ச்சிகளும் கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களும்தான். அவர்கள் பொருட்களைத் தேடி வீதிக்கு வருகிறார்கள்.பிரதான சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி படையினரும் போலீசாரும் நிற்கிறார்கள். சிலவேளைகளில் பயணத் தடையை மீறி வருகிறவர்களை அடிக்கவும் செய்கிறார்கள்.ஆனால் உட்தெருக்களில் வாழ்க்கை வழமைபோல இயங்குகிறது. பெருநகரங்களில் இருப்பதைப்போல ஒண்லைன் வினியோகத்துக்கான வலைப்பின்னல்கள் தமிழ் மக்கள் மத்தியில் பலமாக இல்லை. இதனால் ஒண்லைன் வினியோகம் எனப்படுவது சீரானதாக இல்லை. அதிலும் குறிப்பாக சில பூட் சிற்றிகளின் இலக்கங்கள் மக்களுக்கு தரப்பட்டன. ஆனால் அந்த இலக்கங்களுக்கு அழைத்தால் பதில் கிடைப்பதில்லை என்று சனங்கள் முறையிடுகிறார்கள். எனவே ஒருபுறம் உற்பத்தியை அனுமதித்துவிட்டு இன்னொருபுறம் சந்தைகளை மூடுவதன் மூலம் அரசாங்கமே உத்தியோகப்பற்றற்ற விதமாக உள்ளூரில் சிதறிய சிறிய சந்தைகளை ஊக்குவிக்கின்றதா? இந்த வாரம் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில விடயங்களை சுட்டிக்காட்டிப் பேசியிருகிறார்கள். இது தவிர தமிழ்க்கட்சிகளும் தன்னார்வலர்களும் ஆங்காங்கே நிவாரணம் வழங்குவதைக் காண முடிகிறது.எனினும் முன்னைய கொரோனா தொற்று அலைகளோடு ஒப்பிடுகையில் இம்முறை புலம்பெயர்ந்த தமிழ் தரப்பின் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகிறது.லண்டனைச் சேர்ந்த சில புலம்பெயந்த தமிழர்கள் தமிழ்ப்பகுதிகளுக்கு பி.சி.ஆர்.கருவிகளை வழங்க முன்வந்ததாக தெரிகிறது.ஆனால் அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.முதலாவது தொற்றலையின் போது பெருமளவுக்கு அள்ளிக்கொடுத்த புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகம் பிந்திய அலைகளின் போது அந்தளவுக்கு உதவவில்லை என்று தெரிகிறது. அதுபோலவே கட்சிகளும் தன்னார்வ நிறுவனங்களும் முதலாவது அலையின்போது உதவிய அளவுக்கு பின்வந்த அலைகளில் உதவவில்லை. சமூகமுடக்கம் ஒரு பழகிப்போன விடயமாக மாறிவிட்டதே இதற்கொரு காரணம்.ஆனால் இதனால் பாதிக்கப்படுவது அன்றாடம் காய்ச்சிகள்தான். இதுதொடர்பில் அரசியல்வாதிகளும் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் குறிப்பாக சிவில் சமூகங்களும் ஊடகங்களும் மத நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. ஆனால் அவற்றை யார் ஒன்றிணைப்பது? அதைச் செய்யவேண்டியது தமிழ் கட்சிகள்தான்;தமிழ்மக்களுடைய பிரதிநிதிகள்தான்.ஆனால் அவர்களில் அனேகர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது அல்லது தெரிந்தெடுக்கப்பட்ட சில இடங்களுக்கு நிவாரணம் வழங்குவது என்பவற்றுக்கும் அப்பால் சமூகத்திற்கு வழிநடத்த வேண்டிய தமது பொறுப்புகளிலிருந்தும் தவறுகிறார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சமூகமுடக்க காலத்தில் அரசாங்கத்தின் கைகளிலேயே எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு சாதாரண ஜனங்களோடு சேர்ந்து முடங்கிப் போவதற்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை. சமூகம் முடக்கப்பட்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் தெருவில் இறங்கி தமக்கு இருக்கக்கூடிய சிறப்புரிமையை பயன்படுத்தி ஏதோ ஒரு விதத்தில் சமூகத்துக்கு விழிப்பூட்ட வேண்டியது தமிழ் அரசியல்வாதிகளும் மக்கள் பிரதிநிதிகளும்தான். ஆனால் எத்தனை பேர் அதை செய்கிறார்கள்? அல்லது அவர்களால் ஏன் அப்படிச் செய்ய முடியவில்லை? போரினால் சப்பித் துப்பிவிடப்பட்ட மக்களை வைரசுக்குப் பலி கொடுக்கக்கூடாது.அதாவது தொற்றுச் சங்கிலியை உடைக்க சமூக விழிப்பு அவசியம்.ஒருபுறம் வைரசுக்கு எதிராகாகவும் இன்னொருபுறம் சமூக முடக்கத்தை எதிர் கொள்ளவும் தமிழ்ப் பொதுஉளவியலைத் தயார்படுத்த வேண்டும்.தமிழ்க் கட்சிகளுக்கு இதில் பொறுப்பில்லையா? நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது நல்லதுதான்.நிவாரணம் வழங்குவதும் தேவைதான்.ஆனால் அதற்குமப்பால் தமிழ்ப்பொது உளவியலைக் கட்டியெழுப்ப வேண்டும்.அதை சுகாதாரத்துறையும் தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் சிவில் சமூகங்களும் மத நிறுவனங்களும் ஊடகங்களும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். அப்படி ஒரு ஒன்றிணைவை சமூகத்தில் காணமுடியவில்லை. ஒரு சமூகமுடக்க காலத்தில் மக்களுக்கு எப்படி விழிப்பூட்டுவது என்று கேட்கலாம்.இங்கேதான் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். கட்சிகளுக்கு உள்ளூர் வலையமைப்புகள் பலமாக இருந்தால் அதன் மூலம் அந்த விழிப்புணர்வைச் செய்யலாம். உள்ளூர் சந்தைகள் இயங்கலாம் என்றால் உள்ளூர் கடைகளைத் திறக்கலாம் என்றால் உள்ளூரில் வாழ்க்கை வழமைபோல இயங்கலாம் என்றால் ஏன் உள்ளூர் வலையமைப்புக்கள் ஊடாக மக்களுக்கு விழிப்பூட்டக்கூடாது? ஆனால் இங்குள்ள பாரதூரமான வெற்றிடம் என்னவென்றால் கட்சிகளிடம் அப்படிப்பட்ட உள்ளூர் வலையமைப்புகள் பலமாக இல்லை என்பதோடு கட்சித் தலைவர்களிடமும் இது தொடர்பில் தெளிவான தரிசனம் இல்லை என்பதுதான். அவர்கள் தமிழ் அரசியல் என்று விளங்கி வைத்திருப்பது நாடாளுமன்றத்தில் முழங்குவது அல்லது அனர்த்த காலத்தில் நிவாரணம் வழங்குவது. இவற்றுக்கும் அப்பால் ஒரு சமூகத்தின் பொது உளவியலைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பை குறிப்பாக சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பை எத்தனை தலைவர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள்? தமிழ்ச் சமூகத்தை உள்ளூர் உற்பத்திகளை நோக்கியும் வீட்டுத் தோட்டங்களை நோக்கியும் சுத்தமான காற்று சுத்தமான மரக்கறி உடற்பயிற்சி போன்றவற்றை நோக்கியும் தொடர்ச்சியறாத கற்றல் கற்பித்தலை நோக்கியும் ஊக்குவித்து வழிநடத்தி ஒருங்கிணைக்க வேண்டிய ஒரு பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லையா?மிகக்குறிப்பாக நோய்த்தொற்றுச் சங்கிலியை உடைக்கும் விதத்தில் சமூக நெருக்கத்தை சமூகத்திரட்சியை உள்ளூர்ச் சந்தைகளை எப்படித் தற்காப்புணர்வோடு திட்டமிடுவது ? என்பதை குறித்து மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டியது உள்ளூர் தலைவர்கள்தான்;உள்ளூர் தொண்டர்கள்தான்.மேலும் தடுப்பூசி தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித தயக்கம் உண்டு. அந்த தயக்கத்தை நீக்கி தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டு உளவியலை உருவாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு உண்டு. இதுவிடயத்தில் சில கிழமைகளுக்கு முன் விக்னேஸ்வரன் ஓர் அறிக்கை விட்டிருந்தார்.அதிலவர் வடக்கு கிழக்கிற்கு தடுப்பூசிகளை வழங்குமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அது ஒரு வேண்டுகோள் மட்டுமே. அதற்குமப்பால் தடுப்பூசி ஒரு பொருத்தமான தற்காப்பு நடைமுறை என்பதனை மக்களுக்கு தெரியப்படுத்தி மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு இல்லையா? நாடாளுமன்ற உரைகள்,நிவாரணம் போன்றவற்றிற்குமப்பால் ஓரனர்த்த காலத்தில் தமது மக்களின் கூட்டு உளவியலைக் கட்டியெழுப்ப உழைக்காத அரசியல்வாதிகள் எப்படித் தேசத்தைக் கட்டியெழுப்புவார்கள் என்று நம்புவது?   https://globaltamilnews.net/2021/162239/  
  • Director: K.S. Gopalakrishnan Stars: Chittor V. Nagaiah, Varalakshmi S., Pushpavalli
  • கொட்டை எழுத்தில் உள்ளவை 1980, 1990 களில் புலம்பெயர்ந்து வந்தவர்களின் சிந்தனைப்போக்கைப் பற்றியது. அது விசுகு ஐயா, கு.சா. ஐயா போன்றவர்களுக்கு கடுக்கும்தான். 😉 ஆனால் முக்கியமானது என்னவென்றால், ஆய்வு செய்தவர் புலம்பெயர் நாட்டில் பிறந்தவர். அவர் கண்டடைந்தவற்றை ஏற்கும் பக்குவம், காலத்தில் உறைந்தவர்களிடம் வராது. அதனால்தான் இப்படியாக உறைநிலையில் உள்ளவர்கள் தாயகத்துடனும் ஒட்டாமல், புலம்பெயர் நாடுகளிலும் ஒட்டாமல் ஒருவித trance மனநிலையில் உள்ளார்கள்!  எவ்வளவு வேப்பிலை அடித்தாலும், தேசிக்காய் வெட்டி தலையில் தேய்த்தாலும் மாறாது!  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.