Jump to content

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் கைது

 
AFPCopyright: AFP

பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு அதிகாரபூர்வ வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அறையப்பட்டார்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அதில் வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு நடந்து சென்ற போது பச்சை நிற உடை அணிந்த நபர் ஒருவர், அதிபர் மக்ரோங்கின் கன்னத்தில் அறைகிறார்.

உடனே பாதுகாப்பு அதிகாரிகள் நடுவில் புகுந்தனர். அதிபர் உடனே பின் இழுக்கப்பட்டார்.

இது தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த நபர் அதிபர் மக்ரோங் கன்னத்தில் அறையும் போது, “மக்ரோங் ஒழிக” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்கை கன்னத்தில் அறைந்த நபர் கைது - தமிழில் செய்திகள் (bbc.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஜனநாயக உரிமை கூட 
பிரஞ்சு குடிகளுக்கு இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களோடு கலந்து இருக்கின்றோம் என்று காட்டுவது போல் நடந்து இது போன்ற ஆபத்துக்கள் அவமானங்களில் மாட்டி விடுகிறார்கள். இனியாவது ஐனாதிபதிக்குள்ள பாதுகாப்பு மற்றும் சுய கட்டுப்பாடுகளை மதித்து நடக்கட்டும்.

(தலைவரின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு எடுத்துக்காட்டு.)

Link to comment
Share on other sites

இதற்கு முதல் இருந்த  ஜனாதிபதியும் அடி வாங்கியுள்ளார் அல்லவா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாட்டில் இப்படியான நிகழ்வுகள் நடைபெறச் சாத்தியம் இல்லை.
மக்களுடன் மக்களாக வாழும் அரசியல்வாதிகளும் தலைவர்களும் ஒரு நம்பிக்கையில் இப்படி நடந்துகொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ்லை சேட்டை கொஞ்சம் கூடப்போல தான் கிடக்கு 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறு கன்னத்தை காட்டினாரா🤣

இதுக்கு இங்கிலாந்தின் முன்னாள் உதவி பிரதமர் செய்வது போல் செய்யவேண்டும்.

மனிசன் உழைக்கும் வர்க்க ஆள். பழைய துறைமுக தொழிலாளி. பாக்ஸரும். ஒருவர் முட்டை அடிக்க- திருப்பி கொடுத்தார் ஒரு ராணி காமிக்ஸ் மாயாவி ஸ்டைல் குத்து🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.