Jump to content

அரசியல் தஞ்சம் கோரிய 20 தமிழர்களை இன்று நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தஞ்சம் கோரிய 20 தமிழர்களை இன்று நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி

ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் சுமார் 20 பேரை இன்று புதன்கிழமைபலவந்தமாக நாடுகடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பெருந்தொகையான தமிழ் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தார்கள்.

german-refugess-300x225.jpg

ஜேர்மனியிலிருந்து இவ்வருடம் இரண்டாவது தடவையாக இன்று இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படவுள்ளார்கள். இதற்கு எதிராக பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு, வேறு பல மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து ஜேர்மனியின் போட்சைம் ((Pforzheim) நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டத்தை நேற்று முன்தினம் மாலையிலிருந்து முன்னெடுத்து வருகிறது.

இரவு பகலாகத் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்தப் போராட்டம் இன்று மாலை வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.

கடுமையான மழை மற்றும் குளிருக்கு மத்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஜேர்மன் நாட்டு மக்களும் பங்கெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 4.00 மணி முதல் பிராங்போர்ட் விமான நிலையத்தைச் சூழ்ந்து போராட்டத்தை நடத்துவதற்கும் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன என்று தெரியவருகின்றது.

பிராங்போர்ட் விமான நிலையத்தின் ஊடாகவே குறிப்பிட்ட 20 தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களும் நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி சுமார் 25 இலங்கைத் தமிழ் அகதிகளைப் பலத்த எதிர்ப்புகளின் நடுவிலும் ஜேர்மனி பலவந்தமாக நாடு கடத்தியிருந்தது. விமான நிலையத்தை சுற்றிவளைத்து தமிழர்கள் போராட்டம் நடத்திய போதிலும், இரகசியமாக அவர்கள் விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

இதேவேளையில், பிரேமன் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த விராஜ் மென்டிஸ் எடுத்த முயற்சியில் இன்று நாடு கடத்தப்படவிருந்த செல்லத்துரை என்ற தமிழ் அகதி நேற்று மாலை விடுதலை செய்ப்பட்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.
 

https://thinakkural.lk/article/123762

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் Pforzheim தடுப்பு முகாமைச் சுற்றிக் கடும் பதற்றம் – காவல்துறையினர் குவிப்பு

 
WhatsApp-Image-2021-06-09-at-12.42.50-PM
 96 Views

நாடுகடத்தலுக்காக ஈழத்தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போட்ஸ்ஹைம்  (Pforzheim) தடுப்பு முகாமுக்கு எதிரில் கடந்த 70 மணித்தியாலங்களாக தமிழ் மக்களும் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர்களும் மிக அதிகளவில் திரண்டு திட்டமிடப்பட்ட நாடுகடத்தலைத் தடுப்பதற்காக தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.

WhatsApp-Image-2021-06-09-at-12.23.13-PM

இந்தச் சூழ் நிலையில் தற்போது தடுப்பு முகாம் அமைந்துள்ள இடத்தில் ஜேர்மனி நாட்டுக் காவல் துறையினர் அதிகமாகக் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு பகுதிகளாக ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியாதவாறு தடுக்கப் பட்டிருக்கிறார்கள்.

WhatsApp-Image-2021-06-09-at-12.46.41-PM

பன்னிரண்டு ஈழத்தமிழ் அகதிகளை ஏற்றிச்செல்ல வாகனம் ஒன்று தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாகனம் செல்லவிடாமல் தடுப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள்.

WhatsApp-Image-2021-06-09-at-12.22.33-PM

இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து தலைமை தாங்கிவரும் சகோதர இன ஊடகவியலாளர் விராஜ் மென்டிஸ் தானும் கைதுசெய்யப்படலாம் என்று இலக்கு ஊடகத்துக்குத் தற்போது தெரிவத்திருக்கிறார்.

 

 

https://www.ilakku.org/?p=51916

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் அகதிகளில் ஒரு பகுதியினர் ஏற்றிச் செல்லப் பட்டிருக்கின்றனர் – மனித உரிமை ஆர்வலர் விராஜ் மென்டிஸ்

 
WhatsApp-Image-2021-06-09-at-12.22.33-PM
 189 Views

ஜேர்மனியிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து பிரேமன் மனித உரிமை அமைப்பும் ஏனைய சில அமைப்புகளும் இணைந்து ஜேர்மனியில் போட்ஸ்ஹைம் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கு எதிரில் கடந்த திங்கள் மாலையிலிருந்து ஒரு தொடர் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.

மனித உரிமை ஆர்வலர் விராஜ் மென்டிஸ் இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிவருகிறார். அவர் தற்போது அனுப்பி வைத்துள்ள செய்தியைக் கீழே தருகிறோம்.

“ஒரு வாகனம் தடுப்பு முகாமுக்கு உள்ளே வந்து அகதிகளில் ஒரு பகுதியினரைக் கொண்டு சென்றிருக்கிறது. அந்த வாகனத்தைச் செல்லவிடாமல் தடுக்க நாங்கள் முயற்சித்தோம். ஆனால் காவல்துறையினர் எங்களைத் தள்ளிவிட்டபின் வாகனம் வெளியேறியது.

வாகனம் சிறியதாக இருக்கின்ற படியால் மேலும் சில தமிழ் அகதிகள் உள்ளே இருக்கலாம் என எண்ணுகிறோம். அதனால் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.

அண்மையில் சிறீலங்காவுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வந்திருக்கும் ஜேர்மன் இனத்தவர்கள் நால்வரைக் கொண்ட குழுவில் மூவரின் கடவுச்சீட்டு விபரங்களை காவல்துறையினர் எடுத்திருக்கிறார்கள்.”

மேலும் தகவல்களுக்கு https://humanrights.de/ என்ற இணையத்தை பார்வையிடலாம்…

 

 

https://www.ilakku.org/?p=51933

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.