Jump to content

ஆஸ்திரேலியா கிறிஸ்துமஸ் தீவில் தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்குமா அரசு?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது. அந்த தம்பதியின் பிள்ளைகளில் ஒருவரான மூன்று வயது தாருணிகா உடல் சுகவீனம் அடைந்ததால் பிரதான நிலப்பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அந்த சிறுமி பெர்த் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை அளவீடுகள் தற்போது நிலையாக உள்ளன என்று அகதி குடும்பத்துக்காக நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், 10 நாட்களாக நோய்வாய்பட்ட சிறுமிக்கு உரிய நேரத்தில் போதிய சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்காக அவர்கள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர்.

தாருணிகாவுக்கு உடல்நிலை மோசமானதால் முதலில் அவரை கிறிஸ்துமஸ் தீவில் உள்ள மருத்துவமனையிலேயே அதிகாரிகள் சேர்த்தனர். பின்னர் அவர் பெர்த் நகர மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவரது தாய் பிரியா நடேசலிங்கம், "மகளுக்கு உடல்நிலை மோசமானது முதல் பாரசிட்டமால் மாத்திரை தாருங்கள் அல்லது மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று கோரியதாக கூறினார். கடைசியில் மருத்துவர்கள் பாரசிட்டமால் மாத்திரையும் ஐபுப்ரோஃபென் மாத்திரையும் கொடுத்ததாக தெரிவித்தார்.

தீவில் உள்ள குடும்பத்துக்கு போதுமான பராமரிப்பு வழங்கப்படுவதாக ஆஸ்திரேலியா அரசு அதிகாரிகள் பிபிசியிடம் கூறினர். தீவில் இருந்தபோதே தாருணிகாவுக்கு போதிய சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் தரப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

"தனி நபர்களின் மருத்துவ பராமரிப்பு விவகாரத்தில் அவர்களுக்கு போதிய சிகிச்சை தரப்படவில்லை அல்லது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய எல்லை படை முற்றிலுமாக நிராகரிக்கிறது," என்று அதன் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

அகதிகளின் சட்டப்போராட்டம்

இந்த நிலையில், மூன்று வயது பெண் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது மற்றும் அதன் குடும்பம் அடைக்கலம் கோரிய வழக்கு தொடர்பான விவகாரம் பொதுமக்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்திருக்கிறது.

தாருணிகாவின் பெற்றோர் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் கோரி வந்த தமிழ் அகதிகள். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் படகு மூலம் தப்பி வந்தார்கள். குவீன்ஸ்லேண்ட் பகுதியில் உள்ள பிலோவீலா பகுதியில் இவர்கள் குடியேறினார்கள். அங்குதான் நடேஸ் முருகப்பன், பிரியா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கோபிகா (6), தாருணிகா (3) ஆகியோர் பிறந்தனர்.

எனினும், இந்த குடும்பம் பல்வேறு நீதிமன்றங்களில் இவர்களுக்காக சட்டப்போராட்டம் நடந்தது. கடைசியில் இந்த குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் 2019ஆம் ஆண்டில் அடைக்கப்பட்டனர். அங்குதான் அனுமதியின்றி ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த நிலையில், சமீபத்தில் சுகவீனம் அடைந்த தாருணிகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால் அவருடன் அவரது தாய் பிரியா இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், தாருணிகாவின் தந்தை நடேஸும் சகோதரி கோபிகாவும் கிறிஸ்துமஸ் தீவிலேயே இருக்க நிர்பந்திக்கப்ட்டார்கள்.

அடைக்கலம் தேடி வந்த அகதி குடும்பம் இப்படி கஷ்டப்பட வேண்டுமா என்ற குரலை இவர்களுக்காக வாதிடும் செயல்பாட்டாளர்கள் முழங்க, இந்த விவகாரம் தற்போது ஆஸ்திரேலியா முழுவதுமாக பெரிதாகியிருக்கிறது. இந்த குடும்பத்தை கிறிஸ்துமஸ் தீவில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினரும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கோருவோருக்கு விசா வழங்குவதற்கான அதிகாரம் உள்துறை அமைச்சர் கெரென் ஆண்ட்ரூஸிடம் உள்ளது.

அந்த துறையின் செய்தித்தொடர்பாளர் கிறிஸ்டினா கெனியல்லியும், இந்த குடும்பம் தடுப்பு முகாமில் இருப்பதை விட அவர்களின் சமூகம் வாழும் பில்லோவீலாவிலேயே இருப்பதே சரி என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இந்த நிலையில், நடேஸ், பிரியா தம்பதி மற்றும் அவர்களின் குழந்தைகளை நியூஸிலாந்துக்கோ அமெரிக்காவுக்கோ மீள்குடியேற்றம் செய்யும் வாய்ப்பை பரிசீலித்து வருவதாக ஆஸ்திரேலிய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தை அரசு தரப்பு தொடர்பு கொள்ளவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர் கெரினா ஃபோர்ட் தெரிவித்தார். இருந்தபோதும், உடனடி நடவடிக்கையாக அந்த குடும்பத்தை குவீனஸ்லேண்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்களின் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

"பில்லோவீலாவிலேயே சிறப்பான மீள்குடியேற்ற வாய்ப்பு உள்ளது. எனவே அமைச்சர் கெரென் ஆண்ட்ரூஸ் தமது அதிகாரத்தை பயன்படுத்தி நமது நண்பர்கள் தாங்கள் பாதுகாப்பாகவும் நேசிக்கும் இடத்திலும் இருக்க உதவ வேண்டும்," என்று #HomeToBilo என்ற ஹேஷ்டேக்குடன் இந்த தமிழ் குடும்பத்தின் பாதுகாப்பான மீள் குடியேற்றத்துக்காக நெட்டிசன்கள் குரல் கொடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கடுமையான கொள்கை

கிறிஸ்துமஸ் தீவு

பட மூலாதாரம்,HOMETOBILO CAMPAIGN

ஆஸ்திரேலியாவில் கடுமையான அகதிகள் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி படகு மூலம் நாட்டுக்குள் வர முற்படுவோரை அகதியாக கருதி அடைக்கலம் வழங்குவதை அந்நாட்டு அரசின் விதிகள் அனுமதிப்பதில்லை.

மேலும், படகு மூலம் ஒரு நாட்டில் இருந்து மக்கள் கடத்தப்பட்டு வரும் வழக்கத்தை நிறுத்தவே இந்த கொள்கை கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது. ஆனால் அரசின் இந்த போக்கு, அகதிகள் உரிமைகளை மீறும் வகையில் இருப்பதாக மனித உரிமைகள் குழுக்கள் விமர்சித்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதியாக தஞ்சம் கோருவோரை பிரதான நிலப்பகுதிக்குள் சேர்க்காமல் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கும் திட்டத்தை 2013இல் ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், அப்போதே அடைக்கலம் கோரி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். பிரதான நிலப்பகுதி நீதிமன்றங்களிலும் அகதிகள் விவகாரங்களை கவனிக்கும் துறைகளிலும் இவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் மனுக்கள் ஆண்டுக்கணக்கில் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையுடன் இன்னும் அந்த தீவிலேயே சில அகதிகள் காத்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா கிறிஸ்துமஸ் தீவில் தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்குமா அரசு? அதிகரிக்கும் அழுத்தம் - BBC News தமிழ்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிறீஸ்மஸ் தீவு detention centerல் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் இவர்கள் இருவர் மாத்திரமே சிறுவயதினர்.. மிகவும் வேதனையளிக்கிறது.. அவர்களது Himetobilo இணையத்தில் வரும் ஆதரவை பார்க்கும் பொழுது தைரியம் வந்தாலும்.. முடிவு எப்படியாகும் என தெரியவில்லை..

இவர்களது வழக்கு பற்றி The Conversationல் வந்த பதிவினை இணைக்கிறேன்..

https://www.google.com.au/amp/s/theconversation.com/amp/as-a-young-child-is-evacuated-from-detention-could-this-see-the-biloela-tamil-family-go-free-162289

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான அடிப்படையே இல்லாத குடிவரவுச் சட்டம் அவுஸினுடையது. நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் இந்தக் குடும்பத்திற்குத் தஞ்சம் வழங்குவதும் எதிர்காலத்திட்டத்தில் இருப்பதாக ஒரு பி.பி.சி செய்தியில் பார்த்தேன்.

இவர்கள் அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்தால் அகதித் தஞ்சம் (asylum) வழியே வரவேண்டும் - அப்படி வந்தால் மட்டுமே நிரந்தர வதிவிடம் கிடைக்கும். தற்காலிக பாதுகாப்பு (TPS) என்ற வழியில் வந்த அகதிகளுக்கு நிரந்தர வதிவிடம் வழங்க முடியாது என்று நேற்றைய தீர்ப்பொன்றில் அமெரிக்க உச்ச நீதி மன்றம் ஒரு மனதாகத் தீர்ப்பளித்திருக்கிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா: தமிழ் அகதி குழந்தைக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தல்

 
1-31-696x522.jpg
 14 Views

அவுஸ்திரேலிய அரசினால் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அகதி குழந்தையான தருணிகா மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைப்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அக்குழந்தைக்கு ஆதரவாக பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இக்குழந்தைக்கு ஆதரவாகவும் இக்குழந்தைக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் Home to Bilo மற்றும் Refugee Rights Action Network அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தும் அமைதியானப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

முன்னதாக கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பம் அகதிகளாக தகுதிப் பெறவில்லை என்றும் அவுஸ்திரேலியா தனது வலுவான எல்லைக் கொள்கையை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் அவுஸ்திரேலிய தேசியக் கட்சியின் மேலவை உறுப்பினர் மேட் கேனவன்.

அவுஸ்திரேலிய அரசால் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பமான பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவரது குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் இப்படியொரு கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.

 

https://www.ilakku.org/?p=52013

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேற்று சிட்னி Hyde Parkலும் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான போராட்டத்தை நடத்தியிருந்தார்கள்.. மேலும் மேற்கு அவுஸ்ரேலிய Primerம் குயின்ஸ்லாந்து Premierம் இவர்களை அவுஸ்ரேலியாவிற்குள் அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்கள்.. ஆனாலும் நம்பிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.. 

 https://www.google.com.au/amp/s/amp.news.com.au/national/queensland/news/family-of-tamil-asylum-seekers-deserves-to-know-their-future-says-qld-premier/news-story/b51fdad7efef5664559389af6b135037

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஆஹா அருமையான ஊஞ்சல் 🍌சாப்பிட்டு விட்டு ஆடுங்க
  • திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுக்குத் தெற்கே உள்ள பகுதியை மானவீர வளநாடு என்று சொல்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ளது அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில். ஐயனார் பலர் இருந்து வருகின்றனர். அவர்களுள் ஒருவர் அருஞ்சுனை காத்த ஐயனார். மானவீர வளநாட்டில் இடையர் குலத்தில் ஒரு விதவைப் பெண் இருந்தாள். அவள் சிறுவயதிலேயே தன் கணவனை இழந்தவள். அது முதற்கொண்டு வேறு ஆணைப் பார்த்துக் கூட அறியாதவள். விடிவதற்கு முன்பாகவே எழுந்து ஊருக்கு அருகில் இருக்கும் சுனைக்குச் சென்று குளித்து அங்கிருக்கும் ஐயனாரை வழிபட்டு, சுனையில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்துவிடுவாள். அந்தச் சுனையில் கரையில் ஒரு மாமரம் இருந்து வந்தது. அதில் ஒரே ஒரு மாங்கனி இருந்தது. அதை மிகவும் கவனமாகக் காத்து வந்தனர் அந் நாட்டுக் காவலர்கள். அந்த மாங்கனிக்கு அப்படியொரு மகத்துவம் இருப்பதாக அந் நாட்டு அரசவையில் இருக்கும் சோதிடன் சொல்லி வைத்ததால் அரசனும் அம் மாம்பழத்தைக் காக்க வேண்டும் என்று காவலர்களை நியமித்திருந்தான். அங்கு மாமரம் இருக்கின்றது. அதில் எத்தனை பழம் இருக்கிறது என்றெல்லாம் அந்த விதவைப் பெண்ணுக்குத் தெரியாது. அவள் எப்போதும் போல் அன்றும் சுனைக்குச் சென்று குளித்துவிட்டு ஐயனாரை வழிபட்டுத் தான் கொண்டு சென்ற குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு விடிவதற்குள் வீடு திரும்பிவிட்டாள். விடிந்ததும் காவலர்கள் வந்தனர். சுற்றிப் பார்த்தனர் யாரும் இல்லை. மாமரத்திடம் வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நேற்று மாலை வரை இருந்த மாம்பழத்தை இன்று காணவில்லை. இது அரசனுக்குத் தெரிந்தால் நம் தலை தப்பாது என்று, காவலர்கள் அருகில் இருக்கும் இடையர்குடிக்கு ஓடினார்கள். அங்கிருந்தவர்களையெல்லாம் அழைத்து மாம்பழத்தைத் திருடியவர்கள் யார் என்று மிரட்டினார்கள். ஒரு பாவமும் அறியாதவர்கள் விழித்தனர். ''எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் அந்தச் சுனை பக்கம் கூடப் போவதில்லை'' என்று சொன்னார்கள். ''உண்மையைச் சொல்லவில்லை என்றால் அரசனிடம் சொல்லி ஊரையே அழித்துவிடுவோம்'' என்று காவலர்கள் மிரட்டினர். அந்த விதவையின் தாய் தந்தையருக்குப் பயம் அதிகமாகிவிட்டது. ''ஐயா எங்கள் மகள் அந்தச் சுனைக்குப் போவாள். தண்ணீர் கொண்டு வருவாள். ஆனால், இந்த மாதிரிக் காரியம் எல்லாம் செய்யமாட்டாள்'' என்று கூறினர். காவலர்களுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போல் ஆனது. பழியை அவள் மீது போட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் ''சரி அவளைக் கூட்டி வாருங்கள்'' என்றனர். விதவையின் தாய் தந்தையர் பயந்து போயினர். ''ஐயா, என் மகள் இதுவரை எந்த வேற்று ஆணையும் பார்த்ததில்லை. பகலில் அவள் எங்கும் வெளியில் வருவதில்லை. நீங்கள் வேண்டுமானால் எங்கள் வீட்டில் வந்து சோதனை செய்து பாருங்கள்'' என்றனர். உடனே காவலர்களும் அவர்களின் வீட்டிற்குப் போய்த் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. அவள் தண்ணீர் கொண்டு வந்த குடத்திலும் தேடினர். பார்த்தால் அதில்தான் மாம்பழம் இருக்கிறது. மாம்பழத்தைக் கண்டெடுத்த மகிழ்ச்சியில் கோபமும் சேர்ந்து கொள்ள காவலர்கள் சத்தம் போட ஆரம்பித்தனர். ''பழத்தைத் திருடிக் கொண்டு வந்ததல்லாமல் அறைக்குள் ஒளிந்திருக்கிறாளா? அவளை வெளியே வரச் சொல்லுங்கள்'' என்று சத்தமிட்டனர். விதவையின் தாய் தந்தையருக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி எப்படியோ கெஞ்சிப் பார்த்தனர். காவலர்கள் விடுவதாக இல்லை. என்ன செய்வது? எப்படி அந்த மாம்பழம் தன் குடத்துக்குள் வந்தது என்று ஒன்றும் விளங்காமல் தவித்தாள் விதவை. பாவம் அவள் தண்ணீர் எடுக்கும்போது அவளுக்கும் தெரியாமல் மாம்பழம் குடத்துக்குள் வந்தது அவளுக்கெப்படித் தெரியும். அரசனுக்கு முன் நின்று நியாயத்தைச் சொல்வதென்று முடிவெடுத்து அரசவைக்குப் போனாள். அரசவை கூடிவிட்டது. காவலர்கள் ''மாம்பழத்தைத் திருடியவள் இந்தப் பெண்தான்'' என்று கூறினர். விதவைப் பெண், ''ஐயா, நான் சுனையில் குளித்து, தண்ணீர் எடுத்து வருவேனே தவிர அங்கு மாமரம் இருந்ததையோ, அதில் மாம்பழம் பழுத்திருந்ததையோ நான் அறியேன்'' என்றாள். காவலர்கள், ''இவள் மட்டுமே அங்கு போவாள். வேறு யாரும் அந்தத் திசைக்குக் கூடப் போனதில்லை. மேலும் அந்தப் பழத்தை இவள் தண்ணீர் கொண்டு வந்த குடத்திலிருந்து எடுத்தோம்'' என்று கூறினர். விதவையால் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்குத் தண்டனை கொடுப்பது என்று அரசவை முடிவெடுத்தது. ஐயனார் மாற்றுருவில் தோன்றி அரசனிடம் அவள் குற்றமற்றவள் என்று கூறினார். விதவைக்குத் தனக்காக வந்து சாட்சி சொன்னது ஐயனார் என்று தெரிந்தது. அரசவை, ஐயனாரின் சாட்சியை ஏற்காமல் தண்டனை கொடுத்தது. கோபம் கொண்ட அந்த விதவைப் பெண், ''என் மேல் அபாண்டமாகக் குற்றம் சாட்டியதால் இந்த நாடே மண்மாரி பொழிந்து அழிந்து போகும். எனக்காக நியாயத்தைச் சொன்ன ஐயனார், ஐயனாரின் சுனை தப்பிக்கும்'' என்று கூறி மண்வாரித் தூற்றினாள். மண்மாரி பொழிந்து நாடே அழிந்தது. ஐயனாரும் சுனையும் தப்பின. அந்தப் பத்தினி விதவையிடமிருந்து சுனையைக் காத்ததால் ஐயனார் அருஞ்சுனை காத்த ஐயனார் என்ற பெயர் பெற்றார்.படித்ததில் பிடித்தது  
  • வெள்ளைக்கார துரை தான்... கள்ளத்தோணியிலை  போக, கடற்கரையில் நின்றிருக்கிறார். 
  • முருகப் பெருமானுக்குரிய விரதங்களும், விழாக்களும் முருகப் பெருமானை ஆராதிக்கும் மூன்று முத்தான விரதங்கள் விரத நூல்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன. வார விரதம் ஒன்றும், (சுக்கிரவாரம் அல்லது வெள்ளிக்கிழமை விரதம் ) திதி விரதம் ஒன்றும் (கந்தசஷ்டி விரதம்), (நட்சத்திர விரதம் - கார்த்திகை விரதம்)என அவை அமைகின்றன. முருகப்பெருமானை வணங்கி அருள் பெறுவதற்குரிய விரதங்களை சிறப்பாக ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வோம்.உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம். இகம், பரம், வீடுபேறு இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான். இந்த மூன்று நலன்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேள். பால் பாயசத்தை ஒரு கரண்டியைக் கொண்டு தானே படைக்கின்றோம். அது போல் இக நலனை வள்ளி தேவியைக் கொண்டும், பரநலனை தெய்வயானை அம்மையைக் கொண்டும், முக்தி நலனை வேலாயுதத்தைக் கொண்டும் நமக்கு அருள் புரிகின்றான் முருகன். எனவே முருகப் பெருமானை பயன்கருதாது மெய்யன்புடன் வழிபடுவோர் இகம், பரம், வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்று செம்மையுறுவார்கள். பாவம் நிறைந்த கலையில் கண்கண்ட தெய்வமாகக் கலியுகவரதனாக விளங்குபவர் கந்தவேள், முருகனை ஞானிகள் தமது ஞான வழியால் கண்டார்கள். அழகு உறையும் குன்றுகளிலெல்லாம் கோலக்குமரன் கொலுவீற்றிருப்பதாகக் கொண்டு ஆங்காங்கு அவனுக்கு விழாவெடுத்து வழிபடுகின்றோம். அழகுக் கடவுளாக உறையும், முருகனை தமிழ்க் கடவுளாக நாம் கொண்டோம், முத்தமிழால் வைதாரையும், வாழவைப்பான் முருகன் என்பர் அருணகிரியார். அத்தகைய பெருமையும், அருளும் நிறைந்த முருகனுக்குரிய விரதங்கள் விழாக்கள் பற்றிச் சிறப்பாக நோக்குவோம். சுக்கிரவார விரதம் சுப்பிரமணியக் கடவுளை வேண்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கைக் கொள்ளப்படும் இந்த விரதம் ஐப்பசி மாத முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கப்படும். உபவாசமிருத்தல் உத்தமம். அது இயலாதவர்கள் பால் பழமாவது பலகாரமாவது இரவு ஒரு நேரம் கொள்ளலாம். அதுவும் முடியாவதர்கள் பகல் ஒரு பொழுது போசனம் செய்க. மூன்று வருட காலம் அநுஷ்டித்த பின் விரத உத்யாபனம் செய்யலாம். கார்த்திகை விரதம் கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானைக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் இது. உபவாசம், உத்தமம், இயலாதோர் இரவில் பால், பழம், பலகாரம் உண்ணலாம்.அதுவுமியலாதோர் பகலொருபொழுது போசனம் செய்க, பன்னிரண்டு வருடங்கள் இவ்விரதமநுஷ்டித்த பின் உத்யாபனம் செய்யலாம். திருக்கார்த்திகை விரதத்துக்கு இஸ்தமன வியாபகம் முக்கியம். அதாவது மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும். திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத்தில் தீபங்களை ஏற்றிவைத்து சோதிவடிவில் இறைவனை வழிபடுவர். சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுது அவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார்.அதனை நினைவு கூர்ந்தே கார்த்திகைத் தீபநாள் கொண்டாடப்படுகின்றது. திருவண்ணாமலைத் தலத்திலே மலையுச்சியிலே பெருந்தீபம் ஏற்றப்படுகின்றது. பல ஊர்களிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் இறைவனது சோதி வடிவைத் தரிசிப்பார்கள் குன்றின் மேலிட்ட தீபம் என்பதும் மலை விளக்கு ஆகிய மரபுச் சொற்றொடர்கள் நீண்ட காலம் இவ்வழக்கு இருந்ததைக் காட்டுகின்றன. "மைம்மிசை யின்றி மலைவிளக்குப் போலோங்கி செம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள்" என்று தொல்காப்பியம் புறத்திணை 85 இல் வருவதும். "முடநடைப் பறவையு மாய விலங்கு முடிமலர் முடிக்காடவைமுறை போகா’’ என்று சங்க புலவர் பொய்கையார் கூறுவதும் "வானம் ஊர்ந்த வளங்கொளி மண்டிலம் நெருப்பெனச்சிவந்த உருப்பு அவிர் அம்கட்டு’’ என்னும் ஒளவையார் கூற்றும் (அகநாநூறு) ம் கூறுகின்றன.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.