Jump to content

கொரோனா நோயாளிகளை ஏற்றிவந்த பஸ் மோதியதில் விவசாயி மரணம் – மட்டுவிலில் பதற்றம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயம் செய்வோர் விவசாயிகள் திணைக்கள அடையாள அட்டையோடு வெளியால போகலாம்.

விபத்துக்கு ஆளான முதியவர் காது கேட்கும் தன்மை குறைவானவரா இருக்கலாம்.

வெளிநாட்டில் இருந்து வருவோரை 14 நாள் தனிமைப்படுத்தலிற்காக அழைத்து வந்ததாக தெரிகிறது. இலவச, கட்டணம் செலுத்தும் தனிமைப்படுத்தல் மையங்கள் அரசு/இராணுவத்தால் நடத்தப்படுகிறது. இதனை விட கட்டணம் செலுத்தி தெரிவு செய்யப்பட்ட ஹொட்டல்களிலும் தங்கலாம். 

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
On 12/6/2021 at 00:01, putthan said:

நோயிலும் நாங்கள் தேசியத்தையும் ,நல்லிணக்கதையும் கடைபிடிக்கிறோம்....என சிங்கள மக்களுக்கு சொல்லியினம் அவையளும் நம்பி அடுத்த தேர்தலில் வாக்கு போடுவினம்

அடடா!! அதுதான் சிங்கள நோனாக்களிலும், தேசியம் ,நல்லிணக்கம் கடைப்பிடிகும் கருனாவுக்கு இத்தனை வரவேற்போ.?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

என்ன தான் @தனிக்காட்டு ராஜான்னாலும் இப்படி தனியா வந்து மாட்டி இருக்க கூடாது.

இப்ப பாருங்க கிட்னிய பிதுக்கி எடுத்திட்டாங்கல்ல?

கோஷான் ஒரு ஓரமா உக்காந்து டி குடிக்கும் போதே யோசிசிருக்க வேணாம்?

நான் போட்ட மீமுக்கு சிரிப்ப வேற போட்டுட்டு போய் மாட்டீருக்கீங்களே. என்ன புள்ளையா நீர்.🤣

இதைதட தான் சொல்லுறது கூப்ப்பிட்டு வைத்து கும்முறது என்டு.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

நீங்கள் இலங்கையில் வாழ்கிறீர்கள் என்பதற்காக அதிகம் அநியாயங்களுக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது. இதே நீங்கள் ஒருவேளை அரபுலகிலோ.. ஐரோப்பாவிலோ.. கனடா அமெரிக்காவிலோ.. அவுஸி.. நியூசிலாந்திலோ வாழ்ந்திருந்தால்.. நிச்சயமாக.. இப்படி கருத்தெழுதி இருக்கமாட்டீர்கள்.

கொரோனா மரணங்களில் 125,000 மேல் மரணத்தைக் கண்ட நாட்டில் வாழ்ந்தாலும்.. இப்படி கொரோனா தோற்றாளர்கள் ஊர் விட்டு ஊர் கடத்தும் நடவடிக்கையை சொறீலங்கா சிங்கள இராணுவ அரசைத் தவிர வேறு எவரும் செய்யவில்லை. நோய் தொற்றாளர்களை அவர்கள் வாழும் வீட்டுக்குள் ஊருக்குள் தான் முடக்கினமே தவிர.. தொற்றாளர்கள் ஊர் விட்டு ஊர்.. பிரதேசம் விட்டு பிரதேசம்.. கொண்டு போகவில்லை.

அண்மையில் முழுத்தீவானா நயினாதீவிற்கு எப்படி கொரோனா நுழைந்தது. ஊரே அறியும் அதன் பின்னணி. இறுதியில் ஆலயக் குருக்கள் அதற்குப் பலி. 

சொந்த ஊருக்குள் ஒருவர் சைக்கிளில் போவது பயணத்தடைக்குள் வருமென்றால்.. நோய் தொற்றாளர்களை பிரதேசம் விட்டு பிரதேசம் கடத்தும் செயல் ஏன் அந்த பயணத் தடைக்குள் வரவில்லை. ஆம் அதையிட்டு கேள்வி கேட்க முடியாது. ஏனெனில்.. சுகாதார சேவை செய்ய வேண்டிய பணியை செய்வது இனப்படுகொலை இராணுவமும் பொலிஸும் அல்லவா.

என்றாலும்.. நீங்கள் இந்தளவுக்கு பயந்து வாழனுன்னு இல்லை. ஊரில் உள்ள எத்தனையோ மக்கள் இதனை அநியாயம் என்றே சொல்கிறார்கள். ஆனால்.. நீங்கள் அநியாயத்துக்கு நியாயம்..கற்பிப்பது மிகவும் அநியாயமானது. 

.

நெடுக்கு இது அநியாய‌ சாவே தவிர அதை நான் நியாயப்படுத்தவில்லை இது விபத்து . விபத்து நடப்பது சகஜம் குறிப்பாக ஏன்  வடக்கில் அதிக விபத்து நடக்கிறது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா?? கேட்டால் சதி என்பீர்கள் இதைத்தான் உங்களிடம் எதிர் பார்க்க முடியும் யுத்தத்தால் கொன்றது போக மீதியானவர்களை விபத்தால் கொல்கிறது என்றும் சொல்வீர்கள் . ஊர்களுக்கு கொரோனோ காப்பகங்கள் வர சில இடங்களில் எதிர்ப்புகள் இருக்கு நீங்கள் மட்டக்களப்பில் பொரோனோ நோயாளர்களை கொண்டு வரக்கூடாது என ஆர்ப்பாட்டம் நடந்ததை அறிந்திருப்பீர்கள் 
அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளம் அதிக சன நெருக்கடியான பிரதேசங்களில் முகாம்களை அமைத்து அதை செயற்படுத்த முடியாமலும் அரசு மாற்றி இருக்கலாம் 

நான் அமெரிக்காவில் இருந்தாலும் சரி அரபுலகில் இருந்தாலும் சரி நீங்கள் சொன்ன்மாதிரியே எழுதியிருப்பேன் காரணம் உண்மை தெரியாமல் எழுதி இருக்கலாம் , அரசுக்கு வெள்லையடிச்சு எனக்கு என்ன அவாடா கொடுக்கப்போகிறது அரசு ?? வளர்ச்சி யடைந்த நாட்டில் 125000 மரணங்கள் என்பன உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம் இங்கு ஒருவருக்கு தொற்று என்றால அந்த ஏரியா முடக்கம் அந்த பெரியவருக்கு தொற்று ஏற்பட்டு அந்த இடமே தொற்றாளர் கொத்தணி ஆகிவிடக்கூடாது என்பதற்க்காகவே அரசு பயணத்தடை விதித்துள்ளது 

18 hours ago, குமாரசாமி said:

கொரோனா சகலருக்கும் சமமானது. இதில் கேள்வி என்னவென்றால் கொழும்பிலிருந்து இவ்வளவு தூரம் கடந்து ஏன்  கொரோனா நோயாளிகளை தமிழர் பகுதிகளுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே.

முதியவரின் மரணம் அது விபத்தாக இருக்கலாம்.

அநேகமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கோட்டல்களில் தங்க வைக்கப்படுகிறார்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்கள் மத்திய கிழக்கிலிருந்து வருபவர்கள் ஊசிபோட்டவர்கள் போடாதவர்கள் என பிரித்து தூர இடங்களில் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் தனிமைப்படுத்தலுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாதவூரான் said:

தனி,
அப்ப பாஸ் இல்லாமல் வெளியாலை போனால் அடிச்சுக் கொல்லலாம் அப்பிடித் தானே. உங்கடை சொந்தம் ஆருக்கும்நடந்தால் இப்பிடிச் சொல்லுவியளோ? அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்க வேணும் என்பதற்காக எப்பிடியெண்டாலும் கதைக்கலாம் என்றுநினைக்கக் கூடாது. விவசாயிகள் தோட்டத்துக்கு போக பாஸ் இருக்குத் தானே.பாஸ் இல்லாமல் வெளியாலை போய் கொரோனா வந்தால் முதியவரில் பிழை என ஏற்றுக் கொள்ளலாம்

பாஸ் இல்லாமல் எப்படி வெளியால செல்ல முடியும்?? குற்றம் யார் மீது இதைதான் நம்மவர்கள் ஏற்றுக்கொள்வதில்லையே  செய்வது குற்றம் என தெரிந்தும் தப்ப முயல்வது  அந்த பெரியவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்  பாஸ் பொது சுகாதார பரிசோதகரிடம் அவர் பெற்று இருப்பதாக உங்களால் உறுதிப்படுத்த முடியுமா அநேகமாக சுகாதார துறை, பாதுகாப்புதுறை ,தவிர்ந்தவர்களுக்கு பாஸ் கொடுக்க மறுக்கிறார்கள் . முதியவரை வீட்டில் இருக்க சொன்னது அவரின் பாதுக்காப்புக்காகவே இங்கு அரசுக்கு வெள்ளையடிக்கவில்லை நம்மவர்கள் பிழைகளை சுட்டிக்காட்டப்படுகிறது உடனே ஓடிவருவது வெள்ளை அடிக்கிறம் , பில்லர் அடிக்கிறம் என😎

7 hours ago, goshan_che said:

என்ன தான் @தனிக்காட்டு ராஜான்னாலும் இப்படி தனியா வந்து மாட்டி இருக்க கூடாது.

இப்ப பாருங்க கிட்னிய பிதுக்கி எடுத்திட்டாங்கல்ல?

கோஷான் ஒரு ஓரமா உக்காந்து டி குடிக்கும் போதே யோசிசிருக்க வேணாம்?

நான் போட்ட மீமுக்கு சிரிப்ப வேற போட்டுட்டு போய் மாட்டீருக்கீங்களே. என்ன புள்ளையா நீர்.🤣

அண்ண நம்ம சனம் உடனே பொங்கும் பிறகு ஒரு ஓரமா நின்று யோசிங்க என்று சொன்னாப்பிறகு என்மீது பிழை இருக்கிறது மன்னியுங்கள் என்று சொல்லும் . சிலர் பிழை இருந்தாலும் நான் பிடித்த முயலுக்கு 3 கால் என்றே சொல்லும் இதையெல்லாம் வெட்டி வெட்டி ஆட தனிக்காட்டு ராஜாவாகவே இருக்கணும் ஒத்துப்போனால் இவங்களுக்கு ஜால்றா போடுவதாக இருக்கும் இது கருத்துக்களம் பல கருத்து வரும் போகும் நம்ம பார்க்காததா என்ன 

எந்த பக்கமும் சாயாமல் நின்று தனித்தே ஆடும் இந்த ராஜா😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பாஸ் இல்லாமல் எப்படி வெளியால செல்ல முடியும்?? குற்றம் யார் மீது இதைதான் நம்மவர்கள் ஏற்றுக்கொள்வதில்லையே  செய்வது குற்றம் என தெரிந்தும் தப்ப முயல்வது  அந்த பெரியவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்  பாஸ் பொது சுகாதார பரிசோதகரிடம் அவர் பெற்று இருப்பதாக உங்களால் உறுதிப்படுத்த முடியுமா அநேகமாக சுகாதார துறை, பாதுகாப்புதுறை ,தவிர்ந்தவர்களுக்கு பாஸ் கொடுக்க மறுக்கிறார்கள் . முதியவரை வீட்டில் இருக்க சொன்னது அவரின் பாதுக்காப்புக்காகவே இங்கு அரசுக்கு வெள்ளையடிக்கவில்லை நம்மவர்கள் பிழைகளை சுட்டிக்காட்டப்படுகிறது உடனே ஓடிவருவது வெள்ளை அடிக்கிறம் , பில்லர் அடிக்கிறம் என😎

அண்ண நம்ம சனம் உடனே பொங்கும் பிறகு ஒரு ஓரமா நின்று யோசிங்க என்று சொன்னாப்பிறகு என்மீது பிழை இருக்கிறது மன்னியுங்கள் என்று சொல்லும் . சிலர் பிழை இருந்தாலும் நான் பிடித்த முயலுக்கு 3 கால் என்றே சொல்லும் இதையெல்லாம் வெட்டி வெட்டி ஆட தனிக்காட்டு ராஜாவாகவே இருக்கணும் ஒத்துப்போனால் இவங்களுக்கு ஜால்றா போடுவதாக இருக்கும் இது கருத்துக்களம் பல கருத்து வரும் போகும் நம்ம பார்க்காததா என்ன 

எந்த பக்கமும் சாயாமல் நின்று தனித்தே ஆடும் இந்த ராஜா😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) செய்தியின் தலைப்பிலேயே இறந்தவர் விவசாயி என உள்ளது. சிறீலங்காவில் விவசாயம் செய்பவர்களுக்கு பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்தவருக்கு பாஸ் இருக்கா இல்லையா என்பது தேவையற்ற விடயம்.

2) பாஸ் இல்லாது வீதியில் சென்றால் இடித்தே கொல்லுவம் என்று அரசும் அரச சார்ப்பானவர்களும் கூறுகிறார்களா?

3) சைக்கிளில் சென்றவரை முட்டி கொன்ற வாகன சாரதியில் தவறு இல்லை என்று நிரூபிக்கப்பட்டதா?

4) தென்னிலங்கையிலிருந்து 250 கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனித்தே பல களங்களில் வெற்றிவாகை சூடிய @தனிக்காட்டு ராஜா இக்கு இந்த பாடல் சமர்பணம்🙏🏾

21 minutes ago, goshan_che said:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@தனிக்காட்டு ராஜா நீங்களோ அல்லது உங்கள் உறவினர்களோ இன்றுவரை ஊடரங்கை மீறி வெளியில் சைக்கிளில் சென்றதில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நெடுக்கு இது அநியாய‌ சாவே தவிர அதை நான் நியாயப்படுத்தவில்லை இது விபத்து . விபத்து நடப்பது சகஜம் குறிப்பாக ஏன்  வடக்கில் அதிக விபத்து நடக்கிறது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா?? கேட்டால் சதி என்பீர்கள் இதைத்தான் உங்களிடம் எதிர் பார்க்க முடியும் யுத்தத்தால் கொன்றது போக மீதியானவர்களை விபத்தால் கொல்கிறது என்றும் சொல்வீர்கள் . ஊர்களுக்கு கொரோனோ காப்பகங்கள் வர சில இடங்களில் எதிர்ப்புகள் இருக்கு நீங்கள் மட்டக்களப்பில் பொரோனோ நோயாளர்களை கொண்டு வரக்கூடாது என ஆர்ப்பாட்டம் நடந்ததை அறிந்திருப்பீர்கள் 
அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளம் அதிக சன நெருக்கடியான பிரதேசங்களில் முகாம்களை அமைத்து அதை செயற்படுத்த முடியாமலும் அரசு மாற்றி இருக்கலாம் 

நான் அமெரிக்காவில் இருந்தாலும் சரி அரபுலகில் இருந்தாலும் சரி நீங்கள் சொன்ன்மாதிரியே எழுதியிருப்பேன் காரணம் உண்மை தெரியாமல் எழுதி இருக்கலாம் , அரசுக்கு வெள்லையடிச்சு எனக்கு என்ன அவாடா கொடுக்கப்போகிறது அரசு ?? வளர்ச்சி யடைந்த நாட்டில் 125000 மரணங்கள் என்பன உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம் இங்கு ஒருவருக்கு தொற்று என்றால அந்த ஏரியா முடக்கம் அந்த பெரியவருக்கு தொற்று ஏற்பட்டு அந்த இடமே தொற்றாளர் கொத்தணி ஆகிவிடக்கூடாது என்பதற்க்காகவே அரசு பயணத்தடை விதித்துள்ளது 

ஆக சொறீலங்காவில் நடப்பது எல்லாம் விபத்து. அவை தவிர்க்கப்பட முடியாதவை. ஆனால் நியாயப்படுத்தக் கூடியவை. அப்படித்தானே..! முள்ளிவாய்க்காலில் நடந்தது வெறும் சம்பவம் என்று ஒரு அதி உத்தமர் அண்மையில் சொல்லி இருந்தார். அவர் வேறு யாருமல்ல.. சுமந்திரன். நீங்களும் அந்த வரிசையில்...?!

வடக்கில் இதே மட்டுவிலில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போது.. வீட்டில் தான் முடக்கப்பட்டார்கள். ஊரை தான் முடக்கினார்கள். அந்த உறவுகளோடு நானே நேரடியாக அலைபேசியில் பேசி இருக்கிறேன். 

ஆனால்.. அதேன் தென்னிலங்கையில் இருந்து மட்டும் கொரோனா தோற்றாளர்களை ஊர் விட்டு ஊர் கடத்தனும்..??! ஏன் தென்னிலங்கையில் வைத்து...வீட்டினில்.. ஊருக்குள் அவர்களை முடக்க.. பயணத்தடை விதிக்க முடியாதா..?!

சரி அதுபோகட்டும்.. கிழக்கிற்கு இன்னும் வக்சினே வழங்கவில்லையாமே.. இதுக்கும் கொரோனா தான் காரணமா..?! நீங்கள் பாராட்டும் கோத்தா அரசிற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையோ..?!

வடக்குப் புலிகள் கிழக்கை நாசம் பண்ணினார்கள் என்று குரைத்தவர்களை காணோமே.. வடக்கிற்கு 50 ஆயிரம் ஊசிகளை வழங்கி கிழக்கிற்கு 0 வழங்கிய போது குரல்கொடுக்க. அதே தெற்கில்.. இலட்சக்கணக்கில் வழங்கப்பட்டுள்ளதே..??! இது பற்றியும் தாங்கள் பேசமாட்டீர்கள் போலும்.. இதெல்லாம் அரசை தாண்டிய அவர்களின் சக்தி அப்பாற்பட்டது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை. தனிக்காட்டு ராஜா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அநேகமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கோட்டல்களில் தங்க வைக்கப்படுகிறார்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்கள் மத்திய கிழக்கிலிருந்து வருபவர்கள் ஊசிபோட்டவர்கள் போடாதவர்கள் என பிரித்து தூர இடங்களில் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் தனிமைப்படுத்தலுக்கு 

கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கும்....
கொழும்பிலிருந்து வடக்கு மாகாணத்திற்கும் இடையில் எவ்வளவு மைல் வித்தியாசம்? இந்த இடையில் கொரோனா முகாம்கள் அமைக்க இடமில்லையா? அல்லது....???????? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முதியவரை வீட்டில் இருக்க சொன்னது அவரின் பாதுக்காப்புக்காகவே இங்கு அரசுக்கு வெள்ளையடிக்கவில்லை

நாலு ஆடு மாடு தோட்டம் துரவு வைச்சிருக்கிறவனுக்கு உங்கள் பதில் என்ன ராசன்? உங்கள் தார்மீக கவுண்மேந்து சல்லி குடுக்குமா?
 
சன அடர்த்தி இல்லாத இடங்களில்( கிராமங்கள்) மக்கள் சர்வ சாதாரணமாக உலாவுகின்றார்களாம். இது சிலோன் நியூஸ் :wink:

கொரோனா ஊசி போட இஸ்பீக்கர் வைச்சு கூப்பிடுனமாம். அதுக்குமே சனம் போகுதில்லையாம்.tw_grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 19:59, தனிக்காட்டு ராஜா said:

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

புலம்பெயர்ந்தவங்களுக்கு யுத்த அவலங்கள் தெரியாது. ஓடிப்போனவங்கள் எண்டு நாங்கள் நேருக்கு நேர் நிண்டு நெஞ்சை குடுத்தனாங்கள் எண்டு ஒரு பிலிம் கொஞ்ச நாள் ஓடிச்சுது....இப்ப தாங்கள் மட்டும் தான்...தங்களுக்கு மட்டும் தான் கொரோனா அவலம் எண்டால்...????? 

இதென்ன கதையெண்டு கேக்கிறன்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி இந்த செய்தியின் அடிப்படையின் படி நமது கள  உறவுகளின் கேள்வியில் நியாமுண்டு 
செய்தியில் கொரோனா தொற்றாளர்கள் என்றுதான் இருக்கிறது, தனிமைப்படுத்தப்படுபவர்கள் எல்லாம் கொரோனா தொற்றாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை,ஆனால் இங்கே எனக்கு வரும் கேள்வி மேலே உள்ள புகைப்படத்தில் போலீஸ் இந்த அணு உலைக்குள் போகும் உடை அணியாமல் எப்படி கொரோனா  பாசிட்டிவ் நோயாளிகள் பக்கம் சாவகாசமாக நிற்கினம் என்பதுதான், நான் நினைக்கிறன் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து சென்றவர்களை கொரோனா நோயாளிகளாகவே முடிவு செய்திருக்கலாம் இந்த இணையத்தளம், இருப்பினும் உண்மையாகாவே இவர்கள் கொரோனா நோயாளிகளாக இருப்பின் மிகவம் வன்மையாக கண்டிக்கத்தக்கதே அதில் மாற்றுக்கருத்தில்லை    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த வரையில் இது 14 நாட்கள் தனிமைப் படுத்தலுக்காகக் கொண்டு போகப் பட்ட வெளிநாட்டுப் பயணிகள். இராணுவம் நடத்துகிற விசேட விடுதிகள் வடக்கில் தான் அதிகம், அவர்களுக்கு பிசினஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கமாக இருக்கலாம்.

மேலே யாரோ சொல்லியிருப்பது போல, உள்ளூர் நோயாளிகளுக்கு ஹோட்டல் தனிமைப் படுத்தல் கிடையாது - பி.சி.ஆர் முடிவு வரும் வரை வீடு , பி.சி.ஆர் படி கொரனா என்றால் தனிமைப் படுத்தல் நிலையம்.

மேலும் , முடக்கிய ஏரியாக்களில் உலர் உணவு நிவாரணம், சில சமயம் குடி தண்ணீர் விநியோகமும் உள்ளூர் சுகாதார அலுவலகம் அல்லது பொலிஸ், இராணுவம் மூலம் நடக்கிறது. எல்லா இடத்திலும் இது கிரமமாக நடக்கிறதா தெரியாது - ஆனால் பூட்டிப் போட்டு பட்டினி கிடவுங்கள் என விடப்படவில்லை. இங்கே இருக்கிற தமிழ் அமைப்பு உதவி அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருப்பதால் இந்தத் தகவல் தெரிய வந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

மேலே யாரோ சொல்லியிருப்பது போல, உள்ளூர் நோயாளிகளுக்கு ஹோட்டல் தனிமைப் படுத்தல் கிடையாது - பி.சி.ஆர் முடிவு வரும் வரை வீடு , பி.சி.ஆர் படி கொரனா என்றால் தனிமைப் படுத்தல் நிலையம்

இது கன்பார்ம் ...என்னுடைய நண்பனும் ஒரு தாதிய உத்தியோகத்தர், மருதமுனை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தான் டூட்டி, இரண்டாவது அலை உச்சமெடுக்க முன் தடுப்பூசி ஏற்றிய வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் PCR சோதனை முடிந்ததும், அவர்கள் இலங்கையர்களாக இருப்பின்  வீட்டினில் ஒருவாரத்திற்கு  தனிமைப்படுத்தல் மட்டுமே இருந்தது, இரண்டாவது  அலை உக்கிரமடைந்ததும் வழமை போல 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் மீண்டும் அமுல்படுத்தபட்டுவிட்டது, அவரவர் பொருளாதார வசதியை பொறுத்து ஹோட்டல் அல்லது இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் விடுதியை தெரிவுசெய்யலாம்      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூட்டிப் போட்டு பட்டினி கிடவுங்கள் என விட்டதனாலேயே உள்ளூர் வெளியூர் அமைப்புக்கள் / மக்கள்  பட்டினி கிடக்கும் மக்களுக்கு உதவுகிறார்கள்.

அரசு அறிவித்த 5,000/= வையே அரச உத்தியோகத்தர்கள் ஒழுங்காக மக்களுக்கு       கொடுப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

எனக்குத் தெரிந்த வரையில் இது 14 நாட்கள் தனிமைப் படுத்தலுக்காகக் கொண்டு போகப் பட்ட வெளிநாட்டுப் பயணிகள். இராணுவம் நடத்துகிற விசேட விடுதிகள் வடக்கில் தான் அதிகம், அவர்களுக்கு பிசினஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கமாக இருக்கலாம்.

மேலே யாரோ சொல்லியிருப்பது போல, உள்ளூர் நோயாளிகளுக்கு ஹோட்டல் தனிமைப் படுத்தல் கிடையாது - பி.சி.ஆர் முடிவு வரும் வரை வீடு , பி.சி.ஆர் படி கொரனா என்றால் தனிமைப் படுத்தல் நிலையம்.

மேலும் , முடக்கிய ஏரியாக்களில் உலர் உணவு நிவாரணம், சில சமயம் குடி தண்ணீர் விநியோகமும் உள்ளூர் சுகாதார அலுவலகம் அல்லது பொலிஸ், இராணுவம் மூலம் நடக்கிறது. எல்லா இடத்திலும் இது கிரமமாக நடக்கிறதா தெரியாது - ஆனால் பூட்டிப் போட்டு பட்டினி கிடவுங்கள் என விடப்படவில்லை. இங்கே இருக்கிற தமிழ் அமைப்பு உதவி அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருப்பதால் இந்தத் தகவல் தெரிய வந்தது. 

யஸ்டின்,
இது எல்லா இடமும் இல்லை. எத்தனையோ இடங்களில் உள்ளூர் இளைஞர்கள் தான் அவர்களுக்கு உதவி செய்தார்கள். ஒரு அமைச்சர் மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பத்துக்கு 5000 ரூபா ஒரு மாதத்துக்கு காணும் என்று சொன்னதுநினைவிருக்கும் என்றுநினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

பூட்டிப் போட்டு பட்டினி கிடவுங்கள் என விட்டதனாலேயே உள்ளூர் வெளியூர் அமைப்புக்கள் / மக்கள்  பட்டினி கிடக்கும் மக்களுக்கு உதவுகிறார்கள்.

அரசு அறிவித்த 5,000/= வையே அரச உத்தியோகத்தர்கள் ஒழுங்காக மக்களுக்கு       கொடுப்பதில்லை.

மேலேயே சொல்லியிருக்கிறேன், எல்லா கி.சே பிரிவுகளிலும் இது ஒழுங்காக நடக்காமல் இருக்க இலங்கை போன்ற நாட்டில் சாத்தியம்.

ஆனால், தற்போதைய பூட்டல் முதலாவதை விட வித்தியாசமாகத் தான் இருக்கிறது. அடிப்படையான அரிசி, மா, சீனி, தேயிலை நோட்டிஸ் போட்ட ஒரிரு நாட்களில் வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து வைத்துப் படமும் எடுத்துப் போகிறார்கள் - பொலிஸ், இராணுவம் கேட்டால் காட்ட வேண்டுமென்று.

"அறுவார் கிளிநொச்சியில் அங்கர் மா குடுத்தாங்களாம், எங்களுக்குத் தரவில்லை" என்று வவுனியாவில் இப்போது முடக்கத்திலிருக்கும் ஒரு உறவு தொலைபேசியில் குறைபட்டுக் கொண்டார்!😂

4 hours ago, வாதவூரான் said:

யஸ்டின்,
இது எல்லா இடமும் இல்லை. எத்தனையோ இடங்களில் உள்ளூர் இளைஞர்கள் தான் அவர்களுக்கு உதவி செய்தார்கள். ஒரு அமைச்சர் மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பத்துக்கு 5000 ரூபா ஒரு மாதத்துக்கு காணும் என்று சொன்னதுநினைவிருக்கும் என்றுநினைக்கிறன்

மேலே சொன்ன பதில் தான் உங்கள் கருத்திற்கும். எனக்குத் தெரியவந்தது: இங்கிருக்கிற தமிழ் அமைப்பு இந்த முறையும் உதவி அனுப்ப முயற்சிகளை யாழ் பல்கலை அமைப்பினூடாக எடுத்த போது அதை யாழ் வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வாங்கும் நிதிக்காக ஒதுக்கும் படி கேட்டார்கள் - காரணம் இந்த நிவாரணங்கள். முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2021 at 00:03, MEERA said:

1) செய்தியின் தலைப்பிலேயே இறந்தவர் விவசாயி என உள்ளது. சிறீலங்காவில் விவசாயம் செய்பவர்களுக்கு பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்தவருக்கு பாஸ் இருக்கா இல்லையா என்பது தேவையற்ற விடயம்.

2) பாஸ் இல்லாது வீதியில் சென்றால் இடித்தே கொல்லுவம் என்று அரசும் அரச சார்ப்பானவர்களும் கூறுகிறார்களா?

3) சைக்கிளில் சென்றவரை முட்டி கொன்ற வாகன சாரதியில் தவறு இல்லை என்று நிரூபிக்கப்பட்டதா?

4) தென்னிலங்கையிலிருந்து 250 கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் என்ன?

முதலாவது தேவையற்ற விடயம் விடுவோம் இரண்டாவதை எடுத்துக்கொண்டால் விபத்து என்பது யாரும் வேண்டுமென்றே ஏற்படுத்துவதில்லை விபத்துக்கள்  எதிர்பாராத விதமாக நடைபெறுவது அதில் அந்த பெரியவர் உயிரிழந்தது வேதனையான சம்பவமே . 
பல தவறுகள் சாரதிகளால் ஏற்படுத்தப்படுவதே இது தவறாகிவிடாது கவலையீனம் பாதையில் விபத்துக்கள் நடக்கும் மேலதிகமாக 14 நாட்கள் சிறையில் வைத்த பின்னர் விசாரணை செய்யப்பட்டு அவர் விடுதலையாவார் வழக்கு சமாதானப்படுத்தப்படும் ( சிலவேளை முதியவரின் மரணத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் அப்படி நடந்தால் சந்தோசமே)
தென்னிலங்கை மட்டும் அல்ல இலங்கையில் எல்லா பாகங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் தொற்றாளர்களையும் , ஊசி போட்டுக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை வேறு இடங்களுக்கு சென்று அவர்களை தனிமைப்படுத்திய பின்னர் மீண்டும் அவர்களை பரிசோதனை செய்ததன் பின்னரே அவர்களை அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இத்தனைக்கும் வடக்கு அரசியல்வாதிகளால் ஏதேனும் கேள்விகள் அரசுக்கு எதிராக கேட்கப்படுகிறதா இல்லையே மாறாக இலங்கை அரசு என்ன செய்தாலும் அப்படியே இருக்கிறார்கள் .இன்று யாழ்ப்பாணம் நாவற்குழியில் முகாம் திறக்கப்பட்டுள்ளது .

May be an image of one or more people and people standing

May be an image of indoor

May be an image of indoor

May be an image of one or more people, people standing and military uniform

இதற்கு உங்கள் பதில் @MEERA  அண்ணை

On 14/6/2021 at 00:05, MEERA said:

@தனிக்காட்டு ராஜா நீங்களோ அல்லது உங்கள் உறவினர்களோ இன்றுவரை ஊடரங்கை மீறி வெளியில் சைக்கிளில் சென்றதில்லையா?

செல்கிறோம்  ஆனால் பிரதான பாதைகளை பயன்படுத்துவது குறைவு  தகுந்த பாதுகாப்பு முறை ,தேவைகளுக்கு மட்டும் வீதிகளில் , ராணுவம் , பொலிஸ்  விசாரித்த பின்னர் அனுமதிக்கப்படுகிறோம் 

On 14/6/2021 at 01:16, nedukkalapoovan said:

ஆக சொறீலங்காவில் நடப்பது எல்லாம் விபத்து. அவை தவிர்க்கப்பட முடியாதவை. ஆனால் நியாயப்படுத்தக் கூடியவை. அப்படித்தானே..! முள்ளிவாய்க்காலில் நடந்தது வெறும் சம்பவம் என்று ஒரு அதி உத்தமர் அண்மையில் சொல்லி இருந்தார். அவர் வேறு யாருமல்ல.. சுமந்திரன். நீங்களும் அந்த வரிசையில்...?!

வடக்கில் இதே மட்டுவிலில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போது.. வீட்டில் தான் முடக்கப்பட்டார்கள். ஊரை தான் முடக்கினார்கள். அந்த உறவுகளோடு நானே நேரடியாக அலைபேசியில் பேசி இருக்கிறேன். 

ஆனால்.. அதேன் தென்னிலங்கையில் இருந்து மட்டும் கொரோனா தோற்றாளர்களை ஊர் விட்டு ஊர் கடத்தனும்..??! ஏன் தென்னிலங்கையில் வைத்து...வீட்டினில்.. ஊருக்குள் அவர்களை முடக்க.. பயணத்தடை விதிக்க முடியாதா..?!

சரி அதுபோகட்டும்.. கிழக்கிற்கு இன்னும் வக்சினே வழங்கவில்லையாமே.. இதுக்கும் கொரோனா தான் காரணமா..?! நீங்கள் பாராட்டும் கோத்தா அரசிற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையோ..?!

வடக்குப் புலிகள் கிழக்கை நாசம் பண்ணினார்கள் என்று குரைத்தவர்களை காணோமே.. வடக்கிற்கு 50 ஆயிரம் ஊசிகளை வழங்கி கிழக்கிற்கு 0 வழங்கிய போது குரல்கொடுக்க. அதே தெற்கில்.. இலட்சக்கணக்கில் வழங்கப்பட்டுள்ளதே..??! இது பற்றியும் தாங்கள் பேசமாட்டீர்கள் போலும்.. இதெல்லாம் அரசை தாண்டிய அவர்களின் சக்தி அப்பாற்பட்டது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை. தனிக்காட்டு ராஜா. 

சுமந்திரன் ஐயாவுடன் ஏன் என்னை ஒப்பிடுகிறீர்கள் உங்களுக்கு இலங்கையை பற்றி சொன்னால் பிடிக்காது அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள போவதுமில்லை 

கிழக்கில் ஊசிகள் போட்டு ஒரு கிழமைக்கு மேல் ஆகிறது உதுதான் உங்கள் தொடர்பாடல் என நினைக்கிறன் நேற்று எங்கள் அதாவது அம்பாறையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி போடப்பட்டது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2021 at 04:21, குமாரசாமி said:

கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கும்....
கொழும்பிலிருந்து வடக்கு மாகாணத்திற்கும் இடையில் எவ்வளவு மைல் வித்தியாசம்? இந்த இடையில் கொரோனா முகாம்கள் அமைக்க இடமில்லையா? அல்லது....???????? :rolleyes:

நெருக்கடிகள் நிறைந்த பகுதிகளை அரசு தவிர்த்து வந்தாலும்  எல்லா இடங்களும் நிறைந்து காணப்படும் போது தூர இடங்களுக்கும் அவர்களை அனுப்புகிறது சாமியார்  

On 14/6/2021 at 04:29, குமாரசாமி said:

நாலு ஆடு மாடு தோட்டம் துரவு வைச்சிருக்கிறவனுக்கு உங்கள் பதில் என்ன ராசன்? உங்கள் தார்மீக கவுண்மேந்து சல்லி குடுக்குமா?
 
சன அடர்த்தி இல்லாத இடங்களில்( கிராமங்கள்) மக்கள் சர்வ சாதாரணமாக உலாவுகின்றார்களாம். இது சிலோன் நியூஸ் :wink:

கொரோனா ஊசி போட இஸ்பீக்கர் வைச்சு கூப்பிடுனமாம். அதுக்குமே சனம் போகுதில்லையாம்.tw_grin:

சல்லி அரசு கொடுக்காது அரசே கடந்தான் பட்டிக்கொண்டிருக்கிறது அதுமக்கள் மீதே சுமத்தியும் வைக்கப்படுகிறது இதில் என்ன ஒரு முசுப்பாத்தியான சம்பவம் என்றால் வெளிநாட்டில் இருக்கும் ஒரு நண்பர் சொன்னார் 5000 ரூபா அவர் சில வேளைகளை டிப்ஸ் கொடுப்பதாகவும் ஆனால் இங்கே அவர்களது சொந்த காரர்கள் கூட லைனில் நிற்கிறார்கள் அதை பெறுவதற்கு என்றால் பாருங்கோவன் எங்கள் மாமியாரின் குடும்பத்துக்கு கூட  இன்னும் க்கிடைக்கவில்லை

நம்ம சனம் பயப்படுகிறது ஊசிக்கு ஆனால் தற்போது எல்லோரும் போட ஆரம்பித்துள்ளார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2021 at 04:43, குமாரசாமி said:

புலம்பெயர்ந்தவங்களுக்கு யுத்த அவலங்கள் தெரியாது. ஓடிப்போனவங்கள் எண்டு நாங்கள் நேருக்கு நேர் நிண்டு நெஞ்சை குடுத்தனாங்கள் எண்டு ஒரு பிலிம் கொஞ்ச நாள் ஓடிச்சுது....இப்ப தாங்கள் மட்டும் தான்...தங்களுக்கு மட்டும் தான் கொரோனா அவலம் எண்டால்...????? 

இதென்ன கதையெண்டு கேக்கிறன்? 😁

யுத்த அவலங்களையும் , அதன் வடுக்களையும் புலம்பெயர்ந்தவர்கள் சுமந்து சென்றவர்கள் ஆனால் இங்குள்ளவர்கள் அதை சுமந்துகொண்டே இருக்கிறார்கள் ஆக பாரம் யார் மீது சுமந்து கடந்தவர்கள் மீது , சுமப்பவர்கள் மீதா சாமியார் அப்படியானால் யுத்தம் நிறைவுற்றதும் நீங்கள் எல்லோரும் என்ன செய்திருக்க வேண்டும் ??  ??????

கொரோனோ எல்லோருக்கும் பொதுவானது  யாருக்கும் வரலாம் போகலாம் விவேக் சொல்வது போது இண்ணைக்கு செத்தால் நாளைக்கு பால் இப்ப பாலும் இல்ல தகன அடுப்பு அவ்வளவுதான் 

On 14/6/2021 at 07:53, அக்னியஷ்த்ரா said:

தனி இந்த செய்தியின் அடிப்படையின் படி நமது கள  உறவுகளின் கேள்வியில் நியாமுண்டு 
செய்தியில் கொரோனா தொற்றாளர்கள் என்றுதான் இருக்கிறது, தனிமைப்படுத்தப்படுபவர்கள் எல்லாம் கொரோனா தொற்றாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை,ஆனால் இங்கே எனக்கு வரும் கேள்வி மேலே உள்ள புகைப்படத்தில் போலீஸ் இந்த அணு உலைக்குள் போகும் உடை அணியாமல் எப்படி கொரோனா  பாசிட்டிவ் நோயாளிகள் பக்கம் சாவகாசமாக நிற்கினம் என்பதுதான், நான் நினைக்கிறன் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து சென்றவர்களை கொரோனா நோயாளிகளாகவே முடிவு செய்திருக்கலாம் இந்த இணையத்தளம், இருப்பினும் உண்மையாகாவே இவர்கள் கொரோனா நோயாளிகளாக இருப்பின் மிகவம் வன்மையாக கண்டிக்கத்தக்கதே அதில் மாற்றுக்கருத்தில்லை    

இவர்கள் கொரோனோ நோயாளிகள் அல்ல தனிமைப்படுத்தலுக்கு செல்பவர்களே அவர்கள் 14 நாட் கள் தடுத்துவைக்கப்பட்ட ப்பின்னர் விடுதலை செய்ப்படுகிறார்கள் ( பரிசோதனை செய்யப்பட்ட பின்னர்)  இதில் பலர் ஊசி போட்டுக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனது அண்ணனும் கிளிநொச்சி முகாமிலிருந்து நேற்றே விடுதலை ஆனார் அக்னி

On 14/6/2021 at 12:21, MEERA said:

பூட்டிப் போட்டு பட்டினி கிடவுங்கள் என விட்டதனாலேயே உள்ளூர் வெளியூர் அமைப்புக்கள் / மக்கள்  பட்டினி கிடக்கும் மக்களுக்கு உதவுகிறார்கள்.

அரசு அறிவித்த 5,000/= வையே அரச உத்தியோகத்தர்கள் ஒழுங்காக மக்களுக்கு       கொடுப்பதில்லை.

பணம் கொடுத்த ஊழியர்களுக்கும் கொரோனா என அனுமதிப்பட்டுள்ளார்கள் எங்கள் மாமியாருக்கு இன்னும் கிடைக்கவில்லை  ஊழல்களும் செய்கிறார்கள் நம்மவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்த அவலங்களையும் , அதன் வடுக்களையும் புலம்பெயர்ந்தவர்கள் சுமந்து சென்றவர்கள் ஆனால் இங்குள்ளவர்கள் அதை சுமந்துகொண்டே இருக்கிறார்கள் ஆக பாரம் யார் மீது சுமந்து கடந்தவர்கள் மீது , சுமப்பவர்கள் மீதா சாமியார் அப்படியானால் யுத்தம் நிறைவுற்றதும் நீங்கள் எல்லோரும் என்ன செய்திருக்க வேண்டும் ??  ??????

தனி நீங்கள் இதை சாமியாருக்கு எழுதினாலும் ,எனக்கும் சுடுகிறது .....ஆகையால் எழுதுகிறேன்...
இருக்கிற மக்களையே அடிச்சு கலைக்கிறாங்கள் அதுவும் பண்ணை தொழில்,விவசாய தொழில் செய்யும் அப்பாவி மக்களை இந்த லட்சணத்தில் நாங்கள் அங்கு வந்து ஏன் அடிவாங்குவான்.....என்ற நல்லெண்ணம் தான்.

இளமையில் வாங்கின அடி தாங்க கூடியதாக இருந்தது முதுமையில் தாங்குமா ??சொல்லுங்கள் தனி சொல்லுங்கள் தனி 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2021 at 02:35, putthan said:

இடம் காலியாக இருந்தால் அவன் பிடிப்பது வழமை இன்று மட்டக்களப்பாகட்டும் இனி வரும் காலங்கள் வடக்கில் அப்போது என்ன சொல்ல போறிங்கள் புத்தன் நல்ல காரணத்தை கையில் பிடித்து வைத்து தட்டச்சு செய்து விடுங்கள்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2021 at 23:05, putthan said:

நில ஆக்கிரமைப்பு பற்றி கதைக்கும் போது வெளி நாட்டில் இருப்போர் யோசிக்க வேன்டிய விடையம் இது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.