Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது- பிரதமர் மோடிக்கு, வைகோ கடிதம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது- பிரதமர்  மோடிக்கு, வைகோ கடிதம்

 
1-27.jpg
 63 Views

தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம், தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடிக்கு வைகோ எழுதிய கடிதத்தில்,

“தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அதற்கான சூழ்நிலைகளை, தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.

கடந்த காலங்களில், இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நாடாக இலங்கை இருந்தது இல்லை. அண்டை நாடு என்கின்ற முறையில், இந்தியா இலங்கைக்குக் கூடுதல் முன்னுரிமை வழங்கினாலும் கூட, இக்கட்டான வேளைகளில், அவர்கள் இந்தியாவின் காலை வாரி விடுகின்றார்கள். தாங்கள் ஒரு சீனச் சார்பு நாடு என்பதை, அவர்கள் பலமுறை எடுத்துக் காட்டி இருக்கின்றார்கள்.

மகிந்த இராஜபக்சே, இலங்கைக் குடி அரசின் தலைவராகப் பொறுப்பு ஏற்பதற்கு, இந்தியா மறைமுக ஆதரவு அளித்தது. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற அவர், அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சீன நீர்மூழ்கிக் கப்பல் நுழைய ஒப்புதல் வழங்கினார். இந்தியப் பெருங்கடலில், முதன்முறையாக, சீன நீர்மூழ்கிக் கப்பல் நுழைந்தது. அவருக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பு ஏற்ற மைத்திரிபால சிறிசேனா, மற்றொரு சீன நீர்மூழ்கிக் கப்பலை, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய விட்டார். இலங்கைக்கு அளவுக்கு அதிகமான கடன் கொடுத்து, 99 ஆண்டுகள் குத்தகை என்ற பெயரில், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றி விட்டது.

இப்போது, ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியில், இந்தியப் பெருங்கடலில் சீனமயமாக்கல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு நிலப்பரப்பை, சீனாவுக்குக் கொடுத்து விட்டனர். இலங்கை நாடு முழுமையும், சீன உதவியுடன் நடைபெறுகின்ற கட்டுமானப் பணிகளில், ஐந்து இலட்சம் சீனத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள். அவர்களுள் ஒரு பகுதியினர், சீன உளவுத்துறையினர் என்பதில் ஐயம் இல்லை. அவர்களுக்காக, சீன மொழிப் பள்ளிகள், சீனக் கலை அமைப்புகள், சீனப் பயிற்சியாளர்களின் கராத்தே வகுப்புகள், இலங்கையில் தொடங்கப்பட்டுள்ளன. தெருக்கள், தொடர்வண்டி நிலையங்கள், விடுதிகளின் பெயர்ப் பலகைகளில், சீன மொழி எழுத்துகள் எழுதப்பட்டு வருகின்றன.

தமிழ் ஈழப் பகுதிகளில், அனலைத் தீவு, நெடுந்தீவு, நயினா தீவு ஆகிய பகுதிகளில் அமைய இருக்கின்ற சூரிய மின்விசைத் திட்டமும், சீனாவுக்குத் தரப்பட இருக்கின்றது. வத்தலான் என்னும் சிற்றூரில், சிறுவர்களுக்கான பூங்காவை சீன முதலீட்டாளர்கள் வடிவமைத்து இருக்கின்றார்கள். பூங்காவின் நுழைவாயிலில், சீனர்களின் நெடும்பாம்பு (டிராகன்) சின்னத்தை வரைந்து இருக்கின்றார்கள்.

எனவே, இலங்கை நாடு சீனாவின் தளமாக மாறி வருகின்றது. இந்த நிலையில், இந்திய எல்லையை ஒட்டி இருக்கின்ற, தமிழ் ஈழம் மட்டுமே, இந்தியாவின் தளமாக இருக்க முடியும்.

கடந்த காலங்களில், இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்த வேளைகளில், இலங்கையின் ஆட்சித்தலைமையை மாற்றும் அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்தது. ஆனால், இனி அந்த அணுகுமுறை வெற்றி பெறாது.

லண்டன் கிங்ஸ் கல்லூரியில், அனைத்து நாடுகள் உறவு மற்றும் பாதுகாப்பு ஆய்வுத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகின்ற, ஆற்றல்மிக்க எழுத்தாளர் ஹர்ஷ் வி. பந்த் (Harsh V. Pant), 29.01.2015 ஆம் நாள், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.

Indian policymakers will be mistaken if they think a change of regime in Colombo, will lead to a dampening of Sino-Sri Lanka ties. China’s role is now firmly embedded in Sri Lanka-economically as well as geopolitically. India will have  to  up it’s game, if it wants to  retain it’s leverage in Colombo.  Harsh V. Pant, Professor in International Relations, Department of Defence Studies, King’s college, London.

இந்திய கொள்கை வகுப்பாளர்கள், இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தால், தவறாக முடியும்; அது சீன இலங்கை உறவுகளைச் சீர்குலைக்கும்; பொருளாதாரம் மற்றும் புவிசார் அடிப்படையில், இலங்கையில் இப்போது சீனாவின் பங்கு உறுதியாகி இருக்கின்றது; கொழும்பில் தன் செல்வாக்கை நிலைநிறுத்த இந்தியா விரும்பினால், ஒரு விளையாட்டு ஆடித்தான் ஆக வேண்டும்.

எனவே, தமிழ் ஈழத்தைக் காக்கவும், ஈழத்தமிழர்களின் இறையாண்மையை நிலைநாட்டவும்  இந்தியா தவறினால், இந்தியப் பெருங்கடலில் ஆளுமையை இழக்க நேரிடும்; சீனாவுக்கு இடம் தருவதாக ஆகி விடும்.

அவ்வாறு, தமிழ் ஈழத்திற்குத் துணையாக நின்றால், சிங்கள இலங்கை அரசு, சீனாவின் முழு ஆதரவு நாடு ஆகி விடும் என்பது தவறான கணிப்பு ஆகும். தமிழ் ஈழம் அமைந்தால், இலங்கை வலு இழந்து விடும்; இந்தியாவைப் பகைத்துக் கொள்ள மாட்டார்கள்.

இலங்கை சீன ஆதரவு நாடு ஆகிவிடும் என்று, நமது அயல் உறவுக் கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கருதுவது, கால விரயம் ஆகும்; இப்போதும்கூட, இலங்கை, சீன ஆதரவு நாடுதான். இலங்கையில் சீனாவின் பிடி மேலும்மேலும் இறுக வாய்ப்பு அளிப்பது இந்தியாவுக்குக் கேடாகவே முடியும். எனவே, இந்தியப் பெருங்கடலில்,இந்தியாவின் உறுதிமிக்க ஆளுமை, அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரத் தளமாக, இறையாண்மை உள்ள தமிழ் ஈழம்தான் இருக்க முடியும். 2021 மே 18 ஆம் நாள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (House of Representatives) 117 ஆவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில், நிறைவேற்றப்பட்ட 413 ஆவது தீர்மானம், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை விரிவாகப் பட்டியல் இட்டு, உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருக்கின்றது.

அந்தத் தீர்மானத்தின் சில பகுதிகளை, இங்கே மேற்கோள் காட்ட விழைகின்றேன். இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இறந்தனர்; காணாமல் போயினர்; புலம் பெயர்ந்து சென்றனர்;

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு, ராஜபக்சே அரசு பொறுப்பு ஏற்றதை அடுத்து, மனித உரிமைகள் மன்றத்தின் 30-1 தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகிக் கொண்டது;

தமிழர்களின் மரபுவழித் தாயகமான, அந்த நாட்டின் வடகிழக்கு நிலப்பரப்பில், போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில், படைகள் குவிக்கப்பட்டு, இரண்டு பொதுமக்களுக்கு ஒரு படை வீரர் என்ற வகையில் நிற்கின்றனர்;

இலங்கையின் வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தில், ஆயுதப் போராட்டத்தின்போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும், வடக்கு-கிழக்கு நிலப்பரப்பில், ஐ.நா.மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்குப்பதிவு நடத்தி நிலையான தீர்வு காணக் கோருகின்றது;

இலங்கை அரசு, பல ஆண்டுகளாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவில்லை; அதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் அன்றி, ஒட்டுமொத்தமாக இலங்கை நாடு முழுமையும், ஊர் ஆட்சி மன்றங்களைத் தேர்ந்து எடுக்கின்ற உரிமை, மக்களுக்கு மறுக்கப்பட்டு இருக்கின்றது. 2021 ஆம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளில், இலங்கை அரசு-

(1) போர்க்குற்றங்கள் புரிந்தவர்களை உயர் பதவிகளில் அமர்த்தி இருக்கின்றது;

(2) போர்க்குற்றம் இழைத்தவர் என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு, பொது மன்னிப்பு வழங்கி இருக்கின்றது;

(3) மக்கள் ஆட்சியை வலுப்படுத்துகின்ற சீர்திருத்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு,  அனைத்து அதிகாரங்களையும், குடிஅரசின் தலைவரிடம் குவித்து இருக்கின்றது;

(7) ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களைக் கடத்துவதற்கும், துன்புறுத்துவதற்கும் பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்துகின்றது;

மேலும், போர்க்குற்றம் இழைத்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுவோரை, நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு எதிரான சான்றுகளைத் திரட்டுகின்ற முயற்சிகளுக்கும், அரசு தடைகளை ஏற்படுத்துகின்றது.

சட்டத்தைப் புறந்தள்ளி, கைது செய்கின்றது. மேலும், வழக்கு ஒழிந்துபோன, மிகக் கடுமையான, வன்முறையாளர்களை அடக்குகின்ற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பன்னாட்டு நடைமுறைகளுக்கு எதிரான, திரும்பப் பெறுவதாக அரசே பலமுறை உறுதிமொழி அளித்தபடி திரும்பப் பெறாத, அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்துகின்றனர்.

மேலும், 2021 ஜனவரி மாதம், ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட் குறிப்பிட்டபடி, தேசிய மட்டத்தில், பொறுப்பு உணர்வை முன்னெடுத்துச் செல்ல, அரசாங்கத்தின் இயலாமை மற்றும் விருப்பம் இன்மையைக் கருத்தில் கொண்டு, பன்னாட்டுக் குற்றங்களுக்கான நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பன்னாட்டு அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய வேளை இது.

ஆயுதப் போரின் போதும், அதைத் தொடர்ந்தும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, தங்களது அன்புக்கு உரியவர்கள் இருக்கின்ற இடம் குறித்து, இதுவரை எந்தத் தகவலும் இல்லை; போரின் முடிவில், அரசாங்கத்திடம் சரண் அடைந்தவர்கள் குறித்தும், இதுவரை எந்தப் பட்டியலும் வெளியிடப்படவில்லை.  எனவே, இந்த அவை (House of Representatives) நிறைவேற்றும் தீர்மானம்:

 1. இலங்கையில் ஆயுதப் போர் முடிந்த 12 ஆம் ஆண்டு நினைவு நாளில், போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது;
 2. இறந்தவர்களின் நினைவை மதித்துப் போற்றுகின்றது; நல்லிணக்கம், மறுவாழ்வு, இழப்பு ஈடு மற்றும் சீர்திருத்தங்களுக்கான தேடலில், இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் உறுதுணையாக இருக்க உறுதி பூணுகின்றது;
 3. மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றத்தைப் பாராட்டுகின்றது; இந்த நடவடிக்கைகளில், இலங்கை அரசு தலையிடக் கூடாது.
 4. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிலும் நீதிக்காகப் போராடுகின்ற வழக்குஉரைஞர்கள், அரசாங்க பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டு வருகின்ற, காணாமல் போன தமிழர்களின் குடும்பத்தினரின் துணிச்சலைப் பாராட்டுகின்றது;
 5. இலங்கையில் வரலாற்றுக் காலந்தொட்டு ஒடுக்கப்பட்டு வருகின்ற, வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் வாழ்கின் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும்படி, பன்னாட்டு சமூகத்தை வலியுறுத்துகின்றது; இன மோதல்களுக்கு வழிவகுத்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முழுமையான அரசியல் தீர்வை நோக்கி செயல்பட வேண்டும்;
 6. இலங்கையில் போரின்போது நிகழ்ந்த கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறலுக்கான, நம்பகமான மற்றும் பயனுள்ள, பன்னாட்டுப் பொறிமுறையை நிறுவ, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுமாறு, அமெரிக்காவை வலியுறுத்துகின்றது. இவ்வாறு, அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது.

எனவே, உலக வரைபடத்தில், இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் ஆக்கியது போல்,  வங்கதேசம் என்ற நாட்டை இந்தியா ஆக்கியது போல், தமிழ் ஈழம் என்ற நாட்டை  அமைப்பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், உலகம் முழுமையும் பல நாடுகளில் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களிடம் பொது வாக்குப்பதிவு நடத்துவதற்கான முயற்சிகளை,  இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்” இவ்வாறு, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

https://www.ilakku.org/?p=51993

 
 
 
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நரபலிக்கு ஆயத்தம் செய்கிறார்கள்

(தலையங்கத்தைப் பார்த்தவுடன் இப்படித்தான் மனதில் பட்டது)

Link to comment
Share on other sites

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம், Port city, வடக்கில் 3 தீவுகளில் சீனர்களின் வேலைத்திட்டங்கள் போன்றவை இந்திய மக்களுக்குத் திட்டமிட்டு மழுங்கடிக்கப் படுவதாகத் தோன்றுகிறது. வரும் செய்திகளிலும் இதை ஒரு சாதாரண இலங்கைச் செய்தியாகக் காட்டுகிறார்கள். இந்தியாவுக்கான அச்சு̀றுத்தலாகக் காட்டப் படவில்லை. 

வைகோவுக்கு இப்போது செல்வாக்கு இல்லாவிட்டாலும் இவ்வாறான அறிக்கைகள் மூலம் மோடியின் ஆட்சியில் வெளிநாட்டுக் கொள்கைகளும் தோல்வி அடைந்து வருவதை இந்திய மக்களுக்கு ஓரளவேனும் காட்டலாம்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நரேந்திர கிரி: உத்தர பிரதேச இந்து சாமியார் மரணம் - நரேந்திர மோதி, யோகி ஆதித்யநாத் இரங்கல் சமீராத்மஜ் மிஷ்ரா பி பி சி ஹிந்திக்காக 21 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,SAMIRATMAJ MISHRA/BBC அகில பாரத அகாடா பரிஷத் தலைவர் மற்றும் பிரயாக்ராஜில் (அலகாபாத்) உள்ள பாகம்பரி மடத்தின் துறவி நரேந்திர கிரி அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள அல்லாபூரில் அமைந்துள்ள பாகம்பரி மடத்தின் ஓர் அறையில் கண்டெடுக்கப்பட்டது. செய்தி கிடைத்தவுடன் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததாக பிரயாக்ராஜ் பகுதியின் காவல் துறைக் கண்காணிப்பாளர் கேபி சிங் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "தற்போது இது ஒரு தற்கொலை வழக்கு போல் தெரிகிறது. தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கோணங்களிலிருந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது," என்று அவர் கூறினார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 நரேந்திர கிரி தனது அறிக்கைகளால் அடிக்கடி பேசுபொருளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரயாக்ராஜின் பாகம்பரி மடத்தின் துறவியான அவர், சங்கம் கரையில் உள்ள புகழ்பெற்ற பெரிய அனுமன் கோயிலின் தலைமை பூசாரியாகவும் இருந்தார். தற்கொலைக் குறிப்பு நரேந்திர கிரியின் உடலுக்கு அருகில் நான்கு-ஐந்து பக்கங்களைக் கொண்டதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர். பிரயாக்ராஜ் ஐஜி கேபி சிங் ஊடகங்களுடனான உரையாடலில், இது முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாகத் தெரிவதாகக் கூறினார். "நரேந்திர கிரியிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பு மிகவும் மனதைத் தொடுவதாக இருக்கிறது. ஆசிரமத்தின் சில சகாக்களால்தான் மிகவும் வருத்தப்பட்டதாக அவர் எழுதியுள்ளார்." தற்கொலை எண்ணத்துக்கான காரணம் என்ன? விடுபடுவது எப்படி? அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தமிழ்நாடு எதிர்கொண்ட சவால்கள் என்ன? நரேந்திர கிரி, தான் அந்த ஆசிரமத்திற்கு வந்த நாளிலிருந்து, அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல எப்போதும் உழைத்ததாக எழுதியுள்ளார். அவர் ஆஸ்ரமத்தின் நிதியை மிகவும் முறையாகக் கையாண்டு வந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது. 'நான் கௌரவத்திற்காகவே வாழ்ந்தேன், கௌரவத்திற்காக மட்டுமே தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று அந்தக் குறிப்பில் எழுதியுள்ளார். சீடருடனான மோதல் சமீபத்தில், அவரது சீடரும் யோகா குருவுமான ஆனந்த கிரியுடனான அவரது மோதல், தலைப்புச் செய்தியானது. அவர் அகாடா பரிஷத் மற்றும் பாகம்பரி மடத்திலிருந்து ஆனந்த் கிரியை வெளியேற்றினார். அந்த நேரத்தில் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகக் குற்றம் சாட்டினர். தற்கொலைக் குறிப்பில் ஆனந்த் கிரியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கே.பி சிங் கூறுகிறார். இருப்பினும், இந்தக் குறிப்பு (உண்மைத் தன்மை பற்றி) இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை என்றும், அதனால் அது குறித்து அதிக தகவல்கள் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,SAMIRATMAJ MISHRA/BBC குற்றச்சாட்டும் மன்னிப்பும் ஆனந்த் கிரி, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு அகாடாவில் உள்ள சர்ச்சை குறித்துக் கடிதங்களை அனுப்பியதோடு, மடத்தின் நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். மடத்தின் சொத்துகள் மற்றும் வருமானம் குறித்து விசாரணை நடத்தவும் அவர் கோரியிருந்தார். எனினும், இந்த விஷயத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்துத் துறவிகளும் மஹந்த் நரேந்திர கிரியை ஆதரித்தனர். பின்னர், ஆனந்த் கிரியும் மன்னிப்பு கேட்டார், ஆனால் அவர் மடத்துக்குள் மீண்டும் அழைக்கப்படவில்லை. சில வாரங்களுக்கு முன்பு, அகில பாரத அகாடா பரிஷத் என்ற போலி ட்விட்டர் கணக்கிலிருந்து பல சர்ச்சைக்குரிய ட்வீட்கள் செய்யப்பட்டன. அது குறித்து, நரேந்திர கிரி தரகஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். பாகம்பரி மடத்தின் துறவி என்பதால், உள்ளூர் மக்கள் தவிர, அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவரைச் சந்திக்க வந்து போய்க்கொண்டிருந்தனர். பிரயாக்ராஜுக்கு வரும் அனைத்துப் பெரிய தலைவர்களும் புகழ்பெற்ற நபர்களும் சங்கம் அனுமனை வணங்கியபிறகு, இவரைச் சென்று சந்திப்பது வழக்கமாயிருந்தது. ஞாயிற்றுக்கிழமையன்று கூட, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கோயிலுக்குச் சென்று இவரிடம் ஆசி பெற்றார். பட மூலாதாரம்,ANI சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் மஹந்த் நரேந்திர கிரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், "அகில இந்திய அகாடா பரிஷத் தலைவர் பூஜ்ய நரேந்திர கிரியின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்தப் புண்ணிய ஆத்மாவை இறைவன் தன் திருவடியில் சேர்த்துக்கொண்டு, அவரைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இழப்பைத் தாங்கும் வலிமையைத் தரவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன். என மனப்பூர்வமான அஞ்சலி" என்று ட்வீட் செய்துள்ளார். துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கேஷவ் மவுரியா, தனது ட்வீட்டில், "புஜ்ய மஹந்த் நரேந்திர கிரி மகாராஜ் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லை. நான் அதிர்ச்சியில் பேச்சிழந்துள்ளேன். குழந்தை பருவத்திலிருந்தே எனக்கு அவரைத் தெரியும், அவர் தைரியத்தின் உருவகம். நேற்று காலை (செப்டம்பர் 19) அவரிடம் ஆசி பெற்றேன். அப்ப்போது மிகவும் சாதாரணமாக இருந்த அவரது திடீர் மறைவு தாங்க முடியாத துக்கம் தரக்கூடியது" என்று தெரிவித்துள்ளார். சர்ச்சைகள் மார்ச் 2015 இல், இவர் அகில பாரத அகாடா பரிஷத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, 2019 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் பிரயாக்ராஜில் வசித்த அவர், சச்சின் தத்தா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு 2015 ஆம் ஆண்டில் மகாமண்டலேஸ்வர் என்ற பட்டத்தை வழங்கியபோது சர்ச்சைக்குள்ளானார். பிரயாக்ராஜின் பாகம்பரி மடத்திற்கு அருகிலுள்ள பிரயாக்ராஜ் நகரத்தைத் தவிர, நொய்டாவில் பல ஏக்கர் நிலமும் உள்ளது, அதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இது தவிர, மடம் மற்றும் சங்கம் பெரிய அனுமன் கோயிலில் இருந்து பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நரேந்திர கிரிக்கும் அவரது சீடர் ஆனந்த் கிரிக்கும் மோதல் உருவானது. நரேந்திர கிரி பல பெரிய நிலங்களை விற்று பணத்தை தனது உறவினர்களுக்கு கொடுத்ததாக ஆனந்த் கிரி குற்றம் சாட்டினார். https://www.bbc.com/tamil/india-58635947
  • புலம் பெயர்ந்தவர்கள் பிரச்சனை வேற, இந்தாளுடைய பிரச்சனை வேற...☹️ மூலம்; ahalnews.com        மன்னார் ஆயர் இல்லத்தை விசாரணை செய்க – மறவன்புலவு சச்சி September 22, 2021 7:21 pm No Comments Share on facebook   Share on twitter   Share on linkedin   Share on whatsapp [9:12 a.m., 2021-09-22] : யாழ்ப்பாணம், செப்.22 மன்னார் மாவட்டத்தில் போருக்குப் பின்னர்  இலக்கு வைத்து நடாத்தப்படும் ஆயர் இல்ல அராஜகங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கர்தினால் மால்கம் ரஞ்சித்திடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். கர்தினால் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் மன்னார் ஆயர் இல்லம் மேற்கொண்ட 37 அராஜகங்கள் தொடர்பில் எம்மால் சாட்சிகள், காணொளிகள் போன்ற சான்றுகளுடன் நிரூபிக்க முடியும் என்பதனால் இதற்கு ஓர் விசாரணைக் குழுவை அமைத்து உடன் விசாரணை நடாத்த வேண்டும். அவ்வாறு நீங்கள் விசாரணை நடாத்த தவறினா, நாம் இலங்கை அரசிடம் இந்தக் கோரிக்கையை முன் வைப்போம் . ஏனெனில் மனித உரிமையை மீறினார், அரசியல் அமைப்பு வழங்கிய உரிமைகளை மீறினார், அரசின் காணிகளையும் சைவர்களின் காணிகளையும் வன்முறையின் மூலம் ஆக்கிரமிக்கின்றனர், அறத்தை மீறி சைவர்களை மதம் மாற்றி கிறிஸ்தவராக்குகின்றனர் இவைபோன்ற ஏனைய விடயங்களிற்கு நீங்கள் அமைக்கும் ஆணைக்குழு முன் தோன்றி, சாட்சிகள், ஆவணங்களை வழங்க தயாராகவுள்ளேன். இந்த விடயத்தில் நீங்களோ அல்லது வத்திக்கானோ நடவடிக்கை எடுக்காது விட்டால் நாம் இலங்கை அரசைக் கோருவோம். இலங்கை அரசும் மேறகொள்ளாது விடின் உங்கள் வழியில் நாமும் ஐக்கிய நாடுகள் சபையை நாடுவோம் எனவும் குறிப்பிட்டு 37 இடங்கள் தொடர்பிலும் பட்டியலிட்டு அங்கே புரியப்பட்டதாக கூறும் அட்டூழியங்கள் என பட்டியலும் இணைக்கக்பட்டு 28 பக்க(தமிழ், ஆங்கிலம்) அறிக்கை கர்தினால் மால்கம் ரஞ்சித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • 1- நான் பலகாலமாக இதைத்தான் எழுதி  வருகின்றேன். முன்னர் போராடினேன் என்பது  கூட இனிவேண்டாம். மக்களுக்கிடையிலிருந்து தகுதியானவர்கள் அவர்களோடு இன்றும்  நிற்பவர்கள் தமக்கு ஏதாவது  செய்வார்கள்  என  தாயக  மக்கள்  நம்புபவர்கள் முன் கொண்டு  வரப்படவேண்டும். 2- புலம் பெயர்  தேசத்து  பொருளாதாரமும் அறிவியலுமே இன்று சிங்களவனுக்குள்ள ஒரே  தெரிவு அதை முதலில் தாயகத்தமிழர் உணரணும்  பயன்படுத்தணும் நன்றி
  • தாயகத்தில் உள்ள மக்களுக்கு அவர்களின் பிரதிநிதிகளுடன்  பேசாமல் புலம்பெயர் தமிழர்களுடன் ஏன் கோத்தா  பேச நினைக்கிறார். அதுவும்  இவ்வளவு காலம் கடந்து.?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.