Jump to content

கள்ளச்சாராய சோதனையின்போது பணம், நகைகளை எடுத்துச் சென்றதாக புகார்: போலீஸ் மீது விசாரணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளச்சாராய சோதனையின்போது பணம், நகைகளை எடுத்துச் சென்றதாக புகார்: போலீஸ் மீது விசாரணை

 
கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற இடத்தில் பணம், நகைகளை எடுத்து சென்ற போலீசார் - சுற்றி வளைத்த கிராம மக்கள்

வேலூர் குருமலை அருகே உள்ள மலை கிராமத்திற்கு கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள், சோதனையின் போது அங்கிருந்த வீடுகளில் சுமார் 8.5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 15 சவரன் நகைகளை எடுத்து சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

கொரோனா நோய்த் தொற்றின்‌ இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வந்த காரணத்தினால் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளை முடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழலில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்களின் சட்டவிரோத விற்பனையும், கள்ளச்சாராய விற்பனையும் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனைத் தடுக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற இடத்தில் பணம், நகைகளை எடுத்து சென்ற போலீசார் - சுற்றி வளைத்த கிராம மக்கள்

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த குருமலையில் உள்ள நச்சுமேடு மலை கிராமத்தில் கள்ளச்சாராயம் தயாரிப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் 3 காவலர்கள் நச்சுமேடு மலை கிராம பகுதியில் ஆய்வுக்கு சென்றனர்.

 

அப்பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் தயாரித்தாக குற்றம்சாட்டப்படும் இளங்கோ மற்றும் செல்வம் வீடுகளில் காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது இருவர் வீட்டிலிருந்த சுமார் 1,000 லிட்டர் சாராய ஊறல், 8 மூட்டை வெல்லம், 50 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி அழித்ததாக கூறுகிறார்கள். பின்னர் இளங்கோ மற்றும் செல்வம் ஆகிய இருவரும் வீட்டில் இல்லாததால் காவல்துறையினர் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற இடத்தில் பணம், நகைகளை எடுத்து சென்ற போலீசார் - சுற்றி வளைத்த கிராம மக்கள்

இந்த சோதனைக்காக அங்கு வந்த காவலர்கள் இளங்கோ, செல்வம் இருவரின் வீடுகளில் இருந்து சுமார் 8.5 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை எடுத்துச் சென்றதாக கூறி அவர்கள் மலையைவிட்டு இறங்க முயன்றபோது தடுத்து நிறுத்தினர்.

தகவலறிந்த பாகாயம் காவல் ஆய்வாளர் சுபா சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர் எடுத்ததாக கூறப்பட்ட பணம், நகையை இளங்கோ, செல்வம் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளார்.

கள்ளச்சாராய சோதனைக்குச் சென்ற இடத்தில் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்து சென்றதாக பொது மக்கள் தெரிவித்த புகாரையடுத்து அரியூர் உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்துவருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான * அகத்தியம், * செயிற்றியம், * சயந்தம், * குணநூல் போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம். இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே "கூத்து" எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு கூத்தினை, வேந்தியல் (மன்னர்களுக்காக ஆடுவது), பொதுவியல் (பொது மக்களுக்காக ஆடுவது) என இருவகைப்படுத்தலாம். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை "அபிநயம்" பற்றி விளக்குகிறது. பெண்கள் ஐந்து வயதிலிருந்து பன்னிரெண்டு வயதுவரை (7ஆண்டுகள்) பரதநாட்டியம் கற்றனர். பாடலின் பொருளை முகபாவம், அங்க அசைவுகள் போன்றவற்றின் வாயிலாக விளக்குவதே நடனம் (அ) கூத்து என வரலாற்று ஆய்வாளரான என்.சுப்பிரமணியன் விளக்கம் தருகிறார். கூத்துக் கலைஞர்களும், கூத்தநூல்களும்: நடனமாடும் ஆண்மகன் * கூத்தன், * ஆடுமகன், * ஆடுகளமகன் எனப்பட்டான். நடமாடும் பெண்மகள் * நடனமகள், * விறலி, * கூத்தி, * ஆடுமகள், * ஆடுகளமகள் * எனப்பட்டாள். இவர்கள் நடனமாடிய அரங்கம் "ஆடுகளம்" எனப்பட்டது. * வீரம், * அச்சம், * இழிவு, * வியப்பு, * இன்பம், * துன்பம், * நகை, * நடுவுநிலை, * வெகுளி என்னும் ஒன்பது சுவைகள் நடனத்துக்குரியவையாகக் கருதப்பட்டன. "சந்திக்கூத்து" எனப்படும் கூத்தை ஆடியவர்கள் "கண்ணுளர்" எனப்பட்டனர். * பரதம், * பரதசேனாபதியம், * குணநூல், * முறுவல், * சயந்தம், * கூத்தநூல், * இந்திரகாளியம், * செயிற்றியம், * இசை நுணுக்கம், * அகத்தியம், * மதிவாணனார் நாடகத்தமிழ், * பஞ்சமரபு போன்றவற்றை சங்க காலத்தில் இருந்த கூத்த நூல்களாக வகைப்படுத்தலாம்.   கூத்துக்கலை பற்றிய ஆதாரங்கள்: கல்வெட்டு ஆய்வாளரான என்.ராமசந்திரன் 1962ல் அங்கல்லூர் (நல்லமலை) என்ற இடத்தில் கண்டறிந்த கல்வெட்டானது தொல்தமிழரின் நடனம் பற்றி விளக்குகிறது. இதன் காலம் கி.பி.3ம் நூற்றாண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் நடனக் குறியீடுகள் "சமணத்துறவி" ஒருவரால் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டில் வரையப்பெற்ற "சித்தன்ன வாசல் ஓவியங்கள்" வாயிலாக பல்லவர் நடனக்கலையின் சிறப்பம்சத்தினை உணரலாம். இங்குள்ள பரதநாட்டிய அபிநயங்களில் "ஹஸ்த அபிநயச் சிற்பம்" குறிப்பிடத் தக்கதாகும். இராஜராஜசோழன் 108 பரதநாட்டிய கரணங்களை, பிரகதீஸ்வரர் ஆலயத்தின் உச்சியில் வரையுமாறு செய்ததில் இருந்து அம் மன்னனுக்கு நாட்டியத்தின் மீது கொண்ட ஈடுபாடு விளங்கும். கூத்துக்கலையும் தேவதாசிகளும்: இந்தியாவில் கோயில்களில் தெய்வப்பணி புரிவதற்காக ஆண்டவர்க்கு அணங்குகளை அர்ப்பணிக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது என்பதை வரையறுத்துக்கூற இயலாது. ஆனால், தமிழகத்தில் தேவதாசி முறையைப் புகுத்தியவர்கள் "சோழர்கள்" என்பர். "பொட்டுக்கட்டுதல்" என்னும் வழக்கத்தின் வாயிலாக கோயிலுக்கு பெண்கள் (தேவரடியார்கள்) காணிக்கை ஆக்கப்பட்டனர். பெரும்பாலும் 14 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பொட்டுக்கட்டுதல் என்னும் சடங்கு ஏறக்குறைய திருமண நிகழ்ச்சி போலவே ஏற்பாடு செய்யப்பட்டு, கோயிலில் சேர்க்கப்பட்டனர். "பொட்டுத்தாலி" என்னும் ஒருவகை மங்கலநாண் அணிவித்து பெண்கள் கோயிலில் பணிசெய்ய அமர்த்தப்பட்டனர். பொட்டுத்தாலியை கோயிலின் இறைவனுக்குப் பதிலாக கோயில் அந்தணர்(அ) பூசாரியே நேர்ந்து விடப்பட்ட பெண்ணுக்குக் கட்டினார். இச் சடங்குக்குப்பின் குறிப்பிட்ட பெண் கோயிலுக்கு சொந்தமானவளாக கருதப்பட்டாள். இல்வாழ்க்கையில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி இல்லை. கோயிலுக்கு பொட்டுக்கட்டிவிடும் இவ்வழக்கம் சிரியா நாட்டு "ஹேலியோ போலிஷ்" மற்றும் அர்மீனியா, மேற்கு சிற்றாசியாவில் உள்ள லிடியா மற்றும் கிரேக்க நாட்டின் கோசின்னித் (Cuzinith) என்ற நகரிலும் நிலை கொண்டிருந்தது. மெசபடோமியாவிலும் இதே முறை பின்பற்றப்பட்டு வந்தது. "மர்துக்" மற்றும் "ஷமஷ்" போன்ற கடவுளர்களுக்கு அங்குள்ள மகளிர் மணம் செய்து வைக்கப்பட்டனர். (மேலும் பார்க்க - http://www.kamat.com/kalranga/women/devadasi.htm)   கோயிலில் நடமாடுதல் மட்டுமல்லாது, கோயிலில் திருவலகிடுதல், திருமெழுகிடுதல், படையல் அரிசியைத் தூய்மைப்படுத்துதல், திருப்பதிகம் பாடல் போன்ற பணிகளையும் தேவரடியார் செய்துவந்தனர். பல்லவர்கள் காலத்தில் தேவதாசிகள் விற்கிருதை, பிரத்தியை, பக்தை, கிருதை, அலங்கரி, ருத்திரகணிகை, கோபிகை என ஏழு வகைப் பிரிவினராக இருந்தனர்.   தேவரடியர்(அ) தேவதாசிகள் திருநீறுத்தட்டும், புஷ்பத்தளிகை போன்றவற்றை விழாக்காலங்களில் எடுத்துச்செல்வர். அம்மன் மற்றும் சுவாமிக்கு இவர்கள் "கவரி" வீசவும் செய்ததால் "கவரிப்பிணா" என்றும் அழைக்கப்பட்டனர். சிவன் கோயிலில் பணி செய்து வந்தவர்கள் ரிஷபத்தளியலார் என்றும், வைணவக் கோயில்களில் இருந்தவர்கள் ஸ்ரீவைஷ்ணவ மாணிக்கம் எனவும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. முதலாம் இராசராசன், தஞ்சைப் பெரிய கோயிலின் இறை பணிக்காகவும், இசை நடனத்தை வளர்க்கவும் ஆடல், பாடல்களில் வல்ல 400 பெண்கள் வரவழைத்தான். அவர்கள் தளிச்சேரிப் பெண்டுகள்(தளி - கோயில்) எனப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த இடம் "தளிச்சேரி" எனப்பட்டது. முதலாம் இராசராசனால் குடியமர்த்தப்பட்ட பெண்டுகள் அனைவரும் சோழர் பழந் தலைநகரமான "பழையாறையின்" வடதளி, தென்தளி எனப்படும் சிவாலயங்களைச் சேர்ந்தவர்களாவர். முதலாம் இராசேந்திரன் கங்கை கொண்ட சோழபுரக்கோயிலைச் சேர்ந்த 24 தேவதாசிகளுக்கு நிலமும், பொன்னும் கொடையாக அளிக்கப்பட்ட செய்தியை "குளம்பந்தல் கல்வெட்டு" வாயிலாக அறியலாம்.   தலைக்கோலி, காவிதிகானை பேராள், காவிதிதாங்கி போன்ற பட்டங்கள் தேவரடியார்களுக்கு வழங்கப்பட்டன. "தலைக்கோல்" என்பது ஏழுசாண் நீளத்தில் மூங்கிலால் ஆனதாகும். கணுக்கள் தோறும் மணிகள் பதிக்கப்பட்டு இடையிடையே "பொன்கட்டு" இடப்பட்டிருந்தது. இந்திர விழாவின்போது தலைக்கோலுக்குப் பூசை நடத்தப்பட்டு ஆடல் மகளிருக்கு இக்கோல் வழங்கப்பட்டது. இக்கோலைப் பெற்றவள், "தலைக்கோலி" எனவும், நட்டுவன் "தலைக்கோலாசான்" எனவும் பாடல் பாடியோர் "தோரியமடந்தை" என்றும் அறியப்பட்டனர். தேவரடியார்களில் சிலர் அறப்பணியும் மேற்கொண்டனர் என்பதற்கு ஆதாரமாக, சடையவர்மன் வீரபாண்டியன் (13ம் நூற்றாண்டு) ஆட்சி காலத்தில் தேவரடியார்களில் ஒருத்தியான துக்கையாண்டி மகள் நாச்சி குடுமியான்மலை குடைவரையின் தெற்குப் பக்கத்தில் உள்ள "சவுந்திரநாயகி அம்மன்" கோயிலைக் கட்டியிருக்கிறாள் என அறியப்படுகிறது. கோயில் கலைப்பணிக்காக நியமிக்கப்பட்ட தேவரடியார்கள் அமைப்புகாலப்போக்கில் மாறுதல் அடைந்தது. அம்முறை பின் ஒழிக்கப்பட்டது. தமிழ்க் கூத்துக்கலையிலிருந்து பிரிந்து உருவான பரதம் இன்றளவிலும் ஓரளவு சிறப்புப் பெற்றிருப்பினும் பிற கூத்து நடனங்கள் ஆதரவின்றி அழியக்கூடிய தருவாயில் உள்ளன என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.   நலிந்து வரும் கூத்துக் கலைஞர்களுக்கு ஆதரவளித்து, கூத்துக்கலையை காப்பதன் வாயிலாகவே தமிழர் பண்பாட்டை உலக அரங்கில் மிளிரச்செய்ய இயலும்.   இல. கணபதிமுருகன்   நன்றி: தமிழ்மணி (தினமணி)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.